முகப்பு

நோன்பின் மாண்பு - குறள்கள்

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரமளான் மாதம் நம்மைத் தொட்டு விட்டது. சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் ஏராளமான ரமளான் மாத ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தேடும் பெட்டியில் நோன்பு, ரமளான் போன்ற குறிப்பிட்ட வார்த்தைகளை இட்டும் தேடி வாசிக்கலாம். (க்ளிக்கவும்) ரமளான் மாத நோன்பு பற்றி கவிஞர் இப்னு ஹம்துன் அவர்களின் சுவையான குறள்கள் இங்கே:

நோன்பை இறைவனுக்காய் நோற்கும் எவருக்கும்
மாண்பை அடையும் மனம்


ரமளான் எனுமோர் ரஹமத்தைப் பெற்றார்
அமல்கள் சிறப்ப(து) அறிவு


வானிற் பிறையாய் உதித்த ரமளானை
வீணிற் கழிப்ப(து) இழிவு


வல்லோன் வழங்கிய வாய்ப்பாம் ரமளானை
நல்லோரே பேணுவர் நம்பு


புலன்கள் அடக்கும் பயிற்சிகள் தந்து
நலம்பல செய்வதாம் நோன்பு


மாதம் இதனில் முழுமைப் பயிற்சியில்
மீதமுள்ள காலமும் மீட்பு


பொய்யும் புறமுமாய் பேச்சிருப்பின், நோன்பென்று
மெய்வருந்தச் செய்வது வீண்


ஆயிரம் மாதபலன் அற்புத ஓரிரவில்
தூயநன் நோன்பிலே துய்ப்பு


ஈகைப் பரிசை இறையிடமே பெற்றிடவே
வாகை ரமளானில் வாய்ப்பு


இறைவனின் பார்வையில் யாவுமே 'உள்'ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு


அனைவருக்கும் இனிய ரமளான் நல்வாழ்த்துக்கள்!

- கவிஞர் இப்னு ஹம்துன்

Comments:

கருத்துக்கள்   

 
j.aneess fathema
0 #1 j.aneess fathema 2010-08-14 09:12
அருள்மறை அருளப்பட்ட புனித ரமளான் மாதம், நமது உடலியல் தேவைகளுக்கு ஒரு சுயசோதனைப் பருவமாகும். பதினொரு மாதங்கள் பகற்பொழுதில் உணவு உண்ண அனுமதித்த இறைவன், இந்த ஒரு மாதத்தில் மட்டும் பகற்பொழுதில் உண்ணாமல், பருகாமல், உடல் இச்சைகளுக்கு இடம் கொடாமல் இருக்கச் சொல்கிறான்.
Quote | Report to administrator
 
 
j.aneess fathema
0 #2 j.aneess fathema 2010-08-14 09:23
புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோட ு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுக ிறது,
Quote | Report to administrator
 
 
j.aneess fathema
0 #3 j.aneess fathema 2010-08-14 09:24
இறைவனின் பார்வையில் யாவுமே 'உள்'ளில்
நிறைவாய் உரைத்திடும் நோன்பு

அனைவருக்கும் இனிய ரமளான் நல்வாழ்த்துக்கள ்!
Quote | Report to administrator
 
 
S.S.K
0 #4 S.S.K 2010-08-19 16:02
நோன்பு நோற்க நோற்றவர் நோற்றபின் நிற்க
அதற்கு தக

நாவினை பேணாமல் நோன்பினை நோற்ப்பவர் நோன்பிருந்தும்
இல்லார்க்கு நிகர்
Quote | Report to administrator
 

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்