சத்தியமார்க்கம்.காம்

இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
வியாழன், 20 ஜூலை 2006 10:36

குரானா

1991 ல் அத்வானி ரதயாத்திரை நடத்தியது அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல என நியூடெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முன்னாள் நியூடெல்லி முதல்வரும் பி.ஜே.பியின் மூத்த தலைவருமான திரு. மதன் லால் குரானா அறிவித்துள்ளார். தேச நலனை விட சுயலாபங்களுக்குத் தான் அத்வானி முக்கியத்துவம் அளித்ததாக மேலும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அத்வானி தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கம் செய்ய வைத்தார் எனவும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அத்வானி தான், சுப்ரீம் கோர்ட் இதனை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாபரி மஸ்ஜித்தைத் தகர்ப்பதற்காக அத்வானி நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களைக் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தின் நகலை ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் குரானா மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் வழங்கினார். பாபரி மஸ்ஜித் தகர்த்த வழக்கில் இருந்து அத்வானியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதைக் குறித்து விசாரிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

நாட்டில் இனக்கலவரம் உருவாக்குவதற்காகத் தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது எனவும் அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளார். மஸ்ஜித் தகர்ப்பதற்கு அப்போது பிரதமராக இருந்த காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் உதவியதாகவும், இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த சிபிஐ டைரக்டருக்கு மனித உரிமை கழகத்தில் அங்கத்துவம் தருவதாக வாக்களித்தைத் தொடர்ந்து தான், பாபரிமஸ்ஜித் வழக்கிலிருந்து அத்வானியின் பெயர் நீக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

- சத்தியமார்க்கம்.காம் செய்திக்குழு, நன்றி: தேஜஸ் தினசரி (18-07-2006 இதழ்)

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
புலமாடன்:
இது புதுமை இல்லை. இரகசியமும் இல்லை. பகிரங்கமானதே. அற்ப அரசியல் ஆதாயத்திற்காகச் சக இந்தியனின் இரத்தம் குடித்த காட்டேரிகளிலொன்று இப்போது அப்ரூவர் வாக்குமூலம் தருகிறது. நாளையே இது மாற்றப்படலாம். கல்யான்சிங்கை மறக்கவேண்டாம். புலமாடன்
1

July 20, 2006 20:42
0
அழகு:
உண்மை உறங்கியது சற்றுக் கூடுதல் என்றாலும் அது செத்து விடவில்லை. உள்துறை அமைச்சரும் நம் நாட்டின் நீதித் துறையும் குரானாவின் இக்குற்றச்சாட்டைப் பதிவு செய்து விசாரித்து, அத்வானியை தண்டித்தால்தான் நம் நாட்டு நீதித்துறை தலை நிமிர்ந்து நிற்கும். சத்தியமேவ ஜெயதே!
2

July 21, 2006 21:16

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:2 இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

புதிய கருத்துகள்

jasminamjad : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் Indha pottiyil eppadi kalandhu kolvadhu......


sasma : assalamu alaikum thank u


sasma : this is very useful for all.....


Ruknudeen : கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப...


abinaya : This not that much clear for students make it very clear. don't confuse them.


abdul hameed : சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி...


syeed : subahanaala


ummu hudhaifa : மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற...


Poovai Ansary : மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த...


Abdul Azees from trichy : அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ...


mbm sajeeth : jazakallaaku kair


Haja : In the name of allah. Its good attempt. This article must send it all our people. We have to united...


நல்லடியார் : அன்பு சகோ.அப்துல் அஜீஸ், ஒப்பீட்டிற்...


abdul azeez : வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே...


நல்லடியார் : //தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த...


karthikeyan : [i]very useful medical tips.Thankyou.



You are here  : முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இனக்கலவரம் உண்டாக்கவே பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது - குரானா
Twitter
RSS
YouTube
English