| வாஜ்பாய் மற்றும் அத்வானிக்கு மாபியா குழுக்களுடன் தொடர்பு - உமாபாரதி |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | |||
| புதன், 26 ஜூலை 2006 10:22 | |||
|
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது என பாரதீய ஜனதாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதி குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பு கொள்வதற்கு வாஜ்பாயி உடைய வளர்ப்பு மகளின் கணவர் மற்றும் அத்வானியின் மகன் போன்றோர் உதவுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியை உருவாக்கிய உமாபாரதியின் இந்த அதிரடி அறிக்கை பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. பாரதீய ஜனதாவின் தலைமையிலான முந்தைய ஆட்சியில் பொது விமானத்துறை அமைச்சராக இருந்த சரத்யாதவின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாமல் ஒரு விமான நிறுவனத்திற்கு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் அலுவலகம் அனுமதி வழங்கியது. இச்சம்பவம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களோடு இவர்களுக்கு உள்ள நெருக்கத்தோடு தொடர்புள்ள ஒன்று என உமாபாரதி குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு தீவிரவாதிகளோடும் போதைப்பொருள் வியாபாரிகளோடும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்திய மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடும் பட்சத்தில் சாட்சி என்கின்ற நிலையில் அதற்கான முழு ஆதாரங்களையும் சமர்ப்பிக்க, தான் தயாராக இருப்பதாகவும் உமாபாரதி தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரப்போவதாகவும் அவர் கூறினார். வாஜ்பாய் மற்றும் அத்வானியின் உறவினர்களுக்கும் ஒரு முன்னாள் பாஜக பொதுச்செயலாளருக்கும் தற்போதும் மாஃபியா கும்பல்களுடன் தொடர்பிருப்பதாக அவர் அறிவித்தார். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அவர்களுக்கு தேசப்பற்று இருந்தாலும் மாஃபியாக்களுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தைரியம் இல்லை என கண்டனம் தெரிவித்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உத்தரபிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினருக்காக போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவருக்கு அங்கு தீவிரவாதிகளுடனும் மாஃபியா கும்பல்களுடனும் தொடர்பிருந்தது என்றும் குற்றம் சாட்டினார். "மத்தியபிரதேசத்தில் உள்ள போபால், தீவிரவாதத்திற்கும் மாஃபியா செயல்பாடுகளுக்கும் உரிய தளமாக செயல்படுகிறது. என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. மாஃபியா கும்பல்களை வளர்ப்பதும் பாதுகாப்பதும் அரசியல் கட்சிகள் என்ற உண்மையை நான் வெளிப்படுத்தியதால் என் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது" என்றும் உமாபாரதி கூறினார். பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள ஒரு கட்டடம் கட்டும் தொழிலதிபருடன் மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு தொடர்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மத்தியப் பிரதேச கவர்னர் டாக்டர். பலராம் ஜாக்கர் அவர்களைக் கொண்டு தனக்குத் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். பாரதீய ஜனதாவின் மறைந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பிரமோத் மகாஜனின் இறுதிச் சடங்கில் நடந்த மதுபான விருந்தில் அளவுக்கதிகமான போதைப்பொருளைப் பயன்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் மகாஜனின் மகனுக்கு தங்களது ஆதரவு உண்டு என பாஜக மூத்த தலைவர்கள் அவரை சிறைச்சாலையில் சந்தித்து ஆறுதல் அளித்த சம்பவம் இங்கு நினைவு கூறத்தக்கது. தேசத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவாலாக விளங்கும் குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாத, பயங்கரவாத செயல்பாடுகள், இளைய சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு பங்கம் விளைவுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் நடவடிக்கைகள் நாட்டில் மலிந்து கிடக்கும் இன்றைய சூழலில், செல்வி உமாபாரதியின் இந்த வெளிப்படுத்தல்கள் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். - சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
BJP யிலிருந்து பலவந்தப்படுத்தப்பட்டு வெளியே தள்ளப்படுபவர்கள் ஒவ்வொருவரும் பார'தீய' ஜனதாவின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் கொண்டே வருவதைப் பார்த்தால், நம் நாட்டின் அராஜக அரசியல் தலையெழுத்தை எண்ணி தலையில் அடித்துக் கொள்வது தவிர வேறுவழி தெரியவில்லை.
1
July 26, 2006 11:39
நன்றாயுரைத்தீர். உமது பதிவு என்னிலும் சிறப்பாய் இந்த நாடக நடிகர்களை அம்பலப்படுத்துகிறது. இவர்களிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற இதுபோன்ற பதிவுகள் தேவை.
2
July 29, 2006 15:16
அனாமத்து மின்மடல்களை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை தொடர்பு படுத்தும் ஊடகங்களோ, எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் முதலில் வரும் அத்வானிஜியின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அறிக்கைகளை வைத்துக் கொண்டு விசாரணையை ஒருவழிப்பாதையில் அமைக்கும் காவல் மற்றும் உளவுத் துறையோ ஒரு முன்னாள் முதல்வரின் நேரடியான இந்த வாக்குமூலங்களை கண்டு கொள்வதில்லையே ஏன்?
உமாபாரதியின் இந்த வாக்குமூலங்கள் உண்மையாக இருப்பின் இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்க முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் அத்வானியும் வாஜ்பாயும் தான்.
அல்லது உமாபாரதி பழைய பகையை மனதில் வைத்து அவதூறு சுமத்துகிறார் எனில் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதலில் ஜெயிலில் அடைக்கப்பட வேண்டியவர் உமாபாரதி.
அரசு நடுநிலை அரசு எனில் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை உடனடியாக செய்ய வேண்டும்.
3
July 30, 2006 13:45
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |