சத்தியமார்க்கம்.காம்

யார் தீவிரவாதி? print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
வியாழன், 18 அக்டோபர் 2007 20:00

இஸ்லாமிய தீவிரவாதம்!

 

உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். 'தீவிரவாதம்' 'வன்முறை' என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று சொல்லுகிறார்களே அது என்ன?

 

இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?

 

ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை 'இந்து தீவிரவாதி' என்றோ, 'கிறிஸ்தவ தீவிரவாதி' என்றோ ஏன் அழைப்பதில்லை? தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?

 

'பழிக்குபழி  ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?

சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்! அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

 

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது. வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர, இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன்.

 

அவன் இந்துக்களை ஒடுக்கினான்' என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல  முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள்.

 

எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், 'இந்தியன் ஹிஸ்டரி' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்!

 

'ஆரியர்கள் வருகை' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.

 

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். 'முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்' என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

 

'இஸ்லாம்' என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது' என்பதுதான். 'ஜிகாத்' என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை. அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன?

 

இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது "சச்சார் கமிட்டி" அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம   ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை. எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள்.

 

காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 'அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்' என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம். எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை. இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வர ப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன.

 

ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்... மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.

 

தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.

 

'உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை'

 

இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!

 

ஆக்கம்: நாகூர் ரூமி

(நன்றி: குங்குமம் 04-10-2007)

Trackback(0)
கருத்துக்கள் (31)add comment
0
haneefm:
يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاء لَهُم مَّشَوْاْ فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُواْ وَلَوْ شَاء اللّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّه عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (2:20) \காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள்// இன்னும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட துடிக்கிறார்கள், مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَاراً فَلَمَّا أَضَاءتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لاَّ يُبْصِرُونَ இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (2:17) الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الأَرْضِ أُولَـئِكَ هُمُ الْخَاسِرُونَ இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள். (2:27) \ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்... மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை. தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது?// இன்னும் இஸ்லாமிய வாலிர்பர்கள் முதலில் தரமான கல்வியையும் அத்துடன் சுயமான வேலையில் ஈடுபட்டு சமுதாயா நோக்குடன் முன்னேற்ற பாதையில் வரனும் மேலும் பெண்களின் கல்விதரம் உயரனும் அப்போது தான்[ அவர்களுக்கு] நாம் சமுதாயத்தால் பதில் தாரயியலும் ஹனிஃப்-குவைத்
1

October 23, 2007 09:41
0
சிவா:
//தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?// ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை
2

October 25, 2007 20:08
0
முஸ்பா முஹம்மத்:
அன்பு சகோதரர் சிவா அவர்களே சற்று நடுநிலையாக நாம் தமது பின்னூடக் கருத்தை ஆய்வு செய்ய முனைவோம். பொதுவாக தீவிரவாதம் என்றால் என்ன பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையரையோ விளக்கமோ உண்டா என்றால், இல்லை எனும் அள்வில் தான் உள்ளது. உதாரணத்திற்கு நமது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து மீட்க போராடியவர்கள் நாம் தேசபக்தர்களின் புரட்சி என்று கூறி அவர்கள் சுதந்திர இந்தியாவிற்காக செய்த ஏனைய போராட்டங்கள் தியாகங்கள் அனைத்தையும் பாராட்டி அவர்களை கவுரவிப்போம். அதே நேரத்தில் ஆங்கிலேய ஆட்சியும் அரசும் அவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டது. ஒரே செயல் இரு வேறு கண்ணோட்டம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இரண்டாவதாக உலக அளவிலும், இந்தியாவிலும் பரவலாக நாம் பார்க்கும்போது அல்ஃபா (ULFA) என்ற பெயரில், நக்ஸல்வாதிகள் எனும் பெயரில்,JKLF எனும் பெயரில் காஷ்மீர் போராளிகள்.(இவர்கள் ஏதும் மதத்தின் பெயரைக் கூறி இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்பதும்,அவர்கள் செயல்களால் பாதிக்கப்படுபவர்களிலும் அவர்கள் சார்ந்த மதம் உட்பட எல்லா மதத்தை பின்பற்றக் கூடிய அப்பாவிகளும் அபலைகளும் உள்ளனர் என்பதும் மறக்கடிக்கப்படும் மற்றும் மறைக்கப் படும் உண்மையாகும்).இவர்கள் ஒரு கோரிக்கைக்காக அக்கோரிக்கையை அவர்கள் சரிகாண்பதால் அப்பாவிகளின் உயிரைப்பற்றியோ இரத்தம் ஒட்டவோ தமது உயிரைப்பற்றியோ கவலைப்படாமல் இது போன்ற கண்டிக்கத்தக்க வன்முறைகளில் மனிதாபிமானமற்ற(இஸ்லாம் உட்பட) எந்த மதமும் அனுமதிக்காத செயலிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களைப்ப் பற்றிய கண்ணோட்டமும் இதுவே அதாவது போராளிகள் / தீவிரவாதிகள். இன்னும் சில இந்து அமைப்புகள் தமது அரசியல் ஆதாயத்திற்காக ஆங்கிலேயர்களால் நாட்டில் உருவாக்கப்ப்பட்ட பிரித்தாளும் சூழ்சியால் ஏற்பட்ட காழ்ப்புணர்வினால், கட்டவிழ்த்து விடும் அரசியல் வெறுப்புணர்வுகளால் செயல்படும் அப்பாவி இந்து மதத்தை சேர்ந்த ஒரு சில சகோதரர்கள், இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் போன்று பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்திருக்கும் போதும் இவர்களை அவர்களின் மதத்துடன் இணைத்து அழைக்கப் படாததும்,உலகள்வில் இயங்கும் மீடியாக்கள் மற்றும் அவற்றின் தாக்கத்தினால்( இஸ்லாம் எனும் சாந்தியான இறைமார்க்கத்திற்கெதிராக) செயல்படுவோர்களின் சூழ்ச்சி அல்லது அறியாமை என்றால் மிகையாகாது. வட இந்தியாவில் ஒரு கிருத்துவ பாதிரியையும் அவர்கள் குடும்பத்தையும் அவர்கள் வாகனத்தோடு கொளுத்தியது போன்ற இன்னும் தலித்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் உலக ஆதாயம் அரசியல் வாதிகள் சூழ்ச்சிகள் என்று பரவலாக பலராலும் அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் ஏனைய தீவிரவாத வன்முறைகளுக்கும், ஈனச் செயல்களுக்கும் அவர்கள் சார்ந்த மதத்தினரை பொறுப்பாக்கினால் வெறுப்பும் அமைதியின்மையும் வன்முறைகலாச்சாரமும் தொடரும் என்பதை அனைவரும் சிந்தித்துணர வேண்டும். இன்னும் சொல்வதென்றால் நல்லவர்களும் தீயவர்களும் எல்லா மத்தினரிலும் இருப்பர் அல்லது எந்த மத நம்பிக்கையற்றவர்களிலும் இருப்பர். அவர்களின் செயல்களுக்கு (அது அந்த மத்திற்கு மாறாக இருப்பின்) அந்த மதம் பொறுப்பாகாது. ஆக மீடியாக்கள் மற்றும் சில அரசியல் நோக்கங்களுக்க்காக உலகளவில் அரங்க்கேற்றப்படும் இச்சுழ்ச்சியை உணர்ந்து நாம் நமது கருத்தை மறுபரீசீலனை செய்ய கடமைப்பட்டுள்ளோம். அதுவே நாம் அமைதியாக நிம்மதியாக வாழ வழி வகுக்கும் என்பதை நாம் அனைவரும் உணர்வோமாக.
3

October 26, 2007 04:47
0
அபூ முஹை:
//ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை// ஆஹா வழமையான மிக அருமையான திரித்தல், ஏன்னா ஒரு மதம் சார்ந்த மக்களின், அதாவது முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டு ஸ்தலாகிய பழம்பெரும் பாபர் மஸ்ஜித் இடித்துத் தகர்க்கப்பட்டது. இது பயங்கர வாதத்தின் உச்ச கட்டமாக இருந்தும் பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கிய பயங்கரவாதிகள் அவர்களின் மதம் சார்பாக சேர்த்து பயங்கரவாதிகள் என ஒரு மிடியாவும் உண்மையை முணங்கியதில்லை. இத்தனைக்கும் இந்துத்வ பயங்கரவாதிகள் ராமன் என்ற கடவுளின் பெயரிலியே பயங்கரவாதத்தை அரங்கேற்றினர் என்பதும், எங்கள் மத நம்பிக்கையை நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது என்றும் சூளுரைத்த விஷயம் சிவாவுக்கு தெரியுமோ என்னவோ? இதிலிருந்து, முஸ்லிம்களை மட்டுமே அவர்கள் மதம் சார்ந்த பயங்கரவாதிகளாக சித்தரிப்பது இவர்களின் திட்டமாக இருக்கிறது சிவா உள்பட என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
4

October 26, 2007 07:50
0
MOHAMED ALI JINNAH:
குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ . வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007 முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம் குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007 அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது. கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது. அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது. ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர். தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார். கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான். இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது. வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி.. கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார். மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட். போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்... விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர். பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்.... பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார். மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார். நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார். இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார். இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார். சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே. அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி: குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில், கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார். கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா. வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார். http://thatstamil.oneindia.in/news/2007/10/26/india-sting-traps-footsoldiers-of-gujarat-riots.html
5

October 26, 2007 11:05
0
சிவா:
நான் கேட்டிருந்த இரு வரிகளுக்கு ஏகப்பெரிதாக சரித்திரத்தை எழுதியிருந்த முஸ்பாமுகம்மத் அவர்களே, உங்களுக்கு நன்றி. உல்ஃபா தீவிரவாதிகளும், நக்சலைட் தீவிரவாதிகளும் அவரவர் செயலுக்காக / இயக்கத்துக்காக அவ்வாறு அழைக்கப்ப்படுகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். இஸ்லாத்தில் பெயரால் ஜிகாத் செய்கிறோம் என்று நாங்களா முஸ்லிம் தீவிரவாதிகளை செய்யச் சொன்னோம். அல்லது இல்லாதையா டிவியும், மீடியாவும் சொல்கின்றன? அவர்களாகத்தானே குரானை கையில் தூக்கிப்பிடித்து 'அல்லாகு அக்பர்' என்று குறிக்கொண்டு டிவியில் போஸ் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவ்வாறு சொன்னேன்.
6

October 26, 2007 12:17
0
சிவா:
//.....பயங்கரவாதிகள் என ஒரு மிடியாவும் உண்மையை முணங்கியதில்லை.// அபுமுகை, இந்து தீவிரவாதிகள் என்று மீடியாக்கள் கூறவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியமைக்கும், முசுலிம்கள் அப்படித்தான் என்று ஒப்புக்கொண்டமைக்குக்கும் நன்றி. இரண்டு பேரையும் சரிக்கு சரியாக மதத்தின் பெயர் சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லிவிட்டால் சந்தோஷப்படுவீர்கள் பொலும்.
7

October 26, 2007 12:38
0
அபூ முஹை:
யார் மீதோ உள்ள கோபத்தை சிவா எங்கோ திருப்பி விடுகிறார். //ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை// மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்பவர்கள் முஸ்லிம் மட்டுமே என்ற வகையில் சிவாவின் மேற்கண்ட விமர்சனம் இருக்கிறது. இதற்குப் பதிலாக மதத்தின் பெயரால் இந்துத்வ பயங்கரவாதிகளும் செயல்பட்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் என அடையாளப் படுத்தப்படவில்லையென தகர்க்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை ஒரு சாம்பிளாக வைத்தோம். அதை ஜீரணித்துக்கொள்ள இயலாத சிவா என்பவர், அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தோரணையில் மீண்டும் வந்திருக்கிறார். அவரிடம் இப்போ நேரடியாக ஒரு கேள்வி. ராமன் என்ற கடவுளின் பெயரால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது மதத்தின் பெயரால் விளைவித்தப் பயங்கரவாதமா இல்லையா? சிவா விளக்கம் எழுதுவாராக!
8

October 26, 2007 13:31
0
முஸ்பா முஹம்மத்:
அன்பு சகோதரர் சிவா அவர்களே //ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை// மேற்கண்ட பின்னூட்டத்தில் நான் உல்ஃபா மற்றும் நக்ஸல்வாதிகளை மட்டும் கூறவில்லை இதே போல் இந்து மத்த்தின் பெயரால் வட இந்தியாவில் நடந்த பிரபலமான் ஒரு சம்பவத்தையும் குறித்து இதனால் நாம் ஒட்டு மொத்த இந்துக்களையோ இந்து தீவிரவாதிகள் இப்படி செய்தார்கள் (என்றோ கூறும் மீடியாக்களோ தினசரிக்களோ பார்க்க முடிவதில்லை) என்பதையும் சுட்டிக் கட்டியுள்ளேன் என்பதை கவனிக்கவும். அதே நேரம் அப்படி கூறுவது சரியான போக்காகாது என்பதே என் நிலை. அவர்களை கண்டிப்பது, முறையாக தண்டிப்பது என்பது வேறு அதை ஒரு மதத்தின் சாயம் பூசுவது, தொடர்பு படுத்தி அந்த மதததைப்பற்றி தவறாக் சித்தரிப்பது என்பது இரு வேறு விஷயங்கள் ஆகும். //இஸ்லாத்தில் பெயரால் ஜிகாத் செய்கிறோம் என்று நாங்களா முஸ்லிம் தீவிரவாதிகளை செய்யச் சொன்னோம். அல்லது இல்லாதையா டிவியும், மீடியாவும் சொல்கின்றன? அவர்களாகத்தானே குரானை கையில் தூக்கிப்பிடித்து 'அல்லாகு அக்பர்' என்று குறிக்கொண்டு டிவியில் போஸ் கொடுக்கிறார்கள்// மேலும் சகோதரர் ஜின்னா அவர்களின் பின்னூட்டங்களில் வந்த உண்மைகள், பாபரி மஸ்ஜித் விவகாரம், மததின் பெயரால் கையில் திரிசூலத்துடன் வாயில் ராமர் பெயருடன் அரங்கேறப்பட்டதை உலகம் முழுவதும் நேரடியாக காணமுடிந்ததே அதில் சிலர் நாங்கள் இந்துக்கள் என்று கூறுவதில் பெருமைப் படுகிறோம் என்று கூறியவர்கள். கிரிமினல் குற்றம் வழக்கு மன்றம் மூலம் சாட்டப்பட்டவர்கள், இந்து மத ஆடைகளின் அடையாளங்களான காவியுடை தரித்தவர்கள், முதல் காவல் துறையைச் சார்ந்தவர்களில் சிலர் என்றும் செய்தி இதழ்கள் படத்துடன் செய்தியிட்டன.( தி ஹிந்து, பிரண்ட்லைன் போன்ற பிரபல இதழ்கள் உட்பட) அதற்காக இந்து தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்படுவதும் ஒட்டு மொத்த இந்துமதத்தை (அதில் பெரும்பான்மையானவர்கள் சரிகாணாத போது) சம்பந்தப்படுத்தி இந்து மதமும் இந்து மதததினை பின்பற்றுபவர்கள் இவ்வாரு எனும் விதத்தில் இந்து தீவீரவாதிகள் என்று குறிப்பிடுவது என்பதும் வேறு என்பதை மறுக்கமாட்டிர்கள் என்று நினைக்கிறேன், சகோ சிவா அவர்களே. மேலும் கருத்துக்கள் இருப்பின் தொடருங்கள் என் கருத்தை அளிக்க காத்திருக்கிறேன்.
9

October 26, 2007 16:31
0
சிவா:
//அவரிடம் இப்போ நேரடியாக ஒரு கேள்வி. ராமன் என்ற கடவுளின் பெயரால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது மதத்தின் பெயரால் விளைவித்தப் பயங்கரவாதமா இல்லையா?// அபுமுகை, உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது. நான் கேட்க வந்தவைக்கு பதில் சொல்லாமல் கேள்வியை நீங்கள் அடுக்குகிரீர்கள். உங்கள் ஆட்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் நீங்கள் மட்டும் சும்மாவா... அதை இடிக்கலையா? இதை ஊடகங்கள் பெரிதாக்க மறந்துவிட்டது என்கிர்கள் இதனால் முச்லிம்கள் ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலே விடைபெருகிறேன். நன்றி
10

October 26, 2007 16:59
0
MOHAMED ALI JINNAH:
சிவாவின் அசலை வெளிக்கொணர்ந்த அபுமுஹை!!!. 1. சிவா: //ஏன்னா தீவிரவாதம் செய்ற முஸ்லிம் தவிர வேற எவரும் மதத்தினை துணைக்கு அழைத்து கொள்வதில்லை கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 25, 2007 நேரம்: 15:08 // 2. சிவா, 2. //சரி. வெட்ட வந்த ஒரு காஃபிர் கூட குரான் ஒலி கேட்டு முஸிலிம் ஆக மாறின வரலாறு இல்லையா? அதுபோல் ஒரு காஃபிரை உள்ளே விட்டால் அவர் காபா மற்றும் இன்னபிற கிரியைகளைக் கண்டு மனம் மாறி முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளதே? அந்த வாய்ப்பு ஏன் மறுக்கிறீர்கள்? கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 25, 2007 நேரம்: 15:16 // 3. அபுமுஹை: சரி, காபாவில் நிறைவேற்றப்படும் கிரியைகளைப் பார்த்து ஒரு காஃபிர் முஸ்லிம் ஆக மாறிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றால் மக்கா, மதீனா இரு புனிதத்தலங்களின் நேரடித் தொலைக்காட்சிகளைக் கண்டு மாறிலாமே!.......... முறையான திறவுகோல் கொண்டுத் திறந்து வாசலில் நுழையுங்கள் என அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் நன்றி! 4. சிவா: //இஸ்லாத்தில் பெயரால் ஜிகாத் செய்கிறோம் என்று நாங்களா முஸ்லிம் தீவிரவாதிகளை செய்யச் சொன்னோம். அல்லது இல்லாதையா டிவியும், மீடியாவும் சொல்கின்றன? அவர்களாகத்தானே குரானை கையில் தூக்கிப்பிடித்து 'அல்லாகு அக்பர்' என்று குறிக்கொண்டு டிவியில் போஸ் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவ்வாறு சொன்னேன். கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 26, 2007 நேரம்: 7:17// 5. அபுமுஹை: 4.//அவரிடம்(சிவாவிடம்) இப்போ நேரடியாக ஒரு கேள்வி. ராமன் என்ற கடவுளின் பெயரால் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது மதத்தின் பெயரால் விளைவித்தப் பயங்கரவாதமா இல்லையா?// என்று சிவாவிடம கேட்டு சிவாவின் முகமூடியை கழற்றிய அபுமுஹை. 6. சிவா:அபுமுகை, உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது. கருத்து எழுதியவர் சிவா, பதிந்தது: October 26, 2007 நேரம்: 11:59 முகமூடி கழற்றப்பட்ட சிவா..
11

October 27, 2007 09:44
0
அபூ முஹை:
//அபுமுகை, உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது.// சிவா, இப்படித்தான் எல்லா மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும், தமது பயங்கரவாதச் செயலுக்கு ''உரிமை மீட்புப் போரட்டம்'' என கெளரவ முத்திரைக் குத்திக்கொள்கிறார்கள். இதில் எந்த மதத்தாரும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு முஸ்லிம் பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது மட்டும் அவன் சார்ந்த மதத்தோடு சேர்த்து இஸ்லாமியப் பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தப்படுகிறான். இதே நிலை, பாபர் மஸ்ஜிதை இடித்தக் கயவர்களுக்கும் பொருந்தும் என்றாலும் அவர்களை இந்துத்வ பயங்கரவாதிகள் என்ற உண்மையை மீடியாக்கள் வெளியிடுவதில்லை. இப்போ, இன்னொரு மதம் சார்ந்த வணக்க வழிபாடு ஸ்தலத்தை இடித்தது ''உரிமைப் போரட்டம்'' என்று சரி கண்டிருப்பது மீடியாவையெல்லாம் தூக்கி விழுங்கி விட்டதய்யா!
12

October 27, 2007 12:33
0
இறை நேசன்:
//உங்கள் ஆட்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்// என்ற உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன். அதற்கு முன், //உங்கள் கண்களுக்கு பயங்கரவாதமாக தெரிவது எங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக தெரிகிறது.// பாபரி மஸ்ஜித் மேட்டர் என்ன வகையில் உங்களுக்கு உரிமை மீட்புப் போராட்டமாக ஆகும் என்பதைச் சற்று விளக்கவும். அப்படியே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இரத்தக்காட்டேறி நரேந்திரமோடியின் தலைமையில் நரவேட்டையாடிய ஆடிய ஹிந்துத்துவத்(கவனிக்கவும்: இந்து எனக் குறிக்கவில்லை)தீவிரவாதிகளைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்பதைத் தெரிவிக்கவும். உரிமை மீட்புப் போராளி சிவா அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கும், இறை நேசன்
13

October 27, 2007 13:18
0
சிவா:
கிட்டத்தட்ட நிறைய பேர் ஒரே விசயத்தையே பிடித்து தொங்குவதால் என் பதிலை பொதுவாகவே வைக்கிறேன். நான் கேட்க வந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கா பட்சத்தில் நீங்கள் கேட்டுள்ளவற்றிற்கு என்னால் பதில் கூறவும் முடியும். உரிமைப்போராட்டம் என்பது இந்தியாவின் ஹிந்துக்களுக்கு சொந்தமான ராமஜென்ம பூமியை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைந்த உன்னத சேவை. எங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியிருப்பது போல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம். அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு. முடியும் தருவாயில் உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிக்குப் பின் எல்லாரின் எல்லா கேள்விகளுக்கும் தன்னால் பதில் கிடைக்கும். ராமராஜ்யம் அமைக்கும் உயரிய நோக்கில், பாதையில் எதிர்படும் இடர்பாடுகளை அகற்றுவதாகத்தான் மதிப்பிற்குரிய மோடி கூறியுள்ளார். தவிர அவரது ஆட்சியை கடந்த கால இந்திய அரசும் மக்களும் மெச்சி பாராட்டியுள்ளது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. அனைவருக்கும் பதில் அளிக்க நேரமில்லை. வாய்ப்புக்கு இடமளித்தமைக்கு நன்றி.
14

October 27, 2007 20:56
0
muslimeen:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இந்துத்துவா பயங்கரவாதியின் முகம் சிவாவின் மூலம் தெளிவாகி விட்ட நிலையில் இந்த பயங்கரவாதிகளுக்கு நீங்களெல்லாம் என்ன பதிலை அளித்தாலும் அவர்கள் தலையில் ஏறாது.இந்த நாட்டை நேசிக்கக்கூடிய இந்த நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையிலேயே அக்கறையிள்ள மனிதநேயம் கொண்ட மக்களுக்கு ஒருக்கடமையுண்டு அதைக்கட்டாய கடமை என்றே கூறலாம், அது இந்துத்துவா பாஷிஷத்திற்கெதிரான ஒரு நீண்ட போராட்டம்.இந்த பயங்கரவாதிகளை இந்த நாட்டைவிடு அப்புறப்படுத்தும் வரை இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிம்மதியில்லை.
15

October 28, 2007 05:49
0
MOHAMED ALI JINNAH:
சிவாவை எழுப்ப முடியாது. சிவா://இந்தியாவின் ஹிந்துக்களுக்கு:// --'ஹிந்து' என்ற பதமே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஹிந்து என்ற பதத்தின் சரித்திரம் படிக்கவும. சிவா: //உரிமைப்போராட்டம்// ---இந்தியாவின் மாற்று மதத்தினர்க்கு உரிமை ? ஹிந்து எனற பெயர்தாங்கி பயங்கரவாதிகள் மட்டும் பிறக்கும் போதே உரிமையை கையில் தாங்கிக்கொண்டே பிறந்தார்களோ? இந்தியாவின் தவப்புதல்வர்களான முஸ்லீகளின் உரிமை? சிவா: //ராமராஜ்யம்// :-))) ராமன் யாருடைய கற்பனையில் உதித்த கதாபாத்திரம் என்பதைத் தெரிந்து கொண்டு ராமனை புரிந்து கொண்டு ராம ராஜ்யத்துக்கு வரவும.;. சிவா: // உன்னத சேவை. + உயரிய நோக்கில்// இந்த இரு பதங்களும.; சிவாவின் கையில் கண்ணியம் இழந்தன. சிவா:// ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் // இவற்றிற்க்கு ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் என்ன சொல்லுகிரார்? ; 1. பரமசிவன் தன் தலையில் சூடியிருக்கும் சந்திரனில் ( MOON ) ரஷ்யர்கள் , அமெரிக்கர்கள் கால் பதித்து சிவனை அவமதித்ததற்கு? கர சேவை எப்பொழுது? உரிமைப்போராட்டம்?? 2. பரமசிவன் தன் தலையில் சூடியிருக்கும் சந்திரனில் (MOON ) ரஷ்யர்கள் , அமெரிக்கர்கள் கட்டியிருக்கும் கட்டுமானங்களுக்கு கர சேவை எப்பொழுது? உரிமைப்போராட்டம்?? 3. இமய மலையில் சிவனும் சக்தியும் வசித்து வரும் பகுதியை சீனா தன்னுடைய ஆக்கிரமிப்பில் உள்ளாக்கிக் கொண்டதே !!! கர சேவை எப்பொழுது? உரிமைப்போராட்டம்?? சிவா: //அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் இந்தியாவின் ஹிந்துக்களுக்கு நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம். அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு. // பச்சை பயங்கரமே.!!!! இத்தன்மையை விவரிக்க அகராதியில் வார்த்தை இல்லை. சிவா: //மோடி ஆட்சியை கடந்த கால இந்திய அரசும் ( மக்களும் மெச்சி பாராட்டியுள்ளது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. /// ???? :-)))))))))) இறை நேசன்:கண்ணைக் கட்டிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கூறினால் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் உள்ளவர்கள் வேண்டுமானால் அதை நம்பலாம். மற்றவர்களும் நம்ப வேண்டுமா என்ன? --------------------------- தூங்குகிறது போல நடிக்கும் சிவாவை யாராலும் எழுப்ப முடியாது
16

October 28, 2007 07:07
0
இறை நேசன்:
அய்யா உரிமைப் போராளி சிவா என்னுடைய கீழ்கண்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லையே. ஏன்? //அப்படியே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இரத்தக்காட்டேறி நரேந்திரமோடியின் தலைமையில் நரவேட்டையாடிய ஆடிய ஹிந்துத்துவத்(கவனிக்கவும்: இந்து எனக் குறிக்கவில்லை)தீவிரவாதிகளைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்பதைத் தெரிவிக்கவும்.// //இந்தியாவின் ஹிந்துக்களுக்கு சொந்தமான ராமஜென்ம பூமியை// அதாவது பாபர் மஸ்ஜித் இருந்த இடம் தான் இராமன் பிறந்த இடம் - ராமஜென்ம பூமி என்றுக் கூற வருகிறீர்கள். அப்படித்தானே? //எங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியிருப்பது போல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம்.// அதாவது தெளிவாக 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது. ஹிந்துக்களாகிய நாங்கள் இந்திய நீதிமன்றத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம்' எனக் கூறவருகின்றீர்கள். அப்படித்தானே? நான் பிறந்த எனது மண்ணின் உப்பைத் தின்று விட்டு, அது கூறும் சட்டதிட்டங்களை மதிக்கமாட்டோம், கட்டுப்பட மாட்டோம் எனக் கூறும் அளவிற்கு இன்று ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், ஹிந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் திமிர் ஏறி விட்டது. இந்தியச் சட்டத்தை மதிக்காத, ஏற்றுக் கொள்ளாத தேச விரோத ஹிந்துத்துவ சக்திகளுக்கு இனி இங்கே இடமில்லை. //அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.// எவன் வீட்டுச் சாப்பாடை எவன் உரிமைக் கொண்டாடுவது? இந்தியச் சட்டத்தை மதிக்கமாட்டோம்; ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூக்குரலிடும் தேசவிரோத ஹிந்துத்துவ சக்திகளுக்கு இங்கு எவ்வித உரிமையும் இல்லை. தேசவிரொத ஹிந்துத்துவ சக்திகளுக்கு அழிவுக்கான காலம் நெருங்கி விட்டதை மேற்கண்ட திமிர் வாசகங்கள் தெளிவிக்கின்றன. //முடியும் தருவாயில் உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிக்குப் பின் எல்லாரின் எல்லா கேள்விகளுக்கும் தன்னால் பதில் கிடைக்கும்.// வீட்டை இழந்த முஸ்லிம்களின் கைகள் என்னமோ மாங்காய் பறித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் மடையர்கள், இந்தியாவின் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து அதன் தீர்ப்புக்காக மட்டுமே காத்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளட்டும். நீதிமன்றத் தீர்ப்பு மட்டும் கிடைக்கட்டும்..... தேசவிரோத ஹிந்துத்துவ சக்திகளுக்கு சாவு மணியடித்தல் அதிலிருந்து ஆரம்பமாகும் இன்ஷா அல்லாஹ்! இறை நேசன்.
17

October 28, 2007 10:24
0
முஸ்லிம் தமிழன்:
அன்பு சகோதரர் சிவா அவர்களே //எங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியிருப்பது போல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை நீதிமன்றம் பிச்சையிட்டுத்தான் நாங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை நாங்களே எடுத்துக் கொள்வோம். அதற்கான உரிமை எங்களுக்கு உண்டு.// நீதி துறையை அவமதிப்பதை போல் நீதி மன்றத்தின் முடிவு வராமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவையில் இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய ஆதாரமற்ற கூற்றை ஒருவர் கூறினால் அதை நாம் இந்திய அரசியல் சாசனத்திற்கு கட்டுபட்டு நடக்கவேண்டிய நாம் எப்படி ஒத்துக்கொள்வது. ஒரு நம்பிக்கை உங்கள் மத நம்பிக்கை என்று நீங்கள் வாதாடுவது வேறு விஷயம், ஆனால் இங்கு ஒரு இடம் அதன் உரிமை என்று வரும் போது இவ்வாறு கூற இயலுமா? முறையாகுமா? நாளை உங்கள் வீடு இன்னொருவருடையது என்று ஒருவர் கூற முற்பட்டால்( நீங்கள் நீதமான முறையில் முடிவு நாடினால்) நீங்கள் என்ன செய்வீர்கள் நீதிமன்றத்திடம் ஆதார ஆவணங்கள் சமர்பித்து முடிவுக்கு காத்திருக்கச் சொல்வீர் அதற்குள் அவர் என் வீடாக நான் கருதும் வீட்டை நான் பிச்சை கேட்கவேண்டாம் நான் அதை மீட்க உரிமை போராட்டம் நடத்துவேன் என்று வேறு விதமாக செயல்பட்டால் அதை உலகம் என்ன வென்று கூறும், தாங்கள் அதை சரி காண்பீர்களா? அப்படி வேறு யாராவது ஒருவர் கூறினால் அவரையும் அவர் கூற்றையும் சரி காணலாமா? //ராமராஜ்யம் அமைக்கும் உயரிய நோக்கில், பாதையில் எதிர்படும் இடர்பாடுகளை அகற்றுவதாகத்தான் மதிப்பிற்குரிய மோடி கூறியுள்ளார். தவிர அவரது ஆட்சியை கடந்த கால இந்திய அரசும் மக்களும் மெச்சி பாராட்டியுள்ளது என்பதையும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. அனைவருக்கும் பதில் அளிக்க நேரமில்லை. வாய்ப்புக்கு இடமளித்தமைக்கு நன்றி.// அடுத்து தாங்கள் காண நாடும் ராமராஜ்ஜியம் அமைக்குமாறு இராமர் கூறியுள்ளாரா? என்பதும் அதற்காக இடையூறாக கருதும் உங்களை எதிர்க்காத அப்பாவிகளை கொன்று குவியுங்கள் என்று கூறியுள்ளாரா? என்பது வேறு விஷயம்.. ஆனால் இப்படி மனிதகுலத்தின் இரத்தம் ஓட்டி ராட்சசர்போல் செயல்பட்டு ஆட்சி அமைத்தால் அது ராமராஜ்ஜியம் ஆகுமா அல்லது ராட்சராஜ்ஜியம் ஆகுமா என்றாவது ( தமது ஆட்சியையை மட்டும் குறிக்கோளாக கொண்ட அரசியல் வாதிகள் தான் சிந்திப்பதில்லை) தாங்கள் சிந்திக்கலாமே. உங்கள் உடலிலும் அதே மனித இரத்தம் தானே ஓடுகிறது, நீங்களும் சகோதரத்துவ மனித இனத்தில் பிறந்தவர்கள் தானே, இது இறைவனுக்கு உகந்த செயலா? போன்ற என் உள்ளத்திலும் பல நடுநிலையாளர்கள் உள்ளத்திலும் எழும் கேள்வியை தங்கள் சிந்தைக்கு விடுகிறேன். நம்மை படைத்த எல்லாம் வல்ல நம் அனைவரின் ஒரே இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
18

October 29, 2007 06:56
0
Nagore Rumi:
அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம். என் குங்குமம் பேட்டியை மறுபிரசுரம் செய்ததற்காக நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிற்க. அந்த பேட்டி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எடுக்கப்பட்டது. அதை சுருக்கமாக வெளியிட்டிருக்கிறார்கள். கருத்துக்கள் என்னுடையவைதான். வார்த்தைகள் யாவும், வார்த்தைக்கு வார்த்தை என்னுடயவை அல்ல. நான் இன்னொரு கருத்தும் கூறியிருந்தேன். ஆனால் அது வரவில்லை. அது நண்பர் சிவா சொன்ன கருத்தை ஒட்டியது. அதாவது, தீவிரவாதத்துக்கும் எந்த மதத்துக்கும் தொடர்பில்லை. தனி மனிதனோ, அமைப்போ ஜெய் ராம் என்று சொல்லியோ, அல்லாஹு அக்பர் என்று சொல்லியோ கொலை செய்தாலும் அது அந்த தனிமனிதரின் அல்லது அமைப்பின் குற்றமே. எனவே இஸ்லாத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குவது வருத்தத்திற்குரியது என்ற கருத்தில் நியாயமிருக்கிறது. தீவிரவாதம் செய்யும் முஸ்லிம்கள் இந்தியாவில் கிடையாது. ஆனால் பஜ்ரங்தள், விஎச்பி, ஆரெஸெஸ் போன்ற அமைப்புகள்தான் இந்த நாட்டில் எல்லா அட்டூழியங்களையும் செய்துகொண்டுள்ளன. குஜராத் வன்முறைகளைப் பற்றிப் படிக்கும்போது மனிதாபிமானமுள்ள எந்த மனிதனுக்கும் கோபமும் வருத்தமும் வரும். இந்து தீவிரவாதி என்றோ, கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ சொல்லிவிட்டால் திருப்தியடைவீர்களா என்று நண்பர் சிவா கேட்டிருப்பது நியாயமான கேள்வி. அப்படிச் சொல்வதும் தவறுதான். ஏனெனில் எந்த மதமும் கொல்லுங்கள், கற்பழியுங்கள் என்று சொல்லவில்லை. சொல்லவும் செய்யாது. எல்லாம் தனி மனித துவேஷம்தான். அதையார் செய்தாலும் தப்புதான். அப்பாவி மக்களின் உடமைகளுக்கும், மானத்துக்கும், உயிருக்கும் பங்களம் விளைவிக்கும் அனைவரும் குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்தான். எந்த மதத்தையும் அதில் சேர்த்துப் பார்க்க வேண்டாமே என்பதுதான் என் கருத்து. அன்புடன் நாகூர் ரூமி
19

October 30, 2007 17:26
0
முஸ்பா முஹம்மத்:
அன்பு சகோதரர்களே உண்மையில் தீவிரவாதத்திற்கும் அல்லது பயங்கரவாதத்திற்கும் எந்த மதமும் மார்க்கமும் அங்கீகாரம் அளிப்பதோ,அல்லது இதை போதிப்பதோ இல்லை. மனித நேயமும்,சமூக நலச்சிந்தனையும் இல்லாத சமூக விரோதிகள் செய்யும் இழிவான செயலே தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஆகும். இது ஓரு சிலர் சுயநல நோக்கத்தில் செய்யும் செயல் ஆகையால் இதில் ஈடுபடும் யாருக்கும் எந்த மதத்திற்கும் உண்மையில் ஏதும் முறையான பிடிப்போ அல்லது தொடர்பும் இருக்காது. எந்த மதமும் மனிதர்களில் அப்பாவிகளுக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் செய்ய போதனையை வழங்காது என்பதே உண்மை. ஆகையால் இதில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தை அல்லது மதத்தை சாராதவர்களாக இருப்பினும் மனிதகுல விரோதிகள் எனும் ஒரு கூட்டத்தில் அவர்கள் ஒரே இனத்தவர் ஆவார்கள். ஆகையால் இவர்களை எந்த மதத்திலும் இணைக்கலாகாது என்பதே சரியானது. சில போர் காலத்து இறைவசனங்கள் தவறாக கையாளப்பட்டு தவறான பொருள் தரப்படுவதாலும் இது போன்ற வெறுப்புகள் அதிகம் ஆகிறது. ஆனால் குர் ஆன் அத்தியாயம் 9 : வசனம் 6, உங்களீடம் அபயம் தேடி வருபவர்களுக்கு அபயம் அளியுங்கள் மேலும் அவர்களுக்கு அபயம் கிடைக்கும் இடத்தில் அவர்களை கொண்டு சேர்த்து விடுங்கள் என்ற குர் ஆன் வசனம் மறைக்கப் படுகிறது. ஆகையால் இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை கண்ட இடத்தில் எல்லாம் வெட்ட சொல்கிறது என்று தவறான பிரச்சாரம் மூலம் குரோதம் வித்திட்டு வளர்க்கப் படுகிறது. இதில் பல அப்பாவி சகோதரர்கள் சிக்கி, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று கருதி, தாமே மனிதாபிமானத்திற்கு எதிராக அப்பாவிகளும் அபலைகளும் கண்ணீரில் மூழ்கிடும் விதமாக செயல்படும் பயங்கரவாதிகளாகி விடுகின்றனர் என்பதை ஏனோ அறிவதில்லை. இதிலிருந்து விடுபடுவதே மனிதகுலத்திற்கு இவர்கள் செய்யவேண்டிய முதற் கடமையாகும் என்பதை உடன் உணர்ந்து திருந்திடுவார்களாக.
20

October 30, 2007 21:12
0
அபூ ஃபாத்திமா:
//அன்பு நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்.// இவ்வளவு கருத்தாழமிக்க சிந்தனையைத் தந்த சகோதரர் நாகூர் ரூமி அவர்களிடமிருந்து அர்த்தமில்லா //வணக்கம்// இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. இறைவனை மட்டுமே வணங்க வேண்டிய ஒரு முஸ்லிம் வெறும் வார்த்தையினால் கூறும் சாதாரண ஒரு முகமன் என்ற அர்த்தத்தில் கூட இவ்வார்த்தையை மற்றொரு இறைவனின் படைப்புக்குக் கூறக்கூடாது என்பதை அறியாதவரா சகோதரர் நாகூர் ரூமி அவர்கள்?
21

October 31, 2007 12:35
0
இறை நேசன்:
//அது நண்பர் சிவா சொன்ன கருத்தை ஒட்டியது. அதாவது, தீவிரவாதத்துக்கும் எந்த மதத்துக்கும் தொடர்பில்லை.// சகோதரர் நாகூர் ரூமி, தாங்கள் கூறும் வகையில் சிவா இங்கு கருத்து வைக்கவில்லை. சிரமம் பாராமல் ஒருமுறை கூட இங்கு சிவா கக்கியுள்ள விஷத்தைக் கவனமாகப் படித்துப்பார்த்துத் தங்கள் கருத்தை வைக்கவும். இறை நேசன்.
22

October 31, 2007 12:46
0
நாகூர் ரூமி:
அன்பு நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் மற்றும் வணக்கம் (இந்த சொல்லை வேண்டுமென்றேதான் இங்கே பயன்படுத்துகிறேன்).அபூ ஃபாத்திமா என்னை மன்னிக்க வேண்டும். நான் அவர் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். வணக்கம் இறைவனுக்கு மட்டுமே உரியது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் வணக்கம் என்ற சொல் வணக்கமாகாது. எப்படி அல்லாஹ் என்ற சொல் அல்லாஹ்வாகிவிட முடியாதோ அப்படி. ஒரு பஜ்ரங்தள் வெறியன் என் நெஞ்சில் திரிசூலத்தையும் கழுத்தில் கத்தியையும் வைத்து ஜெய் ராம் என்று சொல் என்று வற்புறுத்தினால் நான் அப்போது என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிச்சயம் சொல்வேன். (பன்றிக்கறி சாப்பிடுவது பற்றி இறைவசனத்தைப் பார்க்கவும்). ஆனால் அதனால் என் ஈமானுக்கு எந்த பங்கமும் ஏற்படாது. ஏனெனில் உள்ளமும் உடலும் சேர்ந்து செய்தால்தான் ஒரு விஷயம் வணக்கமாகவோ அல்லது ஷிர்க் ஆகவோ ஆகும். இன்னல் அஃமாலு பின் நிய்யாத் என்பது ஹதீஸ். நீங்கள் குர்பானி கொடுக்கும் ஆட்டின் ரத்தமோ சதையோ என்னை வந்து சேருவதில்லை ஆனால் உங்கள் பக்திதான் என்னை வந்தடைகிறது என்று அல்லாஹ் சொல்வதையும் இங்கே சிந்தித்துப் பாருங்கள். மற்ற மதத்தினர் வணக்கம் என்று சொல்வது ஒரு முகமன். அவ்வளவே. அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு நாம் தொங்கிக் கொண்டு தர்க்கித்துப் பிரிந்து போய்விடக் கூடாது. வார்த்தைகளின் பின்னாலுள்ள spirit-ஐப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எல்லாருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் அது நம் கலாச்சாரத்தை சத்தியமார்க்கம் போன்ற தளங்களைப் பார்வையிடும் மாற்று மதத்தவர்மீது திணிப்பது ஆகாதா? இஸ்லாத்தில் வற்புறுத்தல் இல்லை -- லா இக்ராஹ ஃபித் தீனி -- என்று அல்லாஹ் சொல்லவில்லையா? அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் நான் எழுதுகிறேன். பேசுகிறேன். நான் வார்த்தைகளைப் பார்ப்பதில்லை. மனதைப் பார்க்கிறேன். தவறு எனில் சுட்டிக் காட்டுங்கள். நிற்க, சிவா எழுதிய பலவற்றையும் படித்துப் பார்த்ததில், அவர் சில விஷ(ம)க் கருத்துக்களையே பதிவு செய்திருப்பதை உணர்ந்து கொண்டேன். அப்படிப்பட்டவர்களோடு தர்க்கிப்பது கால விரயம். இறைநேசனுக்கு நன்றி. அன்புடன் நாகூர் ரூமி
23

November 05, 2007 12:02
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் நாகூர் ரூமி அவர்களே தங்களின் சுமூக சிந்தனை, மக்களிடம் சத்தியம் செல்லவேண்டும் எனும் ஆவல், அதே போல் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் எனும் சிந்தை ஆகிய அனைத்தும் நல்ல நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை... ஆனால் தங்கள் கருத்தில் எனக்கு எழும் சில சந்தேகங்கள்... 1) வணக்கம் என்று சொல்வது வணக்கம் ஆகிவிடாது. இக்கருத்தின் படியும் தங்கள் திரிசூலம் மற்றும் கத்தி உதாரணத்தின் படியும் வணக்கம் என்பதன் பொருள் மற்றும் அது உள்ளடக்கியுள்ள ஒருவருக்கு ஒருவர் சிரம் பணிதல், கைகூப்புதல், காலில் விழுதல், முதல் இதை தலைவர்களுக்கும் தலைவர்கள் படங்களுக்கு சிலைகளுக்கு என்று இன்னும் எண்ணற்ற தெய்வங்களாக கருதி செய்யப்படும் விக்கிரக வழிபாடுகள் மற்றும் தர்கா எனும் சமாதி வழிபாடுவரை அனைத்தையும் சரி காண இயலுமே இது சரியா. இது மன்னிக்கப்படாத ஷிர்க் இணைவைத்தலில் வீழ்த்தி விடாதா? 2)எவர் ஒருவர் பிற சமுதாயக்கலாச்சாரத்தை பின்பற்றி நடப்பாரோ அவரும் அவர்களை சேர்ந்தவர் எனும் எச்சரிக்கையினை மறக்கலாமா? 3) நிர்ப்பந்தம் என்பது வேறு இங்கு உடன்பாடற்ற ஒன்றை எந்த நிர்பந்தமும் இல்லாத நிலையில் மக்களுக்கு சத்தியபாதையை காட்ட பணிக்கப்பட்ட நாம் மறைக்கும், மறக்கும் அல்லது மறுக்கும் விதத்தில் கூறுவது நபி வழியயை புறக்கணித்ததாகவும், ஒரு உண்மையை மறுக்கும் விதத்தில் நடிப்பது போல் ஆகாதா? 4) இப்படி உள்ளத்தில் இல்லை வெளியில் செய்வது தவறில்லை என்றால் இதை காணும் அடுத்த முஸ்லிம் உள்ளம் வெளியில் என்று சிந்திக்காத நிலையில் இதை பின்பற்றினால் அதற்கு நாம் காரணமாக மாட்டோமா? 5) எல்லாவற்றை விடவும் முஸ்லிம்களாகிய நாம் தூய இறைமார்க்கம் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடித்து நமது இதர மாற்றுமதச் சகோதரர்களுக்கும் இதை கூறி இந்த இறை நெறியை எத்திவைக்க கடமைபட்டுள்ளோமே, நாமே இப்படி செயல் படுவது அவர்களையும் நம்மவர்களையும் தூய இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி விடாதா? போன்றதை தங்கள் மேலான சிந்தனைக்கு வைக்கின்றேன். அல்லாஹ் மிக அறிந்தவன். அன்புடன் மு முஹம்மத்
24

November 05, 2007 13:47
0
நாகூர் ரூமி:
அன்புச் சகோதரர் மு.முஹம்மது அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் நியாயமானவயே. உங்கள் அளவில். எனினும் அவற்றுக்கு நான் பதில் சொல்லப் புகுந்தால் அது மீண்டும் ஒரு விளக்கத்துக்கோ விவாதத்துக்கோ வழி வகுக்கும். எனக்கதில் விருப்பமில்லை. இஸ்லாத்தின் அடிப்படைக்குக் குந்தகம் ஏற்படவில்லை என்று உங்கள் மனம் ஒத்துக் கொள்ளும் வகையில் நாம் நடந்து கொண்டால் மற்ற விஷயங்களைப் பற்றி அதிகமாகக் கவல கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். காரியங்கள் செய்பவர்கள், உதாரணமாக தர்காவுக்குச் செல்பவர்கள், எந்த மனநிலையில் அதைச் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. நாம் காரியத்தை மட்டுமே பார்க்கிறோம். எனவே அது சமாதி வழிபாடுதான் என்று முடிவு கட்டும்போது தவறு செய்து விடலாம். முடிவு செய்து தீர்ப்பு வழங்க வேண்டியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. நான் சொல்ல வந்ததற்கு ஒரு நல்ல உதாரணமாகத்தான் உங்கள் கடிதம் இருக்கிறது. இஸ்லாமிய(ரின்) சொல்லையும் செயலையும் நீங்கள் ஒரு கோணத்தில் பார்க்கிறீர்கள், நான் வேறொரு கோணத்தில் பார்க்கிறேன். வித்தியாசங்களை மறந்து ஒற்றுமையாக நாம் செயல்பட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. நீங்கள் எழுதியிருப்பதுபோல அல்லாஹ்வே மிக அறிந்தவன். அன்புடன் நாகூர் ரூமி
25

November 05, 2007 15:00
0
வஹ்ஹாபி:
'தவறு எனில் சுட்டிக் காட்டுங்கள்' என்று சகோ. நாகூர் ரூமி அவர்கள் குறிப்பிட்டதால் இங்குப் பலரும் பலவாறு 'சுட்டு'கின்றனர். சகோ. ரூமி அவர்கள் விளக்கியதுபோல் 'எண்ணமும் செயலும் இணைந்ததே இறைவழிபாடு' என்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரு கருத்துகள் ஏற்படா. ஆனால், ஒருவரைப் பார்த்து 'உங்களை நான் உளமாற வணங்கவில்லை; எனினும் உங்களை வணங்குகிறேன், வணக்கம்' என்று கூறுவது போலித்தனமன்றோ? போலித்தனத்தை இஸ்லாம் விரும்புவதில்லையே! சில ஆண்டுகளுக்கு முன்னர், சன் தொலக்காட்சியில் வீரபாண்டியன் ஏற்பாடு செய்த ஒரு விவாத நிகழ்ச்சியை இங்குச் சுட்டுதல் பொருத்தமாயிருக்கும்: த.மு.மு.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து வி.ஹெச்.பி. தலைவருடன் நடத்திய விவாதத்தின்போது, வீரபாண்டியன் 'வணக்கம்' கூறியவேளை, 'மனிதர்கள் எவரையும் வணங்கக் கூடாது என்று எங்களுக்கு இறைவனின் கட்டளை இருப்பதால் உங்களுக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துகள்' என்று பதில் கூறுவார். அதில் இஸ்லாமிய முகமனை இலட்சக் கணக்கான பார்வையாளர்களுக்கு அவர் அறிமுகப் படுத்தியதோடு 'வணக்கம்' என்ற சொல்லைக்கூட முஸ்லிம்கள் அல்லாஹ்வை அன்றி வேறு எவருக்கும் பயன்படுத்தார் என்ற இஸ்லாமிய நிலைப்பாட்டை அங்கு நிலை நிறுத்தினார். இன்னொரு நிகழ்வில் சகோதரி ஃபாத்திமா முளஃப்பருக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் 'வணக்கம்' என்று வணங்கியபோது தன் நெஞ்சில் கைவைத்து முறுவலித்தார். மேலும் இன்றுவரை 'வணங்காமல்' செய்திகளைத் தொகுத்து வழங்குகிற சில முஸ்லிம் தொகுப்பாளர்கள் தொலைக் காட்சிகளில் இல்லாமலில்லை. அவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை. 'முஸ்லிம்கள் வணக்கம் சொல்ல மாட்டார்கள்' என்று மாற்றாரும் நல்லவிதமாகவே புரிந்து கொண்டிருக்கிற இக்காலை, 'நீ வணக்கம் சொல்லா விட்டால் உன்னைக் கொன்று விடுவோம்' என்று எப்போதும் மிரட்டிக் கொண்டே இருப்பது போலவும் அதற்காகவே 'வணக்கம்' சொல்வதாகவும் சகோ. நாகூர் ரூமி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் உவமை வேடிக்கையாக இருக்கிறது! //வணக்கம் என்ற சொல் வணக்கமாகாது. எப்படி அல்லாஹ் என்ற சொல் அல்லாஹ்வாகிவிட முடியாதோ அப்படி// முழுக்கவும் உண்மை! ஆனால், அல்லாஹ் என்ற சொல் அல்லாஹ்வை மட்டுமே குறிக்கும். போலவே, வணக்கம் என்ற சொல் வணங்குவதையே குறிக்கும் - நாகூர் ரூமி என்று நான் ஒருவரைக் குறித்துச் சொன்னால் அது நாகூர் ரூமி என்ற எழுத்தாளரை மட்டுமே குறிப்பது போல்.
26

November 05, 2007 16:37
0
அபூ ஸாலிஹா:
மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் முதற்கண் அஸ்ஸலாமு அலைக்கும்! சன் டிவியில் புகழ்பெற்ற 'சென்ற வார உலகம்' நிகழ்ச்சியை திறன்பட தொகுத்து வழங்கும் இஸ்லாமியரான ஷாகுல்ஹமீது அவர்கள் நீண்ட வருடங்களாகவே சகோதரர் நாகூர் ரூமி போன்று அறியாமையின் காரணத்தினால் வணக்கம் கூறுவதோடு நில்லாமல் இருகை கூப்பி வணங்கியும் வந்தார். அவரது தேடலின் முயற்சியில் 'இஸ்லாம்' பட்டு பார்வைகள் விரிவடைந்தவுடன் வணங்குவதை நிறுத்திக்கொண்டு அழகாக வாழ்த்துக்களை தாடியினூடே பளிச்சிடும் முத்துப்பற்களோடும் புன்முறுவலோடும் தெரிவிக்கிறார். இந்த வார எபிஸோட் வரை இது ஒரு குறையாகவே யாரும் அவரைச் சுட்டியதில்லை என்பதே இங்கு கவனிக்கவேண்டிய விஷயம். http://www.sunnetwork.org/suntv/progdetails.asp?id=sun_195&cat=4 அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகளை மரியாதைக்குரிய நாகூர் ரூமி அவர்கள் பொருளுடையது என்று கருதுவாகின் அதே போன்று வணக்கம் என்பதும் பொருள்செறிவு கொண்டது என்றுதானே பாகுபாடின்றிக் கருதவேண்டும்? அதோடு, வணக்கம் என்ற சொல் வணக்கமாகாது என்றால் அவருக்குரிய முகமன் என்பதை கேலிக்குரியதாக்குகிறீர்கள் அல்லது பொய்யாக புனைந்துரைத்தே முகமன் சொல்கிறீர்கள் என்பது போன்று தோன்றுகிறது.
27

November 05, 2007 17:47
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் நாகூர் ரூமி அவர்களுக்கு.. தாங்கள் //உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் நியாயமானவயே. உங்கள் அளவில். எனினும் அவற்றுக்கு நான் பதில் சொல்லப் புகுந்தால் அது மீண்டும் ஒரு விளக்கத்துக்கோ விவாதத்துக்கோ வழி வகுக்கும். எனக்கதில் விருப்பமில்லை.// என்று குறிப்பிட்டீர்கள் உண்மையில் இத்தோடு தாங்கள் நிறுத்தியிருந்தால் இதை மேலும் தொடர வேண்டிய அவசியம் இருந்திருக்காது... ஆயினும் தாங்கள் இதை தொடர்ந்து சில கருத்துக்கள் வெளியிட்டதால் அதில் எனது நிலைபாட்டை என்பதை விட இஸ்லாமிய புரிதலை விளக்கவேண்டியது அவசியமாகி விடுகிறது. //இஸ்லாத்தின் அடிப்படைக்குக் குந்தகம் ஏற்படவில்லை என்று உங்கள் மனம் ஒத்துக் கொள்ளும் வகையில் நாம் நடந்து கொண்டால் மற்ற விஷயங்களைப் பற்றி அதிகமாகக் கவல கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.// இஸ்லாத்தின அடிப்படைகளுக்கு குந்தகம் ஏற்பட்டதா இல்லையா என்பதை எதன் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்? நமது மனதின் அடிப்படையில் என்றால் பிறகு இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்ட வேதங்களும் அதில் இறுதியான குர் ஆனும், இறைத்தூதர்களும் அதில் இறுதியாக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை பின் பற்ற வேண்டும் எனும் கட்டளையின் நிலை என்னவாவது. //காரியங்கள் செய்பவர்கள், உதாரணமாக தர்காவுக்குச் செல்பவர்கள், எந்த மனநிலையில் அதைச் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. நாம் காரியத்தை மட்டுமே பார்க்கிறோம். எனவே அது சமாதி வழிபாடுதான் என்று முடிவு கட்டும்போது தவறு செய்து விடலாம். முடிவு செய்து தீர்ப்பு வழங்க வேண்டியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.// இந்தக் கருத்துக்கு பக்கம் பக்கமாக குர் ஆன் மற்றும் ஸுன்னா எனும் நபி வழியில் இருந்து பலரும் விளக்கியுள்ளனர், விள்க்க இயலும் ஆயினும் ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் நமது வாழ்க்கையின் வழிகாட்டியாகிய (அல்குர் ஆன் 33:21, 3:31) நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத எச்செயலையும், வேறு நோக்கம் கற்பித்து செய்வது அந்த வழியையும் அக்கட்டளையையும் புறக்கணித்தலும் வரம்பு மீறுதலும் ஆகிவிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லையென்பதால் தர்காவில் செல்பவர்களின் உள்ளத்தை ஆராய்வதைவிட நபி(ஸல்) அவர்கள் செயலையும் கூற்றையும் ஆராய்ந்து கைவிட்டு தவ்பா செய்து மீள வேண்டும். ஒற்றுமையாக இறைவனின் வேதமாகிய குர் ஆனை பற்றிப் பிடிக்க அல்லாஹ் கூறுகிறான் ஒற்றுமைக்காக மார்க்கத்தை மறந்துவிட வேண்டும் என்று கூறவில்லை ( 3: 103). அதே நேரம் மனிதர்களிடம் வெறுப்பாக வேறுபாடு கற்பித்து பழகக் கூடாது என்பதும் அனைவரும் சகோதரர்களே என்பதும் இறைவனின் வாக்கு ஆகும் பார்க்க 49 : 13. மேலும் தங்களைப் போன்றவர் அடுத்தவர் மனக் நோகக்கூடாது என்று கூறத் தயங்கும் முகமனைப் பற்றிய மாற்று மத சகோதரர்களின் ஆதங்கம் மற்றும் அழகான கலந்துரையாடலைப் கீழேயுள்ள சுட்டியில் பார்வையிடுங்கள். http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=92 அல்லாஹ் முழு மனித சமுதாயம் ஈடேற்றம் பெற பிராத்திப்போமாக. அன்புடன் மு முஹம்மத்
28

November 05, 2007 18:36
0
அதி. அழகு:
சகோ. முஹம்மத், தாங்கள் தந்திருக்கும் சுட்டி தவறானது என்று நினைக்கிறேன். சரியானச் சுட்டி: http://www.satyamargam.com/forum/viewtopic.php?f=10&t=152 தொடர்புடையச் சுட்டி: http://www.satyamargam.com/forum/viewtopic.php?t=105 நன்றி!
29

November 05, 2007 19:49
0
மு முஹம்மத்:
அன்பு சகோதரர் அதி அழகு அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் சரியான சுட்டியை தந்தமைக்கு நன்றிகள். ஜஸாக்கல்லாஹு கைரன். அன்புடன் மு முஹம்மத்
30

November 06, 2007 05:44
0
HABEEB RAHMAN:
ASSALAMU ALAIKUM [WARAH] 'LA ILAHA ILLALAH MOHAMEDUR RASOOLLULLA' ISLATHINAI PIRA MATHA SAHOTHARARKALUKU PURINTHU KOLLA VAIKKA NADATHAPADUM INTHA KARUTHU YUTHAHTIL PANKETRU PANIYATRIYA ELLA MUHMEEN MUSLEEMGALUKUM ELLAM VALLA ALLAH IMMAIYILUM MARUMAIYILUM NALLADIYARGAL KOOTTATHIL AAKKI ARULVANAGA, AAMEEN M.HABEEB
31

May 28, 2010 15:25

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் யார் தீவிரவாதி?
Twitter
RSS
YouTube
English