முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

முகப்பு

யா அல்லாஹ்!

தாகத்தில் தொண்டை

தகிக்கையில்
ஒவ்வொரு துளி நீரின்
மூலக்கூறும்
உன்னருள் பொதிந்த
மூலம் கூறும்.புசிக்காமல்
பசியின் சுவையை
ருசித்திருந்தோம்
சாவைக்கூட
சாத்தியப்படுத்தும்
பட்டினி பற்றிப்
பட்டுத் தெளிந்தோம்.

உறக்கம் ஜெயிக்கும்

வைகறைப் போதில்
இமைகளில் ஏறிய
சுமைகள் அழுத்த
நின்னருள் நாடி
விழித்திருந்தோம்.

"பொருளில்லார்க்கும் இவ்வுலகுண்டு;

நம்மில் அவர்தம் பங்குண்டு"
உன் வேதம் பயின்று
பொருளில்லார்க்குப்
பரம்பொருள் நின்றன்
அருள்தனை நாடி
மெய்ப்பொருள் அறிந்து
கைப்பொருள் பகிர்ந்தோம்

சில்லறையாகவும் மொத்தமாகவும்

நற்செயல் செய்தோம்
பதிந்து வைப்பாய் இறைவா!
மறுமையின் மைதானத்தில்
எழுப்பப்படும் நாளில்
கூட்டியும் பெருக்கியும் நன்மையை
ஏட்டில் வைப்பாய் - சொர்க்கம்
காட்டிவைப்பாய்.

எல்லா நேரமும் உன்

நினைவிருந்தும்
ஐவேளை வணக்கத்தில்
அமைதி கண்டோம்
இரவிலும் தொழுதோம்
இறையுனைத் துதித்து.

இறைமறைதனை

அனுதினம் ஓத
அனுக்கிரகம் செய்தாய்
புரிந்த வசனங்களால்
புல்லரித்த போதும்
பொருளறியா வசனங்கள்
பலநூறு கடந்தும்
புனிதம் புரிந்தே
படிப்பதைத் தொடர்ந்தோம்.

தூறல் அருட்கொடை மாறி

சாரலாய்ப் பொழிய
கடைசிப் பத்தில்
அடைமழை கண்டோம்
அகக்குடை மடக்கி
அளவற்ற நின்றன்
அருள்மழையில் நனைந்தோம்.

இருளைக் களைந்து

நின்றன்
அருளொளி நிறைத்த
இத்தகு மாதம்
இனியொரு முறை
எம்மை அடைய
அருள்புரி இறைவா!

அதுவரை இந்த

அற்புத மாதம்
அருளிய மாற்றம்
நிலைபெறச் செய்வாய், இறைவா!

- சபீர்

கருத்துக்கள்   
nainathambi.அபுஇபுறாஹிம்
0 #1 nainathambi.அபுஇபுறாஹிம் 2012-08-20 20:04
மிடறில் ஆரம்பித்து... எவ்வித இடறில்லாமல்..

//அதுவரை இந்த
அற்புத மாதம்
அருளிய மாற்றம்
நிலைபெறச் செய்வாய், இறைவா!//

ஆமீன் !
Quote | Report to administrator
அன்புடன் புகாரி
0 #2 அன்புடன் புகாரி 2012-08-21 21:23
>>>>>
தாகத்தில் தொண்டை
தகிக்கையில்
ஒவ்வொரு துளி நீரின்
மூலக்கூறும்
உன்னருள் பொதிந்த
மூலம் கூறும்
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

வலைக்காட்சி (Live TV)