முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

முகப்பு

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணானாய்!

வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்!
வீடு முழுவதும்
ஊடுருவினாய் - நீ
இல்லத்தில் இல்லாத
நேரத்திலும் - என்
உள்ளத்துள் நிறைந்து நின்றாய்!

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்றாய்
பெற்றவன் என்னிடம்
பட்டறிவு பெற்றாய்!

அலிஃப் பா தா உன்
அழகுவாய் கற்கையில்
அஞ்சு வேளைத் தொழுததுபோல்
நெஞ்சு நெகிழ்ந்தது!

நீ
புன்னகைத்தாய்...
நான்
என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்!
பூவெனச் சிரித்தாய்...
என்னுள்
பூவனம் வளர்த்தேன்!
கோபித்தாய்...
கொஞ்சிக் குளிர்வித்தேன்!
அழுதாய்...
அடிபட்டவனாய் வலியுணர்ந்தேன்!
கன்னத்தில் முத்தமிட்டாய்...
காலத்தை வென்றெடுத்தேன்!
உன்
ஒவ்வொரு அசைவுக்கும்
வெவ்வேறு ஆளானேன்!!

இவ்வாறு வளரும்
என் மகளே,
என்னிடம் ஒரு மனு உண்டு
உன்னிடம் தர...
எல்லாத் தந்தையர் சார்பாகவும்...

உலகக் கல்வியின்
உல்லாசம் தவிர்
மார்க்கக் கல்வியில்
வாழ்கையைப் படி!

புறத்து ஆணின்
பார்வையைத் தவிர் -அது
கழுத்துச் சுருக்கின்
முடிச்சென உணர்!

தோழிகள் மத்தியில்
வாழ்வியல் விவாதி
திரைப்பட, தொலைக்காட்சி
தூண்டல்கள் ஒழி!

இறைமறை வேதம்
பலமுறை ஓது
நபிவழி பயின்று
நன்னெறி போற்று!

படிக்கும் காலத்தில்
பெற்றோர் சொல் கேள் -மண
முடிக்கும் காலத்தில்
கணவனைப் படி!

அன்னையாய் நீயும்
உன்னையே காண்கையில்
கற்றவை அனைத்தையும்
பாலோடு புகட்டு!

ஒழுக்கக் கோட்பாடு
கொண்டு
தாலாட்டுப் பாடு!
கதைப்பாட்டில்கூட
கண்ணியம் கற்பி!

மனுவின் வேண்டுகோள்
மனதினில் கொள்
உன்னைப் பார்த்தே
உன் இளையவர் வளர்வர்
ஏனெனில்...

முதல் மகளே
நீ
மூத்த பெண்ணாவாய்!

- சபீர்

கருத்துக்கள்   
abdus samadh
0 #1 abdus samadh 2011-10-08 06:56
super poem dear brother........ .very meaningful..... ..masha Allah
Quote | Report to administrator
KYASUDEEN
0 #2 KYASUDEEN 2011-10-08 08:49
MASHA ALLAH!!!!!!!!!! !! GR8 BROTHER,,,,,,, NALLTHORU MANU.....PILLAI KKUM THAYUKKUM!!!!!! !!!!!!!!!
Quote | Report to administrator
அபுஇபுறாஹிம்
0 #3 அபுஇபுறாஹிம் 2011-10-08 10:49
//வாப்பா என்ற
முதல் விளிப்பில்
மனிதனாய் எனை
முழுமைப் படுத்தினாய்
வாழ்வின் அர்த்தத்தை
வலிமைப் படுத்தினாய்! //

வாழ்வியலைச் சொல்ல உங்களின் கவிதைகளால் மட்டுமே முடியும் அதுவும் நான் வாசித்த வரையில் !

இதையம் தொடும் இதம் அதன் துடிப்பை தடுக்காமலே !
Quote | Report to administrator
rameez
0 #4 rameez 2011-10-08 12:51
alahaana arivurai......
Quote | Report to administrator
ஜமீல்
0 #5 ஜமீல் 2011-10-08 16:22
உணர்ச்சிகளை உறவோடு கலந்து உருவாக்கப்பட்ட சிறந்த படைப்பு.

வாழ்த்துகள்!
Quote | Report to administrator
muhammadhu thaahaa
0 #6 muhammadhu thaahaa 2011-10-08 20:36
alhamdhulillaah ungal kavidaigal anaiththum namadhu maarkaththaipat riyum vilippunarvai yerpadhuththako odiyadhaagavum irukkinradhu menmelum ungal padippugal thodara allahvidam ungalukkaaga duaa seigiren assalaamu alaikkum
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #7 அபூ ஸாலிஹா 2011-10-09 11:41
தென்றல் காற்றாய், மயிலிறகாய் மனதை ரம்மியப் படுத்துகிறது கவிதை.

காலத்திற்கேற்ற கவிதையிது... நம் அவசர யுகத்தில் ஒரு "பிரேக்" காக...

கவிஞருக்கு மனம் குளிர்ந்த பாராட்டுக்கள்.
Quote | Report to administrator
Jakir Hussain
0 #8 Jakir Hussain 2011-10-09 20:12
மகளுக்கு அறிவுறையூட்டும் அழகான கவிதை.
பாராட்டுக்கள் சபீர்!
Quote | Report to administrator
சபீர் அபுஷாருக்
0 #9 சபீர் அபுஷாருக் 2011-10-09 22:46
அன்பிற்குரிய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மகளுக்கொரு மனு வாசித்து விரும்பியமைக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்தவர்களைப் பார்த்துத்தான் இளையவர்கள் வளர்கிறார்கள் என்பது நான் கண்கூடாகக் கண்டது. ஆகையால், மூத்த பிள்ளைகளை மிக நல்ல பிள்ளைகளாக வளர்த்துவிட்டோம ானால் மற்ற பிள்ளைகளை வளர்ப்பது மிக சுலபமான வேலையாகிவிடும் என்பது என் கருத்து.

எனவே, நீங்கள் வாசித்ததோடல்லாம ல் பிள்ளைகளுக்கும் வாசித்துக்காட்ட ுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றியும் வாழ்த்துகளும்
Quote | Report to administrator
R.R.Sekhar
0 #10 R.R.Sekhar 2011-10-10 18:26
arumaiyanna patal.MAHALIUIK U ANNAL mannathugu ennimi. Yanna arputham. Nandri Vannakam.
Quote | Report to administrator
Yaser
0 #11 Yaser 2011-10-11 18:05
Masha allah ... Oru puthumaiya nadaeul kavithai koorinergal alahamthulilah. . Allah ungaluku arul purivanaga...
Quote | Report to administrator
NAZEER AHMED
0 #12 NAZEER AHMED 2011-10-14 18:38
ELLA PUGALUM YEAGAMAAI AALUM VALLAAN ALLAHU VIRKEY VAAN PUGHAL ANAITHUM,
YAA ALLAH
ITHUNAI AZHAGHIYA KAVITHAINAI THOGUTHU VAZHANGHIYA ANBARUKKU MEN MELUM THODARNTHU VAZHANGHIDA NALLAASI PURIVAAYAAGA
AMEEN AMEEN YAA RABBIL AALAMEEN
ANBAREY UMADHU SEVAI THODARVADHARKKU EMADHU VAAZHTHUKKAL.
Quote | Report to administrator
bindhu zalha
0 #13 bindhu zalha 2011-10-17 11:13
superb...!!!
Quote | Report to administrator
bindhu zalha
0 #14 bindhu zalha 2011-10-17 11:36
superb...!!!
Quote | Report to administrator
Rafiq Rahman
0 #15 Rafiq Rahman 2011-11-02 10:37
Assalamu Alaikkum Brother,

Very nice...Insha Allah i forward to my Daughter and tell her to follow up...May Allah Bless you bro...
Quote | Report to administrator
அதிரை மெய்சா
0 #16 அதிரை மெய்சா 2013-07-23 12:00
பொறுப்புள்ள தகப்பனாரின் பொறுப்பான போதனை. கவி வரியில் ஜொலித்தது. அருமை

வாழ்த்துக்கள்.
Quote | Report to administrator
AW.Hasanudeen
0 #17 AW.Hasanudeen 2013-07-24 10:53
அஸ்ஸலாமு அலைக்கும்.

பெற்ற பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற அழகிய தத்துவத்தை மிக அழகிய முறையில் சொன்ன உங்களுக்கு அல்லாஹ் இரு உலகிலும் நற்பாகியத்தை தந்தருள்வனாக. அமீன்.

அனைவர்களுக்கும் மிகவும் பயன்தரும் இன்ஷாஅல்லாஹ்.

வஸ்ஸலாம்
Quote | Report to administrator
Mohamed Ali jinnah
0 #18 Mohamed Ali jinnah 2013-07-24 13:09
முதலில் பெண் மகள் கிடைப்பது வாரிசுகளின் தொடர்புகளை(பேரன ் ,பேத்திகளை ) பார்க்க காலம் நெருக்கமாகும் . சேவை செய்ய பெண் மக்களை பெருவது பெரு மகிழ்வு .
அருமையான கவிதை .வாழ்த்துகள்
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

வலைக்காட்சி (Live TV)