| விக்கிபீடியாவில் CIA, FBI செய்த தகவல் குளறுபடி அம்பலம்! |
|
|
| செய்திகள் - உலகச் செய்திகள் |
| வியாழன், 16 ஆகஸ்டு 2007 20:00 |
|
{mosimage}கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற பெருமையைக் கொண்டுள்ள விக்கிபீடியாவின் பெருமையே அதற்கு எவர் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம்; ஏற்கனவே இருக்கும் தகவல்களைத் திருத்தி அமைக்கலாம். இவ்வகையான தகவல் அளிப்பதற்கு விக்கிபீடியாவில் பயனர் கணக்குப் பதிந்திருப்பவர்களும் அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் அனாமதேயமாகவும் இத்தகவல்களை விக்கிபீடியாவுக்கு அளிக்கலாம். இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைப் பலர் பொறுப்புணர்ந்து பயன்படுத்தினாலும் சிலர் தவறான தகவல்கள், தனிநபர் தாக்குதல்கள், துவேஷ எழுத்துக்கள் எழுதவும் விக்கிபீடியாவைப் பயன்படுத்தி வந்தனர். விக்கிபீடியா பயனர் கணக்கு கொண்டிருப்பவர்கள் இவ்வாறு செய்வது அரிதாக இருப்பினும் அனாமதேயமாகச் சிலர் இந்தத் தீய வழிக்கு விக்கிபீடியாவைத் துஷ்பிரயோகம் செய்து வந்திருந்தனர். அனாமதயேமாக இவ்வாறு போக்கிரித்தனம் செய்பவர்களை வர்ஜில் கிரிஃபித் என்பவர் எழுதிய விக்கிவருடி (WikiScanner) என்ற செயலி கையும் களவுமாகக் கண்டுபிடித்துவிடுகிறது. இதில் குவாண்டனாமோ சிறை பற்றிய குறிப்புகள் மற்றும் இராக் மீதான அமெரிக்கப்போர் குறித்த விளக்கப்பக்கங்களில் சில முக்கிய தகவல்களையும் சில நிழற்படங்களையும் திரிக்கப்படுவதற்கு அமெரிக்க உளவுத்துறைக்குச் சொந்தமான கணினிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதேபோல ஈரானின் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் குறித்த விவரணப்பக்கத்திலும் CIA-வின் கணினிகளிலிருந்து அவதூறு கற்பிக்கும் சொற்கள் செருகப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராய்ட்டர்சிடம் கருத்துத் தெரிவித்த CIA செய்தித் தொடர்பாளர், "CIA தனது அலுவலகக் கணினிகள் பொறுப்பாகப் பயன்படுத்துவதையே எதிர்பார்க்கிறது" என்று தெரிவித்தார். ஆனால் FBI தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதற்கு முன் ஐரிஷ் குடியரசுப்படை (Irish Republican Army) என்ற பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான ஐரிஷ் குடியரசுக் கட்சியின் (Irish Republican Party - Sinn Fein) தலைவர் ஜெர்ரி ஆடம்சின் பக்கத்திலிருந்த அவர் மீது சுமத்தப்பட்டிருந்த இரட்டைக் கொலைவழக்கிற்கான செய்தித்தாள் சுட்டிகள் நீக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைச் செய்தவர்கள் வாட்டிகனின் அலுவலகக் கணினியில் இருந்து செய்தது தனித் தகவல். கருத்துக்கள் (4)
![]() எழுதியவர்: நூருல் அமீன் , August 18, 2007 11:15 அதிர்ச்சியடைய வைக்கும் தகவல்கள். வெளியுலகத்திற்கு மடிப்புக்கலையாத துண்டு போட்டுக்கொண்டு நாட்டாமை செய்ய நினைக்கும் அமெரிக்கா, அண்டர் த டேபிளில் இத்தகைய அயோக்கியத்தனங்களை செய்கிறதா? ஏற்கனவே CIA வின் திரித்தல் வேலைகளை படித்த ஞாபகத்தில் உங்கள் தள சர்ச் தேடுபொறியில் இட்டேன். மயக்கம் வருகிறது!!! இணையத்தில் நச்சுச் செயலியை (Malware) உலவவிடும் அமெரிக்க உளவுத்துறை! http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=564&Itemid=51 இஸ்ரேலின் இணைய பயங்கரவாதம்! http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=563&Itemid=119 பணப்பரிமாற்று விபரங்கள் US-வசம் அளிக்கப்பட்ட அதிர்ச்சித்தகவல்! http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=332&Itemid=51 இந்திய உளவுத்துறையில் கறுப்பு ஆடுகளா- http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=218&Itemid=51 இத்தகையவர்களுடன் இந்தியா அணுஆயுத ஒப்பந்தம் வேறு செய்கிறது. விதியை நொந்து கொள்வதா? இல்லை மயங்கிக்கிடக்கும் மதியைக் குறை சொல்வதா? - நூருல் அமீன் எழுதியவர்: சையத் அலி , August 19, 2007 07:07 வளைகுடாவில் உள்ள செய்தித்தாள்களின் இன்று (19-08-2007) வெளியாகியுள்ள இச்செய்தியை இரண்டு நாள் முன்னதாக உங்கள் தளத்தில் படித்திருந்தேன். தங்களின் செய்தி அளிக்கும் விதமும் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள். எழுதியவர்: இப்னுஅமீர் , August 21, 2007 06:02 அருமையான செய்தியைப் பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். விக்கி ஸ்கேனரைக் கண்டுபிடித்த பட்டதாரி மாணவரான கிரிஃபித், அமெரிக்க காங்கிரஸ்காரர்கள் ஏற்கனவே விக்கிபீடியாவில் செய்த அயோக்கியத்தனத்தை தடுக்கவே இந்த ஸாஃப்ட்வேரைக் கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறார். உங்கள் தளத்தில் உள்ள காபத்துல்லாஹ் பற்றிய இன்னொரு இழையில் வாசகர் ஒருவர் கொடுத்துள்ள விக்கிபீடியா சுட்டியிலும், கையாடல் செய்யப்பட்ட கார்ட்டூன் படத்திற்கான சுட்டி இடம் பெற்றிருக்கிறது. 'WikiPedia isonly working draft of history, it is constantly changing and so relies on vlounteers editing the pages' என்று விக்கிபீடியாவில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறியதையும் கவனியுங்கள். தகுந்த ஒழுங்கு நடவடிக்கையை விக்கி இப்போது எடுக்கவில்லையெனில், இந்திய பள்ளிப்பாடங்களில் 'காவிகள்' கையாடல் செய்தது போன்று விக்கியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். நன்றி! -இப்னுஅமீர் கருத்து எழுதுக :
|