சத்தியமார்க்கம்.காம்

முன்னாள் இராக் அதிபர் சதாமுக்கு தூக்கு தண்டனை! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
ஞாயிறு, 05 நவம்பர் 2006 03:00

{mosimage}பக்தாத்: மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனுக்கு இந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் தற்போது US ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் இராக்கின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து சதாமின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் குழு தலைவர் திரு கலீல் துலைமி கருத்துத் தெரிவிக்கையில் "கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணை என்ற பெயரில் இராக் பொம்மை அரசாங்கம் நடத்திய நாடகம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவு முதலிலேயே எதிர்பார்க்கப் பட்டது தான். இதில் நீதி கிடைக்காது என்பது தெரியும். இந்த முடிவு US-ல் நடக்க இருக்கும் தேர்தலுக்கு சற்றே முன்பு வெளியாகி உள்ளது முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது" என்று தெரிவித்தார்.

சதாமுக்கும் அவரது அரசில் பங்கு வகித்த மேலும் இரு முக்கியப் பிரமுகர்களுக்கும் துஜைல் நகரில் 1982 ஆம் ஆண்டு 148 ஷியா மக்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மரணதண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிற மூன்று பிரமுகர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இருவர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு வரும் முன்னரே இராக் முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. கலவரம் நிகழும் அபாயம் இருக்கும் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தது. இராக்கின் அனைத்துக் காவலர் மற்றும் இராணுவத்தினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமக்குரிய வாதாடும் உரிமை மறுக்கப்பட்டதாகவும் தமது கோரிக்கைகள் பெருமளவு நிராகரிக்கப்பட்டதாகவும் இந்தத் தீர்ப்பு குறித்து இராக்கிய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் திரு.துலைமி தெரிவித்தார்.

US அதிபர் தேர்தலுக்குச் சற்று காலம் முன்பே சதாம் ஹுசைன் பிடிபட்டு உலகிற்குக் காட்டப்பட்ட நிகழ்வும் இங்கே நினைவுகூரத் தக்கது.

கருத்துக்கள் (6)add comment

எழுதியவர்: அட்றா சக்கை , November 06, 2006 20:00

148 பேரை இரக்கமில்லாமல் கொன்ற சதாமுக்கு தூக்குத் தண்டனை சரிதான். பல லட்சம் மக்களைக் குவியல் குவியலாகக் கொன்றுவரும் புஷ்ஷுக்கும், பிளேருக்கும் என்ன தண்டனை கொடுப்பார்கள்? அட்லீஸ்ட் விசாரிக்கவாவது படுவார்களா?



எழுதியவர்: M.Muhammad , November 07, 2006 05:36

There is no doubt about the following views : 'இந்த முடிவு US-ல் நடக்க இருக்கும் தேர்தலுக்கு சற்றே முன்பு வெளியாகி உள்ளது முழுக்க அரசியல் உள்நோக்கம் உடையது' 'US அதிபர் தேர்தலுக்குச் சற்று காலம் முன்பே சதாம் ஹுசைன் பிடிபட்டு உலகிற்குக் காட்டப்பட்ட நிகழ்வும் இங்கே நினைவுகூரத் தக்கது. ' Let the time come soon when (US) people will understand such political ( selfish ) gimmicks of Bush and put an end to it once for all for the sake of humanity and real peace around the world including US. Bush will then understand atleast that he was (being fooled and he was) fooling the world and as Abraham Lincoln had said 'you can fool some people all times, you can fool all people some times, but you can not fool all people all times' and he (Bush) will have some time left to think amend and repent for the sake of him & his history. M.Muhammad



எழுதியவர்: nasar , November 07, 2006 17:53

oru nattinunutaya athifar thookkilita theerppu valangiyathu bush thavaru alla namathu islamiya samuthayam otrumai inmaiye karanam visamiyana bushukku itamalitha intha arabiya samuthayame karanam oddamavadi nasar from kuwait



எழுதியவர்: ஓட்டமாவடி நாசர் , November 08, 2006 11:56

ஒரு நாட்டினுடைய அதிபர் தூக்கிலிட தீர்ப்பு வழங்கியது புஷ்ஷின் தவறு அல்ல. நமது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒற்றுமை இன்மையே காரணம். விஷமியான புஷ்ஷூக்கு இடமளித்த அரபிய சமுதாயமே காரணம். ஓட்டமாவடி நாசர், குவைத்.



எழுதியவர்: hasan ali , November 10, 2006 05:34

இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்களோ அல்லது ஏனைய இராக் மக்களோ இல்லை. அதற்கெல்லாம் காரணம் சதாமும் அவனுக்கு துணையாக இருந்தவர்களுமே. இப்போதெல்லாம் மனித உரிமை மனித உரிமை என்று சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்யும் முஸ்லிம் இயக்கங்கள் அன்று அவன் அப்பாவி மக்களை படுகொலை செய்யும் போது எங்கு போயிருந்தார்கள். அப்போது அது இவர்களுக்கு சதாம் மனித உரிமையை மீருகிறான் என தெரிய வில்லையா? முனித சமுதாயமே உண்மையை உரிய படி அறிய முயற்சி செய்து கொள்ளுங்கள். அப்போது தான் இருவுலகிலும் வெற்ற அடைய முடியும்.



எழுதியவர்: அன்புப்பிரியன் , November 10, 2006 18:05

சகோ.ஹஸன் அலி அவர்களே, இங்கே சதாமையோ,அவர் செய்த குற்றங்களையோ முஸ்லிம்கள் யாரும் நியாயப்படுத்தவில்லை. உலகின் சட்டாம்பிள்ளையாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் புஷ்-ம்,அவரது அடிவருடிகளும் ஜன நாயகம் என்ற பெயரில் ஈராக்கில் தங்களது கைத்தடிகளை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து,தீர்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.மேலும் இந்த நாசகார படைகளின் அட்டூழியங்களால் தினமும் ஈராக்கிய மக்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.ஆக சதாமுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை உண்மையான ஈராக்கிய மக்களின் பிரஜைகள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி வழங்கப்படாத இத்தீர்ப்பை முஸ்லிம்கள் மட்டுமல்ல உலகின் நடுநிலையாளர்கள் அனைவரும் எதிர்க்கவே செய்வார்கள்.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

4: 2 நீங்கள் அநாதைகளின் பொருட்களைக் கொடுத்து விடுங்கள். நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...


M.Mohamed Abbas : அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்...


Saraswathi : நல்ல குறிப்புகள் அடங்கிய இந்த வலைத் தளம் மிகுந்த பயன் அளிக்கிறது. நன்றி.


abdul hakkeem : அல்ஹம்துலில்லாஹ்



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் முன்னாள் இராக் அதிபர் சதாமுக்கு தூக்கு தண்டனை!