சத்தியமார்க்கம்.காம்

நீதியைத்தேடி..! print Email
கதை-கவிதை - கவிதை
சனி, 05 மே 2007 13:55

கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்
தூரிகை கொண்டு வரையப்பட்ட
ஓவியமோ காவியமோ அல்ல இது!
எங்களது உடலில் இன்னும்
உயிர் உள்ளது என்ற
மறக்கப்பட்ட உண்மைக்கு
எஞ்சியுள்ள ஒரே சான்று!

எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
வேதனையை வெளிபடுத்த இந்த
உள்ளத்திற்கு கண்ணில்லையே,
கண் கட்டப்பட்ட இவ்வுலக
நீதி தேவதையைப் போல்...
ஆகையால்தான் வேதனை, வெளியே
தெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!

வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்
இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,
பானையில் இருந்தால்தானே

அகப்பையில் வரும்? - தற்போது
எங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!
ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்
நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?

இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!
அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லை
சிறு வித்தியாசங்கள் இங்கு பல,
இருவரும் இருக்கின்றனர்
சமமாக!? - இவ்வுலகில்,
நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,
சிறைக்கு உள்ளும், வெளியிலும்!

நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!
"அந்த இனிமையான மணித்துளிகளின்
நினைவுகள் போதும், மீண்டும்
நாம் சந்திக்கும் வரை, அல்லது
சத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''
எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனை
நாட்கள் உதவும் அறியோம் இறைவா!

நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பது
பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவே
என்ற எங்கள் நம்பிக்கையை, உன்
நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதி
இழைக்கப்பட்டோர் உன்னிடம்
எதிர்பார்ப்பை கைவிட்டு
களத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சில
முத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்று
எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!
இப்போது அவர்களின்
எதிர்பார்ப்புகள் அநியாயமாக
மறக்கவும், மறுக்கவும் பட்டு
வேதனை மட்டுமே தொடர்கதையாக!

நீதி தேவதையே, நீ கண் திறக்க
மாட்டாயா என்று கேட்பவர்கள்
குரல் ஓலமாய் மாறும் முன், உன்
நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!
அதுவே உன்னுடைய உடலில்
உயிருள்ளது என்பதற்கு எஞ்சி
இருக்கும் கடைசி வாய்ப்பு!!

 

ஆயிரக்கணக்கானோரை விசாரித்து முடித்தும், தமக்கெதிரான சாட்சியங்கள் ஏதுமில்லா சூழலிலும், வாழ்க்கையை இழந்து விரக்தியின் விளிம்பில் விசாரணைக்கைதிகளாய் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய "நீதியைத் தேடி!" மற்றும் "கைதியின் கதை!" ஆகிய குறுந்தகடுகள் கண்டதால் மனதில் விம்மியெழுந்த எண்ண அலைகளை கவிதை உருவில் இங்கே வெளிப்படுத்தியுள்ளேன் - ஆக்கம்: இப்னு ஹனீஃப்

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
முகவைத்தமிழன்:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நல்ல கவிதை பாராட்டுக்கள. ஆசிரியரை பாதித்த இரண்டு குறும்படங்களும் இணையத்தில் உள்ளன கீழக்காணும் முகவரியில் சென்று காணலாம். 1. ஒரு கைதியின் கதை http://www.tmpolitics.net/tmmedia/mediasteps/taleofprisoner.rm 2.நீதியைத் தேடி... http://www.tmpolitics.net/tmmedia/ctm/ctmshortfilm.rm நன்றி
1

May 06, 2007 10:17
0
Ansar hussain:
Pls send to my mail this al;l matters
2

November 01, 2007 22:52

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் நீதியைத்தேடி..!
Twitter
RSS
YouTube
English