| இறை அருளைத் தேடுங்கள்! (கவிதை) |
|
|
| கதை-கவிதை - கவிதை | |||
| திங்கள், 09 அக்டோபர் 2006 17:21 | |||
|
கலிமாவைக் கருவாக்கி கலந்து நின்றோம் கண்மணிகளாய் கருத்து வேற்றுமையால் கண்டும் காணாமல் போகின்றோம்- தீனில் கற்றதை மறக்கின்றோம்—"ஸலாம்" கூற மறுக்கின்றோம்.!!!
நமது நபி நவின்றது (நபிவழி ) இதுதானா? நபிவழியின் சுவடொற்றி நலம் விசாரிக்க- இன்று நாவு எழவில்லை.!!! இலக்கணம் இதுதானா? மூமினுக்கு இலக்கு எது ? சுவனமன்றோ ? "இறையச்சம்" இதயத்தில் ஊன்றி விட்டால் இழப்பும் இன்பமாகும் இறப்பும் துச்சமாகும் இஸ்லாமியர்களை மன்னிப்பதும் இசைவாகும். இதயத்தில் இறையச்சம் உறுதியாகும். சகோத(ரத்து)-வம் சத்திய மார்க்கத்தில் ஓர் சங்கட முள் !!! சந்தோஷமாய் ஒன்றுபட்டு சங்கடமில்லாமல் சங்கமிக்கும் சகோதரத்துவத்துடன், தக்பீர் முழக்கமிடும் சமுதாயம் சட்டென்று வந்துவிடும்… சன்மார்க்கத்தை தந்திட்ட இறைவன் நாடினால் சட்டென்றே வந்துவிடும் நாளைக்கே ! இஸ்லாத்தை நிலைநாட்டிட இறையருளைத் தேடி வாரீர். ஆக்கம் : உம்மு அப்துர்-ரஹ்மான்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|