| உண்மையைத் தேடி... (மின்னஞ்சல் மூலம் பணம்?) |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | |||||
| சனி, 01 ஜூலை 2006 07:41 | |||||
|
சென்ற தொடரில் ஆதாரமில்லாத ஒரு கனவை அடிப்படையாகக் கொண்டு எப்படி ஒரு மூடத்தனமான செய்தி பரப்பப்படுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் தீமைகளையும் அதன் அபத்தங்கள் என்ன என்பனவற்றையும் கண்டோம். இப்போது மனிதனின் பேராசைக் குணத்தை மையமாகக் கொண்டு ஒரு பொய்ச்செய்தி எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதையும் அதன் அபத்தங்களையும் ஆராய்வோம்.
உங்களுக்கு தோராயமாக கீழ்க்கண்ட தொனியில் இவ்வாறு மடல்கள் வந்திருக்கலாம்.
அதே போல்,
இது போன்ற பல தயாரிப்புகளை இலவசமாகப் பெறுவதற்கு 'நல்ல' நோக்குடன், செய்தியின் நம்பகத்தன்மையை ஆராயாமல் உங்கள் நண்பர் இதே தொனியில் அமைந்த மடல்களை உங்களுக்கு அனுப்பி இருப்பார். மின்மடல் மூலமாகப் பணப்பரிமாற்றம் செய்வது என்பதெல்லாம் இயலாத காரியம் மட்டுமன்றி செய்யக் கூடாத காரியம். ஏனெனில் மின்மடலின் கட்டமைப்பே அப்படி. நாம் எவரென்று நினைத்து அனுப்புகிறோமோ அவர்தான் மின்மடலைப் பெறுகிறார் என்பது மிகச்சரியாக நிரூபிக்க இயலாது. அப்படியே இயலும் என்றாலும் ஒருவருக்கே ஏகப்பட்ட மின்மடல் முகவரிகள் இருக்கலாம். அவரே தனக்குத்தானே மடல் அனுப்புவதால் இதனால் அறியப்படும் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. மேலும் பில்கேட்ஸுக்கு (மட்டுமல்லாது சாம்சங் மற்றும் இன்னபிற இது போன்ற மடல் குறிப்பிடும் நிறுவனத் தலைவர்களுக்கு) உருப்படியான வேறு வேலைகள் எல்லாம் இல்லையா என்ன? இது ஒருவேளை உண்மையாகவே இருந்து இதனால் விளம்பரம் கிடைப்பது ஓரளவுக்கு உண்மை என்றாலும், இதனால் விளையும் பணிச்சுமைகள் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை எளிதில் புறந்தள்ளி விடுவதால் இது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை. இம்மாதிரி மடல்களை நம்மில் சிலர் நமக்குத் தெரிந்தவர்களுக்கு நமக்கு அனுப்பி வைத்தவரின் 'நல்ல' எண்ணத்தைத் தொடர்ந்து பரப்புவதாக எண்ணி அனுப்பி வைக்கிறோம். இம்மாதிரி மடல்களை எழுதுதலும் அதனைப் பரப்பத் தூண்டுதலும் மனிதனின் பேராசையைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மிகப்பெரிய மோசடியாகும். இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பொய்யைப் பரப்புதலும் பொருள் வளங்களை வீண் விரயம் செய்வதும் மிகப் பெரும்பாவங்கள் ஆகும். அதுவும் தான் இப்படி ஒரு பாவம் செய்வது அறியாமலேயே பல சகோதரர்கள் இந்த வலையில் விழுந்து விடுகின்றனர். இதனைக்குறித்தும் சகோதரர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இதே போன்று சகோதரர் ஒருவருக்கு திருமதி. அரஃபாத் (?) அவர்களிடமிருந்து வந்த ஒரு ஏமாற்று மின்னஞ்சல் பற்றி இங்கே படிக்கலாம். இத்தகைய மின்மடல்கள் குறித்த மேலதிக விரிவான விளக்கங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தளத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். கட்டுரை ஆக்கம் : அபூஷைமா < மடலைப் பிரதியெடுத்துப் பரப்புதல் | மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் >
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (2)
![]()
Assalamu Alaikkum,
Fake emails like the one mentioned in the above article are becoming quite common nowadays, the intention of which is nothing but mischievousness. This kind of unncecessary and irating communications are prevalent not only in emails but in SMS too. One of my friends received anA SMS message a week back, saying 'Etisalat Anniversary Offer. Forward this message to 10 people and get your mobile recharged with 25 dirhams free'. My innocent friend thought that it is true and forwarded the message to 10 people, wasting 2 dirhams unneccessarily and started waiting for 25 dirhams free recharge for his cell phone. These kind of bogus messages in the name of reputed companies make people annoyed and exasperating! People must know etiquettes and courteousness regardless of whether it's email or SMS or whatsoever the medium.
1
December 16, 2006 11:10
எனக்கு விதவிதமான மடல்கள் வருகிறது. அதாவது 'என்னிடம் எண்ணிலடங்கா மில்லியன் டாலர் உள்ளது அதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவைகளை அனுப்பி வைக்கவும் அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு இத்தனை லட்சம் மில்லியன் விழுந்துள்ளது'.
என்ன சொல்லி அழுவது இது போன்ற கூத்தாடிகளை நினைத்து.
2
December 17, 2006 08:02
கருத்து எழுதுக :
|