சத்தியமார்க்கம்.காம்

இளமையில் வறுமை print Email
கதை-கவிதை - கவிதை
திங்கள், 18 ஜூன் 2007 19:11

வறுமையின் நிறம் சிகப்பு என்றால் - அதில்
வாடிடும் இளமையின் நிறம் கருப்பு என்பேன்!
வாழ்க்கையின் இன்பத்தில் உதித்து விடும் - வாளிப்பான
இளமையில் வறுமை கொடிது என்பேன்!

மக்களை ஈன்ற மகிழ்ச்சியிலே - தாயோ - தன்
மடிதனில் சேய் கிடத்திக் கொஞ்சி பசி மறப்பாள் - ஆனால்
பசி தாங்கா சேயோ, பாலுண்ண சேலையை பிடித்திழுக்கும்!
பாழும் வறுமை உலுக்கியதால் பாலுக்கு தாய் எங்கே போவாள்?
வறண்ட காம்பின் சுவையறியா சேயின் வயிறு வற்றிக் காயும்! - இப்படி
ஆண்டுகள் சில கடக்கும்; ஆண் பிள்ளை எழுந்து நடக்கும்!

வறுமையின் போராட்டம் முழு வடிவமுற்று தலை தூக்கும் - பிள்ளை
சோறுண்ணும் வயதில் வீட்டில் சோறும் இல்லை - பெற்றோர்
சோர்விலா உழைப்பை செய்தும் சோறு செய்ய வருமானம் இல்லை
சொந்தத்தில் ஒன்றுமில்லை; சொகுசான வாழ்வுமில்லை,
சுற்றம் யாரும் உதவவில்லை; சுகம் என்பதை கண்டதேயில்லை!

"அம்மா பசிக்குது" என்று அருமை பிள்ளை சொல்லக் கேட்கும்
அன்புநிறை பெற்றோரோ ஏதும் அறியாது கலங்கி நிற்பர்!
அடுத்த வீட்டு செல்வந்தன் பிள்ளை வெள்ளித் தட்டில் அமுதுண்ணும் - அதை
ஆவலாக பார்த்திருக்கும் இந்த வறுமையின் செல்லப் பிள்ளை!
பார்த்திருந்தே பசி மறக்கும் பரிதாபத்தை சொல்ல வேண்டாம்
மண் பானை நீரிருக்கும் அந்த மடமையிலா வயிற்றினுக்கு!

வளமையின் செண்பகப்பூ வறுமைச் சூட்டில் சருகாகும்,
பள்ளி செல்ல நாளும் வரும்; பசியும் உடன் செல்லும்,
பாடங்கள் கேட்பதெல்லாம் பசி வெல்ல மறந்து போகும்,
பல நேரம் உணவின்றி பட்டினியால் வாடிச் சாயும் - இளமையின்
பசித்துன்பம் உலகில் கொடுமையிலும் கொடுமை என்பேன்!

வாழ்க்கையிலே தேக்காய் (தேக்கு மரம்) நெடிதுயரும் மழலை
வறுமையின் சாக்காட்டில் உழன்றதனால் - இன்று
வலுவிழந்த முருங்கையாய் (முருங்கை மரம்) தானுயரா நிற்கிறதே!

ஆற்றல் கொண்ட அரசோரே, அன்பு காட்டி ஆள்வோரே!
வருங்கால உலகத்தை உருவாக்கும் பெரியோரே!
ஆலையின் கரும்பாக ஆட்டி வைக்கும் வறுமையினை
அகற்றுதற்கோர் திட்டம் செய்வீர்; அஃதிலும்
இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்!!

இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்!!
 
ஆக்கம்: இப்னு மொஹிதீன்

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் வறுமையின் வாட்டுதலை வர்ணிக்கும் அருமையான யதார்த்தமான தாக்கம் உள்ள வரிகள் உள்ளத்தினை உருக்கி பிழிகின்றது. //பள்ளி செல்ல நாளும் வரும்; பசியும் உடன் செல்லும், பாடங்கள் கேட்பதெல்லாம் பசி வெல்ல மறந்து போகும்// //வருங்கால உலகத்தை உருவாக்கும் பெரியோரே! ஆலையின் கரும்பாக ஆட்டி வைக்கும் வறுமையினை அகற்றுதற்கோர் திட்டம் செய்வீர்; அஃதிலும் இளமையில் வறுமையினை எப்படியும் விரட்டிடுவீர்// அல்லாஹ் வறுமையில் உள்ளோர்க்கு உதவும் உள்ளமாக(வசதி) உள்ளோர் உள்ளத்தை ஆக்கியருள்வானாக. ஆமீன் மு முஹம்மத்
1

June 18, 2007 21:36
0
abideen-jubil:
assalamu alaikkum ilamail varumai endra thalaipil mega arumayaga oru elaen kudumbathin kumuralai anaithu thara makkalin matthiel konduvandha satiyamarkam matrum endha kavithaiyai uruvakiyavarhalukkum allahuthala erulagilum vetriyai tharuvanaga by -abideen
2

February 14, 2008 11:34
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் ஆபிதீன், சத்தியமார்க்கம்.காம் தளத்தின் முகப்பில் இடப்பக்கத்தின் இறுதியில் தென்படும் 'Tamil Typing' என்ற உதவிப் பலகையில் சொடுக்கி, தமிழில் தட்டச்சப் பழகிக் கொள்ளுங்கள். நன்றி!
3

February 14, 2008 12:18

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:107 நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் இளமையில் வறுமை
Twitter
RSS
YouTube
English