சத்தியமார்க்கம்.காம்

திசை மாறும் இயக்கங்கள் print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
செவ்வாய், 11 ஜூலை 2006 14:23

இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் விட்டுச்சென்ற நற்பணியை தொடர்வதற்கே ஆகும். நபியவர்கள் இறைக்கட்டளைகளை பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தும், சில சறுக்கல்களின் போது இறைவனின் கண்டனத்திற்கும் ஆளாகி நன்னடத்தைகளின் சிகரமாய் விளங்கி இப்பெரும் பணியை இனிதே நிறைவு செய்தார்கள். அவர்கள் வழி வந்த சத்திய ஸஹாபாக்களின் காலங்களுக்குப் பின் வந்தவர்களிடம் ஏற்பட்ட ஒழுக்க வீழ்ச்சி மற்றும் கொள்கை புரட்டல்களின் காரணமாகவும்,ஆடம்பர உலக ஆசை காரணமாகவும் இஸ்லாத்தின் அடிப்படைகளை விளங்க மறுத்து, மனம் போன போக்கில் ஆட்சி புரிந்ததின் விளைவாக இப்பணி நலிவடைந்து திசைமாறி சென்றது.

உலகெங்கும் பரவி வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய விளக்கம் திரிபடைந்து, உண்மையான இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுக்கு மாறாக அவர்களின் நடைமுறைகள் அமைந்தன. இது போன்ற ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருந்த இஸ்லாத்தின் எதிரிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளை முனைப்புடன் பரப்பத் தொடங்கினர்.

இதனால் பலதரப்பட்ட மக்களுக்கு மத்தியில் வாழ்ந்த இஸ்லாமியப் பெயர்தாங்கிகளின் நடைமுறைகளே இஸ்லாம் என மற்ற மதத்தினரால் கருதப்பட்டது. இதனைச் சீர் செய்வதற்குக் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றினார்கள். அவர்கள் பிறந்த மண்ணின் சூழலுக்கேற்ப முஸ்லிம்களின் மீள் எழுச்சிக்காகப் பல திட்டங்களை முன்மொழிந்து சென்றார்கள்.அவற்றின் அடிப்படையில் அமையப்பெற்றவைதான் இன்று நாம் காணும் இயக்கங்கள். இறை திருப்திக்காக தொண்டாற்றும் இயக்கங்கள் பல சோதனைகளுக்கிடையே வாய்மையுடனும், தூய்மையுடனும் பணி செய்யும் நிலையில் உள்ளன.

இப்பணி இருவகையாக அமைகின்றது.

முதலாவதாக இஸ்லாத்தை பற்றி அறியாத அல்லது தவறாக விளங்கி வைத்திருக்கிற பிற சமய மக்களிடம் தூய இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி உண்மையான வெற்றியின் பக்கம் அழைப்பது.

அடுத்ததாக முஸ்லிம் பெற்றோர்க்குப் பிறந்ததாலும், பெயரில் மட்டும் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டிருப்பவர்களிடமும், மேலும் தவறான வழிகாட்டுதல்களினால் பிற கலாச்சாரத்தோடு கலந்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களை, நபிகளாரின் வழிமுறைகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துச்சொல்வதாக இப்பணி அமைய வேண்டும்.
 
இத்தூய இறைப்பணியை அல்லாஹ்வால் இடப்பட்ட கட்டளை என்பதை மறந்து சில இயக்கங்கள் தம் சொந்தப் பணி போல் தனிச்சையாக நினைத்து செயல்படுவதுடன், சகோதர இயக்கங்களை கலிமா முன்மொழிந்தவர்களாக, இஸ்லாமிய அடிப்படையைக் கொண்டு செயல்படுவர்களாகக் கூட கருதுவதில்லை. இன்னும் சில இயக்கங்களோ தாங்கள் செய்யும் பணிகளை விட சகோதர இயக்கங்களின் குறைகளை விளம்பரப்படுத்துவதையே தங்கள் முழு நேர பணியாகச் செய்யும் கேவலமான நிலையை இன்று கண்டு வருகிறோம். தங்களுக்கு இறைவனால் அருட்கொடையாகக் கொடுக்கப்பட்ட சிந்தனாசக்தியையும் செல்வதையும் அரிய நேரத்தையும், பிறரின் தவறுகளை உலகிற்கு ஆனந்தமாக அறிவிப்பதில் செலவிட்டு வரும் இழிநிலையைக் கண்கூடாகக் காண்கிறோம்.

இப்படித் திசை மாறிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக தீட்டப்படும் சதிகளை உணர்ந்து தங்களுக்கிடையேயான சில்லறைப்பிரச்சனைகளை பின்னுக்கு வைத்துவிட்டு ஒன்றுபட முன்வர வேண்டும். இப்பணி "இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கே" என்பதை இயக்கங்கள் உணர்ந்து தூய இஸ்லாத்தின் மாபெரும் எழுச்சிக்கு வித்திட இறைவனை இறைஞ்சிடுவோம்.

கட்டுரையாக்கம்: இப்னுஇலியாஸ் (மூலம்: அல்ஹஸனாத், மார்ச்-2006)

கருத்துக்கள் (4)add comment

எழுதியவர்: வஹ்ஹாபி , July 11, 2006 16:43

சமுதாயத் தலைவர்களும் ஈமெயில் வீரர்களும் படித்து, சிந்தித்து, சீர்திருந்தத் தக்கக் கருத்துகளை அல்ஹஸனாத்தில் எழுதிய இபுனு இல்யாஸ் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!



எழுதியவர்: அருளடியான் , July 12, 2006 04:34

இக்கட்டுரை அல்ஹஸனாத் சஞ்சிகையில் தலையங்கமாக தீட்டப்பட்டது. அதில் இதனை எழுதியவர் இப்னு இல்யாஸ் அவர்கள் என்பதை இந்த தளத்தை பார்வையிட்ட பிறகு தான் தெரிய வந்தது. நல்ல கருத்தாழமுடன் எழுதப்பட்ட ஆக்கம். இப்னு இல்யாஸ் அவர்கள் தொடர்ந்து இது போன்ற ஆக்கங்களை தர கோருகிறோம். சத்திய மார்க்கம் தளம் ஜமாஅத் செயல்படும் அதே பாணியில் யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்யாமல் நடுநிலையாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. நீங்கள் ஏன் ஜமாஅத்தின் தளமாக உங்களை காட்டிக் கொள்ளவில்லை.



எழுதியவர்: இப்னுஇல்யாஸ் , July 12, 2006 06:39

அல்ஹஸனாத் மார்ச்(2006) இதழில் தலையங்கமாக தீட்டப்பட்ட கருத்தை மையமாக கொண்டு சிறிய மாற்றங்களுடன் சத்திய மார்க்கம் தளத்திற்கு நான் அனுப்பிய கட்டுரை நிர்வாகிகளால் இங்கு பதிக்கப்பட்டமைக்கு நன்றி.அல்ஹஸனாத்தின் ஆசிரியர் கருத்தாக வந்ததை வாசகன் என்ற வகையில் படித்து நல்ல விஷயத்தை அனைவருக்கும் அறிய தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிறு மாற்றங்களுடன் அனுப்பி இருந்தேன்.அல்ஹஸனாதின் தலையங்கத்தை தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை.இதை தவிர அல்ஹஸனாத்தின் தலையங்கத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை அன்புடன் கூறிக்கொள்கிறேன்.



எழுதியவர்: நிர்வாகி(சத்தியமார்க்கம்.காம்) , July 12, 2006 07:46

சகோ. வஹ்ஹாபி மற்றும் அருளடியான் அவர்களுக்கு தன்னிலை விளக்கமளித்த சகோ. இப்னு இல்யாஸ் அவர்களுக்கு நன்றி. சத்தியமார்க்கம்.காம் எந்த ஓர் அமைப்பையோ அல்லது இயக்கத்தையோ சார்ந்ததல்ல என்பதை இத்தளத்திற்கு வருகை தரும் சகோதரர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றோம். (காண்க: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=150&Itemid=40 ) சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அனுப்பித்தரப்படும் ஆக்கங்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்தினரால் பரிசீலிக்கப்பட்டு எவரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்காமல் ஆக்கப்பூர்வமான வகையில் இருப்பின் அது உடனடியாக பிரசுரிக்கப்பட்டு வருகிறது. எனவே சகோதரர்கள் மீண்டும் சத்தியமார்க்கத்தை ஏதாவது இயக்கத்தோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

4: 14 எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான். அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான். மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

imran kahn.n : அல்ஹம்துலில்லாஹ்


peacetrain : எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். என்று இஸ்லா...


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மேலேயுள்ள க...


mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் திசை மாறும் இயக்கங்கள்