| சத்தியமார்க்கம்.காம் - ஓர் தன்னிலை விளக்கம் |
|
|
| அறிவிப்புகள் - நிர்வாக அறிவிப்பு | |||
| திங்கள், 07 மே 2007 09:13 | |||
|
அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சத்தியமார்க்கம்.காம் நிர்வாகம், "சமூகத்திற்கு தம்மால் இயன்ற நன்மையை செய்தல், எதுவும் செய்ய இயலாத சூழலில் மவுனமாக இருந்து விடல்" என்ற தனது நோக்கத்தில் மிக உறுதியுடன் உள்ளது. மேலும் இதுவரை இத்தள நிர்வாகம் எந்த ஒரு தனி நபரையோ தனி அமைப்பையோ சாராமல் தூய இஸ்லாம் காட்டும் சத்தியப் பாதையிலேயே நிலையாக நடைபோட்டு செல்கிறது என்பதில் முழு நம்பிக்கையைக் கொண்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் அதில் எத்தகைய சமரசத்தையும் செய்வதான எண்ணமும் இத்தள நிர்வாகத்திற்குக் கிடையாது என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறது.
2. தளத்தில் உள்ள தொடர்பு கொள்ள எனும் பக்கம் மூலம் தளநிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் ஆக்கங்களின் பின்னூட்டங்கள் பகுதியானது வாசகர்களின் ஆர்வம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்க்கவும், சிந்தனைக்கு ஊக்கம் அளிக்கும்படியாக ஆக்கம் தொடர்பான தங்கள் எண்ணங்களைத் தயக்கமின்றி மனம் திறந்து வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காகவே அங்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காத சுதந்திரமான ஓர் சூழ்நிலைக்கு நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. ஆக்கங்கள் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் தவிர வேறு எவ்வகையிலான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆக்கங்களின் பின்னூட்டத்தில் அனுமதியில்லை. அவ்வகையில் பரிமாறப்படும் ஆக்கங்களுக்குத் தொடர்பில்லாத கருத்துக்கள், அவை பயனளிக்கத்தக்கவைகளாக இருப்பினும் கூட எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மட்டுறுத்தினரால் அழிக்கப்படும்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (6)
![]()
நல்ல தரமான பதிப்புக்களை தருவதோடு பணி முடிந்தது என்று நில்லாமல் உன்னதமான எண்ணத்துடன் எதிர் தரப்புக்கருத்துக்களை அறிய நீங்கள் தந்திருக்கும் இந்த பின்னூட்ட வசதியை சிலர் மிஸ்யூஸ் செய்வதை நினைத்தால் வருத்தமாய் உள்ளது.
இனிமேலாவது அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தம்மை திருத்திக்கொண்டால் சரிதான்!
with regards,
Imthiyaz
1
May 07, 2007 16:12
கட்டற்ற சுதந்திரம், கட்டுப்பாட்டுடன் அமைந்த சுதந்திரம் ஆகிய இரண்டில் எது சரியானது?
இஸ்லாத்தின் பார்வையில் இரண்டாவதே சரியானது.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தது மட்டுமின்றி, வாசகர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க மறுக்காத சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
2
May 09, 2007 06:13
Assalamu Alaikkum,
Brother in Islam,
I appreciate your best efforts and Thank to allah for given an opportunity through you to spread Islamic and awareness messages.
I read your impressive self declaration page and I hope you will strict to that.
I hope you will work towards to unite Muslims as bridge not as axe to divide.
I have observed that nowadays non-sense debates are allowed and published at vivatha arangam. This will encourage readers to read about others nasty story than strengthening their beliefs and read your good articles.
I request you to distance yourselves from nasty politics to respect your site’s total efforts.
Regards,
mohammed
3
May 13, 2007 12:00
Assalaamu Alaikkum
Dear Brothers in Satyamargam.com
Your site is too good, I mean this really not just to tell or make you happy by my words.
// I appreciate your best efforts and Thank to allah for given an opportunity through you to spread Islamic and awareness messages.//
//I hope you will work towards to unite Muslims as bridge not as axe to divide//
Alhamdulillah, I totally agree with br Mohammed's all views and concern above,
// I too request you to distance yourselves from nasty politics to respect your site’s total efforts.//
I pray to Allah for his blessings on all of us.
M.S.K.
4
May 14, 2007 05:37
//நல்ல தரமான பதிப்புக்களை தருவதோடு பணி முடிந்தது என்று நில்லாமல் உன்னதமான எண்ணத்துடன் எதிர் தரப்புக்கருத்துக்களை அறிய நீங்கள் தந்திருக்கும் இந்த பின்னூட்ட வசதியை சிலர் மிஸ்யூஸ் செய்வதை நினைத்தால் வருத்தமாய் உள்ளது.//
உண்மைதான்.
நல்லதை நினைத்து. நல்லதே செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
அசலம்
பெஹ்ரேன்
5
June 03, 2007 10:45
நாம் சுதந்திரம் அடைந்த நாளில் இருந்தே அடிமை பட்டுதான் இன்றுவரை இருந்துவருகிறோம் நாம் எத்தனை போரட்டங்கள் செய்தாளும் நம்மை இந்த அரசுகள் ஏறெடுத்தும் பார்பதில்லை மேலும் எந்த ஜனாதிபதி வந்தலும் இந்து சார்பானவராகவே இருக்கின்றார் நாம் இந்தியாவில் ஒற்றுமையாக இல்லாதவரை இல்லாதவரை நம்மால் ஒன்றும் சாதிக்க முடியாது
6
June 25, 2007 19:20
கருத்து எழுதுக :
|