சத்தியமார்க்கம்.காம்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை print Email
பொதுவானவை - பொதுவானவை
ஞாயிறு, 18 நவம்பர் 2007 15:39

குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் S6 பெட்டி எரிந்து போனதையும்; அத்தீவிபத்தில் 58 பேர் இறந்து போனதையும், "உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்"; "ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி" என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது.

ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலையை ஏவிவிடக் காத்திருந்த இந்து மதவெறிக் கும்பல், அதற்கொரு வாய்ப்பாகவே கோத்ரா சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மை சட்டபூர்வமாகவே அம்பலமாகி வருகிறது.


"கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள், 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து S6 பெட்டிக்குள் ஊற்றி, அதற்குத் தீ வைத்தனர்'' என்பதுதான் இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் குஜராத் போலீசு கூட்டணியின் முதல் புலனாய்வுக் கண்டுபிடிப்பு.


இக்கண்டுபிடிப்பை குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, "தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளது.


இரண்டாவது அறிக்கை, "ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி" எனக் குறிப்பிட்டது.


இதுவொருபுறமிருக்க, "முசுலீம் தீவிரவாதிகள்" பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், "தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இந்து மதவெறிக் கும்பலின் முதல் "கண்டுபிடிப்பு" புஸ்வானமாகிப் போனபிறகு, "S6 மற்றும் S7 பெட்டிகளை இணைக்கும் இணைப்பை கிழித்துவிட்டு, S6 பெட்டிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திரவ எரிபொருளை கீழே கொட்டிவிட்டு, அதன்பின் வெளியே இறங்கிப் போய் தீ வைத்ததாக" இரண்டாவது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இதற்கு ஏற்றாற்போல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய முதல் தகவல் அறிக்கையும் திருத்தப்பட்டது.
கோத்ரா சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் கே.ஜி.ஷா நானாவதி கமிசன் முன்பு சாட்சியம் அளித்துள்ள பூபத் பாய் என்ற பயணி, "வெளியில் இருந்த கும்பலில் இருந்து எவரும் ரயில் பெட்டிக்குள் ஏறியதை நான் பார்க்கவில்லை" எனக் கூறியுள்ளார்.


துவாரகா பாய் என்ற பயணி, "நான் தப்பித்து வெளியேறும்வரை... எத்தகைய திரவப் பொருளும் உள்ளே வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. யாரும் எந்த நபரும் எத்தகைய திரவத்தையும் தெளிப்பதையோ அல்லது பெட்டியைக் கொளுத்துவதையோ நான் பார்க்கவில்லை" எனச் சாட்சியம் அளித்துள்ளார். டி.என். திவிவேதி என்ற பயணி, பெட்டியின் இடதுபுற மேல்பாகத்தில் இருந்துதான் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.


S6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது இடைக்கால அறிக்கையில், "அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.


பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், "S6 மற்றும் S7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, "நியோபிரீன் ரப்பர்" என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்" எனச் சான்று அளித்துள்ளனர்.


இந்து மதவெறியர்கள் கூறுகிறபடி முசுலீம்கள் பெட்டிக்கு வெளியில் இருந்தோ, அல்லது பெட்டிக்குள் நுழைந்தோ பெட்ரோல் போன்ற திரவ எரிபொருளைக் கொட்டியிருந்தால் உடனடியாக தீப்பற்றியிருக்கும். ஆனால், நானாவதி ஷா கமிசனிலும், பானர்ஜி கமிசனிலும், சாட்சியம் அளித்துள்ள பயணிகள், "முதலில் மூச்சு முட்டும் அளவிற்குக் கரும்புகை வந்தது; அதன்பின் சில நிமிடங்கள் கழித்துதான் நெருப்பு எரிந்ததாக"ச் சாட்சியம் அளித்துள்ளனர்.


சம்பவம் நடந்த அன்று S6 பெட்டியில் பயணம் செய்தவர்களுள் பெரும்பாலானோர் குஜராத் மாநில விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள்தான். இது, பயணிகள் முதன்பதிவு பட்டியலின் மூலமும், முன்பதிவு செய்து S6 பெட்டியில் பயணம் செய்த 52 பயணிகளில் 41 பேர் உயிர் பிழைத்திருப்பதை வைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


S6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், "எவ்வித எதிர்ப்பும் இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், S6 பெட்டி தீக்கிரையானதை, "ஒரு தற்செயலான தீ விபத்துதான்" என முடிவு செய்து, இடைக்கால அறிக்கையை அளித்திருக்கிறது.


இச்சம்பவம் நடந்த சமயத்தில் குஜராத் மாநில போலீசுத் துறையின் உளவுப் பிரிவில் கூடுதல் போலீசு இயக்குநராகப் பணி புரிந்து வந்த சிறீகுமார், நானாவதி ஷா கமிசனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், கோத்ரா தீ விபத்திற்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்புலம்தான் காரணமாக இருக்கும் என்பதை 'நிரூபிக்கும்' வகையிலேயே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என மத்தியமாநில அரசுகளிடமிருந்தும், மோடிக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்தும் நெருக்குதல் வந்ததாக"க் குறிப்பிட்டுள்ளார்.


குஜராத் மாநில விசுவ இந்து பரிசத், நானாவதி கமிசனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், S6 பெட்டியை எரிக்க எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை.
குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் நளின் பட், "எளிதில் பற்றக்கூடிய பொருள் எதுவும் S6 பெட்டிக்குள் வெளியில் இருந்து வீசப்பட்டதற்கான தகவல் எதுவும் தங்களின் சாட்சிகளிடம் இல்லை" எனக் கூறியுள்ளார்.


கோத்ரா சம்பவம் தொடர்பாக உள்ளூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி, 6 தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தது, விசுவ இந்து பரிசத். இது தொடர்பாக நானாவதி கமிசனில் நடந்த குறுக்கு விசாரணையில், ஒரு தொலைபேசி எண் சூரத்தைச் சேர்ந்த கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு உரிமையானது; மற்ற ஐந்து தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லாதவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறாக, கோத்ரா சம்பவம் "பாக். உதவியோடு உள்ளூர் முசுலீம்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்" என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், S6 ரயில் பெட்டி தீக்கிரையான வழக்கு, காலாவதியாகிப் போன "பொடா" சட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. நீதியை நிலை நாட்டுவது என்பதைவிட, சிறுபான்மையினரான முசுலீம் மக்களை நிரந்தரப் பீதியில் வைத்திருப்பதுதான் இந்த வழக்கின் நோக்கம் என்பதை விசாரணையின் போக்கே அம்பலமாக்கி வருகிறது.


கோத்ரா வழக்கில் 54ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இஷாக் முகம்மது பார்வையற்றவர். "இஷாக் முகம்மது 100 சதவீதம் பார்வையற்றவர்" என 1997ஆம் ஆண்டே குஜராத் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். எனினும், இவ்வழக்கில் இவரைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, கோத்ரா சம்பவம் நடந்த பிறகு, "இஷாக் முகம்மது பார்வையற்றவர் என்ற பொழுதும், ஒரு மீட்டர் தொலைவிற்கு இவரால் பார்க்க முடியும்" எனச் சான்றிதழ் பெறப்பட்டு இஷாக் முகம்மது சிறையில் தள்ளப்பட்டார். "S6 பெட்டிக்கு வெளியே கூடி நின்ற கும்பலில் இஷாக் முகம்மதுவும் இருந்தார்" என்பதுதான் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அதாவது 'வேடிக்கை பார்க்க' நின்ற குற்றத்திற்காக இவர் மீது "பொடா" பாய்ந்திருப்பதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது.


சலீம் அப்துல் கலாம் பதாம் உள்ளிட்டு ஐந்து குற்றவாளிகள் கோத்ராவைச் சேர்ந்த திலீப் உஜ்ஜம்பாய் தசரியா என்ற பள்ளி ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தப் பள்ளி ஆசிரியரோ, தான் அப்படிப்பட்ட எந்த சாட்சியமும் அளிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று, கோத்ராவில் இருந்து 25 கி.மீ. தள்ளியுள்ள ஊரில் தனது பள்ளியில் இருந்ததாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அந்த ஐந்து 'குற்றவாளிகள்' மீதான வழக்கைத் திரும்பப் பெற, மோடி அரசு மறுத்து வருகிறது.


முகம்மது அன்சார் குத்புதீன் அன்சாரி, பைதுல்லா காதர் தெலீ, ஃபெரோஸ்கான் குல்சார்கான் பத்தான், இஷாக் யூசூப் லுஹர் உள்ளிட்ட 20 பேர் மீது, கோத்ரா சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லாமலேயே, அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பிப். 27, 2002 அன்று காலை 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் மீதான புகார் பதிவு செய்யப்பட்டது.


கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், S6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். "நீலம் தங்கும் விடுதி வழக்கு" என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?


கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.


கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, RSS கும்பல் தலைமை தாங்கி நடத்திய இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, "பொடா"வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.


கோத்ரா சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 135 பேரில், 22 பேர் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்.14, 2003 அன்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. மீதி பேருக்கு பிணை கிடைத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்ட மோடி அரசு, பிணை தீர்ப்பு வெளிவந்த ஐந்தாவது நாளே, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடந்துவந்த கோத்ரா வழக்கை, சட்டவிரோதமான முறையில் "பொடா" வழக்காக மாற்றியது.


மைய அரசின் கீழ் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வு கமிட்டி, கோத்ரா வழக்கை பொடா சட்டத்தின்கீழ் விசாரிக்கத் தேவையில்லை என மே 16, 2005 அன்றே கூறிவிட்டாலும், குஜராத் அரசும், "பொடா" சிறப்பு நீதிமன்றமும் இவ்வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர மறுத்து வருகின்றன. பொடா மறு ஆய்வு கமிட்டியின் முடிவை அம்பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கூட, கடந்த இரண்டாண்டுகளாக விசாரணையின்றி தூசி படிந்து கிடக்கிறது.


குஜராத்தில், நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பிறகு, அகதி முகாம்களில் வசித்துவரும் முசுலீம்களுக்கு அடிப்படையான வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் உயர்நீதி மன்றம் அரசுக்கு எந்த உத்தரவும் இட மறுத்துவிட்டது. மாறாக, அகதி முகாம்களில் வசித்துவரும் ஒவ்வொரு முசுலீமுக்கும் கொடுக்கப்படும் தினப்படியை ஆறு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் அளித்தால் போதும் எனக் கூறி, தனது 'கடமையை' முடித்துக் கொண்டது.


இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து "பொடா" வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற RSS பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?

 

-செல்வம்


நன்றி: தமிழரங்கம்

Trackback(0)
கருத்துக்கள் (9)add comment
0
haneefm:
இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து 'பொடா' வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு, இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற RSS பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?//// இன்னும் இந்த கீழ்தர அரசங்கமும்,நீதியை தர தவறும் நீதிபதிகளும் தங்கள் கடமையை தவறும் போது மக்கள் தங்கள் சட்டங்களை கையில் எடுத்தலும் தவறுவொன்றும் இல்லை/// வெறி பிடித்த மதவெறியர்களை அது முஸ்லிம்மாக இருந்தலும் கண்ட இடத்தில் வெட்டிக்கொள்ளவேண்டும் அபோதுதான் அரசங்கமும், நீதிதுறையும் தங்கள் கடமையை செய்யமுன்வரும் அப்படி வரதவரினால் அவர்களுக்கும் இந்த தண்டணை பொறுந்தும் ஹனிஃப்- குவைத்
1

November 18, 2007 18:53
0
haneefm:
போதும் போதும் இந்த நீதிதுறையையும்,அரசங்கத்தையும் நம்பி நம்பி ஒன்றும் அறிய மக்கள் கொல்லப்படுகிறார்கள் இதற்க்கு எல்லாம் காரணம் இனவெறிபிடித்த மதவெறியர்கள் இவர்களை எங்கு கண்டலும் மக்கள் முன் தண்டனை தரவேண்டும் அதுவும் மக்கள் தான் தண்டனை தரனும்,இனி இந்த கீழ்தர நீதிதுறையையும்,போலிஸையும் நம்பி யாருக்கும் பலன் இல்லை, இன்னும் ஆதரங்களை அவர்கள் கண் முன் நிருத்தினாலும் அவர்கலுக்கு கண்கள் குருடுதான் சமயம் வரும் என்று காத்துயிருக்கவேண்டாம்,,,,,,,,,காலம் கண்யெதுரே,,,, ஹனிஃப்-குவைத்
2

November 18, 2007 19:06
0
அபூ ஸாலிஹா:
அன்பின் சகோதரர் ஹனீஃப் அவர்களே, அநியாயமாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதால் உங்கள் உள்ளத்தில் எழும் உணர்வு நியாயமானதே! கோத்ரா ரயிலை முஸ்லிம்கள் பெயர் சொல்லி எரித்தவர்களும், அதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் நடுநடுங்கிய முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை நிகழ்த்தியவர்களும் பெருமிதம் பொங்க பேசுகையில் அவர்கள் எந்த அளவிற்கு ஆளும் குஜராத் அரசினால் ஆசிர்வதிக்கப்பட்டு, ஆதரவளிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இருப்பினும், இந்திய மண்ணில் முஸ்லிம்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தொடர்ந்து இருப்பார்கள். ஆளும் அரசாங்கங்களின் மூலம் கூட அநீதிகள் தொடர்ந்து இழைத்து வரப்பட்ட போதிலும் நீதிமன்றத்தின் பாரபட்சமற்ற தீர்ப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளார்கள். நமது உரிமைகளை தார்மீக ரீதியில், தொடர்ந்து போராடிப் பெறுவோம் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மதப்பாகுபாடின்றி குஜராத் ரத்த வெறியாட்டத்தினைத் தொடர்ந்து தோலுரித்து வரும் தெஹல்க்கா, ஹெட்லைன்ஸ்டுடே போன்ற துணிச்சலான ஊடங்களுக்கும், அநீதியை எதிர்த்துத் தோள் கொடுத்துப் போராடும் இந்து மத சகோதரர்களுக்கும் மிக்க நன்றி!
3

November 19, 2007 12:01
0
muslimeen:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இஸ்லாத்தின் எதிரிகளின் செயல்கள்களைக்கண்டு ஆத்திரப்பட்டு ஆவேசத்தில் ஏதாவது செய்துவிடுவது அறிவுடமையாகாது.இதனால் மீண்டு சமுதாயம்தான் பாதிப்புக்குள்ளாகிறது.அதே வேளையில் நீதிமன்றங்களையும்,காவல்துறையையும் நம்பி வாழாவெட்டியாக இருப்பதும் கோழைத்தனம்.முஸ்லிம் சமூகம் அக்கிரமசக்திகளுக்கு எதிராக தன்னை பாதுகத்துக்கொள்ளவும் தங்களை எல்லாவிதத்திலும் சக்திப்படுத்திக்கொள்ளவும் தயாராகவேண்டும். முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (Alquran3:200)
4

November 19, 2007 13:27
0
இறை நேசன்:
//நீதிமன்றத்தின் பாரபட்சமற்ற தீர்ப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துள்ளார்கள்.// 1. பாபர் மசூதி வழக்கு..........................? 2. பம்பாய் கலவரம் குறித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை.................? 3. கோவை குண்டு வெடிப்புக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டப் படுகொலைகள் மற்றும் பொருளாதார சூறை மீதான வழக்கு...............? 4. 5 வருடங்கள் கடந்து விட்ட குஜராத் இன அழிப்பு தொடர்பான பல்வேறு(பெஸ்ட் பேக்கறி போன்ற) வழக்குகள்............? இவை அனைத்திற்கும் நீங்கள் நினைப்பது போன்று பாரபட்சமற்ற நீதியே கிடைக்கும் என்ற நம்பிக்கையைட்த் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மேற்கண்ட பட்டியலில் இடம் பெற்ற சூரத், பம்பாய், பாகல்பூர், குஜராத், கோவை என இன அழிப்புக்களை இந்தியா முழுவதும் நடத்தும் எண்ணத்தில் இன்னும் உத்வேகத்துடன் அனைத்து விதப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனரே - சங்க்பரிவார இரத்தவெறிக் கூட்டத்தினர். இதற்கும் நீங்கள் நம்பும் பாரபட்சமற்ற நீதித்துறையும், அரசாங்கமுமே தக்கத் தீர்வைத் தரும் என நம்புகின்றீர்களா? குஜராத் தொடரும். அப்பொழுதும் இதே பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்கள் ஒரு அரை நூற்றாண்டு கடந்தப் பின்னர் பாரபட்சமற்றத் தீர்ப்பு வழங்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம். பிணம் தின்னி மோடி மிருகங்கள் செய்வதை செய்துக் கொண்டிருக்கட்டும். இறை நேசன்.
5

November 19, 2007 14:05
0
ஷாஹ்மைந்தன்:
இவ்விஷயத்தில் ''ஆளூர் ஷாநவாஸ்'' அவர்கள் எழுதிய கவிதையை நினைவு கூற விரும்புகிறேன். வாயோரம் ஒழுகிய இரத்தத்துடன் வந்தது மானைக்கொன்ற ஓநாயல்ல..... மக்களைக்கொன்ற வெறிநாய்! நீதியை விரும்பிய காந்தியின் பூமி அகிம்சையை இழந்ததால் அராஜகம் பிறந்தது..... சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் குஜராத் மட்டும் வெளிச்சமாய் இருந்தது. கொளுந்துவிட்டெரிந்த கோர நெருப்பால்.....! நெருப்பு வைத்தவனுக்கு மனிதர்கள் என்ற நிஜம் புரியவில்லை...... நெருப்புக்கு புரிந்தது வேறுபாடின்றி பொசுக்கியது. புகை வண்டியில் புகைந்த உயிர்களும், ஊர் எரிகையில் உருகிய உயிர்களும் கருப்பு நிறமாகத்தான் காட்சியளித்தன....! சட்டம் காலடியில் சனநாயகம் வெறும் சொல்வடிவில்... கூறுகெட்டவர்கள் நாடு ஆள.....அதை கூறுபோட்டவர்கள் எம் வீட்டை சூழ..... கரையான்கள் அரித்த காகிதமாய்.... குஜராத் வீடுகள்....! எரியும் வீட்டிலிருந்து எழுந்தோடி வந்தவர்களின் கருகிய உடலுக்கு கிடைத்தது போர்வையல்ல குண்டுகளின் கோர்வை....! வெறியாட்டத்தில் களைத்துப்போனவர்களின் தாகத்தை தீர்த்தது அப்பாவிகளின் இரத்தம்..... விடுதலைக்காக தலை கொடுத்தவர்களின் முண்டங்களிலேயே தேசிய விரோதிகளென்று முத்திரை குத்தியவர்கள் நிகழ்த்திய.... நவீன ஜாலியன் வாலாபாக்....! காயங்களே..!உங்களின் கதறல்கள் எங்களை கர்ஜிக்க வைக்கிறது! அமைதித்தோட்டத்தில் தீவைக்கும் வெறித்தனம் அடங்க வில்லையெனில், அடக்கப்படும் அடக்கமாக்கப்படும்......! கற்களே!நீ சூழ்ந்து தாக்கியபோது பிறந்த காயங்கள் இனி..... கோடிக் கற்களை பிரசவிக்கும். அவை....மோடிகளின் அராஜகத்திற்கு முடிவு கட்டும்.....! மேற்சொல்லப்பட்ட கவிதையின் இறுதி வரிகளை போல் நடக்க இருப்பது இன்ஷா அல்லாஹ் வெகு தொலைவில் இல்லை.அப்பொழுது நாம் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்.
6

November 19, 2007 18:11
0
farook abdullah:
inshallah kudeeya veraivel naam velethalum naal androo india muslimkal kaiyel islamiya atchee nadai parum aameen aameen yarabel aalameen
7

November 21, 2007 05:53
0
இறை நேசன்:
அருமையான ஆதாரப் புகைப்படம். வெல்டன் சத்தியமார்க்கம்.காம். வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டு எரியும் சபர்மதி ரயில் பெட்டியின் பக்கவாட்டிலோ, கீழ்பகுதியிலோ தீபற்றவே இல்லையே! ஏன்? ஒருவேளை வெளியிலிருந்து பெட்ரோலை ஊற்றிய முஸ்லிம்கள் தீவைக்கும் முன் ரயிலின் பக்கவாட்டிலும் கீழ்பகுதியிலும் தண்ணீர் தெளித்து விட்டு தீவைத்தனரோ? ரயிலின் உள்ளிலிருந்து வெளியாகும் புகையும் தீயும் வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்றித் தீவைக்கப்பட்டதையாக் கூறுகிறது? இறை நேசன்.
8

November 24, 2007 06:28
0
சஃபி:
Godhra “witness” escapes to tell his story

Vidya Subrahmaniam

Husain Mulla says he was not in Godhra on the fateful day … he was
abducted, tortured by police

New Delhi: Thirty-two-year-old Ilyas Husain Mulla is an eyewitness to
the February 27, 2002 Godhra-Sabarmati Express carnage. Or that is
what the records say: He is a witness in Sessions Cases No. 69 to 86
of 2009 and 204 of 2009 before the Additional Sessions Judge,
Panchmahals, Gujarat.

As a supposed eyewitness to a tragedy that claimed 58 mostly Hindu
lives and set off retaliatory killings against Muslims across Gujarat,
Mr. Mulla was of great value to both the Gujarat police and the
Supreme Court-appointed Special Investigating Team currently probing
the burning and its aftermath. However, on February 18, an Assistant
Sub-Inspector assisting the SIT filed a complaint at the B Division
Police Station in Godhra stating that Mr. Mulla, who was to depose in
the court the same day, had gone missing from the circuit house where
he was being held in “protective custody.”

Mr. Mulla has not gone missing. He is in Delhi with friends and
available for interviews with the media. He has also a different story
to tell. He says he was not in Godhra on the day of the burning, and
therefore could not have been an eyewitness. And he says he was not
held in “protective custody” but was abducted and tortured by the
police, including the SIT’s assisting staff, with the intention of
compelling him to say a dictated line in court. He says he was
unwilling to do that and escaped, and now wants to bring the real
facts of the case before the judge. Mr. Mulla says the police and the
SIT’s assisting staff knew he had conveyed his anxieties by fax to
head of the SIT R.K. Raghavan and P.R. Patel, magistrate handling the
Godhra Sabarmati case. “They wanted me to go to the court and withdraw
the fax messages and say that I fabricated the complaint about being
tortured and being falsely implicated as a witness.”

Mr. Mulla’s account is that he was employed as a conductor on truck
(No: GJ-GU-7447). On February 24, 2002, he left on duty for Mumbai
along with driver Irfan Udaliya. In Mumbai, they picked up steel
sheets from Bansal Cutter and headed for Vadodra. On the way they
stopped at a place called Palej, where they came to know about the
Godhra carnage. Fearing trouble, they spent the following week in
Palej.

Nearly five months later, on July 14, 2002, the Godhra police picked
up Mr. Mulla and upon threat of death, forced him to sign a number of
confessional statements, among them that he had pulled the chain of
the Sabarmati Express and that he saw two Muslim men set fire to the
bogie (S6). Since then it has been a cat and mouse game between Mr.
Mullah and the police. First it was the Godhra police and now it is
the police staff assisting the SIT, he says.

Mr. Mulla says his difficulties mounted after he filed an appeal with
the Banerjee panel of inquiry, following it up with fax messages to
Mr. Raghavan and Sessions Court judge Patil.

A troubling part of the story is the alleged role of the staff
attached to the SIT, constituted by the Supreme Court to ensure an
impartial investigation into Godhra and its aftermath. Why would the
SIT staff torture a supposed witness? Mr. Mulla’s lawyers say the
problem arises from the SIT having to rely on the Godhra police for
facts relating to the case. Recently a senior officer assisting the
SIT, Noel Parmar, was removed from the team. As Deputy Superintendent
of Police, Mr. Parmar had carried out the initial investigation in the
Godhra case.

http://www.thehindu.com/2010/02/25/stories/2010022561051300.htm
9

March 09, 2010 14:45

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை
Twitter
RSS
YouTube
English