| எனில் நானும் தீவிரவாதி தான் - வி.ஆர். கிருஷ்ணா அய்யர்! |
|
|
| வாசகர் பகுதி - வாசகர் மடல் | ||||
| வியாழன், 05 ஆகஸ்டு 2010 13:17 | ||||
கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர் விஷமத்தனமாகக் கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் ஜோஸஃப் என்பவரின் கை மணிக்கட்டை, துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையில் சிலரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்று அறிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அரசு இயந்திரங்களும் அரசியல் கட்சிகளும் நடத்திய "தீவிரவாத" அச்சுறுத்தல் நாடகங்கள் ஆச்சரியமானவை. ஒரு ஆசிரியரின் கையை வெட்டியது மிகவும் அநாகரீகமான, வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அச் சம்பவத்தினைப் போன்றே, கேரள மாநிலத்தில் சமீப காலங்களாக நடந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் எழுந்த இஸ்லாமிய விரோத கருத்துருவாக்கத் தாக்குதல்கள் ஏராளம். இதனை ஃபாஸிஸ அமைப்புகளுடன் இணைந்து கம்யூனிஸ, காங்கிரஸ் வட்டங்களும் செய்து வருகின்றன என்பதே அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல். இப் பிரச்சனைக்காகக் காத்திருந்தது போல், ஆசிரியரின் கை வெட்டப்பட்டச் சம்பவமும் அதில் சிலரும் கைது செய்யப்பட்ட உடனேயே, கேரளா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள், தலைவர்களின் வீடுகள் உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணனின் கீழ் இருக்கும் காவல்துறையால் சோதனையிடப்பட்டு ஆயுதங்கள், தீவிரவாத புத்தகங்கள், சிடிக்கள் கைக்கப்பற்றப்பட்டு விட்டதாக அவசரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நடத்தவிருக்கும் ஆகஸ்ட் சுதந்திர தின பேரணி அணிவகுப்புக்குப் பல மாவட்டங்களில் தடை போடப்பட்டது. இதற்கும் ஒரு படிமேலாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்ய நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஒருவரின் கை வெட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவலாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் அலுவலகங்கள் சோதனையிடப்படுவதும் அக்கட்சியைத் தடை செய்ய வழக்குத் தொடுக்கப்படுவதும் ஆச்சரியகரமானது என்றால், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பெயர் போன கம்யூனிஸ்டுகளின் ஆட்சியின் கீழ் இச்சம்பவம் நடந்தது என்பது அதை விட ஆச்சரியம்! கேரள மாநிலத்தில், குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் இடையிலான தாக்குதல்களில் எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூட்டை மூட்டையாக வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் இரு தரப்பினரிடமிருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இன்றுவரை, ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்டுகளின் அலுவலகங்கள் சோதனையிடப்படவோ வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதற்காகவும் படுகொலைகள் புரிந்ததற்காகவும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்படவோ இல்லை. இவ்வளவுக்கும், இந்தக் கை வெட்டப்பட்ட வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. இதுவரை அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் எத்தனையோ இருந்தும் இதுவரை அவற்றை அடிப்படையாக வைத்து அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பயங்கரவாதச் செயல்களால் தண்டனை பெற்று கேரள மாநில சிறைச்சாலைகளில் கிடக்கும் ஆர்.எஸ்.எஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களோ எண்ணற்றோர்! ஆனால், பயங்கரவாதச் செயலுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான தீர்ப்பு எதுவும் இதுவரையில் சொல்லப்பட்டதில்லை. கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்த இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்கும் வேலைகளில் கம்யூனிஸ அரசு உடன் செயல்படத் துவங்கியுள்ளது. கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்விஷயத்தில் தற்போது தன் திருவாய் மலர்ந்துள்ளார். உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், "மனித உரிமைகள் அமைப்புகள் கண்காணிக்கப்பட வேண்டும்" எனவும் "அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை" என்றும் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இதற்கிடையில், எதிரும் புதிருமான கேரள முஜாஹித் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளும் முஸ்லிம் லீக்கும் இணைந்து இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற பெயரில், "ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" ஆகிய இரு அமைப்புகளையும் விலக்கி வைத்து கூட்டமொன்றை நடத்தி, அதில் இந்த இரு அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகள் என்றும் இவற்றைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஃபாஸிஸத்தின் சதிக்குக் கம்யூனிஸ, காங்கிரஸ் கட்சிகள் தான் பலியாகி விட்டன என்றால், பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் பலியாக நாங்களும் தயார் என முந்திக்கொண்டு அறிவிப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது. தங்கள் அமைப்பைப் பார்த்து யாரும் தீவிரவாத முத்திரை குத்தி விடக்கூடாதே என்று பதைபதைக்கும் இக்கட்சிகள், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அது தொடர்பாக இரு பெரும் அமைப்புகளைப் பலியிடுவது எவ்வகையில் சரி என்று சற்றுச் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். இங்கே இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜமாஅத்தே இஸ்லாமி, இந்தியா முழுவதும் செயல்படும் ஒரு மூத்த இஸ்லாமிய அமைப்பு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோ சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள மூன்று அமைப்புகளை ஒன்றிணைத்து ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் செயல்படும் ஒத்தக்கருத்துள்ள அமைப்புகளை ஒன்றிணைத்து முழுவீச்சில் தேசிய அரசியலில் கால் பதிக்கும் முகமாக, சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அதன் ஆரம்ப விழாவிலேயே லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, முஸ்லிம் ஓட்டுகளைக் காலம் காலமாக ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம் லீக் அடக்கமுள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்குக் கிலியை ஏற்படுத்தி முழுவீச்சில் செயல்பாட்டில் இருக்கும் அமைப்பாகும்.
எனவே, இதன் உறுப்பினர்களின் செயல்வேகம், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஃபாஸிஸவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது எனில், அரசியல் கட்சி ஆரம்பித்தப் பிறகு மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பதில் ஆச்சரியமில்லை.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (13)
![]()
அதிகார போதை தலைக்கேறி விட்ட கம்யூனிஸ்ட்கள், அதை தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த நிலைக்கும் தாழ்ந்து விடுவார்கள் என்பதை கேரளா அரசியல் காட்சிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஓட்டு அரசியலுக்காக ஹிந்துத்துவா ஃபாஸிஸ்ட'களுடன் கை கோர்க்கவும் கம்யூனிஸ்ட்கள் தயங்க மாட்டார்கள் என்பதையும் அவர்களின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் உணர்த்துகின்றது. இஸ்லாமிய அமைப்பினர் இனியும் தனித்தனி அரசியல் நடத்தவதை நிறுத்திவிட்டு ஒன்று பட்டு ஒரே குடையில் நின்று செயல்பட வேண்டும். இதை உணர்ந்து செயலாற்றினாலே இந்திய அரசியலில் தாக்குப் பிடித்து நிற்க முடியும் . தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இதைப் பாடமாக எடுத்து செயல் பட்டால் மக்களுக்கு நன்மை. அடித்துக் கொண்டால் எல்லோருக்கும் தீமை.
2
August 10, 2010 09:33
ஒரு சில தினங்களுக்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி ஒருவனால் பாலியல் சேட்டைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன் அதனைத் தட்டிக்கேட்டதற்காக 8க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அந்த நபரின் முழங்கையை வெட்டி எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்த நபரின் தாய், சகோதரி உள்ளிட்டவர்களும் பலத்தக் காயமடைந்துள்ளனர்.
கைமணிக்கட்டு வெட்டி எடுக்கப்பட்டச்சம்பவத்தில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலங்களைச் சோதனையிடவும் அதனைத் தடை செய்யவும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்தப் பயங்கரவாதச் செயலுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை ஒரு சாதாரண தனிப்பட்ட தகராறு வழக்காக மூன்று பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து விஷயத்தை மூடி விட்டது. துரதிஷ்டவசமாக கேரள ஊடகத்துறையும் இவ்விஷயத்தை விவாதமாக்காமல் அமைதிகாத்து விட்டது. இது தான் தற்போதைய கம்யூனிஸத்தின் இழிவுநிலை! ஹிந்துத்துவத்தில் கரைந்து கொண்டிருக்கும் கம்யூனிஸம் இதே இரட்டை நிலைபாட்டைத் தொடருமெனில், ரஷ்யாவிலிருந்து துடைத்து எறியப்பட்டது போல், இந்தியாவிலிருந்தும் விரைவில் வேரோடுத் துடைத்து எறியப்படும். - அபூ சுமையா 3
August 10, 2010 10:46
//இதற்கிடையில், எதிரும் புதிருமான கேரள முஜாஹித் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளும் முஸ்லிம் லீக்கும் இணைந்து இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற பெயரில், "ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" ஆகிய இரு அமைப்புகளையும் விலக்கி வைத்து கூட்டமொன்றை நடத்தி, அதில் இந்த இரு அமைப்புகளும் தீவிரவாத அமைப்புகள் என்றும் இவற்றைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையை வெளியிட்டுள்ளன.//
சுயநலம், விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாதது - இவை முஸ்லிம்களிடம் மிகுதியாகி விட்டதனால் தான் இத்தகைய செயல்பாடுகள். முஸ்லிம்களிடையே அகீதா அடிப்படையிலான வேறுபாடுகள் பல இருந்தாலும் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் அனைவரையுமே கருவறுக்க துடித்துக் கொண்டிருக்கும் பாஸிச சக்திகளுக்கெதிராகவாவது சுயநலன்கள் அனைத்தையும் தவிர்த்து நமது சமுதாயம் ஒன்றுபடாதா? கட்டுரை ஆசிரியரின் வேதனையான பதிவு. திருந்துமா நம் சமுதாயம்? 4
August 10, 2010 12:41
அதிகார போதை தலைக்கேறி விட்ட கம்யூனிஸ்ட்கள், அதை தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த நிலைக்கும் தாழ்ந்து விடுவார்கள் என்பதை கேரளா அரசியல் காட்சிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஓட்டு அரசியலுக்காக ஹிந்துத்துவா ஃபாஸிஸ்ட'களுடன் கை கோர்க்கவும் கம்யூனிஸ்ட்கள் தயங்க மாட்டார்கள் என்பதையும் அவர்களின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் உணர்த்துகின்றது. இஸ்லாமிய அமைப்பினர் இனியும் தனித்தனி அரசியல் நடத்தவதை நிறுத்திவிட்டு ஒன்று பட்டு ஒரே குடையில் நின்று செயல்பட வேண்டும். இதை உணர்ந்து செயலாற்றினாலே இந்திய அரசியலில் தாக்குப் பிடித்து நிற்க முடியும் . தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இதைப் பாடமாக எடுத்து செயல் பட்டால் மக்களுக்கு நன்மை. அடித்துக் கொண்டால் எல்லோருக்கும் தீமை.
5
August 10, 2010 15:08
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைக்கும் விதமாக 'நச்'சென்று அமைந்திருந்தது, அபூசுமையாவின் ஆக்கம். மாஷா அல்லாஹ்! அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! அடுத்தவன் அடிக்கும்போது அரவணைத்து ஆறுதலளிக்க வேண்டிய சகோதர முஸ்லிம் அமைப்புக்கள் தூரநோக்கோ, ஆழ்ந்த ஆய்வுகளோ இன்றி சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டிருப்பது வேதனை தருகின்றது. இனிவரும் காலத்திலாவது நம்மவர்கள் சிந்தித்து நடப்பார்களா? முஸ்லிம்கள் அதிகமாய் உள்ள கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் சார்பில் மட்டுமின்றி நியாயத்தின் சார்பில் உரத்துக் குரலெழுப்பக்கூடிய சக்திவாய்ந்த ஊடகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும். அநீதியாளர்களை எதிர்கொள்ளத்தக்க வலிமையை, மனோதிடத்தை அல்லாஹ் நமக்கு அருள்வானாக! ரமழானில் அதன்பொருட்டு அதிகமதிகம் துஆக்களும் இறைஞ்சுவோம்; உரிய செயற்பாடுகளிலும் முனைப்போடு ஈடுபட்டு நம் சமுதாயத்தைக் காத்திரமானதாகக் கட்டியெழுப்புவோம். அன்புடன், இஸ்லாமிய சகோதரி, லறீனா அப்துல் ஹக் (இலங்கை) 6
August 10, 2010 20:56
காற்பரேட்டுகளிடம் சரணடைந்த கம்யுனிசம் இப்போது ஹிந்துத்வாவிடம் சரணடைந்துள்ளது...
கிருஷ்ணய்யர் போன்ற நியயவாங்களும் இங்கே இருப்பது கொஞ்சம் ஆறுதல்... 7
August 11, 2010 00:52
whoever is unhappy in India,
Request you to go to pakistan or Bangladesh. You will find happiness there. Indian 8
August 11, 2010 14:50
சிலர் தங்களை இஸ்லாமியர்களின் தோழர்கள் என்றும்.மற்றும் சிலர் தங்களை இஸ்லாமியரின் நண்ண்பர்கள் என்றும்.வெளிப்படையாக வெள்ளை உடையானிந்து
உள்ளத்தில் காவி சிந்தனைகொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அபு சுமையாவின் ஆக்கம்....அருமையாக உணர்த்துகிறது....அதில் நம் சமூதாயத்தை சேர்த்தவர்களே நம் சகோதரர்களை தீவிரவாதிகள் ...? என்று தீர்பளித்தது வருந்ததக்கது..நம் சகோதர்களின் இந்த போக்கு நம்மை அழிக்க துடிக்கும் பாசிச சக்திகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைத்துள்ளது....ஒருபுறம் அறியாமை ஒருபுறம்! அழியாமை!! அல்லாஹ்தான் இவர்களுக்கு நேர்வழிகாட்டி ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்த வேண்டும்....உங்களில் ஓர் இஸ்லாமிய சகோதரன் சதாம் ஹுசைன் குவைத் 9
August 11, 2010 15:22
// whoever is unhappy in India, Request you to go to pakistan or Bangladesh. You will find happiness there. Indian// Mr SUPPAN first let me remind you India is not your...... private property Secondly .... I am sure you will not justify the so called statements of Thakre & co that Mumbai is for Maharashtrians and all SUPPANS and KUPPANS ,... should go to south India and .... BHIYAA's ...North Indians should go to North India Mumbai is for Mumbaikar......etc. Dont forget brother evil thoughts and deeds should never be justified but should be condemned, hatred will bring nothing but hatred and punishment from Almighty God oneday or another. Leave this bias approach for the sake... if not for God at least for the sake of humanity and good sense to prevail.. 10
August 11, 2010 20:37
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ அபு ஹம்ஸா எழுதில் நிறைய நிறை இருந்தாலும நமது இஸலாமிய இயக்கங்களை சுட்டிகாட்டி எழுதியது தவறான கருத்து ஏன் என்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஒட்டுமொத்த இஸ்லாமிய இயக்கங்களையும் நசுக்கவேண்டும் என்று தான் பாசிச சக்திகள் திட்டம் தீட்டிகொண்டுள்ளன அவைகள் தீவரவாத இயக்கமா அல்லது மிதவாத இயக்கமா என்பது அவர்களின் நோக்கமல்லா எனவே அறிவுடைய எவரும் கையை வெட்டியதை சரிஎன்று சொல்லமாட்டார்கள் ஆனால் அதை பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சகோதரர்கள் செய்தல் அதுதவறான செயல் தான் அதை அவர்கள் திருத்திகொள்ள வேண்டும் இன்னும் அறிவுப் புர்வமாகவும் நிதானமாகவும் இந்த பாசிச சக்திகளை எதிர்கொள்ள வேண்டும் இதை pfi சகோதரர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் இப்படிசொன்னால கோளைகள் என்று சொல்வார்கள் உன்மையில் இவர்களின் செய்ல்பாடுகள் தேசியகொடியை ஏற்றினார்கள் சல்யுட் அடித்தார்கள் அரசை சோப்போடுவதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தரர்கள் (இஸ்லாம் அதை அனுமதிக்கவில்லை) ஆனாலும் இவர்களும் இன்று தீரவாத இயக்கம் இது தான்இந்தியா இதை புரிந்து ந்டந்து மார்க்க அடிப்படையில் பிரளாமல் நடந்தால் நமக்கே வெற்றி இனஷா அல்லாஹ் அலி இப்னு ஜமால் (கடையநல்லுர்) 12
August 13, 2010 18:29
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நல்ல அருமையான கட்டுரை. பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு நாங்கள் எள்ளளவும் சளைத்தவர்களில்லை என கம்யூனிஸ்டுகள் சுய பிரகடனம் செய்யும் நிலையைத்தான் இந்த விஷயத்தில் கேரளத்தில் நாம் கண்டது. கையை வெட்டியதில் நியாயத்தையும் அநியாயத்தையும் காரணம் காட்டுபவர்கள் ஒரு பேராசியர் என்ற நிலையில் ஒரு நபரின் பொறுப்பு என்பது ஒரு வருங்கால சமூகத்தை கட்டமைப்பதில் இருக்கிறது என்ற நிலையை மறந்து அவர் செய்த இழிநிலையை மறைக்க பார்க்கின்றனர். மேலும், ஒரு கல்லூரி நிர்வாகம் அந்த கேள்வித்தாளை வெளியிட்டதும் சாதரணமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாதது. ஆனால், இன்று அவை அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. கையை வெட்டியது மட்டுமே அதுவும் ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரில் குற்றச்சாட்டு வந்தவுடன் அனைவரும் ஏகோபித்த குரலில் அதை எதிர்க்க தயாராகிவிட்டனர். ஒரு கையை வெட்டியதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும், ஒரு இயக்கமும் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட ஏற்பாடுகள் நடைபெறுவது என்பது நகைப்பிற்கிடமானது. அரசியல் கட்சிகளும், அரசு இயந்தியரங்களும் இவர்களின் வளர்ச்சியை கண்டு பயப்படுவதையே காட்டுகிறது. கட்டுரையாசிரியர் சொன்னது போல, முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி சக முஸ்லிம் அமைப்புகளை எதிர்த்து கூட்டம் போடுவதும், தடை செய்ய ஆதரவளிப்பதும் சமூகத்தின் அவலநிலையையே காட்டுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய் தமிழகத்தில் கூட கேரளாவில் பிரசுரித்ததை கவர்ஸ்டோரி போட்ட இஸ்லாமிய இதழ்களும் இருக்கத்தான் செய்கின்றன. எங்கே தங்கள் பெயரும் அடிபட்டு விடுமோ என அஞ்சிய ஒரு பிரபல தமிழ் முஸ்லிம் வார இதழ்கூட இதை கண்டித்து கட்டுரை எழுதியது வெட்கக்கேடானது. செய்தவர்கள் முஸ்லிம்கள் தானா? பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சகோதரர்கள் தானா என்ற ஒரு அறிவும் இல்லாமல் கேரளா போலீஸ் சொன்னதையும், அங்குள்ள பத்திரிகைகள் பிரசுரித்ததையும் வாந்தி எடுத்தது போல (ஸாரி இந்த வார்த்தையை உபயோகித்ததற்கு...) தான் இருக்கிறது. மொத்தத்தில் முஸ்லிம்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அவர்களுக்கு பலிகடாவாக சில சமுதாய இயக்கங்களும், அதன் தலைவர்களும் இருப்பதுதான் கேவலத்திலும் கேவலம். சகோ. அலி இப்னு ஜமால், உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்தில் தேசிய கொடி ஏற்றும் போது சல்யூட் அடிக்கிறானா எனப் பாருங்கள். நமக்கு மார்க்கம் தான் முக்கியம் என்று சொல்லி தயவு செய்து அவனது படிப்பை நிறுத்தி விடாதீர்கள். நீங்கள் படிக்கும் போது சல்யூட் அடிக்கும் நேரம் தேசியக் கொடியை அல்லாஹ்வுடைய அந்தஸ்தில் வைத்துதான் சல்யூட் அடித்தீர்களா? நான் அப்படி அடிக்கவில்லை என்பதற்காகவே இதை கூறுகிறேன். முஹம்மது பைசல் சவுதி அரேபியா 13
August 15, 2010 13:00
கருத்து எழுதுக :
|