முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

முகப்பு

{mosimage}என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

 

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை

 

அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை

ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

 

நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்

கருத்துக்கள்   
இறை நேசன்
0 #1 இறை நேசன் -0001-11-30 05:53
அல்ஹம்துலில்லாஹ்!

இதோ இஸ்லாம் பட்டைத்தீட்டித் தந்த புரட்சிப்பெண்.

யாரங்கே?
பர்தாவை வைத்து
பொல்லாங்கு கூறும்
பொல்லாத அற்பர்கள் எங்கே? எங்கே?

இதோ உங்கள்
அற்ப மனவக்கிரங்களுக் கு
இஸ்லாம் பர்தாவால் தீட்டிய
சவுக்கடி பதில்கள்.

இனியும் நீங்கள் கூறுவீர்களோ,
அரைகுறையுடன் இறுக்கமாக
அலைவது தான் சுதந்திரம்,
பெண்ணுரிமை என்று?

எனில், அற்பர்களே!
நாக்கை தொங்கவிட்டு
அலையுங்கள் அதற்காகவே - நாங்கள்
கற்களுடனும் நிற்கிறோம் அதற்காகவே!
Quote | Report to administrator
வாசகன்
0 #2 வாசகன் -0001-11-30 05:53
ஒரு குழுமத்தில் இக்கவிதைக்கு ஒரு சகோதரர் அளித்த கருத்து கீழே.

சுப்ஹானல்லாஹ்..
சகோதரியின் கவிதையில் தான் எத்தனை பெருமிதம்..பிறப ்பின் சிறப்பே இந்த ஹிஜாபில் இருப்பதாய் சந்தோசிக்கும் அந்த கம்பீர வார்த்தையைக் காணும் போதெல்லாம் மனம் சிலிர்க்கிறது.. அல்ஹம்துலில்லாஹ ்..

மூடி மறைப்பது கூண்டுக்கிளியா. .? முடியை மறைப்பது அநாகரிகமா..? காட்ட மறுப்பது திணிப்பா.?

சாட்டை வரிகள்.. நெஞ்சைத் தாக்கும் வரிகள்..!

ஹிஜாபின் பெருமையைப் படிக்கும் வேளையில் முன்பு பாலகுமாரன் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.. பெண்கள் வெளியில் செல்லும் சூழ்நிலையும்..அ வர்களின் வேதனையும் பற்றி பாலகுமாரன் எழுதியிருப்பார் .. அதனை பகிர்ந்து கொள்வது பொருத்தமாயிருக் கும் என்று நினைக்கிறேன்..

கொத்திக் கொண்டு போவான்டி
ஆப்பிள் சிவப்பு என் பேத்தி
பாட்டி சொல்வாள் திடத்தோடு
அம்மா விடுவாள் பெருமூச்சு

வெட்டிப் பொழுதைப் போக்காமல்
வேலை தேடேன் எங்கேனும்
அப்பா சொல்வார் தரை நோக்கி
அண்ணன் முறைப்பான் எனைப் பார்த்து

கொத்திக் கொண்டு போவதற்கு
சாதகப் பட்சி வரவில்லை
வெட்டிப் பொழுதின் விழவுக்கும்
வேலை வரலை இது நாளாய்

வேலைத் தேடி எங்கேனும்
வெளியே நடக்க தலைப்பட்டால்
ஈயாய்க் கண்கள் பலமொய்க்க
என்னை உணர்ந்தேன் தெருமலமாய்

(நன்றி: பாலகுமாரனின் கவிதை வரிகளுக்கு)


ஹிஜாப் நமக்கு எந்த அளவு கண்ணியமளிக்கிறத ு என உணர்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம். அல்ஹம்துலில்லாஹ ்..

சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. அல்லாஹ் அவர்களின் ஈருலக வாழ்விலும் கம்பீரமான சந்தோசம் அருள்வானாக..

சகோதரர் இம்தியாஸ் இது போன்ற சிந்தனையாளர்களை வெளிக்கொணர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிற ேன்..

வஸ்ஸலாம்.
.
இஸ்லாமிய சகோதரன் - ஜலால்..
Quote | Report to administrator
வாசகன்
0 #3 வாசகன் -0001-11-30 05:53
குழுமத்தில் பரிமாறிய மற்றொரு சகோதரரின் கருத்து:

அன்பின் சகோதரி.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சல்மாக்களுக்கும் தஸ்லீமாக்களுக்க ும் சேர வேண்டிய கவிதை.. பாராட்டுக்கள்..
எது நமக்கு தொந்தரவாயிருக்க ும் என்று கருதினோமோ அதையே இறைவனின்
திருப்பொருத்தத்திற்காக சந்தோஷமாக மாற்றிக் கொண்டோம் என்று
சொல்லாமல் சொன்ன கவிதை.. உங்கள் இனத்திடமிருந்தே வரும் இந்த
குரல்கள் மகிழ்வைத் தருகின்றன.. மறு மலர்ச்சி என்று சொல்லிக் கொண்டு
சீர்கெட்டு சேற்றில் கிடப்பவர்களுக்க ு இந்த கவிதையில் நல்ல பதில் இருக்கிறது.
வாழ்த்துக்கள் மீண்டும் பாராட்டுக்கள் சகோதரி.. நிற்க..

தங்களின் துபாய் இரவில் பெண்களின் சுதந்திர நடமாட்டம் பொருள்
பற்றிய கவிதை சமீபத்தில் குங்குமம் இதழில் படித்தேன்.. தங்களது வலைப்பூவிலிருந்து
எடுத்து வண்ணக்காகிதத்தி ல் அச்சேற்றியிருந் தார்கள்..சந்தோஷ மாக இருந்தது ..இந்த
சகோதரி எனக்கு மடலாற்குழுவில் நன்கு தெரிந்தவர் என எல்லோரிடமும் காட்டி
சின்னதாய் கர்வப்பட்டுக் கொண்டேன்.. முடிந்தால் அதையும் இங்கு பதியுங்கள்
சகோதரி..

நன்றி
Quote | Report to administrator
Syed Naser
0 #4 Syed Naser -0001-11-30 05:53
இஸ்லாத்தைக் குறை கூற என்ன கிடைக்கும் என்று அலைந்து திரிந்து வெறுத்துப்போய் ஹிஜாப்பை கையில் எடுத்துக் கொண்டு துவேஷத்தோடு அணுகுபவர்களுக்க ு சவுக்கடி அதுவும் ஒரு இஸ்லாமிய பெண் கையினாலேயே அல்ஹம்துலில்லாஹ்

சையது நாசர்.
Quote | Report to administrator
kalam shaick abdulkader
0 #5 kalam shaick abdulkader -0001-11-30 05:53
I agree with Mr. Syed Naser's comments what I was going to tell.
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

வலைக்காட்சி (Live TV)