முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முகப்பு

நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!
என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..
வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்
சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.

என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,
நான் களங்கப் படுத்தபட்டேன்
என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!

நான் ஷஹீது ஆக்கபட்டேன்....
அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்
காவிகளின் களியாட்டம் நடக்குதே!

 

ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்
நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;
நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்...
என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்
இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.

என்னை நீ மறந்து விட்டால் ...
நீயும் மறக்கடிக்கப்படுவாய்!
ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்
எதிரிகள் விழித்து கொள்வார்கள்
நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்
நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை
உண்மை ஆக்கிவிடுவார்கள்.

ஓ! இந்திய முஸ்லிமே!
என்னுடைய அழுகை சப்தம்
உன் செவிகளை எட்டவில்லையா?
அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து
என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?

oOo

ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்
எங்கள் காதுகளில் விழுகிறது
நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!
எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!
எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!
இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!


- திருவை அன்ஸர்

Comments   
sabeer
0 #1 sabeer 2011-10-13 11:33
God is great
Quote | Report to administrator
sulthan ibrahim
0 #2 sulthan ibrahim 2011-10-13 12:03
""எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!""

siru maatram:

engalai pudaithu alla!!!!!!!!!!!

Kaliyaattam seydha kaavi kumbalin uyirai uramaaki உன்னைக் கட்டி எழுப்புவோம்!

இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!
Quote | Report to administrator
M.அப்துல்லாஹ்
0 #3 M.அப்துல்லாஹ் 2011-10-14 15:08
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

// Kaliyaattam seydha kaavi kumbalin uyirai uramaaki உன்னைக் கட்டி எழுப்புவோம்! //

இது போன்ற எண்ணத்தையும் வாசகங்களை கவிதையிலும் தவிர்ப்பது நலம்.
நமக்கு முன்மாதிரி முஹம்மத் நபி(ஸல்) மற்றும் .அவர் மூலம் வந்த குர் ஆன் ஆகும்.

இந்த துற்செயலை செய்தவர்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே போல் ஒரு சிலர் செய்த இந்த சந்தேகமற்ற் மாபாதகமான காரியத்திற்கு அவர்கள் பாணியில் இது போன்ற வாசகங்கள் பிற மத சகோதரர்கள் பற்றி நமது குரோதத்தை வெறுப்பை வெளிபடுத்தும் தோற்றம் ஏற்படுத்தும் விதமாக அமையும் வாய்ப்புண்டு.

இத் துற்செயலை கண்டித்த கண்டிக்கும் மாற்று மத நடுநிலையான சகோதரர்களும் இதன் மூலம் பாதிப்புக்கும் தவரான நிலைப்பாட்டிற்க ு தள்ளப் படலாம். ஆக நாம் விவேகமாக இதை மீட்க முயல வேண்டும் அதற்கு இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் அவ்வழியில் வரும் தடைகளை எதிர்க்க தயாரான மன உறுதியுடன் செயல் பட வேண்டும். இன்ஷா அல்லாஹ் நாம் நமது இந்த முயற்சியில் வெற்றி பெறலாம். இல்லையெனிலும் இந்த எண்ணத்திற்கு நற்கூலியுண்டு இம்மையில் அல்லது மறுமையில் இதுவே மறுமையை நம்புபவர்கள் நிலைபாடாக இருக்க வேண்டும்.

ஏனெனில் மூஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவரும் ஒரு தாய் மக்கள் என்பது நமது நம்பிக்கை மாறாக அவ்ர்கள் நம்பிக்கை அவ்வாரல்ல. நமது சொல்லும் செயலும் அல்லாஹ்வின் கேள்விக்குட்படு த்த படும் என்பது நமது நம்பிக்கை அவர்க்ள் நம்பிக்கை அவ்வாறு இருக்கும் எனில் அவர்க்ள் இதில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

ஆக நாம் இப்போக்கை தவிர்த்து விவேகத்துடன் செயல் பட்டு சிந்தனையாளர்களு ம் சரி என ஆதரவு அளிக்கும் விதத்தில் இதை மீட்க முயல வேண்டும் அப்போது அவர்களும் இதில் நம்மோடு இணைந்து இதற்கு குரல் கொடுத்து வலு சேர்ப்பர் இன்ஷா அல்லாஹ் நாம் அந்த இறை இல்லத்தை புனரமைக்கலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
R.R.Sekhar
0 #4 R.R.Sekhar 2011-10-15 14:51
how to forget the black day. but i am wait for the shine day even i stood on the darkest .I have the believe INSAHA allaha cant sleep or slumber because he is very wise and ever long affection and love with all. All the knees are bend front of HIM. HE knows and do when is require.
Quote | Report to administrator
R.R.Sekhar
0 #5 R.R.Sekhar 2011-10-15 14:53
2:195அல்லாஹ்வின ் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
Quote | Report to administrator
rauoof
0 #6 rauoof 2011-10-21 14:46
assalamu alikkum insha allah eyakkangal yanru paramal muslim yanra ory nokkathodu poraduvom babari masjidi athy edathil mindum kattuvom
Quote | Report to administrator
rizwan
0 #7 rizwan 2011-10-27 19:37
iyakkangakalai thuranthu islam endra ore kolkaiyin adipadaiyil ore kaleefavin thalamayin keezh onrinaivom vetriyadaivom insha alllllah ........meendum kilafathai allah yerpaduthi tharuvanaka ...aameen
Quote | Report to administrator
HMS
0 #8 HMS 2012-05-20 11:23
மிகவும் உனர்வு பூர்வமான இந்த விசயத்தில் நாம் ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்து அகில இந்திய அளவில் ஒரு நாள் ஜும்மா பாபரியில் தொழ சென்றால் போதும் ! நல்ல முடிவு கிடைத்து விடும்! இன்ஷா அல்லாஹ்!!!!!!
Quote | Report to administrator
faiyaz
0 #9 faiyaz 2013-01-02 12:33
Insha Allah....
Quote | Report to administrator
athambawa rifaydeen jamaldeen
0 #10 athambawa rifaydeen jamaldeen 2013-02-08 02:28
நலமான பதிவுகள்..
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!