சத்தியமார்க்கம்.காம்

புறப்படு சகோதரா! புறப்படு! (கவிதை) print Email
கதை-கவிதை - கவிதை
புதன், 27 டிசம்பர் 2006 19:45

பின்பற்ற வேண்டிய சமுதாயம்

பின்னோக்கி நிற்கையில்

முன்னணியில் போராட

நான் மட்டும் எப்படி?


பேர் பெற்ற சமுதாயம்

நோய் பட்டுக் கிடக்கையில்

நிர்வாகம் சீராக்க

நான் மட்டும் எப்படி?

 

எண்ணூறு ஆண்டு காலம்

இந்தியாவை ஆண்ட குடி

பாழ்பட்டுக் கிடக்கையில்

நான் மட்டும் எப்படி?


இப்படி பொறுப்பற்ற பதில் விடுத்து

சுறுசுறுப்பாய் களம் காண

புறப்படு சகோதரா! புறப்படு!

 

வீரத்தின் விளைநிலமே!

விவேகத்தின் இருப்பிடமே!

மனித நேயம் காக்க...

புனித மார்க்கம் ஓங்க...

புறப்படு சகோதரா! புறப்படு!

 

உன் வேகம் கண்டு

துரோகிகளும் நயவஞ்சகர்களும்

புறமுதுகிட்டு ஓடிடட்டும்!

புறப்படு சகோதரா! - புழுதி

பறக்க புறப்படு!


சிறுபான்மை நாம் என்ற

சிந்தனையை மறந்துவிடு!

பாறாங்கல்லையும் சிற்றுளி

பிளந்திடும் என்பதை மனதிலிடு!

 

சிறுபான்மை பெரும்பான்மையை

வென்ற வரலாறு நம் பத்ருகளம்!

வெற்றி அல்லது வீரமரணம்

வாழ்க்கையே நமக்குப் போர்க்களம்!

 

நம் சகோதரிகள் மானமிழப்பதைக் கண்டு

கொதித்தெழ வேண்டாமா?
நம் குழந்தைகள் அனாதைகளாவதை விடுத்தும்

தடுத்திட வேண்டாமா?


நம் செல்வங்கள் சூறையாடப்படுவதற்கு

முடிவு கண்டிட வேண்டாமா?

பொறுத்தது போதும் சகோதரா!

புயலாக பொங்கி எழு!


குமுறும் எரிமலை

வெடித்துச் சிதறினால் - இந்தப்புவி

தாங்காது என்பதை

மாபாதகர்களுக்குப் புரிய வைப்போம்!

 

பொறுத்தவன் பொங்கி எழுந்தால்

அடக்குபவன் அதிகாரமிழந்து போவான்

என்பதை - இந்த அநியாய

ஆட்சியாளர்களுக்கு அறிய வைப்போம்!

 

தீயோரை எதிர்க்கும்

போர்குண மிக்கவர்கள் நாம்!

நல்லோரை மதிக்கும்

நற்குண மிக்கவர்கள் நாம்!


இனிய மார்க்கத்தின் வழி நின்று

மனித குலத்திற்கு தீங்கு செய்வோரை

மண்ணிலிருந்து
துடைத்தெறிவோம்
புறப்படு சகோதரா! புறப்படு!

 

ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

Trackback(0)
கருத்துக்கள் (4)add comment
0
Mohammed Ali:
These lines are good and encouraging. I will forward this to my friends and relatives insha Allah.
1

December 28, 2006 06:08
0
syed ali:
bismillahirahumanirraheem a good poetry by brother mohamed.This poet encourage our ummah.
2

December 28, 2006 11:16
0
மரைக்காயர்:
ஒற்றுமையே பலம் தரும் என்பதை உணர்ந்திடு சகோதரா! இயக்கம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் இன்றே இணைந்து விடு சகோதரா!
3

January 03, 2007 08:42
0
மரைக்காயர்:
ஒற்றுமையே பலம் தரும் என்பதை உணர்ந்திடு சகோதரா! இயக்கம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு இஸ்லாம் என்ற பேரியக்கத்தில் இன்றே இணைந்து விடு சகோதரா!
4

January 03, 2007 08:43

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:107 நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் புறப்படு சகோதரா! புறப்படு! (கவிதை)
Twitter
RSS
YouTube
English