| கோவிலின் மீது தாக்குதல்: ஆறு பேர் கொல்லப்பட்டனர். |
|
|
| செய்திகள் - இலங்கைச் செய்திகள் | |||
| செவ்வாய், 01 மே 2007 11:46 | |||
|
கொழும்பு: இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோவிலின் மீது நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத் தீவுப்பகுதியில் கேத்ஸ் என்ற தீவில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் புலிகள் ஒளிந்துள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கோவிலின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாக இலங்கை இராணுவ அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோவிலில் ஒளிந்திருந்த புலிகளின் யாழ்ப்பாணத்தீவு பகுதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் கொல்லப்பட்டதாக அமைச்சக பிரமுகர் தெரிவித்தார். இச்சண்டையில் கோவில் அதிகாரியும் கொல்லப்பட்டார். அதே சமயம் அரசு நிறுவனங்களின் மீது அதிக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்போவதாக புலிகள் தரப்பில் அறிவிப்பு வெளியானது. கடந்த சில நாட்களில் தலைநகர் கொழும்புவில் உள்ள எண்ணை நிறுவனங்களின் மீது புலிகள் விமான தாக்குதல் நடத்தியிருந்தனர். புலிகளின் விமானத்தாக்குதலில் தீயணைப்பு துறை பகுதி சேதமடைந்ததையொட்டி ராயல் டச் ஷெல்லின் எண்ணை உற்பத்திப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|