| சிறைபிடிக்கப்பட்ட கொரிய நாட்டினரை தாலிபான் விடுதலை செய்தது! |
|
|
| செய்திகள் - உலகச் செய்திகள் | |||
| புதன், 29 ஆகஸ்டு 2007 19:16 | |||
|
{mosimage}கடந்த 2007, ஜூலை 19 அன்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்காக ஆப்கானிஸ்தான் வந்திறங்கிய 23 கொரிய நாட்டினரைத் தாலிபான் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தது. முதலில் சிதைந்து போயுள்ள ஆப்கனை மீளக் கட்டியெழுப்ப வந்த பொறியாளர்களாக இவர்களைச் சித்தரித்த ஊடகங்கள், பின்னர் கொரிய அரசின் அறிக்கையின் பின்னர், சியோலில் இருக்கும் சேம்முல் ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் (Saemmul Presbyterian Church)சைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை வெளியிட்டன. ஆப்கன் அரசினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 10 தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்; கொரியப் படைகளை ஆப்கனிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை இந்த பணயக் கைதிகளை விடுவிக்க தாலிபான் நிபந்தனை விதித்தது. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஒவ்வொருவராகக் கொரியப் பணயக் கைதிகளைக் கொன்றுவிடப்போவதாவும் மிரட்டியிருந்தது. இம்மிரட்டலுக்குப் பணியாத ஆப்கன் அரசு தாலிபான் கைதிகள் எவரையும் விடுவிக்கமுடியாது என அறிவித்தது. ஆப்கன் அதிபர் ஹமீத் கார்சாய், அமெரிக்காவுக்குப் பயணம் செய்து அதிபர் புஷ்ஷைச் சந்தித்தார். இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தாலிபானை ஆப்கனும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து ஒடுக்கி அழிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டனர். இதற்கிடையே ஒருவர் பின் ஒருவராக இரு ஆண் பணயக் கைதிகளைத் தாலிபான் கொன்றது. உலகெங்கிலும் இருந்து முஸ்லிம்கள் பலரும் தாலிபானின் இக்கொடுஞ்செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மீதமுள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தென் கொரிய அரசு, உடனடியாக அரசுப் பிரதிநிகள் சிலரை, தென்கொரிய நாட்டிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களின் உதவியுடன் தாலிபானுடன் பேச்சு நடத்த முன்வந்தது. தென்கொரிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்ட தாலிபான் இரு பெண் பணயக் கைதிகளை விடுவித்தது. தாலிபானுடன் பேச்சு நடத்திய கொரிய முஸ்லிம்கள் ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களை நடுவர்களாக வைத்து தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் தென்கொரிய அரசு இவ்வாண்டு இறுதிக்குள் ஆப்கனிலிருக்கும் தனது 200 படையினரைத் திரும்பப் பெறுவதாகவும், கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பணியை ஆப்கனில் இனி அனுமதிப்பதில்லை என்றும் உறுதி அளித்தது. இதனால் திருப்தி அடைந்த தாலிபான் தரப்பினர் இன்று பணயக் கைதிகளாக மீதமுள்ள 19 கொரியர்களையும் விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட கொரியர்கள் அனைவரும் ஆப்கன் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இப்பேச்சு வார்த்தையில் கொரிய அரசு தரப்புக் குழுவில் முனைப்புடன் பங்கு பெற்ற கொரிய முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் லீ, ஆப்கன் பழங்குடியினத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
நல்ல முறையாக இருக்கிறதே.. இதே போல இந்தியாவில் பிரச்சாரம் செய்ய வரும் முஸ்லீம் பிரச்சாரகர்களையும், கிறிஸ்துவ பிரச்சாரகர்களையும் செய்தால், இந்தியாவில் ஷாரியாவை நிலைநாட்டிவிட்டோம் என்று கூறிவிடலாமா?
1
August 30, 2007 02:28
'கிருத்துவப் பிரச்சாரம் செய்யத்தான் வருகிறோம்' என்ற உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லிப் புகுந்தது ரொம்ப ரொம்ப நல்ல முறைதான் திருபிரபு.
'எதையும் தாங்கும் இதயம்' குடியரசு நாடான இந்தியாவையும் நம் நாட்டிலிருந்து பிரிந்துபோய் இன்றைக்குத் தன் இருப்பே கேள்விக்குறியாக வளைந்து நிற்கும் ஆப்கானிஸ்தானும் ஒன்றா?
அங்கு இன்றைக்கு யார் ஆட்சி புரிகின்றனர் என்பதும் என்னவகை ஆட்சி என்பதும் எந்த எந்த பகுதிகள் இன்றைய நிலவரத்தில் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
இங்கு யாரும் புதிதாக ஷரீஆவை நிலைநாட்டத் தேவையில்லை. அது ஏற்கனவே இருக்கிறது!
2
August 30, 2007 08:59
நிலைநாட்டுவது எல்லாம் சரிதான். ஆனால், பலகீனமான, உலக ஏழை நாடுகளை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து பலவந்தமாக உட்புகுந்து, அங்கே அமைதியை தான் ஏற்படுத்தப்போவதாக கூறும் அமெரிக்கா இங்கே கால் வைத்த பின்னாவது அமைதி ஏற்பட்டிருக்கா
அறிந்தவர்காள் இதுபற்றிய விப்ரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
3
August 30, 2007 09:50
இஸ்லாத்தில் இனி புதிதாக எதும் சட்டங்கள் வரபோவது இல்லை ஷாரியத் நீர்னயக்கபட்டுவிட்டன,இன்னும் குள்ளநரி குணம் கொண்ட அமொரிக்க கொஞ்ச கொஞ்சமாக தன் விக்கிரகுணத்தை ஒன்றும் அறியா மக்களிடம் காட்டி நல்லபெயர்வாங்க துடிக்கின்றது எங்கொல்லாம் அமொரிக்க கால் எடுத்துவைக்கின்றதொ அங்குயொல்லாம் ஒன்னும் அறியாத மக்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பது தான் உண்மை, இன்னும் தான் ஆதிக்கத்தை இந்தியாவிலும் நிலைநாட்டினாலும் ஆச்சிரியபடுவதற்க்கு இல்லை
ஹஃணிப்-குவைத்
4
August 30, 2007 11:43
இந்தியாவில் ஷரீஆ ஏற்கெனவே இருக்கிறதா? அப்படியென்றால், இஸ்லாமிய திருடர்களுக்கு மட்டும் கை வெட்டப்படுகின்றதா? கற்பழிக்கபப்டும் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் நான்கு சாட்சிகள் இருந்தால்தான் கோர்ட் படியேறி குற்றவாளியை அடையாளம் காட்டமுடியும் என்று இருக்கிறதா?
எனக்கு தெரியவில்லையே?
5
September 04, 2007 02:07
சப்பைக் கேள்வி கேட்டுள்ள திருபீ'ரபு அவர்களே, தாலிபான்கள் ஷரியாவை நிலைநாட்டத்தான் தென்கொரிய உளவாளிகளை சிறைபடுத்தியதாக எப்போது எங்கே கூறினார்கள்?
அப்படியே அவர்கள் கூறியிருந்தாலும், அதனை முஸ்லிம் உலகம் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதா?
நல்லது நடந்தால் அதனை வரவேற்பதை விட்டு விட்டு அங்கேயும் வந்து தன் மன வக்கிரத்தைக் கொட்டுவதன் மூலம், பெயரில் மட்டுமல்ல மனதிலும் முழுவதும் 'அழுக்கு' நிறைந்து காணப்படுவதை மட்டும் 'அழகாக' வெளிப்படுத்துகின்றீர்கள் போங்கள்!
6
September 05, 2007 15:00
கருத்து எழுதுக :
|