கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு என்ன? எல்லாரும் பழையபடி மகிழ்ச்சியாக, ஒற்றுமையாகப் பெருநாள் கொண்டாடக்கூடிய நாள் எப்போது வரும்?
பதில்: நம் சகோதரர் என்ன கேட்கிறார் எனில், நோன்பு மாதத்தில் பிறை தொடர்பாக ஒரே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஓர் ஊரில் பல பெருநாட்கள்; ஒரு குடும்பத்தில் பல பெருநாட்கள். மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை. இந்தப் பிரச்னை தீர என்ன வழி என்று கேட்கிறார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்தான்.
'நோன்பு வரும் பின்னே பிறைக் குழப்பம் வரும் முன்னே' என்று சொல்கிற அளவுக்கு இன்று சமுதாயத்தில் இதை ஒரு பிரச்னையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினார்கள், "மூன் சைட்டிங்கா, மூன் ஃபைட்டிங்கா?" - பிறையைப் பார்ப்பதா, பிறைக்காகச் சண்டை போடுவதா? எனும் ஒரு நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.
இதெல்லாம் ஓர் இருபது ஆண்டுகளாகத்தான். தமிழ்நாட்டில் இதை ஒரு பிரச்னையாக எல்லாம் யாரும் பண்ணவில்லை. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைமைக் காஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டு எல்லாரும் நோன்பு பிடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். பெருநாளைக் கொண்டாடிக் கொண்டுதான் இருந்தார்கள். இடையில் இந்தக் குழப்ப நிலைகள் உருவாக்கப்பட்டு ஒரு பிரச்னையாக ஆக்கப்பட்டிருப்பது நம் எல்லாருக்கும் கவலை தரக்கூடிய விஷயம்தான். ஆனால், பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதில் ஒத்தக் கருத்தில்தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட சில பிரிவினர்தான் இதைப் பிரச்னையாக ஆக்கிக் கொண்டு இந்த நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பிரச்னைக்கு எப்படி முடிவு காண்பது?
முதலாவதாக சில அடிப்படைகளை நாம் மனதிலே கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். எப்படி ஜும்ஆவை ஒரே இடத்தில் ஒரே தலைமையில் நின்று வணங்கி ஒற்றுமையை உண்டாக்குகிறோமோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும். முஸ்லிம்களின் ஒற்றுமையை, மகிழ்ச்சியைக் காட்டுகிற சம்பவமாக நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்ற உணர்வு எல்லா முஸ்லிம் அமைப்புகளுக்கும், எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்க வேண்டும்.
வெட்கமாக இல்லை?
ஓர் ஊரில் மூன்று பெருநாள் கொண்டாடுவது, ஒரு வீட்டில் மூன்று பெருநாள் கொண்டாடுவது எவ்வளவு இழிவான, கேவலமான, எல்லோராலும் கேலி அடிக்கப்படுகிற, பிறரால் ஏளனமாகப் பார்க்கப்படுகிற நிகழ்ச்சி என்பதைக்கூட இந்தத் தோழர்களால் புரிந்து கொள்ள முடியாதா?
இரண்டாவதாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், இது தனி மனிதர் விவகாரமன்று. தனி மனித விவகாரத்தில் அவரவர் எப்படியும் முடிவு செய்து கொள்ளலாம். தொழுகையின்போது தக்பீரில் கையை எங்கே வைக்க வேண்டும், அத்தஹியாத்தில் கை எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் தனிமனிதர் பிரச்னைகள். இவர் இப்படி இருக்கலாம்; அவர் அப்படி இருக்கலாம். அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், பெருநாள் என்பது முழு முஸ்லிம் சமுதாயத்தையும் கட்டுப் படுத்துகிற விஷயம்.
இதில் எனக்கு இது சரியாகப்படுகிறது, எனக்கு அது சரியாகப்படுகிறது என்று பிரிக்கிற விவகாரம் அல்ல இது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகிற விஷயத்தில் எல்லாரும் ஒத்துப் போய்தான் காரியங்களைச் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, இது ஒரு அகீதா சம்பந்தப்பட்ட விஷயமன்று. அகீதா சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் கொஞ்சம் உறுதியாக இருந்து தான் ஆக வேண்டும். ஏனெனில், அதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கிடையாது. அது அடிப்படையான விஷயம். ஓர் உம்மத்தின் - சமுதாயத்தின் தலைமை - கலீஃபா இருந்தால் - அவர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். கலீஃபா இல்லாத இடத்தில் காஜியோ வேறு தலைவரோ இருந்தால் அவர் முடிவு செய்கிற விஷயம் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் இதற்கான விடையும் நமக்குக் கிடைக்கும்.
இப்போது சிலர் கேட்கிறார்கள். விஞ்ஞானத்தின் துணைகொண்டு இதை முடிவு செய்தால் என்ன? வானிலை அறிவிப்பு மையங்களைச் சார்ந்து அவர்களிடத்தில் கேட்டு இதற்கு முடிவு செய்தால் என்ன? இஸ்லாம் இதற்குத் தடையா? என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள். நபிகள் நாயகம் என்ன சொல்கிறார்கள்? "பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" இதுதான் சொல்லப்பட்ட கருத்து. பிறை பார்ப்பதை நேரிடையாகக் கண்ணால்தான் பார்க்க வேண்டுமா? கருவிகள் துணை கொண்டு பிறை பார்ப்பது தவறா? இஸ்லாத்தில் அதற்கு ஏதேனும் தடை உண்டா? இல்லையே..! பிறை பார்க்க வேண்டும் அவ்வளவு தானே? கண்ணால் பார்த்தால் என்ன? கருவியால் பார்த்தால் என்ன?
அமெரிக்காவிலே இதற்கான சில ஏற்பாடுகளைச் செய்தார்கள். இஸ்லாமிக் ஷூரா கவுன்ஸில் யூ எஸ் ஏ - அமெரிக்க இஸ்லாமிய ஆலோசனை மையத்தில் இது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதற்கானப் பொறுப்பு சையத் ஷகீல் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ந்து அவர் பல கருத்துகளைச் சொன்னார்.
நேரடியாகக் கண்ணால் பார்ப்பதைவிட கருவியால் பார்ப்பது துல்லியமானது. கண்ணால் பார்க்கும்போது பிறையல்லாத வேறு பொருட்களைப் பிறை என்று முடிவு செய்த சம்பவங்களும் உண்டு என்கிறார். எனவே, கருவியால் பார்ப்பது அல்லது வானவியல் கணக்கீடுகள் மூலம் பார்ப்பது மிகத் துல்லியமானது. விஞ்ஞானத்தின் மூலம் பார்த்துச் சொல்லப்படும் தகவல் உறுதியானது; மனிதர்கள் பார்த்துச் சொல்லப்படும் தகவல் ஐயத்திற்குரியது. ஆகவே, மனிதர்கள் தவறு இழைக்கக் கூடும்; கருவிகள் தவறு இழைப்பதில்லை. ஆகவே, மனிதர்கள் நேரடியாகப் பார்த்துச் சொல்வதைவிட கருவிகள் மூலம் அவற்றை முடிவு செய்வது மிகச் சிறந்த முறையாக இருக்கும் என்று அவர் சொல்கிறார்.
அத்துடன் இந்த விஞ்ஞானக் கணிப்பின் மூலமாகச் செய்யும்போது முன்னரே காரியங்களைத் திட்டமிட்டுச் செய்யலாம். கடைசி நேரம்வரை பிறை தெரிகிறதா, பிறை தெரிகிறதா, என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல குழப்பங்களை நீக்குவதாக அமைந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். ஆகவே, இவையெல்லாம் நமது சிந்தனைக்கு உரியவை.
இப்போது தொழுகை நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தொழுகை நேரத்தை ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிற முறைப்படி நாம் ஒன்றும் நிர்ணயம் செய்வதில்ல. ஓர் ஆண்டிற்கு முன்னரே செய்கிறோமே! ஹதீஸின் அறிவிப்பின்படி லுஹரின் நேரம் என்ன? ஒருவருடைய உயரமும், அவருடைய நிழலும் சம அளவில் வந்து விட்டால் லுஹர் நேரம் ஆரம்பமாகி விட்டது. அஸருடைய நேரம் எப்போது ஆரம்பம் ஆகிறது? தன்னுடைய உயரத்தைவிட, தன்னுடைய நிழல் இரண்டு மடங்கு இருந்தால் அஸர் நேரம் ஆரம்பம் ஆகிறது. மஃக்ரிபு நேரம் எப்போது ஆரம்பம் ஆகிறது? ஹதீஸின்படி, மஞ்சள் நிறம் சூரியனில் உண்டாகி விட்டால் மஃக்ரிபு உண்டாகி விடுகிறது.
[ஹதீஸ்களின் தெளிவின்படி சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தது முதல் ஒன்றின் நிழல் அதன் உயரத்தின் அளவை எட்டும்வரை லுஹ்ருடைய நேரம் உள்ளது. ஒன்றின் நிழல் சம அளவிலிருந்து சற்றே கூடும்போது தொடங்கி சூரியன் மறைவதற்குச் சற்றுமுன்வரை அஸ்ருடைய நேரமாகும். சூரியன் மறைந்து செம்மேகம் தோன்றியதிலிருந்து மக்ரிபு நேரம் தொடங்கி, செம்மேகம் மறையும்வரை தொடர்கிறது - சத்தியமார்க்கம்.காம்]
இப்போது, ஒவ்வொரு நாளும் எல்லோரும் இந்த அளவெல்லாம் பார்க்கிறீர்களா? அவருடைய உயரம் நிழலின் உயரம் என்றெல்லாம் கணக்கு எடுத்துப் பார்க்கிறீர்களா? சூரிய உதயத்தை ஒவ்வொரு நாளும் சென்று பார்க்கிறீர்களா? அஸ்தமனத்தை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்களா?
இப்படியெல்லாம் பார்த்த பிறகுதான் தொழுகை நேரத்தைக் குறிக்கிறீர்களா? அதற்கு மட்டும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு, விஞ்ஞானத்தின்படி, விஞ்ஞானக் கணக்கீட்டின்படி ஒரு வருடத்திற்கு முன்னாலேயே தொழுகை நேரத்தை எல்லாம் முடிவு செய்கிறோமே? அதற்கு மட்டும் விஞ்ஞானத்தை அழைத்துக் கொள்கிறோம். சூரியக் கணக்கிற்கு விஞ்ஞானக் கணக்கை அழைத்துக் கொள்கிறபோது பிறைக்கணக்கிற்கு விஞ்ஞானத்தை ஏன் அழைத்துக் கொள்ளக்கூடாது என்று கேள்வி எழுகிறது.
ஆக, விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. பெருமானார் காலத்தில் ஒரு நாளைக் கணக்கிடுவதற்கு பிறையைக் கண்ணால் பார்ப்பதுதான் ஒரே வழி. ஆகவே, அந்த முறை பயன்படுத்தப்பட்டது. இப்போது, வேறு வழிகள் வந்திருக்கிற காரணத்தால் நேரிடையாகக் கண்ணால் பார்ப்பதைவிட மிகத் தெளிவாகவும், மிகத் துல்லியமாகவும் அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் வந்துவிட்ட இந்தக் காலக் கட்டத்திலும் நேரடியாக பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும் என்பதில் நாம் பிடிவாதமாக இருப்பது ஏன்? இவற்றை எல்லாம் சமுதாயம் சிந்திக்கக் கடமை பட்டிருக்கிறது.
இஸ்லாம் ஒரு விஞ்ஞான மார்க்கம் என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு ஊக்கம் அளித்தது என்று சொல்கிறோம். குர் ஆனில் உள்ள கருத்துகள் விஞ்ஞானத்திற்கு முரண்படுவதில்லை என்று சொல்கிறோம். மூச்சுக்கு மூச்சு விஞ்ஞானம் என்று பேசிவிட்டு பிறை பார்க்கும் விஷயத்தில் இவ்வளவு தூரம் நடந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இருக்கிறது.
ஆகவே, ஒருகாலம் வர வேண்டும். இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாமிய விஞ்ஞானிகள், வானியல் நிபுணர்கள், இஸ்லாமிய சட்டவியல் மேதைகள் ஆகிய எல்லோரும் ஒன்றாகக் கூடி விஞ்ஞானத்தின் துணை கொண்டு முடிவு செய்வதில் மார்க்கத்தில் முரண்பாடு ஏதேனும் உள்ளதா என்று முடிவு செய்து சொல்ல வேண்டியது அவர்களின் பொறுப்பு. அந்தக் காலம் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது.
அப்படி ஒருகாலம் வருகிறவரை என்ன செய்ய வேண்டும்?
முஸ்லிம்களுக்கென்று ஒரு தலைமை இருக்க வேண்டும். அந்தத் தலைமைதான் இதற்கொரு முடிவைச் சொல்ல வேண்டும். ஆளுக்கு ஆள் ஒரு கருத்தைச் சொன்னால் குழப்பம்தானே மிஞ்சும்? ஆகவே, ஒரு தலைமை முடிவு செய்வதுதான் இதற்குப் பொருத்தமாக இருக்கும். நமது மாநிலத்தைப் பொருத்தவரை, தலைமைக் காஜியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் பொறுப்பாளர். அவருடைய கருத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. அவரவர்கள் முடிவு எடுத்துக் கொண்டு குழப்புவதைவிட இதுதான் சிறந்த வழி.
ஒருவேளை அவருடைய முடிவுகளில் நமக்கு சந்தேகம் இருக்கிறது என்றால் நாம் அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்யலாம். ஒரு தனிமனிதர் முடிவு எடுக்க வேண்டாம். ஒரு கமிட்டியை நிர்ணயம் செய்யுங்கள். ஹிலால் கமிட்டி, அந்தக் குழு அவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டும். அதனுடைய அடிப்படையில் அவர் முடிவு எடுக்க வேண்டும்.
ஆகவே, நாம் தோழர்களுக்குச் சொல்லிக் கொள்வது: தயவு செய்து இதை ஒரு பிரச்னை ஆக்காதீர்கள். இதற்காகச் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். ஒரே ஊரில் மூன்று பெருநாள் தொழுகை நடத்துகிறீர்களே, எந்த வகையில் இது நியாயம்? முஸ்லிம் உம்மத்தைப் பிளக்கிற ஒரு செயல் அல்லவா? முஸ்லிம் சமுதாயத்தைக் கேலிகுரியதாக்கும் செயல் அல்லவா? பிறர் பார்த்துச் சிரிக்கின்ற அளவுக்குச் செய்யும் ஒரு காரியம் அல்லவா? இப்படியெல்லாம் செய்வதற்கு மார்க்கத்தில் எங்கே அனுமதியிருக்கிறது? ஆகவே, சமுதாயத்தின் தலைமைதான் இதற்கான முடிவைச் சொல்வதற்கான அதிகாரம் பெற்றது. அதனை ஏற்றுக் கொள்வதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.
oOo
("அன்றாட வாழ்வில் இஸ்லாம்" நிகழ்ச்சியில் ரமளான் தொடர்பான சிறப்பு ஒளிபரப்பில் பிறை தொடர்பான ஒரு நேயரின் வினாவுக்கு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அளித்த விளக்கம்)
நன்றி: சமரசம் 1-15 ஜுலை 2012 / தொகுப்பு: ஜாவீத்
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான ஆக்கங்கள்:
நாள் காட்டியைக் கணக்கிடுவது!
http://www.satyamargam.com/1334
பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்!
http://www.satyamargam.com/1042
Comments:
கருத்துக்கள்
வேறொரு ஹதீத் மூலம் காலம் கடந்து இறுதியில் பிறை செய்தி கிடைத்தால் அதாவது (மாலையில்) உடனே பெருநாள் கொண்டாடலை மறுநாள் காலையில் கொண்டாட சொன்னார்கள் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நீங்கள் உதாரணம் காட்டிய ஹதீதுக்கும் பொருந்தும் அத்துடன் இன்னும் பிறை சம்பந்த ஹதீதையும் இணைத்துள்ளேன்.
1. நீங்கள் (ரமழான்மாத) பிறை கண்டு நோன்பு வையுங்கள்; (அடுத்த மாத வ்வால்) பிறை கண்டு நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால் பிறை கண்ணுக்குத் தென்படவில்லையயன ில் 30 நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர்கள்: இப்னு அப்பாஸ், இப்னு உமர், அபூஹுரைரா, ஜாபிர் பின் அப்துல்லாஹ், அபூபக்ரா(ரழி- அன்கும்)
ஆதாரங்கள் : புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மதி,அஹ்மத், அபூயஃலா, தப்ரானி, அல்பராஜ், இப்னுமாஜ்ஜா, தார குத்னீ, இப்ன ஹிப்பான் இப்னு குஸைமா, ஹாகிம்.
2. நபித் தோழர்கள் (நோன்பு வைக்க) பிறை பார்க்க முயன்றார்கள்; நபி(ஸல்) அவர்களிடம் இப்னு உமர்(ரழி) வந்து தான் பிறை பார்த்ததாகக் கூறினார்கள். இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பு:இப்னு உமர்(ரழி)
ஆதாரங்கள்: அபூதாவூத், தாரிமி, இப்னு, ஹிப்Vன், தாரகுத்னி, பைஹகீ, ஹாகிம்.
3. ரமழானின் கடைசி நாள் பற்றி நபித் தோழர்கள் முடிவெடுக் முடியாது குழம்பினர். (வ்வால் பிறை தென்படாததால் நோன்பு நோற்றனர்) அன்று இரு கிராமவாசிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “”நேற்று இரவு நாங்கள் பிறை கண்டோம் ” என சாட்சிக் கூறவே உடனே நபி(ஸல்) மக்களை நோன்பை விட்டுவிடும்படி யும், மறுநாள் பெருநாள் தொழுகைக் காக (ஈத்கா) தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ரஃப்யீ இப்னு கிராஷ்(ரழி)
ஆதாரங்கள்: அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்
மேலும் இந்த கீழ் கானும் ஹதீதை பாருங்கள்
4. நான் “ஷாம்’(சிரியா) நாட்டிற்குச் சென்று அங்குள்ள பணிகளை முடித்தேன். ரமழான் பிறை
வெள்ளிக்கிழமை பார்க்கப்பட்டது . நானும் பார்த்தேன். நோன்பு வைத்தோம். ரமழானின் இறுதியில் மதீனா வந்து சேர்ந்தேன். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் (பிரயாண நிலவரங்களை) விசாரித்தார்கள் . பிறை பார்த்ததைப் பற்றியும் கேட்டார்கள்.
இப்னு அப்பாஸ்(ரழி): (சிரியாவில்) நீங்கள் எப்போது பிறை பார்த்தீர்கள்?
நான்: வெள்ளிக்கிழமை இரவு பார்த்தோம்.
இப்னு அப்பாஸ்(ரழி): நீர் பார்த்தீரா?
நான்: நானும் பார்த்தேன்,மக்க ளும் பார்த்தார்கள், அனைவரும் நோன்பு நோற்றோம், (கலீபா) முஆவியா(ரழி) அவர்களும் நோன்பு வைத்தார்கள்.
இப்னு அப்பாஸ்(ரழி): நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பிறை பார்த்தோம்; எனவே அடுத்த பிறையை காணும் வரை அல்லது 30 நாட்கள் பூர்த்தியாகும் வரை நோன்பு நோற்போம்.
நான் : (கலீபா)முஆவியா( ரழி) அவர்கள்பிறை பார்த்ததும்,அவர ் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா?
இப்னு அப்பாஸ்(ரழி): அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்குக் கட்டளையிடவில்லை . அறிவிப்பாளார்: குபைப்(ரழி) ஆதாரங்கள் : முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்
இவ்வாறு நமக்கு கட்டளை இடவில்லை என்று சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு சிலர் தனித்துவம் காட்டுகிறார்கள்
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
எந்த நேரத்தில் என்ன தொழுகை? - www.satyamargam.com/1755
அன்புச் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
மேற்கண்ட சுட்டிலுள்ள கட்டுரையை அமைதியுடன் உள்வாங்கிப் படித்தபின் உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள்!
நீங்கள் தவறு தவறு என்று சொல்லுமளவுக்கு டாக்டர் ஹபீப் முஹம்மது மிகைப்படத் தவறாக ஏதும் சொல்லிடவில்லை.
தொழுகைகளின் நேரங்களை நபி (ஸல்) அவர்களுக்குக் கற்றுத்தர வந்த வானவ தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இரண்டாம் நாள் லுஹரைத் தொழவைத்த நேரம் ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் தொழவைத்துள்ளார்.
இரண்டாம் முறை தொழுவிக்கும்பே ாது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதல் நாள் அஸ்ருத் தொழுத நேரத்தில் லுஹரைத் தொழுவித்தார்கள ்...
பார்க்க கட்டுரையின் முதல் ஹதீஸ்: (நூல்கள் - திர்மிதீ 138, அபூதாவூத், அஹ்மத்)
தொழுகையின் நேரங்களை அறிவித்து பல ஹதீஸ்கள் பல நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவுசெய்யப்பட் டுள்ளன. அவற்றில் தாம் படித்தவற்றை நினைவில் இருந்ததை டாக்டர் ஹபீப் முஹம்மது பேசியுள்ளார். அவர் பேசியதில், லுஹ்ர் தொழுகையின் நேரத்திற்கு முரண் ஏதுமில்லை! ஆகவே, சத்தியமார்க்கம் அதைத் தருத்தவேண்டியதி ல்லை என்பது நமது கருத்து!
//(தவறு இன்னும் திருத்தப்படாது இருப்பதை அறிகிறேன்)//
அது தவறே அல்ல, அதனால் திருத்தம் வேண்டியதில்லை!
மீண்டும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக், மேற்கண்ட கட்டுரையை ஆழமாகப் படித்து தொழுகைகளின் நேரங்களை அறிந்திடுக.
நன்றி!
நான் சத்தியமார்க்கம் டாட் காம் தளத்தினருடன் பேசிக்கொண்டு உள்ளேன். இடையில் நீங்கள் வருகிறீர்கள்..!
முன்னரே என்னைப்பற்றி சொல்லி விடுகிறேன்... நான் எந்த ஜமாத்திலும் எந்த மத்ஹபிலும் இல்லை. நான் எந்த தலைவருக்கும் ஆதரவாளர் இல்லை..! டாக்டர் ஹபீப் முஹம்மத் அவர்களிடம் மிகுந்த மரியாதை வைத்துள்ளவன்..!
இந்த அடிப்படையில் எனது கருத்தை நோக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..!
// ஒருவருடைய உயரமும், அவருடைய நிழலும் சம அளவில் வந்து விட்டால் லுஹர் நேரம் ஆரம்பமாகி விட்டது.//----- --தவறு....!
ஒருவருடைய உயரமும், அவருடைய நிழலும் சம அளவில் வந்து விட்டால்... அந்த நேரத்தில் லுஹர் நேரம் முடிகிறது..! அசர் நேரம் ஆரம்பம் ஆகிறது...! இந்த இடத்தில் முதல் தடவை அசரையும் அடுத்த தடவை லுஹரையும் தொழுவித்தார்கள் என்றே அந்த ஹதீஸில் புரிந்து கொள்ள வழி உள்ளது..!
(முக்கிய குறிப்பு:-எனது தாய்மொழி தமிழ். எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பயின்றுள்ளேன்)
/// அஸருடைய நேரம் எப்போது ஆரம்பம் ஆகிறது? தன்னுடைய உயரத்தைவிட, தன்னுடைய நிழல் இரண்டு மடங்கு இருந்தால் அஸர் நேரம் ஆரம்பம் ஆகிறது. ///---தவறு...!
இப்படி ஹனபி மத்ஹப் காரர்கள் இதுதான் அசரின் ஆரம்பம் என் தவறாக புரிந்து வைத்துள்ளனர்..! இப்போது எந்த வக்த் நேரமும் ஆரம்பிக்கவும் இல்லை.. எந்த வக்த் நேரமும் முடியவும் இல்லை...! ஜஸ்ட் முன்னர் ஒரு மடங்கு நிழலில் ஆரம்பித்த அசர் வக்த் இன்னும் தொடர்கிறது என்றே அந்த ஹதீஸில் புரிய வழி உள்ளது...!
///மஃக்ரிபு நேரம் எப்போது ஆரம்பம் ஆகிறது? ஹதீஸின்படி, மஞ்சள் நிறம் சூரியனில் உண்டாகி விட்டால் மஃக்ரிபு உண்டாகி விடுகிறது.///-- -- தவறு...! அஸ்தஃபிருல்லாஹ் ...! சூரியன் மறையும் முன்பே மஃரிபா...?!? எங்கே இப்படி உள்ளது..? இரண்டு தடவையும் மஃரிப் அதன் ஒரே ஆரம்ப நேரத்தில் தானே தொழப்ப்ட்டுள்ளது...?!?
நான் அறிந்த வரை.... சூரியன் மறைந்த பின்னரே மஃரிப்... வக்த்..!
சகோ.முஸ்லிம்,
உங்கள் லிங்கில் சென்று தொழுகை நேரங்களை முதலில் நீங்கள் விழிப்புடன் இருந்து ஆழமாக படித்து அறிந்து தெளிந்துகொள்க.. ! அதன் பின்னர் டைப்படிக..!
சுபஹானல்லாஹ்..! சத்தியமார்க்கம் டாட் காம் தளத்தினர் மவுனமாக உள்ளது ஆச்சர்யமாக உள்ளது...!
///////////////////////////////////நீங்கள் எடுத்து வைத்தது//////////////////////////////////////////
Pls see the reference given. www.satyamargam.com/1042
அபூ உமைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ், "மேகமூட்டமாக இருந்ததால் ஷவ்வால் (பெருநாள்) பிறை தென்படவில்லை. எனவே அன்றைய தினத்தை நோன்பாகக் கருதி நோற்றோம். மாலை நேரம் முடியும் தருணத்தில் வணிகர் கூட்டம் ஒன்று வந்து, முஹம்மது (ஸல்) அவர்களிடம், நேற்று மாலை அவர்கள் பிறை பார்த்ததாகச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் உடனடியாக நோன்பைத் துறந்து மக்களைப் பெருநாள் கொண்டாட ஆணையிட்டார்கள்" அஹ்மது, அபுதாவுத், இப்னுமாஜா, நஸயீ, பைஹக்கீ, தாரக்குத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான் ஆகியற்றில் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.
/////////////// /////////////// //////நீங்கள் எடுத்து வைத்தது/////////////////////////////////////////////
ஆனால்................................
أَنَّهُمْ كَانُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ آخِرِ النَّهَارِ , فَجَاءَ رَكْبٌ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ , فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ يُفْطِرُوا وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ
“மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம ். அப்போது பகலின் இறுதிப்பகுதியில ் ஒரு வாகனக் கூட்டத்தினர் வந்து, 'நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்' என்று கூறினர். நபி صلى الله عليه وسلم நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுமிடத்திற்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
(அபூஉமைர் (رضي), அபூதாவூது, அஹ்மது, தாரகுத்னி)
இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள أَمَرَهُمُ என்ற வார்த்தைக்கு "அவர்களுக்கு"=வ ாகன கூட்டத்திற்குத் தான் நோன்பை விடுமாறு கட்டளை இட்டதாகவும் ,மேலும் மறுநாள் அவர்களது தொழுகை இடத்திற்கு செல்லுமாறு நபிصلى الله عليه وسلم அவர்கள் "அவர்களுக்கு"=வ ாகன கூட்டத்திற்குத் தான் கட்டளையிட்டதாகவ ும், நபிصلى الله عليه وسلم அவர்களும் சஹாபாக்களும் நோன்பை விடவில்லை என்றும் புரிய இடம் உள்ளதே..?
===================மேலே உள்ள இரண்டு தர்ஜுமாவில் எது சரி......???
////////////////////////அதைக் கேட்டதும் உடனடியாக நோன்பைத் துறந்து மக்களைப் பெருநாள் கொண்டாட ஆணையிட்டார்கள்" /////////////// ////////////--- ------------இது எங்கே உள்ளது....???
ஒன்றுக்கு ஒன்று முரணான இரு தர்ஜுமாக்களில் எதை அப்பாவி மக்கள் பின்பற்ற வேண்டும்...???
தயவு செய்து அரபி இலக்கண புலமை பெற்றோர் யாரேனும் இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்களேன்..!
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் எடுத்தெழுதியுள் ள ஹதீஸில் உள்ள 'அமரஹும்' (அவர்களுக்குக் கட்டளையிட்டார்க ள்) என்பது மதீனாவில் வசித்த நபித் தோழர்களுக்குத்த ான் பொருந்துவதற்கு அதிக வாய்ப்பிருக்கிற து. ஏனெனில், "பிறை கண்டு நோன்பைத் தொடங்குங்கள்; (மறு)பிறை கண்டு நோன்பை முடித்துக் கொள்ளுங்கள்" எனும் நபிமொழிக்கொப்ப, வணிகக் கூட்டம் பிறை கண்ட உடனேயே நோன்பை முடித்துக்கொண்ட ே பயணப்பட்டிருப்ப ார்கள் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.
எப்போதும் மனம் தான் விரும்பும் அர்த்தங்களையே எதிர்பார்க்கிறத ு.
அட, பொதுவாத்தான் சொல்றேங்க..!
அன்புச் சகோதரர் ஆஷிக்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
டாக்டர் ஹபீப் முஹம்மது அவர்களின் மேற்காணும் விளக்கத்திலுள்ள பிழையைச் சுட்டியமைக்கு ஜஸாக்கல்லாஹு கைரா!
ஹதீஸ்களின் தெளிவின்படி சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததிலிருந் து ஒன்றின் நிழல் அதன் உயரத்தின் அளவை எட்டும்வரை லுஹ்ருடைய நேரம் உள்ளது. ஒன்றின் நிழல் சம அளவிலிருந்து சற்றே கூடும்போது தொடங்கி சூரியன் மறைவதற்குச் சற்றுமுன்வரை அஸ்ருடைய நேரமாகும். சூரியன் மறைந்து செம்மேகம் தோன்றியதிலிருந் து மக்ரிபு நேரம் தொடங்கி, செம்மேகம் மறையும்வரை தொடர்கிறது.
மேற்காணும் திருத்தத்தை கட்டுரைக்குள் நாங்கள் தனியாகக் குறிப்பிடுவதோடு இந்த ஆக்கம் வெளியான சமரசம் இதழுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்.
தங்களின் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் பிழை திருத்தங்களுக்க ும் அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிவானாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
////மேற்காணும் திருத்தத்தை கட்டுரைக்குள் நாங்கள் தனியாகக் குறிப்பிடுவதோடு இந்த ஆக்கம் வெளியான சமரசம் இதழுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம். ////
------ஜசாக்கல்லாஹு க்ஹைர், அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிவானாக..!
========================================================
சகோ.சஃபி,
வ அலைக்குமுஸ்ஸலாம ்.
//// ஹதீஸில் உள்ள 'அமரஹும்' (அவர்களுக்குக் கட்டளையிட்டார்க ள்) என்பது மதீனாவில் வசித்த நபித் தோழர்களுக்குத்த ான் பொருந்துவதற்கு அதிக வாய்ப்பிருக்கிற து. ஏனெனில், "பிறை கண்டு நோன்பைத் தொடங்குங்கள்; (மறு)பிறை கண்டு நோன்பை முடித்துக் கொள்ளுங்கள்" எனும் நபிமொழிக்கொப்ப, வணிகக் கூட்டம் பிறை கண்ட உடனேயே நோன்பை முடித்துக்கொண்ட ே பயணப்பட்டிருப்ப ார்கள் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.////
----------இதுவே எனக்கும் சரியான கருத்தாக படுகிறது சகோ.சஃபி. ஏற்றுக்கொள்கிறே ன். ஜசாக்கல்லாஹு க்ஹைர், அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரிவானாக..!
////எப்போதும் மனம் தான் விரும்பும் அர்த்தங்களையே எதிர்பார்க்கிறத ு. ////----இல்லை சகோ. அப்படி அல்ல. இஸ்லாத்தை சரியாக விளங்க முற்படும் ஒரு முஸ்லிம்க்கு இப்படி ஒருக்காலும் எண்ணம் இருக்கவே கூடாது..! என்னிடத்தில் அப்படி இல்லை.
சகோ.சஃபி அவர்களின் விளக்கத்தால்... இதுவரை நான் கொண்ட முடிவில் சிறு மாற்றம் மட்டுமே ஏற்பட்டு இருக்கிறது...!
அதாவது, சகோ.அப்துல் அசீஸ் மேலே எடுத்து வைத்த அந்த வேறொரு ஹதீஸில், "சிரியா டு மதினா டிஸ்டன்ஸ்... பிறை" புறக்கணிக்கப்பட ுகிறது.
தலைநகரில் சிரியாவில் பிறைபார்த்த இந்த செய்தி முஆவியா ரலி... ஒரு சஹாபி கலீஃபவால் தன் ஆளுகைக்குட்பட்ட மதீனாவிற்கு எத்தி வைக்கப்படவில்லை ..! இச்செயல் மதினாவில் உள்ள இன்னொரு இப்னு அப்பாஸ் ரலி... எனும் சஹாபியால் பிறை தகவலை எத்தி வைக்காத இச்செயல் 'நபிவழிக்கு முரண்' என்று சுட்டிக்காட்டபப ்படவும் இல்லை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்..!
அதேநேரம், மதினாவின் புறநகரின் கிராமவாசிகள் மறுநாள் காலை வந்து பிறை பார்த்த தகவல் சொல்லும்போது அது நபி ஸல்... அவர்களால் ஏற்றுக்கொள்ளப்ப டுகிறது. மதிநாவை ஒட்டிய கிராமவாசிகள் என்றால்.... அதிக பட்சம் 30 கிலோமீட்டர் என கொள்ளலாம்..!
அதேபோல, வணிகர் கூட்டம் / வாகனக்கூட்டம் முதல் நாள் பிறை பார்த்துவிட்டு சுமார் 22 மணி நேர பயணம் மேற்கொண்டு வந்தவர்கள். வாணிகர்கள்-வாகன ம் என்றால் சரக்கு எடுத்துட் செல்ல ஒட்டகம்தான் வாகனம்... பொதுவாக இவை சரக்குடன் நடந்து செல்வது வழக்கம். இவர்கள் எந்த இடத்தில் பிறை பார்த்தார்கள் என்ற தகவல் இல்லை. அந்தகாலத்தில் 22 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் ஒட்டகம் நடக்குமோ அதை எடுக்கலாம்..! சராசரியாக சரக்கு ஒட்டக நடை வேகம் மணிக்கு ஆறு ~ ஏழு கிலோ மீட்டர். இடையில் சாப்பாட்டுக்கு/ தொழுகைக்கு நிறுத்திய நேரம் போக 20 X 7 = 140 கிலோ மீட்டர்... அதிகபட்சம் 150 கிலோமீட்டர். இந்த அளவுக்கு இவர்கள் கிழக்கு புறத்திலிருந்து வந்து இருந்தால்... இவர்கள் பார்த்த பிறை நிச்சயம் மேகமூட்டம் இல்லாதிருந்தால் மதீனாவுக்கு தெரிந்திருக்கும ்..!
ஒரு வேளை, இந்த வாகன கூட்டம் மேற்கிலிருந்து வந்து இருந்தால்... மதினாவுக்கும் அந்த மேற்கில் பிறை பார்த்த இடத்துக்கும் உள்ள 150 கிலோ மீட்டரில் சந்திரமறைவு சூரிய மறைவு இவற்றுக்கு இடையேயான நேரங்களில் ஓரிரு நிமிடங்களை விட அந்த அளவுக்கு பெரிய மாற்றம் இருந்திருக்காது ..! எனவே இவர்களின் பிறையை நபி ஸல் அவர்களும் மதினாவாசிகளும் ஏற்றுக்கொண்டது அந்த சிரியா-மதினா ஹதீஸுக்கு எவ்விதத்திலும் மாற்றம் அல்ல...!
மேலும் சிரியா-மதினா ஹதீஸில் உள்ள அதே முஆவியா ரலி அவர்களும் இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் இந்த "வாகன கூட்டம்/கிராம வாசிகள் பிறை பார்த்த தகவல் ஏற்றுக்கொள்ளல்" விஷயங்கள் அறியாமல் இருந்திருப்பார் கள் என்றும் சொல்ல முகாந்திரம் இல்லை.
எனவே, இரண்டும் நமக்கு சொல்ல வேண்டிய செய்தியை... எவ்வளவு தூரம் இருந்தால் பிறை செய்தியை ஏற்கலாம், ஏற்கக்கூடாது" என்று மிகவும் சரியாகவே சொல்லி இருக்கின்றன..! நாம் தான் சரியாக விளங்கிக்கொள்ளா மல், ஒன்றை மற்றொன்றுக்கு முரண் போல எண்ணுகிறோம்..!
(முக்கிய குறிப்பு: ஒரே தீர்க்க ரேகையில் தூரமாக இருப்போருக்கும் ஒரே நேரத்தில் பிறை தெரியும் என்பதும் தவறு)
// பிறை கண்டு நோன்பைத் தொடங்குங்கள்; (மறு)பிறை கண்டு நோன்பை முடித்துக் கொள்ளுங்கள்" //
// கண்ட உடனேயே நோன்பை முடித்துக்கொண்ட ே பயணப்பட்டிருப்ப ார்கள் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.//
என்று சகோதரர் சஃபி. அவர்களின் கருத்தை ஆதரித்து ஒரு முடிவுக்கு வருகிறீர்கள். சரியென்று ஒரு புறம் வையுங்கள். மறுபுறம் இன்னொரு ஹதீத் நான் பதிந்து உள்ளேன்.அதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள் .
ரமழானின் கடைசி நாள் பற்றி நபித் தோழர்கள் முடிவெடுக் முடியாது குழம்பினர். (வ்வால் பிறை தென்படாததால் நோன்பு நோற்றனர்) அன்று இரு கிராமவாசிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “”நேற்று இரவு நாங்கள் பிறை கண்டோம் ” என சாட்சிக் கூறவே உடனே நபி(ஸல்) மக்களை நோன்பை விட்டுவிடும்படி யும், மறுநாள் பெருநாள் தொழுகைக் காக (ஈத்கா) தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்க ள்.
அறிவிப்பவர்: ரஃப்யீ இப்னு கிராஷ்(ரழி)
ஆதாரங்கள்: அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்
இந்த ஹதீத் அடிப்படையில் கருதுவதைவிட திட்டவட்டமாக மறுநாள் பெருநாள் என்று ஒரு முடிவுக்கு வரனும். கருதும் என்ற நிலையில் இருக்கக் கூடாது.உள்ளூர் வாசிகளுக்கும் அதே தான் என்பதும் அடக்கம்.
// எடுக்கலாம்..! சராசரியாக சரக்கு ஒட்டக நடை வேகம் மணிக்கு ஆறு ~ ஏழு கிலோ மீட்டர். இடையில் சாப்பாட்டுக்கு/ தொழுகைக்கு நிறுத்திய நேரம் போக 20 X 7 = 140 கிலோ மீட்டர்... அதிகபட்சம் 150 கிலோமீட்டர். இந்த அளவுக்கு இவர்கள் கிழக்கு புறத்திலிருந்து வந்து இருந்தால்... இவர்கள் பார்த்த பிறை நிச்சயம் மேகமூட்டம் இல்லாதிருந்தால் மதீனாவுக்கு தெரிந்திருக்கும ்..! //
இது போன்ற கணிப்பை நீங்கலாக போட்டுக் கொண்டு ஒரு தீர்மானம் இவ்வளவு கிலோமீட்டர்ஒட்ட கம் நடந்தது என்று ஊர்ஜிதமாக
சொல்லமுடியாது. இன்னும் அந்தக் கணிப்பை கொண்டு இவ்வளவு கிலோமீட்டர் உட்பட்ட செய்தியை தான் எடுத்துக் கொல்லனும். இதற்க்கு மேல் தூரம் அதிகம் இருந்தால் தகவலை ஏற்கக் கூடாது என்று நீங்கள் தெளிவான ஹதீத் ஆதாரம் இல்லாமல் வெறும் ஊகத்தை பதியமுடியாது.
// மேலும் சிரியா-மதினா ஹதீஸில் உள்ள அதே முஆவியா ரலி அவர்களும் இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் இந்த "வாகன கூட்டம்/கிராம வாசிகள் பிறை பார்த்த தகவல் ஏற்றுக்கொள்ளல்" விஷயங்கள் அறியாமல் இருந்திருப்பார் கள் என்றும் சொல்ல முகாந்திரம் இல்லை. //
முகாந்திரம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள். வேறு வகையில் ஏதாவது ஒரு செயலை தகவல் அறிந்து கிடைத்த செய்தி மூலம் பிறை விஷயத்தில் இரு சஹாபாக்களும் செயல் படுத்தினார்கள். என்ற ஆதாரம் நீங்கள் பதியவில்லை.
// எனவே, இரண்டும் நமக்கு சொல்ல வேண்டிய செய்தியை... எவ்வளவு தூரம் இருந்தால் பிறை செய்தியை ஏற்கலாம், ஏற்கக்கூடாது" என்று மிகவும் சரியாகவே சொல்லி இருக்கின்றன..! நாம் தான் சரியாக விளங்கிக்கொள்ளா மல், ஒன்றை மற்றொன்றுக்கு முரண் போல எண்ணுகிறோம்..! //
நான் : (கலீபா)முஆவியா( ரழி) அவர்கள்பிறை பார்த்ததும்,அவர ் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா?
இப்னு அப்பாஸ்(ரழி): அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்குக் கட்டளையிடவில்லை .
இவ்வாறு நமக்கு கட்டளை இல்லை என்று தானே ஹதீத் இருக்கின்றது. தூரம் என்று இல்லையே!
// உடனடியாக நோன்பைத் துறந்து மக்களைப் பெருநாள் கொண்டாட ஆணையிட்டார்கள்" அஹ்மது, அபுதாவுத், இப்னுமாஜா, நஸயீ, பைஹக்கீ, தாரக்குத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான் ஆகியற்றில் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.
/////////////// /////////////// //////நீங்கள் எடுத்து வைத்தது//////// /////////////// /////////////// /////// //
// 'நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்' என்று கூறினர். நபி صلى الله عليه وسلم நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுமிடத்திற்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்க ள். //
மக்களுக்கு கட்டளை இட்டார்களா? வந்தவர்களுக்கு கட்டளை போட்டார்களா? என்று துல்லியம் தேடினீர்கள். ஹதீதின் மூலத்தில் முதற்கொண்டு '' أَمَرَهُمُ '' என்றெல்லாம் பதிந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதே உறுதிப்பாடு இங்கில்லையே ! ஏன்?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
ஜஸாக்கல்லாஹு கைரன்!
மிகத் தெளிவான விளக்கம். சத்தியமார்க்கம் .காமிற்கு நன்றி!
மஞ்சள் நெறத்தைப் பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே.
" :-)) "
சகோ.அப்துல் அஜீஸ்,
//அதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள் . //---:-), இல்லை... அதையும் எனது பின்னூட்டத்தில் இப்படி......... ..........///கி ராமவாசிகள் மறுநாள் காலை வந்து பிறை பார்த்த தகவல் சொல்லும்போது அது நபி ஸல்... அவர்களால் ஏற்றுக்கொள்ளப்ப டுகிறது.///---- --------------- -----என்றுதான் நான் சொல்லிவிட்டேனே. .? இதில் உங்கள் நிலைபாடே எனதும் என்று உங்களுக்கு புரியவில்லையா சகோ..? எனது பின்னூட்டத்தை மீண்டும் நன்றாக படியுங்கள்..!
///இன்னும் அந்தக் கணிப்பை கொண்டு இவ்வளவு கிலோமீட்டர் உட்பட்ட செய்தியை தான் எடுத்துக் கொல்லனும். இதற்க்கு மேல் தூரம் அதிகம் இருந்தால் தகவலை ஏற்கக் கூடாது என்று நீங்கள் தெளிவான ஹதீத் ஆதாரம் இல்லாமல் வெறும் ஊகத்தை பதியமுடியாது.// /-------------- --------------- --------------- -------------அப ்படி ஒரு சஹீ ஆதாரம் இருந்தால் பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக ஏற்க தயாராக உள்ளேன் நான்..!
/////வேறு வகையில் ஏதாவது ஒரு செயலை தகவல் அறிந்து கிடைத்த செய்தி மூலம் பிறை விஷயத்தில் இரு சஹாபாக்களும் செயல் படுத்தினார்கள். என்ற ஆதாரம் //////--------- --------------- --------------- -அப்படி ஒரு சஹீ ஆதாரம் இருந்தால் பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக ஏற்க தயாராக உள்ளேன் நான்..!
/////////தூரம் என்று இல்லையே! ////////------- --------------- --------------- -----------தூரம ் பற்றி அப்படி ஒரு சஹீ ஆதாரம் இருந்தால் பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக ஏற்க தயாராக உள்ளேன் நான்..!
///////////////////அதே உறுதிப்பாடு இங்கில்லையே ! ஏன்? /////////////// /////---------- -----------வாகன கூட்டம் ஹதீஸுக்கு இருந்ததை போல, மற்ற இரு சிரியா/மதினா, கிராமவாசிகள் ஆகிய அந்த இரண்டு ஹதீஸ்களுக்கும் இருவேறு எதிர் பொருளை தரும் படியான தர்ஜுமா இருந்தால் அவற்றை இங்கே பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக அவற்றுக்கு இடையே எனது உறுதிப்பாட்டை காண்பிக்க தயாராக உள்ளேன் நான்..!
ஆனால்..... அதுவரை...???
நம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து நாம் எந்த முடிவும் எடுக்கவே கூடாதா...???
நபி ஸல் அவர் அறிவித்தார்கள்...
"பேரிச்சை பழம் கொண்டு நோன்பு திறங்கள். அது கிடைக்காவிட்டால ் தண்ணீரை வைத்து நோன்பு திறங்கள்" ------என்று ஹனஸ் ரலி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களில் இருக்கின்றது என்பதை அறிந்த ஒருவர்.........
எவ்வளவு முயற்சித்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில் அவருக்கு அவை இரண்டும் கிடைக்கப்பெறவில ்லை என்றால்...
அவரிடம் ஹலாலான சம்போசா மட்டுமே இருக்கிறது என்றால்....
இந்நிலையில் 'அதை வைத்து அவர் நோன்பு திறக்கலாம்' என்று நான் முடிவு செய்தால்....
நீங்கள்.....
"ஊகத்தை பதியமுடியாது...
சம்போசாவுக்கு ஆதாரம் எங்கே...
அது தண்ணீரிலா பொறிக்கப்பட்டது ...
குழைத்த மாவில் சிறிது நீர் இருந்தாலும் அது எண்ணையில் ஆவி ஆகி இருக்காதா...
உள்ளே உள்ள மசாலாவில் பேரீத்தம் பழம் சேர்க்கப்பட்டுள ்ளதா...
இல்லையேல் சம்போசாவில்நோன் பு திறப்பது எப்படி ஆகுமானதாகும்...
நோன்பு திறக்க மூன்றாவது அயிட்டம் சம்போசா என்ற ஆதாரம் எங்கே..."
-----என்றெல்லாம ் கேட்பீர்களா..?!
வளைத்து வளைத்து கேள்விகள் கேட்பது சுலபம் சகோ.அப்துல் அஜீஸ்..! கடைசியில் சம்போசாவை கையில் வைத்துக்கொண்டு நோன்பு திறக்காமல் உக்கார்ந்து கொண்டு இதற்கு எல்லாம் ஆதாரங்கள் தேடிவர ஓட வேண்டிய நிலையில் நாம்..!
ஆனால், இதுபோன்ற கேள்விகள், மூஸா நபி (அலை) அவர்களிடம் காளைக்கன்று விஷயத்தில் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு, பதில் பெற்று... இறுதியாக அதனால் தங்களுக்கே இக்கட்டை உருவாக்கிக்கொண் ட அந்த சமுதாயம் மாதிரி நாமும் ஆகிவிடக்கூடாது. .! அல்லாஹ் நம்மை காப்பற்ற துவா செய்கிறேன்..!
// தெளிவான ஹதீத் ஆதாரம் இல்லாமல் வெறும் ஊகத்தை பதியமுடியாது.// /-------------- --------------- --------------- -------------அப ்படி ஒரு சஹீ ஆதாரம் இருந்தால் பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக ஏற்க தயாராக உள்ளேன் நான்..! //
ஊகத்தை பயன் படுத்தலாம் என்று ஊகித்து வரைந்த நீங்கள் தான் முதலில் ஆதாரம் தரனும். நான் அந்த ஒட்டகக் கூட்டம் கொடுத்த செய்தியின் அடிப்படையில் தகவல் மட்டுமே போதுமானது என்கிறேன். நபியும் எங்கிருந்து வந்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை அதனால் தூரம், தொலைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும் தெளிவில்லாத சந்தேகதிர்க்கிட மானவற்றை பின்பற்றகூடாது. என்பது அனைவரும் அறிந்தது. தங்களின் கூற்று ஐயத்திர்க்குட்ப ட்டவை என்று எவரும் சொல்லமுடியாது.க ாரணம் சந்தேகத்திற்கு உட்பட்டவை என்பது பலகீனமான ஹதீதை குறிக்கும்.ஆனால ் நீங்கள் செய்தது வெறும் வீண் கற்பனைகளே!
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாத ோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார ்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில் லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
மேற்கண்ட வசனதிற்கொப்ப ஒரு சாராரை அல்லாஹ் கற்பனை செய்பவர்கள் என்று சொல்கிறான் அவர்களை போல் நீங்கள் கற்பனை செய்தால் அது உங்களை சொன்ன வசனம் இல்லை என்றாலும் உங்கள் அனுமானம் பின்பற்றுவதற்கு ரிய சட்டமாக எடுக்கப் படாது.
// /////வேறு வகையில் ஏதாவது ஒரு செயலை தகவல் அறிந்து கிடைத்த செய்தி மூலம் பிறை விஷயத்தில் இரு சஹாபாக்களும் செயல் படுத்தினார்கள். என்ற ஆதாரம் //////--------- --------------- --------------- -அப்படி ஒரு சஹீ ஆதாரம் இருந்தால் பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக ஏற்க தயாராக உள்ளேன் நான்..! //
எதுவுமே கொடுக்கமாட்டீர் கள் உங்களுக்கு நாங்கள் ஆதாரம் தேடி கொடுக்கனும் அது வரைக்கும் நீங்களாகவே !
// பிறை பார்த்த தகவல் ஏற்றுக்கொள்ளல்" விஷயங்கள் அறியாமல் இருந்திருப்பார் கள் என்றும் சொல்ல முகாந்திரம் இல்லை. //
என்று எப்படி எழுதினீர்கள். எல்லாம் தெரிந்திருக்கனு ம் என்ற தோரனையை இந்த இரு சஹாபாக்கள் (ரலி) விஷயத்தில் ஏன்? ஏற்படுத்துகிறீர ்கள். நான் தேடிப்பார்த்தேன ் எங்கேயுமே இல்லை என்றால் மேலே உள்ள உங்கள் வரிகளை வாபஸ் வாங்கிக்கொள்வீர ்களா?
// /////////தூரம் என்று இல்லையே! ////////------- --------------- --------------- -----------தூரம ் பற்றி அப்படி ஒரு சஹீ ஆதாரம் இருந்தால் பதியுங்கள் சகோ.அப்துல் அஜீஸ், முதல் ஆளாக ஏற்க தயாராக உள்ளேன் நான்..!//
தூரம் பற்றி நான் எழுதலை நீங்கள் தான். பாருங்கள் கீழே
// நமக்கு சொல்ல வேண்டிய செய்தியை... எவ்வளவு தூரம் இருந்தால் பிறை செய்தியை ஏற்கலாம், ஏற்கக்கூடாது" // --- முஹம்மத் ஆஷிக் July 25, 2012 05:௩௩
இது உங்கள் வரி தானே என்னுமோ நான் எழுதின மாதிரி அதுக்கு நானே ஆதாரம் கொடுக்கனும் போல் நீட்டமா கோடு போட்டால் சரியாகிடுமா?
// இருவேறு எதிர் பொருளை தரும் படியான தர்ஜுமா இருந்தால் அவற்றை இங்கே பதியுங்கள் //
இருவேறு எதிர்பொருள் ஹதீதில் இருந்தால் மட்டும் பார்க்கனும் என்பது கிடையாது எதிர் பொருளே! இல்லாத இந்த ஆதாரப் பூர்வமான ஹதீதுக்கு உங்களின் சுய கற்பனை விளக்கத்தை கொண்டு மறுக்கப் பார்த்தீர்கள் அதை தான் குறிப்பிட்டேன். பாருங்கள் கீழே
// எனவே, இரண்டும் நமக்கு சொல்ல வேண்டிய செய்தியை... எவ்வளவு தூரம் இருந்தால் பிறை செய்தியை ஏற்கலாம், ஏற்கக்கூடாது" என்று மிகவும் சரியாகவே சொல்லி இருக்கின்றன..! நாம் தான் சரியாக விளங்கிக்கொள்ளா மல், ஒன்றை மற்றொன்றுக்கு முரண் போல எண்ணுகிறோம்..! // -- முஹம்மத் ஆஷிக் July 25, 2012 05:௩௩
// ஆனால்..... அதுவரை...???
நம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து நாம் எந்த முடிவும் எடுக்கவே கூடாதா...??? //
யார் வேண்டாம் என்றது உங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்பியுங்கள்.
// எவ்வளவு முயற்சித்தும் ஒரு குறிப்பிட்ட சூழலில் அவருக்கு அவை இரண்டும் கிடைக்கப்பெறவில ்லை என்றால்...
அவரிடம் ஹலாலான சம்போசா மட்டுமே இருக்கிறது என்றால்....
இந்நிலையில் 'அதை வைத்து அவர் நோன்பு திறக்கலாம்' என்று நான் முடிவு செய்தால். நீங்கள்..... //
சமோசா ஹலால் என்ற வகையில் சாப்பிடலாம். ஆனால் அந்த சமோசா மட்டும் எதுவுமே இல்லாத சூழலில் எப்படி வந்தது என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
// வளைத்து வளைத்து கேள்விகள் கேட்பது சுலபம் //
வளைத்து வளைத்து நான் கேட்க்க மாட்டேன் அதுக்காக கர்ப்பனைகளை கட்டவிழுதுவிட்ட தை எல்லாம் கேட்டுக் கொண்டு தலையாட்டமாட்டேன ்
// ஆனால், இதுபோன்ற கேள்விகள், மூஸா நபி (அலை) அவர்களிடம் காளைக்கன்று விஷயத்தில் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு, //
மூஸா நபி போல இங்கே யாரும் நபியாக இல்லை இமாம்கள் , ஆலிம்கள் , யாராக இருந்தாலும் கேள்வி கேட்டால் பதில் சொல்லனும்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
நீங்க என்ன சொல்ல வறீங்க என்றே எனக்கு புரியலை. குழப்புது. எனவே சிம்பிளா தெளிவா எனது நிலை இதுன்னு சொல்லி உங்க நிலை என்னன்னு கேக்குறேன். ஓகே..?
சம்பவம் ஒண்ணு.
நாம் மதினாவில் இருக்கோம் என்று வையுங்கள்.
மேகமூட்டம். ஷவ்வால் பிறை தெரியலை. எனவே, நாம் எல்லாரும் முப்பதாம் ரமளான் நோன்பில் இருக்கோம். அன்று காலை மதினா புறநகர் கிராமவாசிகள் நேற்று ஷவ்வால் பிறை பார்த்த செய்தியை சொல்கின்றனர்.
நான் ஏற்றுக்கொண்டு நோன்பை விட்டுவிட்டு அன்றே பெருநாள் தொழுகைக்கு போய் விடுவேன்.
நீங்கள் என்ன செய்வீர்கள்...???
சம்பவம் ரெண்டு.
நாம் மதினாவில் இருக்கோம் என்று வையுங்கள்.
மேகமூட்டம். ஷவ்வால் பிறை தெரியலை. எனவே, நாம் எல்லாரும் முப்பதாம் ரமளான் நோன்பில் இருக்கோம். அன்று மாலை ஒரு ஒட்டக வாகன வணிகர் கூட்டம் நேற்று ஷவ்வால் பிறை பார்த்த செய்தியை சொல்கின்றனர். நான் ஏற்றுக்கொண்டு நோன்பை விட்டுவிட்டு அன்று பெருநாள் அறிவித்துவிட்டு மறுநாள் பெருநாள் தொழுகைக்கு போய் விடுவேன்.
நீங்கள் என்ன செய்வீர்கள்...???
சம்பவம் மூன்று.
நாம் மதினாவில் இருக்கோம் என்று வையுங்கள்.
ஷாபான் 29 இல் வெள்ளிக்கிழமை பிறை தெரியலை. எனவே, நாம் எல்லாரும் முப்பதாம் ஷஅபானில் புகுந்துவிட்டு. .. அடுத்த நாளில் இருந்து ரமளான் நோன்பு நோற்கிறோம். அன்று சனிக்கிழமை பிறையையும் பார்க்கிறோம். சில நாட்கள் கழித்து சிரியாவில் இருந்து வந்த ஒருவர் வெள்ளிக்கிழமையே பிறை பார்த்துவிட்டதா க சொல்றார். அவர் கூடவே நமது கலீபாவும் , மக்களும் பார்த்ததாக சொல்றார். நான் அவரின் சிரியா வெள்ளிக்கிழமை பிறை தகவலை ஏற்கமாட்டேன். எனக்கு நான் மதினாவில் பார்த்த சனிக்கிழமை பிறைதான் பின்பற்ற வேண்டும் என்பேன்.
நீங்கள் என்ன செய்வீர்கள்...???
அவ்ளோதான் மேட்டர்..!
மா சலாம்.
// சம்பவம் ஒண்ணு.
நாம் மதினாவில் இருக்கோம் என்று வையுங்கள்.
மேகமூட்டம். ஷவ்வால் பிறை தெரியலை. எனவே, நாம் எல்லாரும் முப்பதாம் ரமளான் நோன்பில் இருக்கோம். அன்று காலை மதினா புறநகர் கிராமவாசிகள் நேற்று ஷவ்வால் பிறை பார்த்த செய்தியை சொல்கின்றனர்.
நான் ஏற்றுக்கொண்டு நோன்பை விட்டுவிட்டு அன்றே பெருநாள் தொழுகைக்கு போய் விடுவேன்.
நீங்கள் என்ன செய்வீர்கள்...? ?? //
இந்த உதாரணம் தகவல் துறையிலும், கணினி மூலம் செய்தி வினாடிக்குள் பரிமாறக் கூடிய இன்றைய உலகில் நாம் என்று சொல்லப்பட்டவர்க ளுக்கு புறநகர் கிராமவாசிகள் மூலம் மட்டுமே செய்திகள் கிடைக்குமா? அல்லது அவர்கள் நேற்று பார்த்த செய்தி அன்றே வேறு வகையில் கிடைத்தும். மறு படியும் சஹ்ருக்கு சோறு திங்க எழுந்திரிப்போமா ? நான் எழுந்திரிக்க மாட்டேன்.
உங்களின் இரண்டாவது சம்பவத்திற்கு இன்றைய நவீன உலகில் இருக்கும் ''நாம்'' என்று போட்டதை கொஞ்சம் யோசியுங்கள். அனேகமா? முதலில் சொன்னது தான் வரும்.
சம்பவம் மூன்று.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை அப்படியே பிரதிபலிக்கின்ற ீர்கள். சஹாபி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இரு கிராமவாசிகள், மற்றும் வாகனக் கூட்டத்தினர் ரசூல் (ஸல்) அவர்களிடம் சொன்ன தகவல் தெரியாது என்று இந்த ஹதீத் புலப்படுகிறது.
நீங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை எடுத்துக்கொள்வீ ர்களா? அல்லது நபி (ஸல்) அவர்களின் ஹதீதை எடுத்துக் கொள்வீர்களா?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
முதல் இரண்டு சம்பவங்களிலும்,
///தகவல் துறையிலும், கணினி மூலம் செய்தி வினாடிக்குள் பரிமாறக் கூடிய இன்றைய உலகில் ///
==நபி ஸல் அவர்களின் ஹதீஸ்கள் நமக்கு பொருந்தாதா...? பொருந்தாது என்பதுதான் உங்கள் பதிலில் உள்ள மறைமுக எள்ளலில் தங்கள் புரிதலாக உள்ளது..! அறிக..! என்னால் உங்கள் புரிதலை ஏற்க முடியாது..! இதனை நான் மருதளிக்கிறேன். .! புரிதலில் கோளாறு இல்லாவிட்டால் எப்போதும் எக்காலத்திலும் ஹதீஸ்கள் நமக்கு பொருந்தும் என்கிறேன்..!
///இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை அப்படியே பிரதிபலிக்கின்ற ீர்கள்.///----- ---இல்லை..! உங்கள் புரிதல் தவறானது..!
காரணம், ஹதீஸ் என்றால்,
நபி ஸல் அவர்கள் சொன்னதை கேட்டவர்கள் சொன்னது....
செய்ததை பார்த்தவர்கள் சொன்னது....
அங்கீகரித்ததை அறிந்தோர் சொன்னது.....
அந்த ஹதீஸில்....
////அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம் என்றார்கள்.////
---இதோடு அந்த ஹதீஸ் முடிந்துவிட வில்லை. இதோடு முடிந்திருந்தால ்... அது ஒரு சம்பவம்; இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் சொந்த கூற்று என்றாகி இருந்திருக்கும்.
அந்த ஹதீஸில் கடைசி இரண்டு வரிகளை நீங்கள் பொருளுணர்ந்து படிக்கவே இல்லை என்று நினைக்கிறேன். அந்த கடைசி இரண்டு வரிகள் இல்லையேல் நான் இதை ஹதீஸ் என்றே கூட சொல்லமாட்டேன்.
இப்போதாவது சரியாக படியுங்கள். அது என்ன..?
////முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள ார்கள்., என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : குரைப்
நூல் : முஸ்லிம்////
ஆகயால்... இது.... இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்த கூற்று அல்ல..! நபி ஸல் அவர்களின் கட்டளை..! அதனால்தான் இது ஹதீஸ்..!
முந்திய இரு ஹதீஸ்களில் நபி ஸல் அவர்கள் அடுத்தவர் பிறை தகவலை ஏற்கிறார்கள். காரணம், பிறை பார்க்கப்பட்ட இடங்களான அவை சிரியா அளவுக்கு வெகு தூரம் இல்லை.
இன்னொரு ஹதீஸில் அடுத்தவர் பார்த்த பிறையை மறுக்கும்படி கட்டளை இட்டுள்ளார்கள். காரணம் அது முந்திய இரு சம்பவங்களில் பிறை பார்க்கப்பட்ட அளவுக்கு அண்மையான இடங்கள் இல்லை.
இவையே, எனது தெளிவான புரிதல்கள்..!
சகோ.ஸஃபி யின் விளக்கத்தை ஏற்ற எனக்கு, உங்கள் புரிதல்கள் ஏற்கும்படி சரியாக இல்லை சகோ.அப்துல் அஜீஸ்.
மார்க்கத்திற்கா க இப்படி ஓப்பனாக சொல்ல வேண்டி இருப்பதற்கு என்னை மன்னிக்கவும்.
// சம்பவம் ஒண்ணு.
நாம் மதினாவில் இருக்கோம் என்று வையுங்கள்.//
இது நபி ஸல் அவர்களின் ஹதீதா? நாம் எப்பொழுது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு போய் சேர்ந்தோம். உதாரணத்தை சம்பவம் என்கிறீர்கள்.
// ==நபி ஸல் அவர்களின் ஹதீஸ்கள் நமக்கு பொருந்தாதா...? பொருந்தாது என்பதுதான் உங்கள் பதிலில் உள்ள மறைமுக எள்ளலில் தங்கள் புரிதலாக உள்ளது..//
கண்டிப்பாக பொருந்தும் அவர்கள் காலகட்டத்தில் விஞ்ஞானம் இல்லாதது போல் எப்பொழுது நமக்கு ஆகுமோ பழைய மாதிரி குதிரையையும், ஒட்டகத்தையும், கழுதையையும் வாகனமாக இருக்கும் சமயத்தில். வேறு வகையே இல்லாத கட்டத்தில் நபி இருந்தார்களே அது மாதிரி நாம் இருக்கும் போது பொருந்தும்.
// நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள ார்கள்., என்று விடையளித்தார்கள ்.குரைப்
நூல் : முஸ்லிம் //
இப்னு அப்பாஸ்(ரழி): அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்குக் கட்டளையிடவில்லை . அறிவிப்பாளார்: குபைப்(ரழி) என்று ஹதீதில் இருக்கின்றது
நீங்கள் சொல்வது போல் ''இப்படி தான்'' என்று நான் பதிந்த ஹதீதில் இல்லையே! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வார்த்தை இப்படி தான் என்று பிரயோகப் படுத்தியிருந்தா ல் அவர்களுக்கு தெரிந்தது வரைதான் சொல்கிறார்கள் என்று அர்த்தம் மேற்கொண்டு அந்த ஹதீதில் பிரகாரம் உள்ள வார்த்தைக்கு '' இவ்வாறு நமக்கு கட்டளை இடவில்லை ''
என்றதுக்கு சிரியாவிலிருந்த ு நீங்கள் வந்து சொல்லி அதை நாங்கள் செயல் படுத்த சொல்லி எங்களுக்கு நபியிடமிருந்து கட்டளை இல்லை என்று தான் பொருள் வரும். வேற யாருக்காவது அப்படி இருக்கலாம் அதை செயல் படுத்தலாம்.என்ற அம்சமும் அதில் அடக்கம்.
// முந்திய இரு ஹதீஸ்களில் நபி ஸல் அவர்கள் அடுத்தவர் பிறை தகவலை ஏற்கிறார்கள். காரணம், பிறை பார்க்கப்பட்ட இடங்களான அவை சிரியா அளவுக்கு வெகு தூரம் இல்லை. //
சிரியா அளவுக்கு வெகு தூரம் இல்லை என்று மறுபடியும் சுய கருத்தை சொல்கிறீர்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு தூரம் இருந்தால் அன்கீகரிங்கள் இல்லையென்றால் நிராகரியுங்கள் சொல்லியுள்ளார்களா?
// இன்னொரு ஹதீஸில் அடுத்தவர் பார்த்த பிறையை மறுக்கும்படி கட்டளை இட்டுள்ளார்கள். காரணம் அது முந்திய இரு சம்பவங்களில் பிறை பார்க்கப்பட்ட அளவுக்கு அண்மையான இடங்கள் இல்லை. //
இவ்வாறு நமக்கு கட்டளை இடவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை பிறை பார்க்கப்பட்ட அளவுக்கு அண்மையான இடங்கள் இல்லை என்று நாமளாகவே ஓர் முடிவுக்கு வருவதா? சிரியா ரொம்ப தூரம் என்ற கருத்தில் தான் சொன்னார்கள் என்று மறைவான செய்தியை எப்படி தெரிந்து கொண்டீர்கள்.?
// மார்க்கத்திற்கா க இப்படி ஓப்பனாக சொல்ல வேண்டி இருப்பதற்கு என்னை மன்னிக்கவும்.//
தெளிவு கிடைக்கிறவரைக்க ும் எப்படி வேண்டும் என்றாலும் எழுதுங்கள். அது அனைவருக்கும் பொருந்தும். மன்னிக்கும் அளவுக்கு சகோதரர் தப்பாக எழுதவில்லை.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
சகோ.அப்துல் அஜீஸ்....
அந்த ஹதீஸை நீங்கள் எங்கிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிநீர்கள் என்று தெரியவில்லை. அந்த ஹதீஸ் இதுவரை நான் பார்த்தே அறியாத புதுவிதமான நாடக பாணியில் கோலன் செமிகோலன் எல்லாம் வைத்து வித்தியாசமாக அமைந்து உள்ளது.
நான் போட்டதே சரியான ஹதீஸ் வாசகம்..! மீண்டும் அரபி மூலத்தோடு உங்களுக்காக அதை முழுமையாக இங்கே போடுகிறேன்..!
حدثنا يحيى بن يحيى ويحيى بن أيوب وقتيبة وابن حجر قال يحيى بن يحيى أخبرنا وقال الآخرون حدثنا إسمعيل وهو ابن جعفر عن محمد وهو ابن أبي حرملة عن كريب أن أم الفضل بنت الحارث بعثته إلى معاوية بالشام قال فقدمت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وأنا بالشام فرأيت الهلال ليلة الجمعة ثم قدمت المدينة في آخر الشهر فسألني عبد الله بن عباس رضي الله عنهما ثم ذكر الهلال فقال متى رأيتم الهلال فقلت رأيناه ليلة الجمعة فقال أنت رأيته فقلت نعم ورآه الناس وصاموا وصام معاوية فقال لكنا رأيناه ليلة السبت فلا نزال نصوم حتى نكمل ثلاثين أو نراه فقلت أو لا تكتفي برؤية معاوية وصيامه فقال لا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم وشك يحيى بن يحيى في نكتفي أو تكتفي - مسلم
இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் அடிமையாக இருந்த குறைப் பின் அபீமுஸ்லிம் ரஹ் அவர்கள் அறிவித்ததாவது.
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை எனக்கு வந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள் . பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம். என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா? என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள் என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம் என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா? என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள ார்கள், என்று விடையளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 1983
இப்போதுதான் இந்த ஹதீஸின் தலைப்பையே பார்க்கிறேன். நான் எப்படி புரிந்தேனோ அப்படியே இந்த ஹதீஸை தொகுத்த முஸ்லிம் இமாம் அவர்களும் புரிந்து இருக்கிறார்கள்.
இதற்கு...//ஒவ்வ ொரு ஊராருக்கும் அவரவர் பார்க்கும் பிறையே கணக்கில் எடுத்துக்கொள்ளப ்படும். ஓர் ஊரில் பிறை பார்த்தால் வெகு தொலைவில் உள்ளோருக்கு அது பொருந்தாது.// ...என்றுதான் தலைப்பும் போட்டுள்ளார்கள் .
நான் ஒன்றும் இங்கே புதுக்கருத்தை புனைந்து சொல்லவில்லை.
//// அவர்கள் காலகட்டத்தில் விஞ்ஞானம் இல்லாதது போல் எப்பொழுது நமக்கு ஆகுமோ பழைய மாதிரி குதிரையையும், ஒட்டகத்தையும், கழுதையையும் வாகனமாக இருக்கும் சமயத்தில். ////----எவ்வித ஆதாரமும் இல்லாமல் புதிய சொந்த கருத்தை உரைக்கிறீர்கள். இதில் பல கேள்விகள் கேட்கலாம். உதாரணமாக... பிரயாண தொழுகை... இப்போது எப்படி தொழவேண்டும்...? என்ன தூரம்...? இன்றைய நவீன வாகன பிரயாணிகள் நோன்பு வைத்தே ஆக வேண்டிய நிலை வருகிறதே..? என்ன பதில்..? அதிநவீன உறிஞ்சும் சானிட்டரி நாப்கின் வந்த நிலையில் இன்று பள்ளிக்கு மாதவிடாய் பெண்கள் வரலாமா...? மகரம் துணை எவ்வளவு தூரம் இப்போது..? ஹஜ்ஜில் ஹெலிகாப்டரில் தவாப்... ஹெலிகாப்டரில் சயீ... ஜம்ராவை ஹெலிகாப்டரில் இருந்தபடியே வானிலிருந்து குறி பார்த்து துப்பாக்கியில் ஏழு கள் வைத்து சுடுதல்.... என நவீன ஹஜ் செய்வதும் கூடும்தானே...? அன்று கஷ்டப்பட்டு பொருள் ஈட்டுவது போன்றா இன்று நம்மில் அலுவலகம் செல்வோர் பொருள் ஈட்டுகிறோம்... எனவே... எல்லாரும் 2.5 அல்ல ஐந்து அல்லது பத்து சதவீதம் அல்லவா ஜகாத் தர வேண்டும்...? இதுபோல இன்ன்ன்ன்ன்ன்னு ம் நிறைய ஒப்பிட்டு கேள்விகள் கேட்கலாம்..... மீளாய்வு செய்யுங்க சகோ.அப்துல் அஜீஸ்..!
///தெளிவு கிடைக்கிறவரைக்க ும் எப்படி வேண்டும் என்றாலும் எழுதுங்கள்.///- --அல்ஹம்துலில்ல ாஹ் எனக்கு தெளிவு கிடைத்து விட்டது சகோ.அப்துல் அஜீஸ்...!
மா ஸலாம்..!
// இப்போதுதான் இந்த ஹதீஸின் தலைப்பையே பார்க்கிறேன். நான் எப்படி புரிந்தேனோ அப்படியே இந்த ஹதீஸை தொகுத்த முஸ்லிம் இமாம் அவர்களும் புரிந்து இருக்கிறார்கள்.
இதற்கு...//ஒவ்வ ொரு ஊராருக்கும் அவரவர் பார்க்கும் பிறையே கணக்கில் எடுத்துக்கொள்ளப ்படும். ஓர் ஊரில் பிறை பார்த்தால் வெகு தொலைவில் உள்ளோருக்கு அது பொருந்தாது.// ...என்றுதான் தலைப்பும் போட்டுள்ளார்கள் . //
ஓர் இமாம்களின் கருத்தை மற்றோர் இமாம் புரம்தல்லுகிரார ்கள். இது சகஜம். ஹதீத் பலம் வாய்ந்தது, மற்றும் பலமற்றது என்று ஒவ்வோர் இமாம்களும் சில அறிவிப்பாளரை குறை கூறும் விஷயத்தில் பார்த்திருப்பீர்கள்.
அந்த வகையில் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கருத்துடன் தங்களின் கருத்தும் ஒத்துள்ளது என்று போட்டுள்ளதால் இறைத் தூதர் கட்டளை என்று நாம் முடிவுக்கு வரமாட்டோம். வெறும் கருத்தின் நிலையில் தான் அமைந்துள்ளது . நீங்கள் பதிந்த ஹதீத் பிரகாரமே புரிதலை எடுத்துக் கொண்டாலும்
// நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள ார்கள், என்று விடையளித்தார்கள ். //
என்ற வார்த்தைக்கு
// பார்க்கப்பட்ட இடங்களான அவை சிரியா அளவுக்கு வெகு தூரம் இல்லை. //
என்று போட்டீர்களே!இந் த எண்ணத்தில் தான் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். என்று எப்படி மறைமுக செய்தி அதாவது அடுத்தவர் எண்ணத்தில் பிரதிபலிக்கக் கூடியதை எதை கொண்டு அறிந்தீர்கள்??
நீங்கள் கேட்ட கேள்வியை உங்களுக்கு போட்டுள்ளேன் விடை கொடுங்கள்.
.// பிரயாண தொழுகை... இப்போது எப்படி தொழவேண்டும்...? என்ன தூரம்...? //
நான் கேட்கிறேன் பிறையை இவ்வளவு தூரம் இருந்தால் ஏற்க்கவேண்டும் என்று நபி (ஸல்) சொல்லியிருந்தால ் ! அது எவ்வளவு தூரம்? இதற்க்கு பதில் கொடுங்கள் பிறகு பிரயாண தொழுகை மற்ற விஷயங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
// //// அவர்கள் காலகட்டத்தில் விஞ்ஞானம் இல்லாதது போல் எப்பொழுது நமக்கு ஆகுமோ பழைய மாதிரி குதிரையையும், ஒட்டகத்தையும், கழுதையையும் வாகனமாக இருக்கும் சமயத்தில். ////----எவ்வித ஆதாரமும் இல்லாமல் புதிய சொந்த கருத்தை உரைக்கிறீர்கள். //
இதில் என் சொந்த கருத்து எதுவும் இல்லை நவீனம் கண்டு பிடிப்பு இருப்பதால் உங்களிடம் தகவல் ஒரு நாள் பொழுதில் கருத்து பரிமாறுகிறேன். இது இல்லை என்றால் கடிதம் மூலம் கொஞ்சம் தாமதிக்கும் இன்னும் காலத்தால் பின்னோக்கி போனால் எல்லாமே இல்லாத நிலை தானே இருக்கும். என்ன இருக்கிறதோ அதை கொண்டு தான் பயன் பெற முடியும் இந்த எதார்த்தத்தை புரியுங்கள்
ஒரு வேலை இப்பொழுது என்ன நவீனம் இருந்தாலும் ஒட்டகத்தில் வந்து செய்தி சொன்னால் பிறை செய்தியை ஏற்பீர்களா?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
நபி (ஸல்) அவர்கள் 29 வது நாளோ, அல்லது 30 வது நாளோ மஃரிப் நேரத்தில் பிறையை பார்க்க சொல்லி இட்ட கட்டளை எந்த ஹதீஸில் உள்ளது என்பதை பதிந்தால் நன்றாக இருக்கும்.
மாதம் 29 நாட்களாக இருந்தால் அன்று சூரியன் சந்திரன் பூமி மூன்றும் ஒரு கோட்டில் வரும். அன்றைய தினம் சந்திரனில் பிறை வடிவத்திலான ஒளியை உலகில் யாரும் கண்களால் பார்க்க முடியாது என்பதை சகோதரர் ஆஷிக் அவர்கள் தெரிந்திருப்பீர ்கள் என நினைக்கின்றேன். அறிவியல் இந்த உண்மையை நிரூபித்திருக்க ும் போது அன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் மஃரிபில் பிறை பார்க்க சொல்வார்கள் ? விளக்கவும்.
அதே போல் மாதம் 30 நாட்களாக இருந்தால், முப்பதாவது நாள் சூரியன் சந்திரன் பூமி ஒரு கோட்டில் வந்துவிடும் எனவே அன்றைய தினமும் பிறையை கண்களால் பார்க்க முடியாது. எனவே அன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு பிறை பார்க்க கட்டளையிட்டிருப ்பார்கள் என்பதை விளக்கவும்.
மேலும் குர்ஆனின் 2:189 வது வசனம் பிறையின் அனைத்து நிலைகளையும் மக்கள் பார்த்தே கேள்வி எழுப்பியதாகவும் , அதன் நிலைகள் அனைத்தும் தேதிகள் ஆகும் என அல்லாஹ் பதில் அளிக்கின்றான்.
மேலும் குர்ஆனின் 10:5 வசனத்தில் சந்திரனின் படித்தரங்கள் மூலம் பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என அல்லாஹ் உறுதியளிக்கின்ற ான்.
மேலும் சந்திரனின் கடைசி படித்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை 36:39 வசனம் தெளிவுபடுத்துகி ன்றது.
இவ்வாறு தெளிவுகள் இருக்க ஒரு கிழமைக்கு இரு தேதிகள் வரும் என சகோதரர் ஆஷிக் வாதிடுவது வியப்பிலும் வியப்பாக உள்ளது.
எனவே சிந்தித்து செயல்படவும்.
இப்படிக்கு உங்கள் அன்புச் சகோதரன்
சிராஜ் ஏர்வாடி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அந்த ஹதீஸில்.... ///எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம ்///.....'நாங்க ள்'....என்று ஆரம்பிக்கிறது..!
//அவர்களுக்கு கட்டளையிட்டார்க ள். //....'அவர்களுக ்கு'.....என்று முடிகிறது...!
இதை நாம் கவனிக்க தவறி விட்டோம்..!
வேறு ஒரு சகோதரருடன் மேலும் நடந்த விவாதத்தில் அவர் எனக்கு விளக்கியது..!
=============
நீங்கள் கொடுத்துள்ள அந்த அரபி மூலத்தில் ஹதீஸின் ஆரம்ப வரிகள் விடுபட்டுள்ளதால ் ஆரம்பத்திலிருந் து பொருளைப் பார்ப்போம். அப்போதுதான் தெளிவாக விளங்கும்.
قال أبو عمير ابن أنس: حدثتني عمومتي من الأنصار من أصحاب رسول الله –صلى الله عليه وسلم- قالوا: أغمي علينا هلال شوال وأصبحنا صياماً فجاء ركب من آخر النهار فشهدوا عند رسول الله –صلى الله عليه وسلم- أنهم رأوا الهلال بالأمس فأمرهم عند رسول الله –صلى الله عليه وسلم- أن يفطروا وان يخرجوا إلى عيدهم من الغد
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகனாரான அபூ உமைர் அவர்கள் அறிவிக்கிறார்கள ்: "நபி(ஸல்) அவர்களின் அன்ஸாரித் தோழர்களில் உள்ள என்னுடைய (தந்தையின் உடன் பிறந்த) உறவினர்கள் எனக்கு (قالوا - படர்க்கை பன்மை) அறிவித்தார்கள்,
'ஷவ்வாலின் பிறை (علينا - தன்னிலை பன்மை) எங்களுக்கு தென்படாதளவுக்கு மேகமூட்டமாக இருந்தது.
அதனால் நோன்பு நோற்ற நிலையில் (أصبحنا - தன்னிலை பன்மை) நாங்கள் காலைப் பொழுதை அடைந்திருந்தோம் .
அன்றைய பகல் பொழுதின் கடைசியில் ஒரு வாகனக் கூட்டத்தினர் வந்து, நேற்று அவர்கள் பிறைப் பார்த்தாக நபி(ஸல்) அவர்களிடம் (فشهدوا - படர்க்கை பன்மை) சாட்சி கூறினார்கள்.
எனவே நபி(ஸல்) அவர்கள் ( أن يفطروا - படர்க்கை பன்மை) அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும்,
மறுநாள் (إلى عيدهم - படர்க்கை பன்மை) அவர்களின் பெருநாள் திடலுக்கு
(وان يخرجوا - படர்க்கை பன்மை) அவர்கள் செல்லுமாறும்
( فأمرهم - படர்க்கை பன்மை) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்'.
இந்த ஹதீஸ் அறிவிப்பின் ஆரம்பம் படர்க்கையாக ஆரம்பித்து, ஹதீஸின் ஆரம்பம் தன்னிலையாகவும், முடிவு மீண்டும் படர்க்கையாகவும் முடிவதைக் கவனிங்க சகோ.
"அறிவித்தார்கள் " என்ற ஹதீஸ் அறிவிப்பின்ஆரம் பம், அபூ உமைர் என்ற 'தாபிஇ' அவருடைய உறவினர்களான சஹாபாக்களைக் குறிப்பிட்டு சொல்வது. "எங்களுக்கு தென்படாதளவுக்கு " என்ற ஹதீஸின் ஆரம்பம் அந்த அவருடைய உறவினர்களான அன்ஸாரித் தோழர்கள் (சஹாபாக்கள்) தங்களைக் குறிப்பிட்டு சொன்னது. மீண்டும்... "சாட்சி கூறினார்கள்", "அவர்களை நோன்பை விட்டுவிடுமாறும ்", "அவர்களின் பெருநாள் திடலுக்கு", "அவர்கள் செல்லுமாறும்", "அவர்களுக்கு கட்டளையிட்டார்க ள்" என்பதெல்லாம் வாகனக் கூட்டத்தினரைக் குறிப்பிட்டு அந்த அன்ஸாரித் தோழர்கள் சொன்னது. இதுதான் சகோ (பல அலசல்களுக்குப் பிறகு இலக்கண அடிப்படையோடு ஆராய்ந்த) சரியான மொழிபெயர்ப்பு!
நீங்கள் கொடுத்துள்ள (ஸஹீஹான) அரபி மூலத்தில் "மக்களைப் பெருநாள் கொண்டாட ஆணையிட்டார்கள்" என்பதும் இல்லை. அது தாரகுத்னீயின் ஒரு அறிவிப்பான பலஹீனமான செய்தியில்தான் உள்ளது.
========================
...........இதற்கு சரியான விளக்கம் ஏதும் இருந்தால் அவசியம் எழுதுங்கள் சகோ. சஃபி.
RSS feed for comments to this post