| திட்டச்சேரியிலிருந்து ஒரு சர்வதேச சாதனைச் செல்வி |
|
|
| செய்திகள் - தமிழகச் செய்திகள் | |||
| வியாழன், 08 ஜூலை 2010 09:47 | |||
|
இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார். ஆண்டுதோறும் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழக உலகளாவியத் தேர்வுகள்(University of Cambridge International Exams - CIE)' மையம் நடத்தும் 'உலகளாவிய உயர்நிலைப் பள்ளிக் கல்வி(International General Certificate of Secondary Education)'யின் 2009ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 2009இல் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 2010இல் வெளியாகின. உலகளாவிய ஒப்பீட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன. மேற்காணும் உலகளாவிய தேர்வுக்கு, மூலாதாரப் பாடத்திட்ட (The core syllabus) முறையில் 5 கட்டாயப் பாடங்களைத் தேர்வு செய்து "இ" படிநிலை விருதை வெல்லும் எளிய வழியையே பெரும்பாலான மாணவ-மாணவியர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், "அ-தாரகைப் படிநிலை விருதை வென்றெடுப்பதற்காக ஆழமான படிப்புத் தேவைப்படும் பத்துப் பாடங்கள் அடங்கிய மீநிலைத் (Advanced syllabus) திட்டத்தை எனது தேர்வாகக் கொண்டேன்" என்கிறார் சல்மா. நினைத்தபடியே சிறப்பாகத் தேர்வெழுதி பத்துப் பாடங்களில் ஒவ்வொன்றிலும் 95+% பெற்றிருப்பதால் செல்வி சல்மா, "அ" தாரகை(A Star) விருது வழங்கப் பெற்றுள்ளார். இது சர்வதேச அளவிலான சிறப்பான விருதாகும். செல்வி சல்மாவின் பிற சாதனைகள்:
செல்வி சல்மா, தம் பெற்றோருடன் செசல்ஸ் தீவில் வசித்து வருகிறார். படிப்பும் அங்கேதான். ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி விடுப்பின்போது தம் குடும்பதினரோடு தம் தந்தை முஹம்மது ஃபாரூக்கின் ஊரான திட்டச்சேரிக்கு வந்து போவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு விடுப்பில் திட்டச்சேரிக்கு வந்திருக்கும் வேளையில், "எழுதுவதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. எனது புதினமும் (Novel) ஒருநாள் பதிவேறும்" என்று உறுதியுடன் கூறுகிறார் காமன்வெல்த் நாடுகளுக்கான கட்டுரைப் போட்டிகளில் மும்முறை பங்குபெற்ற செல்வி சல்மா. சாதனைச் செல்வி சல்மாவை சத்தியமார்க்கம்.காம் உளமாற வாழ்த்துகிறது! மூலம் : P.V. Srividya - The Hindu
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (79)
![]()
ASSALAMU ALAIKUM
CONGRATS SISTER, BE A GUIDE OF OUR MUSLIM STUDENTS TO BECOME LIKE YOU IN FUTURE. THANKS 1
July 08, 2010 22:19
CONGRATULATIONS MY DEAR SISTER, KEEP IT UP! MUSLIM STUDENTS MUST TAKE ROLE MODEL FROM HER.
BY MUSLIM BROTHER J.AMEER ALI,NAMBUTHALAI. CAMP-KSA. 2
July 09, 2010 19:38
Alhamthulillah, We pray to Allah that He may fulfill her all thoughts. AAmin
3
July 10, 2010 16:33
Assalamu alaikum dear all..,CONGURATULSTION MY DEAR SUNSHINE SISTER..,May allah bless u...with your life full of happiness and success..,
5
July 10, 2010 19:10
ASSALAMU ALAIKUM
ALHAMDULILLAH AMAZING ,EXCELLENT ACHIEVEMENT CONGRATS KEEP IT UP WISHING YOU ALL THE BEST 6
July 11, 2010 01:39
Congratulations..... May Allah shower his glory upon you...
7
July 11, 2010 15:59
வாழ்த்துக்கள் சகோதரி... உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. மேலும் பல வெற்றிகள் பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்...
8
July 11, 2010 18:05
Alhamdhulillah,
Dear sister, MAY ALLAH will give you all success in your life. 9
July 11, 2010 23:17
Congratulation. Excellent. May Allah give you more achievement in future.
10
July 14, 2010 19:39
சாதனை செல்வி சல்மா,
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன் சஹீது தீன் எஸ் எஸ் மன்ஜில் திட்டச்சேரி 12
July 16, 2010 09:14
subahanallah .Dear sister, MAY ALLAH will give you all success in your life
13
July 16, 2010 10:14
CONGRATS ,
BE A GUIDE OF OUR MUSLIM STUDENTS TO BECOME LIKE YOU IN FUTURE. MAY ALLAH WILL GIVE YOU ALL SUCCESS IN YOUR LIFE.. JAMALHASEENA SINGAPORE 14
July 18, 2010 08:42
CONGRATS ,
BE A GUIDE OF OUR MUSLIM STUDENTS TO BECOME LIKE YOU IN FUTURE. MAY ALLAH WILL GIVE YOU ALL SUCCESS IN YOUR LIFE.. Haj-Noormohamed Brunei 15
July 18, 2010 13:06
Masha Allah, by Allah's grace sister Salma has achieved the highest status among all musim sisters worldwide. She has proved her ability by creating an example to our youngsters. She has also created a record that we too can achieve anything on par with anyone worldwide. Insha Allah, Allah will give her more and more success in all her achievements & efforts. Indeed, everyone of us should pray to Allah to give this young lady & all his family members a long life, souind health, more an moe prospertiy to lead a halal way of life to show a model to others, Aameen.
16
July 19, 2010 10:00
வாழ்த்துக்கள் சகோதரி... உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. மேலும் பல வெற்றிகள் பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்...
17
July 19, 2010 20:04
சகோதரி திட்டச்சேரி சல்மா சாதனைகள் பல வென்று இமயமென உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். சல்மாவுக்கு வாழ்த்துக்கள்.
18
July 21, 2010 22:22
Assalaamu Alaikkum all muslim brothers & sisters.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் சகோதரி சல்மா அவர்கள் நம் சமுதாயத்திற்கு நல்ல ஒரு பெயரை வாங்கித்தந்துருக்கிறார். சகோதரி சல்மா மேன்மேலும் நல்ல பல சாதனைகளை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்...! 19
July 23, 2010 10:58
அஸ்ஸலாமு அலைக்கும்,
முஸ்லிம் பெண்கள் எல்லாம் படிக்க மாட்டார்கள்,இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது என்று முத்திரை குத்துவோற்கு பாடம் புகுத்துவது போல் இச்ச்கோதரி செய்து சாதனை படைத்து இருக்கார். வாழ்த்துக்கள் சகோதரி.. இஸ்லாமிய மார்க்க கல்வியையும் படிக்க வேண்டுகோளோடு வாழ்த்துகிறேன். 21
July 30, 2010 03:17
asslaamu alaikkum
very good ma. alla mealum mealum unaku rahameathai kodupan ma. plz keep it up.. 22
August 21, 2010 21:47
Assalamu alaikum,
Dear Sister, may Allah God plus you. Alhamdulillah 23
August 22, 2010 13:32
சகோதரி திட்டச்சேரி சல்மாவுக்கு வாழ்த்துக்கள் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
24
August 23, 2010 02:23
சகோதரி சல்மா அவர்கள் மென்மேலும் சர்வதேச அளவில் உயர்நிலைக்கு சென்று பல சாதனைகள் புரிய அள்ளாஹ் அவருக்கு அருள் புரிவானாக!
25
August 26, 2010 12:51
அஸ்ஸலாமு அலைக்கும்,
முஸ்லிம் பெண்கள் எல்லாம் படிக்க மாட்டார்கள்,இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது என்று முத்திரை குத்துவோற்கு பாடம் புகுத்துவது போல் இச்ச்கோதரி செய்து சாதனை படைத்து இருக்கார். வாழ்த்துக்கள் சகோதரி.. இஸ்லாமிய மார்க்க கல்வியையும் படிக்க வேண்டுகோளோடு வாழ்த்துகிறேன் 26
September 01, 2010 23:07
சகோதரி சல்மா அவர்கள் மென்மேலும் சர்வதேச அளவில் உயர்நிலைக்கு சென்று பல சாதனைகள் புரிய அள்ளாஹ் அவருக்கு அருள் புரிவானாக
29
February 03, 2011 11:53
வாழ்த்துகள் எங்க ஊர் தங்க மகளுக்கு ...!!பெருமிதத்தின் உச்சியில் உள்ளோம் ..!!நீண்ட நாள் வாழ்ந்து பல சாதனைகள் புரிந்து நீடுழி வாழ வாழ்த்துகிறேன் ...மாசா அல்லாஹ்...!!!
31
February 21, 2011 16:39
பெண்களை அடிமை படுத்துகிறது என்று முத்திரை குத்துவோற்கு பாடம் புகுத்துவது போல் இச்சகோதரி செய்து சாதனை படைத்து இருக்கார். வாழ்த்துக்கள் சகோதரி.
32
February 21, 2011 17:41
சகோதரி சல்மா அவர்கள் நம் சமுதாயத்திற்கு நல்ல ஒரு பெயரை வாங்கித் தந்திருக்கிறார். வாழ்த்துக்கள். இஸ்லாமிய மார்க்க கல்விகளோடு சகோதரி சல்மா அவர்கள் மென்மேலும் சர்வதேச அளவில் உயர்நிலைக்கு சென்று பல சாதனைகள் புரிந்து திட்டச்சேரி தங்க சகோதரி நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
33
February 22, 2011 06:21
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. சகோதரியின் மிகப்பெரிய சாதனைக்கு எங்களின் துஆக்கள். மென்மேலும் வளர அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
35
February 27, 2011 17:11
Alhamthulila.May ALLAH The most Merciful,will give you all sucess in life.I will pray to ALLAH to fulfil all your HALLAL DREAMS.
37
September 19, 2011 20:57
Congratulations..... May Allah will give you all success in your future life
38
October 09, 2011 12:04
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. வாழ்த்துக்கள் சகோதரி.
39
October 12, 2011 16:23
Asalamu alaikum.
Congratulation I Dont know hw to explain my thout. realy i proud bcz my home town girl doing this. 40
October 14, 2011 11:56
Please avoid displaying womens photo in the articles. It will induce bad thought in us. Shaitain will deceive us by womens beauty. Womens are not shaitain but shaitain will use their beauty as the medium to spoil the men like how fisherman use fishing net catch fish. Numerous hadith on this. It will be safety for our sisters also not displaying their photos.
please avoid it all the arctiles for Allah's sake. 42
October 25, 2011 07:52
சகோதரர் முஸ்லிம், நபிகள் நாயகம் வலியுறுத்திய வழியில் ஹிஜாப் அணிந்து மிகவும் கண்ணியமாக உள்ள இந்த படமே உங்களுக்கு தவறான எண்ணங்களைத் தூண்டுகிறது என்றால், சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்... இன்றைய சூழலில் நீங்கள் வீட்டிலிருந்து வெளியே கூட செல்ல இயலாது.
ஏன் வீட்டில் இருந்தால் ஒரு ஹிஜாப் அணிந்த பெண் முன்னால் நீங்கள் செல்ல இயலாது... (உங்கள் கூற்றுப்படி Womens are not shaitain but shaitain will use their beauty as the medium to spoil the men) நீங்கள் சிறிது மனப்பயிற்சி செய்து கொள்வது சிறந்தது. நேரில் பார்க்கும் ஹராமானவை எல்லாம் புகைப்படத்திலும் பார்ப்பது ஹராம் & the other way around (vice-versa) என்று எளிமையாக விளங்கிக் கொண்டால் உங்களின் குழப்பம் தீரும் என நினைக்கிறேன். 43
October 25, 2011 18:40
By the name of giving answer, we should not always trying to justify ourselves on whatever we are doing. I never said any disrespectful comments about hijab. Womens identity should be protected for their safety and men's unnecessary attentions towards their appearance. Even if we go out, our gaze should be down when we crossing a women whether she wearing hijab or not. Photos can be viewable closely again n again and also there are chances of misusing it. This is how the current internet era spoiling our life. Whether wearing hijab or not but still the beauty of women will get exposed through their facial expressions. Better avoid, it will be good for both men n women.
We are weak creature of Allah, no one can say my heart is clean I will see all the womens like my sister. Ofcourse, we should treat them like our sisters but shaitain wont let us to do it. 44
October 27, 2011 06:43
Ofcourse Nabi(SAW) insisted womens to wear hjiab but he never give permission to display their hijab photos in the net. How many hits you will get on your site that much times the photos will be viewable.
We use to say, at this time this is unavoidable and no can escape from it. This shows our weakness of Imaan. With this imaan if we compare the centuries ago lived Waliullah's life then our mind n heart won't accept their life time ibaadath. When we read those incidents how they made their Ibaadath then we will crack jokes on them and started saying that those are nothing but fake incidents. Bcoz we are comparing our present time(full of vulgarity,exposing via iphone,ipad...)conditions with the pious environment in the past times. 45
October 27, 2011 07:00
சகோதரர் முஸ்லிம், எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் சிரமம். தமிழில் டைப் செய்யுங்களேன்.
//Even if we go out, our gaze should be down when we crossing a women whether she wearing hijab or not. Photos can be viewable closely again n again// ஒரு பெண்ணை "நேரில்" பார்க்கும் போது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்திருக்கும் நீங்கள், ஃபோட்டோவை மட்டும் மீண்டும் மீண்டும் ஒருவர் பார்க்க இயலும் என்று வாதிடுவது ஏன்? இதற்கும் அதே விதி தானே? அதே ஷைத்தான் தானே? அதே நற்கூலி தானே? //Better avoid, it will be good for both men n women.// இணைய தளங்களில் புகைப்படங்களை தவிர்ப்பது சிறந்த ஒன்று என்ற கூற்றிற்கு நானும் உடன்படுகிறேன். ஆனால், உங்களின் மேற்கண்ட கூற்றை சிந்தித்துக் கொள்ளுங்கள். நேரில் ஒரு மனநிலை, போட்டோவில் இன்னொரு மனநிலை என்றில்லாமல் சீரான மனப்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கும் எனக்கும் துணை செய்வானாக! 46
October 27, 2011 12:12
Assalamu Alaikum
Dear Brothers Without offending anyone here as per one Hadith INNAMAL AAMAAL BIN NIYAA , deeds are judged based on intention.......we need to consider the comments pointed by Muslim specially the one below, // Photos can be viewable closely again n again and also there are chances of misusing it. This is how the current internet era spoiling our life.// We need to review and respect it and avoid them in the net that too during the era its imperative. as we are muslims answerable to Allah for everything as per our faith Islam. And Allah knows best. 47
October 27, 2011 12:42
I dont think I am a perfect muslim. As you said, I should improve myself to be a good mo'umin.Insha Allah.
All my comments I have mentioned are in common terms as 'us' 'we'. Bcoz not all of them are good like you and there are many people are just average like me. In many islamic sites, for women related articles(eg.,health,politics,education,shariah..), they have just google some pretty muslim girl photo and put it in the article header without the girl's permission. We won't put our own wife or sister photo to show the article belongs to women but we dare to put someone else sister or wife or daughters photo. We need to answer Allah for this. In my opinion, there is no need for any human image in the article. Better we avoid it. Our womens are like pearls n diamonds ,not for display to everyone. 48
October 28, 2011 06:09
தொடர்ந்து இஸ்லாமிய பெண்களை வழிகேட்டுக்கு அழைத்துச் செல்பவர்களாகவும், இஸ்லாமை பொய்யான வகையில் பிரச்சாரம் செய்பவர்களாகவும் இருக்கும் சத்திய மார்க்கம் இந்த கட்டுரையை போட்டு, முஸ்லீம்களின் ஆதரவு இருப்பது போல பின்னூட்டங்களையும் வெளியிட்டு வழிகேடு செய்திருக்கிறது.
33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; 33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். முகத்தை காட்டாமல் நிகாப் அணிய ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லீம் பெண்மணிகள் போராடிகொண்டிருக்கும்போது முகத்தை காட்டி முஸ்லீம் பெண்களின் புகைப்படத்தைபோடுவதையே வேலையாக வைத்திருக்கிறது இந்த தளம். அல்லாஹ்வுக்கு அஞ்சிகொள்ளுங்கள். 49
November 06, 2011 00:35
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே.. ஒரு விஷயத்தைப் பற்றி மாற்று கருத்து கூறுவது, அழகான முறையில் சுட்டிக் காட்டுவது என்பது வேறு விஷயம் , அதற்காக ஒரு தளத்தின் செயலையும் நோக்கத்தையும் குறை கூறுவது அதை விடவும் மிகப் பெரிய தவறும், அவதூறும் ஆகும் என்பதை மறந்து விடாதீர்கள்.(16:125, 4 : 159) அல்லாஹ் நோக்கத்தையும் எண்ணங்களையும் அறிந்து தீர்ப்பளிப்பவன் மட்டுமின்றி இது போன்ற வார்த்தைகளுக்கும் கேள்வி கேட்பவன் ஆற்றல் மிக்கவன்,மன்னிப்பவன் தண்டிப்ப்வன் (50:16-17-18) ( 2 : 186 ) நான் தொடர்ந்து சத்தியமார்க்கம்.காம் தளத்தின் ஆக்கங்களை பார்த்து வருகிறேன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகளோ மாற்று கருத்துக்களோ இருக்கலாம். ஆனால் அவர்கள் பெண்களை வழிகேட்டுக்கு கொண்டு செல்லும் விதமாக செயல்படுகிறார்கள் என்பது முற்றிலும் தவறான வாதம் ஆகும். நீங்களும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.மூறையாக சுட்டிக் காட்டுங்கள் அவர்கள் பரிசீலைனை செய்து தக்க நடவடிக்கை எடுத்தால் அது அவர்களுக்கு நல்லது அவர்கள் அதை செய்ய தவறினாலும் அல்லாஹ் உங்களை கேள்வி கேட்க மாட்டான் என்பதை மறக்காதீர். அதே போல் உங்கள் வார்த்தைகளுக்கும் கேள்வி உண்டு என்பதை மறுக்காதீர். முறையாக தூய நோக்கத்துடன் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளீரா? ஒரு முஸ்லிம் சகோதரன் பிறருக்கு நன்மை நாட வேண்டும் அதை நாடாமல் இப்படி கூறுவதும் வழிகேடல்லவா? சிந்தியுங்கள்..,,, 50
November 06, 2011 18:03
33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்;
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; ivai irandu vasanangalukkum enna porul? 51
November 08, 2011 16:56
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
தவறு யார் செய்திருந்தாலும் அது திருத்தப்பட வேண்டும். மார்க்க கருத்துகளில் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் அவற்றை ஆய்வுசெய்து உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை! கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் தமது கருத்தே சரியென முரண்பிடித்து மாற்றுக் கருத்துடையோரின் மீது வரம்பு மீறி அவதூறாக எழுத்து வன்முறைத் தாக்குதல் சரியல்ல! இவை கண்டிக்கத்தக்கவை. //முகத்தை காட்டாமல் நிகாப் அணிய ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லீம் பெண்மணிகள் போராடிகொண்டிருக்கும்போது முகத்தை காட்டி முஸ்லீம் பெண்களின் புகைப்படத்தைபோடுவதையே வேலையாக வைத்திருக்கிறது இந்த தளம்.// - சகோதரர் நிஜாமுத்தீன். முஸ்லிம் பெண் முகம் மறைத்திட வேண்டும். இதுதான் முழுமையான ஹிஜாப் முறையாகும் என்பதற்கு, முகம் மறைத்து ஹிஜாப் அணிந்திட ஐரோப்பாவில் முஸ்லிம் பெண்கள் போராடி வருகின்றனர் என்கிற செய்தியை எடுத்தெழுதியிருப்பது மார்க்க சான்றுகளுக்கு வலுச் சேர்க்காது! முகம் மறைத்திட வேண்டும் என்பது, போராடும் பெண்களின் கருத்தாக இருக்கும். அவற்றை மற்றப் பெண்கள் மீது திணித்தல் கூடாது! ஏனெனில், முஸ்லிம் பெண் கட்டாயமாக முகம் மறைத்திட வேண்டும் என்று வலியுறுத்த குர்ஆன், சுன்னாவில் போதிய சான்றுகள் இல்லை! முகம் மறைத்திட ஆதாரங்கள், உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் திரிந்தது போல் திரியாதீர்கள். (அல்குர்ஆன் 33:33) நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் தங்கள் முந்தானகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கும், நோவினைச் செய்யப்படாமல் இருப்பதற்கும் இது சுலபமானதாகும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59) மேல்கண்ட வசனங்களை மையப்படுத்தி பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது. என்றும் செல்ல நேர்ந்தால் முகம் மறைத்தல் அவசியம் என்றும் கூறுகின்றனர். அதிலும், 1) முகம் முழுமையாக மறைத்தல், 2) இரு கண்கள் தவிர முகம் மறைத்திட வேண்டும், 3) ஒரு கண் தவிர முகம் மறைத்திட வேண்டும். என மூவகையான கருத்துகள் நிலவுகின்றன. இதில் உறுதியான நிலைப்பாட்டைக் காணமுடியவில்லை. உளூச் செய்யும்போது இரு கண்களையும் முகத்துடன் சேர்த்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, முகத்தில் அமையப்பெற்ற கண்களும் முகத்தின் ஒரு பகுதியாகும். ஒரு கண் வெளிப்பட்டாலும் அது முகம் மறைத்தலை முழுமைப்படுத்தாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முகம் மறைத்தல் இல்லை என்பதற்கான ஆதாரங்கள், (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:30) இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:31) நம்பிக்கை கொண்டோரை நோக்கி மேற்காணும் வசனங்கள் கூறுவது: ஆண், பெண் இருபாலினத்தாரும் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். ஓர் ஆணின் முகம் திறந்திருப்பதால் முகத்தைச் சந்திக்காமல் தவிர்த்திட பெண் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஒரு பெண்ணின் முகம் மறைத்திருந்தால் அங்கு பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. பிறகு ஏன் பார்வையைத் தாழ்த்த வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடை அறிந்த பிறகு, அவர்களது அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். (அல்குர்ஆன் 24:31) 24:31வது வசனத்தில் இடம்பெறும் மேல்கண்ட தொடரில், ''ஜீனத்'' என்கிற வாசகத்துக்கு அழகு அல்லது அலங்காரம் எப்பொருளைக் கொண்டாலும் ஒரு பெண் முகம் உள்பட தம்மை முழுமையாக மறைத்துக்கொண்டால் ''வெளிப்படுவதைத் தவிர'' என வசனம் இயல்பாக வெளிப்படும் பகுதியைக் குறிப்பிடுகின்றதே, இதை மையப்படுத்தி பெண்ணின் முகம் வெளிப்படலாம் என்று கூறுகின்றனர். ஆகவே, முஸ்லிம் பெண் முகம் மறைத்தல் என்பதில் இருவிதமான கருத்தோட்டங்கள் உள்ளன. ஒரு பெண் தாமாக விரும்பி முகத்தை மறைத்தால் அது கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாருக்குமில்லை! ஒரு பெண் முகம் மறைத்திட குர்ஆன், சுன்னாவில் ஆதாரமில்லை! அதனால் முகம் மறைக்கத் தேவையில்லை எனக் கருதினால் அதை அங்கீகரிக்க மாட்டோம் என்று தடுத்திட எவருக்கும் அதிகாரமில்லை! இங்கு எடுத்தேன், கவிழ்த்தேன் என காரணமின்றி சத்தியமார்க்கம் இணையதளம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த இழையில் பதிவுசெய்யப்பட்டுள்ள சகோதரியின் புகைப்படம் எந்த வகையிலும் ஹிஜாபின் கண்ணியத்தைக் குறைப்பதாக இல்லை! முறையான ஹிஜாப் அணிந்தே புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அடையாளம் அறிந்திட காதுகள் வெளிப்பட வேண்டும். அதனால் முஸ்லிம் பெண் முகம், இரு காதுகள் தெரிய புகைப்படம் எடுத்தாலே ஆவணங்கள் பதிவுசெய்யப்படும் என்று வலியயறுத்தும் இந்திய அரசின் சர்ச்சைக்குரிய வாதமும் இங்கு இல்லை! புகைப்படத்தில் சகோதரியின் காதுகள் மறைக்கப்பட்டுள்ளன. பெண்களை வழிகேட்டுக்கு அழைத்துச் செல்லல், இஸ்லாமைப் பற்றிய பொய்யான பிரச்சாரம் என்றெல்லாம் சத்தியமார்க்கம் இணையதளத்தின் மீது அவதூறு வார்த்தைகளை எழுதியுள்ள இம்மாதிரியான அனர்த்தமான மறுமொழிகளை அனுமதிக்காமலிருப்பதே கண்ணியம்! அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று எழுதி முடித்திருக்கும் இந்தச் சகோதரர், தமக்கு இறையச்சமுள்ளதா? என சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும். எழுதியவற்றில் முறையான எதிர் கருத்து விமர்சனம் வந்தால் மீண்டும் தொடருவோம் இன்ஷா அல்லாஹ்! 52
November 08, 2011 22:36
சகோ. muslim.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் திரிந்தது போல் திரியாதீர்கள். (அல்குர்ஆன் 33:33) அதே போல, இந்த வசனத்திலும் அவர்கள் வெளியே அலைந்து திரியலாம் என்று பொருள் எடுக்கும்படியாக பொருள் கூறவியலுமா? சத்தியமார்க்கம் தளத்துக்கு ஜால்ரா அடிக்கும் கருத்துக்களை மட்டும் பதியவும். எதிர்கருத்துக்களை பதிய வேண்டாம் என்பதையும் இங்கே ஒரு நிபந்தனையாக போட்டுவிட்டால் இன்னும் நல்லது. 53
November 10, 2011 16:46
அன்பான வாசகர் நிஜாமுதீன் அவர்களுக்கு,
நீங்கள் குறிப்பிட்டுள்ள இறைவசனம் 33:33 பெண்களை வீட்டுக்குள் சிறை வைக்கச் சொல்வதாக நீங்கள் விளங்கியிருப்பீர்களாயின் அது தவறாகும். எப்படித் தவறு என்பதை அதே அத்தியாயத்தின் 28லிருந்து 32வரையுள்ள வசனங்கள் விளக்கும். அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டுக் கூடுதலாக http://www.satyamargam.com/1563 எனும் சுட்டியில் உள்ள 'திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்' கட்டுரையில் காணப்படும் சான்றுகளுக்கு மறுப்பேதும் இருந்தால் அவற்றை உரிய முறையில் எழுதுங்கள். நன்றி! 54
November 10, 2011 17:50
In many islamic sites, for women related articles(eg.,health,politics,education,shariah..), they have just google some pretty muslim girl photo and put it in the article header without the girl's permission. We won't put our own wife or sister photo to show the article belongs to women but we dare to put someone else sister or wife or daughters photo. அன்புச் சகோதரர் muslim, இங்குப் பதியப்பட்டிருக்கும் நிழற்படத்தை எடுத்தவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ராஜ் என்பவர். கண்ணியமான இந்தப் படம், சகோதரி சல்மாவின் விருப்பத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவின் மூலச் செய்தி 'தி ஹிண்டு' ஆங்கில நாளிதழின் இணைய தளத்தில் 5 ஜூலை 2010 அன்று வெளிவந்ததாகும். சகோதரியை நேர்கண்டவர் ஸ்ரீவித்யா என்பவர். சுட்டி : http://www.hindu.com/2010/07/0...940200.htm ஆங்கிலத்தில் இருந்த அச்செய்தியை நம் சகோதரிகளின் கல்விக்கான ஊக்கத் தகவலாகக் கருத்தில் கொண்டு தமிழில் தரப்பட்டு, செய்தியின் இறுதில் மூல விபரமும் கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 55
November 10, 2011 19:09
Nowayds, our muslim sisters are the victims of current era online communications. Even they themselves fail to realise the future consequences. Atleast, we should take some measures to safeguard their identity to protect their purity of iman.
A women's beauty is in her face,it may induce anyone to do anything. There is no need to debate or quarrel on these things. We should consider the issues practically. May Allah guide everyone of us in His right path. Aameen. 56
November 11, 2011 11:38
விளக்கம் அளித்த சத்தியமார்க்கம் சகோதரர்களுக்கு நன்றி
33.33 இல் உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் திரிந்தது போல் திரியாதீர்கள். (அல்குர்ஆன் 33:33) என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மனைவிமாருக்கு மட்டுமே கூறப்பட்டது, மற்ற முஸ்லீம் பெண்கள் எல்லாம் அறியாமைக்காலத்தில் பெண்கள் வெளியில் திரிந்தது போல திரியலாம் என்று கூற வருகிறீர்கள் நன்றி 57
November 11, 2011 21:31
33.33 வசனத்தை நபிகளாரின்(ஸல்) மனைவிமார்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. மற்ற முஸ்லீமாக்கள் அறியாமைக்காலத்தில் வெளியே சென்றது போல செல்வது அல்லாஹ்வால் தடுக்கப்படவில்லை என்பதால், அவர்கள் வெளியே செல்வது தவறில்லை. முகத்தை மறைத்துகொள்ள சொன்னதை முகத்தை காட்டலாம் என்று நாம் புரிந்துகொள்வது போல இதுவும் வெளியே சுற்றலாம் என்று புரிந்துகொள்ளலாம்.
58
November 11, 2011 21:36
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை சகோதரர் முஸ்லிம் அவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகிறார். // our muslim sisters are the victims of current era online communications. Even they themselves fail to realise the future consequences. Atleast, we should take some measures to safeguard their identity to protect their purity of iman. A women's beauty is in her face,it may induce anyone to do anything. // அது பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா வேண்டாமா என்பதல்ல. அது வேறு விஷயம் ஆனால் இங்கு இணையத்தில் பெண்களின் படங்களை பதியலாமா என்பதும் அதன் மூலம் தவறான எண்ணம் ஏற்பட்டவர்கள் மூலம் அது தவறான முறையில் பயன் படுத்தும் நிலைக்கு நமது சகோதரிகளை உள்ளாக்குவது கூடூமா என்பதே கருப் பொருள். அது நியாயமானது என்பதும் எனது புரிதல். அதற்கு ஹிஜாப் சம்பந்தமான விளக்கம் தருவதை விட்டு அந்த சகோதரரின் கருத்தை உணர்ந்து மறுபரிசீலனை செய்யப்பட வேன்டும் என்பதே எனது வேண்டுகோளும் ஆகும். அன்புடன் மு முஹம்மத். 59
November 11, 2011 22:43
அஸ்ஸலாமு அலைக்கும்.
குர்ஆன் வசனம் 33:33 முஸ்லிம் பெண்களை வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது என்று கூறுவதாக இங்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் சகோதரர்கள், "முஸ்லிம் பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதே குற்றமா?" எனும் கேள்விக்கு பதில் தரக் கடமைப் பட்டவர்களாவர். 60
November 12, 2011 11:07
Assamalaikkum Brother
entire body of the woman is awrah. Even her voice is awrah. 'The Prophet (SAW) said, "The saying 'Sub Han Allah' is for men and clapping is for women." (If something happens in the prayer, the men can invite the attention of the Imam by saying "Sub Han Allah". And women, by clapping their hands). Sahih Al-Bukhari Vol #2, Book #22, Hadith #295. She should not come out the house and she should not speak to anyone other than mahram men. Do not deviate from the true path. 61
November 12, 2011 19:15
அன்புச் சகோதரர் மு முஹம்மத்
வ அலைக்குமுஸ்ஸலாம். ஹிஜாபுடன் கூடிய ஒரு புகைப்படத்துக்குப் பின்னூட்டமிட்ட பல சகோதரர்களும் சகோதரிகளும் சகோதரி சல்மாவை, "சகோதரி" என்று விளிக்கும்போது ஒரு சிலர் மட்டும் மாற்றுப் பார்வையுடன் நோக்குவது ஏன்? 33:33 வசனத்தை இத்துணைத் தட்டையாக விளங்கக் கூடிய அறிவாளிகள் இங்குப் பின்னூட்டமிடுவதைப் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. பெண்கள் வீட்டை விட்டே வெளியே போகக் கூடாது என்பதில், பெண்கள் பள்ளிக்குத் தொழப் போவது, மத்ரஸாக்களில் இஸ்லாத்தைப் பயிலப் போவது, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றப் போவது, பெருநாள் தொழுகைகளுக்குத் திடலுக்குப் போவது ஆகிய அனைத்தும் வீட்டை விட்டு வெளியே போய்த்தான் நிறைவேற்ற வேண்டும். இவை அத்தனையையும் 'ஹராம்' ஃபத்வா கொடுப்பதற்கு நினைப்பவர்கள், வீட்டைவிட்டு வெளிக்கிளம்பி அல்லாஹ்வின் தூதரோடு ஹஜ்ஜுக்கும் போருக்கும் சென்ற அன்னையரைப் பற்றியும் நபித் தோழியரைப் பற்றியும் அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும். "பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது" என்று தீர்ப்பளிப்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்துக் கொண்டவர்களோ? ஆச்சர்யமாக இருக்கிறது! 62
November 12, 2011 20:42
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
கடந்த மூன்று தினங்களாக சேவையின் நோக்குடன் மின்னஞ்சல் சுற்றுக்கு விடப்பட்ட ஒரு பொதுத் தகவல் அறிவிக்கை! அடையாள அட்டை இல்லாதவர் புதிதாக தங்களின் பெயரை இணைக்க புகைப்படத்துடன் ஆன்லைனில் அப்ளை செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2010 முதல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது நேரில் இந்த சேவை எண்ணற்ற அரசு பள்ளிகளிலும் நகராட்சி அலுவலங்களிலும் நடைபெற்று வருகிறது. அவற்றில் இந்த சலுகையை தவறவிட்டவர்கள் ஆன்லைனில் அப்பளை செய்து தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளவும். இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/ இணையதளம் வழியாக அடையாள அட்டை பெற விண்ணப்பம் செய்பவர் மறவாமல் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் இணைக்கவும். ஐரோப்பா, ஆசியாவாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் சிட்டிஷனுக்கும் அடையாள அட்டை மிக அவசியம்! அடுத்து, பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்கிற கருத்தைச் சுற்றியே இங்கு விவாதம் எழுப்பப்பட்டு அதைத் தொடர்ந்து, திருக்குர்ஆன் வசனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் பெண்கள் முகம் மறைத்தல் அல்லது வேண்டாம் என்ற கருத்தாடலுடன், பெண்களின் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடலாமா? என்பதும் இணைந்துள்ளது. 63
November 12, 2011 22:11
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 33.33 இல் உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளியில் திரிந்தது போல் திரியாதீர்கள். (அல்குர்ஆன் 33:33) மஹ்ரம் ஆன ஆண்களைத்தவிர மற்றவர்கள் வீட்டுக்கு வந்தால், தலை முன்றானையை தாழ்த்திக்கொள்ள வேண்டும். 33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; வெளியே செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது ஊர் விட்டு ஊர் செல்லவேண்டியிருந்தாலோ. 850. ”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள். புஹாரி : 3006 இப்னு அப்பாஸ் (ரலி). இதில் என்ன குழப்பம் இருக்கிறது? 64
November 13, 2011 03:27
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
நம்பிக்கை கொண்டோரே! இமாம் உள்பட அவரைப் பின்பற்றித் தொழுகின்ற ஆண்கள், பெண்கள் யாருமே தொழுகையில் பேசக்கூடாது! முன்னின்று தொழவைக்கும் இமாமிடம் தொழுகையில் ஓதுபவற்றில் அல்லது தொழுகையின் நிலைகளில் தவறு ஏற்பட்டால் அவற்றைச் சுட்டிக்காட்ட, ஆண்கள் ''சுபஹானல்லாஹ்'' என்று கூறவும் பெண்கள் கை தட்டவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ''சுபஹானல்லாஹ்'' என்று கூறுவது தொழுகையில் அனுமதிக்கப்பட்ட ஒரு திக்ர், இது பேச்சல்ல! தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஆண்களும், பெண்களும் தாரளாமாக ''சுபஹானல்லாஹ்'' என்று உச்சரித்திடலாம். இதற்கு ஏராளமான நன்மைகள் உண்டு! பிறகு, மஹரமல்லாத அன்னிய ஆண்களிடம், பெண்கள் பேசலாமா? என்றால், ''நீங்கள் அறியாதவராய் இருந்தால் வேதத்தையுடையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'' (அல்குர்ஆன் 21:7) மேலும், முதுமை, நோய் போன்ற காரணங்களால் ஹஜ் செய்ய இயலாதோருக்காக அவரின் பிள்ளைகள் ஹஜ் செய்யலாமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் விளக்கம் கேட்டு அறிந்துகொண்ட செய்தி புகாரி 1853, முஸ்லிம் 2595 நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இன்னும், ஒரு பெண்மணி தமது குழந்தைய உயர்த்திக்காட்டி இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார் - முஸ்லிம் 2598. இதுபோல் கேள்வியும், எதிர் கேள்வியும் கேட்டதற்கான சான்றுகளை அறிவிப்புகளிலிருந்து பெறமுடியும்! பெண்கள் மஹ்ரமல்லாத ஆண்களுடன் பேசவேக்கூடாது என்பது ஆணாதிக்கத்தின் அர்த்தமற்ற வாதமாகும்! அவசியத்திற்காக பேசலாம்! என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பற்றிய விளக்கம் கேட்க வந்த இரு பெண்களை யாரென்று அடையாளம் அறிந்த நிலையில் நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்கும் இப்னு மஸ்வூத் மனைவி ஸைனப் (ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடல் குறித்து (புகாரி 1466, முஸ்லிம் 1824 ) ஹதீஸ் தொகுப்பு நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. http://www.satyamargam.com/940 எனவே, மஹ்ரமல்லாத ஆண், பெண் அன்னியருடன் அவசியத்திற்காகப் பேசிக்கொள்ளலாம்! 65
November 13, 2011 08:33
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஸ்லிம் அவர்களே இந்த பின்னூட்டங்களின் தொடக்கமாக முஸ்லிம் எனும் சகோதரர் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டது முகத்தை மறைக்கலாமா கூடாதா என்ற கருத்தில் அல்ல இணையத்தில் பெண்கள் படத்தை பதிவதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தில் தான் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். // muslim: Please avoid displaying womens photo in the articles. It will induce bad thought in us. Shaitain will deceive us by womens beauty. Womens are not shaitain but shaitain will use their beauty as the medium to spoil the men like how fisherman use fishing net catch fish. Numerous hadith on this. It will be safety for our sisters also not displaying their photos. please avoid it all the arctiles for Allah's sake. October 25, 2011 07:52 // அந்த கருத்துக்கு பதில் பின்னூட்டனங்களாக முகத்தை மறைக்கலாமா கூடாதா பெண்கள் வெளியே வரலாமா கூடாதா போன்ற பின்னூட்டங்கள் வந்தன இவை கருப்பொருளுக்கு சம்பந்தமற்றவை என்பது எனது புறிதல். அதே போல் அவசிய தேவைகள், அடையாள அட்டை போன்ற நிர்ப்பந்தங்களுக்கு படம் தேவை என்பதையும் மறுக்க இயலாது. அதற்காக இணையதளம் மூலம் தான் அதை பெற வேண்டும் என்பது கட்டாயம் என்ற நிலை இல்லையெனில் அதை தவிர்த்து நேரடியாக பெறுவதே சிறந்தது என்பதையும் மறுக்க இயலாது. ஆகையால தொடக்க கருவைப் பற்றி இணையத்தில் ஆக்கங்களில் பெண்கள் படம் பதிவது பற்றி குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் கருத்துக்கள் வைத்து தெளிவு கண்டு அதன் படி செயல் படுவதே முஸ்லிம்களுக்கு அழகு என்பதை இங்கு நினைவு கூறுகிறேன். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. முகம் மறைத்தல் பெண்கள் வெளியில் செல்தல் போன்ற ஹிஜாப் சட்டஙளில் அறிஞர்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள் நாமறிந்ததே.ஆனால் முகம் முன் கைத் தவிற அனைத்தும் கட்டாயம் மறைக்கப் பட வேண்டும் என்பது தெளிவானது.அதில் முகத்தை மறைத்து வைக்க வேண்டும் என்பதோ பெண்கள் மஹ்ரமான துணையுடனும் தேவைகளுக்கு வெளியே செல்லக் கூடாது என்பதோ குர் ஆன் ஹதீஸுக்கு நெருக்கமான கருத்து அல்ல. முகத்தையும் மறைப்பதும் வீட்டில் இருப்பதும் தேவையானால் அதை அவரவர் தனிபட்ட விருப்பத்திற்கும் நிலைக்கும் விட்டுவிடலாம் ஆனால் அப்படி வற்புறுத்திட மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதே எனது புறிதல். அல்லாஹ் மிக அறிந்தவன். 66
November 13, 2011 09:55
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் சஃபி சகோதரியை யார் தாங்கள் கூறியப் படி தவறான பார்வையில் பார்க்கிறார்கள் என்பது அல்லாஹ்வே அறிவான், ஆனால் அவ்வாரு பார்க்க நாம் வழிவகுத்ததாக அல்லாஹ்வினால் குற்றம் பிடிக்கப் படக் கூடாது எனும் நோக்கத்தில் தான் சகோதரர்கள் பின்னூட்டமிடுகிறார்கள், என்பது எனது புறிதல். மற்றவற்றிற்கும் என் நிலைப்பாட்டிற்கும் விளக்கம் எனது முந்தய பின்னூட்டத்தில் அளித்துள்ளேன் பார்வையிடவும் அல்லாஹ் போதுமானவன். மு முஹம்மத் 67
November 13, 2011 10:08
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.
பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற வார்த்தைகளை கண்டு அஞ்சிக்கொண்டு அல்குரானில் கூறப்பட்ட அல்லாஹ்வின் அறிவுரைகளை உதாசீனப்படுத்த ஹதீஸ்களிலிருந்து எடுத்து காட்டி நியாயப்படுத்திக்கொள்ளும் வேலைகளை வெகுகாலமாக செய்து வருகிறோம். இன்னும் தெளிவாகவே கூறுகிறேன். முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கூடத்துக்கு தினந்தோறும் செல்வதும், முஸ்லீம் பெண்கள் கடைகளுக்கும் மார்க்கெட்டுகளுக்கும் மற்ற முஸ்லீம்களின் வீடுகளுக்கும் செல்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்று. பெண்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டு தெரிந்துகொண்ட நிகழ்ச்சிகள் உள்ளன என்றாலும், அவை அறியாமைக்காலத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்துக்குள் வந்த காலத்தில் நிகழ்ந்தவை. மேற்கண்ட வசனங்கள் இறங்கிய பின்னர் அவை நடந்தவையா அல்லது அதற்கு முன்பா என்று கூட ஆராயாமல் இவ்வாறு ஹதீஸை விளக்குவது தவறானதாகும். அல்குரானில் கூறப்பட்டுள்ளவற்றை பார்த்து நடந்துகொள்ளுதல் தான் சரியானதே அல்லாமல், ஹதீஸில் இப்படி இருக்கிறது என்று பார்த்து பெண்கள் அறியாமைக்காலத்தில் அலைந்து திரிந்ததை போல திரிவதை நியாயப்படுத்துவது சரியல்ல. வற்புறுத்திட மார்க்கத்தில் இடமில்லை என்றெல்லாம் கூறினால், நாம் அவரவர் தன் இஷ்டப்படி போக அனுமதித்திட வேண்டியதுதானே? உங்கள் வீட்டு பெண்கள் எக்கேடோ கெட்டுப் போங்கள் என்று விட்டுவிடலாமே? எதற்கு அவர்களுக்கு அறிவுரை? 68
November 13, 2011 18:00
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் சஃபி அவர்களே பின்னூட்டங்கள் ஆக்கத்தை குறித்தும் அதன் கருத்தைக் குறித்தும் மறு மொழியாக இருந்தால் அது நல்லதாக அமையும். கருத்தை விட்டு விட்டு அவசர அவசரமாக ஏதேதோ பின்னூட்டம் இடுவதும் சுட்டிக் காட்டப்பட்டால் எதையாவது கேள்வியாக நக்கல் செய்து திசை திருப்புவதும் நையாண்டி செய்வதும் இஸ்லாமிய வழிமுறையாகாது என்பதை நினைவூட்டுகிறேன். இப்போது விஷயத்திற்கு வருவோம் எனது பின்னூட்டத்தில் முஸ்லிம் என்ற சகோதரர் இணையத்தில் நமது (சகோதரிகளாகிய / மகள்களாகிய) பெண்களின் படங்களை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தையும் அது தவறான எண்ணம் ஏற்படுபவர்களால் , தவறான முறையில் பயன் படுத்தப்படலாம் என்ற கருத்தை சுட்டிக் காட்டினேன். அதற்கு எல்லோரும் சகோதரி எனும் ஒரு ஹிஜாப் அணிந்த பெண்ணைப் பார்த்து சிலருக்கு ஏன் தவறான எண்ணம் ஏற்படுகிறது என்று குறுக்கு கேள்வி என்னிடம் கேட்டுள்ளீர்கள். இங்கு ஏன் ஏற்படுகிறது ? யாருக்கு ஏற்படுகிறது? என்பதை (அல்லாஹ் அறிவான்) கேட்பதை விட அதற்கு நாம் வழியாகக் கூடாது என்பதையே வலியுறுத்தப்பட்டது என்பதை உணருங்கள். நமது சகோதரிகள் என்பதைவிட நமது மகள்களின் படங்கள் இப்படி பொதுவுடமை ஆக்கக் கூடாது என்றாலும் மிகையாகாது. மேலும் இது இஸ்லாத்திற்கு உகந்த செயலும் ஆகாது. // வற்புறுத்திட மார்க்கத்தில் இடமில்லை என்றெல்லாம் கூறினால், நாம் அவரவர் தன் இஷ்டப்படி போக அனுமதித்திட வேண்டியதுதானே? உங்கள் வீட்டு பெண்கள் எக்கேடோ கெட்டுப் போங்கள் என்று விட்டுவிடலாமே? எதற்கு அவர்களுக்கு அறிவுரை // Nasir Ahmad: // முகம் மறைத்தல் பெண்கள் வெளியில் செல்தல் போன்ற ஹிஜாப் சட்டஙளில் அறிஞர்கள் மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகள் நாமறிந்ததே.ஆனால் முகம் முன் கைத் தவிற அனைத்தும் கட்டாயம் மறைக்கப் பட வேண்டும் என்பது தெளிவானது.அதில் முகத்தை மறைத்து வைக்க வேண்டும் என்பதோ பெண்கள் மஹ்ரமான துணையுடனும் தேவைகளுக்கு வெளியே செல்லக் கூடாது என்பதோ குர் ஆன் ஹதீஸுக்கு நெருக்கமான கருத்து அல்ல. முகத்தையும் மறைப்பதும் வீட்டில் இருப்பதும் தேவையானால் அதை அவரவர் தனிபட்ட விருப்பத்திற்கும் நிலைக்கும் விட்டுவிடலாம் ஆனால் அப்படி வற்புறுத்திட மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதே எனது புறிதல். அல்லாஹ் மிக அறிந்தவன்// M Muhammad: மேலும் சகோதரர் Nasir Ahmad: அவர்களே மார்க்கம் என்பது அல்லாஹும் அவருடைய தூதரும் விதித்த்து அதற்கு மாற்றமாக நாம் அடுத்தவரை வற்புறுத்தவோ நிர்ப்பந்திக்கவோ இயலாது நாம் தேவையெனில் மர்க்கத்தில் உள்ளதை விட அதிகமாக பேணுதலுக்காக(முகத்தை மறைப்பது வெளியில் செல்லாமல் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது போன்ற) எதையும் நமதளவு செய்து கொள்ளலாம் ஆனால் அது மார்க்கம் ஆகாது. அல்லாஹ் நன்கறிந்தவன். 69
November 13, 2011 22:19
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முறையே ஹஜ் செய்துள்ளார்கள். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்பேர்த பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மார்க்க விளக்கம் அளித்த அறிவிப்புகளையும் நாம் பதிவுசெய்திருந்தோம். அந்த ஹஜ்ஜின் அரஃபா தினத்தில் தான் ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' (அல்குர்ஆன் 5:3) வசனம் அருளப்பட்டது! சட்ட ரீதியாக எந்த வசனமும் இனி இறக்கப்பட வேண்டிய அவசியமில்லை என மார்க்கம் நிறைவு பெறும் நிலைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளை எழுதியுள்ளோம். ஆனால், //மேற்கண்ட வசனங்கள் ,இறங்கிய பின்னர் அவை நடந்தவையா அல்லது அதற்கு முன்பா என்று கூட ஆராயாமல் இவ்வாறு ஹதீஸை விளக்குவது தவறானதாகும்.// என்று எழுதியிருப்பது விந்தை! எழுதிய ஆதாரங்களை முழுமையாகப் படித்துப் புரியாமல், அது பற்றிய சந்தேகமிருந்தால் மேலதிக விளக்கம் பெறாமல், இவ்வாறு எழுதுவது தவறு! கல்வி கற்பது ஆண், பெண் இருவர் மீதும் கடமையாகும் என இஸ்லாம் அறிவுரை வழங்கியிருக்க, பெண்கள் தினந்தோறும் பள்ளிக்கூடம் செல்லக்கூடாது, கடைவீதிக்கும், மற்ற முஸ்லிம்களின் வீடுகளுக்கும் செல்லக்கூடாது. என இவற்றை வெறுமனே எழுதியிருப்பதை விட மார்க்க ஆதாரங்களுடன் எழுதியிருக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. 70
November 13, 2011 23:03
"இஸ்லாத்தில் பெண்கள் பள்ளிக்கூடம் செல்லத் தடை" - கேட்கவே பயமாயிருக்கிறது.
71
November 14, 2011 20:02
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் சஃபி அவர்களே ஒரு சகோதரர்(muslim) ஒரு விஷயத்தை இன்றைய இணைய உலகில் நடைபெறும் தீமைகளை கருத்தில் கொண்டு நமது சமுதாய சகோதரிகள் / மகள்கள் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாது எனும் நோக்கில் சுட்டிக் காட்டும் போது அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அதை பல முறை அவரும் அவரின் ஆதஙகத்தின் நியாயத்தை தமிழாக்கி நான் இந்த தளத்தில் பதிந்தேன். ஆனால் இந்த தளத்தினரும் அதை கண்டு கொள்ளாமல். இது மற்ற தளங்களைப் போல் அனுமதியின்றி பதியப் படவில்லை என்றும், முகத்தை மறைப்பது கட்டாயம் இல்லை என்றும், இன்னொருவர் இணையத்தில் அடையாள அட்டைப் பற்றிய சுட்டியை தருவதும்,..//அடையாள அட்டை இல்லாதவர் புதிதாக தங்களின் பெயரை இணைக்க புகைப்படத்துடன் ஆன்லைனில் அப்ளை செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2010 முதல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. // நீஙக்ள் சகோதரி என்று எல்லோரும் கூறும் ஒரு பெண்ணைப் பற்றி ஏன் சிலருக்கு தவறான எண்ணம் வருகிறது என்று சுட்டிக்காட்டிய என்னிடம் கேட்பது நக்கல் மற்றும் நையாண்டி செய்து திசை திருப்புவது என்பது எனது புரிதல் ஆகும் அதையே வெளிப்படுத்தினேன். இதை என்னவோ நான் எனது கருத்தாக கூறியது போல் அலட்சியமாக அவரவருக்கு படுவது எல்லாம் மார்க்கம் ஆகாது என்று கூறியுள்ளிர்கள். அல்லாஹ்வை அன்சிக் கொள்ளுங்கள், பாவமாகி விடுமோ என்று கருதி பாவமற்ற சந்தேகமானதை விட்டும் விலகி இருப்பதை குர் ஆனும் நபி வழியும் வலியுறுத்துகிறது. மேலும் ஆக்கத்தைப் பற்றி பேசாமல் படத்தைப் பற்றி பேசுவதாக குறிப்பிட்டுள்ளிர்கள். ஆக்கத்தை பற்றியும் அந்த சகோதரியின் சாதனைப் பற்றியும் பாராட்டி நான் உட்பட பலரும் பின்னூட்டம் இட்டுள்ளனர் என்பது அல்லாஹ் நன்கறிவான். ஆனால் எதையும் இஸ்லாம் எனும் வட்டத்தில் இருந்து செயல் படுத்த வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிமுறை அதுவும் சுட்டிக் காட்டப்பட்டால் மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்வதும் இஸ்லாமிய பண்புகளில் ஒன்று என்பதை மறைக்கவோ மறுக்க இயலாது. மேலும் பெண்கள் வீட்டில் அடை பட்டு கிடக்க வேண்டும் கல்வி கற்க கூடாது என்று கூறுபவர்களில் நான் இல்லை, ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தான் ஒரு பெண்ணின் படம் எவ்வாரு தவறாக பயன் படுத்தப் பட்டது என்பதை ஒரு சகோதரர் ஆதாரங்களோடு ஈமெயில் மூலம் குழுமங்களை எசசரித்து இருந்தார் அதை பார்த்திருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை, இருப்பினும் ஏன் இந்த நிலைபாடு நமது சகோதரிகளின் /மகள்களின் படங்களும் அது போன்ற வக்கிர புத்தியுள்ளவர்களிடம் சிக்கி பாழாக வேன்டுமா ? அதை தவிர்ப்பது மார்க்க போதனை இல்லையா. உருவப் படம் விஷயத்தில்யே பிரச்சினையெனும் போது அதை இணையத்தில் பதிவதற்கு ஏதேனும் ஒரு சான்று உள்ளதா? காட்டுங்கள் பார்ப்போம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இணையம் இருக்க வில்லையென்று கூறுவீர்களா? ஓவியம் வரைவதை தடை செய்தார்களே உத்தம நபி (ஸல்) அவர்கள். பெண்கள் நறுமணம் பூசி பொதுச் சபைகளுக்கு செல்வதையே தடை செய்தவர் இப்படி அவசியமில்லாமல் ஒரு செய்திக்கு இணையத்தில் இப்படி பொதுவாக படம் பதிவதை அனுமதித்து இருப்பார்களா.. சிந்தியுங்கள். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. 72
November 14, 2011 22:24
Dear Nasir Ahmad:
உண்மையை வெளிப்படையாக கூறும் உங்களின் தைரியத்துக்கு I salute to u! நவீன பெண்ணியவாதிகளின் தாக்குதலுக்குப் பயந்து சத்தியமார்க்கம் போன்ற சில அரைகுறை முல்லாக்கள், இசுலாம் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் வழங்குகிறது என பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். அதனை உங்களைப்போன்ற உண்மையான முசுலிம்கள் இன்னும் தைரியத்தோடு எதிர்க்கவேண்டும். இன்னமும் குரானில் அல்லா, காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள், கொல்லுங்கள் என மொஹம்மதுக்குக் கட்டளையிட்டுள்ளார். அதன்படியே மொஹம்மதும் பல லட்சக்கணக்கான காபிர்களைக் கண்டம்துண்டமாக வெட்டிக்கொலை செய்தார். இப்படி காபிர்களை வெட்டிக்கொல்வதற்குச் சன்மானமாக அல்லா 70 பெருமுலை கன்னியர்களைச் சொர்க்கத்தில் முசுலிம்களுக்கு வழங்குகிறார். இதெல்லாம் இசுலாத்தின் அடிப்படை கொள்கைகள். இந்தக் கொள்கைகளை உங்களைப் போன்ற துணிவான முசுலிம்கள் யாருக்கும் பயப்படாமல் எல்லோருடைய முன்னிலையிலும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முன்வரவேண்டும். உங்களைப் போன்று எல்லா முசுலிம்களும் உண்மை முசுலிம்களாக வாழ வாழ்த்துகள். -சுத்தமல்லி சசி எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் 73
November 14, 2011 22:42
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
//அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் முஸ்லிம் அவர்களே இந்த பின்னூட்டங்களின் தொடக்கமாக முஸ்லிம் எனும் சகோதரர் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டது முகத்தை மறைக்கலாமா கூடாதா என்ற கருத்தில் அல்ல இணையத்தில் பெண்கள் படத்தை பதிவதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தில் தான் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.// - M Muhammad அன்புச் சகோதரர் M Muhammad அவர்களே உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி! முதலில் ஒரு அடிப்படை விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இணையத்தில் பெண்கள் படம் பதிவதை தவிர்க்க வேண்டும். என்பது படம் மற்றவரால் தவறாக பயன்படுத்தப்படும் என்கிற காரணம் சொல்லப்படுகிறது. இது பெண்களின் படத்துக்கு மட்டும் இல்லை. ஆண்களின் படத்தையும் மார்பிங் முறையில் தவறாக/ஆபாசமாக சித்திரிக்க முடியும்! எனவே, இணையத்தில் ஆண், பெண் படங்களைப் பதியக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் ஓரளவு நியாயம் எனலாம். காரண காரியத்துடனும், ஹிஜாபின் கண்ணியத்திற்கு எவ்விதக் குறைவுமில்லாமலும் எடுக்கப்பட்டுப் பதிவுசெய்துள்ள படத்தை விமர்சிப்பது அர்த்தமற்றதாகவுள்ளது. அடையாள அணிவகுப்பு என்று சொல்வார்கள், ஒரு ஆளை அடையாளம் காட்டுவதில் முதல் அடையாளக் குறியீடு அவரின் முகம். விபத்தில் மரணித்தவர் பிரபல்யமானவர், அல்லது குற்றவாளி இவர்களை அடையாளம் காண அவரின் முகமே முதல் குறியீடாக இருக்கும். விபத்தில் மரணித்தவரின் முகம் சிதைந்து போனால் தழும்பு, ரேகை போன்ற மற்ற அடையாளங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அல்லது நெருங்கிய உறவினர் வந்து அடையாளம் காட்டவேண்டும்! இதுதான் இயல்பு! (அடையாள அணிவகுப்பிற்கு இஸ்லாமிய ஆதாரம் வேண்டுமாயின் நீங்கள் கேட்டால் பின்னர் எழுதுகிறேன்) இவற்றை ஏன் இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இந்த இழையில் செல்வி சல்மா தமது கல்வியறிவுத்திறன் முயற்சியால் விருது பெற்றுள்ளார். அதைச் செய்தியாகப் பதியும்போது அவரின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிடுவது அவரை அடையாளப்படுத்தியதாகுமே தவிர, அந்தப் படத்தை விமர்சிக்கவோ தடைசெய்யவோ எவ்வித முகாந்திரமும் இல்லை. பிளஸ் டூ தேர்வெழுதி மாநில அளவில் முதல் மாணவனாக வெற்றிப் பெற்றார் என்ற செய்தியோடு வெற்றிப் பெற்ற மாணவனின் புகைப்படமும் வெளியிட்டிருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வோமோ அதே நிலைதான் இந்தப் பதிவுக்கும் படத்துக்கும் உள்ளது. இதுபோல் காரண காரியத்துடன் ஆக்கத்திற்குப் பொருத்தமான படத்தை இணைப்பதில் தவறேதும் இல்லை! படமெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலத்தில், ''புகைப்படம் எடுப்பது ஹராம்!'' என்று சமூகத்தில் தீர்ப்பு முழங்கியது. பின்னர் புகைப்படம் இல்லாது காலம் தள்ள முடியாது என்ற நிலையில் படத்தை அங்கீகரித்துக்கொண்டது. அதுபோல் இணையத்தில் பெண்கள் புகைப்படம் கூடாது என்கிற வாதம் எதிர்காலத்தில் பிற்போக்கு வாதமாக தள்ளப்பட்டுவிடும்! ஏனெனில், முறையான ஹிஜாப் அணிந்து பெண்கள் அவரவர் காரண காரியங்களுக்காக செயல்படுவதை இஸ்லாம் தடுக்கவில்லை! ஹிஜாபின் கண்ணியத்தை மாசுப்படுத்தாமல் பெண்கள் இணையத்திலும், தொலைக்காட்சியிலும் வரலாம்! 74
November 14, 2011 23:48
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்(முஸ்லிம் அவர்)களே மீண்டும் கருப் பொருளுக்கு சம்பந்தமில்லாத உதரணங்கள் மூலம் தங்கள் வாதத்தை நிலை நாட்ட முயன்றுள்ளீர்கள் என்பது தெளிவாகிறது.அடையாள அட்டை அடையாள அணிவகுப்புகளில் முகத்தின் முக்கியத்துவம் யாரும் மறுக்க வில்லை. இங்கு சகோதரி சல்மா அவர்கள் தேர்ச்சி பெற்றதை யாரும் மறுக்கவோ ஆட்சேபிக்கவோ யார் அவர் என்று அறியாத நிலையில் பலரும் அணிவகுக்கவில்லை. அடுத்து காணவில்லை போன்ற சில அறிவிப்புகளுக்கு படம் பதிப்பதையும் தவறு எனப்படுமா என்று கேட்பீர்கள், இதற்கும் அதே பதில் தான் நிர்ப்பந்தம் கட்டாயம் எனும் நிலை இல்லாமால் வேறு வழியில் அறிவிப்பு செய்ய போலீசில் புகார் சுவரொட்டிகள் போன்றவைகளை பயன்படுத்தியும் இதை தவிர்க்கலாம். அதே போல் மார்பிங் முறையில் ஆண்கள் படமும் தவறாக பயன் படுத்தப் படலாம ஆகையால் அதையும் ஆட்சேபிப்பது நியாயம் என்கிறேரிகள்.ஒத்துக் கொள்கிறேன் மறுக்க வில்லை ஆனால் இன்று இணைய வலையிலும் நடைமுறை உலகில் விளம்பரங்கள் முதல் தவறான சித்தரிப்பில் சிக்கி தவிப்பவர்கள் வாழ்க்கை பாழானவர்கள் எண்ணிக்கை விகிதாச்சாரம் பல மடங்கில் அதிகம் பெண்கள் தான். அவர்கள் சகோதரிகளாகவும் , மகள்களாகவும் தாய்மார்களாகவும் அபலைகளாக இந்த ப்ளாக் மெயிலிங் கொடுமையில் சிக்கி பல குடும்பங்களும் வாழ்க்கையும் ஈமானும் பாழாகும் நிலைக்குள்ளாகியுள்ளது நிதர்ச்சனம். அவ்வப்போது இது செய்திகளாக நாம் அறிந்த ஒன்றே ,இதற்கு முக்கிய காரணம் இந்த இணைய வலைகள் மற்றும் மொபைல் போன்கள் பிரவுஸிங் சென்டர்கள் அவற்றில் காட்சிகளாக வலம் வரும் உருவங்கள் படங்கள் என்பதை மறுக்கலாகது. புகைப் படக் கருவி ,இது பிற்போக்கு வாதம் என்பதெல்லாம் இஸ்லாத்தில் தீர்வற்ற ஒன்றல்ல. மக்கள் தமது கருத்துக்கு முன்னுரிமையளிக்காமல் இஸ்லாத்தை அணுகினால் இஸ்லாம் எதை அனுமதிக்கிறது எதை தடுக்கிறது எதை தவிர்க்க சொல்கிறது என்பதில் சிறிதும் குறையல்ல. இஸ்லாம் முழுமையானதும் முறையான தீர்வுகளை வழங்க வல்ல உன்னத பொக்கிஷம் ஆகும். நாம் எந்த ஒன்றையும் அதனோடு ஒப்பிடவேண்டும் அதற்குகந்ததை செய்ய வேண்டும் அல்லாததை தவிர்க்க வேண்டும். இதுவே தீர்வுக்கு வழிகோலும் ஒன்றை சரிகாண இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் எச்சரிக்கைகளை மறந்தால் அது வழிகேடாகும் நஷ்டமாகும்.... அல்லாஹ் மிக அறிந்தவன். இறுதியாக வாதத்திற்கு தீர்வு உண்டு பிடிவாதத்திற்கு இல்லை என்பர். நீங்கள் நான் தான் பிடிவாதத்தில் இருப்பதாக கூறினாலும் ஆச்சர்யப் பட முடியாது. (16:125 )அல்லாஹ் யார் வழிகேட்டில் உள்ளார்கள் என்பதை அறிந்தவன் அவன் நம்மில் யார் வழிகேட்டில் உள்ளாரோ அவருக்கு நேர்வழி காட்டவும் அல்லது மன்னிக்கவும் துவாக்கள். 75
November 15, 2011 10:28
முகத்தை காட்டக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, பள்ளிக்கு கல்வி கற்க போகக் கூடாது என்று தொடர்ந்து கருத்திட்டவர்கள் ஒரு சாதாரண ஆக்கத்தை சூப்பர் ஹிட்ஸ் பெற்றதாக ஆக மாற்றிய புண்ணியவான்கள். ;-) அடிக்கடி என் வலைப்பூவிலும் இது போல் வந்து கோக்கு மாக்காக கருத்திட்டு எனக்கும் நிறைய ஹிட்ஸ் பெற்று தாருங்கள்.
76
November 15, 2011 10:32
//இன்னும் தெளிவாகவே கூறுகிறேன். முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கூடத்துக்கு தினந்தோறும் செல்வதும், முஸ்லீம் பெண்கள் கடைகளுக்கும் மார்க்கெட்டுகளுக்கும் மற்ற முஸ்லீம்களின் வீடுகளுக்கும் செல்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்று//
அன்பான சகோதரர் நசீர் அஹமது, வ அலைக்குமுஸ்ஸலாம். இறைவேதத்தை அல்லாஹ்வின் தூதரும் அன்னையரும் நபித் தோழர்களும் தோழியரும் விளங்கியதுபோல் நாமும் விளங்குவதே பொருத்தமாகும். இங்குப் பேசப்படும் 33ஆவது அத்தியாயமான அல்-அஹ்ஸாப் அருளப்பட்ட ஆண்டு ஹிஜ்ரீ 5 ஆகும். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு வீட்டை விட்டு வெளிக்கிளம்பி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்ற அன்னையரும் நபித் தோழியரும் அவர்களை அழைத்துச் சென்ற அல்லாஹ்வின் தூதரும் 33:33 வசனத்தைச் சரியாக விளங்கித்தான் வீடுகளிருந்து வெளிப்பட்டுச் சென்றனர். நீங்கள் விளங்குவது/விளக்குவது போலல்ல. 33ஆவது அத்தியாயமான அல்-அஹ்ஸாப், இஸ்லாமிய விரோதிகளால் பலவாறு விமர்சிக்கப்பட்டு அதற்கு விளக்கங்கள் கூறப்பட்டு வெகுகாலமாகிறது. அதில், நபியின் மனைவிகள் அஞ்ஞானக் காலத்துப் பெண்கள் போல் அலையக்கூடாது என்பதையே இறைவன் தடுக்கிறான் தங்களின் தேவைக்காக நபியின் மனைவிகள் வெளியில் சென்று வருவதைத் தடை செய்யவில்லை ... என்று அபூமுஹை எனும் ஒரு சகோதரர் அளித்திருக்கும் அருமையான விளக்கத்தை முழுவதையும் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்: http://www.islamkalvi.com/portal/?p=378 இவை போக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற ஒட்டகப் போரில் ஓரணிக்குத் தலைமை வகித்து நடத்திச் சென்றவர் அன்னை ஆயிஷா (ரலி) என்பதையும் நினைவூட்டுகிறேன். அறிவு தேடுதல் முஸ்லிமான ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை போன்ற நபிமொழிகளையெல்லாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள். 77
November 15, 2011 14:40
Dear brothers,
Our sisters will be visible to all the religion peoples if she never wear nikaab. Even by having a little bit of iman we are still lacking in restricting ourselves from seeing a non-maharam women but just think about non -muslim men. Maximum they will try to enjoy the beauty of a women when she goes out by seeing her face beauty and possible they will try to follow if they are attracted towards her in some form whether she is muslim girl or hindu girl or any other religion girl. We should not consider gulf region alone, muslims are living all over the world mixing with almost all the race n religion peoples. These photo,video,online cam, cellphones all the latest trend invented by non-muslims for their usage. Maximum we can use all these technologies only for our needs which will not be harmful to islam. Online way of religious communication is ok but there is no need for us to do the video coverage of the person giving speech whether male or female speaker and distrubuting to everyone. Instead we can prefer only the audio. A male islamic speaker video is viewed by all our women folks at home and the same way the female islamic speaker video also viewed by our house-hold men. Islam has reached us not by using the above so called latest inventions. so we can't say without this we can't propagate the religion. Our Nabi(saw) and his followers had went door to door, street to street, village to village and country to country to spread islam. But now we are sitting at one place and using the shaitan's master plan technologies and we are justifying ourselves that whatever we are doing all correct and permissible. No way we can prove it. All the latest inventions are the tricks made by shaitan to spoil the mankind. 98% of people are using the new trend to spoil themselves. Atleast we should use it correctly. We should not be the victim of shaitan's master trap. Allah has put a kind of opposite attraction between men and women. We can speak like pious person but in practical it is hard to avoid such feelings. When a man seeing the beautiful pious woman speaking about the religion infront of him then he will get attracted by her beauty first more than the religious words she utter, the same thing for woman aswell. We should not give answer like how bal thackery give reply to one of the maulana said about sania mirza dress code"Why seeing sania mirza see her game alone" In the articles we can put like sister,daughter,grand daughter but in practical we are no way. Islam never forid women to learn knowledge but everything must be under the correct shariah of islam and make sure that it should not harmful to both men n women. Dont know how why suddenly everyone debate on nikaab. countries like india from kashmir to kanyakumar, in the past our islam womens use to cover their face, thats why our ladies are safeguarded last time. but now due to the facial exposing there so many bad things happening in our community. Shaitan use more effort on women to spoil men like they not only just show their face instead they use to smile and do all kind of attractive expression infront of a men. If nikaab is there then these things wont comes out. Even Allah order Nabi(saw)'s pure wives to cover themselves then how about our womenss?????? Nabi(saw)'s wives are consider as mothers to the whole mankind but even then Allah has order them to cover. A women should answer a non-maharam men's request from behind the door or wall or curtain if any visitors comes and ask for anything. This is what Quran says. That means they are allowed to do permissiable(visitors,dealing with household things) talk with the men without seeing the men and not allow the men to see them. This is when they are at home. What happened when they go out??????? Here the coverage is not the wall or door or curtain but the full burka with covering the face with nikab and gaze should be down(this applies to both men n women). This is the reason why there are many islamic institution they are having seperate schools n colleges for women without any men interaction. This is the best n only way to safeguard both men n women's IMAAN. 78
November 16, 2011 06:08
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
//நபியின் மனைவிகள் அஞ்ஞானக் காலத்துப் பெண்கள் போல் அலையக்கூடாது என்பதையே இறைவன் தடுக்கிறான் தங்களின் தேவைக்காக நபியின் மனைவிகள் வெளியில் சென்று வருவதைத் தடை செய்யவில்லை ...// - சகோதரர் சஃபி அன்புச் சகோதரர் சஃபி அவர்களுக்கு, அல்குர்ஆன் 33:33 வது வசனத்தின் கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி! பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றக் கருத்துடையோர், ''நபியின் மனைவியர் அறிவியாமைக் காலத்துப் பெண்கள் போல் அலையக்கூடாது'' என்றால் மற்ற முஸ்லிம் பெண்கள் அறியாமைக் காலத்துப் பெண்கள் போல் அலையலாமா? என்கிற தர்க்க ரீதியான வாதங்களை வைக்கின்றனர். நபியவர்களின் மனைவிகளுக்கென்று தனிச் சிறப்பும் தனிச் சட்டமும் உள்ளது. அவற்றில் குர்ஆனில் கூறப்பட்டுள்ளவை தவிர, நபி (ஸல்) அவர்களின் மரணித்திற்குப்பின் கணவரின் சொத்துக்களில் நபியின் மனைவியராகிய அவர்களுக்கு வாரிசு உரிமை இல்லை. அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். என்கிற விளக்கம் அறிவிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. கணவர் மரணித்தால் அவரின் மனைவியாரான மற்றப் பெண்களுக்கு ஜீவனாம்சம் இல்லை. ஆனால், கணவரின் சொத்துக்களில் மனைவியருக்கு வாரிசுரிமை உண்டு! எனவே, நபியவர்களின் மனைவியருக்கு கணவரின் சொத்துக்களில் வாரிசுரிமை இல்லை என்றால் மற்றப் பெண்களக்கும் வாரிசுரிமை இல்லையா? என்று கேட்கக் கூடாது. அதுபோல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபியின் மனைவியர் மறுமணம் செய்துகொள்ளக் கூடாது. என்பது சட்டம். இதனால் கணவரின் மரணத்திற்குப் பிறகு மற்ற பெண்களும் மறுமணம் செய்துகொள்ளக் கூடாதா? என்கிற கேள்வியும் தவறாகும்! நபியின் மனைவியருக்கும் மற்ற முஸ்லிம் பெண்களுக்கும் எங்கெல்லாம் சட்டங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறதோ அவற்றை வித்தியாசப்படுத்தியே விளங்கவேண்டும்! மேலும், இங்கு ''பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது'' என்று கூறுபவர்களே அதற்கு முரணாக மஹ்ரமான ஆண்கள் துணையுடன் பெண்கள் பயணம் செய்யலாம் என்று பெண்கள் வீட்டு விட்டு வெளியில் செல்வதற்கான இஸ்லாமிய ஆதாரங்களையும் எழுதியுள்ளனர். மஹ்ரமான ஆண் உறவினருடன் பெண்கள் பயணம் செய்யலாம் என்கிற அறிவிப்புகளை ஏற்பவர்கள், குறைந்த பட்சமாக ஒரு பகல் பொழுதுக்குள் உள்ள தொலைவு பெண்கள் தனிமையில் பயணம் செய்யலாம் என பெண்கள் வேளியே செல்ல அனுமதிக்கப்பட்ட அறிவிப்புகளைக் கவனிக்கத் தவறியுள்ளனர். //அறிவு தேடுதல் முஸ்லிமான ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை போன்ற நபிமொழிகளையெல்லாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.// - சகோதரர் சஃபி. மேல்கண்ட கேள்வியும் விடையின்றி நிற்கிறது, காத்திருப்போம்! 79
November 19, 2011 19:23
கருத்து எழுதுக :
|