சத்தியமார்க்கம்.காம்

பாக்கியம் பெற்ற ஆலிவ்! print Email
மருத்துவம் - ஆயுர்வேத மருத்துவம்
ஞாயிறு, 15 அக்டோபர் 2006 17:41

{mosimage}மனிதர்களும் ஜின்களும் இன்னும் பிற உயிரினங்களும் தன்னை வணங்குவதற்காகவே அன்றி வேறெதற்காகவும் படைக்கப்படவில்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அவ்வாறு படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் உயர்ந்த படைப்பாக படைக்கப்பட்டுள்ளான். பிற அனைத்துப் படைப்புகளும்  மனிதனின் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவே படைக்கப் பட்டுள்ளன.

அவ்வாறு இறைவனால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளில் ஆலிவ் (Olive) மரங்கள் பல்வேறு அரபு நாடுகளை உள்ளடக்கிய பிரதேசமான 'ஷாம்' பகுதியில் மிகுதியாக உள்ளன. உலகின் ஆலிவ் விளைச்சலில் 95 விழுக்காடு இந்த 'ஷாம்' பகுதியை உள்ளடக்கிய மத்தியதரைக்கடல் பிரதேசத்தில் தான் விளைகிறது. இதன் காய்களிலிருந்து பெறப்படும் எண்ணை பல அரும் பயன்களைக் கொண்டுள்ளது. உணவாக, மருந்தாக, அழகு சாதனப்  பொருளாக என  பல்வேறு  பயன்பாடுகளைக்  கொண்ட  ஆலிவ் பற்றி அல்லாஹ்  தன்  திருமறையில் சத்தியமிட்டுக் குறிப்பிடுகிறான். 

அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஆலிவ்) மீதும் சத்தியமாக,ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக, மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக, திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். மேலும் ஆலிவ் எண்ணையை பாக்கியம் பெற்ற எண்ணை என்றும் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 95:1-4)

.....அது பாக்கியம் பெற்ற ஒலிவ (ஜைத்தூன்/ஆலிவ்) எண்ணை(யினா)ல் எரிக்கப் படுகிறது. (அல்குர்ஆன் 24:34)

பெருமானாரின் உணவுப் பொருட்களில் ஒலிவ மரத்தின் காயின் (ஆலிவின்) பங்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 

"ஆலிவ் எண்ணையைச் சாப்பிடவும், உடலின் மீது தடவ (மசாஜ் செய்ய)வும் பயன் படுத்துவீராக! இது ஆசிர்வதிக்கப்பட்ட மரத்திலிருந்து வந்ததாகும்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உஸைத் (ரலி), நூல்:திர்மிதி 7/25)

உலகிலேயே மிக அதிகமாக ஆலிவ் மரங்கள் அரேபியப் பிரதேசமான 'ஷாம்' பகுதியில் மிகுந்து உள்ளன. உலக ஆலிவ் விளைச்சலில் 95 விழுக்காடு ஷாம் பகுதியை உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் பகுதியிலேயே நடைபெறுகிறது. 'ஷாம்' என்று  அறியப்பட்ட பிரதேசம், இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடமாகத் திகழ்ந்துள்ளது. இப்பகுதிக்கு சுமார் எழுபது இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளனர். இறைத்தூதர்கள் மூலம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் விளைந்ததால் 'ஆலிவ்' பாக்கியம் பெற்றது என்றும், அறிஞர்களில் சிலர் இதன்  மருத்துவக்  குணங்களால் அவ்வாறு  சொல்லப் படுகிறது என்றும்  விளக்கம்  கொடுத்து உள்ளார்கள்.

அபூ நுஅய்ம் என்ற இஸ்லாமிய அறிஞர் நடத்திய ஆய்வில், ஆலிவ் எழுபது வகையான நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவமுடையது; அவற்றில் தொழுநோயும் ஒன்று என்று தெரிவிக்கிறார்.

"ஆலிவின் ஒவ்வொரு பகுதியும் பயன் மிக்கது. இதன் எண்ணை விளக்கேற்றவும் சமைக்கவும்,சருமத்தின் சொரசொரப்பை நீக்கி இயல்பான நிலையில் வைக்கவும் பயன்படுத்தப் படுகிறது.இதன் விறகுகள் பாலைவன வெளியில்   நெருப்பூட்டவும், இதன் சாம்பல் பட்டுத் துணியைக் கழுவவும் பயன் படுத்தப் படுகிறன" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(பாலைவனங்களில் காற்றுடன் புழுதியும் கலந்து வீசுவதால் சாதாரண மரக்கட்டைகள் எரிக்கப்படும் போது எளிதில் அணைந்து விடும். ஆனால் ஆலிவ் விறகால் எரிக்கப்படும் நெருப்பு இவற்றை எதிர்கொண்டு நீண்ட நேரம் அணையாமல் இருக்கும்)

ஆலிவ் மரங்களின் ஆயுட்காலம் மற்ற மரங்களின் ஆயுட்காலத்தை விட அதிகம். இவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக பயன் தருவன. மரமாகி நாற்பது ஆண்டுகள் கழித்தே ஆலிவ் காய்க்கத் தொடங்கும். இதன் பல்வேறு வகையான பலன்கள் 'திப்' எனும் இஸ்லாமிய மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய மருத்துவக் குணங்களையுடைய பசுமையான ஆலிவ் எண்ணை (Virgin Olive Oil) இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று ஐரோப்பாவின் Annals of Internal Medicine என்னும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வறிக்கையின் படி ஆலிவ் எண்ணையிலுள்ள நச்சு-எதிர்ப்புக் கலவை (Antioxidant Plant Compound), இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கிறது. இதிலுள்ள பாலிபினால்ஸ் (Poliphenols) மற்ற எண்ணைகளை விட ஆலிவ் எண்ணையில் மிகுந்துள்ளது. இதயப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.

Virgin olive oil is the only vegetable oil that's rich in polyphenols, Dr. Maria-Isabel Covas, the study's lead researcher, told Reuters Health.

All vegetable oils other than virgin olive oil are submitted to a (refining) process in which polyphenols are practically lost," explained Covas, a researcher at the Municipal Institute for Medical Research in Barcelona, Spain.

அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) இரு தேக்கரண்டி (23 கிராம்) ஆலிவ் எண்ணையை தினமும் உட்கொண்டால் இதயம் சம்பந்தமான நோய்கள் எளிதில் அண்டாது என்ற மருத்துவக் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளது.

Olive oil contains monounsaturated fat, which can lower total cholesterol and low-density lipoprotein (LDL, or "bad") cholesterol in your blood. According to the FDA, you get the most of these benefits by substituting olive oil for saturated fats, such as in butter, rather than just adding more olive oil to your diet.

படைத்தவனால் 'பாக்கியம் பெற்ற எண்ணை' என்று புகழாரம் சூட்டப்பட்ட ஆலிவின் அரும் மருத்துவக் குணங்களையும் சிறப்புக் கூறுகளையும் கருத்தில் கொண்டால், விஞ்ஞானம் அறியப்படாத காலத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரிந்திராத முஹம்மது நபியால் 1400 வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டது போல் ஆலிவ் எண்ணை உண்மையில் பாக்கியம் பெற்ற எண்ணை என்பதில் மிகையில்லை.

 

அல்ஹம்துலில்லாஹ்! (படைத்தவனுக்கே புகழனைத்தும்)

 

கட்டுரை ஆக்கம்: நல்லடியார்

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
M. J. SYED ABDULRAHMAN:
Please use about oil good for health
Thank You.
1

May 23, 2010 17:52

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு மருத்துவம் சித்தம் பாக்கியம் பெற்ற ஆலிவ்!
Twitter
RSS
YouTube
English