| வயது வந்தவர்களுக்கு மட்டும் |
|
|
| ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக | ||||
| வெள்ளி, 18 மார்ச் 2011 12:12 | ||||
சிறார்களுக்கு எந்த வயதிலிருந்து நோன்பு கடமையாகிறது? அவர்கள் நோன்பு நோற்கவும் தொழவும் குறிப்பாகத் தராவீஹ் தொழுகை தொழவும் எப்படி ஊக்கப்படுத்துவது? ரமளானில் சிறுவர்களின் உபரி நேரத்தை அவர்களுக்குப் பயனுள்ளதாக்கும் வகையில் ஏதேனும் எளிய மார்க்க ஆலோசனைகள் உள்ளனவா? - ஒரு முஸ்லிம் சகோதரி
பதில்:
அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! முதலாவது: நோன்பு கடமையாகும் பருவம் இளவயதுச் சிறார்கள் பருவ வயதை எட்டும்வரை அவர்களுக்கு நோன்பு கடமையில்லை. ஏனெனில், "மூவகையினருக்கான பதிவிலிருந்து எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது: 1. தனது நினவை இழந்தவர் மீண்டும் தன்னினைவை அடையும்வரை; 2. உறக்கத்தில் இருப்பவர் விழிக்கும்வரை; 3. ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை.” என்றுநபி (ஸல்) கூறியுள்ளார்கள். அபூதாவூது, 4399; இமாம் அல்-அல்பானீயின் சஹீஹ் அபீதாவூதில் இது ஸஹீஹ் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. (கூடுதலாக நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது, முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது). எனினும், பயிற்சியடையும் பொருட்டுப் பிள்ளைகளை நோன்பு நோற்கும்படிக் கூறவேண்டும். ஏனெனில் அவர்கள் செய்யும் நல்லறங்கள் அவர்களுக்காகப் பதியப்படலாம். தம் பிள்ளைகளை எந்த வயதிலிருந்து நோன்பு நோற்கப் பெற்றோர் பயிற்றுவிக்க வேண்டுமென்பது அந்தப் பிள்ளையால் எந்த வயதிலிருந்து நோன்பு நோற்க இயலும் என்பதைப் பொருத்ததாகும். இது பிள்ளைகளுக்கிடையே அவர்களது உடல்வலிமையைப் பொறுத்து மாறுபடும். சில மார்க்க அறிஞர்கள், "இதற்கான வயது பத்து" என்று குறிப்பிடுகிறார்கள். இதைக் குறித்து வேறுபட்ட அறிஞர்களது கருத்துகள்: "இதன் பொருள் யாதெனில் பிள்ளையை, பெற்றோர் நோன்பு நோற்கச் சொல்ல வேண்டும்; அப்பிள்ளை நோன்பு நோற்க வேண்டும். அதற்கு அப்பிள்ளை மறுத்தால், தொழ மறுக்கும் அவ்வயதுப் பிள்ளையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டும். அப்பிள்ளை நோன்பு நோற்றுப் பழகிக்கொள்ள அது ஏதுவாகும். 'ஒரு பிள்ளை நோன்பு நோற்கும் அளவிற்கு வலிமையடைந்துவிட்டால் அப்பிள்ளையை நோன்பு நோற்கும்படிச் சொல்லவேண்டும்' என்ற கருத்து கொண்டவர்களுள் அதா, ஹஸனுல் பஸரீ், இப்னு ஸீரீன், இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரீ, கதாதா, அஷ்-ஷாஃபியீ அடங்குவர்" - இமாம் இப்னு-குதாமா. "ஒரு பிள்ளையால் பலவீனம் அடையாமல் மூன்று நாள் தொடர்ச்சியாய் நோன்பு நோற்க இயலுமாயின், அப்பிள்ளையை ரமளான் நோன்பை முழுக்க நோற்கச் செய்ய வேண்டும்" - இமாம் அல்-அவ்ஸாயீ. "சிறுபிள்ளைகள் நோன்பு நோற்பதற்குப் பத்துவயது என்பது சாத்தியமுள்ள வயதாய் இருக்க முடியும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வயதை எட்டிய பிள்ளை தொழாமல் இருந்தால் அடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்; மேலும் நோன்பு என்பது தொழுகையைப் போன்றது என்பதாலும் இவ்விரண்டு அறச்செயல்களும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமானவை என்பதாலும் இவையிரண்டும் உடல் சார்ந்த செயல் என்பதாலும் இஸ்லாத்தின் தூண்களைச் சேர்ந்தவை என்பதாலும் ஆகும். ஆயினும் நோன்பு கடினமானது. எனவே நோன்பு நோற்கப் பிள்ளையால் இயலுமா என்பதைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் சில பிள்ளைகளால் தொழ முடியும்; ஆனால் நோன்பு நோற்கும் சக்தியை அடைந்திருக்கமாட்டார்கள்" - இமாம் இபுனு குதாமா (அல்-முஃக்னீ, 4/412). நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், தம் பிள்ளைகளுடன் இம்முறையையே கடைபிடித்தார்கள்; எந்தெந்தப் பிள்ளைகளால் இயலுமோ அவர்களை நோன்பு நோற்கக் கூறினார்கள். பசியினால் அப்பிள்ளை அழுமேயானால், விளையாட்டுப் பொம்மையைக் கொடுத்து அதன் கவனத்தைத் திசை திருப்புவார்கள். ஆனால் அப்பிள்ளை பலவீனமாகவோ, ஆரோக்கியக் குறைவாகவோ இருந்து, அப்பிள்ளையின் உடல்நலனுக்குத் தீங்கு ஏற்படும் எனத் தெரிந்தால் நோன்பு நோற்கும்படி வற்புறுத்த அனுமதியில்லை. "இளவயதுப் பிள்ளை பருவமடையும்வரை நோன்பு நோற்கும்படி வற்புறுத்தப்படக் கூடாது. ஆனால் அப்பிள்ளையினால் இயலுமானால் நோன்பு நோற்கும்படிச் சொல்லலாம். இவ்வாறு பயிற்சியளிப்பது, பிள்ளைகள் பருவம் எய்தியவுடன் நோன்பு நோற்பது எளிதாக அவர்களுக்கு ஆகிவிட உதவும். முஸ்லிம் சமுதாயத்தின் சிறந்த தலைமுறையினரான நபித் தோழர்கள் தம் பிள்ளைகளின் இளவயதில் அவர்களை நோன்பு நோற்கச் செய்வார்கள்" - அல்-ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் அல்-உதைமீன் (மஜ்மூ ஃபதாவா அல்-ஷேக் இப்னு உதைமீன், 19/28, 29). மேலும், "என் இளவயது மகன் ரமளானின் நோன்பை நோற்பேன் என்று விடாப்பிடியாய் இருக்கிறான். நோன்பு நோற்பது அவனது உடல்நலத்தை நிச்சயம் பாதிக்கும். ஏனெனில், அவன் மிக இளம்பிள்ளையாகவும் உடல்நலம் குன்றியவனாகவும் இருக்கிறான். இந்நிலையில் அவன் தனது நோன்பை முறிக்கும்படி நான் அடித்துத் தடுக்கலாமா?" என்று ஷேக் அல்-உதைமீன் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது, "அவன் இளவயதினனாகவும் பருவம் எய்தாதவனாகவும் இருப்பின் அவன் நோன்பு நோற்பது கடமையில்லை. ஆனால் சிரமப்படாமல் அவனால் நோன்பு நோற்க இயலுமாயின் அவனுக்கு அவ்வாறு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். நபித்தோழர்கள் (ரலி-அன்ஹும்) தம் பிள்ளைகளை நோன்பு நோற்கச் செய்வார்கள். பிள்ளைகள் அழநேர்ந்தால் பொம்மைகளைக் கொடுத்து அவர்களது கவனத்தைத் திசை திருப்புவார்கள். ஆனால் நோன்பு நோற்பது அவனது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது உறுதி என்றால் அவன் நோன்பு நோற்பதைத் தடுக்க வேண்டும். 'இளவயதுப் பிள்ளைகள், அவர்களுடைய சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்ற அச்சநிலை இருப்பின் அவர்கள் வசம் அவர்களது சொத்துகளை அளித்துவிடக் கூடாது' என்று அல்லாஹ் தடை ஏற்படுத்தியிருக்கும்போது அவர்களது உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்குமோ என அச்சப்படும் செயல்களைத் தடுப்பது பொருத்தமானதே. ஆனால் அவர்களை அடித்துத் தடுக்கக் கூடாது. அது பிள்ளைகளை வளர்க்கும் முறையல்ல" என விளக்கமளித்தார்கள். (மஜ்மூ ஃபதாவா அல்-ஷேக் இப்னு உதைமீன், 19/83). இரண்டாவது: நோன்பு-தொழுகை ஆகிய கடமைகளுக்கான பயிற்சி பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் அளிப்பதன் மூலமாகவும் அவர்கள் தங்களைவிட மூத்தவர்களுடனும் இளையவர்களுடனும் போட்டிபோடும் குணத்தைத் தூண்டியும் அவர்கள் தாமாகவே நோன்பு நோற்கும்படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தங்கள் தந்தையருடன் வெவ்வேறு பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு வெகுமதிகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். அது பாராட்டுச் சொற்களாக இருக்கலாம்; அவர்களுடனான சிறு பயணமாக இருக்கலாம்; அவர்கள் விரும்பும் பொருள்களை வாங்கித் தருவதாகவும் இருக்கலாம். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில் சில தாய்-தந்தையர் தம் பிள்ளைகளை அவ்வாறு ஊக்குவிப்பதில்லை. வேறு சிலர் தம் பிள்ளைகள் தாமாக விரும்பிச் செய்யும் இறைக் கடமைகளையும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். இரக்கமும் பரிவும் என்பது தம் பிள்ளைகள் தொழுவதையும் நோன்பு நோற்பதையும் தடுப்பது என்று இவர்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஷரீஅத்தின் அடிப்படையிலும் சரி, விவேகத்துடன் கல்வி புகட்டுவதன் அடிப்படையிலும் சரி, இறைக் கடமைகளைச் செய்ய விரும்பும் பிள்ளைகளைப் பரிவின் பெயரால் தடுப்பது முற்றிலும் தவறானது. "தம் பொறுப்பையறிந்த, தாங்கும் உடல்வலிமையுள்ள, பயணத்தில் இல்லாத ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கியுள்ளான். பருவ வயதை எட்டாத இளம் பிள்ளைகளுக்கு நோன்பு கடமையில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், 'மூவகையினருக்கான பதிவிலிருந்து எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது' என்று கூறியதில், பருவ வயதை எட்டாத இளம் பிள்ளைகளை அதில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் ஒருபிள்ளை நோன்பு நோற்கும் வலிமையுள்ள வயதை எட்டியதும் நோன்பு நோற்கும்படி அப்பிள்ளையின் காப்பாளர் அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்புக் கடமையை அந்தப் பிள்ளை பயின்றுகொள்ளும் வகையில் அது அமையும். சிலர் தம் பிள்ளைகளைத் தொழவோ, நோன்பு நோற்கவோ அறிவுறுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். இது தப்பு. இதற்காகப் பெற்றோர் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர். கேட்டால், பிள்ளைகளின் மேலுள்ள பாசத்தாலும் பரிவினாலும் அவர்களை நோன்பு நோற்கும்படிக் கூறவில்லை என்று அவர்கள் காரணம் கூறுகிறார்கள். ஆனால் தம் பிள்ளைகள் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் நல்லறங்கள் புரியவும் பயிற்சி அளிப்பவர்கள்தாம் உண்மையில் பரிவும் பாசமும் கொண்ட பெற்றோராரேயன்றி, பயனுள்ள வகையில் பிள்ளைகள் பயிற்சி பெறுவதையும் ஒழுக்கம் பழகுவதையும் தடு்ப்பவர்கள் அல்லர்" என அல்-ஷைக் அல்உதைமீன் கூறியுள்ளார் (மஜ்மூ ஃபதாவா அல்-ஷேக் இப்னு உதைமீன், 19/19, 20). மூன்றாவது: பிள்ளைகளின் ரமளான் பொழுதுகளைப் பயனுள்ளதாக்குவது. தம் பிள்ளைகளை குர்ஆன் ஓதவைப்பதன் மூலம், ஒவ்வொரு நாளும் சிறு பகுதிகளை மனனம் செய்யவும் வைத்து அவர்களது நேரங்களை ஆக்கிரமிக்க வைக்கலாம். அவர்களது வயதிற்கேற்ற பயனுள்ள புத்தகங்கள், புகழ்பாக்கள் அடங்கிய ஒலி நாடாக்கள், பயனுள்ள விடியோக்கள் என்றும் கலந்து அளிக்கலாம். 'அல்-மஜ்து' எனும் தொலைக்காட்சி சானல் இத்தகைய நல்ல நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்நேரத்தில் தொலைக்காட்சிகளில் பயனுள்ளவற்றை அவர்கள் காணுமாறு செய்யலாம். தம் பிள்ளைகளை நல்லவிதமாய் வளர்க்கக் கவலைகொண்டுள்ள இச்சகோதரியினை நாம் பாராட்டுகிறோம். முஸ்லிம் குடும்பங்களில் இன்னமும் நல்லறங்கள் மீதான ஆர்வம் மீதமுள்ளன என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் பெரும்பாலானோர் தம் பிள்ளைகளின் அறிவையும் வலிமையையும் வெளிக்கொணர்வதை திறம்படச் செய்வதில்லை. ஆகையால், அவ்வாறான பிள்ளைகள் ஆர்வம் குன்றியவர்களாகவும் பிறரைச் சார்ந்து நிற்போராகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களைத் தொழவும் நோன்பு நோற்கவும் ஊக்கப்படுத்தாமல் அக்கறையின்றி விட்டுவிட, அவ்விதமே வளரும் பல பிள்ளைகள் பெரியவர்களானதும் இறைவனை வழிபடும் பழக்கம் இல்லாதவர்களாகி, காலந்தாழ்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறித் திருத்தியெடுப்பது பெற்றோருக்குக் கடினமாகிவிடுகிறது. இதில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தியிருந்தால் பிற்காலத்தில் வருத்தப்படாமல் இருக்கலாம். நாம் நம் பிள்ளைகளை நலமே வளர்க்கவும் அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இறைவனை வழிபடுவதை நேசிப்பவர்களாக ஆகிவிடுவதற்கு நம் பிள்ளைகளுக்குரிய கடமைகளை நாம் முறையே நிறைவேற்றக்கூடியவர்களாக நம்மையெல்லாம் ஆக்கியருள வேண்டி அல்லாஹ்விடம் உதவி கோருவோம். முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! oOo மூலம் : http://www.islam-qa.com/en/ref/65558 & http://islam4parents.com/2008/09/what-age-should-children-start-fasting/ -தமிழ்த் தழுவல் : நூருத்தீன்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (51)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே நோன்பு பருவ வயதுடையவர்கள் மீது தான் கடமை என்பதற்கு கட்டுரையில் உள்ள ஹதீஸ் பொருத்தமானதாக இல்லையே இதை வலியுறுத்த வேறு ஹதீஸ் இல்லையா, இல்லாத நிலையில் சிறுவர்களை நோன்பிருக்க செய்வோம் எனும் புகாரியில் உள்ள ஹதீஸ் மற்றும் இந்த ஆக்கத்தில் உள்ள கருத்துக்கள் சம்பவங்களும் சிறுவர்கள் நோன்பிருக்க வேண்டுமென்பதையே உணர்த்தும் நிலையில் உள்ளன. அதே போல் இந்த ஹதீஸை கவனிக்கவும்.. மூவகையினருக்கான பதிவிலிருந்து எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது: 1. தனது நினவை இழந்தவர் மீண்டும் தன்னினைவை அடையும்வரை; 2. உறக்கத்தில் இருப்பவர் விழிக்கும்வரை; 3. ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை.” இதில் மூவர் பற்றி எழுது கோல் உயர்த்தப் பட்டதாக கூறப்படுகிறது. இதை கடமைக்கு அல்லது கடமையில்லை என்பத்ற்கு ஆதாரமாக கோள்வதை விட கடமையை இவர்கள் நிறைவேற்ற தவறினால் குற்றம் பிடிக்கப் படாது என்ற கருத்தே வருகிறது. கடமை இல்லை என்று நேரடியான ஹதீஸ் வாசகம் இல்லாத நிலையில் எவ்வாரு இதில் கடமையே இல்லை என்று கூற இயலும். உதாரணம் 1) கடமையான விஷயங்களை நினைவிழந்தவர் செய்யா விட்டால் குற்றமாகாது 2) கடமையான விஷயங்களை உறக்கத்தில் இருப்பவர் செய்யா விட்டால் அதுவும் குற்றமாகாது என்பது போல்.. 3) கடமையான விஷயங்களை சிறுவர்கள் செய்யா விட்டால் குற்றமாகாது என்ற கருத்தே பொருத்தமாக உள்ளது. இந்த மூண்று சாரார் கடமையை நிறை வேற்றாதற்கு குற்றம் பிடிக்க மாட்டார்க்ள் என்பதும் கடமையே இல்லை என்பதும் வெவ்வேரு விஷயங்கள். இந்த ஹதீஸை மட்டுமே சான்றாக்கி சிறுவர்கள் மீது கடமை இல்லை என்று கூற இயலாது வேரு தெளிவான ஹதீஸ் இருப்பின் தரவும் அதுவே சிறுவர்கள் பருவமடையும் வரை கடமை இல்லை என்று கூற உதவும். அல்லாஹ் மிக அறிந்தவன். 1
March 18, 2011 23:26
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆக்கத்திற்கு இப்படி தவறான / இரு பொருள் தரும் .. "வயது வந்தவர்களுக்கு மட்டும்" .. என்பதை தவிற வேறு தலைப்பே கிடைக்க வில்லையா? 2
March 19, 2011 00:15
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
இஸ்லாம் விதித்துள்ள கடமையான அமல்களைச் சிறுவர்கள் செய்யாவிட்டால் குற்றமில்லை என்று விளங்குவதுபோல், தங்கள் மீது கடமையில்லாத அமல்களைச் சிறுவர்கள் செய்தாலும் பதிவுசெய்யப்படுவதில்லை என்று விளங்குவதே இங்கு பொருத்தமாகும்! ''அடியாரின் நன்மை, தீமையைப் பதிவுசெய்யுங்கள்'' என வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடும் கருத்தில் பல அறிவிப்புகள் உள்ளன. இந்நிலையில் சிறுவர்களுக்கு எழுதுகோல் உயர்த்தப்பட்டிருப்பது நன்மை, தீமை எதுவுமே பதிவுசெய்யப்படாது என்கிற கருத்தையே உள்ளடக்கியுள்ளது! பருவ வயதையடையாத சிறுவர்களுக்கு எழுதுகோல் உயர்த்தப்பட்டது என்பதில் நன்மைகள் பதிவுசெய்யப்படும் தீமைகள் பதிவுசெய்யப்படாது என்கிற கருத்துடையோர், துணை ஆதாரங்களுடன் அதற்கான மேலதிக விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றியுடன் ஏற்றுக்கொள்வோம்! (விதிவிலக்காக இஸ்லாம் அடையாளம் காட்டியதைத் தவிர்த்துக்கொள்க) 1. உறக்கத்தில் இருப்பவர், 2. சிறுவர், 3. பைத்தியக்காரர். இம்மூவரும் சுயநினைவுடன் எதுவும் செய்வதில்லை. அதாவது, ''எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன'' என்கிற எண்ணத்தின் அடிப்படையில் இவர்கள் திட்டமிட்டு அமல்கள் செய்வதில்லை என்பதால் இம்மூவருக்கும் நன்மை, தீமை எதுவும் பதிவுசெய்யப்படாது என்பதே நமது நிலைப்பாடு. மாற்றுக் கருத்துடையோர் ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்க! (அல்லாஹ் மிக அறிந்தவன்) 3
March 19, 2011 08:06
//1) கடமையான விஷயங்களை நினைவிழந்தவர் செய்யா விட்டால் குற்றமாகாது
2) கடமையான விஷயங்களை உறக்கத்தில் இருப்பவர் செய்யா விட்டால் அதுவும் குற்றமாகாது என்பது போல்.. 3) கடமையான விஷயங்களை சிறுவர்கள் செய்யா விட்டால் குற்றமாகாது என்ற கருத்தே பொருத்தமாக உள்ளது. // சகோதரர் அப்துல்லாஹ், 1) புத்தி சுவாதீனம் இழந்தவர் 2) தூக்கத்திலிருப்பவர் 3) சிறுவர்கள் ஆகியோர் மீது இஸ்லாமிய அடிப்படை கடமையான விஷயங்கள் அனைத்தும் கடமை என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்கள் கருத்து அடிப்படைக்கே முரணாக உள்ளது. 1) புத்தி சுவாதீனம் இல்லாதவர் மீது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றையும் இன்னபிற கடமைகளையும் இஸ்லாம் கடமைகளாக விதித்துள்ளது என்பது இஸ்லாத்தையே கேலி செய்கிறது. 2) தூக்கத்திலிருப்பவரும் தொழ வேண்டும்; நோன்பு வைக்கவேண்டும்; ஜக்காத் கொடுக்கவேண்டும்; ஹஜ் செய்யவேண்டும் - என்பது ஆச்சரியமாக உள்ளது. தூங்குபவர் எப்படி இவற்றைச் செய்வார்? 3) சிறுவர்கள் மீதும் அனைத்தும் கடமை என்பது, எத்தனை வயது முதல் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் வீட்டில் குழந்தைகளை 3 வயதிலிருந்து சிறுவர் என்றே குறிப்போம். என்றால் குழந்தைகளுக்கு 3 வயது முதலே கடமையா? தயவுசெய்து சொல்வதைத் தெளிவாகச் சொல்லவும். - நஸ்ருல்லாஹ். 4
March 19, 2011 09:58
அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்லிம் மற்றும் நஸ்ருல்லாஹ் அவர்களே கருப் பொருள் "நன்மையா" "தீமையா" "பதியப்" படுமா" "படாதா" போன்ற அனுமானங்கள் என்பதல்ல. "கடமையா" "கடமையில்லையா" என்பதே. எந்த வயது முதல் கடமை என்பதற்கு ஆதாரமாக தரப்பட்டுள்ள ஹதீஸில் ஆதாரம் இல்லை. வேறு ஹதீஸ்களில் நேரடி ஆதாரம் இருப்பின் தருமாரு கேட்டிருந்தேன். // புத்தி சுவாதீனம் இல்லாதவர் மீது தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றையும் இன்னபிற கடமைகளையும் இஸ்லாம் கடமைகளாக விதித்துள்ளது என்பது இஸ்லாத்தையே கேலி செய்கிறது. 2) தூக்கத்திலிருப்பவரும் தொழ வேண்டும்; நோன்பு வைக்கவேண்டும்; ஜக்காத் கொடுக்கவேண்டும்; ஹஜ் செய்யவேண்டும் - என்பது ஆச்சரியமாக உள்ளது. தூங்குபவர் எப்படி இவற்றைச் செய்வார்?// நானோ மற்ற யாரோ அவ்வாரு கூற வில்லை கூறகூற மாட்டார்கள் //உங்கள் கருத்து அடிப்படைக்கே முரணாக உள்ளது.// அடிப்படைகள் ஆதாரத்தின் துணையுடன் அமைக்கப் பட்டுருக்க வேண்டும் அந்த அடிப்படையான் ஆதாரத்தை தந்து விட்டால் வேறு பேச்சுக்கே இடமில்லை. அதை ஏற்று கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைபாடு ஆகும். அறிஞர்கள் கருத்துக்கள் நிலைபாடுகள் எல்லாம் நான் அறிந்த ஒன்றே ஆனால் முறையான ஆதாரம் இருப்பின் தரப்பட்டால் அதனால் அனைவரும் தீர்வு பெறலாம் என்பதே எனது நிலை. உறக்கத்தில் இருப்பவர்கள் புத்தி சுவாதீனமானவர் சிறுவர்கள் போன்றவர் மீது நோன்பு கடமை என்பதை நான் கூற வில்லை என்பது வேறு விஷயம். இந்த ஹதீஸில் கடமையா" "கடமையில்லையா" என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறினேன். இங்கு வீண் வாதங்கள் இன்றி ஆதாரங்கள் தரப் பட்டால் விவகாரம் மேலும் வளர தேவையே இருக்காது அதை விட்டு மற்ற கேள்விகள் அனுமானங்கள் தேவையில்லை. மார்க்கம் என்பது அனுமானங்கள் இல்லை குர் ஆனும் நபி வழியுமே ஆகும். அதன் துணையின்றி அதற்கு மாற்றமாக கருத்துக்கள் யார் கூறினாலும் எத்தனை பேர் கூறினாலும் ஏற்றுக் கொள்ள தேவையில்லை ஆதாரபூர்வமான ஹதீஸ் இருப்பின் மறு பேச்சுக்கெ இடம் இல்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். 5
March 20, 2011 22:39
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் எம்.அப்துல்லாஹ் அவர்களே. //கருப் பொருள் "நன்மையா" "தீமையா" "பதியப்" படுமா" "படாதா" போன்ற அனுமானங்கள் என்பதல்ல. "கடமையா" "கடமையில்லையா" என்பதே.// - எம்.அப்துல்லாஹ் ''பருவ வயதையடைந்தவருக்கே நோன்பு கடமை. சிறுவருக்கு நோன்பு கடமையில்லை'' என அறிவுப் போட்டி ஆக்கத்தின் மறுமொழியில் சொல்லியுள்ளோம். அறிவுப் போட்டி ஆக்கத்தில், சிறுவர்களுக்கும் நோன்பு கடமை என்பதற்கு சம்பந்தமில்லாத குர்ஆன் வசனங்களையும் தொடர்பில்லாத அறிவிப்பையும் சுட்டிக்காட்டி உங்கள் மறுமொழிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இனி, சிறுவர்கள் மீதும் இஸ்லாம் நோன்பைக் கடமையாக்கியுள்ளது என்பது உங்கள் வாதம் என்றால் அதை வெளிப்படையாக உறுதிபடுத்துங்கள். அறிவுப் போட்டி ஆக்கத்திலேயே எவை அனுமானம் என்கிற கருத்துகளைப் பகிர்ந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ். (அல்லாஹ் மிக அறிந்தவன்) 6
March 21, 2011 17:28
அன்பான சகோதரர் எம். அப்துல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும். (1) "நான் ஒரு முஸ்லிம்; இன்னும் நான் பருவ வயதை எட்டவில்லை. எனவே, அல்லாஹ் விதித்த எதுவும் என்மீது கடமையில்லை" என ஒரு விடலை கூறினால், அதை மறுத்து, "உன்மீது கடமைகள் உள்ளன" என வாதிக்க முற்படுபவர்கள்தாம் அதற்கான சான்றுகளை முன்வைக்கக் கடமைப் பட்டவர்கள். (2) "திருமணச் செலவுகளுக்கு வசதியுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் ..." எனக் கூறும் ஹதீஸிலும் வயதுக்கான நம்பர் சொல்லப்படவில்லை. அதைக் காரணம் காட்டி, "திருமணம் செய்து கொள்வதற்கு வயது வரம்பில்லை" எனக் கூறுவது ஏற்புடையதன்று. (3) பருவ வயதுக்கு நம்பர் மட்டும் போதுமென்றால் இபுனு உமர் (ரலி) அவர்கள் கூறும் புகாரீ ஹதீஸ் எண் 2664ஐப் பார்வையிடுக: நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள். அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்: உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர்(ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், '(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்" என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள். 7
March 21, 2011 18:24
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்கள் முஸ்லிம் & அப்துல்லாஹ் அவர்களே //அறிவுப் போட்டி ஆக்கத்தில், சிறுவர்களுக்கும் நோன்பு கடமை என்பதற்கு சம்பந்தமில்லாத குர்ஆன் வசனங்களையும் தொடர்பில்லாத அறிவிப்பையும் சுட்டிக்காட்டி உங்கள் மறுமொழிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இனி, சிறுவர்கள் மீதும் இஸ்லாம் நோன்பைக் கடமையாக்கியுள்ளது என்பது உங்கள் வாதம் என்றால் அதை வெளிப்படையாக உறுதிபடுத்துங்கள். // எனது வாதமமென்ன கருத்து என்ன என்பதை நிதானமாக படித்தால் பின்னூட்டத்தில் காணலாம். //"நான் ஒரு முஸ்லிம்; இன்னும் நான் பருவ வயதை எட்டவில்லை. எனவே, அல்லாஹ் விதித்த எதுவும் என்மீது கடமையில்லை" என ஒரு விடலை கூறினால், அதை மறுத்து, "உன்மீது கடமைகள் உள்ளன" என வாதிக்க முற்படுபவர்கள்தாம் அதற்கான சான்றுகளை முன்வைக்கக் கடமைப் பட்டவர்கள். // உங்களுடைய இப்பின்னூட்டங்களுக்கு ஏற்கனவே எனது பின்னூட்டத்தில் பதிலும் உள்ளது உங்கள் வாதங்களைப் பற்றியும கருத்துக்கள் உள்ளன். ஒரு ஆக்கம் ஒரு கருப் பொருளைப் பற்றி பேச கையாண்ட ஹதீஸைப் பற்றி அது கருபொருளுக்கு சான்றாக இல்லை என்று கூறினேன் சான்றிரிருந்தால் வையுங்கள், அதை வி்டுத்து திசை திருப்பும் கேள்விகள் வாதங்கள் செய்ய பதிலளிக்க எனக்கு நேரமில்லை. , 8
March 21, 2011 23:33
சகோதரர் அப்துல்லாஹ்
புரிந்தும் புரியாததுபோல் தாங்களின் விவாதம் இருக்கிறது தாங்கள் விவாதித்தவைகளை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் உங்களுக்கேப் புரியும் தாங்கள் என்ன விவாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என, நீங்கள் முன்னால் செய்த விவாதங்களை அதிகம் எடுத்துப்போட விரும்பவில்லை ஒரு சில கீழே உள்ளது. உங்களின் விவாதத்தில் கடமையில்லை என்கிறீர்கள் பிறகு கடமை என்கிறீர்கள் விவாதம் செய்யக்கூடியவர்களுக்கு அப்துல்லா என்ன சொல்ல வருகிறார் என்று தெறியாமலிருக்கிறார்கள் என் கேள்வி : நோன்பு குழந்தைகளுக்கு கடமை என்கிறீர்களா அல்லது இல்லையா குழந்தைகளுக்கு கடமை என்றால் அதற்கு என்ன ஆதரம் தருகிறீர்கள் - தாங்கள் முன்சொன்ன ஹதீஸை எல்லாம் ஆதாரம் காட்டக்கூடாது காரணம் அதற்கு நான் விலக்கம் சொல்லிருக்கிறேன் என்னிடத்தில் சிறார்களுக்கு கடமையில்லை என்று நேரடியாக ஆதரம் இல்லை சில பொதுவான சட்டம்தான் இருக்கிறது அதுவே போதுமானது 1. தனது நினவை இழந்தவர் மீண்டும் தன்னினைவை அடையும்வரை; 2. உறக்கத்தில் இருப்பவர் விழிக்கும்வரை; 3. ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை.” தாங்களுக்கு என்று ஒரு நியதியை வகுத்துக்கொண்டு விதன்டாவாதம் செய்யக்கூடாது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விசயம் என்றால் தாங்கள் மட்டும் விதிவிலக்கல்ல தாங்கள் விலங்கியும் விலங்காததுபோல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் நேரத்தை வீன் வரயம் செய்யாதீர்கள் இறைவன் சொல்கிரான் فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول //எம் அப்துல்லாஹ்:: : அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ் அன்பு சகோதரர் ஜாகீர் ஹுசைன் முதலில் இது போன்ற போட்டிகளின் ஒரு அடிப்டைஇ இருக்கும் பதில்களில் சரியானதை தேர்வு செய்வது என்பதாகும்.( விளக்கங்களின் அடிப்படையில்) இரண்டாவது இந்த கேள்வியில் எங்கும் யாரையும் நிர்ப்பந்திக்க ஆதரவு அளிக்கப் படவில்லை. மேலும் இது குறிப்பிட்ட வயதுக்கு நோன்பு கடமை எனும் ஒரு தவறான கருத்தை தெளிவு படுத்தி நோன்பு என்பது பருவமடைந்த சக்திக்கு உட்பட்டவர்கள் வயது வரம்பின்றி நிறைவேற்ற வேண்டிய கடமை எனும் அடிப்படையில் அமைந்தது. சிறுவர் சிறுமிகளையும் அவர்கள் விரும்பும் போது இயலுமானால் ௭ழு வயது பத்து வயது என்று பொறுக்காமல் பழக்கலாம் என்பதே எனது புரிதல். மேலும் புதிய விளக்கம் தேவையற்ற நிலையில் இது தெளிவு படுத்தப்பட்டுள்ளதுஇ ஆகையால் மேலும் இது சரி தவறு என்பதும் அவசியமற்றது. // 9
March 22, 2011 13:40
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் அப்துல்லாஹ், சிறுவர்களுக்கு நோன்பு கடமையில்லை என்கிறீர்கள். கடமை தான், ஆனால் அவர்கள் நோன்பு வைக்கவில்லையேல் அவர்கள் குற்றம்பிடிக்கப்பட மாட்டார்கள் என்கிறீர்கள்! என்ன தான் சொல்லவருகிறீர்கள் என்றே புரியவில்லை. ஏனிப்படி மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? இங்கே இத்தளத்தில் எடுத்துக்காட்டியுள்ள அதே ஹதீஸை ஆதாரமாக வைத்து, சிறுவர்களுக்கு நோன்பு கடமையா என்பதைப் பற்றி சகோதரர் ஜாகிர் நாயக் அவர்கள் விளக்குவதைக் கீழ்கண்ட லிங்கில் காணுங்கள். http://www.islamictube.com/playlist/f0de7ffb46447f0fe687/77 "ரமளான் நோன்பு யார் மீது கடமை?" என்ற கேள்விக்கான கீழ்கண்ட பதிலையும் படியுங்கள்: http://islam-qa.com/en/ref/26814/fasting obligatory "வாதத்திற்கு மருந்துண்டு; வீண் விதண்டாவாதத்திற்கு மருந்தில்லை!" - நஸ்ருல்லாஹ். 10
March 22, 2011 18:00
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அல்லாஹ்வின் ஆணைகளை நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ் வழங்கவிருக்கும் வெகுமதிகளைப் பெறவேண்டும் என்கிற நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே நன்மையான செயல்களைத் தூண்டவும் தீமையான செயல்களைத் தடுத்திடவும் இஸ்லாம் ஆர்வமூட்டுவதோடு அடியார்களின் நன்மை, தீமையைப் பதிவுசெய்திட எழுதுகோலையும் எழுத்தரையும் இறைவன் ஏற்பாடு செய்திருக்கிறான். இறையாணை வழியாக கடமையான அமல்களை தற்காலிகமாக விட்டுவிட சலுகை வழங்கப்பட்டோர் தவிர அதற்கான சக்திப் பெற்றவர் இறையாணையை நிறைவேற்றிட வேண்டும். இல்லையேல் இவர்கள் இறையாணையப் புறக்கணித்தக் குற்றத்திற்குள்ளாவர். இஸ்லாம் கடமையென விதிக்கப்பட்ட செயல்களை நிறைவேற்றினால் அவை நன்மையெனவும், அவற்றை நிறைவேற்றத் தவறினால் அவை தீமை எனவும் எழுத்தாளரால் பதிவுசெய்யப்படும். இவை முஸ்லிம்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் இஸ்லாமிலிருந்து பெறும் அறிவுரையாகும். இதில் ஒரு சாராரின் செயல்களைப் பதிவுசெய்திட எழுதுகோல் ஏற்பாடு செய்திருக்கவில்லை என்றால், அச்சாராரின் செயல்களைப் பதிவுசெய்ய எழுத்தரும் நியமிக்கப்படவில்லை என்றுதான் பொருள். இறையாணைப் பிறப்பிக்கப்பட்ட கடமையானச் செயல்களை நிறைவேற்றுவது இவர்கள் மீது கடமை இல்லை! என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்க இதைவிட வேறு சான்றுகள் வேண்டுமென்பதில்லை. எடுத்துக் காட்டாக: ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் இருவரிடையே தந்தையின் செயல்களைப் பதிவுசெய்திட எழுதுகோலுடன் எழுத்தரும் நியமிக்கப்பட்டுள்ளார். மகனின் செயல்களைப் பதிவுசெய்திட எழுதுகோலும் இல்லை, எழுத்தரும் இல்லை என்றால் மகன் தற்காலிகமாக இறையாணைகளை நிறைவேற்றிட வேண்டுமென்பதில்லை எனச் சலுகை வழங்கப்பட்டுள்ளார். அதாவது, ''மகன் பருவ வயதையடையும் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளார்'' [b}''சிறுவர் பருவ வயதையடையும் வரை எழுதுகோல் உயர்த்தப்பட்டுள்ளது'' என்ற நபிமொழி அறிவிப்பின்படி, பருவ வயதை அடையாத சிறுவரின் செயல்களைப் பதிவுசெய்ய எழுதுகோலும் எழுத்தரும் இல்லை என்றால் சிறுவரின் அமல்கள் பதிவுசெய்யப்படுவதில்லை என்றுதான் அர்த்தப்படும். அதாவது, இஸ்லாம் வலியுறுத்தியுள்ள கடமையான அமல்களை சிறுவர் செய்தால் அவை நன்மையாகப் பதிவுசெய்யப்படுவதில்லை! கடமையான அமல்களைச் செய்யாமல் இருந்தால் அவை தீமையாக - குற்றமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை. பருவ வயதையடைந்தவர் கடமையான அமல்களைச் செய்யாவிட்டால் குற்றமென முழுமனதாக ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், பருவ வயதையடையாத சிறுவர் கடமையான அமல்களைச் செய்யாவிட்டால் குற்றமில்லை என்றும் முழுமனதோடு ஒப்புக்கொள்பவர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை சீரான சிந்தனையுடன் ஆய்வு செய்தால், பருவ வயதுடையோருக்கு கடமையாக்கப்பட்ட அமல்கள் சிறுவருக்கு கடமையாக்கப்படவில்லை என்ற முரண்பாடற்ற முடிவுக்கு வந்து விடலாம்! சிறுவர் கடமையான அமல்களைச் செய்வது பயிற்சி. கடமையான அமல்கள் சிறுவர்கள் மீது கடமை இல்லை என்றாலும் ஆர்வமூட்டும் பயிற்சியாக சிறுவர்களை செய்ய வைப்பதும், சிறுவர்கள் செய்வதும் தடைசெய்யப்பட்டதல்ல. உதராணமாக: "ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) (நூல்கள் - புகாரி - 879, முஸ்லிம் 1535, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ) தாம்பத்திய உறவு கொண்டாலும் மற்றும் ஸ்கலிதம் ஏற்பட்டாலும் குளிப்புக் கடமையானவர் தொழுகைக்காக குளித்துக்கொள்ள வேண்டும் என குர்ஆன், சுன்னா சட்டம் இயற்றியுள்ளது. இதல்லாமல், தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் வெள்ளிக்கிழமை நாளில் குளிப்பது பருவமடைந்தோர் மீது கடமையாகும். இது தொழுகைக்காக குளிப்புக் கடமையானவர் குளிப்பது போன்றதல்ல. வெள்ளிக்கிழமை தினத்திற்காகக் குளித்துக்கொள்வது பருவமடைந்தோர் மீது கடமை என்பதை மேல்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்கலாம். வெள்ளிக்கிழமை நாளுக்காக சிறுவர்கள் குளிப்பது கடமை இல்லை! என்றும் விளங்குகிறோம். இதனால் வெள்ளிக்கிழமை நாளில் சிறுவர்கள் குளிக்கக்கூடாது என்று தடைவிதிப்பதில்லை. பெற்றோர் சிறுவர்களையும் குளிக்க வைப்பார்கள். இது போன்று பருவ வயதையடையாத சிறுவர் மீது நோன்பு நோற்பது கடமை இல்லை! என்றாலும் நோன்பு காலத்தில் சிறுவர்களை அதிகாலையில் விழிக்கச்செய்து உறக்க மிகுதியால் உணவைப் பிசைந்து கொண்டே உறங்கி விழுந்த நிலையில் சிறுவர்களுக்கு சஹ்ர் உணவை உண்ண வைத்து நோன்பு நோற்கச் செய்கிறோம் என்றால் இது சிறுவர்களுக்கு அளிக்கப்படும் நோன்பின் பயிற்சியே தவிர சிறுவர்களுக்கு நோன்பு கடமை என்கிற அடிப்படையில் அல்ல! (கருத்துக்கள் நீண்டிருப்பதால் மறுமொழியில் ஏற்கவில்லை. மற்றவை அடுத்த இடுகையில்.) 11
March 23, 2011 13:17
பருவமடையா வயதில் மரணித்த சிறுவர்கள் சொர்க்கவாசிகள்.
சிறு வயதில் மரணித்த முஸ்லிம், முஸ்லிமல்லாத அனைத்து சிறுவர்களும் சொர்க்கத்தில் இருப்பார்கள். (கருத்து புகாரி 7047) முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் - புகாரி 1248, நஸயீ, அஹ்மத்) நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ''என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்து விட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியொன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக்கூடாதா?'' என்றுகேட்டேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் ''ஆம்'' என்று கூறிவிட்டு, ''குழந்தைகள் சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவார். அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். - (அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்திருப்பதைப் போன்று - பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சுவர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது அல்லது விலகாது. என்று சொன்னார்கள். அறிவிப்பவர் அபூஹஸ்ஸான் (ரஹ்) (நூல் - முஸ்லிம் 5132) (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! (உடல் நலமில்லாத) இந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்'' என்று கூறினார். ''மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண் ''ஆம்'' என்றார். ''நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டு விட்டாய்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம் 5133, 5134) படிக்கும் போது மேனி சிலிர்க்கும் இதுபோன்ற பல அறிவிப்புகள் காணக் கிடைக்கின்றன. விரிவஞ்சி முடித்துக்கொள்கிறோம். பிள்ளைப் பருவத்தில் மரணித்த சிறுவர்கள் சொர்க்கத்தில் சேர்க்கப்படுவதோடு அவர்கள் தமது பெற்றோர்களையும் சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கத் தூண்டுதலாக இருப்பார்கள் என அறிவிப்புகளிலிந்து விளங்குகிறோம். பருவ வயதையடையாத சிறுவர்கள் கடமையான அமல்களைச் செய்து இறைவனின் வெகுமதியைப் பெறவேண்டும் என்பதில்லை. அதனால் ''சிறுவர் பருவ வயதையடையும் வரை எழுதுகோல் உயர்த்தப்பட்டுள்ளது'' என்ற அறிவிப்பு கடமையான அமல்கள் எதையும் இஸ்லாம் சிறுவர் மீது சுமத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. சிறுவருக்கு நோன்பு கடமை இல்லை என்பதும் இவ்வறிப்பிலிருந்து நாம் பெறும் படிப்பினையாகும். தேர்வு எழுதுவோருக்குத்தான் வினாத் தாள் வழங்கப்படும். தேர்வின்றியே வெற்றி என அறிவிக்கப்படுவோருக்கு வினாத் தாள் அவசியமில்லை என்று விளங்கினால் சிறுவருக்கு எழுதுகோல் ஏன் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இனி, உறக்கத்திலிப்போருக்கும், பைத்தியக்காரருக்கும் எழுதுகோல் உயர்த்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் ஆய்வுசெய்த பின், திருக்குர்ஆன் வசனங்களின் பார்வையில் நோன்பு நோற்பது சிறுவர் மீது கடமையாகுமா? என்பதையும் பார்ப்போம். குறிப்பு: நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:10) நிராகரித்தோர் - இணைவைத்தோரின் குழந்தைகள் சொர்க்கத்தில் இருந்தாலும் அதனால் அவர்களின் பெற்றோருக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை மேல்கண்ட வசனத்திலிருந்து அறியலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன்) 12
March 23, 2011 13:19
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜாகீர் ஹுசைன் உங்கள் பின்னூட்டமான //இறைவன் சொல்கிரான் فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول // இந்த 4 : 59 குர் ஆன் வசனம் தெளிவாக கருத்து வேறுபாடு வரும் போது அதை அல்லாஹ்விடமும்( அல் குர் ஆன் ) ரசூலிடமும்(ஆதார பூர்வமான நபிமொழியின் வெளிச்சத்தில்) அணுகி தீர்வு காண கூறுகின்றது, கருத்துக்களை நேரடியான குர் ஆன் ஹதீஸ் ஆதாரம அளித்து விட்டால் சர்ச்சைக்கு இடமில்லையே. 13
March 23, 2011 23:07
// ??? ???????????: // சகோதரர் முஸ்லிம் பல ஹதீஸ்கலை தெளிவான முறையில் எழுதியுள்ளார் இன்னுமா ஆதராங்கள் தேவை? 14
March 24, 2011 12:07
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களே நான் உங்களில் யாரையும் இதற்கு பதில் தர நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்திக்க வில்லை என்பது முதல் விஷயம். இரண்டாவது நான் யாரிடமும் விவாதம் அல்லது விதண்டாவாதம் செய்யவும் வர வில்லை. எனது நிலை பாடு உங்களுக்கு உண்மையில் புரிய வில்லையெனில் அதற்கு நான் பொறுப்பல்ல அதற்காக என்னைப் பற்றி ஏதேதோ கூறி கருத்திட்டுள்ளீர்கள் அதற்கும் நான் பொறுப்பல்ல. நீங்கள் தான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள்.தங்களுக்கு அல்லாஹ் நல்ல முறையில் (16 :125 ) விஷயங்களை அணுக தவ்ஃபீக் செய்திட பிராத்தனைகள். எனது பல பின்னூட்டங்கள் ஆக்கத்தினை பற்றிய கருத்து அல்லது தங்கள் பின்னூட்டங்களுக்கு எனது தன்னிலை விளக்கம் எனும் அடிப்படையில் கருத்திட்டுள்ளேன். அவற்றின் பின்னணியையும் விளக்கியுள்ளேன். கைர். அல்லாஹ் போதுமானவன். அதே போல் சகோ ஜாகிர் அவர்கள் சுட்டியுள்ள அரபி பதம் குர் ஆன் 4 : 59 என்ன கூறுகிறது என்பதை நான் விளங்கியது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம்(குர் ஆனில்) மற்றும் ரஸூலிடம்( நபி மொழியி ஹதீஸ்)தீர்வு பெற கொண்டு செல்ல வேண்டும் என்பதே. ஆனால் நான் அதை மீறவில்லை நான் அதை தான் ஆரம்பம் முதல் இது வரை கேட்கிறேன். எனக்கு நிலவும் கருத்து பற்றியும் அதைப் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் உட்பட கூறியதும் மற்றொரு சுட்டி போல் பல கேள்வி பதில்களில் உள்ள கருத்துக்கள் தெரிந்த ஒன்றே. அதற்கு மாற்று கருத்து தெரிவிப்பது என்பது வேறு அதற்கு ஆதாரமாக தரப் பட்ட ஹதீஸ்கள் பற்றிய கருத்து என்பது வேறு. குர் ஆனிலும் நபி மொழியிலும் நேரடியாக கடமையில்லை என்று இல்லாத தொழுகை நோன்பு போன்ற கடமைகள், ( ஆறு ஏழு வயது குழந்தைகள் தொழுது இமாமத் செய்த ஹதீஸ்கள் புகாரி 4302வில், காணக் கிடைக்கும் போதும், சிறுவர்களை நோன்பிருக்க செய்த ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ) வயது வரம்பில்லை, என்பது பொறுத்தமானது என்ற கருத்து…… ஏழு வயது வரை அல்லது பத்து வயது வரை தொழுகையும் நோன்பும் கடமையில்லை என்று குழந்தைகள் ஆர்வம் இஸ்லாமிய கடமைகளுக்கான பயிற்ச்சிகள் உதாசீனப் படுத்தப் பட்டு குழந்தைகள் சிறு பிராயத்தை இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களில் மூழ்கடிக்கப் படுவதை காண்கிறோம்……….. ஆகையால் இது உண்மையில் கடமை என்பதற்கு “பருவ வயது” தான் காரணம், சிறுவர்களுக்கு கடமையில்லை என்பதற்கு நேரடி ஹதீஸ் காணாததால் அதை அவ்வாரு சொல்லாமல் “வரம்பில்லை” எனும் கருத்து பொறுத்தமானது என்று கருத்திட்டுள்ளேன். // மார்க்கம் என்பது அனுமானங்கள் இல்லை குர் ஆனும் நபி வழியுமே ஆகும். அதன் துணையின்றி அதற்கு மாற்றமாக கருத்துக்கள் யார் கூறினாலும் எத்தனை பேர் கூறினாலும் ஏற்றுக் கொள்ள தேவையில்லை ஆதாரபூர்வமான ஹதீஸ் இருப்பின் மறு பேச்சுக்கெ இடம் இல்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.// (அல்லாஹ் மிக அறிந்தவன்) 15
March 24, 2011 12:08
சகோதரர் ??????????? அவர்களே
///*ஆகையால் இது உண்மையில் கடமை என்பதற்கு 'பருவ வயது' தான் காரணம், சிறுவர்களுக்கு கடமையில்லை என்பதற்கு நேரடி ஹதீஸ் காணாததால் அதை அவ்வாரு சொல்லாமல் 'வரம்பில்லை' எனும் கருத்து பொறுத்தமானது என்று கருத்திட்டுள்ளேன். //* வரம்பில்லை என்பதற்கு அர்த்தம் என்ன என்று புரிந்து எழுதுங்கள். வரம்பு இல்லை என்றால் பெரியவர்களும் கூட நோன்புவைக்கத்தேவையில்லை என்ற நிலைக்கு போய்விடுவார்கள் ஆதலால் பருவ வயது என்பது பெட்டர், வரம்பில்லை என்பதற்கு வயது வரம்பில்லை என்றுதானே கேள்விக்கு பதில். எந்தவயதில் நோன்புகடமை என்பதற்கு வயது வரம்பில்லை என்றால் எந்த வயதிலும் நோன்புபிடித்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குத்தல்லப்பட்டு கடைசிகாலத்தில் நோன்புவைத்துக்கொள்ளலாம் என்று நோன்புவைக்காமலே மரணித்துவிடுவார்கள் //*ஏழு வயது வரை அல்லது பத்து வயது வரை தொழுகையும் நோன்பும் கடமையில்லை என்று குழந்தைகள் ஆர்வம் இஸ்லாமிய கடமைகளுக்கான பயிற்ச்சிகள் உதாசீனப் படுத்தப் பட்டு குழந்தைகள் சிறு பிராயத்தை இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களில் மூழ்கடிக்கப் படுவதை காண்கிறோம்//* சட்டம் சொல்வது நம்முடையக் கடமை அதை செய்யவைப்பது தாய் தந்தையர்களுடையக் கடமை சிறுவர்கள் சீரழிந்து விடுவார்கள் என்ற காரணத்திற்காக இஸ்லாமியச் சட்டத்தை மாற்றி சிறார்களுக்கு கடமை என்று சொல்லமுடியாது. 16
March 24, 2011 19:31
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் ஜாக்கீர் ஹுசைன் அவர்களே முதலில் //???????????????// எனது இரண்டு பின்னூட்டங்களில் இது தற்செயலாக பதிந்துள்ளது என்பதை தெளிவு படுத்துகிறேன். அடுத்து // வரம்பில்லை என்பதற்கு அர்த்தம் என்ன என்று புரிந்து எழுதுங்கள். வரம்பு இல்லை என்றால் பெரியவர்களும் கூட நோன்புவைக்கத்தேவையில்லை என்ற நிலைக்கு போய்விடுவார்கள் ஆதலால் பருவ வயது என்பது பெட்டர், வரம்பில்லை என்பதற்கு வயது வரம்பில்லை// மார்க்கம் என்பது பெட்டர் அல்லது வர்ஸ் என்று நாம் முடிவு எடுக்க உரிமையற்றது என்பது எனது புரிதல் (பார்க்க 33 : 21 & 33 :36 ) மேலும் "வரம்பில்லை" என்பது, ஆறு வயது ஏழு வயது பத்து வயது, முதல் கடமை அதற்கு முன்னர் கடமையில்லை அல்லது பருவ வயது முதல் கடமை என்பதை மறுக்கும். என்பதால், இதற்கு சக்தியுள்ளவர்கள் இயன்ற அளவு விரைவில் இதை நிறை வேற்ற வழி வகுக்கும், தள்ளி போட அல்ல என்பதே இறையச்சம் தக்வா எனும் முத்தகீன்கள் ஆக வேண்டி விதிக்கப் பட்ட இக் கடமையின் முக்கிய அம்சமாகும் (பார்க்க 2 ; 183) // இஸ்லாமியச் சட்டத்தை மாற்றி சிறார்களுக்கு கடமை என்று சொல்லமுடியாது.// நான் இதை சொல்லவில்லை கடமையில்லை என்பதை இதர ஹதீஸ்கள் சம்பவங்கள் மூலம் நிறுவ முயலாமல், நேரடியான ஹதீஸ் இருப்பின் ஏற்றுக் கொள்வோம் என்றே கூறி வருகிறேன். ஏனெனில் உரிய சான்று இன்றி பருவ வயது வரை கடமையில்லை என்று கூறி பசுமரத்தாணி போன்ற மனமுள்ள் சிறார்கள் உள்ளத்தில் இஸ்லாம் அல்லாத இதர நடை மூறைகள் குடி புக வழி வகுத்து பருவமடைந்த பின்னும் ஏன் முதுமை என்று மரணம் வரையும் தூய்மையான இஸ்லாமிய சிந்தனையின்றி பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்கும் சமுதாயமாக மாறும் / மாற்றும் குற்றத்திற்கு ஆளாகி விட கூடாதே எனும் ஆதங்கம் / கவலையே காரணம். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன் அவன் தனது அருளால் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.... ஆமீன் . 17
March 24, 2011 23:30
சகோதரர் அப்துல்லா
தாங்கள் ஆதங்கத்திலும் கவலையிலும் மார்க்கத்தைச் சொல்கிறீர்கள். ஆதங்கத்திற்காக எல்லாம் சட்டத்தை வளைக்க முடியாது. சிறார்களுக்கு கடமை என்று ஹதீஸ்களில் வராததினால்தான் கடமையில்லை என்று சொல்லி பொது சட்டமான - ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை -என்ற சட்டத்தை சொல்கிறோம் அல்லது சிறார்களுக்கு கடமைதான் என்றால் தாங்கள் ஹதீஸை சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அதை விட்டு விட்டு //* ஏனெனில் உரிய சான்று இன்றி பருவ வயது வரை கடமையில்லை என்று கூறி பசுமரத்தாணி போன்ற மனமுள்ள் சிறார்கள் உள்ளத்தில் இஸ்லாம் அல்லாத இதர நடை மூறைகள் குடி புக வழி வகுத்து பருவமடைந்த பின்னும் ஏன் முதுமை என்று மரணம் வரையும் தூய்மையான இஸ்லாமிய சிந்தனையின்றி பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்கும் சமுதாயமாக மாறும் / மாற்றும் குற்றத்திற்கு ஆளாகி விட கூடாதே எனும் ஆதங்கம் / கவலையே காரணம். //* உங்களுடைய ஆதங்கத்தை கூறி இஸ்லாமிய சட்டத்தை வளைக்காதீர்கள். இஸ்லாம் பொதுவான் சட்டத்தைச் சொன்னால் அதைமட்டும் சொல்லிவிட்டு ஆதங்கத்தை வொளிபடுத்துங்கள் உங்களின் ஆதங்கம் கவலை எல்லா மற்ற முஸ்லிம்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. 18
March 25, 2011 12:35
அஸ்ஸ்லாமு அலைக்கும்
//சிறார்களுக்கு கடமை என்று ஹதீஸ்களில் வராததினால்தான் கடமையில்லை என்று சொல்லி பொது சட்டமான - ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை -என்ற சட்டத்தை சொல்கிறோம்// குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை சட்டமாக கூற யாருக்கும் உரிமையில்லை, அதனால் தான் நான் இதை பற்றி கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவதை சரியில்லை என்று கருதுகிறேன். ஹதீஸ்களில் சிறுவர்கள் ஜமாத்தோடு தொழுத , (ஆறு வயதில்) தொழ வைத்த, அதே போல் சிறுவர்கள் நோன்பு வைத்ததை காணும் போது "பருவ வயதில் கடமை" என்று குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை கூறுவது சரியில்லை என்று கருதுகிறேன். // உங்களுடைய ஆதங்கத்தை கூறி இஸ்லாமிய சட்டத்தை வளைக்காதீர்கள் // அவரவர் ஆதாரமின்றி கூறுவது சட்டமாகாது என்பது ஒன்று, இரண்டாவது நான் ஏதும் சட்டம் கூறவில்லை எனும் போது வளைப்பது யாரென்பது கேள்வி. நான் ஏதோ சிறுவர்கள் மீது கட்டாய கடமை என்று சட்டம் வகுத்துள்ளதாக கற்பனை செய்து கொண்டு இப்படி ஏதேதோ கூறி வருகிறீர்கள் , நான் பருவ வயது வரை கடமையில்லை என்ற கருத்து பொருத்தமற்றது என்றே கூறியும் ஆதாரம் கேட்டும் வருகிறேன், ஆதாரமில்லை எனில் வரம்பில்லை என்பது பொருத்தம் என்றும் நேரடி ஆதாரம் கிடைத்தால் எனது கருத்தை மாற்றிக் கொள்ள தயார் என்றும் தெளிவாக கூறி விட்டேன் ஆகையால் இனி மீண்டும் புதிதாக கூற ஏதுமில்ல. அல்லாஹ் மிக அறிந்தவன் 19
March 25, 2011 21:17
சகோதரர் அப்துல்லா
//*ஆதாரமில்லை எனில் வரம்பில்லை என்பது பொருத்தம்//* பிள்ளைகளைப் பழக்குவது வேறு, கடமை என்பது வேறு, தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் சொல்வதைத் தெளிவாக சொல்லுங்கள், உங்களுக்கு புரியாமலும் மக்களுக்கும் புரியாமலும் செய்துவிடாதீர்கள். பொதுசட்டமான - ஒருபிள்ளை பருவ வயதை எட்டும்வரை -என்ற சட்டம பொருந்துமா பொருந்தாதா? அதிகம் விளக்கம் தேவையில்லை எல்லாவிளக்கத்தையும் எழுதிவிட்டோம் கீழேஉள்ள கேள்விக்கு மட்டும் நேரடியாக பதில் தந்தால் ஒரு முடிவிற்கு வந்தவிடலாம் 1-வரம்பில்லை என்றால் அருத்தம் என்ன? 2-எந்த வயதில் நோன்பு கடமை? 3-எந்தவயதிலும் நோன்பு வைத்துக்கொள்ளலாம் கடமை என்று வயது வரையரையில்லை? 20
March 26, 2011 11:16
//பிள்ளைகளைப் பழக்குவது வேறு, கடமை என்பது வேறு,// ஒன்றை செய்ய பழக்குவதற்கு குறிப்பிட்ட வயது வரை அல்லது பருவ வயது வரை கடமையில்லை, அல்லது "வயது வந்தவர்களுக்கு மட்டும்" ( என்றால் பருவ வயதை அடையாதவர் செய்யக் கூடாதது என்ற பொருள் வருகிறது ஆகையால் நபிவழிக்கு மாற்றமான இந்த தலைப்பே தவறு,) எனறு கூறும் போது சிறுவர்களை பழக்குவது என்பது கேள்விக் குரிய சிரமமான ஒன்று என்பதே யதார்த்தம். அதே வரம்பில்லை எனும் போது இது எளிது மட்டுமின்றி நபி வழிககும் நெருக்கமானது. இதன் வி்ளைவே "விடாதே பிடி" போன்ற கவிதையில் வரும் சி்றுவர்கள் மற்றும் பருவ வயதுக்குப் பின்னும் இதே போன்று நோன்பு நோற்ற நிலையோடு உண்பவர்கள் பருகுபவர்கள் புகை பிடிப்பவர்கள் என்ற நிலைக்கு காரணிகளென்றாலும் மிகையாகாது நோன்பு என்பது ஒரு நிகரற்ற வணக்கம் இதன் கண்ணியம் மற்றும் முக்கியத்துவம் உணரப் படாமல் இழப்புக்குள்ளாகிறது. அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. // 1-வரம்பில்லை என்றால் அருத்தம் என்ன? // // மேலும் "வரம்பில்லை" என்பது, ஆறு வயது ஏழு வயது பத்து வயது, முதல் கடமை அதற்கு முன்னர் கடமையில்லை அல்லது பருவ வயது முதல் கடமை என்பதை மறுக்கும். என்பதால், இதற்கு சக்தியுள்ளவர்கள் இயன்ற அளவு விரைவில் இதை நிறை வேற்ற வழி வகுக்கும் // // 2-எந்த வயதில் நோன்பு கடமை?// // குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை சட்டமாக கூற யாருக்கும் உரிமையில்லை, அதனால் தான் நான் இதை பற்றி கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவதை சரியில்லை என்று கருதுகிறேன். ஹதீஸ்களில் சிறுவர்கள் ஜமாத்தோடு தொழுத , (ஆறு வயதில்) தொழ வைத்த, அதே போல் சிறுவர்கள் நோன்பு வைத்ததை காணும் போது "பருவ வயதில் கடமை" என்று குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை கூறுவது சரியில்லை என்று கருதுகிறேன். // // 3-எந்தவயதிலும் நோன்பு வைத்துக்கொள்ளலாம் கடமை என்று வயது வரையரையில்லை?// //இதற்கு சக்தியுள்ளவர்கள் இயன்ற அளவு விரைவில் இதை நிறை வேற்ற வழி வகுக்கும், தள்ளி போட அல்ல என்பதே இறையச்சம் தக்வா எனும் முத்தகீன்கள் ஆக வேண்டி விதிக்கப் பட்ட இக் கடமையின் முக்கிய அம்சமாகும் (பார்க்க 2 ; 183) // அல்லாஹ் மிக அறிந்தவன் 21
March 26, 2011 22:12
சகோதரர் அப்துல்லா
//*பிள்ளைகளைப் பழக்குவது வேறு, கடமை என்பது வேறு//* ஒன்றை செய்ய பழக்குவதற்கு குறிப்பிட்ட வயது வரை அல்லது பருவ வயது வரை கடமையில்லை, அல்லது 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' ( என்றால் பருவ வயதை அடையாதவர் செய்யக் கூடாதது என்ற பொருள் வருகிறது//* தாங்கள் இங்லிஸ் மீடியத்தில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதனால் தான் தாங்களுக்கு தமிழ் சரியாக புரியவில்லை, தாங்களாகவே ஒரு அருத்தத்தைவிளங்குகிறீர்கள் தாங்களாகவே தமிழுக்கு அருத்தம் தருகிறீர்கள் தயவுசெய்து தமிழை ஒழங்காக புரிந்து எழுதுங்கள். குறிப்பிட்வயதில் கடமைஎன்றால் அதற்குமுன்னால் உள்ள வயதில் கடமையில்லை என்று அருத்தமேதவிர செய்யக்கூடாது என்று அருத்தமில்லை //*3-எந்தவயதிலும் நோன்பு வைத்துக்கொள்ளலாம் கடமை என்று வயது வரையரையில்லை?//* //*இதற்கு சக்தியுள்ளவர்கள் இயன்ற அளவு விரைவில் இதை நிறை வேற்ற வழி வகுக்கும், தள்ளி போட அல்ல என்பதே இறையச்சம் தக்வா எனும் முத்தகீன்கள் ஆக வேண்டி விதிக்கப் பட்ட இக் கடமையின் முக்கிய அம்சமாகும் (பார்க்க 2 ; 183) //* இறைவன் நோன்பை கடமை என்று சொல்கிறான் உங்களின் எழுத்து கடமையில்லைஎன்று சொல்கிறது சக்தியுள்ளவர்கள் இயன்ற அளவு இதை நிறைவேற்ற வழிவகுக்கும் இதுக்கு என்ன அருத்தம் தெறியுமா சகோதரரே? யாருக்கும் நோன்பு கடமையில்லை சக்தியிருந்தால் நோன்பு வை இல்லாவிட்டால் நோன்புவைக்காதே சர்க்கரைநோயுள்ளவர்களுக்கு நோன்பு கடமையில்லை என்று அருத்தம் கேட்டுப்பாருங்கள் சர்க்கரைநோயுள்ளவரிடம்(சர்க்கரை நோயுள்ளவர்கள் இஸ்லாமிய பற்றுள்ளவர்கள் மட்டும்தான் நோன்பு வைக்கிறார்கள் மற்றவர்கள் நோன்புவைப்பதில்லை காரணம் சக்தியில்லை இவர்களுக்கு தாங்கள் கடமையில்லைஎன்று சலுகைகொடுத்துவிட்டீர்கள்) // 2-எந்த வயதில் நோன்பு கடமை?// // குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை சட்டமாக கூற யாருக்கும் உரிமையில்லை அதனால் தான் நான் இதை பற்றி கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவதை சரியில்லை என்று கருதுகிறேன். //* அல்லாஹ் கடமை என்று சொல்கிறான் தாங்கள் கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவது சரியில்லை என்கிறீர்கள் ஆனால் பொதுவான ஹதீசை மருக்கிறீர்கள் ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது என்றால் பருவ வயது வரை கடமையில்லை அதற்கு பின்னால் செய்யாவிட்டால் குற்றம் என்று பொருள். இனி தமிழ் ஒழுங்காக தெறிந்தால் எழுதுங்கள் இல்லாவிட்டால் தயவுசெய்து விட்டுவிடுங்கள் விளங்கமுடிந்தவரை விளங்கிக்கொள்ளுங்கள் தாங்களுக்கு என்று ஒரு அருத்தத்தை கற்பித்து தமிழை எழுதாதீர்கள் இதற்குமேலும் என்னால் தமிழில் விளக்க முடியாது விளங்கக்கூடிய மக்கள் விளங்கிக்கொள்வார்கள் உங்களுக்கு விளங்கவேண்டும் என்ற ஆசை ஆர்வம் இருந்தால் அல்லது நேரடியாக பேசி விளங்கவேண்டுமென்றால் தாங்களுக்கு என் முபைல் நம்பர் தருகிறேன் தாங்கள் கேட்டால்? 22
March 27, 2011 12:40
அன்பான சகோதரர் எம் அப்துல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்க்காண்பவற்றைத் தங்களுக்குச் சுட்டிக் காட்ட விழைகிறோம்: (1) இங்குப் பதிக்கப் பட்டிருப்பது http://www.islam-qa.com/en/ref/65558 மற்றும் http://islam4parents.com/2008/...t-fasting/ ஆகிய தளங்களில், சிறார்கள் நோன்பு நோற்கும் வயதைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கமாகும். (2) நோன்புக் கடமையைப் பற்றிக் கட்டுரை பேசுவதால், தமிழாக்கிய சகோதரர் இக்கட்டுரைக்கு வைத்த பெயர் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்பதாகும். அதனுள் "நோன்புக் கடமை" எனும் நமது பேசுபொருள் அடங்கியுள்ளது. கட்டுரையோடு இயைந்த தலைப்பு என்பதால், தமிழாக்கியவரின் தலைப்பில் ஆசிரியர் குழுவால் மாற்றமேதும் செய்யப்படாமல் அப்படியே பதிக்கப்பட்டது. //"வயது வந்தவர்களுக்கு மட்டும்" ( என்றால் பருவ வயதை அடையாதவர் செய்யக் கூடாதது என்ற பொருள் வருகிறது ஆகையால் நபிவழிக்கு மாற்றமான இந்த தலைப்பே தவறு)// என நீங்கள் குறிப்பிட்டிருப்பதில் 'பருவ வயதை அடையாதவர் செய்யக் கூடாது' எனும் பொருளை இங்குப் பதிக்கப்பட்டுள்ள ஆக்கத்திலிருந்து தெளிந்த சிந்தனையுள்ள எவரும் பெறுவதற்கு வழியேயில்லை. பேசுபொருளைப் புரிந்து கொள்ளாமல் நீங்களாக ஒரு புதுப் பொருளைப் பொதுவில் வைத்து, "நபிவழிக்கு மாற்றமான" தலைப்பு எனத் தீர்த்திருப்பது தவறான கருத்துருவாக்கமாகும். நிற்க. "குழந்தைகளுக்கு நோன்பு கடமையில்லை ... ஆனால் கடமைதான்" என்பதுபோல் இருவேறு முரண்பட்ட கருத்துகளைத் தங்கள் பின்னூட்டங்களில் தெரிவித்து வருகின்றீர்கள். அது, பொதுவான வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே, குழந்தைகளுக்கு ரமளான் நோன்பு (அ) கடமை (ஆ) கடமையில்லை ஆகிய இரண்டில் ஒன்றை, ஒற்றைச் சொல்லில் தயவு செய்து தெரிவியுங்கள். பிற்பாடு 'குழந்தை வளர்ப்பு' 'பேணுதல்', இறைவசனம் 2:183 பற்றியெல்லாம் விரிவாகப் பேசலாம், இன்ஷா அல்லாஹ். 23
March 27, 2011 12:49
அஸ்ஸ்லாமு அலைக்கும்
சத்தியமார்க்கம்.காம் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்பது பேசு பொருள் என்பது தெளிவான சிந்தனையின் வெளிபாடு,அதற்கு மாற்று கருத்து சரியாக இருப்பினும் தெளிவற்ற சிந்தனையின் வெளிபாடு எனும் போக்கு தவறானது. ஒரு காரியத்தை வயது வந்தவர்கள் தான் செய்ய அனுமதி, வயது வராதவர்கள் செய்தால் தவறு குற்றம் எனும் பொருள் வரும் தலைப்பை( நோன்பிற்கு அதை சிறுவர்களுக்கு பழக்கலாம் என்று தாஙகள் கூறும் போது ) தேர்வு செய்வது அனுமதித்து அதை சரி காண்பது எனும் நிலை.... உள்ளங்கை நெல்லிக் கனியாக தலைப்புக்கும் பேசு பொருளுக்கும் முரண் இருந்தும் அதை ஏற்க மறுத்து இவ்வாரு கருத்திடும் போது, ஏதும் கருத்திடுவது பலனற்றது என்ற எண்ணம் ஏற்படுகிறது,,,, கைர் இனியும் இதில் ஏதும் கருத்துக்கள் இட மாட்டேன் அல்லாஹ் போதுமானவன். // "குழந்தைகளுக்கு நோன்பு கடமையில்லை ... ஆனால் கடமைதான்" என்பதுபோல் இருவேறு முரண்பட்ட கருத்துகளைத் தங்கள் பின்னூட்டங்களில் தெரிவித்து வருகின்றீர்கள். அது, பொதுவான வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். எனவே, குழந்தைகளுக்கு ரமளான் நோன்பு (அ) கடமை (ஆ) கடமையில்லை ஆகிய இரண்டில் ஒன்றை, ஒற்றைச் சொல்லில் தயவு செய்து தெரிவியுங்கள். // // உங்களுடைய இப்பின்னூட்டங்களுக்கு ஏற்கனவே எனது பின்னூட்டத்தில் பதிலும் உள்ளது உங்கள் வாதங்களைப் பற்றியும கருத்துக்கள் உள்ளன். ஒரு ஆக்கம் ஒரு கருப் பொருளைப் பற்றி பேச கையாண்ட ஹதீஸைப் பற்றி அது கருபொருளுக்கு சான்றாக இல்லை என்று கூறினேன் சான்றிரிருந்தால் வையுங்கள், அதை வி்டுத்து திசை திருப்பும் கேள்விகள் வாதங்கள் செய்ய பதிலளிக்க எனக்கு நேரமில்லை. // அல்லாஹ் மிக அறிந்தவன் 24
March 28, 2011 00:18
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் ஜாக்கீர் ஹுசைன் அவர்களே // குறிப்பிட்வயதில் கடமைஎன்றால் அதற்குமுன்னால் உள்ள வயதில் கடமையில்லை என்று அருத்தமேதவிர செய்யக்கூடாது என்று அருத்தமில்லை // // அல்லாஹ் கடமை என்று சொல்கிறான் தாங்கள் கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவது சரியில்லை என்கிறீர்கள் // உங்களுக்கு தமிழ் நன்றாக புறிகிறது??? என்றே வைத்துக் கொள்வோம் தாங்கள் நான் கூறுவதாக கருத்திட்டுள்ளதை எங்கிருந்து புறிந்து கொண்டீர்கள் யாராவது நோன்பு கடமை அல்லது கடமையில்லை என்று சொலவது தவ்று என்று கூறுவாரா??? நான் அவ்வாரு எங்கு கூறினேன் இது தான் நீங்கள் தமிழ் புறிந்து கொள்ளும் அழகா ... // ஆனால் பொதுவான ஹதீசை மருக்கிறீர்கள் ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது என்றால் பருவ வயது வரை கடமையில்லை அதற்கு பின்னால் செய்யாவிட்டால் குற்றம் என்று பொருள். // இனி தமிழ் ஒழுங்காக புறிந்தால் எழுதுங்கள் இல்லாவிட்டால் தயவு செய்து விட்டுவிடுங்கள் . ஆளை விடுங்கள் எனக்கு நிறைய வேலைகள் உள்ளது சுட்டிக் காட்டியது என் கடமை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம். மஸ்ஸலாமா. அல்லாஹ் மிக அறிந்தவன் 25
March 28, 2011 00:39
அன்பான சகோ. எம் அப்துல்லாஹ்,
வ அலைக்குமுஸ்ஸலாம். குழந்தைகளுக்கு ரமளான் நோன்பு என்று வேண்டுகோள் வைத்ததற்கான காரணமே தங்களது முந்தைய பின்னூட்டங்களிருந்து இரண்டில் ஒன்றை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால்தான். அதற்கு பதிலாக, தங்களது பின்னூட்டங்களைப் பார்க்குமாறு பதிலளித்து இருப்பது சரியானதா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். ஒற்றைச் சொல்லில் பதில் தராவிடிலும் ஒற்றை எழுத்தில் பதில் தந்து உங்களது/எங்களது நேரத்தை நீங்கள் மிச்சப் படுத்தலாம். அ= கடமை ஆ= கடமையில்லை நன்றி! 26
March 28, 2011 09:50
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு
சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே //*இதை பற்றி கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவதை சரியில்லை என்று கருதுகிறேன். //* 21 வது பின்னூட்டம் இட்டது நீங்கள் தானே அல்லது வேறு அப்துல்லாவா மேலே சொன்னது தாங்கள் தானே சரியில்லை என்றால் தவறு என்றுதானே அருத்தம் சத்தியமார்க்கம்.காம் சொன்னதுபோல தாங்கள் முன்னுக்குப் பின் முறனாகதான் பேசுகிறீர்கள் தான் என்ன சொன்னோம் என்றுகூட தெறியாமல் பின்னூட்டம் இட்டுக்கொண்டிருக்கறீர்கள் முதலில் தான் என்ன சொல்கிறோம் என்பதை சில முறை படித்துப்பாருங்கள் அதன் பின் பினனூட்டமிடுங்கள் அதுபோல் இதற்குமுன் என்னசொன்னோம் என்பதையும் படித்துபார்த்துவிட்டு பதில் எழுதினால் தாங்களே புரிந்துக்கொள்வீர்கள் தாங்கள் செய்யும் தவரை அல்லது உங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளது வேலைகளைக் கவணமாக கவனியுங்கள் சகோதரரே கோபப்படாதீர்கள் 27
March 28, 2011 11:40
அஸ்ஸாலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே // சத்தியமார்க்கம்.காம் சொன்னதுபோல தாங்கள் முன்னுக்குப் பின் முறனாகதான் பேசுகிறீர்கள் தான் என்ன சொன்னோம் என்றுகூட தெறியாமல் பின்னூட்டம் இட்டுக்கொண்டிருக்கறீர்கள் // // அல்லாஹ் கடமை என்று சொல்கிறான் தாங்கள் கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவது சரியில்லை என்கிறீர்கள் // இது நீங்கள் கூறியது ஆனால் நான் அப்துல்லாஹ் ( ஒரே ஆள்தான் ஒரே பெயர்தான் ) கூறியது முழுமையாக இதோ // குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை சட்டமாக கூற யாருக்கும் உரிமையில்லை, அதனால் தான் நான் இதை பற்றி கடமையென்றோ கடமையில்லையென்ரோ கூறுவதை சரியில்லை என்று கருதுகிறேன். ஹதீஸ்களில் சிறுவர்கள் ஜமாத்தோடு தொழுத , (ஆறு வயதில்) தொழ வைத்த, அதே போல் சிறுவர்கள் நோன்பு வைத்ததை காணும் போது "பருவ வயதில் கடமை" என்று குர் ஆன் ஹதீஸில் இல்லாத ஒன்றை கூறுவது சரியில்லை என்று கருதுகிறேன்.// இது நான் கூறியது. கவனமாக படித்தால் முரணாகவும் திரித்தும் தவறாகவும் ஆதாரமின்றியும் திசை திருப்பும் விதமாகவும் அகந்தையான தொனியிலும் கேள்விகளிலும் கருத்திட்டதும் யார் என்பது அனைவருக்கும் நன்றாக விளங்கும். மேலும் எனது முதல் பின்னூட்டம் முதல் பல மூறை நேரடி ஆதாரம் கேட்டுள்ளேன் தந்தால் "பருவ வயது முதல் தான் கடமை" என்பதை ஏற்று கொள்ள தயார் என்றேன் அதை விடுத்து சத்தியமார்க்கம்.காம் அதே சகோ ஜா உ தொணியில் கருத்தும் கேள்வியும் கேட்பது வியப்பூட்டுகிறது. கைர் அல்லாஹ் போதுமானவன். அது மட்டுமின்றி் கேள்வியில் சிறுவர்களென்பதும் குழந்தைகளுக்கு என்று மாறியுள்ளது.. அ ) ஆ) இ) அல்லாஹ் நன்கறிந்தவன் .....என்பதே இதற்கு போதிய நேரடி ஆதாரம் கிடைக்கும் வரை எனது பதிலாக இருக்கும். 28
March 28, 2011 23:11
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு
சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே பொதுவான ஹதீஸான "ஒருபிள்ளை, பருவ வயதை எட்டும்வரை எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது" என்றால் அதற்கு என்ன அருத்தம் தருகிறீர்கள்? //3) கடமையான விஷயங்களை சிறுவர்கள் செய்யா விட்டால் குற்றமாகாது என்ற கருத்தே பொருத்தமாக உள்ளது.// இது தாங்கள் கொடுத்த விளக்கம் பார்க்க முதல் பின்னூட்டம். சிறுவர்கள்களுக்கு என்ன கடமைகள் இருக்கிறது? அதைகொஞ்சம் விளக்கினால் தாங்களுக்கு புரியம் என்று நினைக்கிறேன் இதற்கு பின் ஒரு முடிவிற்கு வரலாம் 29
March 29, 2011 10:19
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே ஒரு விஷயத்தை தெளிவாக்க விரும்புகிறேன். எதையும் முழுமையாக அணுகாமல் இவ்வாரு ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டால் கருத்து என்ன என்று நிச்சயமாக விளங்க முடியாது.எனது நிலைபாடு தெளிவாக முதல் பின்னூட்டத்திலேயே உள்ளது. ஒரு கருத்தில் உடன் பாடு இல்லாமல் இருப்பது என்பது வேறு அதற்கு மாற்று கருத்து வரும் போது அதை முறையாக அணுகி கருத்தளிப்பது என்பது வேறு. அதை விட்டு மறு கேள்விகள், தெவையற்ற கருத்துக்கள் என்று மாற்று கருத்துடையவரை அவர் சொல்வது என்ன என்று உணராமல் தாமாகவே ஒரு கற்பனையுடன் நிழல் யுத்தம் புறிவது முறையற்றது. சிறுவர்களுக்கு கடமைகள் இல்லை" எனும் கருத்து நிலவுவது நான் அறியாத புதிய ஒன்றல்ல. ஆனால் அந்த கருத்து சான்றுகளுடன் நிறுவப் பட்டுள்ளதா என்பதும் அதற்குரிய குறைந்த மற்றும் உச்ச வயது வரம்பு ஹதீஸ்களில் உண்டா மற்றும் அது இல்லாத நிலையில் அதைப் பற்றி ஆளுக்கொரு வரம்பை கூறும் நிலை என்பதே பேசு பொருள். ஆகையால், இஸ்லாம் விதித்துள்ள கடமைகள் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையே, விதி விலக்கு சலுகை பெற்றவர்கள் எனும் நிலையில் அதை நிறைவேற்றாவிட்டால் அல்லாஹ்வினால் குற்றம் பிடிக்கப் படாதவர்கள் என்பவர்களும் உள்ளனர் என்பதே குர் ஆன் ஹதீஸில் இருந்து விளங்க முடிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன். 30
March 31, 2011 14:29
அஸ்ஸாலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே Contd..... உதாரணத்திற்கு "தலபுல் இல்மு ஃபரீததுல் அலா குல்லி முஸ்லிம் " எனும் ஹதீஸ் இதில் இல்மை கற்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஃபர்ளு என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் பிறந்த முஸ்லிம் குழந்தை பிறந்த உடன் கல்வி கற்க வேண்டும் என்பதல்ல இயன்ற அளவு விரைவாக அதை கற்க முனய வேண்டும் என்போம்.பருவ வயது அடைந்த பின்னர் தான் கடமை அது வரை கற்க தேவையில்லை கடமையில்லை என மாட்டோம். பருவ வயது வறை கற்காததற்கு குற்றம் பிடிக்காமல் விடும் சலுகை வழங்கப்பட்டது என்பது ஹதீஸின் மூலம் புரியலாம். இதுவே எனது புரிதல் நிலைபாடு இதில் மாற்று கருத்து இருப்பின் முறையான நேரடி ஹதீஸுடன் விளக்கினால் நான் ஏற்றுக் கொள்கிரேன் என்பதையும் நான் அதி மேதாவியாக என்றும் என்னை கருதியதில்லை இஸ்லாமிய பற்றுள்ள ஒரு சாதாரண இஸ்லாமிய மாணவன் என்பதையும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். இறுதியாக ஒரு வேண்டுகோள் இது விஷயமாக நேரடி ஹதீஸ் இருப்பின் தரவும் அல்லது கருத்துக்கள் விளக்கங்கள் எனில் நான் நிறைய அறிஞர்களின் கருத்துக்களை கண்டுள்ளேன். அதே நேரம் எனக்கு குர் ஆன் ஹதீஸின் நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில், சிறுவர்கள் தொழுத, தொழ பள்ளியில் காத்திருந்த, இமாமாக இருந்து தொழ வைத்த, நோன்பு நோற்றுள்ளதை காணும் போது இதைப் பற்றி இவ்வாரு கூறவோ கூறுவதை சரி காணவோ இயலவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன். 31
March 31, 2011 14:32
அன்பான சகோதரர் எம் அப்துல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த March 21, 2011 18:24 அன்று நான் இங்கு இட்ட பின்னூட்டத்தைத் தாங்கள் கண்டு கொள்ளவில்லை. பரவாயில்லை. 1. சிறுவர்கள் தொழுத, 2. தொழ பள்ளியில் காத்திருந்த, 3. இமாமாக இருந்து தொழ வைத்த, 4. நோன்பு நோற்றுள்ள ஹதீஸ்களை முடிந்தால் மூலத்துடன் இல்லையெனில் தமிழில் முழுமையாக இங்கு தயவுகூர்ந்து வைப்பீர்களாயின் அவற்றிலிருந்து விளக்கம்பெற முயலலாம். எல்லா வாசகர்களுக்கும் அவை பயனுள்ளனவாக இருக்கும். ஜஸாக்கல்லாஹு கைரா! 32
April 03, 2011 19:57
வ அலைக்குமுஸ் ஸலாம் சகோ வஹ்ஹாபி
தங்கள் March 21, 2011 பின்னூட்டத்திற்கு அன்றே பதிலளித்து உள்ளேன் மேலும் எனது மார்ச் 31 பின்னூட்டத்தையும் பார்க்கவும். நான் போருக்கான வயது பற்றிய நம்பரை கேட்கவில்லை, தொழுகை / நோன்புக்கு பருவ வயது எனும் வரம்பு உண்டு என்பதற்கு நேரடி ஆதாரம் கேட்டிருந்தேன் என்பதை கவனிக்கவும். // இமாமாக இருந்து தொழ வைத்த, // ஆறு ஏழு வயது குழந்தைகள் தொழுது இமாமத் செய்த ஹதீஸ் புகாரி 4302 பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4302 அம்ர் இப்னு சலிமா(ரலி) அறிவித்தார் ...நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, 'அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், 'இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், 'உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை... நோன்பு நோற்றுள்ள -ஹதீஸ் : புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1960 இவறிற்கு சுயமாக ஹதீஸில்ல் இல்லாத அல்லது நபி(ஸல்) அளிக்காத விளக்கம் வேண்டாம். 33
April 04, 2011 23:15
contd......
சிறுவர்கள் . தொழ பள்ளியில் காத்திருந்த, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 566 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இஸ்லாம் நன்கு பரவுவதற்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என உமர்(ரலி) தெரிவிக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை. அதன்பின்னர் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி 'இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை" என்றார்கள். இதே -கருத்து ஹதீஸ் புகாரி-571: இப்னு அப்பாஸ்(ரலி) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஏழு வயதில் குழந்தைகளுக்கு தொழ ஏவுங்கள். பத்து வயதில் (தொழுகையை விட்டால்) அவர்களை அடியுங்கள். அறிவிப்பாளர் : அபூஸுரையா ஸபரா பின் மஃபதில் ஜுஹனீ(ரலி) ஆதாரம் : திர்மிதி நோன்பு நோற்றுள்ள -ஹதீஸ் : பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1960 ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1858 ஸாயிப் இப்னு யஸித்(ரலி) அறிவித்தார். "நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!" எனது நிலைப்பாட்டை பற்றி ஏதும் யூகிக்கும் முன்னர் எனது மார்ச் 31 பின்னூட்டத்தையும் பார்க்கவும். அல்லாஹ் மிக அறிந்தவன் 34
April 04, 2011 23:41
அன்பு மிக்க சகோ. எம் அப்துல்லாஹ்,
முஸ்லிம்களை வெறும் ஆட்டுமந்தைக் கூட்டமாக வளர்த்தெடுக்க இஸ்லாம் விரும்பவில்லை. "சிந்தித்துச் செயல்படுக" எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. நீங்கள் விரும்புவதுபோல் எல்லாவற்றையும் நேரடியாகக் கூறிவிடின் மனிதனுக்கு அறிவு எதற்கு? "சொல்லுக்குச் சொல் நேரடி விளக்கம் வேண்டும்" எனும் ஆபத்துத் தொடர்ந்திருந்தால் இஸ்லாத்தின் ஆய்வு வாசல் எப்போதோ மூடப்பட்டிருக்கும். மார்க்கக் கடமைகள், அவற்றை நிறைவேற்றும் முறைகள் முழுக்கவும் (குர்ஆனிய) அகச்சான்றுகளாலும் அவற்றின் கருசார்ந்த (அஹாதீஸ்) பிறச்சான்றுகளாலும் (அஸர்) விளிம்புநிலைச் சான்றுகளாலும் கட்டமைக்கப் பட்டவை. மூலச் சான்றுகளை மீறிவிடாமல், தேவைக்குட்பட்டு மனிதனின் வரையறுக்கப்பட்ட அறிவிலிருந்தும் பகுத்துச் சேர்த்த மிகச் சொற்பமான வழிவகைகளும் புறச்சான்றுகளுள் அடங்கும். உதாரணத்துக்கு, "தொழுகை என்பது இறைநம்பிக்கையாளர்மீது நேரம் வரையறுக்கப்பட்ட கடமையாகும்" என்பது இறைவசனமாகும். இது தொழுகை, கடமை என்பதற்கான அகச்சான்றாகும். ஒவ்வொரு தொழுகையும் தொடங்கும் நேரத்தையும் முடியும் நேரத்தையும் வரையறுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியது அந்த அகச்சான்றுக்கு வலிமை சேர்க்கும் பிறச்சான்றாகும். "இஷாத் தொழுகையின் இகாமத்து இரவு 8.15க்கு" என மஸ்ஜிதுகளில் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தால் அது, அகச்சான்றை நிறைவேற்றுவதற்காகப் பிறச் சான்றுகளின் அடிப்படையில் மனிதன் சேர்த்த - தொழுகை நேரத்துக்கான புறச்சான்றாகும். அடிப்படைச் சட்டங்களுக்கு இயைபுடைய புறச்சான்றுகளை முற்றாக மறுதலித்து "எல்லாமே நேரடியாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்வேன்" என்று உறுதியாக ஒருவர் இருப்பாரானால், இஷாத் தொழுகையை மட்டுமல்ல - எந்தத் தொழுகையையும் இமாம் ஜமாஅத்தோடு மஸ்ஜிதில் தொழமுடியாது. ஏனெனில், "இரவு 8:15க்கு இஷாத் தொழுது கொள்ளுங்கள்" என்று நேரடியாக அறிவிக்கும் ஒரு ஹதீஸைக்கூட எவராலும் தரவியலாது. நேரடியாக என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்களாயின், உங்களிடமிருந்து தெளிவு பெறத்தக்க நிறைய வினாக்கள் - குறிப்பாக 'சிறுவர்களுக்கும் தொழுகை கடமையே' என நிறுவ முயன்று, நீங்கள் இங்கு வைத்திருக்கும் ஹதீஸ்கள் உட்பட - என்னிடம் உள்ளன. தொடர்வேன், இன்ஷா அல்லாஹ். 35
April 05, 2011 21:13
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் வஹ்ஹாபி அவர்களே உங்கள் பின்னூட்ட விளக்கம் மீண்டும் பேசு பொருளை விட்டு விலகியும் ,பொருத்தமற்ற உதாரணங்கள் என்றும் கேள்விகள் என்றும் நான் சிறுவர்கள் மீது கடமைகளை நிறுவ முயல்வதாகவும் அமைந்துள்ளது.( 31.03.2011 பின்னூட்டம் மீண்டும் படியுங்கள்) இங்கு நிலை என்னவென்றால் நான் கேட்பது "பருவ வயது வரை கடமையில்லை" என்ற கருத்துக்கு நபி வழி சான்று, அதை தருவதை விட்டு விட்டு ( இஷா 8.15 என்று நேரடி -ஹதீஸ் ? தொழுகை துவக்க இறுதி நேரம் இருக்கும் போது இது தேவையற்றது ) இப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்றால் நானும் இஸ்லாம் கூறும் சட்டங்கள் கடமைகள் ஹலால் ஹராம் ஹிஜாப் போன்ற அனைத்தும் பருவ வயது வரை கடமையில்லை எனும் இந்த கருத்தின் பின்னணியில் இதை விட நியாயமான பல கேள்விகள் கேட்கலாம் அதை நான் விரும்ப வில்லை. சிந்தித்துச் செயல்படுக" எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே இதையும் சிந்திக்க முற்படுங்கள். இறுதியாக மீண்டும் கூறுகிறேன் "பருவ வயது வரை கடமை இல்லை" என்பதற்கு தெளிவான நேரடியான ஹதீஸ் இருந்தால் தாருங்கள் இல்லையெனில் இதை கைவிடுங்கள். நபி வழிகாட்டலின் படி வயது வரம்பில்லை சிறுவர்கள் ( ஆறு, ஏழு, பத்து வயது போன்று) தமக்கு இயலும் வயதில் விரைவாக இவற்றை கடைபிடிக்க வேண்டும்.ஹதீஸ்களில் இல்லாத சிறுவர்களை பழக்கலாம் என்பதும் புறக் கருத்தே என்பதை சிந்தித்துணர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். சிறுவர்க்ள் மீது நான் கடமைகளை நிறுவுவதாக கூறுவதை கை விடுங்கள் இல்லையெனில் நான் இதை மேலும் தொடர மாட்டேன். அல்லாஹ் போது்மானவன் 36
April 06, 2011 00:52
அன்பான சகோதரர் எம் அப்துல்லாஹ்,
வ அலைக்குமுஸ்ஸலாம். அடிப்படையான சிலவற்றில் நீங்கள் தவறிழைப்பதாகக் கருதுவதால் அதைக் களையும் பொருட்டு, உவமைகள் மூலம் புரிய வைக்க முயன்றேன். அதில் எனக்குத் தோல்வி ஏற்பட்டாலும் தாழ்வில்லை. ஒருவரிடம் தெளிவை ஏற்படுத்துவதற்காக உவமைகள் கூறி உள்வாங்கச் செய்வது நபிவழி. அது தங்களுக்குத் தேவையற்றதாகத் தெரிகிறது. சொல்ல வேண்டுவதே எனது கடமை. கொள்ளுவதுவதும் தள்ளுவதும் அவரவர் விருப்பத்திற்பாற் பட்டது. இந்தத் தளத்து வாசகர்களுள் யாரேனும் ஒருவராவது கொள்ளுதல் செய்து, அதனால் பயனடையக் கூடிய சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு மனநிறைவடைவேன். சான்றுகளை முன்வைக்க வேண்டிய கடமையுடையோர், "பருவ வயதுவரை எதுவும் கடமையில்லை" என மறுதலிப்பு (நாஃப்)செய்வோரல்லர். மாறாக "பருவம் எய்துவதற்கு முன்னரே கடமை" என ஏவுதற்கு (அம்ரு) முற்படுவோர்மீதே அது கடமை. இது மிக அடிப்படையான லாஜிக். "இறைவனே இல்லை" என மறுதலிக்கும் ஒருவரிடம் அதற்குத் தெளிவான நேரடியான சான்று என்ன? எனக் கேட்பது அறிவுடமையாகாது. "இறைவன் இருக்கிறான்" என வாதிடுவோரின் மீதுதான் இறைவனின் இருப்பைத் தக்க சான்றுகளுடம் நிறுவும் கடமை உள்ளது. இருப்பினும், இங்குப் பதிவாகியுள்ள ஆக்கத்தில், "பருவ வயதுவரை எதுவும் கடமையில்லை" என்பதைத் தெளிவுபடுத்தும் வண்ணம் 'எழுதுகோல்' நபிமொழியை எடுத்தாண்டிருக்கின்றனர். "அது நேரடிச் சான்று அல்ல" என்பது உங்களது வாதம். இந்த இடத்தில் நீங்கள் தவறிழைப்பதாக நான் கருதுகிறேன். ஏனெனில், எந்த ஒரு சான்றையும் - அது இறைவசனமோ ஹதீஸோ - ஒற்றைப் படுத்துவது ஆபத்தில் முடியும். "ஒவ்வொரு தொழுகைக்கும் நிய்யத் கொள்ளுங்கள்" என நேரடியாகத் தெளிவாகக் கூறும் ஹதீஸ் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தொழுகைக்கு நிய்யத் என்பது நிபந்தனையாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அந்த நடைமுறைக்குச் சான்றே, "எல்லாச் செயல்களுக்கும் எண்ணவுறுதிகள்தாம் அடிப்படை" எனும் நபிமொழியிலிருந்து பெறப்பட்டதாகும். "இந்த ஒரு ஹதீஸைக் கொண்டு, எண்ணற்ற சட்டச் சிக்கல்களைத் தீர்த்து விடலாம்" என்பது இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். ஒற்றைப் படுத்தப் பட்டால், "காதலிக்கான தியாகத்துக்கு" மட்டுமே இந்த ஹதீஸைப் பொருத்தும் ஆபத்துண்டு. முன்னுரை முடிந்தது. *** இனி, பருவமடையாத சிறுவர்களுக்கும் தொழுகை கடமைதான் என நிறுவதற்கான சான்றுகள் என்பதாக நினைத்துக் கொண்டு நீங்கள் வைத்துள்ள ஹதீஸ்களைப் பற்றி: [1] ஆறு ஏழு வயது குழந்தைகள் தொழுது இமாமத் செய்த ஹதீஸ் புகாரி 4302 புகாரீயில் 4302 எண்ணிட்ட பதிவான ஹதீஸின் அறிவிப்பாளர் அம்ரிப்னு ஸலமா/ஸலிமா ஆவார். அவர் பிறந்தது ஹிஜ்ரீ 2ஆம் ஆண்டில். அவர் அறிவிக்கும் ஹதீஸ் நிகழ்வு மக்கத்து வெற்றியின்போது. அப்போது அவருக்கு 6/7 வயது. இந்த ஹதீஸை அறிவிக்கும்வரை அல்லாஹ்வின் தூதரை அவர் சந்தித்ததே இல்லை. அதற்குப் பிறகாவது சந்தித்தாரா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. நபியவர்களிடமிருந்தோ நபித்தோழர்களிடமிருந்தோ இறைவசனங்களை அவர் நிகழ்வின் நாள்வரைக்கும் செவியுற்றதில்லை. வாகனப் பயணிகள் போகிற போக்கில், இறைவனிடமிருந்து வந்ததாகக் கூறியவற்றைத்தாம் அவர் குர்ஆன் என நினைத்து மனனம் செய்துள்ளார். வாகனப் பயணிகள் முஸ்லிம்களாக இருந்ததற்கு எவ்விதச் சான்றுமில்லை. மக்கத்து வெற்றி நாளின் முந்தைய நாள்வரைக்கும் அவரோ அவரது குலத்தில் எவருமோ முஸ்லிமாகி இருக்கவில்லை. இவை அத்தனையும் நானாகக் கற்பனை செய்து சொல்லவில்லை. இவை அனைத்தும் நீங்கள் பிற்பாதி எடுத்து வைத்த அதே ஹதீஸின் முற்பாதியில் உள்ள விபரங்கள்தாம். நீங்கள் வைத்த பகுதி ஹதீஸுக்கு வருவோம். முதலாவதாக, தாம் இன்னதுதான் செய்யப் போகிறோம்; இப்படித்தான் அதைச் செய்ய வேண்டும் என்கிற அறிவுத் தெளிவில்லாத வயதுடையவராக அறிவிப்பாளர் அம்ரிப்னு ஸாலிம் இருந்ததால்தான் 'பின்புறம்' தெரியத் தொழுகை நடத்தியுள்ளார். மூலத்தில் உள்ள சொல்லான ' اسْتَ - மலத்துவாரம்' என்பதைத் தமிழில் ரொம்பப் பேணுதலாக 'முதுகு' என்றும் அடைப்புக்குள் 'பின்புறம்' என்றும் மொழிபெயர்த்துள்ளனர். அபூதாவூதுப் பதிவில் (يَقُولُونَ لِأَبِي أَلَا تُغَطِّي عَنَّا اسْتَ ابْنِكَ) உங்கள் மகனுடைய மலத்துவாரத்தை எங்களை விட்டும் மறைக்கக் கூடாதா? என்று பெண்கள் என் தந்தையிடம் முறையிட்டனர்" என அம்ரினு ஸலமாவே கூறுவதாகப் பதிவாகியுள்ளது. அவருடைய பிட்டத்தை நேருக்குநேர் பார்க்கும் வகையில் முன்வரிசையில் நின்று பெண்கள் தொழுதுள்ளனர். பிட்டமும் துவாரமும் தெரிய ஒரு சிறுவர் சின்னப்பிள்ளைத் தொழுகை தொழுததை, பருவ வயது வருவதற்கு முன்னரே தொழுகை கடமையாகும் என்பதற்குச் சான்றாக நீங்கள் எடுத்து வைத்த ஹதீஸீன் நிலை இதுதான். "நான் கடமையெனச் சொல்லவில்லை" என்றெல்லாம் மீண்டும் மறுப்பீர்களாயின், பிறகு இந்த ஹதீஸை எதற்காக இங்கு எடுத்து வைத்தீர்கள் எனச் சொல்லிவிடுங்கள். மறுபடியும், "எனது மார்ச் 31 பின்னூட்டத்தைப் படித்துக் கொள்ளவும்" என்ற டிஃபால்ட் ரிப்பீட்டு வேண்டாம். அதை முழுக்கவும் படித்தாயிற்று. இன்னும் சொல்லப் போனால், அதைப் படித்துப் பார்த்ததால்தான் இவ்வளவும் எழுத நேர்ந்தது. அடுத்தடுத்த ஹதீஸ்களைப் பற்றியும் தொடர்வேன், இன்ஷா அல்லஹ். 37
April 06, 2011 21:18
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் வஹ்ஹாபி அவர்களே உங்கள் முன்னுரை விளக்கங்கள் உவமைகள் லாஜிக்கள் மற்றும் நான் தவறிழைப்பதாக தாங்கள் கூறுவது ஆகிய எதுவும் சரியுமுல்ல பேசுபொரூளுக்கும் பொருந்த வில்லை. , அதே போல் புகாரியில் எண் 4302ல் பதிவான ஹதீஸுக்கும், மற்றும் நபி ஸல் அவர்கள் ஏழு வயதில் ஏவுங்கள் பத்து வயதில் அடியுங்கள் போன்ற நேரடி ஹதீஸ்களுக்கு முரணான நிலைபாடு கொண்டு ஹதீஸின் கருவை விட்டு ஆடை சுஜூதில் விலகியதை வைத்து அறிவிப்பாளர் குர் ஆன் அறிதல் உட்பட சுய விளக்கங்கள், கருத்துக்கள்...... பருவ வயது வரை கடமையில்லை என்பதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை என்று,,, இதற்கு டிபாள்டாக தொடர்ந்து கூறுகீறீர்கள்... எனது பின்னூட்டத்தைத படித்ததால் தான் அதற்கு மாறாக வேண்டுமென்றே இப்படி செய்கிறீர்கள் என்றும் வாக்கு மூலம் வேரு எனும் போது என்னவென்பது...ஏதேனும் ஆதாரம் கிடைக்கும் என்பதிலும் ஏமாற்றம்.... கைர் உங்கள் விருப்பப்படி நாடும் வரை தொடருங்கள். நான் பதிலளிக்காவிட்டால் எனது முந்தய அனைத்து பின்னூட்டங்களில் பதில் அல்லது கருத்து உண்டு என்பது டிஃபாள்ட். அதை ஏற்பதும் அல்லது டிஃபாள்ட்டாக மறுப்பதும் உங்கள் தேர்வு. ம்ஸ்ஸலாமா. 38
April 06, 2011 23:47
அன்பான சகோதரர் எம் அப்துல்லாஹ்,
வ அலைக்குமுஸ்ஸலாம். சென்ற பின்னூட்டத்தில் நான் எடுத்து வைத்தவை அனைத்தும் சரியல்ல என முடிவு சொல்லி விட்டீர்கள்; நன்று! அதேபோல், முதலாவது ஹதீஸில் (புகாரீ-4302) முக்கியமான பகுதியை நீங்களே வைத்துக் கொண்டு, மீதியை மட்டும் எங்களுக்கென வைத்ததும் மிக்க சரியான செயல் என வாசகர்கள் நினத்துக் கொள்ள வேண்டியதுதான், வேறென்ன செய்ய? நானாக சுயவிளக்கம் ஏதும் சொல்லவில்லையே? அவை அனைத்தும் நீங்கள் 'வைத்துக் கொண்ட' பகுதி ஹதீஸில் உள்ளவைதாமே! வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக இதோ நீங்கள் 'வைத்துக் கொண்ட' ஹதீஸ் பகுதி மட்டும்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், "மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?" என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், "அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்... கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், "அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தாம் (என்று நிரூபணமாகிவிடும்)'' என்று கூறினார்கள். மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். *** அறிவிப்பாளர் அம்ரிப்னு ஸலமாவுக்கும் வழிப்போக்கர்களுக்கும் நடைபெறும் உரையாடல் அவர்கள் இவரைக் கடந்து சென்று கொண்டிருக்கும்போது, "போகிற போக்கில்" என்பது தெளிவாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. அறிவிப்பாளரும் வழிப்போக்கர்களும் நபி (ஸல்) அவர்களை "அந்த மனிதர்" எனக் குறிப்பிடுகின்றனர். இப்படி இருசாராரும் குறிப்பிடுவது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆகி இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின்னர் என்பதிலிருந்து இருசாராரும் அன்றுவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகத் தெளிவு. வழிப்போக்கர்கள், "அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்... கூறுகிறார்'' எனச் சொல்வதிலிருந்து நபியவர்கள் எடுத்துச் சொல்லும் சத்திய வேதத்தையோ மார்க்கத்தையோ அவர்கள் அன்றுவரை ஏற்றுக் கொள்ளாதவர்களாக - "அவர் அப்படிச் சொல்கிறார்" எனக் கூறக்கூடியவர்களாகத்தான் இருந்திருக்கின்றனர் என்பதும் மிகமிகத் தெளிவு. அந்த வழிப்போக்கர்கள் கூறியவற்றைத்தான் மனப்பாடம் செய்து கொண்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார் ( فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الْكَلَامَ ) அவை, குர்ஆன் வசனங்கள்தாம் எனும் உறுதியான குறிப்பு மூலத்தில் இல்லை; வேறு எங்குமில்லை. வழிப்போக்கர்கள் கூறியவற்றைத்தான் அறிவிப்பாளர் தொழுகையில் (!) ஓதி இமாமத் (!) செய்திருக்கிறார். "அவர் என்ன ஓதியிருந்தாலும் எப்படித் தொழுதிருந்தாலும் அது செல்லத் தக்கத் தொழுகைதான்" என்று நீங்கள் சொன்னால் செல்லாது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லியிருந்தால் செல்லும். ஆனால், இந்தச் சின்னப் பிள்ளைத் தொழுகை அல்லாஹ்வின் தூதருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டதாகவோ அதற்கு அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாகவோ எந்தச் சான்றும் என் கண்ணில் படவில்லை. உங்களிடமிருந்தால் தரலாம். நான் சொல்வது எதுவுமே சரியில்லை என்று உறுதியாக நிறுவுவதற்கு வேறொரு வழியிருக்கிறது. அந்த சின்னப்பிள்ளை தொழவைத்தபோது என்ன ஸூரா ஓதினார் என்பதற்கான நேரடியான ஹதீஸை இங்கு வைத்தால் நான் தீர்ந்தேன். 4302ஐ இத்துடன் நிறைவு செய்து கொள்வோம். பிற ஹதீஸ்களைப் பற்றிப் பின்னர் தொடர்வேன், இன்ஷா அல்லாஹ். 39
April 07, 2011 18:55
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் வஹ்ஹாபி அவர்களுக்கு இந்த ஆக்கத்தின் மறுமொழி இடுகையில் நான் பதியவேண்டிய கருத்துக்கள் தவிர்க்க இயலாத காரணத்தால் தாமதமாகின்றன. இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவுசெய்வேன். புகாரி நூலின் 4302 வது அறிவிப்பில், (فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الْكَلَامَ ) குர்ஆன் வசனங்கள் என்று நேரடியாக இடம்பெறவில்லை என்பது சரியே. ஆனால், நஸயீ 632, நஸயீ 759, நஸயீ 781 மற்றும் அபூதாவூத், அஹ்மத் நூல்களின் அறிவிப்புகளிலும் ''வாகனத்தார்களிடமிருந்து நாங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வோம்'' என்ற கருத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. வாகனத்தில் பயணிப்பவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இறைவேதமான குர்ஆனைக் கற்றுக்கொண்டு திரும்புகையில்) எங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து நாங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வோம். என் தந்தையும் நபி (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழவைக்கட்டும்'' என்று கூறினார்கள். பின்னர் என் தந்தை (எங்களிடம்) வந்து ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழவைக்கட்டும் என்று கூறினார்கள்'' என்று சொன்னார். அதனால் மக்கள் (தொழுவிப்பதற்காக ஆளைத் தேடிப்) பார்த்தார்கள். அப்போது நான்தான் அவர்களுள் குர்ஆன் நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்தேன். ஆகவே, அவர்களுக்கு நானே தலைமை தாங்கித் தொழவைத்தேன். (அப்போது) நான் எட்டு வயது சிறுவனாக இருந்தேன். (இது நஸயீ 781 வது அறிவிப்பு) ...ஆகவே என் சமூகத்தார் என்னை அழைத்தனர். எனக்கு ருகூவு, ஸஜ்தா ஆகியவற்றையும் கற்றுக்கொடுத்தனர்...(இது நஸயீ 759வது அறிவிப்பின் சில வார்த்தைகள்) குர்ஆன் ஓதுவதில் முதன்மை இடத்தில் இருக்கிறார் என்று சொல்லலாமே தவிர, இமாமத் செய்வது சிறுவர் மீது கடமை என்பதை நிறுவிட இந்த அறிவிப்புகளில் சான்று இல்லை! குர்ஆன் ஓதுவதில் இருவர் சமநிலையில் இருந்தால் வயதில் பெரியவர் தொழவைக்கட்டும் என்ற அறிவிப்பு, பருவ வயதையடைந்தவர்களிலும் பெரியவரைத் தேர்தெடுக்கச் செய்கிறது. (அல்லாஹ் மிக அறிந்தவன்) 40
April 08, 2011 20:00
முந்தைய மறுமொழி இடுகையில் சுட்டி முறையாக இயங்கவில்லை மீண்டும்,
நஸயீ 632. http://hadith.al-islam.com/Pag...27&PID=632 நஸயீ 759, http://hadith.al-islam.com/Pag...27&PID=759 நஸயீ 781, http://hadith.al-islam.com/Pag...27&PID=781 41
April 08, 2011 20:55
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் வஹ்ஹாபி அவர்களே தங்கள் வாதங்களுக்கு வரிக்கு வரி பதில் கருத்திட நேரமுமில்லை விருப்பமுமில்லை அதனால் பெரும் பலனுமில்ல். இது வாதத் திறமையை காட்டும் பட்டி மன்றம் இல்லை. ஆக,, ஒரு கருத்துக்கு மூறையாக ஆதாரபூர்வமான ஹதீஸ் மூலம் தெளிவு அளிக்க / அல்லது பெற முயலவேண்டும். மாற்று கருத்துடையோருக்கும் நன்மையை நாடி விளக்கம் / அல்லது தன்னிலை விளக்கம் நாகரீகமான முறையில் நையாண்டியாக அல்லாமல் எடுத்து வைக்கப் பட வேண்டும். அதை அல்லாஹுக்கு அஞ்சி அணுக வேண்டும், அதுவே மூஸ்லிம்களுக்கும் வஹ்ஹாபிகளுக்கும் அழகு. என்பதை மட்டும் இங்கு ஞாபகபடுத்துகிறேன். அல்லாஹ் அருள் புரிவானாக. அடுத்து // முதலாவது ஹதீஸில் (புகாரீ-4302) முக்கியமான பகுதியை நீங்களே வைத்துக் கொண்டு, மீதியை மட்டும் எங்களுக்கென வைத்ததும் மிக்க சரியான செயல் என வாசகர்கள் நினத்துக் கொள்ள வேண்டியதுன், வேறென்ன செய்ய? // இங்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸின் பகுதியை மறைத்துள்து போல் சித்தரித்துள்ளீர்கள் ஹதீஸில் சம்பந்த்மான சிறுவர் தொழவைத்த பகுதியை மட்டும் ஹதீஸ் எண்ணோடு வைத்தேன், இது போன்ற சிந்தனை கூட வரவில்லை, அல்லாஹ்வை அஞ்சி இப்போக்கை கைவிட்டு எனது நிலைப்பாட்டை திரிக்காமல் இயன்றால் குர் ஆன் ஹதீஸ அடிப்படையில் "பருவ வயது வரை கடமையில்லை என்பதற்கும் இதை ஒட்டி நான் வைத்த கேள்விகளை நிதானமாக உள் வாங்கி கருத்திடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக, சகோதரர் மூஸ்லிம் அவர்களே தங்கள் ஹதீஸ் சுட்டிகள் மற்றும் கருத்துக்களுக்கு நன்றி. ஜஸாக்கல்லாஹு கைரன். அதே நேரம்.... // இமாமத் செய்வது சிறுவர் மீது கடமை என்பதை நிறுவிட இந்த அறிவிப்புகளில் சான்று இல்லை // நான் இவ்வாரு கூற வில்லை. என் கூற்று இதோ //இறுதியாக ஒரு வேண்டுகோள் இது விஷயமாக("பருவ வயது வரை கடமையில்லை என்பதற்கு ) நேரடி ஹதீஸ் இருப்பின் தரவும் அல்லது கருத்துக்கள் விளக்கங்கள் எனில் நான் நிறைய அறிஞர்களின் கருத்துக்களை கண்டுள்ளேன். அதே நேரம் எனக்கு குர் ஆன் ஹதீஸின் நேரடியான ஆதாரம் இல்லாத நிலையில், சிறுவர்கள் தொழுத, தொழ பள்ளியில் காத்திருந்த, இமாமாக இருந்து தொழ வைத்த, நோன்பு நோற்றுள்ளதை காணும் போது இதைப் பற்றி இவ்வாரு கூறவோ கூறுவதை சரி காணவோ இயலவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.(31.03.2011) // 42
April 08, 2011 23:20
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் எம். அப்துல்லாஹ் அவர்களே, ஒன்றிலிருந்து மற்றொன்றை முறையாக சிந்தித்து விளங்குவது தான் அறிவு. இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன், சுன்னாவில் காணலாம். நேரடியான சட்டம் வேண்டும் என்று கேட்பது அறிவுத்திறனுக்கான கருத்தாய்வு அல்ல. இறைவன் இருக்கிறான் என நம்பிக்கை கொண்ட ஆத்திகர், ''இறைவன் எங்கே இருக்கிறான் காட்டு?'' எனக் கேட்கும் நாத்திகருக்கு ''இறைவன் இதோ இருக்கிறான்!'' என்று நேரடியாக காட்ட முடியாது. வானத்தைப் பார், பூமியைப் பார், நீந்திச்செல்லும் கோள்களைப் பார், படைப்பினங்களைப் பார், தண்ணீரைப்பார் என்று இவைகளின் இயக்கங்களைச் சிந்தித்து விளங்கி இறைவன் என்று ஒருவன் இருக்கிறான். அவனின்றி இந்தப் பிரபஞ்சம் அணுவும் அசையாது என இறைவனின் வல்லமையை எடுத்துச் சொல்லி, சிந்திக்கச் சொல்லுவார் ஆத்திகர். சகோதரர் வஹ்ஹாபி அவர்கள் முன்னுரையில் இது குறித்து விளக்கியிருப்பது அருமை எனச் சொல்லலாம்! நீங்கள் நேரடி ஆதாரம் வேண்டும் என்று பதிவு செய்த பின்னும் இந்த ஆக்கத்தின் மறுமொழி இடுகை தொடரக் காரணம் பிறரின் சிந்தனைக்கும் செய்தி சென்றடைய வேண்டும் என்பதே. தனிப்பட்ட எவரையும் திருப்திபடுத்தும் - திருத்திடும் நோக்கமல்ல விளங்கிடுக! 43
April 09, 2011 08:58
அன்புச் சகோதரர் முஸ்லிம்,
வ அலைக்குமுஸ்ஸலாம். தங்கள் பின்னூட்ட விளக்கங்களுக்கும் சுட்டிக்கும் நன்றி! நஸயீயின் 781 ஹதீஸில் அடைப்புக்குறிக்குள் உள்ள (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இறைவேதமான குர்ஆனைக் கற்றுக்கொண்டு திரும்புகையில்) தகவல் மூலத்தில் இல்லாதவை. அவற்றுக்கான ஏதேனும் ஒரு சான்று கிடைத்தால் நன்மையாக இருக்கும். இமாம் அஹ்மது அவர்களின் பதிவில், "மதீனாவிலிருந்து திரும்பும் வாகனப் பயணிகள் தாங்கள் கேள்விப்பட்டதை/செவியுற்றதைக் கூறுவார்கள்" என இடம்பெற்றுள்ளது. வாகனப் பயணிகள் முஸ்லிம்கள் என்பதற்கோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைவசனங்களைப் பயின்றவர்கள் என்பதற்கோ போதிய சான்றுகள் இல்லை. "என் தந்தையும் நபி (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழவைக்கட்டும்' என்று கூறினார்கள் என்பது ஸலமா அல்ஜர்மீ (ரலி) மதீனாவுக்குச் சென்று அல்லாஹ்வின் தூதரை அடிக்கடி சந்தித்து வந்ததுபோல் ஒரு பொருள் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. மூலத்தில் அவ்வாறு இல்லை. فَأَتَى أَبِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا என்பதற்கு, (மக்கத்து வெற்றியின்போது) என் தந்தை நபி (ஸல்) அவர்களிடம் சென்றவேளை, "உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் உங்களுக்குத் தொழவைக்கட்டும்" என்று கூறினார்கள் என்பது சரியான தமிழாக்கமாக இருக்கும். ஏனெனில் அறிவிப்பாளர் அம்ருவின் தந்தையான ஸலமா அல்ஜர்மீ (ரலி), மக்கத்து வெற்றிக்கு முன்னர் முஸ்லிம் ஆனவரல்லர் என்பது அன்னாரது நேரடி வாக்குமூலத்தால் நிறுவப்பட்ட உண்மையாகும். 44
April 09, 2011 21:31
அன்புச் சகோதரர் வஹ்ஹாபி அவர்களே,
இஸ்லாமியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்போது சில கருத்தாய்வுகள் திசைமாற்றி நம்மை வேறு எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிடும். நாமும் நம்மை மறந்து சென்றுவிடுவோம். அதுபோல் நிகழ்ந்து விடக்கூடாது என்பதினாலேயே புகாரி 4302வது அறிவிப்பில் ''குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தேன்'' என்று நேரடியாக குர்ஆன் என்று மூலத்தில் இல்லை என உங்கள் ஆட்சேபனை இருந்ததால், ''வாகனப் பயணிகளிடமிருந்து நாங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வோம்'' என்கிற நஸயீ நூலின் நேரடியான அறிவிப்புகளை மட்டும் நினைவுப்படுத்தியிருந்தேன். (حَتَّى حَفِظْتُ قُرْآنًا - அஹ்மத்) மக்கா வெற்றிக்குப் பிறகுதான் அறிவிப்பாளரின் தந்தையும் குடும்பத்தினரும் இஸ்லாமை ஏற்றனர் என்பதிலும், சிறுவர் இமாமத் செய்த சம்பவமும் மக்கா வெற்றிக்குப் பிறகு நடந்தது என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. போதிய ஆடைகள் இல்லாததால் வேட்டி போன்ற ஒரு சிறிய கீழாடையை மட்டும் கழுத்தில் கட்டிக்கொண்டு தொழுதுள்ளனர். ருகூவு, ஸஜ்தாவில் குனியும்போது சிறிய ஆடை மேலேறி விலகி பின்புறம் வெளிப்படும். இதன் காரணமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும் ஆண்கள் வரிசைக்குப் பின்னால் தொழும் பெண்களுக்கு ஆண்கள் நிமிரும் வரை பெண்கள் தலைகளை உயர்த்தவேண்டாம் எனக் கூறப்பட்டது பார்க்க சுட்டி: http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=814 (மற்றும் புகாரி 1215, நஸயீ 758, அபூதாவூத், அஹ்மத்) முஸ்லிம் நூலின் அறிவிப்பு: நபி (ஸல்) அவர்களது காலத்தில் மேலாடையில்லாமல்) ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால், சிறுவர்களைப் போன்று அவர்கள் தம் கீழாடைகளை பிடரிகள் மீது கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதுகொண்டு) இருந்தததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால், ''பெண்களே! ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தவேண்டாம்'' என்று ஒருவர் கூறுவார். அறிவிப்பவர் சஹ்ல் பின் சஅத் (ரலி) (நூல் - முஸ்லிம் 750) சிறுவர் பின்புறம் - பிட்டம் வெளிப்பட தொழவைத்தது ஆட்சேபனைக்குரியதல்ல. திருத்தம்: (يَقُولُونَ لِأَبِي أَلَا تُغَطِّي عَنَّا اسْتَ ابْنِكَ) இவை நஸயீ நூலின் பதிவு, அபூதாவூத் அல்ல. (அல்லாஹ் மிக அறிந்தவன்) 45
April 10, 2011 12:32
அன்பான சகோதரர் எம். அப்துல்லாஹ்,
வ அலைக்குமுஸ்ஸலாம். புகாரீயின் "4302ஐ இத்துடன் நிறைவு செய்து கொள்வோம்" என்று கடந்த April 07, 2011 18:55இல் குறிப்பிட்டுவிட்டு, அடுத்தடுத்த ஹதீஸ்களைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் விடுவதாக இல்லை. எனவே, எனக்கும் தொடர்வதைத் தவிர வேறுவழியில்லை. மற்றவர்களையெல்லாம் நுனிப்புல் மேய்பவர்களாக நினைத்துக் கொண்டு, "எனது ... பின்னூட்டத்தைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும்" என்று வரிக்குவரி அறிவுரைகளை அள்ளி வீசுபவர், அதே 'கவனத்துடன்' மற்றவர்களுடையை பின்னூட்டதையும் படிக்க வேண்டும் என மற்றவர் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? அதுதானே நேர்மையாக இருக்க முடியும்? "... ஹதீஸ்களை முடிந்தால் மூலத்துடன் இல்லையெனில் தமிழில் முழுமையாக இங்கு தயவுகூர்ந்து வைப்பீர்களாயின் அவற்றிலிருந்து விளக்கம்பெற முயலலாம்" என்று நான் April 03, 2011 19:57இல் வைத்த கோரிக்கைக்குப் பதிலாக உங்களது பகுதி ஹதீஸ் வெளியானது. அத்தோடு, "இவறிற்கு சுயமாக ஹதீஸில் இல்லாத அல்லது நபி(ஸல்) அளிக்காத விளக்கம் வேண்டாம்" எனும் எச்சரிக்கையும் இறுதியில் இருந்தது.அதனால், அந்த ஹதீஸுக்கு உள்ளேயே இருந்த விளக்கமான மீதியை இங்கு நான் வைத்துப் பிரித்துச் சொல்ல வேண்டியதாயிற்று. ஒற்றை வரியில் எழுதிவிடத் தக்க ஒரு ஹதீஸுக்காக அதன் பின்புலங்களை விவரித்துக் காட்டுவது ஹதீஸ்கலை வல்லுநர்களின் வழக்கம். அதனாற்றான் அவர்களை இமாம்கள் என்கிறோம். இமாம்களெல்லாம் வீணாக அவற்றைத் திரட்டிப் பதிவு செய்து வைக்கவில்லை. இந்த ஆக்கத்தின் பேசுபொருளில், 'பருவமடைதல்' எனும் சொல்லாடல் மிகமுக்கியமானது. ஓர் ஆணோ பெண்ணோ பருவமடையும் வயதானது ஒத்தாற்போல் இருக்காமல் அவர்களின் பரம்பரை, பிறந்த நிலம், வாழும் சூழல் ஆகியவற்றால் சற்று முன்-பின்னாக இருக்கும். எனவே, எல்லாருக்கும் பொருந்துவதாக ஒரு வரம்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும்; அதுவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நபித்தோழர் இபுனு உமர் (ரலி) 14 வயதில் உஹதுப் போரில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு, 15 வயதில் அகழிப் போரில் அனுமதி கொடுக்கப் பட்டதை விளக்கும் புகாரீ 2664 ஹதீஸை எனது முதல் பின்னூட்டத்தில் வைத்தேன். ஆனால், நான் பேசுபொருளைப் புரிந்து கொள்ளாமல் அதற்குத் தொடர்பு இல்லாமல் வேலை மெனக்கெட்டு ஏதோதோ எழுதிக் கொண்டிருப்பதாக முடிவு செய்து கொண்டு, "நான் போருக்கான வயது பற்றிய நம்பரை கேட்கவில்லை" எனக்கூறி அந்த ஹதீஸை, போருக்கான வயதை நிர்ணயிப்பதற்கு மட்டுமான ஹதீஸென ஒற்றைப் படுத்தினீர்கள். அது மிகுந்த ஆபத்தான கருத்து என விளக்கிய பின்னரும் நீங்கள் "நேரடி"யை விடவில்லை. ஒரு ஹதீஸ் "நேரடி"யாகவும் தெளிவாகவும் இருந்தாலும் தட்டையாக விளங்கினால் அது ஆபத்தில் போய்முடியும். உதாரணத்துக்கு, "குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழவைக்கட்டும்" என்பது சகோ. முஸ்லிம் அவர்கள் இங்கு எடுத்து வைத்த நஸயீயின் 781 பதிவிட்ட ஹதீஸாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று நேரடியாகவும் தெளிவாகவும்தான் இருக்கிறது. இதையே நான் தட்டையாக விளங்கிக் கொண்டு, "தெளிவான ஹதீஸ் கிடைத்து விட்டது; வேறு எந்த ஹதீஸையும் நான் ஏற்க மாட்டேன்" எனச் சொல்லிக் கொண்டு, எங்கள் பள்ளியில் தற்போது தொழுவிக்கும் இமாமை அகற்றிவிட்டு, அவருக்குப் பகரமாக சிறுவயது முதல் நாள்தோறும் குர்ஆன் ஓதுவதற்கு நேரம் ஒதுக்கத் தவறாதவரும் அதனால் பிழையில்லாமல் குர்ஆனை ஓதக் கூடியவரும் அதையும் எங்கள் பள்ளி இமாவைவிட இனிமையாக ஓதக் கூடியவருமான எங்களில் ஒருவரை எங்கள் முஹல்லாப் பள்ளிக்கு இமாமாக நியமிக்க நிர்வாகத்தில் கோரிக்கை வைப்பது சரியா? தட்டையாகச் சிந்தித்தால் சரிதான். கூராகச் சிந்தித்தால் அதுவே தண்டனைக்குரிய குற்றம். எப்படி? எங்களில் - எனக்குத் தெரிந்து எங்கள் மஹல்லாவில் - குர்ஆனை நன்கு ஓதக்கூடியவர் என் மாமாவின் மகள் நூரிய்யா. 4302இல் மேற்கொண்டு கூறுவதற்கு எதுவுமில்லை என எண்ணுகிறேன். 46
April 10, 2011 15:08
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் மூஸ்லிம் ,வஹ்ஹாபி அவர்களே // ஒன்றிலிருந்து மற்றொன்றை முறையாக சிந்தித்து விளங்குவது தான் அறிவு. இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன், சுன்னாவில் காணலாம். நேரடியான சட்டம் வேண்டும் என்று கேட்பது அறிவுத்திறனுக்கான கருத்தாய்வு அல்ல. // மாற்று கருத்தில்லை எதிலிருந்து எதை விளங்குவது என்பதில் தான் பிரச்சினையே.மேலும் ஒரு உதாராணம் இதோ... // எனக்குத் தெரிந்து எங்கள் மஹல்லாவில் - குர்ஆனை நன்கு ஓதக்கூடியவர் என் மாமாவின் மகள் நூரிய்யா. // மேலும் உங்கள் பின்னூட்டங்கள் மற்றும் சிறுவர் தொழவைத்த தொழுகை, குர் ஆன போன்ற ஆட்சேபனைக்கு எதிரான ஆதாரமான ஹதீஸ்களுக்கும் விளக்கங்களுக்கும் ஜஸாக்கல்லாஹு கைர். ஆனால் // சகோதரர் வஹ்ஹாபி அவர்கள் முன்னுரையில் இது குறித்து விளக்கியிருப்பது அருமை எனச் சொல்லலாம்! // இங்கு அவர் விளக்கியிருப்பது அருமையா இல்லையா என்பதை விட பேசு பொருளுக்கு அது தேவையா பொருத்தமா என்பதே முக்கியம்.என்றால் பொருந்த வில்லை என்பது என் நிலை. // மற்றவர்களையெல்லாம் நுனிப்புல் மேய்பவர்களாக நினைத்துக் கொண்டு, "எனது ... பின்னூட்டத்தைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும்" என்று வரிக்குவரி அறிவுரைகளை அள்ளி வீசுபவர் //????? நான் அவ்வாரு நினைக்கவில்லை ... எனது கருத்து என்ன?, நிலைபாடு என்ன ? கேள்வி என்ன ? என்று கவனிக்காதது போல் பின்னூட்டங்கள் தொடர்வதும் நான் கூறுவதாக நான் கூறாததை கூறியதும் தான் நான் அப்படி கூற காரணம். // ஹதீஸ்களை முடிந்தால் மூலத்துடன் இல்லையெனில் தமிழில் முழுமையாக இங்கு தயவுகூர்ந்து வைப்பீர்களாயின் அவற்றிலிருந்து விளக்கம்பெற முயலலாம்" என்று நான் April 03, 2011 19:57இல் வைத்த கோரிக்கைக்குப் பதிலாக உங்களது பகுதி ஹதீஸ் வெளியானது. // இதற்கும் ஏற்கனவே பதில் இதோ // நான் வேண்டுமென்றே ஹதீஸின் பகுதியை மறைத்துள்து போல் சித்தரித்துள்ளீர்கள் ஹதீஸில் சம்பந்த்மான சிறுவர் தொழவைத்த பகுதியை மட்டும் ஹதீஸ் எண்ணோடு வைத்தேன், இது போன்ற சிந்தனை கூட வரவில்லை //அத்தோடு, "இவறிற்கு சுயமாக ஹதீஸில் இல்லாத அல்லது நபி(ஸல்) அளிக்காத விளக்கம் வேண்டாம்" எனும் எச்சரிக்கையும் இறுதியில் இருந்தது.அதனால், அந்த ஹதீஸுக்கு உள்ளேயே இருந்த விளக்கமான மீதியை இங்கு நான் வைத்துப் பிரித்துச் சொல்ல வேண்டியதாயிற்று. // நான் இவறிற்கு சுயமாக ஹதீஸில் இல்லாத அல்லது நபி(ஸல்) அளிக்காத விளக்கம் வேண்டாம் என்று கூறியும் நீங்கள் அவர் கற்ற குர் ஆன் தொழுகை இரண்டையும் மாற்றமாக விளங்கியதையும் சகோ மூஸ்லிம் அழகாக சுட்டிக் காட்டினார். கைர் நீங்கள் தொடருங்கள் ..நான் எனது பின்னூட்டங்களில் வைத்து தாங்கள் பதிலளிக்காத கேள்விக்ளும் அதே போல் பேசு பொருள் சம்பந்தமான இன்னும் சில கேள்விகளும் உள்ளன சமயம் கிடைக்கும் போது வைக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன் 47
April 10, 2011 23:23
அன்புச் சகோதரர் முஸ்லிம்,
வ அலைக்குமுஸ்ஸலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள நூல்களில் உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பொதுவாக மறைவிடங்கள் தெரியக்கூடிய் சாத்தியம் இருப்பதைத்தான் கூறுகின்றனவேயொழிய நபித்தோழர்களின் பிட்டம் தெரிந்ததாகக் கூறவில்லை. அப்படியே ஓர் அறிவிப்பு இருந்தாலும் அது, அச்செயலைத் தவிர்ப்பதற்கான சன்றேயன்றி பின்பற்றத் தக்க முன்னுதாரணமில்லை. அடுத்து, தாம் பயணிகளிடமிருந்து குர்ஆனைக் கற்றுக் கொண்டதாக ஒருமையாகவும் பன்மையாகவும் அறிவிப்பாளர் கூறுகிறார் என்பது உண்மைதான். இந்த நிகழ்வை இவரைத் தவிர வேறு யாரும் கூறியதாகக் காணக் கிடைக்கவில்லை. கற்றுக் கொடுத்த பல பயணிகளுள் ஒருவர்கூட இன்னாருக்கு இன்னின்ன வசனங்களை நான் கற்றுக் கொடுத்தேன் என்று கூறியதாகத் தகவல் ஏதும் காணக் கிடைக்கவில்லை. அவர் கற்றுக் கொண்டவை குர்ஆன் வசனங்கள்தாம் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. அவருக்கு அவற்றைச் சொன்னவர்கள் முஸ்லிம்கள் என்பதற்கும் உறுதி ஏதுமில்லை. பொதுவாக, அறிவிப்பாளர்கள் குர்ஆனைப் பற்றிப் பேசும்போது குதூகலமாகக் குறிப்பிடும் இன்ன இன்ன வசனங்கள் எனும் குறிப்புகள் இந்த அறிவிப்பில் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அறிவிப்பாளர் அம்ரிப்னு ஸாலிம் அல்ஜர்மீ என்பார் நபித்தோழர் அல்லர். 48
April 11, 2011 15:08
திருத்தம்:
எல்லாவற்றுக்கும் மேலாக, அறிவிப்பாளர் அம்ரிப்னு 49
April 12, 2011 00:13
கருத்து எழுதுக :
|
|
jasminamjad :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu...... |
|
sasma :
assalamu alaikum thank u |
|
sasma :
this is very useful for all..... |
|
Ruknudeen :
கட்டுரையின் ஆசிரியருக்கும் அல்லா ரப... |
|
abinaya :
This not that much clear for students make it very clear. don't confuse them.
|
|
abdul hameed :
சுபஹானல்லாஹ்! அருமையான பதிவு.. சகோதரி... |
|
syeed :
subahanaala |
|
ummu hudhaifa :
மாஷா அல்லாஹ் எந்த ஒரு தோழருடைய வரலாற... |
|
Poovai Ansary :
மிக தெளிவான கட்டுரை. ஆளும் வர்க்கத்த... |
|
Abdul Azees from trichy :
அபூஅப்துல்லாஹ். ஏன் அழுகிறீர்கள்?” வ... |
|
mbm sajeeth :
jazakallaaku kair |
|
Haja :
In the name of allah.
Its good attempt. This article must send it all our people. We have to united... |
|
நல்லடியார் :
அன்பு சகோ.அப்துல் அஜீஸ்,
ஒப்பீட்டிற்... |
|
abdul azeez :
வ அலைக்கும் சலாம் நல்லடியார் அவர்களே... |
|
நல்லடியார் :
//தோழர்களுக்கு சொல்ல சொன்னதை கவனித்த... |
|
karthikeyan :
[i]very useful medical tips.Thankyou. |