முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முகப்பு

வழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.

சகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.

இதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்கிறார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.

விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.

மற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.

தன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா? இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.

ஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே?” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).

யாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.

நிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும்,  வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து  ஷைத்தான் கொண்ட பொறாமை!

இன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது! சக மனிதர்கள்/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.

இறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.

மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.

அதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக! ...”(43:32) என்றும் குறிப்பிடுகிறது.

“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]

... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ... என்கிறது இறைமறை (49:13).

மேலும்... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.

இறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.

மற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.

தான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா! எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.

இந்த, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.

சுருங்கக் கூறின்,

  • ஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.
  • பொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.
  • இறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.
  • ஏற்றம்-தாழ்வு, இரண்டுமே இறைநியதி.
  • தளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.
  • உலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்
  • மறுமை இறையச்சமுடையவர்களுக்கே உரியது.
  • தீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.
  • பொறாமைக்காரர்களின் தீமையிலிருந்து, இறைவா! உன்னிடம்பாதுகாவல் தேடுகின்றேன்....என்று பிரார்த்திப்போமாக!

ஆக்கம்: இப்னு ஹம்துன்

Comments   
அஹமது இம்தியாஸ்
0 #1 அஹமது இம்தியாஸ் 2011-02-01 09:03
சகோதரர் இப்னு ஹம்துன் அவர்களின் ஆக்கம், தற்கால பொறாமை நிறைந்த வாழ்க்கை முறைக்கு தேவையான ஒரு ஆக்கம். இதனை பல ஊடகங்களிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிற ேன்.
Quote | Report to administrator
முஹம்மது Faisal
0 #2 முஹம்மது Faisal 2011-02-01 09:10
மிக அருமையான பதிவு. அல்லாஹ் நாடியதை தவிர வேறு ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கை பொறாமை மற்றும் மற்ற தீய செயல்களிலிருந்த ு நம்மை காக்கும்.
Quote | Report to administrator
முகம்மது   அலி ஜின்னாஹ்
0 #3 முகம்மது அலி ஜின்னாஹ் 2011-02-01 09:59
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) நல்ல கட்டுரைகளும் கவிதைகளும் எழுதக்கூடிய , மார்க்க அறிவும் கொண்ட, இனிய இஸ்லாம் வழியில் வாழ்பவர் .அவரது திறமையினை பலரும் அறிவர் . அந்த வழியில் இக்கட்டுரையும் மிகவும் அருமையாக அமையப்பட்டுள்ளத னைக் காண மகிழ்கின்றேன் .
அவர் கட்டுரை சத்யமார்க்கம் வலைப்பூவிலும் தொடர்ந்து வருவதனை மிகவும் விரும்புகின்றேன ் .
குறள் 163:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
மு.வ உரை:

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான ்.

இறைவனது அருளில் நிராசை அடைய வேண்டாம் என்றுதான் இஸ்லாம் சொல்கின்றது .
Quote | Report to administrator
ஷாஜஹான் - ரியாத்
0 #4 ஷாஜஹான் - ரியாத் 2011-02-01 13:28
கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு. பொறாமையும் அவ்விதமே..
ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவுகள் ஒன்றே..

எளிமையாகவும் அழுத்தமாகவும் வரையப்பட்ட கட்டுரை..மிகைப் படுத்தப் படாத வரையறைகளை கொண்டு வெளிப்படுத்திய விதத்தில் மிளிரும் சமூக அக்கறை
உங்கள் மேல் பொறாமை கொள்ள வைக்கிறது ஃபகுருதீன். அனுமதிக்கப் பட்ட பொறாமையைச் சொன்னேன் :-) ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு என்ற உங்கள் மொழிபெயர்ப்பை நிறையவே ரசித்தேன்.

பயனுள்ள எழுத்துகள் பால் பயணிக்கத் தொடங்கும் உங்களின் இவ்வித முயற்சிகள் வெற்றி பெற இறையைப் பிரார்த்திக்கிற ேன் நண்பா.. ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
Quote | Report to administrator
abu hudhaifa
0 #5 abu hudhaifa 2011-02-01 20:12
கட்டுரை மிகவும் அருமை மாஷா அல்லாஹ்.சுருக்க மாகவும் அதே நேரத்தில் நறுக்காகவும் செதுக்கப்பட்டுள ்ளது.ஆனால் மார்க்கம் அனுமதிக்கும் இரண்டு விஷயத்தில் பொறாமை கொள்ளலாம் என்பதையும் நபி மொழி ஆதாரத்தோடு விளக்கியிருந்தா ல் நன்றாக இருந்துருக்கும் .இன்னும் ஆசாகாக இருந்துருக்கும்.

இந்த பொறாமை என்னும் பாவத்துக்கு அகீதாவில் ஏற்பட்ட கோளாறும் ஒரு காரணமாக அமைகிறது
أللهم لامانع لما أعطيت ولامعطي لما منعت
"அல்லாஹ்வே நீ கொடுத்ததை யாரும் தடுக்க முடியாது நீ தடுத்ததை யாரும் கொடுக்க முடியாது"என்பது தான் அல்லாஹ்வின் தூதரின் வாக்கு இதுதான் அடிப்படையும் கூட.இந்த அடிப்படையில் பூரணமில்லாமல் ஸ்திரத்தன்மையை இழந்து தடுமாற்றம் யாருக்கு ஏற்பட்டதோ அவர் தான் இம்மாதிரி பொறாமை என்னும் தீயில் வெந்து சாகிறார்.மாறாக உயர்வும் தாழ்வும் அல்லாஹ்வின் கையில் உள்ளது அவன் அளந்த ஆகாரம் கண்டிப்பாக எல்லோருக்கும் கிடைக்கும் அவன் நீதி தவறாதவன் என்ற எண்ணம் யாருக்கு ஏற்பட்டு மேற்சொல்லப்பட்ட அத்துஆவின் நிழலில் யாருடைய வாழ்க்கை அமைகிறதோ அவர் தான் இப்பொறாமை எனும் தீய காரியத்தில் இருந்து விலகி இருக்க முடியும்.

இதை உணர்ந்து செயல்பட வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.
Quote | Report to administrator
சஃபி
0 #6 சஃபி 2011-02-01 21:15
தமக்கே உரிய நளினத்தோடு அருமையாகச் சொல்லியிருக்கிற ார் சகோ. இப்னு ஹம்துன்.

பாராட்டப்பட வேண்டிய ஆக்கம்.
Quote | Report to administrator
Mohammedsheriff
0 #7 Mohammedsheriff 2011-02-02 08:10
ஷெரிப் பன்னாட்டு இந்திய பள்ளி ரியாத்

அருமையான ஆக்கம் எல்லாம் வல்ல இறைவன் இன்னும் இது போன்ற ஆக்கப்பூர்வாமான
கட்டுரைகள் இறைவழியில் தாங்கள் மடலிட மனதார வாழ்த்துகிறேன்
Quote | Report to administrator
Rafique உதுமான், ரியாத்.
0 #8 Rafique உதுமான், ரியாத். 2011-02-03 08:53
அடிக்கடி நினைவுட்ட வேண்டிய மிக முக்கியமான தலைப்பு பொறாமை. இன்னும் கொஞ்சம் விளக்கமாக பதியலாம். ஆக்கம் வரைந்த சகோதரர் இப்னுஹம்தன் அவர்களுக்கும் பதிவு செய்த சத்தியமார்க்க குழுவினருக்கும் நன்றிகள்.
Quote | Report to administrator
Riyaz
0 #9 Riyaz 2011-02-08 10:31
சலாம்
அல்லாஹ்வை முழுமையாக அறிந்தவன் பொறாமை பட தேவையே இல்லை என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறிர்கள் நன்றி
Quote | Report to administrator
ஷாகுல் ஹமீது
0 #10 ஷாகுல் ஹமீது 2011-02-09 11:46
பொறமை - நல்லதுரு பயன்பட்டு ஆக்கம் -
Quote | Report to administrator
Hameed Maricar
0 #11 Hameed Maricar 2011-10-17 19:17
அருமயானே விளக்கம் ...உங்கள் கட்டுரை மிக மிக அருமை ...தொடரே வாழ்த்துக்கள்
இவன் ஹமீது மரைக்காயர் PORTONOVO
Quote | Report to administrator
jahir husain shengottai
0 #12 jahir husain shengottai 2013-02-24 05:00
masha allah, very good article for the time being. article open our heart. thanks for your service!!
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!