சத்தியமார்க்கம்.காம்

தென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே!! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
வியாழன், 07 பிப்ரவரி 2008 09:19

{mosimage}தென்காசி.......!

 

ஹிட்லரின் பார்ப்பனீய வடிவம் RSS-ன் அசிங்க முகத்தை அம்பலப்படுத்தியச் சமீபத்திய உதாரணம்! அப்பாவி மக்களின் உதிரத்தின் மீது மனுவின் அசிங்க ஆட்சியை அமர்த்தத் துடிக்கும் சங்பரிவாரக் கூட்டத்தின் பார்ப்பனீயத் தந்திரங்களுக்கு ஆப்பு வைத்த மாநகரம்!

இரு வீட்டு மதில் பிரச்சனையைக் கூட மதப்பிரச்சனையாக உருமாற்றி ஆதாயம் தேட முயலும் RSS சங்பரிவாரக் கூட்டம், தென்காசியைச் சேர்ந்த இரு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையிலான நிலப்பிரச்சனையைக் கையில் எடுத்து, அதனை மதப்பிரச்சனையாக உருமாற்றி வடக்கில் குடிக்கும் இரத்தத்தை, மோடி வழியில் தெற்கிலும் அறுவடை செய்ய முயன்ற வேளையில் அதிசயமாகத் திராவிடத் தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் காவல்துறை அதனைத் தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான RSS-ன் வெறியினையும் கோரமுகத்தினையும் அம்பலப்படுத்தியுள்ளது.

நாட்டில் எங்கு ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் காவல்துறை முதல் தகவல் அறிக்கை தரும் முன்னரே முந்திக் கொண்டு, "இஸ்லாமிய பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் வெறிச்செயல்" எனத் தலையங்கத்தில் வெறியூட்டி சாதாரண மக்களிலிருந்து உளவுத்துறையின் விசாரணை வரை அனைத்து இடங்களிலும் சம்பவத்திற்குக் காரணம் இஸ்லாமியர்கள் தான் என்றச் சிந்தனையை ஊட்டி விசாரணைகளைத் திசை திருப்பும் இந்திய ஊடக நடுநிலை(?)த்தன்மையினைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, சங்பரிவார RSS கூட்டம் சாதித்து வந்த அக்கிரமங்களுக்கு முதன் முதலாகத் தமிழ்நாடு முத்திரை இட ஆரம்பித்துள்ளது என இந்த நல்ல முகூர்த்தத்தில் நம்புவோமாக.

{mosimage}கடந்தச் சில மாதங்களாகத் தென்காசியைப் பதற்றத்தின் முனையிலேயே வைத்திருந்த சங்பரிவாரக் கூட்டம் திட்டமிட்டு தாங்களாகவே RSS தென்காசி அலுவலகத்தின் மீது குண்டு வீசியது. செய்தி பத்திரிக்கைகளுக்கு வரும் முன்னரே தமிழ்நாடு RSS தலைவர் ஆர்.வி.எஸ். மாரிமுத்துவின் கண்டன அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியானது.

சம்பவத்தைச் செய்த நபர் யார் என்பதைக் காவல்துறைக்கும் மக்களுக்கும் அவரே தெரிவிக்கவும் செய்தார். அவருடைய கண்டன அறிக்கையின் முக்கிய பாகங்கள்:

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ...இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை RSS. இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம்."

{mosimage}சாதாரணமாக ஒரு குண்டுவெடிப்பு நிகழும் பொழுது புலனாய்வுக் குழுவை விஞ்சிய விதத்தில் சம்பவ இடத்தையே நேரில் கண்டிராத இவர்கள் கொடுக்கும் அறிக்கைகளே பின்னர் பத்திரிக்கைகளில் "பாகிஸ்தான் ISI களாகவும் லஷ்கரே தொய்பா முதல் அல்காயிதா வரை" இஸ்லாமியச் சாயம் பூசப்பட்டு அச்சேற்றப்படுவது வழக்கம்.

மக்களிடையே இஸ்லாத்தின் மீதான வெறுப்புச் சாயத்தை இம்முறையிலேயே ஊற்றி வளர்த்து அந்த வெறுப்பின் மீது ஏறி அமர்ந்துச் சவாரி செய்து வந்த RSS-ன் தந்திரம் தமிழகத்தில் முதன் முதலாக திவாலாகியுள்ளது.

தாங்களாகவே திட்டமிட்டுத் தங்களின் அலுவலகம் மீது குண்டு வீசிவிட்டு சம்பவ இடத்தில் குண்டு வீச்சு சப்தம் ஓயும் முன்பே "இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறிச்செயல்" என ஓலமிட்ட தமிழ்நாடு RSS தலைவரின் ஈன முகத்தை எதனால் அடிக்கலாம் என்பதைச் சம்பந்தப்பட்ட இந்து சமூக மக்கள் தான் தெரிவிக்க வேண்டும்.

இவர்களின் இத்தகைய கீழ்தரமான நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல, ஆங்கிலேயன் இந்நாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்தக் காலகட்டத்திலேயே ஆரம்பித்து விட்டதை நாடு அறியும்.

இந்நாட்டின் விடுதலை விடிவெள்ளி மகாத்மா காந்தியைக் கொடூரமாகக் கொலை செய்து விட்டு கொலை செய்தவன் தனது கையில் "இஸ்மாயில்" என முஸ்லிம் பெயரைப் பச்சைக் குத்தி வைத்திருந்ததிலிருந்து, நாக்பூர் அலுவலக RSS அலுவலகத்தில் தாங்களாகவே குண்டு வீசி விட்டு அப்பாவி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு அவர்களைக் காவல்துறை கறுப்பு ஆடுகளின் துணையுடன் போலி என்கவுண்டர் செய்து கொன்றது வரை பல உதாரணங்கள் பதியப் பட்டிருக்கின்றன.

{mosimage}இவர்களின் ஈனச் செயலுக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பது 2002 குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் புகைவண்டியில் இராம பக்தர்களாக வந்தத் தங்களின் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் ஒரேயடியாகத் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை முஸ்லிம்களின் செயலாகத் திருப்பி 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட வெறிச்செயலாகும்.

மாலேகான் மசூதி மீது வெள்ளிக் கிழமை மதியம் தொழுகை வேளையில் குண்டு வீசியவன் ஒட்டுத் தாடியுடன் இருந்ததும் பின்னர் நாந்தெட் எனுமிடத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் ஒரு பஜ்ரங்தள் தலைவனின் தொழிற்சாலையில் ஒட்டு தாடிகள் கண்டெடுக்கப்பட்ட விவரமும் ஊடகங்களால் உரத்துப் பேசப்படாத உண்மைகளாகும்.

இவ்வாறு நாட்டில் திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாகச் செயல்களைச் செய்து வரும் RSS, அவ்வழியிலேயே தங்களது மிக நீண்ட நாளையக் குறிகோளான தமிழகத்தையும் சமீபகாலங்களில் குறிவைக்க ஆரம்பித்துள்ளதையே தென்காசி சம்பவங்களும் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நிகழ்ந்த உடனேயே தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள் தென்காசி RSS அலுவலகம் மீதான வெடிகுண்டு தாக்குதலுக்கு சிபிசிஐடி விசாரணை தேவை என கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்ட வேளையிலேயே RSS அலுவலகம் மீது குண்டு வீசியவர்கள் RSS அமைப்பினர் தான் என்றத் தகவலைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதே போன்று கவனிக்கப்பட வேண்டிய மற்றுமோர் அம்சம் என்னவெனில், இது போன்று சங்பரிவார அமைப்புகளுக்கு ஏதாவது நெருக்கடியான நிலைமைகள் வரும் பொழுது ஊடகங்களில் வேறொரு 'பரபரப்பு'ச் செய்தியை உலவ விட்டு முந்தையத் தங்களுக்கு நெருக்கடியான சூழலை மக்கள் மனதிலிருந்து அகற்றுவது RSS. வழக்கமாகக் கடைப்பிடிக்கும் தந்திரமாகும்.

"தென்காசி குண்டு வெடிப்பில் RSS அமைப்பினர்தான் ஈடுபட்டுள்ளனர்" என்றத் தகவல் வெளியான உடனேயே ஊடகங்களில் "அத்வானி உயிருக்கு ஆபத்து - யாத்திரை ரத்து" என்பது போன்றச் செய்திகளைத் தற்பொழுது உலவவிட்டுள்ளனர்.

இந்தப் 'பரபரப்பு'ச் செய்தியின் பின்னணியில் மறைந்திருக்கும் தந்திரங்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒரு பக்கம் தங்கள் இயக்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை மக்கள் மனதில் பதிய விடாமல் திசை திருப்பும் தந்திரம்.

"அத்வானியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்" என தீர்க்கமான தகவல் கிடைக்கும் உளவுதுறைக்கு அவன் யார் என்ற தகவல் கிடைக்காததன் அர்த்தம் என்ன? அவர்களைக் காவல்துறையால் உடனடியாகச் செயல்பட்டுக் கைது செய்ய முடியாததன் இரகசியம் என்ன?

பாராளுமன்றம் தாக்குதலுக்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னர் அத்வானி, "பாராளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட இருக்கிறது" என முன்கூட்டியே அறிவித்ததையும் இத்துடன் இணைத்துப் பார்த்தால் பதில் பளிச்சென விளங்கும்.

எனவே "கள்வன் வேறெங்கும் இல்லை" என்பதை மக்கள் தென்காசி, நாக்பூர், மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலிருந்து மிக நன்றாகவே உணர்ந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதையத் தென்காசி சம்பவத்தை "அத்வானி உயிருக்கு ஆபத்து" செய்தியுடன் கரைந்துப் போக விட்டு விடாமல் இச்சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்துச் செயல்பட்டவர்கள் யார்? யார்?, இதற்கான திட்டங்கள் எங்கே தீட்டப்பட்டன?, யார் தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது?, குண்டுகள் எங்கிருந்துப் பெறப்பட்டன? என விசாரணையை அவ்வழியிலேயே துரிதப்படுத்தி உண்மையான பயங்கரவாதிகளான RSS கூட்டத்தைத் தமிழகக் காவல்துறையும் நடுநிலை ஊடகங்களும் மொத்தமாகத் தோலுரிக்க வேண்டும்.

சம்பவத்திற்குக் காரணமானவர்கள்தான் கிடைத்தாகி விட்டதே?, அதற்கும் நமக்கும்தான் தொடர்பில்லை என்றாகி விட்டதே? என விஷயத்தை இத்தோடு மறந்து விட்டு வேறு விஷயங்களின்பால் முஸ்லிம்களும் கவனத்தைச் சிதற விட்டுவிடக்கூடாது.

முறையான விசாரணைகள் நடத்தப்படும் பொழுது நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களின் பின்னணியில் இருக்கும் "பயிற்றுவிக்கப்பட்டப் பயங்கரவாதிகள்" யார்? என்ற உண்மை வெளிவரும்.

இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரித்து வெளிக்கொணர வேண்டியக் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. தற்போதைய தென்காசி வெடிகுண்டுச் சதி என்பதைத்
தமிழக RSS தலைவர் திரு. மாரிமுத்து அவர்கள் கூறியதைப் போன்று தமிழக அரசுக்கு RSS பயங்கரவாதிகள் விடுத்த எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு துரிதமாகச் செயலாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

இல்லையேல் தமிழகமும் ஒரு குஜராத்தாக மாறும் நாள் வெகு தொலைவில் இருக்காது!

எது எப்படி இருந்தாலும் சங்பரிவாரத்தினர் மோடி வழியை நடப்பாக்கத் தமிழகத்தைத் தற்பொழுது குறிவைத்துள்ளனர் என்பது மட்டும் உறுதி. அவ்வுறுதி நடைமுறைக்கு வருவதும் முளையிலேயே முறியடிக்கப் படுவதும் தமிழக அரசு, காவல்துறை, நடுநிலை ஊடகங்கள், மதச்சார்பற்ற அமைப்புகள் மற்றும் தென்காசிப் பொதுமக்கள் ஆகியோரின் தலையில் சுமத்தப் பட்டுள்ள கடமைப் பொறுப்புகள் செயல்வடிவம் பெறும்போது தெரிய வரும்.

Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
இப்ராகீம்:
பயங்கரவாதிகளைக் கைது செய்யத் தமிழகமெங்கும் போராட்டம் செய்தக் குண்டர்கள், குண்டு வைத்தது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தான் என்ற குட்டு வெளிப்பட்டவுடன் அடிக்கும் ஸ்டண்டைப் பாருங்கள். ****************************************** நெல்லை: தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் உயரதிகாரிகளின் தூண்டுதலினால் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளதாக இந்து முண்ணனி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார். தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் குமார் பாண்டியன் சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இந்து முண்ணனி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியதாவது, இந்த கைது நடவடிக்கை எதிர்பார்த்ததுதான். இந்து அல்லாத ஒரு உயரதிகாரியின் தூண்டுதலின் பேரில் அப்பாவி இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக போலீசாரின் இந்த ஜோடனை வேலை நடந்தது. தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் வைத்து அவர்களை சித்ரவதை செய்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அலுவலகம் அருகே உள்ள கடைகாரர்களை விசாரிக்குமாறு கூறினோம். ஆனால் அவர்களிடம் சரியாக விசாரிக்கவில்லை. தவறான கைது நடவடிக்கை முலம் காவல்துறை மீது அவநம்பிக்கை ஏற்படும். அரசு முஸ்லிம்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு பொய் என்று நிருபிக்கப்படும் என்றார் அவர்.
1

February 07, 2008 11:56
0
இறை நேசன்:
அத்வானிக்குக் கொலை மிரட்டல், யாத்திரை ரத்து என்பவை அனைத்தும் பாஜகவின் கடைந்தெடுத்த மற்றொரு ஓட்டுப் பொறுக்கித் தந்திரம்! தலைப்பைப் பாருங்கள். உளவுத்துறை எச்சரிக்கையை மீறி யாத்திரையாம். ஏன், பாஜக தலைமையின் முடிவை மீறி யாத்திரை என்றால் சரியாகாதோ? கழிசடைகள்! உளவுத்துறை எச்சரிக்கையை மீறி யாத்திரையை தொடங்கினார் அத்வானி புதன்கிழமை, பிப்ரவரி 6, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற RSS டெல்லி: தற்கொலைப் படைத்தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்த போதிலும் திட்டமிட்டபடி தனது சங்கல்ப ரத யாத்திரையை பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று ஜபல்பூரில் தொடங்கினார். பாஜக மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவருமான எல்.கே.அத்வானியை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உள்துறை எச்சரித்தது. இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த சங்கல்ப ரத யாத்திரையை அவர் ஒத்தி வைக்க மத்திய அரசு கேட்டு கொண்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் அத்வானியை நேரில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தார். இதனால் பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. யாத்திரை ஒத்தி வைக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை நேற்று மாலை பாஜக மேலிடமும் உறுதி செய்தது. ஆனால் இன்று யாருமே எதிர்பாக்காத நிலையில் அத்வானி உளவுத்துறையின் எச்சரிக்கையை மீறி ஜபல்பூரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். யாத்திரையை தொடங்கிய அவர் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எப்போதும் அடிபணிய மாட்டோம் என கூறியுள்ளார். இந்த செய்தியை பாரதிய ஜனதா பொது செயலாளர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பாரதிய ஜனதா ஒருபோது பயப்படாது எனவும், அத்வானியின் யாத்திரை குறிப்பிட்டபடி சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் நடைபெறும் எனவும் அவர் கூறினார். அத்வானியின் பாதுகாப்பிற்காக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும் இந்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
2

February 07, 2008 12:01
0
இறை நேசன்:
தென்காசி பேருந்து நிலையம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மீது குண்டு வீசிய ஆர்.எஸ்.எஸ் குண்டர்களைக் காவல்துறை கைது செய்ததை எதிர்பார்க்காத இராமகோபாலன், இப்பொழுதும் அக்கீழ்தரமான செயலைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என ஏதோ அவரே ஒரு சில முஸ்லிம்களை விலைக்கெடுத்துக் காரியம் சாதித்ததுப் போன்று பினாத்தி வருகிறார். ஆனால் காவல்துறை அந்தக் கிழட்டு வெறியனின் உளறல்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வழக்கை விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து வருகிறது. இதோ சமீபத்திய செய்தி: தென்காசி குண்டு வெடிப்பு: 2 மாணவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது தென்காசி: தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மாணவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி 24ம் தேதியன்று குண்டுகள் வெடித்தது. இது தொடர்பாக டிஐஜி கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து குமார் பாண்டியனின் அண்ணன் ரவிபாண்டியன், குமார் என்ற கேடிசி குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் (4ம் தேதி) கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக டிஐஜி கண்ணப்பன் தெரிவித்தார். இந் நிலையில் போலீசார் தென்காசி கூலக்கடை பஜாரை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் வேல்முருகன், செங்கோட்டை விஸ்வகர்ம தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலமுருகன், சங்கரன் மகன் மாசாணம் என்ற மகேஷ் மற்றும் தென்காசி அரசு மகன் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 வெடிகுண்டுகளும், 6 டெட்டனேட்டர்களும், கைப்பற்றப்பட்டன. கைதானவர்களில் பாலமுருகன் ஐடிஐயிலும், வேல்முருகன் தனியார் பயிற்சி பள்ளியிலும் பயின்று வருகின்றனர். மகேஷ் பிளம்பராகவும், முருகன் கட்டிட தொழிலாளியாகவும் உள்ளார். குண்டுவெடிப்பு வழக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
3

February 07, 2008 12:07
0
Alaudeen S.:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அன்புச் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ...(நபியே!) இன்னும், ''சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.(அல்குர்ஆன்: 17:81) //////திமுக ஆட்சிக்கு வந்த பிறகு RSS பார்ப்பன தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் RSS பயங்கரவாத தேசத்தீவிரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. தொடர்ந்து முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் RSS பார்ப்பன இந்து தேசிய தீவிரவாத பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ////// என்று இறைவனுக்கு அஞ்சிய மனித நேயத்தை மட்டும் வாழ்க்கையாக கொண்டு வாழும் நாங்கள் அல்லவா கூற வேண்டும். வெள்ளையனுக்கு அடிமை சேவகம் பார்த்த பார்ப்னீய கும்பல் தைரியமாக அடிக்கடி பொய்யான அறிக்கை விட முடிகிறதென்றால் இன்றுவரை இந்த பார்ப்பனீய கூட்டத்தை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி ---தட்டி சரியான தண்டனை தராமல் சுதந்திரம் கிடைத்த முதல் அனைத்து ஆட்சியாளர்களும் மயிலிறகால் சாமரம் வீசியும்,தடவியும் கொடுத்து வருவதால் அல்லவா இந்த பொய்யான, கொழுப்பான, திமிரான -அறிக்கைகள். என்று இந்தியாவுக்கு வீரமான ஆட்சி,-நேர்மையான ஆட்சி, இறைவனுக்கு பயந்த ஆட்சி ஏற்படுமோ அன்று இந்த கயவர்களின் சுரண்டி பிழைக்கும் பார்ப்பனீய கூட்டங்களின் முதுகெலும்பு முறிக்கப்படும். இன்ஷாஅல்லாஹ். அமைதி- சேவை புரிந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பிற்கு பார்ப்பனீய குள்ளநரி தந்திரத்தால் இன்னும் 2 வருடம் தடை நீடிக்கபடுமாம். சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இன்று வரை பூர்வக்குடியான முஸ்லிம்களையும், இந்நாட்டின் பிற சகோதர,சகோதரிகளையும் தீண்டாமை என்னும் நெருப்பில் தள்ளி ரத்தங்களை குடித்துக்கொண்டு இருக்கும் RSS தீவிரவாதிகளுக்கு பல பெயர்களில் கட்சிகளாம் இவர்களுக்கு எந்த தடையும் இல்லையாம் - இதுவல்லவோ நீதி – காரணம் இந்தியா அனைத்திலும் 90 சதவீதம் பார்ப்பனீயம் ஆதிக்கம் செய்வதால் வந்த விழைவை அனுபவிக்கிறோம். நாமும் தமிழக அரசின் கவனத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை --சொல்லி வைப்போம் ////மரணவியாபாரி – ரத்தவெறி மோடி தற்பொழுது தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன் குஜராத்திலிருந்து சிறப்பு ரயிலில் 1200 தொண்டர்கள் (குஜராத்தில் 3000 த்திற்கு அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்த குண்டர்கள்) ராமேஸ்வரத்திற்கு இல்லாத பாலத்தை பாதுகாப்பதற்கு வந்தததாக பார்ப்பன தினமனியில் செய்தி வந்தது. நமது கேள்வி இவர்களின் ஸ்பான்சர் யார்? இப்பொழுது இவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு உடனே நடிவடிக்கை எடுத்து இந்த குண்டர்களுக்கு துணையாக இருப்பவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி இந்த குண்டர்களை வந்த வழியே திருப்பி அனுப்புவதோடு – தமிழ்நாட்டில் -ஏற்படும் கலவரங்கள் அனைத்திற்கும் மூலகாரணம் RSS பார்ப்பன கூட்டங்கள் என்பதை கருத்தில் கொண்டு இவர்களின் --செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து-- செயல் இழக்கச் செய்து விட்டால் -தமிழகம் அமைதி பூங்கவாக மாறும். காரணம் பதவி வெறி பிடித்து அலைகிறார்கள் - இவர்களுக்கு மனித ரத்தம் என்பது தண்ணீர் குடிப்பது போன்றது – பல ஆண்டுகளாக இதையேதான் செய்து வருகிறார்கள். தமிழக அரசுக்கு RSS கூட்டங்களால்தான் தலைவலி. (RSS, இந்து முன்னனி, பி.ஜே.பி, மாணவ, மாணவி அமைப்பு இப்படி பல பெயரில் இருப்பார்கள் - இவர்கள் ஆயிரம் பெயரில் இருந்தாலும் எல்லோருக்கும் கொள்கை ஒன்றுதான் அடித்தட்டு மக்கள் மேலே வரக்கூடாது. இவர்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும். முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இனச்சுத்திகரிப்பு செய்யவேண்டும். -- இதுதான் இவர்களின் லட்சியம்).
4

February 09, 2008 08:45
0
கலை:
அதிர வைக்கின்றன தகவல்கள்.... இத்தகைய அநியாயங்களை செய்துவிட்டு இவர்கள் சாதிக்க நினைப்பது தான் என்ன? சே... மனிதர்கள் தானா இவர்கள் எல்லாம்? இந்த உண்மை, இன்று இவர்கள் கைகளாலேயே வெளியே வந்து அசிங்கப்பட்டுள்ளார்கள்.
5

February 12, 2008 13:14
0
Alaudeen S:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அன்புச் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) :::: சம்பூகன் என்ற பளாக்ஸ்பாட்டில் தென்காசியைப்பற்றி வந்துள்ள செய்திகள் தேசவிரோதி பார்ப்பன பண்ணாடை ராமகோபாலனின் பித்தாலாட்டம் பற்றி தெரிய உதவும்.:::: ஒரு உதார‌ண‌த்திற்கு சொல்கிறேன் த‌ந்தை பெரியார் திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஜ‌ன‌வ‌ரி 5ம் தேதி நாத்திக‌ர் விழா கொண்டாட‌ போவ‌தாக‌வும், எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழாவை அத்தோடு சேர்ந்து கொண்டாட‌ போவ‌தாகவும், அத‌ன் நினைவாக‌ சென்னை எம்.ஜி.ஆர் ந‌க‌ரில் ஒரு நிழ‌ற்குடை திற‌க்க இருப்ப‌தாக‌வும் அறிவித்த‌து, இத‌ற்காக‌ சுவ‌ரொட்டி அச்ச‌டித்து, நோட்டீஸ் விநியோகித்து பிர‌ச்சார‌மும் செய்து வ‌ந்த‌து, விழா ஏற்பாடுக‌ளெல்லாம் முழுமையாக‌ முடிவடைந்துவிட்ட‌ நிலையில், தென்காசியில் குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌திதிட்ட‌ம் தீட்டிக் கொடுத்த‌ இராம‌.கோபால‌ன் என்ற‌ தீவிர‌வாதி அந்த‌ விழாவிற்கு த‌டை உத்த‌ர‌வு வாங்கினான், அத‌ற்கு அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ம் நாத்திகம் பேசினால் இந்துக்க‌ளின் ம‌ன‌து புண்ப‌டும், மேலும் பெரியார் தி.க‌வுக்கும் நக்சலைட்டு தீவிர‌வாதிக‌ளுக்கும் தொட‌ர்பு இருக்கிற‌து., இப்ப‌டி பீதி கிள‌ப்பி அந்த‌ விழாவிற்கு த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌ அந்த‌ ப‌ண்ணாடைத்தான் இன்று த‌ன‌து அலுவ‌ல‌க‌த்திற்கே குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌தி திட்ட‌ம் தீட்டியிருக்கிற‌து. இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு குண்டுவைத்ததாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர், இத‌ன் மூல‌மாக‌ ஆர்.எஸ்.எஸ் அலுவ‌ல‌க‌த்திற்கு அந்த‌ அமைப்பை சேர்ந்தவ‌ர்க‌ளே குண்டு வைத்ததும், அந்த பழியை இஸ்லாமிய ச‌கோத‌ர‌ர்களின் மீது சும‌த்தவே இந்த கேவலமான‌ செயலில் அவர்கள் ஈடுபட்டதும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து, 'தீவிர‌வாதிக‌ளின் அடுத்த‌ குறி தென்காசிதான்' என்று இந்து முன்ன‌னி இராம‌.கோபால‌ன் சில‌ நாட்க‌ளுக்கு முன்பு கூறிய‌ நிலையில் இந்த‌ குண்டுவெடிப்பு அவ‌ரை க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருப்ப‌தும் இங்கு குறிப்பிட‌த்தக்கது., தி.மு.க‌வின் ஆட்சியில் வ‌ன்முறை பெருத்துவிட்ட‌து என்று உட‌ம்பின் அத்துனை துவார‌ங்க‌ளின் வெளியாக‌வும் ச‌த்த‌மிட்டுக்கொண்டிருந்த‌ சோவும், ஜெயாவும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கும் இந்த‌ கேடுகெட்ட‌ வன்முறை கும்ப‌லை க‌ண்டிப்ப‌த‌ற்கு த‌ன‌து ஆசன‌ வாயையாவது திறப்பார்க‌ளா என்றுதான் தெரிய‌வில்லை, அந்த வாயையே அவ‌ர்க‌ள் திற‌ந்தாலும் கூட‌ 'இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ப்புவிப்ப‌த‌ற்காக‌ இந்த‌ அர‌சு ஹிந்துத்துவ‌வாதிக‌ளின் மீது பொய் வ‌ழ‌க்கு போடுகிற‌து' என்றுதான் அது பேசும். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக நேற்று வரை பீதி கிளப்பிய பத்திரிக்கைகள், அந்த சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தது இந்துத்துவ பயங்கரவாத கும்பல்தான் என்பதை இப்பொழுது எழுதவில்லை. எப்பேர்பட்ட நடுநிலையான பத்திரிக்கைகள். எது எப்ப‌டி இருந்தாலும் இனி ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டிய‌து ஆர்.எஸ்.எஸ் இந்துமுன்ன‌னி தொண்ட‌ர்க‌ள்தான், எவ்வளவுதான் அவர்கள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ கைதேர்ந்த‌ கொலைகார‌ர்க‌ளாய் இருந்தாலும் கூட‌, அதே போன்று ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ இன்னொரு ஆர்.எஸ்.எஸ் கொலைகாரனாலேயே அவ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் அவர்களூக்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கிறது. இன்று இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌த்திலேயே குண்டு வைத்துக்கொண்ட‌ ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள், நாளை இராம‌.கோபா‌ல‌ன் போன்ற ஹிந்து த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையால் த‌ங்களது க‌ட்சி ஊழிய‌ர்க‌ளையே போட்டுத‌ள்ளூம் வாய்ப்பு இருக்கிற‌து, ஆக‌வே இந்துத்துவவாதிக‌ளே உஷார், இஸ்லாமிய‌ர்க‌ளின் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ நாளை நீங்க‌ளும் ப‌லி க‌டாவாக்க‌ப்ப‌ட‌லாம். நன்றி: http://sampoogan.blogspot.com/
6

February 13, 2008 15:30
0
haneef:
ok
7

November 12, 2008 11:44

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:2 இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் தென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே!!
Twitter
RSS
YouTube
English