சத்தியமார்க்கம்.காம்

நிலையில்லா இம்மை....! print Email
கதை-கவிதை - கவிதை
ஞாயிறு, 24 ஜூன் 2007 15:39
வளர்மதியாய் உலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
வன்மதியால் வடிவமின்றி தேய்ந்து போகும்!

வண்சுடராய் ஒளி வீசும் வாழ்வு ஒரு நாள் - நம்
மனக்காற்றில் ஏகமாக அணைந்து போகும்!

பெருங்கலமாய் மிதக்கின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
பொறாமையெனும் பெருங்கடலில் மூழ்கிப் போகும்!

பெற்றோருடன் சிரிக்கின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
பிடிவாத அழுகுரலில் ஓய்ந்து போகும்!

மனைவியுடன் குலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
மந்தமான நித்திரையில் மறைந்து போகும்!

மக்களுடன் குலவுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
மகிமையிலா செய்கையிலே மடிந்து போகும்!

சுற்றமுடன் சொர்க்கம் காணும் வாழ்வு ஒரு நாள் - நம்
சுத்தமிலா மனத்திரையில் சுருங்கிப் போகும்!

சொல்வளத்தால் சுவை சேர்க்கும் வாழ்வு ஒரு நாள் - நம்
சொல்லில்லா மெளனத்தில் ஆழ்ந்து போகும்!

செல்வத்தில் புரளுகின்ற வாழ்வு ஒரு நாள் - நம்
செல்வாக்கில்லா செம்மணலில் சிதைந்து போகும்!

சேனைசூழ் பார் போற்றும் வாழ்வு ஒரு நாள் - நம்
சேதமுற்ற செந்நீரில் தோய்ந்து போகும்!

ஆழிசூழ் இவ்வுலக வாழ்வு ஒரு நாள் - நம்
ஆன்மாவை அலைக்கழித்து எடுத்துக் கொள்ளும்!

எனவே,

ஆழ்கடலின் நன்மை தரும் அருமருந்தாம் - வல்ல
அல்லாஹ்வை தொழுதேற்றி அமைதி காண்போம்!!
ஆக்கம்: இப்னு முஹைதீன்
Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
Balu:
The best one , Vazhga valamudan.
1

July 08, 2008 15:07

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:46 (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம். நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்"" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் நிலையில்லா இம்மை....!
Twitter
RSS
YouTube
English