சத்தியமார்க்கம்.காம்

அசைவு திரைப்படமாக (Animation) நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
புதன், 14 பிப்ரவரி 2007 17:10

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு உலகிலேயே முதல் முறையாக முழுநீள அனிமேஷன் DVD திரைப்படமாக வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் புகழ் பெற்ற இஸ்லாம் சேனல் மற்றும் அமெரிக்காவின் Fine Media Group இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு Mohamed(PBUH): The Last Prophet - இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) என்று பெயரிடப்பட்டுள்ளது.


1428 ஆண்டுகளுக்கு முன்னர் அறியாமைக் காலத்தில் மூழ்கியிருந்த அரேபிய தீபகற்பத்தில் ஒளியாய் வந்திறங்கிய இஸ்லாம் பற்றி துவங்கும் இத்திரைப்படம், அதன் பின்னர் இஸ்லாம் மக்கா நகரத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளை படிப்படியாய் விவரிக்கிறது.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ வந்திறங்கிய நிகழ்வுகள் உள்பட, தூய இஸ்லாத்தை அரேபிய மண்ணில் விதைக்க நபியவர்கள் செய்யும் முயற்சிகளும் அதில் வழி நெடுகிலும் சந்தித்த துயரங்களையும் விவரிக்கும் இத்திரைப்படத்தை இயக்கி இருப்பவர் இயக்குநர் ரிச்சர்ட் ரிக்.

இஸ்லாத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இறைத்தூதரின் உருவகம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மனித வரலாற்றின் மிக முக்கிய காலகட்டத்தைப் பற்றிப் பேசுகிறது.

இறைமறை மற்றும் நபிவழித் தொகுப்புகளின் அடிப்படையில் சம்பவங்கள் அமைந்திருக்கும் இத்திரைப்படம், இஸ்லாமிய வரலாற்றைக் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் வகையில் எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது. புதிதாக இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கும் இஸ்லாத்தை அறிய விரும்புவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் வியப்பில்லை.

அநீதியும், இனப்பாகுபாடுகளும் மிகுந்திருந்த அக்கால சமுதாயத்தினருக்கு நேர்வழியாக இஸ்லாம் அமைந்தது என்பதை இத்திரைப்படம் தெளிவாக விவரிக்கிறது.

90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த அசைவு திரைப்படத்தில் - இறைத்தூதரை ஓவியமாக வரைதலும் கற்பனை உருவகங்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் - இறைத்தூதரின் உருவகம் இல்லாமை என்பது ஒரு குறையாக பார்ப்பவர் மனதில் தெரிந்தாலும், இஸ்லாத்தின் ஆரம்பகால சரித்திரத்தை அழகாக விளக்கியிருக்கும் முறைகளினால் ஆழமான ஒரு மன நிறைவைப் பெற முடிகிறது.

வெளியான சில நாட்களிலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களைத் தொடர்ந்து  உலகின் பல பாகங்களிலிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த DVD, நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில், எதிர்கால சந்ததியினரையும் கவனத்தில் கொண்டு திறமையாக தயாரிக்கப்பட்டிருக்கும் காரணத்தால் இஸ்லாமிய வரலாற்றை எளிமையான வடிவில் அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இது அரிய ஒரு தகவல் களஞ்சியமாக அமையும் என்றால் அது மிகையில்லை.

தகவல்: அபூ ஸாலிஹா

Trackback(0)
கருத்துக்கள் (20)add comment
0
அபூ அய்னு:
. இதனைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட நம்மவர்கள் யாராவது தன்னியலாக முன் வந்தால் அது ஒரு சிறந்த சேவையாக அமையும். காப்புரிமையின் காரணமாக காசுகள் சற்று அதிகமாகச் செலவாகலாம். -
1

February 15, 2007 07:33
0
அபூ அய்னு:
இதனைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட நம்மவர்கள் யாராவது தன்னியலாக முன் வந்தால் அது ஒரு சிறந்த சேவையாக அமையும். காப்புரிமையின் காரணமாக காசுகள் சற்று அதிகமாகச் செலவாகலாம். ஆனால் காப்புரிமையப் பற்றிக் கவலப்படாத சில காயலர்கள் இருக்கும் வரை, எது நடந்தாலும் வியப்பாக இருக்காது.
2

February 15, 2007 07:54
0
Aboobacker Thambi:
Assalamu Alaykum, I crossed your website. Alhamdulillah. Really superb. Its very useful to our society. Thanks for your fullest socieal service. And We are publishing a Tamil Monthly by the name of KEELAKARAI ANJAL since 2003 like Unaru, Makkal Urimai and Olaga Vettri Murasu. Which is very popular in U.A.E. If you give the permission to publish some article from your website. We can issue in our Magazine. Thanking you Brotherly yours Aboobacker Thambi
3

February 15, 2007 08:01
0
ameer:
we should stop these movie before it goes to international level, because 'find media group' belongs to usa and they will give wrong informations thro this film.
4

February 18, 2007 10:11
0
ameer:
pls disregard my previous suggestion. now this movie to be throughly verified by the top islamic scholars and then if it is true then the same can be translated in other languages in order to understand about the prophet(pbuh) life and it will be very useful to the people those who are embracing islam.
5

February 18, 2007 11:17
0
ஹாருன் பிலால்:
நல்ல முயற்சி. முக்கியமாக கார்ட்டுன் கலாச்சாரத்தில் சீரழிய்ம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதை போன்ற CDக்கள் பயன் தரும்.
6

February 20, 2007 15:18
0
கோவை முஹம்மது:
அஸ்ஸலாமு ஆலைக்கும் மேலே அபூ அய்னு அவ்ர்கள் கருத்து சொல்லி இருப்பது போல், மீடியாவில் அனுபவம் கொண்டு அழைப்பு பணியில் ஈடுப்டும் தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்கள், இஸ்லாத்தை அறீந்து கொள்பவ்ர்களுக்கு பயனுள்ள வகையில் ஏன் இந்த அனிமேஷன் திரைப்பட்த்தை தமிழாக்கம் செய்யும் ரைட்ஸை எடுப்பதில் முந்திக்கொள்ளக்கூடாது? மற்ற தமிழ் ஊடகத்தில் வெளிவராத இது போன்ற அரிய செய்திகளை வெளிக்கொண்டுவரும் உங்கள் சேவையும் மிகவும் பாராட்டுட்லுக்குரியது. அன்புடன், கோவை முஹம்மது.
7

February 20, 2007 15:33
0
Ithrees Hassan:
I want watch this DVD. I'm in Qatar. please guide me. jazakallahu khira.
8

February 23, 2007 07:26
0
N.Noor-ul-Ameen:
Assalamu Alaikum...I read the topic of Animation movie. I am really expecting the movie please tell how can i get that DVD. I dont know english very well any mistake in my suggestiions dont mistake me. Wassalam Regards N.Noor-ul-Ameen.
9

February 23, 2007 16:51
0
mrs.rafiq:
Assalamu alaikum:i am very happy to see your information about this animation movie .i realy want to see this , pls tell how can i get that DVD.pls answred me .thanx. allah hafiz
10

March 02, 2007 18:55
0
A.sadiq:
அஸ்ஸலாமு அலைக்கும். The Last Prophet அனிமேசன் படத்தினை google video வில் முலுமையாக காண கீழ்கானும் முகவரிக்கு செல்க http://video.google.com/videoplay?docid=-1032669194494713979&q=animation+the+last+prophet&hl=en
11

March 06, 2007 15:21
0
கோவை முஹம்மது:
இந்த திரைப்படத்தை ஆன் லைனில் இலவசமாக காணும் லிங்க்கை இங்கே அளித்த அன்பர் A.Sadiq அவர்களுக்கு மிக்க நன்றி! இன்ஷா அல்லாஹ் டவுண்லொட் செய்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்.
12

March 07, 2007 09:42
0
அப்தல்லாஹ்:
அன்பர் சாதிக் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த சுட்டியில் இந்தப் படம் இல்லையே. ஒருவேளை சுட்டியில் தவறு உள்ளதா? நன்றி
13

March 07, 2007 13:30
0
அபூ சுமையா:
சுட்டியளித்த சகோதரர் சாதிக் அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர். சகோதரர் கோவை முஹம்மது அவர்களுக்கு, சகோதரர் சாதிக் அவர்கள் சரியான சுட்டியையே அளித்துள்ளார். டவுன்லோட் செய்துள்ளேன். பார்த்துவிட்டு பின்னர் என் கருத்தை பதிலிடுகின்றேன். அன்புடன் சகோ. அபூ சுமையா
14

March 08, 2007 06:09
0
nalin babu:
huhh...considering the movie file size, might the download time take 2-5 days?? :(
15

March 08, 2007 06:25
0
அபூ சுமையா:
சகோ. நலின் பாபு அவர்களே, எனக்கு இந்த படத்தை பதிவிறக்கம் செய்ய வெறும் 6 நிமிடங்களே எடுத்தன. :-) 288 MB என்றதும் முயற்சி செய்யாமல் விட்டு விடாதீர்கள். பதிவிறக்க வேகம் மற்ற பதிவிறக்கங்களை விட மிக அதிவேகத்தில் உள்ளது. எனவே முயன்று பாருங்கள். அன்புடன் சகோ. அபூ சுமையா
16

March 08, 2007 06:58
0
அப்தல்லாஹ்:
அன்பரே அபூ சுமையா நீங்கள் உண்மையில் படத்தைத் தரவிறக்கம் 6 நிமிடங்களில் செய்ய வாய்ப்பில்லை. அதை play செய்து பார்த்தீர்களா?
17

March 08, 2007 17:11
0
அபூ சுமையா:
அன்புச் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே படம் vlc player(mp4 format ஆதலால்) ல் மிக நன்றாக ஓடுகின்றது. நீங்கள் குறிப்பிட்டதை பார்த்தவுடன் சந்தேகத்தில் உடனே இப்பொழுது போட்டுப் பார்த்தேன். முழுவதுமாக இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படம் மிக நன்றாக மிகத் தெளிவாக ஓடுகின்றது. அன்புடன் சகோ. அபூ சுமையா.
18

March 09, 2007 10:07
0
Mohammed sabeer musthafa:
Assalamualaikum....... i very happy with this news,it very useful for non muslims.
19

April 04, 2007 13:44
0
naizer:
dear sadik assalamu alaikkum i cant taht adress donlod http://video.google.com/videop...et&hl=en11
pls send cret adress pls pls pls
20

September 29, 2010 14:57

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது. "இறுதித் தூதர் நபி(ஸல்)...

» அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!

கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து...

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் அசைவு திரைப்படமாக (Animation) நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு!
Twitter
RSS
YouTube
English