| நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது... எப்படி இதைச் சாதித்தார்கள் என்று! |
|
|
| பொதுவானவை - பொதுவானவை | |||
| செவ்வாய், 20 நவம்பர் 2007 15:21 | |||
|
முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிர வைப்பவையாகும். ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, 'இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்' என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.
இப்படிப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது. நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (2)
![]()
இதில் பிரமிக்க என்ன உள்ளது?
நினைத்தார்கள், செயல்பட்டார்கள், சாதித்தார்கள்! அவ்வளவு தான்.
முஸ்லிம்கள் இதிலிருந்து என்ன பெற்றுக் கொண்டார்கள் என்பது தான் கேள்வி!
வெறுமனே பிரமித்துக் கொண்டு, இது போன்று அக்கிரமங்களைத் தோலுரித்துக் காட்டவேண்டும் என்ற அதிவேட்கையுடன் 'நினைத்துக் கொண்டு' அப்படியே இருப்பதை விடுத்து முஸ்லிம்கள், 'சூட்சுமங்களுடன் திட்டமிட்டுச் செயல்படவும்' துவங்கினால் இதே போன்று சாதிக்கவும் துவங்கலாம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் தற்போது செய்ய வேண்டியத் தலையாயப் பணியும் இதுவே!
எதிரியைக் காண், தயாராகு!
தெஹல்காவைக் காண், பாடம் படி!
ஒருங்கிணை, திட்டமிடு, வலைவிரி, செயலாற்று!
இறைவன் கட்டளையிடும் அக்கிரமங்களுக்கு எதிரான செயலாற்றல் இதுவே!
அன்புடன்
இறை நேசன்.
1
November 24, 2007 06:21
கருத்து எழுதுக :
|