சத்தியமார்க்கம்.காம்

லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
செவ்வாய், 01 ஆகஸ்டு 2006 10:41

நூலாசிரியர் ஹூக் மைல்ஸ்லெபனான் மீது இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஹிஸ்புல்லாஹ் படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், லெபனானின் மக்கள் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக விமான தாக்குதலை நடத்தி வருகிறது.

 

 

இரு தினங்களுக்கு முன் வரலாற்று பிரசித்தி பெற்ற லெபனானின் கானா பிரதேசத்தில் (Qana - உலக கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதும் இயேசுவின் முதல் அற்புதம் வெளியான திருமண விருந்து நிகழ்ச்சி நடந்த இடம்) இஸ்ரேலின் தாக்குதலால் வீடுகளை இழந்த பெண்களும் குழந்தைகளும் தங்கியிருந்த ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் அமெரிக்கா தனக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஏவுகணைகளை வீசி 37 குழந்தைகள் உட்பட 100 க்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்றொழித்தது.

 

இவ்வளவு குரூரமான, இரக்கம் உள்ள மனிதர்களால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாத கொடுஞ்செயலை இஸ்ரேல் செய்த பிறகும் இஸ்ரேலின் கொடுஞ்செயலுக்கு எதிராக - அதன் பயங்கரவாத செயலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் மேற்கொள்ள தயாரில்லை. உலக நாடுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவைகளுக்கு ஏன் இந்த இழி நிலை? பச்சிளம் குழந்தைகளை கொத்து கொத்தாக கண்முன் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் செயல் பயங்கரவாதமில்லையா? இதற்கு எதிராக போராட யாரும் களமிறங்காததன் காரணம் என்ன?

 

அரபு-இஸ்ரேலிய பிரச்னைகளில் இஸ்ரேல் புரியும் அட்டூழியத்தைப் பொறுத்தவரை உலக நாடுகள் கடைபிடிக்கும் மவுனத்திற்கும் பாராமுகத்திற்கும் காரணம் அமெரிக்க ஊடகங்களே. 

 

அரபு-இஸ்ரேலிய பிரச்னையில் அவைகள் தந்த உண்மைக்குப் புறம்பான, நியாயமற்ற பாரபட்சமான செய்திகளின் விளைவுகள் தான் இவை. 

 

அல் ஜஸீரா: உலகிற்கு அரபு தொலைக்காட்சிகளின் சவால்' (Al-Jazeera: How Arab TV News Challenged the World) என்ற நூலை எழுதிய ஹுக் மைல்ஸ் (Hugh Miles) அவர்கள் The Straight Times இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேல்-லெபனான் பிரச்னையை எவ்வாறு பாரபட்சமாக சித்தரிக்கின்றன என்பதை விளக்கியுள்ளார்.

 

The Straight Times - July 26, 2006 இதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

 

கேள்வி: லெபனான் நிகழ்வுகளை அரபு ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்கள் வித்தியாசமாக சித்தரிக்கின்றன என எவ்வாறு கூறுகிறீர்கள்?

 

இந்தப் போருக்கு முந்திய நிகழ்வுகளை அமெரிக்க ஊடகங்கள் ஒரு தவறான கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.  இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை அவை 'நியாயமான எதிர்வினை' என்பது போல குறிப்பிடும் அதே வேளையில், இப்பிரச்னையின்  வரலாற்றுப்  பிண்ணனியையோ,  இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 9000-க்கும் மேற்பட்ட அரசியல்  கைதிகளைப்  பற்றியோ குறிப்பிடுவதில்லை.  இக்கைதிகளுள் பெண்களும், 14 வயது கூட நிரம்பாத சிறுவர்களும் அடங்குவர்.

 

ஹிஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு ஈரான் மற்றும் சிரியாவுடன் கொள்கைரீதியில் தொடர்புகள் இருந்த போதிலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நம்புவது போல, ஹிஸ்புல்லாஹ் இவ்விரு நாடுகளின் தூண்டுதலின் பேரில்தான் செயல்படுகிறது என்பது உண்மையல்ல. பல ஆண்டுகளாகவே ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஷேக் நஸ்ரல்லா தனது  சுய முடிவுகளின்படியே செயல்படுகிறார் என்பதுதான் உண்மை. 

 

இஸ்ரேலிய குழந்தைகள் யாரும் தாக்குதலில் இறந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் அமெரிக்க ஊடகங்கள், அரபு குழந்தைகள் யாரும் இறந்தால் அதை பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.

 

காஸா பகுதி குறித்த அமெரிக்க செய்திகள் 'ஆக்ரமிப்பு' 'ஆக்ரமிக்கப்பட்ட பகுதி' போன்ற சொற்களை பெரும்பாலான நேரங்களில் பயன்படுத்துவதில்லை.  அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் 'சர்ச்சைக்குரிய பகுதி' ('contested' or 'disputed') அல்லது வெறுமனே 'இஸ்ரேல்' என்றே குறிப்பிடப் படுகின்றன.

 

இஸ்ரேல் நடத்தும் அரசியல் படுகொலைகளை அமெரிக்க ஊடகங்கள் 'குறிவைக்கப்பட்ட தாக்குதல்' (targeted killings) என வர்ணிக்கின்றன. இஸ்ரேலின் ராணுவம் 'பாதுகாப்புப் படை' (security forces)யாகிறது. சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்ட பிரதேசங்கள் கூட 'குடியிருப்புப் பகுதிகள்' (neighbourhood) என அழைக்கப்படுகின்றன.

 

தமிழாக்கம்: இப்னு பஷீர்

Trackback(0)
கருத்துக்கள் (9)add comment
0
அன்புப்பிரியன்:
//அதற்கு மாறாக, மேற்கு கரையும் காஸா பகுதியும் 'சர்ச்சைக்குரிய பகுதி' ('contested' or 'disputed')// இதே சொல்லாடலை பாபர் மசூதி இருந்த இடத்தை குறிப்பிடும்போது இந்திய ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்
1

August 01, 2006 14:32
0
Nasrullah:
அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சத்தை தோலுரித்து காட்டிய இப்பேட்டியை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இதையெல்லாம் ஒருவரை ஒருவர் இழித்துபெசிக் கொண்டு பொழுது போக்கி வரும் தமிழக முஸ்லிகளில் சிலர் கன்ணில் படுமா? அதன் தன் மூலம் இவர்கள் உறக்கம் கலைந்து தன்னிலை உனர்வார்களா?
2

August 02, 2006 18:49
0
இப்னு பஷீர்:
//இதே சொல்லாடலை பாபர் மசூதி இருந்த இடத்தை குறிப்பிடும்போது இந்திய ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்// இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க ஊடகங்களைப் போலவே, இந்துத்துவ வெறியர்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்திய ஊடகங்கள் நடந்து கொள்கின்றன போலும்.
3

August 03, 2006 10:53
0
இப்னு பஷீர்:
//அதன் தன் மூலம் இவர்கள் உறக்கம் கலைந்து தன்னிலை உனர்வார்களா?// உறங்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப வேண்டிய தமிழக முஸ்லிம் தலைவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களென்றால், இன்ஷா அல்லாஹ் இது நடக்கும்.
4

August 03, 2006 10:55
0
இறை நேசன்:
//இதே சொல்லாடலை பாபர் மசூதி இருந்த இடத்தை குறிப்பிடும்போது இந்திய ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்// பெரும்பாலான இந்திய ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுபவர்கள் வந்தேறிகளின் பரம்பரையினராக இருக்கும் பொழுது இது சாத்தியமே. ஆரிய பார்ப்பன வர்க்கம் இஸ்ரேலியர்களோடு 'ஜென்ம பந்தம்' புலர்த்துவதன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது. இந்தியாவில் கைபர் போலன் கணவாய் வழி ஆடு மேய்த்து பிழைப்புக்காக வந்தேறி இந்தியாவின் பத்திரிக்கை போன்ற அனைத்து பிரதான துறைகளையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு இந்திய நாட்டு மக்களுக்கு எதிராக ஆட்டம் போடும் ஆரிய பாசிச வர்க்கத்திற்கும், பலஸ்தீனில் வாழ இருப்பிடம் தேடி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தேறி, பின்னர் அவர்களின் நாட்டையே ஆக்ரமித்து இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு அந்நாட்டு மக்களுக்கு எதிராக அக்கிரமங்கள் புரியும் யூத சியோனிஸ வர்க்கத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஆழமாக ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு 'பெண் கற்பு புகழ்' 'சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி' கூறும் இஸ்ரேலின் மீதான என்னுடைய பாசத்திற்குக் காரணம் 'பூர்வ ஜென்ம பந்தமாக' இருக்கலாம் என்ற கூற்றில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதையும் இந்த இரண்டும் ஒரே வர்க்கம் தான் என்பதும் விளங்கும். சரியான நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்காவின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டியதோடு யூத சியோனிஸ, ஆரிய பாஸிச உறவை குறித்து சிந்திக்க வைத்ததற்கு சகோதரர் இப்னு பஸீர் அவர்களுக்கு நன்றிகள். தொடந்து எழுதுங்கள். அமெரிக்க, இஸ்ரேலிய, ஆரிய அக்கிரமங்களை தோலுரித்துக் காட்டுங்கள். உண்ட களைப்பு நீங்க வேறு வேலையின்றி தம்மில் அடித்துக் கொண்டு இது தான் 'தஃவா' என இறுமாப்பில் உலா வரும் சமுதாய அங்கங்களை கண்டு கொள்ளாதீர்கள். அதில் ருசியும், மகிழ்ச்சியும் கண்டவர்களுக்கு அதை விட்டு திரும்ப எளிதில் மனம் வராது. அவர்களை அவ்விளையாட்டிலிருந்து திசை திருப்ப முயற்சித்து தோலி மேல் தோல்வி கண்டு வெறுத்து போய் ஒதுங்கியவர்கள் இங்கு ஏராளம் உண்டு. இதனை அடித்துக் கொண்டிருப்பவர்களின் புதிய தொண்டர்களுக்குத் தெரியுமோ என்னமோ நிச்சயம் தலைகளுக்கு தெரியும். எனவே 'இவைகளை' கண்டு கொள்ளாமல் சமுதாயத்தை விழிப்படைய செய்யும் விதத்தில் நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை அளியுங்கள். அன்புடன் இறை நேசன்.
5

August 03, 2006 11:19
0
H.Anvardeen:
Assalamu Alikum varah.... Now,Labanan issu is very sarrowful and not forgetable.World countres all one side Other side Muslems and Allah, when we are fallow wayof Allah,after we will get countinusly succesful.So now we can pray always and make dua. Allah only will help us.
6

August 04, 2006 06:24
0
Rafiudeen:
I could not able to understand why our islamic brothers like sudi arabic&islamic country also not doing any action about this problam.kindely explain me any of our brothers know the answer of this...........
7

August 05, 2006 12:43
0
Fathima Shaphia Bibi.A:
I am so worried about other Islamic countries activities, they can do somthing for this issue. But they are simply watching. Why ? Why? What is problem with them? If you know please clarify. We are not wrong way, we are in way of Allah, Why they are hesidate to open their mouth.
8

August 22, 2006 13:04
0
அபூசுமையா: http://www.islamiccollections.blogspot.com
Why they are hesidate to open their mouth.// It's simple. They didn't understand/forget the POWER of ALLAH!
9

August 23, 2006 05:24

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:149 ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் லெபனான் விவகாரம்: அமெரிக்க ஊடகங்களின் பாரபட்சம்!
Twitter
RSS
YouTube
English