சத்தியமார்க்கம்.காம்

கொலையும் செய்யும் கோயில்! print Email
பொதுவானவை - பொதுவானவை
புதன், 13 பிப்ரவரி 2008 15:34

நமக்குச் சொந்தமான நம் வீட்டு முற்றத்தில் மாற்றான் ஒருவன் காயலான் கடை வைத்து வியாபாரம் செய்தால் நாம் என்ன செய்வோம்? அதே வேலையை அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஒருவன் செய்தால் அரசு என்ன செய்யும்? செய்ய வேண்டும்?

அனைவரும் ஒருமித்தக் குரலில் ஏற்றுக் கொள்வது, அரசு இடத்தைக் கள்ளத்தனமாக ஆக்ரமித்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்; ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும் என்பதாகத் தான் இருக்கும்.

அதுவே அரசு இடத்தில் கள்ளத்தனமாகப் பள்ளிவாசல், சர்ச், கோயில் இன்னபிற வழிபாட்டுத் தலங்களை யாராவது எழுப்பி விட்டால் என்ன செய்வது? சாதாரணமாக அரசு செய்யும் காரியம், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு யாராவது பொறுப்பாளர் இருப்பின் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு சம்பந்தப்பட்ட இடத்திலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி அவ்விடத்தை மீட்பதாகும்.

அவ்வாறு ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு என்னுமிடத்தில் நடந்தது. அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தை நீதிமன்ற ஆணையுடன் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளையும் உலகிலிருந்தே "அகற்றும்" பணி சுற்றிக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பட்டப்பகலிலேயே நடைபெற்றது.

சம்பவம் என்னவெனப் பார்ப்போம்:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள உடையார்விளையில் சாலையோரம் நாராயணசாமி கோயில் என்றொரு கோயில் அரசு நிலத்தில் உள்ளது. இந்த கோயில் அரசின் புறம்போக்கு நிலத்தில் அமைந்திருப்பதாகவும் அதனால், கோயிலுக்குப் பின்புறம் உள்ள வீட்டுக்கு செல்ல கோயிலை இடித்து பாதை வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், "அரசு நிலத்தில் உள்ள கோயிலின் சுவரை இடித்துப் பாதை அமைத்துக் கொடுக்க" உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலைத்துறை தக்கலை உதவிக் கோட்ட அலுவலர் எல்.அந்தோணி சேவியர், இளநிலை அலுவலர் சி.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் காவல்துறைப் பாதுகாப்புடன் கோயில் சுவரை இடித்துக் கொண்டிருந்தனர்.

இதற்குக் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் அவ்விடத்தில் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தங்களுக்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உதவிக் கோட்டப் பொறியாளர் அந்தோணி சேவியர், இளநிலை பொறியாளர் சுந்தரம் மற்றும் திருவட்டாறு காவல் சரகத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் எட்வின் ஆகிய 3 பேரும் சாலையோரம் நின்று, இடிப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்து அவர்கள் 3 பேரையும் இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பொறியாளர் அந்தோணி சேவியர் படுகாயம் அடைந்துச் சிகிச்சைக்காக நாகர்கோயிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் மீது காரை மோதவிட்டதாகவும், அந்தக் காரை ஓட்டியவர் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார், அவரது வழக்கறிஞர் ரசல்ராஜ் உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் அர்ஜுனனும், அவருடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆக்ரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் அரசு ஆவணத்திற்காக ஆக்ரமிப்பு அகற்றும் பணியினை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வீடியோ பதிவில் அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றக் காட்சியும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் வழக்கறிஞர் ரசல்ராஜை காவல்துறையினர் தாக்கியதாக வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் வெற்றிவேல் கூறும் பொழுது: 

"திருவட்டாறு அருகே வேர்கிளம்பியிலுள்ள உடையார்விளை கோயில் பிரச்சினையில் எதிர் மனுதாரரின் வழக்கறிஞர் என்ற முறையில் வழக்கறிஞர் ரசல்ராஜ் அங்குச் சென்று, எந்த அடிப்படையில் கோயில் சுவரை இடிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் காவல்துறையினர் அவரை அடித்து இருக்கிறார்கள். சாதாரண மனிதனைக்கூட காவல்துறையினர் அடிக்கக்கூடாது. அப்படி இருக்க வழக்கறிஞரைத் தாக்கியிருக்கும் இந்தச் சம்பவம் ஜனநாயகத்துக்கு விரோதமானது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது கார் மோதிய வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்பட்டது. நடந்த சம்பவத்தின் உண்மை வீடியோ காட்சியை நாங்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறோம்.

வழக்கறிஞர் ரசல்ராஜை தாக்கிய காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்கு முன்னதாக நாளை மறுநாள் (அதாவது நாளை) குமரி மாவட்ட வக்கீல் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். போராட்டத்தை மிகப்பெரிய போராட்டமாக, மறியல் போராட்டமாக நடத்துவது பற்றி ஆலோசிப்போம்." என்று கூறியுள்ளார்.

ஆக்ரமிப்பை அகற்றுவது அதுவும் கள்ளத்தனமாகப் பொதுச் சொத்தில் பொது மக்களுக்கு இடையூறாக ஆக்ரமிப்புச் செய்திருந்ததை நீதிமன்ற உத்தரவுடன் அகற்றுவது தவறா? தவறு தான் - அது கோயில் விஷயம் என வரும் பொழுது மட்டும். அது தனி மனிதனின் சொத்தாக இருந்தாலும் சரி; அரசு சொத்தாக இருந்தாலும் சரி.

அது தமிழ்நாட்டில் நடந்தாலும் சரி; மலேசியாவில் நடந்தாலும் சரி.

இதில் மலேசியா எங்கிருந்து வந்தது என நினைப்பவர்கள் மட்டும், கடந்த மாதங்களில் பரபரப்பாக இருந்த "மலேசியா ஆக்ரமிப்புக் கோயில் அகற்றல்" சம்பவமும் அதனை வைத்து மத ஆதாயம் தேட முயன்ற மலேசியாவின் RSS கிளையான "ஹிண்ட்ராஃபின்" செயல்பாடுகளும் சமூக ஒருங்கிணைப்பைக் குலைக்க முயற்சித்த ஹிண்ட்ராஃபை சுருட்டிக் கட்டி வைக்க முயன்ற மலேசியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக திருவாய் மலர்ந்த அமெரிக்கா மற்றும் தமிழக முதல்வரின் அறிக்கைகளையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இதில் பரிதாபத்திற்கு உரியவர் பாவம் தமிழக முதல்வர் தான். முன்பு இதே விவகாரத்தில் மலேசியாவிற்கு எதிராக அறிக்கை விட்டது போன்று இப்பொழுது தனது அரசுக்கே எதிராக அறிக்கை விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மலேசிய அரசுக்கு எதிராக அறிக்கை விட்டது போன்று, அராஜகங்கள் நடக்கும் இடங்களில் அண்ணனாக வரும் அமெரிக்காவின் கண்டன அறிக்கையை, கோயிலை இடித்து அதனைத் தடுக்க முயன்ற அப்பாவிகளின் மீது காவல்துறையை ஏவி அராஜகம் புரிந்துள்ளத் தமிழக அரசுக்கு எதிராகவும் விரைவில் எதிர்பாப்போம்.

தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.


காசுக்காக நீதியையும் உண்மையையும் குழி தோண்டிப் புதைப்பதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டாத, தான் எடுத்த வழக்கில் தான் வெற்றி பெற எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயங்காத வழக்கறிஞர்களுக்கும் கொலைகார வெறியர்களே நேரடியாக ஒத்துக் கொள்ளும் காட்சிகளை எவ்வித வெட்கமும் இன்றி அவை புனையப்பட்டப் பொய்காட்சிகள் என மக்கள் முன் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி மறுக்கும் பொய்யால் வார்த்தெடுக்கப்பட்டக் கொலைகாரக் கூட்டம் சங்பரிவாரத்துக்கும் வேண்டுமெனில் இது கிராபிக்ஸாக இருக்கலாம்.

ஆனால் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயங்காத நடுநிலை மக்களுக்கு இந்த வீடியோ காட்சி உண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்லவே செய்யும்.

கருத்துக்கள் (3)add comment

எழுதியவர்: IRAI ADIMAI , February 14, 2008 08:20

அணி சேருங்கள். Irai Adimai said... உங்களின் வாதமும் ஆதங்கமும் சரிதான் ஆனால் இது அல்ல இன்னும் இந்த நாட்டில் இதை விட பெரிய அதிகாரிகள் அல்லது பெரிய அரசியல் வாதிகள் என இனி யார் தாக்கப்பட்டாலும் அது நீதி பதிகளின் முன்னிலையில் நடைப் பெற்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை நீதி கிடைக்கும் என்று எதிர்ப் பார்ப்பது மிகப் பெரிய தவறு என்றே நினைக்கத் தோன்றுகிறது. காரணம் குஜராத்தில் நடைப் பெற்ற அத்தனை சம்பவங்களையும் அதனை செய்தவர்களே கதை சொல்வது போல ரசித்தது ருசித்து சொன்ன வாக்கு மூலம் அடங்கிய வீடியோ வெளியான பிறக்கும் இன்னும் இந்த அரசோ அல்லது நீதி மன்ற்றன்களோ அலல்து இந்த நாட்டு மக்களோ கவலைப் பட வில்லையே. எத்தனையோ மனிதஉரிமை அமைப்புகள் இருந்தும் குற்றவாளிகள் சுகபோகமாக தானே இருக்கிறார்கள்.ஒரு மானைக் கொன்று விட்டால் அவனை உள்ளே தள்ள அதிகாரம் இந்திய அரசுக்கும் நீதி மன்றங்களுக்கும் உண்டு. காரணம் அவர் பெயரிலாவது ஒரு முஸ்லீம். ஒரு ஊரையே அழித்தவனுக்கு பலவகையில் சிறப்புகள்.இன்னும் கொடுமை தன்னுடைய மாணவியை கர்ப்பழித்த ஆசிரியனுக்கு நல்லாசிரியர் விருது. இது நாடா இல்லை வெறும் காடா ?இதைக் கேட்க்க நாதி இல்லப் போடா ? னு ஒரு பாடல் வரி தான் நியாபகம் வருகிறது. மக்களே இப்போதாவந்து விழித்துக் கொள்ளுங்கள் இல்லை நாளை இந்த நிகழ்வுகள் நம்மில் யாருக்கும் வரும். அன்று நம் கண்ணீருக்கு ஆறுதல் தேவை என்று நீங்கள் நினைத்தால் இன்றே அநீதியை எதிர்க்க அணி சேருங்கள். ஆதங்கத்துடன் இறையடிமை THE ABOVE IS THE COMMENT REGISTERED BY ' இறையடிமை ' IN http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/blog-post_14.html FOR THE ARTICLE ' கொலையும் செய்யும் கோயில்! ' MOHAMED ALI JINNAH



எழுதியவர்: Alaudeen S , February 14, 2008 10:48

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அன்புச் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபொழுது ஒரு செகண்ட் நம் ரத்தம் உறைந்து விடும் அளவுக்கு ஆகி விட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் பார்ப்பன பண்ணாடைகளும் பொது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் ஏய்த்து பிழைக்கும் சில கூட்டங்களும் எங்கு வேண்டுமானாலும் கலவரத்திற்காக – முதலில் ஒரு எல்லைக்கல் போல் கொண்டு வைப்பார்கள், பிறகு இரும்பு வேல் கம்பியை வைப்பார்கள் பிறகு சந்தனம், மாலை, குங்குமம் என்று வைத்து-உண்டியலையும் வைத்து இரவோடு இரவாக வேலியோ சுவரோ வைத்து -இந்த இடங்கள் அனைத்தும் எங்களுக்கு சொந்தம் என்று கதையளந்து நீதிமன்றத்தையும் துணைக்கு வைத்துக்கொள்வார்கள். இதற்கு வக்காலத்து வாங்க சொறி பிடித்த கூட்டங்கள் -முஸ்லிம் நிம்மதியாக வாழ்கிறான் - இந்து வாழ முடியவில்லை என்று கூக்குரல் போட்டு கலவரத்தை உண்டு பண்ணுவார்கள் - இதுதான் தமிழ் நாட்டில் பல வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. நாம் பள்ளியை கட்ட நினைத்து நம்முடைய உழைப்பில் வாங்கிய பணத்தில் இடம் வாங்கி கட்ட ஆரம்பித்தால் எதையாவது சொல்லி தடுப்பதற்கு இந்த சுரண்டல் திருடர்கள் ரெடியாக காத்திருப்பார்கள் நீதிமன்றம்தான் உடனே தடை கொடுப்பதற்கு இருக்கிறேதே அப்புறம் என்ன? நாம் பள்ளிக் கட்ட நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டே இருக்க வேண்டும் - இதுதான் மதச்சார்பற்ற சனநாயகம் - வந்தே மாதரம் - வந்து வந்தே சாகுறோம் - இதுதான் நமது நிலைமை. நமக்கு நீதி என்பது கானல் நீர்தான். இதுபோல் நடந்தற்கு ஒரு உதாரணம் அதிராம்பட்டிணத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் தெருவில் - இந்துக்களே இல்லாமல் ஒரு சிலர் நடந்து போகும் பாதையாக இருந்த இடத்தில் - இந்த கயவர்கள் வேலை ஊன்றி வேலி அடைத்து குழப்பம் செய்தது மிகப்பெரிய அநியாயம் - நீதிமன்றம் தலையிட்டும் இன்னும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. அரசு நிலத்தில் கோயிலையும் கட்டி பிழைப்பு நடத்திய கூட்டம் - கொலை முயற்சியிலும் இறங்கியதோடு – வழக்கறிஞர்கள் பிரச்சனையாக ஆக்கி விட சங்பரிவாரத்துணையுடன் போராட்டம் என்று ஆட்டம் போடுகிறார்கள். இவர்கள் இப்படி ஆட்டம் போட கலைஞர் அரசாங்கம் வேடிக்கை பார்க்கக்கூடாது. செந்தில்குமாரை சாதாரண பிரிவில் அரஸ்ட் செய்து பின் விட்டு விட்டால் நாளை அந்த இடத்திற்கு பெரிய தாதாவாகி விடுவான். தடுப்புக்காவல் சட்டத்தில் அரஸ்ட் செய்து - இந்த மனித மிருகத்திற்கு அதிக பட்ச தண்டைனை என்ன உள்ளதோ அதை கொடுக்க வேண்டும் - மக்களின் வரிப்பணத்தில் உள்ளே வைத்து மாமியார் வீட்டு உபச்சாரம் செய்யக்கூடாது. இவனுக்கு துணையாக உள்ள கூட்டங்களை சரியானபடி அரஸ்ட் செய்தால்தான் சங்பரிவாரம் எகிறிக்குதிக்காது. சங்பரிவாரங்கள் ஜெயிலில் களி சாப்பிடாததால்தான் இன்றளவும் இப்படி வெறியாட்டம் போடுகிறார்கள். தைரியமான அரசாக இருந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்பாவி முஸ்லிம்கள் மேல்தான் அரசின் இரும்புக்கரம் இறங்கும். தேசவிரோத துரோகிகளான சங்பரிவாரத்தின் பக்கம் முழுக்க முழுக்க -- பொறி -- வைத்து -- பதுங்கி -- பாய்ந்து -- மறைந்திருந்து --- போராடி --- பிடித்து உள்ளே தள்ளி விட்டு -- பரபரப்பு செய்திகளை-- போடுங்களேன் -- அதிகாரிகளும் -- மீடியாக்களும். தற்பொழுது கும்பகோணம் அருகே தலித் சகோதரர் கொலைக்கு – சம்பந்தம் இல்லாமல் தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை அரஸ்ட் செய்ததது போலீஸ் - பொய் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்வதற்காக 13.02.2008 ஆர்ப்பாட்டம் அறிவித்ததற்கு – அந்த வளாக டிஎஸ்பி தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளரை போனில் அழைத்து ஆர்ப்பாட்டம் செய்தால் சுட்டுத்தள்ளி விடுவேன் என்று ஆணவ வெறியுடன் கூறியுள்ளார். - காவியின்; முகமூடி அணிந்தவர். இப்படி சொன்ன டிஎஸ்பியை உடனே நாம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் - ஆனால் நம்மையெல்லாம் இதயத்தில் வைத்துள்ள கலைஞர் அவர்களோ அவரை அழைத்து சரியாக சொன்னாய் என் தங்கமே என்று விருது கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்து கலைஞரின் அரசாங்கம் செய்ய வேண்டியது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உண்மையில் சங்பரிவாரம் தான் தமிழ்நாட்டில் அனைத்து தீவிரவாத செயல்களையும் செய்கிறது என்பது சாதாரண பாமரர்களுக்கு கூட தெரியும். வெறும் வெற்று அறிக்கை விட்டு வேடிக்கை பார்க்காமல் அனைத்து சங்பரிவாரத்தின் தொடர்புகளை நன்றாக உளவு பார்த்து அனைவரையும் உள்ளே தள்ளுங்கள் - இவர்களை உள்ளே தள்ளினால் தமிழகம் கொதித்தெழாது என்பதை முந்தயை ஜெயலலிதா ஆட்சியில் பாடம் படித்துக்கொள்ளலாம் - விபரம் கீழே: பாப்பாத்தி ஜெயலலிதா -- அருள் கேடி கொலை, பாலியல் குற்றசாட்டுக்கு ஆளான சங்கராச்சாரியாரை கைது செய்தபொழுது தமிழகமே பொங்கி எழும் என்றார்கள் இந்தியாவின் சாபக்கேடான பார்ப்பண தேசவிரோதிகளான எழவு கணேசன் - கோவணத்தாண்டி கோபாலானும் கோயபல்ஸ் சொந்தங்களான சில பார்ப்பணர்களும் மட்டும்தான் கதவிடுக்கில் மாட்டிய எலிபோல் கத்திக்கொண்டு இருந்தார்கள் மற்றபடி தமிழ் நாட்டில் எந்த கொந்தளிப்பும் இல்லை இவர்களின் அருளாசி (பித்தலாட்டம்) ஒன்றும் பலிக்கவில்லை. அதனால் தென்காசி பிரச்சனை தற்பொழுது அதிகாரி மேல் கார் ஏற்றியதுவரை இன்னும் இவர்களால் நடக்கும் சூழ்ச்சிகளையும் அறிந்து தைரியமாக கலைஞர் அரசாங்கம் சங்பரிவாரங்களை உள்ளே தள்ளலாம். (மைனாரிட்டி கலைஞர் அரசு வந்தவுடன் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது என்று கூறும் ஜெயலலிதாவின் உண்மையையும் கண்டுபிடிக்க வேண்டும்.) மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளர்கள் - அதனால் சங்கராச்சாரியாருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இந்த மக்களை மூளைச்சலவை செய்ய சங்கபரிவாரங்களால் நிறைய பணங்கள் செலவழிக்கப்படுகிறது – சாமி – பக்தி – கலவரம் முஸ்லிம் மக்களின் மேல் பழி - என்று தமிழ்நாடு முழுக்க காவிக் கூட்டங்கள் களப்பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டில் நமது பிற மத சகோதர மக்களிடம் காவியின் உண்மைமுகத்தை வெளிப்படுத்துவதோடு தூய மார்க்கத்தைப்பற்றியும் எத்தி வைக்க வேண்டும். இந்த பணி மிக மிக அவசியமான ஒன்று. மலேசியா – தேசவிரோத தீவிரவாதி சக்தி ஹிண்டராப் - இங்கே காவி சங்பரிவாரக் கூட்டம் என்ன செய்கிறேதோ –அதையேதான் செய்கிறார்கள். மலேசியாவில் 18லட்சம் இந்துக்கள் உள்ளனர் மொத்தம் 24இ000ம் கோவில் உள்ளது. 80பேருக்கு ஒரு கோவில் - இந்தியாவில் கூட முருகனுக்கு பெரிய சிலை இல்லை – ஆனால் மலேசியாவில் உள்ள கோயிலில் முருகன் சிலையின் உயரம் 42.7 மீட்டர் உயரம். எல்லாவிதத்திலும் சலுகை பெற்று வாழ்கிறார்கள். பள்ளிவாசலின் எண்ணிக்கையோ இந்த அளவில் இல்லை. பெயரளவில் முஸ்லிம் நாடாக இருக்கும் மலேசியாவில் - நம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வை நேரில் பார்த்தால் கண்ணீர்;தான் சிந்த வேண்டும். இந்த தமிழ் முஸ்லிம்களுக்கு போராட ஒரு அமைப்போ உதவி செய்யவோ யாரும் இல்லை மலேசியாவில். இங்கிருந்து சென்ற நிறையபேருக்கு கணவன் மலேசியா பிரஜையாக இருந்தும் மனைவிக்கும் தமிழ்நாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கும் மலேசியா பிரஜை தரவில்லை அரசாங்கம். 25வருடத்திற்கு மேல் பிரஜை வேண்டும் என்று அந்த அலுவலகத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் அல்லாத பிறமக்கள் எல்லோருக்கும் ராஜபோக வாழ்வுதான் - முஸ்லிம் பெயர்தாங்கிய மலேசியாவில். மலேசிய கோவில் இடிப்பை பற்றி மலேசியாவின் இந்தியன் காங்கிரஸின் தலைவர்-பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு அழகாக சொன்னார்(பொதுப்பணித்துறையில் பிறமத சகோதரர் இருக்கமுடிகிறது – ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) : இந்திய வம்சாவளியினர் ஒன்று சோம்பேறிகளாக இருப்பார்கள் - அல்லது தொழில் செய்ய முயற்சி எடுக்காதவர்களாக இருப்பார்கள் ( இவர்களின் பிழைப்பத்தான் கல்லை கண்டால் மரத்தை கண்டால் பொது இடம் என்று பார்க்கமாட்டார்கள், உடனே சாமி என்று கதையளந்து அங்கே கோவில் கட்டி பேய் ஓட்டுவது – மந்திரிப்பது இன்ன பிற காரியங்களை செய்வார்களாம் - உழைத்து பிழைப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லாத காரணத்தால் இப்படி கோவில்களை கட்டி பிழைப்பு நடத்துகிறார்களாம். இன்னொரு விஷயம் அனுமதி இல்லாமல் கோயிலை இடித்தது போல் பல பள்ளிகளையும் இடித்திருக்கிறது மலேசிய அரசாங்கம் - ஆனால் எல்லாவற்றுக்கும் நஷ்ட ஈடாக வேறு இடமும் பணமும் கொடுத்து உதவி இருக்கிறது. ஆனால் நம் இந்தியா அரசாங்கம் முஸ்லிம்களை ஏமாற்றுவது போல் எதுவும் செய்யவில்லை. மேலும் இந்திய வம்சாவளியினருக்காக 534 கல்வி நிலையங்களை மலேசியா அரசாங்கமே ஏற்று நடத்துகிறது. சுராசரி மாத வருமானத்தை விட இந்திய வம்சாவளியினரின் குடும்ப வருமானம் அதிகமாக உள்ளதாம். மேலும் அதிகாரத்திலும் அதிகமான வேலை வாய்ப்புகளையும் அனுபவிக்கிறார்கள். (::::: இந்திய அரசாங்கமும் பிரதமர்களும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலத்து முதல்வர்களும் - மற்ற அமைச்சர்களும் அமரிக்காவை பார், ஜப்பானை பார், சீனாவை பார் என்று வெற்று கோஷம் போட்டு |உளறிக்கொண்டு இருக்காமல் முஸ்லிம் நாடான மலேசியாவுக்கு சென்று பாருங்கள் அங்குள்ள 8.77 சதவீதம் உள்ள இந்து சகோதரர்கள் எல்லா நிலையிலும் தன்னிறைவுடன் வாழ்வதை கண்ணால் கண்டால் அல்லது ஆய்வு செய்தால் இது உண்மை என்பதை அறிவீர்கள். மேலும் பெரும்பான்மை மலேசியா முஸ்லிம்களுக்கு கூட இந்த அளவு சலுகை இல்லை என்பதுதான் உண்மை. சுதந்திரத்திற்காக எல்லாவற்றையும் உயிரையும் - செல்வத்தையும், கல்வியையும் எந்த சமுதாயமும் பங்கெடுக்காத வகையில் அதிக அளவில் தியாகம் செய்த இந்திய முஸ்லிம் சமுதாயம் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறோம் என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை தந்த பின்பும் இன்னும் விழிக்காமல் சரியான நடவடிக்கை எடுக்காமல் உறங்கி கொண்டு இருக்கும் இந்தியா முழுவதும் இருக்கும் அரசாங்கமே – மலேசியாவின் அரசாங்கத்திடம் இருந்து பாடம் படியுங்கள்.:::::) நிம்மதியான வாழ்க்கை வேலை படிப்பு பணம் என்று இருக்கும்பொழுது - இந்த கொழுப்பெடுத்த ஹிண்டராப்புக்கு வந்த கேடு என்பது இதன் கள்ளக்கூட்டாளியான இந்தியாவின் மனித குல விரோதி தீவிரவாதி பார்ப்பன கூட்டங்களின் ஆலோசனை மற்றும் தீவிரவாதி பிரபாகரனின் கூட்டும்தான் மலேசியாவில் ஹிண்டராப் செய்யும் அட்டகாசங்கள்.(இந்தியாவுக்கு சிங்கப்பூர் வழியாக வந்த இந்த தீவிரவாதி தலைவன் (குண்டன்) - இந்தியாவின் பெரிய தீவிரவாதியான அத்வானி தீவிரவாதியையும் கோவணத்தாண்டி ராமகோபலான் தீவிரவாதியையும் சந்தித்து சென்று இருக்கிறான்) - மலேசியா அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு -இந்த இயக்கத்தை தடைசெய்வதோடு இவர்களின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று தேடி இதையும் வேரோடு வெட்டி வீச வேண்டும் - இல்லையென்றால் - இந்த இயக்கத்தை வளர விட்டால் - இந்தியாவில் செய்யும் அட்டகாசங்களை மலேசியாவிலும் அடிக்கடி காணும்படி ஆகிவிடும்.



எழுதியவர்: நூருல் இஸ்லாம் , February 16, 2008 07:14

அதிர்ச்சியும் வேதனையும் ஒரு சேர விம்ம வைக்கும் பயங்கர வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள். துல்லியமாக படம்பிடிக்கப்பட்ட இக்கொலை முயற்சியையும் 'கிராபிக்ஸ்' என்று மேலிடம் எழுதிக்கொடுத்து சொன்னாலும் சொல்வார்கள். பின்னே? குஜராத் வீடியோ ஆதாரங்களில் புண்பட்ட இந்தியர்களாச்சே நாங்கள்? //தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.// இவ்வரிகளை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். மனம் வலிக்கிறது.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

5: 39 எவரேனும், தம் தீயச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...


M.Mohamed Abbas : அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்...


Saraswathi : நல்ல குறிப்புகள் அடங்கிய இந்த வலைத் தளம் மிகுந்த பயன் அளிக்கிறது. நன்றி.


abdul hakkeem : அல்ஹம்துலில்லாஹ்



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை கொலையும் செய்யும் கோயில்!