சத்தியமார்க்கம்.காம்

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
வியாழன், 29 மார்ச் 2007 05:46

மஸ்ஜிதுந் நபவீண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.

 

அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.

 

நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில்  அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

 

ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

 

ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு 'மீலாது நபி'யும் இடம் பிடித்துள்ளது.

 

"நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்ற ஒரு கருத்தும், "நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்" என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

 

மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் "மீலாதுக் கொண்டாட்டம்" என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.

 

மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

 

ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் - முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் - நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

 

மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.

 

து இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:

"கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).

 

இதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,

"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3) என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.

இது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள்  அமைகின்றன.

 

மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்" என்பதாகும்.

 

ஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.

 

இன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.

 

இவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.

 

மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.

 

ஆனால் அவரது பதிலிலேயே, "சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது" என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

 

நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.

 

நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.

 

ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் ... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

 

ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)

Trackback(0)
கருத்துக்கள் (24)add comment
0
siddiqi:
Assalamo alykkum highly informative & useful. This is a 'must-know' issue by many of muslim brothers. appreciating your timely issues! -sitwat siddiqi
1

March 29, 2007 09:13
0
SYEDALI:
bismillahirrahumanirraheem a very good timing article.
2

March 29, 2007 09:31
0
ஜெஸிலா:
//அரபு நாடுகளில் 'மீலாது' என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை// இங்கு துபாயில் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீலாத்தை முன்னிட்டு 'இமான்' என்ற இஸ்லாமிய அமைப்பு துபாயில் பேச்சுப் போட்டிகள் நடத்தி வருகிறது. இப்படி செய்வதன் மூலம் நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நிறைய அறிந்துக் கொள்ள முடிகிறது. நபிகளை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க முதலில் அவர்களைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும். எத்தனைப் பேர் புத்தகங்களும் ஹதீஸ்களும் வாசிக்கிறார்கள்? அதனால் இத்தகைய பேச்சுப் போட்டி அவசியமே. இதில் இமாம்களும் ஹாபீஸ்களூம் தான் நடுவர்கள் ஆகையால் தவறான கூற்றுப் பேசப்பட்டால் அந்த இடத்திலேயே திருத்தியும்விடுகிறார்கள். //மீலாது கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை முக்கியமானவைகளாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் மாற்று மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.// முற்றிலும் சரி. இதெல்லாம் வேற்று ஜனங்களைப் பார்த்து ஆரம்பித்த செயல்கள்.. நல்ல கட்டுரை.
3

March 29, 2007 10:09
0
மு முஹம்மது:
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான ஆக்கம் //இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு மாற்றுமத கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களின் பட்டியலோடு இந்நாளும் இடம் பிடித்துள்ளது// மேற்கண்ட வரிகளை படித்த போது கண்கள் கசிந்தன. நபி (ஸல்) அவர்கள் மீது அன்பை வெளிபடுத்துபவர்கள் இது போன்று அவர்கள் பெயரால் ஒரு நாள் விழா எடுத்து பேசி மறப்பது அவருக்கு புகழை சேர்க்காது, நபி(ஸல்) அவர்கள் கண்ணியம் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கோ நினைவு கூர்வதற்கோ அல்ல அன்றாடம் பேசப்பட்டும் செயல் படுத்தப்ப்ட்டும் வர வேண்டிய உன்னத வாழ்க்கை களஞ்சியம் என்பதை அனைவரும் உணர்ந்து நபி(ஸல்) அவர்கள் புகழ் என்றென்றும் ஓங்கிட அல்லாஹ் அருள் செய்ய வேண்டும்.
4

March 29, 2007 15:33
0
இப்னு முஹம்மது:
அஸ்ஸலாமு அலைக்கும் மீலாது ஆக்கத்திற்கு தங்கள் மேலான கருத்துக்கள் வழங்கிய, கண்ணியத்திற்குரிய சித்திகீ,ஸைய்யத் அலி, மற்றும் துபையில் விடுமுறை உள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜெஸிலா அவர்களுக்கும் நன்றிகள், ஜஸாக்கல்லாஹு கைரன்.வாசகத்தில் தேவையான மாற்றங்கள் செய்ய நிர்வாகிகளிடம் அன்புடன் கோருகின்றேன். அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலியும் நல்லருளும் புரிவானாக,,, ஆமீன், இப்னு முஹம்மது.
5

March 30, 2007 20:15
0
பிலால்:
//இங்கு துபாயில் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீலாத்தை முன்னிட்டு 'இமான்' என்ற இஸ்லாமிய அமைப்பு துபாயில் பேச்சுப் போட்டிகள் நடத்தி வருகிறது. இப்படி செய்வதன் மூலம் நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நிறைய அறிந்துக் கொள்ள முடிகிறது. நபிகளை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க முதலில் அவர்களைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும். எத்தனைப் பேர் புத்தகங்களும் ஹதீஸ்களும் வாசிக்கிறார்கள்? அதனால் இத்தகைய பேச்சுப் போட்டி அவசியமே. இதில் இமாம்களும் ஹாபீஸ்களூம் தான் நடுவர்கள் ஆகையால் தவறான கூற்றுப் பேசப்பட்டால் அந்த இடத்திலேயே திருத்தியும்விடுகிறார்கள். // நல்லதோர் முன்மாதிரி. தற்காலத்தில் முஸ்லிம்கள் கருத்தொற்றுமையுடன் ஒன்று கூடுதல் மிக்க அவசியமாகிறது. அதற்கு இது போன்ற தருணங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாம் அனுமதிக்கும் வழிகளில் இஸ்லாமிய வரலாற்றை பிரச்சாரம் செய்யும் விதத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில் தவறில்லை. ஆனால் இந்தியாவில் இஸ்லாத்திற்கு எதிரான 'மௌலிது, ஊர்வலம்' போன்றவை நடத்தப்படுவதன் மூலம் இஸ்லாத்திற்கு களங்கம் விளைவிக்கின்றனர்.
6

March 31, 2007 14:03
0
நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்):
சகோதரரி ஜெஸிலா அவர்கள், துபாயின் மீலாத் விழாவிற்கான அரசு விடுமுறை பற்றி சுட்டிக்காட்டியிருந்த தகவலை உறுதிப்படுத்திக் கொண்டோம். அதற்காக அவருக்கு எம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இவ்வாக்கத்தில் பதிவாகியுள்ள அனைத்து பின்னூட்டங்களும் ஆக்கத்தில் எப்போதும் இணைந்திருப்பதாலும், ஆக்கத்தில் திருத்தம் செய்தால் இவ்விஷயமாக பேசப்பட்ட பின்னூட்டங்கள் அர்த்தமற்றுப் போகலாம் என்பதாலும், கட்டுரையாளர் சகோதரர் இப்னுமுஹம்மத் அவர்கள் கேட்டிருந்தபடி இதற்கான மாற்றங்களை 'ஆக்கத்தில்' நேரடியாகச் செய்ய வேண்டியதில்லை என்று கருதுகிறோம். தங்களின் எண்ணங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்) ____________________________
7

April 01, 2007 07:51
0
Muhammed Khaleel:
Asalaamu Alaykum Brothers and sisters in Islam ! Further to the points mentioned in the article, I would like to share some more points on this topic 'Meelaadun-Nabi'. As we are aware that the risk on any kind of innovation in Islam outside Sharia is totally unacceptable and it leads the way to ignorance and supersitions. In the case of Meelaadun-Nabi celebrations, we see no of rituals in the name of Islam and the Holy Prophet are being staged apart from the fact. Among believers, It is an opportunity to review our own actions in accordance with the life of our Holy Prophet PBUH. Towards non-muslims, our responsibility is to give Dahwah and invite all of them in the way of Holy prophet PBUH. As I am aware that the countries like Sri Lanka where the Muslims are minorities has one day as public, Bank holiday which has to be used by Muslims for the sake of Dahwah on various levels such as organising exhibitions and seminars, multi-faith get together, public meeting with intellctuals and politicians etc. Unfortunately and sadly, we see these days that we are humiliating ourselves and degrading our values just by wasting time on discussing weather it is allowed or not. My point is clear that when we are given an opportunity to do something good for the sake of Allah SWA by the non-muslims, it is our resposibility to think and plan in order to convey 'The Message' to the non-believers. End of the day we all should make sure that no house of the non-believer is left without reaching the message. It is being said that if the companions of the Holy Prophet are alive today, they would have flooded the world with the copies of Holy Quran by using all morden science and technical means.
8

April 03, 2007 19:18
0
M.Muhammed:
Assalaamu Alaikum A very well explained, thought provoking and enlightening article. Alhamdulillah. Dear Muslim Ummaah its time we understand that Prophet Muhammad (PBUH) was the last messenger with a mission for revival of 'Islam' sent by Allah thru all prophets for mankind whenever it deviated from true path of Allah 'Islam'. Dawah is a basic and prime duty of every muslim to invite mankind (irrespective of muslim or nonmuslim) to the Quran & Sunnah of Prophet Muhammad (pbuh).without adding or violating it. Dawah should be done not on special occassions only but it has to be done every minute possible, every day,week,month or year... throughout. by acts deeds and all possible means,without innovating things other than from Quran and Sunnah as good innovation. Dawah should be done based on Quran and Sunnah and not based on innovations(which has been warned by Allah's messenger as they will take us to the hellfire) Any country there is always ways and means of doing perfect Dawah as shown by messenger(pbuh) and the Companions(Sahaabas R.A).Even in many parts of India there are regular weekly Dawah work going on without on any significant day and there is always Ramadahan and Bakrid Idd Milan programmes being carried as get together with nonmuslims in all these programmes on a regular basis. May Allah help us all to understand the true message of Allah as explained by our beloved messenger sent for whole mankind, accept our deeds and bless us all forever by his grace. Ameen
9

April 04, 2007 20:36
0
Akram-Srilanka:
kPyhj; tpohit ,ghjj;jhf vtUk; fUJtjpy;iy> vdNt ,];yhj;ijg;gw;wp njupe;J nfhs;tjw;fhd xU mUikahd re;jHg;gkhf mjidf; ifahs;tjpy; ve;jj; jtWk; ,y;iy> nfhz;lhl;l Kiwikapy; khj;jpukd;wp `uhk;fs; vq;F fhzg;gl;lhYk; mit jLf;fg;gl Ntz;baNj> mjdhy; me;j Kiwik KOikahf ,y;yhky; nra;ag;gl Ntz;bajpy;iy.
10

July 27, 2007 02:30
0
எழுத்துரு உதவி நண்பர்:
மேலே ஸ்ரீலங்காவிலிருந்து பின்னூட்டமிட்ட அக்ரம் என்ற சகோதரரின் பின்னூட்டம் யுனிகோடில் தரப்பட்டுள்ளது...... மீலாத் விழாவை இபாதத்தாக எவரும் கருதுவதில்லை, எனவே இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பமாக அதனைக் கையாள்வதில் எந்தத் தவறும் இல்லை, கொண்டாட்ட முறைமையில் மாத்திரமன்றி ஹராம்கள் எங்கு காணப்பட்டாலும் அவை தடுக்கப்பட வேண்டியதே, அதனால் அந்த முறைமை முழுமையாக இல்லாமல் செய்யப்பட வேண்டியதில்லை.
11

July 27, 2007 11:44
0
M.S.K.:

// மீலாத் விழாவை இபாதத்தாக எவரும் கருதுவதில்லை, எனவே இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பமாக அதனைக் கையாள்வதில் எந்தத் தவறும் இல்லை, //

மீலாதோ அந்த விழாவில் ஆற்றப்படும் ஆதாரமற்ற உறைகளோ, அதை முன்னிட்டு செய்யப்படும் மௌலூது பாத்திஹா சடங்குகள் என்ற அனைத்தும் ஆதாரமற்ற கற்பனைகள் கதைகள், மற்றும் ஷிர்க்கான கருத்துக்கள் என்பதோடு இது நபிவழியல்ல ஸுன்னத்தான ஒரு காரியம் அல்ல நபி ஸல் அவர்களை உயிருக்கு உயிராக மதித்த நபித்தோழர்கள் செய்யாத ஒரு காரியம், மேலும் இஸ்லாம் மார்க்கம் ஒரு நாளை நாமாக தேர்வு செய்து இப்படி சிறப்பிக்க அனுமதியளிக்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்.

இஸ்லாத்தைப் ப‌ற்றி ஆண்டில் ஒரு நாளோ, ஒரு சில‌ நாட்க‌ளோ இவற்றில சில போட்டிகளுக்காகவோ அல்ல, அன்றாட‌ம் தெரிந்து கொள்ள‌ முய‌ல‌ வேண்டும். அதி படிப்பினை பெற்று வாழ்க்கையை அமைத்திட வேண்டும்.

இன்று அதற்கு புத்தகங்கள், கேஸட்டுகள் ,குறுந்தகடு ஆடியோ வீடியோ, சீடீக்கள், நேரடி தொலைகாட்சிகள், இணையதளங்கள் என ப‌ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌. அவ‌ற‌றின் மூல‌ம் ப‌ய‌ன் பெறுவதே ஆதாரமற்ற பித் அத்தான காரியங்களில் ஈடுபட்டு அமல்களை அழிப்பததை விட( பார்க்க அல் குர் ஆன் 47 : 33, 18 :102‍ முதல் 110‍‍ ‍) சிறந்த்தும் முறையான‌தும் அல்லாஹ்வின் பொருத்த‌த்தை பெற்று த‌ர‌க்கூடியதுமாகும் என்ப‌தில் ஐய‌மில்லை.

அல்லாஹ் இவற்றை உணர்ந்திட அனைவருக்கும் அருள் புரிவானாக... ஆமீன்

12

February 25, 2010 21:58
0
aboo hudhaif:
கொண்டாடப்படுவது பிறந்த தின விழா அல்ல.இறந்த தின விழா.காரணம் சந்தேகத்திற்கிடமின்றி எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம் அல்லா‍ஹ்வின் இறுதித்தூதர் இறந்த தினம் ரபீவுல் அவ்வல் 12ஆகும் என்பதுவே.ஆனால் பிறந்த தேதியில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கிறார்கள்.சிலர் 12 என்றும் சிலர் 9 என்றும்,சிலர் 10 என்றும் கூறுகிறார்கள்.ஆனாலும் பெரும்பாலானோரின் கருத்து ரபீவுல் அவ்வல் 9என்பதாகும்.ஆகையால் மீல்லாதுன்னபியை கொண்டாடவில்லை.மெளதுன்னபியை தான் கொண்டாடுகிறார்கள்.மேலும் துபாயில் என்னதான் அப்படி மார்க்கத்துக்கு ஆதரவான காரியங்கள் நடக்கின்றன?எல்லாமே மார்க்கத்துக்கு புறம்பான காரியங்கள் தான் அங்கு அரங்கேறுகின்றன.பத்தோடு பதினொன்னாக இதுவும் நடக்கிறது.துபாயில் ஒரு நல்ல இஸ்லாமியிஸத்தை எதிர் பார்க்க முடியாது.ஹிந்துயிஸமும் தரீகாயிஸமும்,ஷைத்தானியயிஸமும் தான் அங்கு கொடிகட்டிப்பற‌க்கும்.
13

February 27, 2010 01:10
0
M.Mohamed Abbas:
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்,

அபூலஹப் மரணித்த பின் அவரை கனவில் காணப்பட்டது. அவரிடத்தில் உங்களின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. நான் நரகத்தில் இருக்கின்றேன், நபி(ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை எனக்கு துவைபா அம்மையார் அவர்கள் நற்செய்தி கூறியதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பெண்மணி பாலூட்டியதாலும் அப்பெண்ணை நான் உரிமையிட்டிருந்தேன். அதனால் ஒவ்வொரு திங்கட் கிழமையும் என் விரல்களுக்கு மத்தியிலிருந்து விரல் நுனியளவு கொட்டும் நீரை நான் உறிஞ்சி குடிக்கின்றேன் என்றார். காஃபிரான, இறைவனால் சபிக்கப்பட்ட ஒருவர் நபி(ஸல்) அவர்கள் பிறந்ததை பற்றி சந்தோஷம் அடைந்ததால் அவருக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டதென்றால், உண்மையான ஒரு முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதால் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம்..(இப்னு ஸஃது(ரஹ்) தபகாத், அப்துல்லாஹ் இப்னு அப்தில் வஹ்ஹாப்(ரஹ்), இப்னுல் ஜவ்ஸி(ரஹ்)
14

February 27, 2010 09:51
0
M. அப்துல் ஹமீத்:
வ அலைக்குமுஸ்ஸலாம்

அன்பு சகோதரர் அப்பாஸ் அவர்களே

இஸ்லாமிய் மார்க்கம் என்பது அல்லாஹ் குர் ஆனில் ஏவியது அதை இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் விள்க்கி நடைமுறைப் படுத்திக் காட்டியது. இதில் அல்லாத மற்ற விஷயங்கள் காரியங்கள் செயல்கள் அது யாரால் கூறப்பட்டாலும் அது எந்த நூலில் இருந்தாலும் அது மார்க்கம் ஆகாது. இந்த அடிப்படையை கவனத்தில் கொள்வது ஒவ்வொரு உண்மையான முஸ்லிம் மீதும் கடமை ஏனென்றால் நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது இறுதி பேருரையில் உங்களிடம் இரணடை விட்டு செல்கிறேன் அவற்றை பற்றிப் பிடித்து இருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள் அவை அல்லாஹ்விம் வேதமாகிய குர் ஆன் மற்றொன்று எனது வழிமுறை( ஸுன்னத்)கள். என்று கூறினார்கள்.

ஆக‌ ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறாத‌ ஒன்றை யார் கூறினாலும் ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌தில்லை. அதுவும் மீலாது கொண்டாடினால் சுவ‌ன‌ம் கிடைக்கும் என்ற‌ வ‌ழி ஒன்று இருக்கும் என்றால் அது நபி ( ஸல்) அவர்களுக்கு தெரியவில்லை அல்லது அதை ந‌பி( ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌ற‌ந்து விட்டு அல்ல‌து ம‌றைத்து விட்டார்கள் ( நவூதுபில்லாஹ்) அதை தாங்க‌ள் மேலே குறிப்பிட்ட‌ அறிஞ‌ர்க‌ள் ஆராய்ந்து க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள் என்று கூற‌ வ‌ருகிறீர்களா?

ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ள் செய‌ல் ப‌டுத்திடாத‌ ஒன்று மார்க்க‌த்தில் உருவாக்குவ‌து பித்தத், அனைத்து பித்தத்களும் வ‌ழி கேடுகள் என்றும், வ‌ழிகேடுக‌ள் நரகத்தில் சேர்க்கும் என்ற நபிமொழி தங்களுக்கு தெரியவில்லையா? அல்லது அதை உதாசீனப்படுத்துகிறீர்களா?

அல்லாஹ் ஏவிய கடமைகள் அனைத்தும் முறையாக நிறைவேற்றிய கால்க‌ள் வீங்க‌ இர‌வு தொழுகை தொழுத‌ முன் பின் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப் பட்ட‌ ந‌பிக‌ள் நாய‌க‌ம் முஹ‌ம்ம‌து(ஸ‌ல்) அவ‌ர்கள்( உட்பட) எவ‌ரும் த‌ம‌து அம‌ல்க‌ளுக்கு ப‌க‌ர‌மாக‌ சுவ‌ன‌ம் செல்ல‌ முடியாது அல்லாஹ்வின் அருள் இருந்தாலே த‌விர‌ என்று கூறியுள்ள‌ போது.... // மீலாது கொண்டாடினால் சுவ‌ன‌ம் கிடைப்பது நிச்சயம் // என்ப‌து எவ்வ‌ளவு பெரிய .தவறான, அறியாமையான‌ கூற்று.

இது போன்ற‌ ஆதார‌ம‌ற்ற‌ வ‌ழிகேடுக‌ளிலிருந்து முஸ்லிம்க‌ளை அல்லாஹ் பாதுகாப்பானாக‌.

15

February 27, 2010 22:16
0
syed:
இப்னு முகம்மத் கணீப் உன் ஷைத்தானின் திருவிளையாடல் (கதை) யை அடிமுட்டால்கள்தான் நம்பி ஏமாருவார்கள்.
பொய்யை அல்லி வீசி அரியாத‌ ம‌க்களை ஏமாற்றும் உன் போன்ற கூட்டங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாக‌ட்டும்.

என் இனிய த‌மிழ் நாடு சமுதாயமே????????????????? சிந்தியுங்க‌ள்

இல்லா விட்டால் அடிமுட்டால்க‌ள் த‌லைவ‌ராகுவார்கள்.

தொடரும்//////////////////////////////
16

February 28, 2010 17:49
0
சஃபி:
மீலாது விழா என்பது எப்படி ஆரம்பித்தது?

ஆக்கில் முஸம்மில் என்பவர் தனது வலைப்பூவில் கூறுகிறார்:

"மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)

ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது"

அந்தப் பக்கம் : http://tamilislam25.blogspot.c..._8551.html
17

February 28, 2010 19:03
0
aboo hudhaif:
சகோதரர் அப்பாஸ் அவர்கள் மற்றவர்களின் வாதத்தை தன்னுடைய வாதமாக சொல்கிறார் என்று நினைக்கிறேன்.இதனால் தெளிவு பெற வசதியாக இருக்கும் இல்லையா?மற்றபடி அவருக்கு இது கூடாது என்று நன்றாக தெரியும்.
18

February 28, 2010 22:15
0
Mohamed Rucknudeen:
அஸ்ஸலாமு அலைக்குமு்.
இஸ்லாத்தில் மேலே சொன்னது போல் இரு பெருநாட்கள் தான் (ஈதுல் அத்ஸா, ஈதுல் ஃபித்ர்). இது தவிர எந்த வித விழாவும் இல்லை. பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே யூதக் கலாச்சாரம். ”யார் மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் இல்லை” என்பது நபி மொழி. அவ்வாறு கொண்டாட வேண்டும் என்றால் நான்கு கலீஃபாக்கள் காலம் முதல் ஒன்றும் இல்லை. பின்னால் வந்தவர்களால் உருவாக்கப்பட்டது மார்க்கத்தில் பித்அத். ஒவ்வொரு பித்அத்தும் வழிக்கேடே. அனைத்தும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்.நவூதுபில்லாஹ். அல்லாஹ் இஹ்தீக்கும்.
19

February 28, 2010 23:40
0
மஸ்தூக்கா:
சகோதரர் முஹம்மது அப்பாஸ் அவர்களே

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

என்று திருமறை குர்ஆன் (111‍:1) கூறுகின்றது.
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடையட்டும் என்று அல்லாஹ்வே கூறிவிட்ட பிறகு விரல்களிலிருந்து நீர் சுரப்பதாகவும் அதை அருந்திக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறீர்களே. இந்தக் கட்டுக்கதையை காப்பியடிக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது?
அபூலஹபின் விரல்கள் கையில் இல்லாமல் முதுகிலா இருக்கின்றன?

//உண்மையான ஒரு முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதால் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம்.//

நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஒன்றை செய்தால் சுவர்க்கம் அல்ல நரகம் கிடைப்பது நிச்சயம் என்பதை நினைவில் வையுங்கள்
20

March 01, 2010 01:23
0
M.Mohamed Abbas:
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்,

சகோதரர்கள் அவர் அவரது வாதத்தை வைத்தார்கள் நல்லது. நான் மீலாது விழா கொண்டாடலாம் என்று சொன்னால், உடனே ஒரு கேள்வி கண்டிப்பாக வரும், நபி(ஸல்) அவர்கள்ப் பின்பற்றிய நான்கு கலீப்பாக்கள் செய்தார்களா அல்லது சகபாக்கள் செய்தார்களா? அல்லது தாபின்கள் செய்தார்களா? அல்லது தபதாபின்கள் செய்தார்களா? என்று அருமையாக கேள்வி வைப்பார்கள், சரியான கேள்வி.கேட்பது நியாமானது.,
அவ்வாறு கேட்கும் மீது நெஞ்சை உருக வைக்கும், கலீபாக்கள் மீதும், இன்னும் மற்ற நபித்தோழர்கள் மீதும், தாபின்கள் மீதும், தபதாபின்கள் மீதும் இவ்வளவு பாச வைத்துள்ளார்களா? என்று கண்களில் கண்ணீர் வரவழைக்கும். பிறகு தான் சில கேள்விகள் கேட்டால் அது பாச கண்ணீர் அல்ல, வேச கண்ணீர் அல்லது விதாண்டவதம் கண்ணீர் என்று தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வழியிலேயே வருவோம் அது பாசமா? அல்லது வேசமா?
அதற்கு பிறகு சரி சகோதரரே நான்கு இமாம்கள் தாபின்களும்,தபதாபின்களும் ஆவார்கள், அவர் சொன்னதை செயல்படலாம் என்று கேட்டால், இமாம்களா? இமாம்களை பின்பற்ற கூடாது உடனே ஒரு பதில் வரும்.
அடுத்தது சகபாக்களை பின்பற்றலாம் என்று சொன்னால், சகபாக்களா?(ஹதிஸ் விளக்கம்) சகபாக்களைப் பின்பற்ற மாட்டோம் என்று உடனே ஒரு பதில் வரும்.
அடுத்தது நான்கு கலீபாக்கள் பின்பற்றலாம் என்று சொன்னால்(முத்தலாக்,தராவிஹ்,ஜும்மா பாங்கு..), நான்கு கலீபாக்களை பின்பற்ற மாட்டோம் என்று உடனே பதில் வரும்.
இதுதான் சில காலமாக நடக்கிறது.
சரி செய்திக்கு வருவோம்:
நான் மேற்பதித்தவை ஆதாரபூர்வமான வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டவை, இதில் சிறிய கருத்து வேறுபாடு உள்ளது, இமாம் இப்னு ஸஃது(ரஹ்) தவிர மற்றவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்கள் பிறந்த செய்தி கேட்ட உடன் அபுலஹப், துவைபா அம்மையாரை விடுதலை செய்தான் என்ற ஆதரபூர்வமான வரலாற்று ஏடுகளில் உள்ளது. இந்த செய்தியை முதலின் நான் http://www.islamkalvi.com/portal/?p=42 எடுத்தேன்.
முதலில் வாசித்த உடன் நானும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தேன், பிறகு இமாம்விடமிருந்து செய்திகளைப் படித்த பின்பு தான் அதை சரி செய்து கொண்டேன். அதற்கு தான் நான் அது விவாதப் பொருளாக பதித்துள்ளேன். இன்சா அல்லா இதை எடுத்து விவாதம் பண்ணுவோம் சரியாக இருந்தால் எடுத்து கொள்வோம், தவறாக இருந்தால் விட்டுவிடுவோம், ஏனென்றால் ஒரு ஆதாரபூர்வமான வரலாறு நம்முடைய விதண்டவாதத்தினால் அழிந்து போக கூடாது


21

March 01, 2010 10:32
0
M.A. Abdullah :
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் சைய்யத் அவர்களே

அய்யோ பாவம்.... தாங்கள் ஏன் இப்படி ஆத்திரப் படுகிறீர்கள், தெரியவில்லை அல்லாஹ் தங்களுக்கு அருள் புரியட்டும்.

// என் இனிய த‌மிழ் நாடு சமுதாயமே????????????????? சிந்தியுங்க‌ள் //
நபி வழி, ஸுன்னத், குர் ஆன் ஹதீஸ் என்று ஆதாரம் காட்டி வாதம் வைக்க இயலவில்லையெனில் உங்கள் வாதத்தை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது காலம் மாறிவிட்டது, அல‌ஹ‌ம்துலிலாஹ்...

ஆகையால் இது போன்ற‌ ப‌ய‌ன‌ற்ற‌ புல‌ம்ப‌ல்களையயும்
சபித்தல்களையும் விட்டு விட்டு அல்லாஹ்விட‌ம் தவ்பா செய்து நபிவழியின் படி வாழ மீளுங்கள், தங்களுக்கும் தங்களைப் போன்றவர்களுக்கும் இன்னும் நம் அனைவருக்கும் அருள் புரிந்து நேர்வ‌ழிகாட்ட அல்லாஹ் போதுமான‌வ‌ன்.



// இல்லா விட்டால் அடிமுட்டால்க‌ள் த‌லைவ‌ராகுவார்கள் //

குர் ஆன் ஹ‌தீஸ் ந‌பி வ‌ழி ஸுன்ன‌த் என்ப‌தை பின்ப‌ற்ற‌ கூறும் ஒருவ‌ர் த‌ங்க‌ள் இந்த‌ சான்றித‌ழுக்கு த‌குதியுடைய‌வ‌ர் அல்ல.
இது யாருக்கு பொருந்தும் என்ப‌தை அல்லாஹ் ந‌ன்க‌றிவான்.

மேலும் தங்கள் பெயரில் உள்ள சைய்ய‌த் என்றால் த‌லைவ‌ர் என்று ஒரு பொருள் உள்ள‌து என்பதை மட்டும் இங்கு தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

22

March 01, 2010 18:05
0
இப்னு முஹம்மத்(ஹனீஃப்):
அன்புச் சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.

ஆக்கத்தில் பின்னூட்டமிட்டு, அழகிய கருத்து பரிமாற்றங்கள் செய்த அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹு கைரா.

ஒருபுறம் ஈமான், அகீதா, தொழுகை, ஜகாத், ஹலால் ஹராம், போன்ற முக்கியமான அடிப்படையான விஷயங்களை, கடமைகளை மறந்து வாழ்வது முதல் ஏனைய அனைத்து தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்கி கிடப்பது மூலம் நரகத்தின் பக்கம் செல்ல வழி வகுப்பது.......,

மறுபுறம் மார்க்க அங்கீகாரமில்லாத சடங்குகளிலும் அல்லாஹ்வின் அருட்களை சமுதாயம் விரயமாக்கிடும் மாயைகள் மற்றும் ஷிர்க், பித்ததத் போன்ற அனைத்து வழிகேடுகளில் மூழ்கிகிடப்பதன் மூலம் நரகத்தினை நெருங்கிட வழி வகுத்து கொள்வ‌து.... நவூதுபில்லாஹ்....

இவற்றிலிருந்து உலக முஸ்லிம் சமுதாயத்தை, அல்லாஹ் பாதுகாத்து, நேர்வழி பெற அருள் புரிந்து, இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் அளித்திட துவா செய்வோமாக.

// நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக //
ஆமீன்



23

March 01, 2010 19:07
0
M. Abdul Hameed.:
வ அலைக்குமுஸ் ஸலாம்

// .........இதுதான் சில காலமாக நடக்கிறது. //

சகோதரர் அப்பாஸ் அவர்கள் சில கருத்துக்களை வைத்து.. இது பாசமில்லை வேசம்...இது தான் சில காலமாக நடக்கிறது என்று முடித்துள்ளீர்கள்.

கைர் தங்கள் கூற்று படி குர் ஆன் மற்றும் நபி வழியை மற்றும் பின்பற்ற வேண்டும் என்பவர்கள் தாங்கள் கூறியது போல் மழுப்புவார்கள் என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் உண்மை அவ்வாறில்லை அலாஹ்வினால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தில் நபிமார்கள் உட்பட எவருடைய சுய கருத்துக்களும் மார்க்கம் ஆக அங்கீகரிக்கப்படாது என்பதையே நபிமார்கள் உட்பட தாங்கள் சுட்டி காட்டிய ஸஹாபாக்கள் , கலீஃபாக்கள் மற்றும் இமாம்கள் போதித்டும் ஏவியும் உள்ளார்கள். அதையே ஒவ்வொரும் உண்மையான முஸ்லிமும் கூற வேண்டும் கடைபிடைக்க வேண்டும்..

இங்கு யார் கூறுகிறார்கள் என்பதை விட என்ன கூறப்படுகிறது எனும் அடிப்ப்டையிலேயே எவர் கூற்றும் ஏற்கவும் மறுக்கவும் பட வேண்டும். இதுவே இமாம்கள் உட்பட அனைத்து நல்லடியார்களின் கூற்றும் வழியும் ஆகும்.

இதையே குர் ஆன் நபி வழியை பின்பற்ற வேண்டும் என்பவர்கள் கூறுவார்கள் கூற வேண்டும்.
மற்றபடி நபி வழி ஆதாரமற்ற எவர் கூற்றுக்கும் மார்க்க அந்தஸ்து அளிக்க இடமில்லை என்பதையே இவர்கள் கூறுவார்கள். நடு நிலையாக சிந்தித்தால் தாங்களும் இதை விளங்க இயலும். அல்லாஹ் அருள் புரிவானாக.
24

March 02, 2010 13:18

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
Twitter
RSS
YouTube
English