சத்தியமார்க்கம்.காம்

மாலேகாவ் மசூதி குண்டு வெடிப்பு: ஒட்டு(கள்ள) தாடியுடன் கூடிய உடல் எங்கே? print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
புதன், 13 செப்டம்பர் 2006 17:45
மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் மஸ்ஜிதில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என்ற சந்தேகம் வலுக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கண்டுபிடித்த ஒட்டு தாடியுடன் கூடிய உடல் இதற்குரிய மிகப்பெரிய ஆதாரமாக கருதப்படுகிறது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பொழுது ஒட்டுதாடியுடன் கூடிய அவ்வுடல் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

மாலேகாவ் காவல்துறை அவ்வுடலை கைப்பற்றிய அன்றே நாசிக்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பியதாகவும் கூறியிருந்தது. ஆனால் மறு நாளே காவல்துறை இதற்கு மாற்றமாக அறிக்கை விட்டது. அவ்வறிக்கையில் ஒட்டு தாடி வைத்த எந்த ஒரு உடலையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லையெனவும், அதனை அவர்கள் கைப்பற்றவில்லையெனவும் தெரிவிக்கப்படிருந்தது.

ஒட்டு தாடியுடன் கூடிய உடல் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக டெல்லியிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற தினப்பத்திரிக்கை இம்மாதம் 9-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு மறு தினமே காவல்துறையின் மறுப்பறிக்கையும் இப்பத்திரிக்கையில் வெளியானது.

மும்பையிலிருந்து வெளிவரும் இன்குலாப் என்ற தினப்பத்திரிக்கை கடந்த 11-ஆம் தேதி இவ்விஷயத்தைக் குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் வந்த செய்தியின் சுருக்கம்:

குண்டு வெடிப்பில் இறந்த ஒட்டுதாடி வைத்த ஒருவரின் உடல் அதிசயமாக காணாமல் போயிருக்கிறது. மிக மோசமாக சிதறியிருந்த இவ்வுடலில் கீழ்பாகம்(கால்கள்) இல்லாமல் இருந்தது. மாலேகாவிலுள்ள இஸ்லாம்பூரைச் சேர்ந்த அக்கீல் அஹ்மத்(37) இவ்வுடலை ஆம்புலன்ஸில் ஏற்ற முயற்சிக்கும் வேளையில் அதிலிருந்து ஒட்டு தாடி அவிழ்ந்து விழுந்தது. இன்குலாப் பத்திரிக்கையின் நிருபர் அக்கீல் அஹ்மதுடன் மார்ச்சுவரி சென்று பரிசோதித்த பொழுது அவ்வுடல் அங்கு காணப்படவில்லை.

வாடியா மருத்துவமனையில் 30 உடல்களும் டோலியா மருத்துவமனையில் 1 உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அவற்றில் கால்கள் இல்லாத உடல் ஒன்றும் இருக்கவில்லை என்று மாலேகாவ் முனிசிபல் கார்ப்பரேஷன் மருத்துவ அதிகாரி டாக்டர்.வாக் கூறினார்.

தான் ஆம்புலன்ஸில் ஏற்றிய உடல்களில் ஒன்று கால்கள் இல்லாமல் இருந்தது என்றும் அதை ஏற்றும் நேரத்தில் அதன் முகத்திலிருந்து தாடி நழுவி விழுந்ததாகவும், அந்நேரத்திலிருந்த அவசரத்தில் தான் அதனை பெரிதாக எடுக்கவில்லையெனவும் பின்னர்தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவும் அக்கீல் அஹ்மத் கூறினார்.

மாலேகாவில் இந்த குண்டுவெடிப்பு நிகழும் முன்பே ஓர் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குண்டு ஒன்று வெடித்திருந்தது. அவ்வீட்டை பரிசோதிக்கும் பொழுது பல வகையான ஒட்டு தாடிகளையும் போலீசார் கண்டுபிடித்திருந்தனர்.

ஏற்கெனவே ஒட்டு தாடி விஷயமாக இப்படிப்பட்ட ஓர் சம்பவம் அங்கு நடந்திருக்கும் வேளையில் அக்கீல் அஹ்மத் கூறியிருக்கும் தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒட்டு தாடியுடன் கூடிய உடல் தொடர்பாக முதல் நாள் சம்மதித்த காவல்துறை மறுநாளே அதனை மறுப்பதன் காரணம் என்ன? குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை சரியான வழியில்தான் செல்கிறதா? போன்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

சம்பவ இடத்திலிருந்த ஒரு சாட்சி தைரியமாக முன்வந்தால் ஒட்டு தாடி உடல் தொடர்பான உண்மை விசாரணையில் கண்டிப்பாக வெளிப்படும் என்று இந்த செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த இந்திய நாடு இந்த காவல் துறை என்னும் காவி கும்பலிடம் சிக்கி தவிக்க போகிறதோ? எந்த ஆட்சி வந்தாலும் உண்மைகள் மட்டும் நீதி மன்ற படிக்கட்டை ஏற மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. இன்னும் முஸ்லீம் எவ்வளவு உயிரை இந்த ஜனநாயக!! நாட்டில் இழக்க வேண்டுமோ படைத்த ரப்புக்கு தான் தெரியும்.
1

September 16, 2006 13:20
0
MOHAMED USMAN:
Maharashtra police was communlized during the period of Babri Masjid demolition, but still they are continuing the same way by prosucuting muslims only with any bomb blast. Further they are only second in position, the first and worst is Gujart Police. They don't care about any complaints against them. We have no option except to cry to the Allah Allmoghty.
2

October 21, 2006 10:25

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:149 ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மாலேகாவ் மசூதி குண்டு வெடிப்பு: ஒட்டு(கள்ள) தாடியுடன் கூடிய உடல் எங்கே?
Twitter
RSS
YouTube
English