சத்தியமார்க்கம்.காம்

தாய்மை (கவிதை) print Email
கதை-கவிதை - கவிதை
வெள்ளி, 19 அக்டோபர் 2007 13:42
ணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!


ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!


ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!


எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?


இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?


பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!


வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!


குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!


கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!


நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!


வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!


தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!

 

கவிதை: வி.அ.உவைஸ்

Trackback(0)
கருத்துக்கள் (5)add comment
0
ஹம்ஸா:
கவிதை மிக மிக அருமை. ஆழ்ந்த கருத்துக்கள். //நள்ளிரவில் குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல் தாய்மைக்குத்தான் பதட்டம்..!// தாய்(மை)க்கு மட்டும்தான் தவிப்பு! ... என்று வைத்தால் இன்னும் பொருத்தம். ...ஹம்ஸா
1

October 21, 2007 06:24
0
ABIDEEN&SALAVUDEEN-JUBAIL:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த தாய்மை என்ற கவிதை மிகவும் அருமையாக இருந்தது அல்லஹ்வின் அனைத்து படைப்பிலும் மிகச்சிறந்த படைப்பு மனித படைப்பு.அல்லஹ் திருக்குரனில் தாய்மை பற்றி மிகவும் அருமையாக விளைக்கிவுல்லான் இந்த தாய்மை கவிதையை மக்களுக்கு மத்தியில் வெளிகொண்டுவந்த சத்தியமார்கத்தியமார்கம் மென்மேலும் வலர நான் அல்லஹ்விடம் (துஆ)செய்கின்றேன் ஆக்கம்-ஆபிதின்&சலாவுதின் ஜுபைல் சவுதி அரேபிய
2

March 19, 2008 12:20
0
சத்தியமார்க்கம்.காம்:
சகோதரர்கள் ஆபிதீன்&சலாஹுத்தீன், ஆவூர் பஷீர் அஹ்மது ஆகியோரின் பாராட்டுக்கும் துஆக்களுக்கும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு கைரா! தொடர்ந்து வருகை தாருங்கள்; உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
3

March 19, 2008 12:28
0
haq:
அஸ்ஸலாமு அலைக்கும் ... கவிதை மிக அருமை .. காதலை பற்றியே கவிதை எழுதுபவர்கள் மத்தியில்.. தாய்மையை பற்றிய கருத்து அற்புதம்.... அல்ஹம்துலில்லாஹ்... இது போன்ற் கவிதை, கட்டுரைகளை சத்தியமார்க்கத்தில் எல்லோரும் பதிய முடியுமா... இல்லை உறுப்பினர்கள் மட்டும்தானா...??? .அப்படி பதிவது என்றால் எங்கு பதிவது.. தயவு செய்து விளக்கம் தரவும்....
4

August 28, 2008 09:56
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் ஹக், வாசகர்களை எழுத்துலகிற்கு அழைத்து வருவதற்கு, சத்தியமார்க்கம்.காம் பெரிதும் முயற்சி எடுத்து வருகிறது. அதற்காகச் சென்ற ஆண்டு உலகளாவிய அளவில் ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டும் (2008-2009) கட்டுரைப் போட்டி உண்டு. யார் வேண்டுமானாலும் தங்கள் ஆக்கங்களை எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின்னஞ்சலுக்கு யுனிகோடில் தட்டச்சி அனுப்பி வைக்கலாம். அல்லது http://www.satyamargam.com/index.php?option=com_contact&catid=12&Itemid=99 என்ற சத்தியமார்க்கம்.காம் பக்கத்தின் மூலமாகவும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். எந்த ஆக்கமும் தளக் குழுவினரின் பரிசீலனைக்குப் பின்னரே பதிவேற்றப் படும். தங்கள் கவிதையை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
5

August 28, 2008 10:11

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் தாய்மை (கவிதை)
Twitter
RSS
YouTube
English