சத்தியமார்க்கம்.காம்

மாதவிலக்கு ஓர் இயற்கை உபாதை! print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
ஞாயிறு, 28 அக்டோபர் 2007 14:01

''மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மாதவிலக்கு (ஹைள்) என்பது பெண் பருவ வயதையடைந்தால் கர்ப்பப் பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறும் இரத்தத்தைக் (Menstruation) குறிக்கும். குறித்த காலத்திற்கும் கூடுதலாகவும் வெளியாகக்கூடிய இரத்தம் ''உயர் இரத்தப் போக்கு'' (இஸ்திஹாளா) எனப்படும். மாதவிலக்கு இரத்தமானது கர்ப்பப் பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். உயர் இரத்தப் போக்கானது கர்ப்பப் பையின் வாய்ப்பகுதியிருந்து கசியும் இரத்தமாகும். இந்த இருவகை இரத்தங்களிலும் வித்தியாசம் உண்டு அதுபோல் இதற்கான சட்ட விதிமுறைகளிலும் வேறுபாடு உண்டு.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, மாதவிலக்கை அனுபவிக்கும் பெண்கள் அசுத்தமானவர்கள் எனவும் அவர்கள் தொடும் பொருளும் தீட்டு என்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட அறியாமைக் காலத்தில், தீட்டு, தீண்டாமை போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இஸ்லாம் அன்றே குரல் எழுப்பியது. அது பற்றி இங்கு சற்றுச் விரிவாகப் பார்ப்போம்.

''மாதவிலக்கு பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிலக்கின் போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள். பாவத்திலிருந்து மீள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையானவர்களையும் நேசிக்கிறான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன், 002:222)

இந்த வசனம் பெண்கள் மாதவிலக்குக் காலங்களை அடையும்போது அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ளாமல் அவர்களை விட்டும் விலகியிருங்கள் என்ற ஒரு நிபந்தனையை மட்டும் தடையாக விதிக்கிறது.

அல்குர்ஆனின் மேற்கண்ட 002:222வது வசனம் அருளப்பட்ட பின்னணி...

"யூதர்கள் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் கலந்து உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டார்கள்! அப்போது, (நபியே) மாதவிலக்கு பற்றி உம்மிடம் கேட்கின்றனர்... எனும் அல்குர்ஆன் 002:222 என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது 'நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்' என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர்(ரலி) அப்பாத் பின் பிஷ்ர்(ரலி) ஆகியோர் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே (மாதவிலக்கு ஏற்பட்டுள்ள) பெண்களுடன் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?'' என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டு விட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின் தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்து வரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கு (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்து கொண்டனர்." அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், தாரிமீ.

இன்னும் இது பற்றி வேறு அறிவிப்புகளும் பதியப்பட்டுள்ளன. இந்நபிமொழியிலிருந்து, யூதர்கள் மாதவிலக்கை அடைந்த பெண்களை இல்லத்தில் வழக்கம்போல் இயங்க விடாமல், தீட்டு, தீண்டாமை என்ற பெயரில் அவர்களை ஒதுக்கி இருந்தார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனை என்று நிறுவி, மேலும் பெண்கள் மாதவிலக்குக் காலங்களை அடையும்போது அவர்களிடம் தாம்பத்திய உறவை மட்டும் தவிர்த்துக் கொண்டு, பெண்கள் வழக்கம் போல் குடும்பப் பணிகளில் ஈடுபடலாம். கணவன், குழந்தைகளைத் தொடலாம் அதனால் எந்தத் தீண்டாமை அசுத்தங்களும் ஏற்பட்டு விடாது என அன்றைய யூதர்களின் மூடநம்பிக்கைக்கு மேற்குறிப்பிட்ட நபிமொழி சாவு மணி அடிக்கிறது.

''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி) நூல்கள், புகாரி, முஸ்லிம்.

''நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. மாதவிலக்குக் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்'' அன்னை உம்மு ஸலமா (ரலி) புகாரி, முஸ்லிம்.

மேற்கண்ட நபிமொழிகள், மாதவிலக்கு ஏற்பட்ட மனைவியிடம் தாம்பத்திய உறவைத் தவிர மனைவியைக் கட்டியணைப்பதையும், மனைவியுடன் சேர்ந்து ஒரே படுக்கையில் படுப்பதையும் தடை செய்யவில்லை.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து பழகுவதில் இஸ்லாம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மற்றும் திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் அதே சமயம், மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் தொழுகை, நோன்பு, காபாவை வலம் வருதல் இந்த வணக்க வழிபாடுகளைச் செய்வதை விட்டும் இஸ்லாம் விலக்கு அளித்துள்ளது. இந்தத் தடை இக்காலகட்டங்களில் பலவீனமாக இருக்கும் அவர்களின் உடல்நிலையைப் பேண இஸ்லாம் வழங்கியிருக்கும் மிகப்பெரிய அருட்கொடை எனலாம்.

ஏனெனில், உயிரோடு இருக்கும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுடைய இக்கட்டானப் பலச் சூழல்களுக்கு ஏற்ப பல்வேறு கடமை மற்றும் சட்டங்களைப் பேணுவதில் இருந்து விலகி இருக்க அனுமதி வழங்கியிருந்தாலும் தொழுகை விஷயத்தில் மட்டும் இஸ்லாம் மிகக் கடுமையாகவே உள்ளது.

"நமக்கும் நிராகரிப்பாளருக்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையில் உள்ளது; யாரொருவர் தொழுகையை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார்" என மிகக் கடுமையாக நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அத்தகைய எதிரிகளின் அச்சத்தில் இருக்கும் போர் வேளைகளில் கூட கண்டிப்பாகக் கடைபிடிக்கக் கடமையான மிக முக்கியத்துவம் வாய்ந்தத் தொழுகையினை விட்டுவிடுவதற்கான அனுமதி, மாதவிலக்கிலுள்ள பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் அருட்கொடையாகும்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ''மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நீ 'ஹரூரா' எனும் இடத்தைச் சேர்ந்தவளா?'' என்று கேட்டார்கள். ''நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும் (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கிறேன்'' என்றேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ''எங்களுக்கும் அது (மாதவிலக்கு) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்படவில்லை'' என்று பதிலளித்தார்கள். நூல், முஸ்லிம்.

''நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். 'ஸரிஃப்' என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, 'உனக்கு என்ன? மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'இந்த மாதவிலக்கானது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வை வலம் வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் 'குர்பானி' கொடுத்தார்கள்'' அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) நூல், புகாரி.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள், தொழுகை, நோன்பு, காபாவை தவாப் செய்தல் போன்ற வழிபாடுகளை செய்யக்கூடாது. மாதவிலக்குக் காலத்தில் விடுபட்டத் தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை. விடுபட்ட நோன்பைப் பிந்தைய நாட்களில் நோற்க வேண்டும் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம். கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்களும் வெளியே சென்று நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்ளலாம். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்கும் செல்லலாம். மாதவிடாய் பெண்கள் மட்டும தொழுகையை விட்டு விலகியிருக்க வேண்டும் என்பதையும் நபிமொழிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

மாதவிலக்கு முடிந்து குளிப்பது:

மாதவிலக்கு முடிந்த பின் குளிக்கும் முறை பற்றி அஸ்மா பின்த் ஷகல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்டனர் அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உங்களில் ஒருத்தி குளிப்பதற்காக தண்ணீரையும், இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளட்டும். அதன் பிறகு தலையின் மீது தண்ணீரை ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும் வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத்  தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.

அதற்கு அஸ்மா(ரலி) அவர்கள், ''அதை வைத்து எவ்வாறு சுத்தம் செய்வாள்?'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அதனால் சுத்தம் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.

உடனே நான், ''இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்'' என்று - பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன்.

மேலும் அஸ்மா நபி(ஸல்) அவர்களிடம், பெருந் தொடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு ''தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி தலையினட சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!'' என்றார்கள்.

''பெண்களில் அன்ஸார்களின் பெண்களே சிறந்தவர்கள். அவர்கள் மார்க்கத்தைக் கேட்டு தெளிவு பெறுவதிலிருந்து அவர்களது வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை''
என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். நூல், முஸ்லிம்.

உயர் இரத்தப்போக்கு:

''பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' என்று கேட்டதற்கு, 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிலக்கன்று. மாதவிலக்கு ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிலக்குக் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள், புகாரி, முஸ்லிம்.

''நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்'' என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல், புகாரி.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது போல் பெரும் உதிரப் போக்கும் ஏற்படுவதுண்டு. இந்த உதிரப் போக்கை ஒரு நரம்பு நோய் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். மாதவிலக்கிலிருந்து இந்த இரத்தப் போக்கு, வணக்க வழிபாடுகளில் விதி விலக்குப் பெறுகிறது. ''இஸ்திஹாளா'' எனும் பெரும் இரத்தப் போக்கு நோய் உள்ளவர்கள் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

ஆக்கம்: அபூ முஹை

Trackback(0)
கருத்துக்கள் (18)add comment
0
MOHAMED ALI JINNAH:
வலியுடன் கூடிய அந்த மூன்று நாள். கருவேப்பிலையை தினசரி 20 இலைகளை அரைத்து மோரில் கலந்து பருகி வர கருப்பையில் தங்கும் உஷ்ண வாயு நீங்கி கருப்பை PERFECT CONDITION ல் செயல்படும். கடுமையான வலி நிற்கும். இயலாதவர்கள் 20 கருவேப்பிலையை அப்படியே வாயிலிட்டு மென்று தண்ணீர் அருந்தலாம். கருப்பை கோளாறுகள் தொடராமல் ஆரம்ப கட்டத்திலே விலக இம்முறை நல்லது மாத விலக்கின் போது அடி வயிறு வலிக்கு இள நீரே மருந்து. பெண்கள் பச்சை வெங்காயத்தை பீரியட்ஸ் சமயத்தில் மட்டும் சாப்பிட வேண்டாம். பெண்களுக்கு இயல்பாக ஏற்படுகின்ற மாதாந்திர பிரச்சினை களுக்கு ஆப்பிள் நல்ல மருந்து. மற்ற நேரத்தில் சாப்பிட முடிகிறதோ இல்லையோ பெண்கள் அந்த 3 நாட்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். மாம்பழம் சாப்பிட்டால் மாத விடாய்க்கு முன் வரும் மார்பகவலி குணமாகும். மாங்கொட்டை பருப்பை சாம்பாரில் போட்டு சாப்பிடலாம். மாங்கொட்டை பருப்பு சர்க்கரை வியாதி, அதிக இரத்தப்போக்கு, குடல் புண் ஆகிய நோய்கள் வராமல் தடுக்கும். மாதவிலக்கு நாட்களில் திராட்சை பழச்சாறு குடிக்க வயிற்று வலிக் கோளாறுகள் போன்றவை நீங்கும்.
1

October 31, 2007 06:43
0
ibn shah:
''மென்ஸஸ்''என்ற வார்த்தையை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.இந்த வார்த்தை ''பைபிலில்''தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.இதனுடைய யதார்த்தம் என்ன?என்பதையும் சகோதரர் அபூ முஹை அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். மேலும் பெண்களுக்கு ''மாத விலக்கு'' என்பது ஒருமாத சுழற்சியில் இயற்கையாக வருவதாகும்.தொழுகையிலிருந்து பெண்களை தூரமாக்க ஷைத்தான் பொய்யான மாதவிலக்கை ஏற்படுத்தி விடுகிறான்.பெண்களை உடல் ரீதியாக மாதவிலக்கின் மூலம் தீங்கு செய்து தொழ விடாமல் தடுப்பது ஷைத்தானிய ஜின்களின் சாமர்த்தியமாகும்.''பெண்களுக்கு பொய்யான மாதவிலக்கை ஷைத்தான் ஏற்படுத்துகிறான்''என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் [நூல்:திர்மிதி]
2

October 31, 2007 16:58
0
அபூ முஹை:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர் இப்னு ஷா அவர்களே, ஹைளு என்பதை menstruation menses period என்றும் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு சுழற்சி முறையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஏற்படும் மாதவிலக்கு பற்றியே அத்தனை வார்த்தைகளும் குறிப்பிடுகின்றன. மாதவிடாய் ஏற்பட்டப் பெண்களை யூதர்கள் மிக இழிவாக நடத்தி வந்தனர். மாதவிடாய் பெண்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட மாட்டார்கள், வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து வாழமாட்டார்கள். அவர்கள் தொட்ட பொருளும் கூட தீட்டாகக் கருதி, மாதவிலக்குப் பெண்களை வீட்டுக்குள்ளும் சேர்க்காமல் ஒதுக்கி வைத்தனர். பெண்களை இழிவுபடுத்தும் இச்செயல் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கண்டிக்கப்படுகிறது. 002:222வது வசனத்தில் மாதவிடாயின்போது தாம்பத்திய உறவு தவிர்த்து அவர்களுடன் ஒட்டி உறவாட எந்தத் தீட்டும் இல்லை என்று எடுத்துரைப்பதே இங்கு இஸ்லாத்தின் நோக்கம். நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் விரிக்கும் பாயை எடுத்துக் கேட்கிறார்கள். அப்போது ''நான் மாதவிடாய்காரியாக இருக்கிறேன்'' ஆயிஷா (ரலி) கூற, ''மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மாதவிடாய் பெண்களோடு தீண்டாமையை அனுஷ்டித்து முற்றாக விலகிக் கொள்பவர்களுக்கு - பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் இடத்தைத்தவிர, உடலில் வேறு எங்கும் மாதவிடாய் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை என்பதை - மேற்கண்ட 002:222 வசனமும் நபிமொழியும் நமக்கு விளக்குகிறது. மாதவிடாய் பெண்கள் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை வலம் வருவது கூடாது என்பது தீட்டு, தீண்டாமை போல் இருக்கிறதே? என்ற கேள்வியெழுபவர்களுக்கு, பொதுவாக இவைகள் தூய்மையுடன் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் என்பதால் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் மாதவிடாய் பெண்கள் இவ்வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக்கூடாது என்று தடை செய்யப்படுகிறது. மற்றபடி தீட்டு தீண்டாமை என்பதால் இல்லை என்று விளங்கலாம். மேலும், திர்தியில் இடம்பெறும் ஹதீஸ், ...''நிச்சயமாக இது ஷைத்தானின் வேலையாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்கள் என்று முடிவு செய்துகொள்! இது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' (திர்மிதீ 118) மேற்கண்ட நீண்ட ஹதீஸில் உதிரப்போக்கு எனும் நோய் பற்றி கேட்கப்படுகிறது. தொடர் உதிரப் போக்கினால் மாதவிடாய் நாட்களில் சந்தேகம் ஏற்பட்டு நபியவர்களிடம் விளக்கம் கேட்டு, அப்போது தான் இது ஷைத்தானின் வேலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது இரத்தப் போக்கையும் மாதவிடாய் நாளாக கணக்கிடுவதற்கு எண்ணங்களில் ஷைத்தான் குழப்பத்தை எறிந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வரும் வாசகம், (குழப்பத்தை எறியும் ஷைத்தானுக்கு இடம் கொடுக்காமல்) ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாக முடிவு செய்து பின்னர் குளித்து விட்டு தொழுது கொள்ள அனுமதிக்கிகிறது. மாதவிடாய் நாட்கள் என்று குறிப்பிட்ட நாட்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட நாட்களை மட்டும் கணக்கிட்டு தொழாமல் இருந்து, மாதத்தின் மற்ற நாட்களை உதிரப்போக்குடைய நாட்களாகக் கணக்கிட்டு குளித்துத் தூய்மையடைந்து தொழுது கொள்ளலாம் என்றே நபிமொழியிலிருந்து அறிய முடிகிறது. (அல்லாஹ் மிக அறிந்தவன்) //''பைபிலில்''தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.இதனுடைய யதார்த்தம் என்ன?// பைபில் கூறும் மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதர்கள் என்பதன் பொருள், தம்பத்திய உறவுக்கு மட்டும் தீண்டத்தகாதவர்கள் என்றால் மாதவிடாயின்போது தாம்பத்திய உறவிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆனும் கூறுகிறது. மற்றபடி யூதர்கள் மதாவிடாய் பெண்களை தீண்டாமையாகக் கருதி இழிவுபடுத்தி, மாதவிடாய் பெண்கள் தொடவும் தகுதியற்றவர்கள் என்ற கருத்தில் பைபிலில் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டிருந்தால் அந்தக் கருத்தில் இஸ்லாம் மாறுபடுகிறது. பைபிலின் யாதார்த்தம் என்ன என்பதை அறிய மூலமொழியில் பைபில் இல்லை! அந்த ஆய்வு நமக்குத் தேவைதானா? என்பது சகோதரர் அவர்களின் சிந்தனைக்கு நன்றி!
3

November 01, 2007 17:50
0
பியூட்டோ:
//''மென்ஸஸ்''என்ற வார்த்தையை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.இந்த வார்த்தை ''பைபிலில்''தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.// அய்யா பைபிளில் இவ்வாறு எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக் காட்ட இயலுமா?
4

November 03, 2007 09:20
0
MOHAMED ALI JINNAH:
பைபிளில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. Menstruation-- Le 15:19-30; 19 And if a woman have an issue, (her period/menses), and her issue in her flesh be blood, she shall be put apart seven days: and whosoever toucheth her shall be unclean until the even. 20 And every thing that she lieth upon in her separation shall be unclean: every thing also that she sitteth upon shall be unclean. 21 And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even. 22 And whosoever toucheth any thing that she sat upon shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even. 23 And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even. 24 And if any man lie with her at all, and her flowers be upon him, he shall be unclean seven days; and all the bed whereon he lieth shall be unclean. 25 And if a woman have an issue of her blood many days out of the time of her separation, or if it run beyond the time of her separation; all the days of the issue of her uncleanness shall be as the days of her separation: she shall be unclean. 26 Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation. 27 And whosoever toucheth those things shall be unclean, and shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even. 28 But if she be cleansed of her issue, then she shall number to herself seven days, and after that she shall be clean. 29 And on the eighth day she shall take unto her two turtles, or two young pigeons, and bring them unto the priest, to the door of the tabernacle of the congregation. 30 And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness. http://bible.somd.com/nave/nave3291.shtml ------------------------------------------ Women become unclean when they are having their menses which is normal, but everything they touch also becomes unclean. The husbands are ordered to stay away from their 'unclean' wives until the wives become clean. Even objects like the bed or the chairs or anything else that the 'unclean' wives come in contact with become unclean. The Bible treats the women who are having their menses as a disease that men must stay away from. http://www.answering-christianity.com/women_menses.htm ------------------------------------ I AM NOT WELL VERSED IN BIBLE OR MATTER OF CHRISTIANITY. THE ABOVE ARE FOUND IN INTERNET AND THE URL OF SITES GIVEN FOR WHICH I TAKE NO RESPONSIBILITY.
5

November 03, 2007 11:55
0
இப்னு ஷாஹ்:
சகோதரர் பியூட்டோ அவர்களே!இதோ ''பைபிள்'' அறிவிக்கிறது'ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு,அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்,அவன் ஏழு நாட்கள் தீட்டுடையவன்;அவன் படுக்கும்படுக்கை அனைத்தும் தீட்டே!(லேவியராகமம்15:24) இஸ்லாம் கூறுவதற்கும் பைபிள் கூறுவதற்கும் எவ்வளவு வேறுபாடுகள் பாருங்கள்.இதோ இஸ்லாம்'நபி(ஸல்)அவர்களின் மனைவியரான எங்களில் எவருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டால் கீழாடையை இறுகக்கட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டு நபி(ஸல்)அவர்கள் கட்டி அணைத்துக்கொள்வார்கள்'அறிவிப்பவர்:ஆயிஷா(ரழி)ஆதாரம்:புகாரி,முஸ்லிம். வீடு ஒதுக்கி தொட்டதெல்லாம் தீட்டு என அவமானப்படுத்திய காலகட்டத்தில் தான் இஸ்லாம் பெண்களை இந்தளவு ஆறுதலோடு அரவணைக்கிறது.மேலும் பைபிள் அறிவிக்கிறது பாருங்கள்'பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாட்கள் கடந்தும் உதிரப்போக்கு நீடித்தால் அந்த நாட்கள் எல்லாம் விலக்கு நாட்களைப்போல தீட்டானவையே!அந்த நாட்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும்,விலக்குக்காலப் படுக்கைக்கு ஒத்ததே;அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.அவற்றைத்தொடுபவர் தன் உடைகளைத்துவைத்து,நீரில் மூழ்கவேண்டும்.மாலை மட்டும் அவன் தீட்டாய் இருப்பான். அவள் தன் இரத்தப்போக்கு நின்ற பின்,ஏழு நாட்கள் கழித்த பின் தீட்டற்றவள் போலாவாள்.எட்டாம் நாள் இரு காட்டுப்புறாக்களையோ புறாக்குஞ்சுகளையோ,சந்திப்புக்கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.குரு அவற்றில் ஒன்றை பாவம் போக்கும் பலியும்,மற்றதை எரி பலியுமாக்கி,அவருக்காக ஆண்டவன் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்'(லேவியராகமம்15:22-30)இதோ இஸ்லாம்'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்(இறைச்சி நிறைந்த)எலும்பை நான் கடிப்பேன் அதை நபி(ஸல்)அவர்கள் எடுத்து நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்துக்கடிப்பார்கள்.பாத்திரத்திலிருந்து தண்ணீர் குடிப்பேன் அந்த பாத்திரத்தை வாங்கி நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்துகுடிப்பார்கள்.அறிவிப்பவர்:ஆயிஷா(ரழி)நூல்:அபூதாவூத்,நஸயீ,இப்னுமாஜா. இஸ்லாம் பெண்களை எந்த அளவிற்கு சிரமம் தராமல் கண்ணியப்படுத்துகிறது என்பதை இதிலிருந்தும் அறியலாம். ஆங்கிலத்தில்'மாதவிடாய்'க்கு'மென்ஸஸ்'(menses)என்று சொல்லப்படுகிறது.உண்மையில் இந்தச்சொல் 'இலத்தீன்' மொழிச்சொல்லாகும்.இதற்கு பொருள் என்னவென்று தெரியுமா?'சாபம்'என்பதாகும்.மேற்கண்ட பைபிள் வசனங்கள் மாதவிடாய் பெண்களை பாவியாக பகிரங்கப்படுத்துவதால் மாதவிடாயை'சாபம்'என்று மக்கள் கூறலானார்கள்.இஸ்லாமோ,பெண்களை இத்தகைய இழிவு மொழிகளிலிருந்து விடுவிக்கிறது. சகோதரரே!சிந்தியுங்கள்.நீங்கள் கேட்ட ஆதாரத்தை வைத்துவிட்டேன்.உங்களிடம் ஏதும் மறுப்பு உண்டா?இறுதியாக,இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை புரிந்து கொண்டு திறந்த மனதோடு அதை ஆய்வு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.எல்லோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
6

November 03, 2007 11:55
0
பியூட்டோ:
//ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு,அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்,அவன் ஏழு நாட்கள் தீட்டுடையவன்;அவன் படுக்கும்படுக்கை அனைத்தும் தீட்டே!(லேவியராகமம்15:24)// இதில் எங்கேய்யா மென்ஸஸ் என்ற வார்த்தை தீண்டத்தகாவதர்கள் என்றப் பொருளில் கையாளப்படுகிதது? சாதாரணத் தமிழ் தெரிந்தவர்கள் கூட மேற்கண்ட பைபிள் வசனம் என்னக் கூறுகிறது என்பதைப் புரிந்துக் கொள்வார்கள். //ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்// இதன் அர்த்தம் அவள் மென்ஸஸாக இருக்கும் வேளையில் அவளுடன் படுக்கையில் படுக்கும் பொழுது அவளின் அந்த மென்ஸஸ் அசுத்தம் அவன் மீது படாமல் அவன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே. அவ்வாறு அவளின் அசுத்தம் அவன் மீதுப் பட்டால் அவனும் அசுத்தமாகின்றான், அவன் தொடுவது அசுத்தமடைகின்றது என்பதையே இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்தில் பெண்ணின் மென்ஸஸ் அசுத்தம் ஆணின் உடலில் பட்டால் பிரச்சனை ஏதுமில்லையா? பிரச்சனை ஒன்றும் இல்லை. அவர் அந்த அசுத்தத்துடனே வணக்கங்களில் ஈடுபடலாம் என இஸ்லாம் கூறுகின்றது எனில் அதைக் கூறுங்கள். அதைவிடுத்து உங்களுக்கு இஷ்டப்பட்டபடியெல்லாம் பைபிள் வசனங்களைத் திரிக்காதீர்கள். அசுத்தத்தில் கைப்பட்டால் அதை அசுத்தம் என்று தான் கூறுவார்கள். தீட்டு என்ற வார்த்தை அசுத்தம் என்றப் பொருளில் தான் இங்கு பைபிளில் கையாளப்பட்டுள்ளது. இன்னும் நான் கேட்டதற்கு நண்பர் இப்னுசாஹ் பதிலளிக்கவில்லை. //''மென்ஸஸ்''என்ற வார்த்தையை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.இந்த வார்த்தை ''பைபிலில்''தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.// பைபிளில் மென்ஸஸ் என்ற வார்த்தை எங்கு 'தீண்டத்தகாதவர்கள்' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது? // இஸ்லாம் கூறுவதற்கும் பைபிள் கூறுவதற்கும் எவ்வளவு வேறுபாடுகள் பாருங்கள்.// நான் இதனை உங்களிடம் கேட்டேனா? அல்லது வேறு ஏதாவது கிறிஸ்தவர் இங்கு வந்து உங்களுடன் இவ்வாறான விவாதத்தை ஆரம்பித்து வைத்தாரா? அவசியமில்லாமல் பைபிளில் சொல்லப்படாத ஒரு விஷயத்தைக் கூறியது நீர் தானே?. அவதூறு எழுதிய உம்மிடம் அதற்கு ஆதாரம் கேட்டால் அதனை மட்டும் எடுத்துக் கொடுக்க வேண்டியது தானே. அதை விடுத்து சம்பந்தமில்லாத விளக்கங்கள் எல்லாம் இங்கு தேவையில்லை. நாம் அவ்வாறான இரு விவாத களத்தை அமைத்துக் கொண்டு வேண்டுமானால் இது போன்று அலசுவோம். அதற்கு நான் தயார். ஆனால் அதற்கு முன் 'மென்ஸஸ்' என்ற வார்த்தை பைபிளில் 'தீண்டத்தகாதவர்கள்' என்ற பொருளில் எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரத்தைக் குடுங்கள். இல்லாத அவதூறை மற்ற மதத்தினர் மீது தூற்றித் திரியாதீர்கள். இவ்வாறு எழுதினால் எங்களுக்கும் குரானில் இப்படி இப்படி எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றது என எழுதித்தள்ள இயலும். இங்கு தேவை ஆதாரம் மட்டும். அதனை மட்டும் கொடுக்கவும். //ஆங்கிலத்தில்'மாதவிடாய்'க்கு'மென்ஸஸ்'(menses)என்று சொல்லப்படுகிறது.உண்மையில் இந்தச்சொல் 'இலத்தீன்' மொழிச்சொல்லாகும்.இதற்கு பொருள் என்னவென்று தெரியுமா?// எனக்கு இலத்தீன் தெரியாது. //'சாபம்'என்பதாகும்.// //''மென்ஸஸ்''என்ற வார்த்தையை முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.// சாபம் என அர்த்தம் கொண்ட மென்ஸஸ் என்ற சொல்லைப் பின்னர் எதற்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று நீங்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். முஸ்லிம்கள் மாதவிடாயை சாபம் எனக் கருதுகின்றார்களா? நீர் தான் முஸ்லிம்கள் அவ்வாறு பயன்படுத்துவதாக மேலே கூறியுள்ளீர். //மேற்கண்ட பைபிள் வசனங்கள் மாதவிடாய் பெண்களை பாவியாக பகிரங்கப்படுத்துவதால் மாதவிடாயை'சாபம்'என்று மக்கள் கூறலானார்கள்.// எப்படி முன்பு 'மென்ஸஸ்' என்ற சொல்லுக்கு 'தீண்டத்தகாதவர்கள்' என்ற பொருளை பைபிள் கூறுகின்றது எனக் கூறினீரோ அதே போன்று மாதவிடாய் பெண்களை பைபிள் பாவிகளாக கூறுகின்றது என்கின்றீர். இதற்கும் ஆதாரமான வசனத்தை எழுதவும். மாதவிடாய் பெண்கள் பாவிகள் என பைபிள் எங்கு கூறுகின்றது? அப்படியே பைபிள் எங்காவது அவ்வாறு கூறினாலும், அதனாலேயே //மாதவிடாயை'சாபம்'என்று மக்கள் கூறலானார்கள்.// என்பதற்கான ஆதாரம் எது? முஸ்லிம்களும் மென்ஸஸ் என்க் கூறுவதற்கு இவ்வாறு பைபிள் கூறுவது தான் காரணமா? எனில், முஸ்லிம்கள் பைபிள் கூறுவதையெல்லாம் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்றா கூற வருகிறீர்? // சகோதரரே!சிந்தியுங்கள்.// இதற்கான அவசியம் இங்கு என்ன வந்தது? என்னய்யா இங்கு நடக்கிறது? பைபிளில் இல்லாத ஒரு விஷயத்தை எழுதியதற்கு ஆதாரம் எங்கே என்று கேட்டதற்கு ஆதாரத்தைத் தந்து விட்டுப் போக வேண்டியது தானே? நாங்கள் என்ன சிந்தனை இல்லாத மூடர்களாகவா இருக்கின்றோம்? தேவையில்லா வார்த்தைகளை உதிர்ப்பதை தவிர்க்கவும். //இறுதியாக,இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பதை புரிந்து கொண்டு திறந்த மனதோடு அதை ஆய்வு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.// நான் இதைக் கேட்டேனா? அல்லது இஸ்லாத்தைக் குறித்து இங்கு ஏதாவது நான் விமர்சனம் செய்தேனா? என்னய்யா இது சின்னப்புள்ளதனமா இருக்கு? முஸ்லிம்கள் எல்லாம் இணைந்து கும்மியடிக்கும் இந்த இடத்தில் எதற்காக பைபிளை இழுக்க வேண்டும்? சரி, அவ்வாறே இழுத்தாலும் இல்லாததை ஏன் எழுத வேண்டும். அவ்வாறு எழுதியதால் அதற்கு ஆதாரம் எங்கே என்று மட்டுமே கேட்டேன். இஸ்லாத்தில் அதற்கு என்ன சொல்லப்படுகிறது என்று கேட்டேனா? அவ்வாறான விவாதம் இங்கு நமக்குள் நிகழ்கிறதா? எல்லாம் சுத்த மடத்தனமா இருக்கு.
7

November 04, 2007 10:03
0
பியூட்டோ:
தமிழில் இருக்கும் இத்தளத்தில் ஆங்கிலத்தில் இத்தனைப் பெரிய கருத்தா? உண்மையில் அந்த கருத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது எனக்குப் புரியவில்லை.
8

November 04, 2007 10:06
0
மரைக்காயர்:
//ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு,அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்,அவன் ஏழு நாட்கள் தீட்டுடையவன்;அவன் படுக்கும்படுக்கை அனைத்தும் தீட்டே!(லேவியராகமம்15:24)// //ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்// இதன் அர்த்தம் அவள் மென்ஸஸாக இருக்கும் வேளையில் அவளுடன் படுக்கையில் படுக்கும் பொழுது அவளின் அந்த மென்ஸஸ் அசுத்தம் அவன் மீது படாமல் அவன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே. அவ்வாறு அவளின் அசுத்தம் அவன் மீதுப் பட்டால் அவனும் அசுத்தமாகின்றான், அவன் தொடுவது அசுத்தமடைகின்றது என்பதையே இவ்வசனம் குறிப்பிடுகின்றது. - பியூட்டோ.. பியுட்டோ ஏன் இப்படி எகிறுகிறார் என்று புரியவில்லை. இப்னுஷாஹ் குறிப்பிட்ட அந்த பைபிள் வசனத்தில் தனக்கு தேவையான பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு இது 'அசுத்தமடைவதைப்' பற்றி மட்டுமே குறிப்பிடுவதாக பியூட்டோ சொல்கிறார். அசுத்தமடைந்தால் அதை சுத்தம் செய்து போக்கிக் கொள்ள முடியும். அதற்கு ஏழு நாட்கள் தேவையில்லை. ஆனால் இந்த வசனம் 'அவன் ஏழு நாட்கள் தீட்டுடையவன்;அவன் படுக்கும்படுக்கை அனைத்தும் தீட்டே' என்று ஒரு காலக்கெடு விதித்து தீர்ப்பளிக்கிறது. இந்த 'ஏழு நாட்கள்' கெடுவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அவன் அந்தப் பெண்ணை அவளது மென்ஸஸ் காலத்தில் 'தீண்டத்தகாதவளாகத்தான்' பாவிக்க வேண்டும். அசுத்தம் என்பது வெறு, தீட்டு என்பது வேறு. எளிய தமிழ் தெரிந்த எல்லோருக்கும் இது நன்கு புரியும்.
9

November 04, 2007 10:42
0
அபூ முஹை:
சகோதரர் பியூட்டோ அவர்களே, //இஸ்லாத்தில் பெண்ணின் மென்ஸஸ் அசுத்தம் ஆணின் உடலில் பட்டால் பிரச்சனை ஏதுமில்லையா? பிரச்சனை ஒன்றும் இல்லை. அவர் அந்த அசுத்தத்துடனே வணக்கங்களில் ஈடுபடலாம் என இஸ்லாம் கூறுகின்றது எனில் அதைக் கூறுங்கள்.// ஒரு பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் ஆண் உடலில் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று இஸ்லாம் சொல்வதை பிறகு பார்ப்போம்! //ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்// - பியூட்டோ. பைபிள் வசனத்தை முழுதாகப் புரிந்து கொண்டு விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ' 'ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.'' லேவியராகமம், 15:24 சுட்டி: http://www.tamil-bible.com/lookup.php?Book=Leviticus&Chapter=15&Verse=24&Kjv=0 மேற்கண்ட பைபிள் வசனத்தில் ''ஏழு நாட்கள் தீட்டாயிருப்பான்'' என்று சொல்லப்படுகிறதே இதன் பொருள் என்ன? என்பதை விளக்குங்களேன்!
10

November 04, 2007 16:01
0
அபூ முஹை:
//ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீது பட்டது என்றால்// இதன் அர்த்தம் அவள் மென்ஸஸாக இருக்கும் வேளையில் அவளுடன் படுக்கையில் படுக்கும் பொழுது அவளின் அந்த மென்ஸஸ் அசுத்தம் அவன் மீது படாமல் அவன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே. அவ்வாறு அவளின் அசுத்தம் அவன் மீதுப் பட்டால் அவனும் அசுத்தமாகின்றான், அவன் தொடுவது அசுத்தமடைகின்றது என்பதையே இவ்வசனம் குறிப்பிடுகின்றது.// - பியூட்டோ. சகோதரர் பியுட்டோ இங்கே தீட்டு என்பதை அசுத்தமெனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பைபிள் தீட்டு வேறு அசுத்தம் வேறாகச் சொல்கிறது. ''அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானுடனே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.'' (அப்போஸ்தலர் 10:28) தீட்டுள்ளவன், அசுத்தமுள்ளவன் என்று பைபிள் வசனம் தீட்டும், அசுத்தமும் வெவ்வேறாக் கூறுகிறது. இது போல் இன்னும் பல பைபிள் வசனங்கள் உண்டு அடுத்து.. ''இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.'' (அப்போஸ்தலர் 21:28) இந்த பைபிள் வசனம் தீண்டாமையையே தீட்டு என்கிறது என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமா? ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 3:1) நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய். (எரேமியா 3:2) வேசித்தனத்தால் தேசமே தீட்டானது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறதே இதன் கருத்து என்ன? என்பதை பியூட்டோ விளக்குவாரா?
11

November 04, 2007 16:48
0
ibn shah:
சகோதரர் மரைக்காயர் அவர்களே!சரியாகச்சொன்னீர்கள்.தனக்கு தேவையானதை மட்டும் பியூட்டோ எடுத்துக்கொண்டார் மற்றதை விட்டுவிட்டார்.அய்யா பியூட்டோ அவர்களே!ஆங்கிலத்தில் எழுதப்பட்டதை புரியவில்லை என்கிறீர்.ஆங்கிலம் தெரிந்த நண்பர்கள் யாரும் உமக்கு இல்லையா?சரி நான் சொல்கிறேன்.நான் எழுதியதை தான் சகோதரர் ஜின்னா விலாவாரியாக வசனம் வசனமாக எழுதியிருக்கிறார்.அதன் ஆரம்ப வரியிலேயே menses என்ற வார்த்தை உள்ளது.நான் ''ஆங்கில பைபில்'' என்று கூறவில்லை அவ்வளவு தான்.எப்படியோ பைபிலில் இருக்கிறதா இல்லையா?சந்தேகம் இருந்தால் சகோதரர் குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு போய் ஆங்கிலம் தெரிந்த யாரையாவது படித்து,விளக்கம் தரச்சொல்லுங்கள்.சரி தமிழாவது சரியாக படிக்க தெரியுந்தானே?உமக்கு சாதகமானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதையெல்லாம் விட்டுவிட்டீர்?அதுவும் உமக்கு சாதகமானது அல்ல.தமிழில் தான் இல்லையே தவிர ஆங்கிலத்தில் இருக்கிறதே?அதைத்தான் தமிழில் 'தீட்டு'என்று எழுதினேன்.விளக்கமாவது ஒழுங்காக கொடுத்தீரா?உம்முடைய போலித்தனமான விளக்கத்தையும் சகோதரர்கள் தோலுரித்துக்காட்டிவிட்டர்கள்.அடுத்து என்ன செய்யப்போகிறீர்? முஸ்லிம்கள் அறியாமையினால் தான் மென்ஸஸ் என்று சொல்கிறார்கள்.எனவே அவர்களுக்கு அதன் விபரீதத்தை விளக்கவேண்டும் என்று அபூ முஹை அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.அறிந்துவிட்டால் அவ்வாறு சொல்லமாட்டார்கள். ஆமாம் ஏன் இப்படி குமுறுகிறீர்?பைபிலில் உள்ள அசிங்கம் மக்களுக்கு தெரிந்து நாற்றமடிக்கிறதே?என்ற வேதனையில் உளறுகிறீரோ?அந்தோ பரிதாபம்//என்னையா சின்னபுள்ள தனமா இருக்கு//எல்லாமே மடத்தனமா இருக்கு//முஸ்லிம்கள் மட்டும் கும்மியடிக்கும் இந்த இடம்//என்னய்யா இங்கு நடக்கிறது?//என்ற வார்த்தை கொப்பளிப்புகள் உம்முடைய கோபத்தின் உச்ச நிலையை படம்பிடித்துகாட்டுகிறது.அய்யா!இந்த மாதிரி வார்த்தைகளையெல்லாம் கேட்டு கேட்டு சளிச்சு புளிச்சு போச்சய்யா.ஆதாரம் தரமுடியுமா?என்று உம்மைப்போன்றவர்கள் வீராப்போடு கேட்பார்கள்.தெளிவான ஆதாரத்தை எடுத்துவைத்துவிட்டால் 'குய்யோ முய்யோ' என்று கத்துவார்கள்.நீர் தெளித்ததை விட மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார்கள்.தோத்தவர்களின் புலம்பல்கள் என்று நாங்கள் எடுத்துக்கொள்வோம்.சூரியனைப்பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நஷ்டம்?உள்ளங்கையால் சூரியனை மறைத்திடமுடியுமா?துணிவு இருந்தால் சகோதரர்களின் கேள்விக்கு பதில் கூறும். //எங்களுக்கும் குரானில் இப்படி இப்படி யெல்லாம் இருக்கிறது என்று எழுதித்தள்ள இயலும்//வாஹ்வாஹ் என்ன அருமையான சவால்!!சீக்கிரம் அதை செய்யும்.அந்த பொன்னான சந்தர்ப்பத்துக்காக நாங்களெல்லோரும் காத்திருக்கிறோம்.அப்பொழுது இருக்கிறது வேடிக்கை.உம்மைப்போன்று எத்தனையோ பேர் இவ்வாறு சவால்விட்டு துண்டைக்கானோம் துணியைக்கானோம் என்று ஓடியிருக்கிறார்கள்.குர்ஆனில் தவறு காண கலம் இறங்கி தோல்வியடைந்து போனவர்கள் பற்றி நீர் அறிய வாய்ப்பில்லை.ஆனால் அதை சரித்திரம் பாதுகாக்கிறது.''உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் அது குர் ஆனால் மட்டுமே முடியும்''என்று 'கிளிண்டன்' ஒரு காலத்தில் சொன்னார்.அவரும் உம்மைப்போன்று கிறிஸ்தவர்.அந்தளவுக்கு ஆய்வு செய்ய புகுந்தவர்களை தன்பக்கம் இழுக்கும் ஒரு மாபெரும் அற்புதம் தான், ஈடு இணையற்ற அந்த அருள்மறை என்பது உலகம் கண்டறிந்த உண்மை.நான் உம் சவாலை ஏற்கிறேன்.நீர் உம் பணியை செய்யும்.
12

November 05, 2007 09:50
0
A. Thamimul Ansari:
பீர்யட் காலதில் திருகுறானை தொடுவது ஒதுவது (மணப்பாடம் தவிர) கூடாது என்று கேல்விபட்டிறிக்கிரேன் சமுதாய மக்கலுக்காக விலக்கம் தரவும்
13

December 01, 2007 06:25
0
kalam shaick abdulkader:
'குர்-ஆன் மட்டும் போதும்' என்பவர்கள் மேலேக் குறிப்பிடப்பட்ட (2:222) வசனத்தை ஆதாரமாக்கி அல்லாஹ் குறிப்பிட்டிருக்கும் விடயங்கள் தவிர்த்து வேறெந்த தடைகளும் இல்லை என்று வாதிடுகின்றனர். நாம் 'சுன்னத்துல் ஜமாஅத்' சார்ந்தவர்களாதலால் தாங்கள் குறிப்பிட்டபடியே ஹதீஸ்களின் ஆதாரங்களின் அடிப்படையில் நடந்து கொள்வோமாக.
14

December 01, 2007 19:15
0
MOHAMED JABIR:
DEAR SIR, THANINACHERKAI PAWAMANAZU ENRU NAN ARIVEN. ANAAL ATHAI PARRI VIPARAM THERIYAZU THAYAWU SEITHU ARIYATHARAWUM. JAZAKALLAHU HIRAH.
15

November 14, 2008 09:59
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும்.அனைத்து முஸ்லிம்களுக்கும். சகோதரர் கலாம் ஷேய்க் அப்துல் காதர் நமது வேதமான குர்ஆனில் நபி லூத் சமுதாயத்தை பற்றி பல இடங்களில் வசனங்கள் வந்தாலும் இந்த வசனங்களே ! உங்களுக்கு போதுமானது. அந்த சமுதாய மக்கள் தங்களின் பெண்களை விட்டு ஆண்களிடம் மோகம் கொண்டு ஒரினைசேர்க்கையில் ஈடுபட்டு படு மோசமான சமூகமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு லூத் நபியை வழிக்காட்டியாக அனுப்பி வைத்து நேரான வழியின் பக்கம் வருமாறு போதிக்க செய்தான்.ஆனால் அந்த சமூக மக்களோ திருந்தாமல் அந்த தூதரை கேவலப்படுத்தி பல இன்னல்களுக்கும் ஆளாக்கினார்கள். இன்னும் அவரின் பேச்சை கேட்க்கவும் இல்லை மாறாக லூத் ( அலை ) அவர்களுக்கு வந்த மலக்குகளையும் அந்த மக்கள் புணர்ச்சி கொள்வதற்காக ஓடோடி வந்தார்கள்.காரணம் அந்த மலக்குகள் சரியாக ஆண் இளைஞர்கள் ரூபத்திலேயே ! லூத்திடம் வந்தார்கள்.அதுவும் கூட வேறொரு வசனத்தில் உள்ளது. அவர்கள் வந்த காரணமும் அந்த மக்களை அழிப்பதற்காக தான். மேலும் லூத் (அலை ) அவர்களின் மனைவி ஈமான் கொள்ளாத காரணத்தினால் அவளை தவிர ஈமான் கொண்ட மற்ற அனைவருடன் தன் குடும்பத்தாருடன் அல்லாஹ் அந்த ஊரை விட்டு வெளியேற சொல்லி அறிவுறுத்தும் செய்தி தான். இனி கீழே உள்ள வசனங்களை கொண்டு விளக்கம் பெறுங்கள். 11:௭௭ நம் தூதர்கள் (வானவர்கள்)லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெருதும் விசனமடைந்தார்;(அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்' என்று கூறினார். 11:78 அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்துகொண்டிருந்தார்கள்.(அவர்களை நோக்கி லூத்) `` என் சமூகத்தாகளே! இதோ என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த்திருமனத்திர்க்கு)ப பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?'' என்று கூறினார். 11:79 (அதற்க்கு) அவர்கள் ``உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையும் இல்லை என்பதை நீர் திடமாக அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்'' என்று கூறினார்கள். 11:80 அதற்க்கு அவர் ``உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கபோதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே'' என்று (விசனத்துடன்) கூறினார். 11:81 (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: மெய்யாக நாம் உம்முடைய்ய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய்ய மனைவியை தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்கவேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக்கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?'' 11:82 எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டை கீழ்த்தட்டாக்கிவிட்டோம்; இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம். 11:83 அக்கற்கள் உன் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்கரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. மா சலாம். அப்துல் அசீஸ்.
16

November 14, 2008 22:22
0
abdul azeez:
தவறுதலாக பெயர் மாற்றி போட்டமைக்கு வருந்துகிறேன்.உண்மையில் சகோதரர் முஹம்மது ஜாபிர் அவர்களுக்கு போடவேண்டிய விளக்கம். சகோதரர் கலாம் ஷேய்க் அப்துல் காதர் மனதில் எதுவும் நினைத்து கொள்ளாமல் இருந்தமைக்கு நன்றிகள் பல.அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.
17

November 15, 2008 21:19
0
hasan:
assalamu alaikkum
maathavidai patri oru santheaham
thaankal maathavidai 6 or 7 natkalaha kanakittu kolla sonnerkal appadi endral matra natkalil varum uthira pokkinpothu manaiviudan uravu kollalama en patharku thayavu seithu vilakkam tharavum enathu email ku pathil anuppavum
jazakallah
18

March 21, 2011 02:31

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்ககும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும். இதனை அவர்கள் அறிய வேண்டாமா?

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் மாதவிலக்கு ஓர் இயற்கை உபாதை!
Twitter
RSS
YouTube
English