சத்தியமார்க்கம்.காம்

பொன்.....! print Email
கதை-கவிதை - கவிதை
திங்கள், 19 பிப்ரவரி 2007 18:04

முத்திரை பசும்பொன் மட்டுமா உலகில் பொன்? இல்லை இல்லை.....
முகில் கிழக்கும் ஆதவனின் மூலக்கதிர்கள் அனைத்தும் பொன்னே!

வெள்ளி நிலா ஒளியும் பொன்னே! விடியும்வரை
வெள்ளமென கண் சிமிட்டும் தாரகையும் பொன்னே!

வற்றாத ஜீவ நதிகளும் பொன்னே! வரு மழையும் பொன்னே!
இல்லை இல்லை என்று சொல்லாத எல்லா இதயங்களும் பொன்னே!

வள்ளலாய் நின்று வறியோர்க்கு வாரித்தரும் கரங்களும் பொன்னே!
பள்ளமிலா சமுதாயம் பரிமளிக்க செய்பவனும் பொன்னே!

மழலைகளின் கள்ளமிலா சிரிப்பொலியும் பொன்னே!
ஏழைகளின் துள்ளல் பசிக்கு உணவளிக்கும் மனித நேயமும் பொன்னே!

விதவைக்கு வாழ்வளிக்கும் விவேக ஆடவரும் பொன்னே!
உதவிக்கு ஓடிவந்து உற்றதை செய்பவரும் பொன்னே!

மதவெறி கொல்லுகின்ற மக்களும் மாசறு பொன்னே!
இதமாக பேசி இன்னல் களைபவரும் நாட்டின் பொன்னே!

பெண் சிசுவை கொல்லாத பெற்றோரும் உலகில் பொன்னே!
பெண்மை போற்றி பெருமை சேர்த்தலும் பொன்னே!

உவமையாய் திகழ்ந்து உண்மை பேசுகின்ற உத்தமர்கள் நாட்டின் பொன்னே!
உள்ளமெலாம் மகிழ்ந்திடவே கற்பை போற்றும் காரிகையும் பொன்னே!

கர்ம வீரனுக்கு காலமும் பொன்னே! அவன் செய்யும்
கடின உழைப்பும் பொன்னே! கடமை உணர்வும் பொன்னே!

கட்டுப்பாட்டில் உள்ள நல்ல குடும்பமும் களிப்புறு பொன்னே!
கவிஞர்களின் கவிதை சுரக்கும் மணற்கேணி மனமும் பசும் பொன்னே!

இறையோன் நமக்களித்த இஸ்லாமும் பொன்னே! வல்லோன் அவன் படைத்த

இயற்கை அனைத்தும் பொன்னே! இதமான தென்றலும் பொன்னே!

ஆக்கம்: அபுயாசின்

Trackback(0)
கருத்துக்கள் (5)add comment
0
jafarall:
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!!
1

February 20, 2007 02:54
0
Abdul Ghani:
Intha Kavithaiyyum Ponne
2

February 20, 2007 05:14
0
Mohammed Siajudeen:
பொன்னிலும் இத்தனை வகையுண்டா? மனிதர்களாகிய நாம் தான் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பொன் என்கிறோமோ?
3

February 20, 2007 06:07
0
முஷ்தாக் முஹம்மத்:
அல்ஹம்துலில்லாஹ் ''பொன்''னை விட பன்மடங்கு விலையுயர்ந்த வாசகங்கள். முஷ்தாக் முஹம்மத்
4

February 20, 2007 14:40
0
kalam shaick abdulkader:
I like this style as I am also Tamil Poet.
5

November 21, 2007 19:59

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்ககும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும். இதனை அவர்கள் அறிய வேண்டாமா?

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் பொன்.....!
Twitter
RSS
YouTube
English