சத்தியமார்க்கம்.காம்

அச்சமற்றவர்கள்! (நபிமொழி) print Email
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்
வெள்ளி, 22 ஜூன் 2007 20:00

"அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்லர், தியாகிகளும் அல்லர். மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமை கொள்வர்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். (அப்பொழுது) "அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள்" என்று தோழர்கள் கேட்டனர்.

(அதற்கு) நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது; பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள்; இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள்; மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள்"  (என்று கூறி விட்டு), "(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன்) 10:62 வது வசனத்தை ஓதினர்".
அறிவிப்பாளர்: உமர்(ரலி),  நூல்: அபூதாவூத்.
Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
SYED MUSTHAFA.A:
Assalamu Alaikkum (varah) Masha Allah ! ungal sevayai allah porundhikkolvanaga aameen,, ( endha enaya thalam ovvoru manidhanum padikka vendiya pokkisam), Alhamdhu lillah!!! Vassalam
1

June 17, 2008 15:30
0
ameer:
நமது நோக்கத்திற்கு ஊக்கம் அளிக்கும் நல்லதொரு தகவல்
2

July 09, 2009 19:07
0
Mohammed Ghouse:
அஸ்ஸலாமு அலைக்கும்.

முஸ்லிமல்லாதவர்களுடன் நட்பு கொள்வது ஹலாலா, ஹராமா?


3

January 20, 2010 17:56

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English