பெரியாரின் தொண்டர் மணி என்ற சுப்ரமணி அவர்களுக்குச் சொந்தமான காலனியில் நான் குடியிருந்த காலகட்டத்தில் பெரியாரின் நூல்கள் பலவும் படிக்கக் கிடைத்தன. அதே காலகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துடன் எனக்குத் தோழமை ஏற்பட்டிருந்தது. நமச்சிவாயத்தை நட்பு வட்டாரத்தில் 'நமசு' என விளிப்போம். ஒரே மாவட்டம், ஒரே தொழில், சம வயது என்பதால் எனக்கும் நமசுவுக்கும் நட்பில் இறுக்கம் ஏற்பட்டுப் போனது. படிப்பதில் எனக்கிருக்கிருந்த ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு சிறு,சிறு நூல்களை எனக்கு நமசு தருவான். எல்லாம் ரஷ்ய மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறு நூல்கள்.
ஒருநாள் கனத்த நூல் ஒன்றைக் கொண்டுவந்து தந்து, "இதைப் படித்துப் பார்" என்றான் நமசு. முதல் வாசிப்பில் சரியாக விளங்கவில்லை. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தபோது, முதலாளித்துவம், பொருளாதார அரசியல், உழைப்பின் கூடுதல் மதிப்பு, முதலாளித்துவச் சுரண்டல் போன்றவை கொஞ்சங் கொஞ்சமாக விளங்கின. கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு நமசுவுடன் நானும் சென்று கலந்துகொள்வது வழக்கமானது. நானும் ஏறத்தாழ 'தோழர்' ஆகிக்கொண்டு வந்ததாகத்தான் நினைக்கிறேன்.
எனக்கும் நமசுக்கும் பழக்கமான 'தோழர்' குடும்பம் ஒன்றிருந்தது. நான்கு பிள்ளைகள் இருந்த குடும்பத்தில், பெற்ற தாயை அவரது வயோதிக காலத்தில் எவருமே கவனிக்காமல் உதாசீனப்படுத்திவிட்டனர். இத்தனைக்கும் நால்வரில் மூவர் கம்யூனிஸ்ட்காரர்கள். இறந்துபோன குடும்பத் தலைவர், தம் மனைவிக்கென்று எதுவும் சேர்த்து வைக்காததால் பிறரிடம் கையேந்தும் அவல நிலைக்கு அந்தத் தாய் தள்ளப்பட்டார்.
நாத்திகனான என் இன்னொரு நண்பன் செல்வம், நடனக்காரி ஒருத்தியை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான். ஒரே மகனைச் செல்லம் கொடுத்து வளர்த்து, 'கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுவான்' என எதிர்பார்த்திருந்த பெற்றோர் நிர்க்கதியாயினர்.
இந்த இரு அவல நிகழ்வுகளுக்கும் காரணம் கம்யூனிஸமும் நாத்திகக் கொள்கையும்தான் என்று நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நான் அறிவாளியா? அடிமுட்டாளா?
***
வினவு தளத்துக்கு இம்மாதக் கோட்டாவுக்கான இஸ்லாமிய சரக்குக் கிடைக்காமல், 1999 டிசம்பரில் புதிய கலாச்சாரம் இதழ் வெளியிட்ட 'அபின்' என்ற ஒரு சிறுகதையை மறுபதிப்புச் செய்திருக்கின்றனர்.
சோகமான கதைதான்!
கதையைவிடப் பெருஞ்சோகம் இன்னொன்றுண்டு.
மேற்காணும் அனைத்துக்கும் 'இஸ்லாம்' எனும் அபின்தான் காரணம் என்று கதாசிரியரான மருத்துவர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் கதையை முடிக்கிறார்.
மருத்துவர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் என்பவர் அறிவாளியா? அடிமுட்டாளா? என்பதை சக வாசகர்கள்தாம் சொல்லவேண்டும்.
- சஃபி
Comments:
கருத்துக்கள்
வினவுக்கு இதெல்லாம் உறைக்காது
தந்தையின் சொத்துக்களே பிள்ளைகளுக்குக் கிடைக்கும் என்கிற அடிப்படை கூட விளங்காமல் கதையில் கதாபாத்திரம் அமைத்து, சும்மானாச்சுக்க ும் கதை சொன்ன மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் என்பதில் சந்தேகமில்லை!
மறுமணம் அனுமதியால் இரு பிள்ளைகளுக்கும் ஒரு அம்மா. வாழ்விழந்த பெண், விதவா விவாகம் என்ற முற்போக்கு சிந்தனையால் இரு பிள்ளைகளுக்கும் இரு அப்பாக்கள்.
மண்ணெண்ணை வண்டி மிதிக்கும் அப்பாஸின் தந்தை உப்பு வண்டி இழுத்திருப்பார் ஏழை.
மூக்கா வீடுன்னு சொல்லப்படுகின் ற கருப்புக் கலர்ல டைல்ஸ் பதித்த வீட்டிற்கு சொந்தக்காரரின் தந்தை செல்வந்தர்.
மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் அபின் போதையில் மூடத்தனமாக கதை சொல்லிவிட்டார் . கதையை அப்படியே மீள்பதிவு செய்த வினவுக்கு என்ன போதையோ?
ஆனால், இரு பிள்ளைகளுக்கும் தந்தைகள் வேறு என்பதால் இதில் பாகப்பிரிவினையே இல்லை என்று முடிவுசெய்து இதில் நமக்கு எந்த சோலியும் இல்லை என விலகியிருந்த ஜமாத்தார் ரொம்ப விவரமானவர்கள்!
அருமையா எழுதி இருக்கீங்க. நல்லா கேள்வி கேட்டு இருக்கீங்க.
அடுத்து சகோ.முஸ்லிம் அருமையான பின்னூட்டம் இட்டு இருக்கார்.
ஜசாக்கலாஹு க்ஹைர்.
நான் வினவு பக்கம் போவதை நிறுத்தி வருஷம் ஆச்சு..! வினவின் அடிமுட்டாள்த்தன அந்த 'கற்பனை கதை' முந்தாநாள் எனக்கு சகோ.குலாம் மூலம் மெயிலில் வந்தது. ஒருவகையில் வினவிடமிருந்து மிகச்சிறந்த ஒரு 'மறைமுக தாஃவா' பதிவு..! :-))
இறுதியில்... அக்கதையில் சகோ.அப்பாஸ் சொன்ன வரிகளில் நெகிழ்ந்துவிட்டேன்..!
அதற்கு அடுத்து அந்த பதிவின் இறுதியில் சிறந்த காமடி வரிகள் இதுதான்..!
///இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்?///--- -இல்லையே..! அந்த கதையில்... தன்னுடைய நிலைக்கு காரணமானவர்கள் என்று எண்ணியவர்களை எதிர்த்து அப்பாஸ் துப்பாக்கி... வீச்சரிவாள்... கொலை... கொள்ளை... என்று இறங்கி இருந்தால் கம்யுனிசம் வெற்றி பெற்று இருந்திருக்கும் ..! அல்லது ஏதும் முடியாமல், தன்னையே தற்கொலை புரிந்து இருந்தால் கம்யுனிசம் வெற்றி பெற்று இருந்திருக்கும் ..!
ஆனால்... அந்தக்கதையில் தோற்றுத்தான் போனது கம்யுனிசம்...! எந்த பிரச்சினைக்கும் தீர்வே சொல்லாமல்... பிரச்சினையை எதிர்க்க மட்டும் கற்றுக்கொடுக்கு ம் கம்யுனிசம் தோற்காமல் எப்படி இருக்க முடியும்..? ஹா...ஹா...ஹா... !
'தன் சகோதரனை - தன் சொந்த பந்துக்களை ஆதரிக்க வேண்டும்' என்ற இறைகட்டளையை அந்த கருப்பு டைல்ஸ் கார வீட்டுக்காரரும் மற்ற அப்பாஸ் சொந்தங்களும் மறந்ததால் அப்பாசுக்கு இந்த நிலை.
ஊர் ஜமாஅத் இதுபோன்ற வறியவர்களை நோயாளிகளை அரவணைத்து ஆதரவு அளித்து அவர்களின் பொருளாதார பிரச்சினையை தீர்த்து வைத்து அவர்களை தன்னிறைவு அடைய வைக்க தீவாக... ஜக்காத் -சதகா -பைத்துல் மால்.... என்று இஸ்லாம் கத்துக்கொடுத்து இருந்ததை செய்யத்தவறியதால ் அப்பாஸ் போன்றவர்களுக்கு கஷ்டம்..!
ஆனால் இதெல்லாம் எந்த நிராசையும் தரவில்லை அப்பாசுக்கு..! ஏன்..?
மரணத்தை கண்டும் அச்சம் இல்லாத உணர்வு.... இஸ்லாம் கற்றுக்கொடுத்தது..!
ஏமாற்றங்களை கண்டும் மன உறுதி குலையாத உணர்வு.... இஸ்லாம் கற்றுக்கொடுத்தத ு...!
வாழ்வின் ஒவ்வொரு கஷ்டத்துக்கும் மறுமையில் நன்மை உண்டு என்ற நம்பிக்கையுடன் பொறுமை காத்தல்... இஸ்லாம் கற்றுக்கொடுத்தது..!
இறைவன் மீதும் தீர்ப்புநாளின் மீதும் அப்போதைய நீதி மீதும் வைக்கப்பட்டு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை...எவர ் மீதும் வன்மம் கொண்டு வன்முறையின் பக்கம் செலுத்தாதது...ஒ ரு ஏழைக்கு வீடு கொடுத்து உணவு கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று ஜான் முகமதுக்கு இஸ்லாம் கற்றுக்கொடுத்தது..!
இது எதுவுமே இல்லாத அந்த... சிகிச்சை தருவது தவிர வாழியலில் எதற்கும் கையாலாகத டாக்டர் நிராசையுடன் அலைகிறார்..! இறுதியில்... தம்மால் ஏதும் முடியாமல்...அப் பாசிடம் பொய் மட்டுமே சொல்ல முடிகிறது..! அதை கேட்டுத்தான் அப்பாஸே அவர் நிலையை கண்டு ஏளனமாக சிரித்து இருக்கிறார் போலும்..!
இறைவழிகாட்டல்கள ை எல்லாம் புறக்கணித்த அந்த சகோதரனுக்கு, ஊர் முஸ்லிம்களுக்கு அதற்கான கேள்வி மறுமையில்... நியாயத்தீர்ப்பு நாளில் உண்டு என்று தெரிந்த.. தெளிந்த.. மனநிறைவும் சகோ.அப்பாசிடம் உண்டு. ஒரு ஏழையாகிய தன்னுடைய உரிமையை ஏமாற்றியவர்களின ் நன்மையில் இருந்து பங்கும் மறுமையில் அப்பாசுக்கு உண்டு அல்லாவா..?
அப்படி... பிறரிடம் நன்மையே இல்லை எனில், அப்பாஸ் இடம் உள்ள தீமை அவரின் உரிமையை ஏமாற்றியதற்கு உரிய தண்டனையாக மற்றவர்களிடம் செல்லும் என்பதும் அப்பாசுக்கு தெரியும் அல்லவா..?
இதெல்லாம் விட சிறு முள் குத்தி அதனால் ஏற்பட்ட வலிக்கும் நன்மை உண்டு என்று இஸ்லாமில் இருக்க, இவ்வளவு நோயால் கஷ்டபப்டும் அப்பாசுக்கும் இறைநாடினால் பெரும் பாக்கியம் மறுமையில் உண்டு என்றும் நம்பிக்கை உண்டு அல்லவா அப்பாசுக்கு. அதனால்தானே, கஷ்டங்களை எல்லாம் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ள முடிகிறது அப்பாசால்..!
என்னவொரு வாழ்வியல் கோட்பாடு இஸ்லாமுடையது..! அமைதி மார்க்கம் என்றால் இதுவன்றோ..?
அதனால்தான்.... முஸ்லிம்கள் மூமீன்கள் எனில், அவர்களை எந்த கம்யுனிச அபினும், சோஷலிஸ பிரவுன் சுகரும் அசைக்க முடியவில்லை..! அல்ஹம்துலில்லாஹ ்...!
எனக்கு சரியெனத் தோன்றியதை எழுதினேன். கருத்தளித்த சகோதரர்களுக்கும ் நன்றி.
Super...!
கடவுளை திட்டும் ஒரு சமூகத்திற்கு நல்ல படிப்பினையை சொல்லியுள்ளார்...
போலி தந்துவங்களை மூலதனமாக கொண்டு பிரச்சாரம் செய்பவர்கள், பிறகு நிதி வசூல் என்று தட்டை ஏந்துவார்கள் நம்ம கம்யூனிஸ்ட் தோழர்கள். இதுவே இவர்களின் தத்துவம் உலகுக்கு கற்றுத்தந்த பாடம் என்பதை உலகம் அறிந்துவரும் உண்மை.
May Allah reward you for your efforts!
தங்கள் துஆவுக்கு நன்றி!
RSS feed for comments to this post