| அகிம்சைக் கப்பல்கள் |
|
|
| வாசகர் பகுதி - வாசகர் மடல் | ||||
| புதன், 16 ஜூன் 2010 15:02 | ||||
|
* * * * *
ஒரு தகவலுக்காக மற்றுமொரு அக்கிரமத்தை இங்குத் தெரிந்து வைத்துக் கொள்வோம். * * * * *
கஸ்ஸா எனும் ஊர் அல்லது பிராந்தியம், ஃபலஸ்தீன் நாட்டை யூதர்கள் ஆக்கிரமித்து மேய்ந்தபின் தென் மேற்குப் பகுதியில் ஒதுங்கிய ஒரு மிச்ச சொச்சம். இங்குச் சுமார் 15 இலட்சம் மக்கள் வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பகுதி மேற்குக் கரை (West Bank). இதை ஃபதாஹ் அமைப்பு நிர்வகித்து வர, கஸ்ஸாவை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது. ஆண்டாண்டு காலமாய், பிறந்து வளர்ந்து வந்த மக்கள் தங்களது நிலம், உடைமை அனைத்தும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாய் ஆகிவிட்டிருக்க, மேற்குலகிலிருந்து வெளியேறி வந்த யூதர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் அசுரனாய் தங்களின் அரசாங்கத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய நிலைமையில்தான் வாழ்ந்தும் போராடியும் வருகிறார்கள் கஸ்ஸா மக்கள். விஷயம் இவ்வாறிருக்க இவர்களால் தங்கள் நாட்டிற்கு பிரச்சனை அதிகமாகியுள்ளது என்று எகிப்து அரசாங்கம் தன் பங்கிற்குத் தனது எல்லையை இவர்களுக்கு அடைத்து விட்டது. எல்லை தாண்டி நாட்டிற்குள் ஊடுருவி விடுகிறார்களாம். உயிர் பிழைக்க என்னதான் செய்வார்கள் அவர்கள்? அயராத கஸ்ஸா மக்கள் சுரங்கம் தோண்டினார்கள். அத்தியாவசியப் பொருட்களை அந்தச் சுரங்கங்களின் வாயிலாய் எகிப்திலிருந்து கஸ்ஸாவிற்குள் கொண்டு வர ஆரம்பித்தார்கள். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எகிப்திற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்து சேர்ந்திருக்க வேண்டும். உடனே எகிப்து அதிபர், கோடிக் கணக்கில் செலவழித்து திட்டம் ஒன்று தீட்டினார். காஸா மக்களுக்கு உதவி வழங்கும் திட்டமெல்லாம் இல்லை. பூமிக்கு அடியிலுள்ள அந்த சுரங்கங்களை எஃகுத் திரை கொண்டு மூட! எப்படியும் கஸ்ஸா மக்களை ஒழித்துக் கட்டியே ஆகவேண்டும் என்பதுபோல்தான் அனைத்தும் நடந்து வருகின்றன.
இந்தக் கப்பலுக்கு ரேச்சல் கோரி (MV Rachel Corrie) என்று பெயரிட்டிருந்தார்கள். ரேச்சல் கோரி வேறு யாருமல்ல, 2003-ஆம் ஆண்டு இஸ்ரேலிய புல்டோசரால் நசுக்கப்பட்ட அமெரிக்க மாணவி. - நூருத்தீன்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (43)
![]()
பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்
அஸ்ஸலாமு அலைக்கும், செலவிழத்து - செலவழித்து (Free Gaza) -> Free Gaza Movement http://en.wikipedia.org/wiki/Free_Gaza_Movement (Insani Yardim Vakfi) -> IHH in English http://en.wikipedia.org/wiki/IHH_(İnsani_Yardım_Vakfı) 1
June 17, 2010 12:28
பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்
அஸ்ஸலாமு அலைக்கும், மாவி மர்மராவில் இஸ்ரேலின் ஹனீன் ஜொஐபி என்ற பெண் MPயும் (பலத் கட்சி) இருந்தார். 2
June 17, 2010 12:29
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த தளத்தில் எல்லா கதைகளும் படித்தேன். மிகவும் நல்ல கருத்துக்கள் . இன்ஷா அல்லா இவைகளை இன்னும் அதிகமாக்க வேண்டுகிறேன் 3
June 17, 2010 15:32
இஸ்ரேல் யூதர்களின் நிலம்தானே? இந்த அரேபியர்களும் முஸ்லீம்களும் சவுதி அரேபியாவுக்கு போகவேண்டியதுதானே? ஏன் இவர்கள் இஸ்ரேலிலேயே இருந்துகொண்டு அழும்பு பண்ணவேண்டும்?
எகிப்திலும் சவுதி அரேபியாவிலும் இல்லாத நிலமா? ஏன் இவர்கள் அங்கே சென்று வளமையாக வாழக்கூடாது? 4
June 19, 2010 03:48
நண்பர் செபாஸ்டியன்,
இஸ்ரேல் என்ற நாடு ஃபலஸ்தீன் மண்ணை அபகரித்து உருவாக்கப்பட்டது. உங்கள் வீட்டை உங்களிடமிருந்து அபகரித்துக் கொண்டு, "இந்தச் செபாஸ்டியன் அவரின் உறவினர் வீட்டுக்குப் போக வேண்டியது தானே? ஏன் இங்கிருந்து அலும்பு பண்ண வேண்டும்? அவரின் குடும்பத்தினருக்கு இல்லாத நிலமா? ஏன் அவர் அவரின் உறவினர் வீட்டில் சென்று வளமையாக வாழக்கூடாது?" என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? உங்கள் வீட்டைத் திருடியவனுக்கு விட்டுக்கொடுத்து விட்டு உங்கள் உறவினர் வீட்டில் அண்டி வாழச் சென்று விடுவீர்களா? இலங்கை பிரச்சனை தெரியும் தானே? சிங்களவர்கள் புத்தமதத்தினர் அதிகமாக வாழும் நாடுகளான சீனா, ஜப்பான் சென்று வளமாக வாழ வேண்டியது தானே?? ஏன் இவர்கள் இலங்கையிலேயே இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக அலும்பு பண்ண வேண்டும்? சீனாவிலும் ஜப்பானிலும் இல்லாத நிலமா? ஏன் அவர்கள் அங்கே சென்று வளமாக வாழக்கூடாது? என்று கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்? 5
June 19, 2010 10:56
அன்பர் செபாஸ்டியனுக்கு,
நீங்கள் முழுதுமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுட்டி: http://nilamellam.blogspot.com/2004/11/1.html 6
June 19, 2010 11:37
இஸ்ரேல் பாலஸ்தின மண்ணை அபகரித்து உருவாக்கப்பட்டதா? அப்படியென்றால், இஸ்ரவேலர்கள் என்று
பைபிளிலும் குரானிலும் இருக்கிறதே. அந்த நாடு என்ன? அந்த மக்கள் யாவர்?. பாலஸ்தீனர்கள் என்று எதாவது குரானில் இருக்கிறதா? பைபிளில் இஸ்ரவேலர்களின் நாடு இஸ்ரேல் என்று பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. இந்த அரேபியர்கள் எல்லோரும் வந்தேறிகள். ஏன் இஸ்லாமே பின்னால் வந்ததுதானே? சிங்களவர்களும் தமிழர்களும் அங்கே பூர்வகுடி மக்கள். அது எதற்கு இப்போது. சிங்களவர்கள் பௌத்தர்களா அல்லது இந்துக்களா என்பதா பிரச்னை? சிங்களவர்களில் இந்துக்கள் இருக்கிறார்கள் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள் பௌத்தர்களும் இருக்கிறார்கள். அதே போல யூதர்களில் இப்போது கிறிஸ்துவர்களும் உண்டு, இந்துக்களும் கூட உண்டு. பாலஸ்தீன அதாவது இஸ்ரேலில் வாழும் அரபியர்களிலும் முஸ்லீம்களும் உண்டு கிறிஸ்த்வர்களும் உண்டு. இஸ்ரேலை இவர்கள் பெயர் மாற்றி பாலஸ்தீனம் என்று சொல்லிகொண்டார்கள். அவ்வளவுதான். இவர்கள் அரேபியாவிலிருந்து வந்த வந்தேறிகள். தமிழர்கள் இப்போது உலகெங்கும் துரத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களது நாடு ஈழம் இல்லை என்று ஆகிவிடு மா? அவர்கள் திரும்பவும் வந்தால் அவர்களை வந்தேறிகள் என்று சொல்வீர்களா? ஈழத்தின் நிலங்களில் வந்து குடியேறியசிங்களவர்களே தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் வந்தேறிகள். அரேபியர்கள் திரும்பி அரேபியாவுக்கு போவதனல் தான் அங்கே அமைதி வரும். 7
June 19, 2010 17:40
ஈரான், ஈராக், லிபிய, எமன், எகிப்து, ஜோர்டான், சூடான், டூநேசிய, மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாடுகளிலும் இன்னும் மத்திய கிழக்காசிய முஸ்லிம் நாடுகளிலும் யூதர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். இவர்களை அந்த நாட்டு பெரும்பான்மை மக்கள், வந்தேறிகள் என்று சொல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஐரோப்பாவிலுள்ள யூத ராபிகள் கூட, முஸ்லிம் நாடுகளில் வாழும் யூதர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும், . ஐரோப்பாவில்கூட அடிக்கடி யூதர்களுக்கு எதிரான மனோபாவம் அதிகரித்துக் காணப்பட்டாலும் அங்கு காணப்படும் யூதர்களுக்கு ஆதரவான பாதுகாப்பான சட்டங்களால் மட்டுப்படுத்தப்படுகிறது என்றும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். Mr Sebastian. சிங்களவரும் தமிழரும் இலங்கையில் பூர்வ குடிமக்கள் என்றும் சொல்கிறீர்கள். சிங்களவர்களை வந்தேறிகள் என்றும் துதி பாடுகிறீர்கள். ஒன்றும் விளங்கவில்லை. அன்றுதொட்டு இன்றுவரை, சிங்கள மொழி பேசக்கொடியவர்கள்தான் இலங்கையில் பெரும்பான்மை. புத்த மதம் அம்மக்களை ஆக்கிரமித்துக்கொண்டது. பின்னாளில் வந்த கிறிஸ்தவ காலனியாக்கவாதிகளினால், கிறிஸ்தவம் அம்மக்களில் ஒருபகுதியினரை ஆக்கிரமித்துக்கொண்டது. இந்துக்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் யாவரும் வந்தேறிகளா? யார் வந்தேறிகள்? முஸ்லிம்கள் வியாபார நோக்கத்தோடு, அரேபியாவிலிருந்தும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்தும் வந்து, நிலைகொண்டவர்கள். இவர்களும் வந்தேறிகளா? தற்போது மேல்குறிப்பிட்ட அனைவரும் இலங்கைப்பிரஜைகள். யாரும் வந்தேறிகளல்ல. முன்னாள் இலங்கை ஜனாதிபதியும் ஒருதடவை, தமிழர்கள் "வந்தேறிகள்" என்றும் வந்தேறிகள் நாட்டைப் பிரிக்க முற்படுகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். தமிழர்கள் எப்படி சிங்களவர்களை வந்தேறிகள் என்று தூற்றுகிறார்களோ, அதேபோல் தமிழர்கள், வந்தேறிகள் என்பது சிங்களவர்களின் மனோபாவம். 8
June 20, 2010 04:15
அன்புள்ள Sri Lankan.
நான் எழுதியதை சற்றெ படித்து பார்த்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இலங்கையில் ஈழத்தவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலங்கள் இருக்கின்றன. அங்கிருந்து தமிழர்கள் துரத்தப்பட்டு உலகெங்கும் வசித்து வருகிறார்கள். அங்கிருந்த தமிழர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். இப்போது அந்த நிலங்களில் சிங்களவர்கள் குடியேறி ஆக்கிரமிக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். உலகத்திலுள்ள நாடுகளிலிருந்து தமிழர்கள் திரும்பவும் இலங்கைக்கு சென்று அங்கு ஒரு ஈழ நாடு உருவாக்குகிறார்கள் என்று வைத்துகொள்வோம். அப்போது ஈழத்தவர் நிலங்களில் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சிங்களவர்கள் வந்தேறிகளா இல்லையா? அவர்கள் அங்கிருந்து செல்லமாட்டேன் என்று அழும்பு பிடித்தால் ஆதரிப்பீர்களா? அதுமாதிரி உலகெங்கும் இருந்த யூதர்கள் தங்கள் நிலத்துக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அங்கு இஸ்ரேல் நாட்டை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அதற்குள் அங்கு வந்தேறி இருக்கிற அரபியர்கள் இடத்தை விட்டு நகரமாட்டேன். இஸ்ரேலை அழிப்பேன் என்று தகறாரு செய்கிறார்கள். இந்த அரபியர்களின் அழிச்சாட்டியத்துக்கு துணை போகிறீர்கள் நீங்கள். நியாயத்தின் பக்கம் இருங்கள். இங்கே நியாயம் யூதர்களின் பக்கம்தான் இருக்கிறது. 9
June 20, 2010 08:29
செபாஸ்டியன்...says...//அப்படியென்றால், இஸ்ரவேலர்கள் என்று
பைபிளிலும் குரானிலும் இருக்கிறதே. அந்த நாடு என்ன? அந்த மக்கள் யாவர்?.// இஸ்ரவேலர்கள் என்றால் இஸ்ராயீல் என்ற ஒரு மனிதரின் சந்ததிகள்... நீக்கள் நினைப்பதுபோல 'இஸ்ரேல் என்ற நாட்டினர்' இல்லை... நம் கண்முன்னே அரபிகளின் நிலத்தை அபகரித்து அந்த நாடு உருவாக்கப்பட்டதே இரண்டாம் உலகப்போருக்கு பின்னால்தான்... பைபிள், குரான் பிறந்த காலங்களில் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லை... தறிகெட்ட குருட்டு கற்பனைகள் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இணையத்திலோ, நூலகம் சென்றோ வரலாறு படியுங்கள்... ஆப்ரஹாம் (நபி இப்ராஹீம் [அலை])அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்(நபி இஸ்ஹாக்[அலை]) இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார். இவரின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் – இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள். ஈசாக்(நபி இஸ்ஹாக்[அலை])குடைய மகனாக யாகோப்(நபி யஃகூப்[அலை]) என்ற தீர்கதரிசி பிறக்கிறார். இவரே ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார். இவரின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் 'யூதர்கள்' என்று அழைக்கப்படக்கூடிய 'இஸ்ரவேலர்கள்' என்றழைக்கப்டக்கூடிய 'இஸ்ராயீலின் சந்ததிகள்' ஆவர். உங்களைப்படித்தவுடன் எனக்கு ஒரு தேவர் சாதி ஆதரவாள நண்பன் சொல்வதுதான் நியாபகம் வருகிறது... "அந்தக்கால புராண இலக்கிய இதிகாசங்களில் சொல்லப்படும் (தேவலோக)'தேவர்கள்' எல்லாம் நாங்கள்தான், எனவே 'பிராமணர்களை விட உயர்ந்த தேவலோக ஜாதி நாங்கள்தான்" என்றே இன்னும் சொல்லிக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருக்கிறான். என்னசெய்வது...? 10
June 20, 2010 16:12
// பைபிள், குரான் பிறந்த காலங்களில் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லை... //
சரி பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள். இனி இங்கே பேசமுடியாது. பைபிளை பல தடவைபடித்தவன் நான். அதில் இஸ்ரேல் என்ற நாடே இல்லை என்று நீங்கள் சொல்லுவது ஆகாயப்புளுகு. ஒரே ஒரு தடவை பைபிளை படித்துவிட்டு சொல்லுங்கள். சரியா. ஆமாம், டேவிட் சாலமோன் ஆகியோர் எந்த நாட்டின் அரசர்களாக இருந்தார்கள்? 11
June 20, 2010 17:56
நண்பர் செபாஸ்டியனுக்கு,
முஸ்லிம்கள் அரேபியாவில் இருந்து வந்தேறிய குடியேறிகள் என்று உங்களால் சொல்ல முடியாது என்றால் அவர்களும் இஸ்ரவேல் கோத்திரத்தார் தான். ஆனால் அவர்கள் மூஸா நபியின் தூதுத்துவம் மூலம் முஸ்லிமாக மாறியவர்கள். இப்போது இருக்கும் இஸ்ரவேலர்களான யூதர்கள் அவரது தூதை ஏற்று பின்னாளில் அதை மறந்து சத்தியத்தை மாற்றியவர்கள். யூதனைக் கோத்திரம் என்பது இஸ்லாத்தில் உண்டா என்று கேட்காதீர்கள். அது எதற்காக உருவாக்கப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது என்பதை குர்ஆனை முழுவதாக படித்து தெரிந்து கொள்ளவம். இப்படி இருக்க இஸ்ரேல் யூதர்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. மேலும் ஈஸா (ஜீஸஸ்), மூஸா, இப்ராஹீம், நூஹ் போன்ற நபிமார்களும் இஸ்ரவேலர்களை சத்தியத்தின் பால் (இஸ்லாத்தின்) திருப்ப அனுப்பப்பட்ட நபிகள். இதில் ஜீஸஸ் என்பது ரோமானியர்கள் கடவுளாக வணங்கிய கற்சிலை. அதை வைத்துத்தான் பால் மற்றும் ஜான் நபிக்கு இப்படி ஒரு பெயர் கொடுத்தார்கள். 12
June 20, 2010 23:40
ஐயா செபாஸ்டென் அவர்களே நான் அறிந்த எந்த கிருத்துவ மதச்சகோதரரின் வார்த்தையும் எழுத்தும் இந்தளவு அநாகரீகமாக இருக்கவில்லை ஆகையால் தாங்கள் உண்மையில் கிருத்துவ மதததை பின்பற்றுபவரா அல்லது கிருத்துவப் பெயரில் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியுடய வேறு மதச்சகோதரரா? என்று ஐயம் எழுகிறது. 'ஆகாயப்புளுகு' 'இஸ்ரேல் என்ற நாடு இருந்தது அது தான் பாலஸ்தீன்' என்றும், பொய்யர்கள் என்றும் கூறுகிறீர்கள், மேலும் அரபுகள், முஸ்லிம்கள், வந்தேரிகள், மீண்டும் பிச்சை எடுப்பார்கள், போன்றது விவேகமானவர்களுக்கு அழகானதல்ல. பைபிள் எனும் கிரந்தத்தின் நிலை அதில் உள்ள மனிதக்கருத்துகள் பிழைகள் முரண்பாடுகள் இன்னும் பல விஷயங்களினால் அது உண்மையில் முழுமையான புனித வேதமா என்பதே சர்ச்சைக்குரிய நிலையில் அதைப்பற்றி கூறுகிறீர்கள் அதை அனைவரும் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் வரலாற்றில் புதிதாக உருவாக்கப்பட்ட தைப்பற்றியும் அங்கு அன்றாடம் நடக்கும் மனிதாபிமானமற்ற மிருகத்டதனமான படுகொலைகள் செயல்களில் ஈடுபடும் மனிதாபிமான விரோதிகளின் செயல்கலை பற்றீ அல்லது ஆக்கத்தில் உள்ள அந்த அமெரிக்க மாணவியின் படுகொலை சம்பவத்தை பற்றி சற்றும் கவலையோ ஆதங்கமோ தங்களுக்கு இல்லை என்பது ஆச்சரியமான / வேதனையான ஒன்று. இந்த போக்கை கைவிடுங்கள் அதுவே நீங்கள் கர்த்தரையும் பரலோக இராஜ்ஜியம் எனும் மறு உலக வாழ்க்கையை / சுவர்கத்தை நரகத்தை நம்பியவரென்றால் உங்களுக்கும் நல்லது. 13
June 21, 2010 00:00
இவ்வளவு அநாகரிகமாக கிறிஸ்துவ மதத்தை பற்றியும் பைபிளைப்பற்றியும் இங்கே எழுதுகிறீர்கள். இதுதான் உங்கள் மார்க்கம் உங்களுக்கு சொல்லிக்கொடுப்பதா?
பைபிள் பொய் என்று நீங்கள் சொன்னால், திருப்பி மற்றவர்கள் உங்களது குரான் பொய் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? நீங்கள் தான் அநாகரிகமாக பேசி மற்றவர்களை அநாகரிகமாக பேசும்படி தூண்டுகிறீர்கள்.உங்களது மதத்தை பெருமையாக பேசுங்கள். யாரும் தடுக்கபோவதில்லை. மற்றவர்களது மதங்களை பொய் என்றோ அவர்களது புத்தகங்களை கேவலப்படுத்தியோ பேசாதீர்கள். அது நாகரிகமான மனிதனுக்கு அழகல்ல. இவ்வளவு அநாகரிகமாக நீங்கள் பேசும்போதும் இதற்கு பதில் கூறாமல் இருக்கும் கிறிஸ்துவர்களே நாகரிகமானவர்கள். இதில் அய்யமென்ன? அது கிடக்கட்டும். இஸ்ரேல் என்று ஒரு நாடே இருந்ததில்லை என்று சொன்னீர்களே? டேவிட் சாலமன் ஆகியோர் எந்த நாட்டின் அரசர்களாக இருந்தார்கள்? அந்த நாட்டின் பெயர் என்ன? அந்த நாட்டின் மக்களின் பெயர் என்ன? 14
June 21, 2010 05:25
செபாஸ்டியண்ணாச்சி!
பைபிளைப் பல தடவ படிச்சிருங்கீங்களா? அப்ப இதையும் படிச்சிருப்பீங்களே: தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே (ரோமர் 9:6) அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும் (ரோமர் 9:27) நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன் (பிலிப்பியர் 3:5) நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார் (லூக்கா 22:30) அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 19:2 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன (வெளி 21:13) ____________________ இஸ்ரவேல் எனப்படுகின்ற நபி யாக்கூபுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள். அந்தப் பன்னிரண்டு பிள்ளைகளும் அவர்களின் சந்ததியினரும் இஸ்ராயீலின் பன்னிரண்டு கோத்திரத்தார் என்பதாக எங்கள் இறைவேதமும் அறிமுகப் படுத்துகிறது. பன்னிருவருள் ஒருவரான யூஸுஃப் (யோசேப்பு) நபி, தான் கண்ட கனவைத் தன் தந்தையிம் கூறுகிறார்: "என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்" என்று கூறியபொழுது. (அல்குர்ஆன் 12:4). அதற்குத் தந்தை இஸ்ராயீல் கூறுகிறார்: "என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 12:5). இஸ்ராயீலின் 12 கோத்திரத்து மக்களுக்காக மூஸா நபி (மோஸஸ்) பாறையில் அடித்து நீர் தருவித்ததும் இங்குக் குறிப்பிடத் தக்கது: மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, "உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூருங்கள் (அல்குர்ஆன் 2:60). எனவே, இஸ்ராயீல் என்ற பெயர் யாகூப் நபி என்ற மனிதருக்கான பெயரே அன்றி மண்ணுக்கான பெயர் அல்லண்ணாச்சி! பி.கு: பிலிப்பியர் 3:5இல் குறிப்பிடப்படும் 'பென்யமீன்' என்பவரும் யூஸுஃப் நபியும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். 15
June 21, 2010 15:12
அன்பர் செபாஸ்டியன்,
உங்களுக்காக ஒரு சுட்டி கொடுத்திருந்தேன். நீங்கள் இன்னும் வாசிக்கவில்லை என்று தெரிகிறது. அந்தச் சுட்டியிலிருந்து ... //யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு. இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை// 16
June 21, 2010 15:22
sebastian david salamon enbavar yar endru theriyuma, avarukku eppadi patta padai irunthathu endru theriyuma, avarukku vasa paduthikoduka pattathu ennavendru theriyuma,unmayil avar peyar ennavendru theriyuma athargu muthalil pathil sollungal unglukku nangal pathil solkirom
17
June 21, 2010 18:20
செபஸ்டின், நேற்று காரில் எண்ணெய் ஊற்றி இயக்கலாம் என்பதை பற்றி முதலில் கன்டுபிடிதது ford motors நிறுவனம் என்று. அதற்கும் அமெரிக்கா பேராசை படுவதற்கும் என்ன சம்பந்தம். அவர்கள் அதை கன்டுபிடித்தால் பேராசை படலம் என்பது உங்கள் கருத்து. எதை எதற்க்கு சொன்னீர்கள். அதே போல் டேவிட் சாலமன் பற்றி கேட்டேன். அதில் ஒரு தவறு, சாலமன் மட்டும் பற்றி சொல்லவும். இதைப் போல் கி. பி 7ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை சற்று ஆராய்ந்து பார்த்தால் உலகில் அரிவியல் அறிஞர்களாக இருந்தது யார் என்று தெரியும். மற்றும் ஒன்று நாங்கள் பைபிளை ஏற்றுக் கொள்ள முடியது. என்றால் அது பைபிள் என்ற பெயரில் ஈஸா நபிக்கு கொடுக்கப்படவில்லை. அதன் பது காபிருக்கும் உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை. ஈஸா நபிக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது இன்ஜீல் தான். அதைப்போல் நீங்கள் பழைய ஏற்பாடு என்று சொல்லுவது மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்டு மனித கரங்களால் திருத்தப்பட்ட தவ்ராத் அகும். குர்ஆன் 1400 நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் விட்ட சவாலை இன்றும் விடுகிறது. உங்களால் முடிந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொன்டு வாருங்கள் அல்லது அத்தியாயத்தில் ஒரு பகுதியாவது கொன்டு வாருங்கள். உங்களது நண்பரையும், எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், உங்களால் முடியாது முடியவே முடியாது என்றும் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். 1400 நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அதைப் போலவே இன்றும் இருக்கிறது. ஓர் எழுத்து கூட மாறாமல். இனிமேலும் இருக்கும் உலகம் அழியும் வரை. அது தன்னொளியில் உயரும் வரை. யென்னன்ட்ரல் அதற்கு நாமே பாதுகாவலன் என்றும் இறைவன் குர்ஆனில் கூறுகிறான். மேலும் குர்ஆன் படைக்க பட்டது அல்ல. அல்லாஹ்வின் பேச்சே ஆகும் இதையும் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
__________ சகோதரர் முஸ்தஃபா, தாங்கள் ஆங்கிலத்தில் எழுதியது தமிழ்படுத்தப்பட்டுள்ளது. தயவுசெய்து கீழ்க்காணும் சுட்டியைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுங்கள். நன்றி! http://www.satyamargam.com/Tamil-Typing 18
June 21, 2010 18:49
சஃபி தம்பி (நீங்க்ள் என்னை அண்ணாச்சி என்று கூப்பிட்டால் நீங்கள் தம்பிதானே?)
நான் கேட்டதற்கு பதில் சொல்லலாமே? டேவிடும் சாலமனும் எந்த நாட்டை ஆண்டார்கள்? அந்த நாட்டின் மக்களுக்கு பெயரென்ன? இஸ்ரவேல் வமிசத்தார்தான் யூதர்கள். இஸ்ரவேலர் என்று குறிப்பிடுவது கிறிஸ்துவின் போதனைகளால் கிறிஸ்துவர்களாக ஆனவர்களை. இஸ்ரவேல் வமிசத்தாரின் நாடு இஸ்ரேல். கிறிஸ்து இஸ்ரேல் என்பது metaphor ஆக கடவுளின் கிருபையால் உருவாவது என்று பரலோக சாம்ராஜ்யத்தை கூறுகிறார். ஆனால் இஸ்ரவேல் வமிசத்தார் என்னும் யூதர்கள் அவர்களது நாடு இஸ்ரேல் என்பது பைபிள் காலம் முதற்கொண்டு உள்ளது. இங்கோ பைபிளை விட முக்கியமா பா இராகவனின் எழுத்து? நான் ஒரு புத்தகம் எழுதி, அரேபியர்கள் என்பவர்கள் வங்காளத்தில் பிச்சை எடுத்துகொண்டிருந்தவர்கள் என்று எழுதினால் அதனை மேற்கோள் காண்பிப்பீர்களா? இஸ்ரேலை ஏன் யூதர்கள் கும்மிடிப்பூண்டியில் அமைத்திருக்கலாமே? ஏன் இஸ்ரேலில் அமைக்க விரும்பினார்கள். அது அவர்களது பூர்வீக நாடு என்றுதானே? இறுதி இதுதான். இஸ்ரவேலர் வமசத்தினரன யூதர்கள் வாழ வேண்டிய நாடு இஸ்ரேல். அதில் வந்தேறிகலான அரபியர்கள் வெளியேறுவதன் மூலமே அங்கு அமைதி வரும். முஸ்லீமாக யார் இருந்து என்ன அநியாயம் செய்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்று நீங்கள் கருதினால், நான் இங்கே சொல்ல ஒன்றுமில்லை 19
June 21, 2010 21:11
அன்புள்ள செபாஸ்டியன், யார் இந்த யூதர்கள்? “யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா", கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு"என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது,ஒருசம்பவம்நடந்தாகவிஞ்ஞானபூர்வமாகநிரூபிக்கபபட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு விஞ்ஞானப்பூவமான நிரூபணம், சான்றுகள் என இதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார். இதை மற்ற சமயத்தவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி துளியும் அக்கறை இல்லை. பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர். ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர். சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை. பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன். 1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை. டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராஜதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில்கிறிஸ்தவர்களாகவும் இஸ்லாமியராகவும், மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அஸ்த்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது. யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராஜதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர். நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன. காலப்போக்கில் பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்" கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. மே 17 ஆம் நாள் சோவியத் ரஷ்யா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இஸ்ரேலை மெல்ல மெல்ல அங்கீகரித்தன. இந்தியாவின் நரசிம்மராவ்தான் இஸ்ரேலை அங்கீகரித்தது. இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது" என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத நம்பிக்கைகளின் அடிப்படையில் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், அதற்கு தடையாக இருக்கும் பூர்வகுடிமக்களான பாலஸ்தீனர்களை முற்றிலும் அழித்தொழித்துவிட்டாவது தமது 'சரித்திர ஆதாரத்தை'(?) எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர். உலகின் ஒவ்வொரு மத நம்பிக்கையாளரும் தமக்குள் ஒவ்வொரு நம்பிக்கையை வைத்துள்ளனர். அதெயல்லாம் அனைத்து சமய மக்களிடமும் பொது வரலாறாக திணிக்க முடியாது. நான்கூட இங்கே என் இஸ்லாமிய நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து எதையும் உங்களுக்கு சொல்லவில்லை என்பதை கவனிக்கவும். இறைத்தூதர்களாகிய-முஸ்லிம்களாகிய-அரசர்களாகிய தாவூது நபியும் சுலைமான் நபியும் ஆண்டதாக சொல்லப்படும் ராஜ்ஜியத்திற்கு 'இஸ்ரேல்' என்ற பெயர் குரானில் சொல்லப்படவில்லை என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருந்திருப்பேன். மேலும் அதன் எல்லைகள், பல்கீஸ் ராணியை சுலைமான் நபி திருமணம் புரிந்துவிட்டபின்னால், இப்போதைய ஏமன் நாடு வரை இருந்ததாகவும் இஸ்லாமிய நம்பிக்கையின் படி அறியலாம். ஆக, இஸ்ரவேல் சந்ததியில் யூத, கிருத்துவ, முஸ்லிம்கள் அனைவரும் அடங்குவர். இப்போதுள்ள இஸ்ரேல் என்ற நாட்டில் உள்ள யூதர்கள் அதன் பூர்வகுடிகள் என்பதற்கு சரித்திர சான்று எதுவும் இல்லாத நிலையில், வந்தேறிகள் என்பதற்கு மட்டுமே அவர்களே ஆதாரம் ஆக உள்ள நிலையில், அங்கு வசித்து வந்த பாலஸ்தீநியர்கள்தான் மண்ணின் பூர்வீக மைந்தர்கள் என்பதற்கு அங்கு அவர்கள் பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்து வந்ததும்-வருவதும் வரலாற்று சான்று என்பதனாலும், இப்போதுள்ள யூதர்களுக்கு பாலஸ்தீனிய மண்ணில் எந்த உரிமையும் கிடையாது என்பது தெள்ள தெளிவாகிறது. (நன்றி:தமிழ் செய்தி மற்றும் விமர்சனம் தளம்) 20
June 21, 2010 22:12
ivalavu sollium nan pudicha muyalukku muunnu kallunnu sollrar sebastian
21
June 21, 2010 23:36
அன்புள்ள செபாஸ்டியன்
'தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் - அதற்கு அவ்விருவரும்: 'புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் - 27:15) // அது கிடக்கட்டும். இஸ்ரேல் என்று ஒரு நாடே இருந்ததில்லை என்று சொன்னீர்களே? டேவிட் சாலமன் ஆகியோர் எந்த நாட்டின் அரசர்களாக இருந்தார்கள்? அந்த நாட்டின் பெயர் என்ன? அந்த நாட்டின் மக்களின் பெயர் என்ன? // பைபிளில் வருகின்றது. 1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.......... 2 சாமுவேல் 11 : 1 - 5 மேலும் http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_05.html 22
June 22, 2010 00:20
அன்புள்ள சத்தியமார்க்கம் இணையத்தள ஆசிரியருக்கு,
நாகரிகமான முறையிலும் சத்தியத்தை அறிந்துகொள்ளும் நோக்குடனும் முஸ்லிமல்லாத சகோதரர்கள், இந்த தளத்தில் கேள்விகள் எழுப்புகிறார்கள். வரவேற்கத்தக்கது. நமது சகோதரர்களும் திறமையான பதில்களை அளிக்கிறார்கள். சில சகோதரர்கள் காழ்ப்புணர்ச்சியுடனும் எமது புனித மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் இழிவுடன் விமர்சிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் செபஸ்தியான் என்பவர், முஸ்லிம்களையும் அரேபியர்களையும் வந்தேறிகள் என்று சொல்லி ஆரம்பித்தார். பிறகு, பிச்சைக்கார அரேபியர் என்கிறார். பாலஸ்தீன முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் அமைதிக்கு தடையானவர்கள் என்றும் உளறுகிறார். பல தசாப்தங்களாக பாரம்பரிய தாய்நிலத்தை இழந்து, சொல்லொனாத் துயருறும் எமது பாலஸ்தீனச் சகோதரர்களை இறுமாப்புடன் சாடும், இவரை தங்களது இணையத்தளத்தில் இடங்கோடுத்ததை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும். தயவுசெய்து இப்படிப்பட்டவர்களின் வருகையை தவிருங்கள்! 23
June 22, 2010 01:56
srilankan,
நான் முஸ்லீம்களை வந்தேறிகள் என்று சொல்லவில்லை. இஸ்ரேலில் உள்ள அரபியர்களைத்தான் வந்தேறிகள் என்று சொன்னேன். அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவர்களாக் இருந்தாலும் சரி, அரேபியர்கள் இஸ்ரேலில் வந்தேறிகள்தான் என்று சொன்னேன். அராபத்தின் காரியதரிசியாக இருந்தது ஒரு கிறிஸ்துவ அரேபிய பெண்மணி என்பது எனக்கு தெரியும். அவர் ஃபடாவின் முக்கிய பொறுப்புக்கும் வந்தார். ஃபடாவில் பல கிறிஸ்துவ அரபியர்கள் இருக்கிறார்கள். அது இங்கே பிரச்னை அல்ல. பாலஸ்தீன அரபியர்கள் இஸ்ரேலில் வந்தேறிகளே. ஒரு கேள்வி. பாலஸ்தீன அரபியர்கள் முழுவதும் யூதத்துக்கு மதம் மாறினார்கள் என்று வைத்துகொள்ளுவோம். இன்றைய யூதர்கள் அனைவரும் இஸ்லாமுக்கு மதம் மாறினார்கள் என்று வைத்துகொள்ளுவோம். அப்போதும் அரபியர்களுக்கு சப்போர்ட் செய்வீர்களா? நீங்கள் வந்தேறி என்று சொல்லும் முன்பு யூதர்களாக இருந்து இஸ்லாமியராக ஆனவர்களுக்கு சப்போர்ட் செய்வீர்களா? 24
June 22, 2010 03:09
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கும். நீண்ட இடைவெளிக்குப்பின் இத்தளத்தில் பின்னூட்டம் பதிகிறேன்.
இத்தள நிர்வாகிகளுக்கும் எனது சலாமை தெரிவித்துக் கொள்கிறேன். மா சலாம். அப்துல் அஸீஸ். 25
June 22, 2010 10:30
சகோ. M Muhammad,
மன்னர் சாலமோன் ஆண்ட எருசேலம்/ஜெருசேலம் பற்றிய உங்களுடைய குறிப்பு அரைகுறையாக உள்ளது. ஜெருசேலம் என்பது சாதாரணப் பெயரில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புனிதப் பெயராகும். பைபிளின்படி கர்த்தரின் இளைய துணைவியின் பெயர்தான் அது: ___________________ 1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2. மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். 3. அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. 4. அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும் அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம் (எஸெக்கியேல் 23:1-4) http://www.tamil-bible.com/lookup.php?Book=Ezekiel&Chapter=23 ________________ முடிந்தால் எஸேக்கியேலின் 23ஆவது அத்தியாயத்தை முழுதும் படித்துப் பாருங்கள். செபாஸ்டியண்ணாச்சி, நீங்களும் (இன்னொரு முறை) எஸேக்கியல் படித்துவிட்டு சகோ. M Muhammadக்கு பதில் கொடுங்கள். 26
June 22, 2010 10:49
அன்புச் சகோதரர் அப்துல் அசீஸ்,
தங்களை மீண்டும் இங்குச் சந்திப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! தங்கள் ஆதரவு தொடரட்டும்! 27
June 22, 2010 10:52
மிஸ்டர் ஸெபாஸ்டின்
உங்கள் எழுத்து மூலம் நீங்கள் பெரிய கோடீஸ்வரர் என்றும் பல அரேபிய ஷேக்குகள் உங்களிடம் பிச்சை எடுக்கக திரிவதாக உங்களுக்கு கனவு வருவதாக உணரமுடிகிறது. நீஙக்ள் அவcஇயம் மனோ வைத்தியரை அணுகுவது நல்லது. யதார்தத்தில் உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மற்றவர்கள் தான் இன்று அரேபிய ஷேக்களிடம் பிச்சை பெருவதும் காலில் விழுந்து கிடப்பதையும் காண முடிகிறது. இது உங்களுக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும் ஆனால் உங்களைப் போனறவர்களுக்கு இது போன்று தான் பதில் அளிக்கப்பட வேண்டும் அதுவே விரைவில் புரியும். சகோதரர்கள் பலரும் பல அரிய தகவல்கள் வழங்கியுள்ளார்கள் பொறுமையாக படித்து விட்டு வாருங்கள் மேலும் சந்தேகங்கள் இருப்பின் சந்திப்போம். இறுதியாக ஒரு தகவல் அரேபியர்கள் என்பது முஸ்லிம்களை மட்டும் குறிக்கும் என்று நீஙக்ள் நினைப்பீர்களானால் அதுவும் தவறு. அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட இலட்சக்கணக்கான முஸ்லிம் அல்லாதவர்கள் அரேபிய மைந்தர்களாக கால காலமாக அரேபிய மண்ணில் நிம்மதியாக வாழ்ந்தும் வருகின்றனர். 28
June 22, 2010 11:03
அன்புள்ள செபாஸ்டியன்,
வரலாற்றுக்கு முரணான தகவல்களை எங்கோ படித்து விட்டு, பிழையான கருத்துருவாக்கத்தை இங்கு நுழைக்க முயல்கிறீர்கள். "இஸ்ரேல்" என்றொரு தேசம் முன்னர் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை முதலில் இங்கு வையுங்கள். "இஸ்ரவேல்" என்பது ஒரு சமுதாயத்தைக் குறிக்கும் வாசகம் மட்டுமே. "இஸ்ரேல்" என்றொரு தேசம் முன்னர் இருந்ததில்லை. "பைபிளை" ஆதாரத்துக்குத் துணைக்கு அழைத்துள்ளீர்கள். "பைபிள்" கூறுவது அனைத்தையும் உண்மை தான் என்று நம்புவீர்களானால் எனக்கு அதன் மேல் பலக் கேள்விகள் உண்டு. நீங்கள் பதிலளிக்கத் தயாரா என்பதைத் தெரிவியுங்கள். - பகுத்தறிவாளன். 29
June 22, 2010 12:30
அன்பர்களே,
ஒரு கேள்வி. பாலஸ்தீன அரபியர்கள் முழுவதும் யூதத்துக்கு மதம் மாறினார்கள் என்று வைத்துகொள்ளுவோம். அவர்களை அரபிய யூதர்கள் என்று வைத்துகொள்வோம். வெளிநாடுகளிலும், இன்னும் இஸ்ரேலிலும் வாழும் இன்றைய யூதர்கள் அனைவரும் இஸ்லாமுக்கு மதம் மாறினார்கள் என்று வைத்துகொள்ளுவோம். இவர்களை இஸ்ரேலிய முஸ்லீம்கள் என்று வைத்துகொள்வோம் இப்போது நீங்கள், அரபிய யூதர்களுக்கு (முன்னாள் பாலஸ்தீனர்களுக்கு) ஆதரவாக இருப்பீர்களா? அல்லது இஸ்ரேலியர்கள்/முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பீர்களா? 30
June 22, 2010 21:09
அன்பு சகோதரர் செபாஸ்டியன்
// நீங்கள், அரபிய யூதர்களுக்கு (முன்னாள் பாலஸ்தீனர்களுக்கு) ஆதரவாக இருப்பீர்களா? அல்லது இஸ்ரேலியர்கள்/முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பீர்களா // இஸ்லாம், மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தினர் என்றும், இனத்தின் அடிப்படையில் ஆதரவும் எதிர்ப்பும் வெளிப்படுதுவது அறியாமை என்றும் எச்சரிக்கிறது, நீதத்தை கடைபிடிக்குமாரும் ஏவுகிறது. பார்க்க அல் குர் ஆன் அத்தியாயம் 4 : வசனம் 1,அத்தியாயம் 49 : வசனம் 13, அத்தியாயம் 5 : வசனம் 2, அத்தியாயம் 4 : வசனம் 135..... பார்க்கவும் : http://www.satyamargam.com/Quran 31
June 22, 2010 23:19
நன்றி திரு.செபாஸ்டியன்.
கட்டக்கடைசியாக உங்களுக்கு எண்ண வேண்டும் என்பதை சுற்றிவளைக்காமல் நேரடியாக முகமூடியை கழட்டிவிட்டு கேட்டமைக்கு நன்றி. சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் செய்தவன்/அநீதி இழைத்தவன் முஸ்லிம் என்றாலும் அவனுக்கு எந்த பச்சாதாபமும் காட்டாது இறைவனுக்கு--மறுமை நாளுக்கு பயந்தவர்களாய், இஸ்லாமிய நெறி பேணியவர்களாய், அக்கொடியவனுக்கு எதிராக சாட்சி சொல்லுதலும் அவனுக்கு தண்டனை வாங்கித்தருவதும், அவனுக்காக பரிந்து பேசாமல் இருப்பதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. (உதாரணம்: சில ஹிந்துத்வா அமைப்புகளில் தேசத்தந்தையை கொன்ற நாதுராம் கோட்சே இன்றும் ஹீரோவாக(?!) உலாவரும் நிலையில், மும்பையில் அப்பாவி மக்களை கொன்ற அஜ்மல் கசாபுக்கு ஆதரவாக பேசிய ஒரு இந்திய முஸ்லிம் அமைப்பையாவது காட்டுங்களேன்... லட்சக்கணக்கான அப்பாவி யூத மக்களை அந்நாட்டு கிருஸ்துவ மதகுருக்களின் அனுமதியுடன், மவுன ஆதரவுடன் நியாயமான எந்த காரணமுமின்றி கொன்று குவித்த ஹிட்லர் ஒரு உண்மையான கிருஸ்துவனாக இருக்க முடியுமா என்றும் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்) ஆனால்... அந்தோ பரிதாபம், இந்த பாலஸ்தீன பிரச்சினையில், உலகின் கிருஸ்துவ வல்லரசுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேல் பக்கம் இருக்கின்றனர். இஸ்ரேலோ அநியாத்தின் பக்கம்-அக்கிரமத்தின் பக்கம் இருக்கின்றனர். உங்கள் விருப்பப்படி, இஸ்ரேல் என்ற நாட்டில் உள்ள அனைத்து யூதர்களும் முஸ்லிம்களாகி விட்டால், (...இறைவா...! இதற்கு உன் அருள் வேண்டுகிறேன்..!) அவர்களே தாமாகவே முன்வந்து தவறை உணர்ந்து மனம்வருந்தி பாவமன்னிப்பு கேட்டவர்களாக ஆயுத பலாத்காரத்தால் அபகரித்த நாட்டை பாலஸ்தீநியர்களிடம்---அதாவது உங்கள் விருப்பப்படி : பாலஸ்தீனியர்கள் அனைவரும் யூதர்களாகி விட்டாலும் கூட... (அப்படி நினைப்பதிலிருந்தும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக...) ஒப்படைத்துவிட்டு/ஆரம்பத்தில் அற்ப விலை கொடுத்து நயவஞ்சகமாக வாங்கிய சில நிலங்களை விற்றுவிட்டு, எங்கிருந்து வந்தார்களோ அங்கே சென்று விடுவார்கள். ஏனென்றால் அவர்கள்தான் முஸ்லிம்களாகி விட்டனரே...!!! பிறரிடம் அபகரித்த நிலம் முஸ்லிம்களுக்கு ஹராம்-விலக்கப்பட்டது- அல்லவா? அதைத்தான் உலக முஸ்லிம்களும் அனைவரும் சரியானது என்பர். ...... ...... ...... ...... ...... சரி, திரு.செபாஸ்டியன்..... இப்போது உங்களிடம் ஒரு 'ட்ரில்லியன் டாலர் கேள்வி' : இந்த 'இஸ்ரேல்' என்ற ஒரு நாட்டை கலைத்துவிட்டு--- உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிட்டு--- யூத மதத்தையும் துறந்து விட்டு-- இஸ்லாத்தை தழுவி முஸ்லிம்களாகி--- ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களை விட்டுவிட்டு--- வெளியேறி வந்த இந்த 'புதிய முஸ்லிம்களை'..... உலகப்போர்கள் காலத்தில் யூதர்களை(அதாவது...இவர்களை) ஓட ஓட விரட்டிய அந்த அனைத்து வல்லாதிக்க நாடுகளும், தத்தங்கள் நாடுகளில் (ஆப்ரிக்க,ஐரோப்பிய,வட/தென்,அமெரிக்க, மேற்காசிய கிருஸ்துவ நாடுகள்) மீண்டும் தங்கள் நாட்டு குடிமக்களாக ஏற்றுக்கொள்வார்களா? ""....அகதிகளாகக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...."" மேற்கத்திய நாடுகளின் விமான நிலையங்களில், 'இமிக்ரேஷன் கிளியரன்சு'களில் ஒரு முஸ்லிம் நின்றால் என்னா கதிக்கு ஆளாகிறார் என்று நிகழ்கால உண்மையை நினைக்கையில்... இக்கேள்வியை தட்டச்சும்போதே... எனக்கே விரல்கள் நடுங்குகின்றன... போதும் திரு.செபாஸ்டியன்... ஒரு இஸ்ரேலில் முஸ்லிம்கள் படும் பாடு போதும்... பற்பல இஸ்ரேல்களா... வேண்டவே வேண்டாம்.... 32
June 23, 2010 00:20
//இப்போது நீங்கள், அரபிய யூதர்களுக்கு (முன்னாள் பாலஸ்தீனர்களுக்கு) ஆதரவாக இருப்பீர்களா? அல்லது இஸ்ரேலியர்கள்/முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பீர்களா?//
சந்தேகமேயில்லாமல் அநியாயம் இழைக்கப்பட்ட/படுபவர்களுக்குத் தான் உண்மையான முஸ்லிம்கள் ஆதரவாக இருப்பர். உங்கள் சந்தேகத்திற்குப் பதில் கிடைத்து விட்டதா அன்பரெ செபாஸ்டியன்? என் கேள்விக்கு இப்போது நீங்கள் பதிலளிக்கலாம் தானே? 33
June 23, 2010 00:39
// நீங்கள், அரபிய யூதர்களுக்கு (முன்னாள் பாலஸ்தீனர்களுக்கு) ஆதரவாக இருப்பீர்களா? அல்லது இஸ்ரேலியர்கள்/முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பீர்களா //
இலங்கையில் உள்ள சிங்களவரை, இவர் வந்தேறி என்று குறிப்பிடுகிறார். சிங்களவர் இருக்கும் இடத்தில், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தால், இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களை வந்தேறிகள் என்று சொல்வாரா? சொல்வதை விட்டு மூச்சுக்கூட காட்ட மாட்டார். இல்லையில்லை, வந்தேறி என்று சொல்லவில்லை. "வைத்துக்கொள்வோம்" என்றுதான் சொன்னேன் என்று மழுப்புவாரா? சகோதரர்களே, செபஸ்டியன் என்பவர் கிறிஸ்தவ மதத்தையோ அல்லது வேறெந்த மதத்தையும் சேர்ந்தவரல்ல. அமைதியாக வாழும் மக்களுக்கிடையே விரோத மனப்பான்மையையும் குரோதங்களையும் ஏற்படுத்தி, இன்பங்காணும் ஓர் உண்மையான வந்தேறி. இப்படிப்பட்டவர்களை நாம் இனங்கண்டு, புறக்கணிப்போம். 34
June 23, 2010 00:52
அனைவருமே நான் குறிப்பிட்ட சூழலில் யூதர்களுக்குத்தான் ஆதரவாக இருப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் நியாய உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
இப்போது, அங்குள்ள அரபியர்கள் (பாலஸ்தீனர்கள்) வந்தேறிகள்தான், கடந்த காலத்தில் அங்கிருந்த யூதர்கள் இந்த அரபியர்களால் துரத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நான் நிரூபித்தால், இன்று அங்குள்ள இஸ்ரேலிய யூதர்களுக்கு ஆதரவாகவும் அழும்பு பண்ணும் பாலஸ்தீன அரபியர்களுக்கு எதிராகவும் கட்டுரையை மாற்றி எழுதுவீர்களா? 35
June 23, 2010 02:05
செபாஸ்டிண்ணாச்சி,
இஸ்ரேல் எனும் நிலப்பரப்பு யூதர்களுக்கு சொந்தமானது என்பதை தக்க சான்றுகளுடன் நிறுவுங்கள். அடுத்த நிமிசம், அரேபியர்களை வெளியேறுமாறு ஒரு ஆணை பிறப்பித்து வெளியேற்றி விடுகிறேன். நிலா, நீங்களும் முஸ்லிம்கள் அபகரித்ததை சான்றுகளுடன் நிறுவுங்கள். எல்லாத்தியும் திருப்பிக் கொடுக்கும்படி ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். சத்தியமார்க்கம் குழுவினருக்கு, வாசகர் ஸ்ரீலங்கன் கோரியிருக்கும் கருத்தைப் பரிசீலியுங்கள். செபாஸ்டியனும் நிலாவும் போட்டிருக்கும் பின்னோட்ட நேரத்தைக் கவனியுங்கள். பின்னோட்டம் போடுவதற்கு ஈமெயில் கேட்கிறீர்களல்லவா? இருவருக்கும் மெயில் அனுப்பி அந்த முகவரிகளை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 36
June 23, 2010 10:47
Dear Brothers
// அனைவருமே நான் குறிப்பிட்ட சூழலில் யூதர்களுக்குத்தான் ஆதரவாக இருப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் நியாய உணர்வுக்கு தலை வணங்குகிறேன் // ????????? This so called Sebastian is either lacking understanding or pretending to be ignorant, Ignoring all facts presented and posing silly illogical questions and wasting time. Now another NILA has joined with similar questions without understanding or respecting the law of land/ Judiciary, property, disputes, power etc. Brothers have explained what Islam means , teaches and How / what any Muslim should be and do. // நான் ஆதாரத்துடன் இந்துக்கோவில்கள் முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டு மசூதிகளாக ஆக்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் காட்டினால் அந்த கோவில்களை மீண்டும் இந்துக்களுக்கே திருப்பிக்கொடுத்துவிடுவீர்களா? // !!!!!! If you still pose such questions the only answer is " ISLAM"( Surrendering to the will of GOD Almighty) should rule the minds and world" to resolve all problems faced by Mankind as a whole, Because this (ISLAM ) is the only way of life for mankind given by the creator of mankind and everything else. To know more click the below links : http://www.ShareIslam.com http://www.peacetv.tv/watchpeacetv.php 37
June 23, 2010 10:56
ஆஹா..! சகோதரர்.செபாஸ்டியன்...//கடந்த காலத்தில் அங்கிருந்த யூதர்கள் இந்த அரபியர்களால் துரத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நான் நிரூபித்தால்//---உங்கள் ஆதாரங்களை இஸ்ரேலிடம் சமர்ப்பியுங்கள்.
இஸ்ரேல் முழுதும் ஒன்றும் கிடைக்காமல் வெறுத்துப்போய், கடைசியாய், மஸ்ஜித் அல் அக்சாவின் எல்லா பக்கங்களிலும் பெரும் பெரும் அகழ்வாராய்ச்சிகளை பல வருடங்களாக நடத்தியும் இதுவரை ஒன்றும் பெயரவில்லையாம். உங்கள் 'ஆதாரங்களுடன்'(?) ...சீக்கிரம் இஸ்ரேல் செல்லுங்கள். (பைத்துல் முகத்திசாவது சேதப்படாமல் உங்கள்மூலம் தப்பிக்கட்டுமே). அதற்குப்பின்னால் உங்களுக்கு சத்யமார்க்கத்திடம் எல்லாம் கோரிக்கை வைக்க ஒன்றும் இருக்காது. இஸ்ரேலிடம் மட்டுமே இருக்கும். 'கைமாறாக என்னை இஸ்ரேலின் ஜனாதிபதி ஆக்குங்கள்' என்று..!!! 38
June 23, 2010 13:34
//பின்னோட்டம் போடுவதற்கு ஈமெயில் கேட்கிறீர்களல்லவா? இருவருக்கும் மெயில் அனுப்பி அந்த முகவரிகளை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்//
இது என்ன லாஜிக்? இஸ்லாத்தின் எதிரிகள் கிருஸ்துவப் பெயர்களிலும் முஸ்லிம் பெயர்களிலும் ஈமெயில் ஐடிகள் வைத்துக் கொள்ள முடியாதா? 39
June 23, 2010 15:15
அஸ்ஸலாமு அலைக்கும்.,
நம் அனைவருக்கும் ஓரிறையின் நேர்வழி கிடைக்கட்டுமாக அன்பர் செபாஸ்டியன் தங்கள் கருத்து பதிவை 18 ம் தேதியிலிருந்து கண்டு வருகிறேன்., பொதுவான எந்த ஒரு விஷயம் குறித்து விவாதிக்கும் போது ஒரே விசயத்தில் இரு எதிர்மறை கருத்துக்கள் ஏற்பட்டால் அக்கருத்தில் எது உண்மையென அறிய நாம் மூன்றாம் நிலையிலிருந்து இவ்விரு கருத்துகளையும் ஆராய்ந்து அறிய முற்பட்டால் மட்டுமே உண்மையான தெளிவு கிடைக்கும். ஆகவே,முஸ்லிம்களாகிய நாங்கள் பலஸ்தீன மக்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் என நீங்கள் எண்ணினாலோ அல்லது எது எப்படியிருந்தாலும் நான் முஸ்லிம்களுக்கு எதிராகதான் சப்போர்ட் பண்ணுவேன் என எண்ணினாலோ ஒரு தெளிவான பார்வை கிடைக்க வாய்ப்பே இல்லை அன்பர் நடுநிலையோடு சிந்திப்பீர் என எண்ணி தொடர்கிறேன். என் சகோதரர்கள் எவ்வளவோ சான்றுகளை இட்டும் தாங்கள் அவைகளுக்கு தர்க்க ரீதியாக எந்த மறுப்போ உங்கள் வாதத்தை விளக்க எந்த வரலாற்று ஆவண பதிவோ இதுவரை முன் வைக்கவில்லை. தொடக்கத்திலிருந்தே கூறு போடப்பட்ட பலஸ்தீனத்தை யூதர்களின் பிறவி தேசமாக நிறுவ முயல்கிறிர்கள். சரி தெரியாமல் தான் கேட்கின்றேன்., யூதர்களே அம்மண்ணின் பூர்விக குடிகள், மீண்டும் அங்கு 1948 ல் புலம்பெயர்ந்து வந்ததது உண்மையென்றால். இடைப்பட்ட காலத்தில் அவர்களை அங்கிருந்து விரட்டியது யார் ? ஏன் விரட்ட வேண்டும்? அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்படும்போது சம காலத்தில் வாழ்ந்த மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 1948 க்கு பிறகு இரேலிய உருவாக்கத்திற்கு வேண்டுமானால் ஆதாரம் இருக்கிறது. தாங்கள் சொல்வதுபோல் அது அவர்களின் பூர்விகக்குடியிருப்பு என்பதற்கான எந்த ஒரு வரலாற்று ஆவணமும் இல்லை என்பதே உண்மை. பைபிள் மட்டுமே தங்கள் பிரதான ஆதார நுலாக கொண்டால் அதன் நம்பகத் தன்மையில் எங்களுக்கு ஐயம் இருக்கிறது. (இன்ஷா அல்லாஹ் பைபிள் குறித்து விவாதிக்க தயார் ) Answer.com இஸ்ரேல் குறித்து கூறுவதை காண http://wiki.answers.com/Q/How_was_isreal_created பலஸ்தீன பிளவுக்கு முன்ளுள்ள உலக வரைபடத்தை காணுங்கள்., பின் இஸ்ல்ரேலிய நாடு மெல்ல மெல்ல எவ்வாறு உருவாயிற்று என்பதையும் அறிந்து கொள்விர்கள். http://www.palestineremembered.com/Acre/Maps/Story583.html http://www.masada2000.org/historical.html சகோதரரே பொறுமையாக சிந்தியுங்கள் ! இறை நாடினால் இனியும் சந்திப்போம்... 40
June 24, 2010 06:37
அன்பான வாசகர்களுக்கு,
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியாகும் ஆக்கங்களுக்கு வாசகர்களின் எதிரான கருத்துகளும் பின்னூட்டங்களில் அனுமதிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். ஒரு வழிப்பாதையாக சிந்தனைகளை முன் வைக்காமல், கண்ணியமான கலந்துரையாடலுக்கு என்றென்றும் வழிவகுக்கும் நாம், வாசகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வருவதை, சிலர் குழப்பம் விளைவிக்கும் குறிக்கோளோடு பயன்படுத்தத் துணிகின்றனர். இந்தப் பதிவில் செபாஸ்டியன் என்ற பெயரிலும் அதன் பின்னர் நிலா என்ற பெயரிலும் இடப்பட்ட பின்னூட்டங்களின் பயணப்பாதைகள் தொடக்கத்திலிருந்தே கண்காணிக்கப் பட்டன. வாசகர் ஸ்ரீலங்கன் அவர்களுக்கு ஏற்பட்ட ஐயம், அவருக்கு முன்னரே நமக்கும் ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் அழகிய, தர்க்க ரீதியிலான கருத்துப் பரிமாற்றம் வாசகர்களிடையே நிகழவேண்டும் எனும் தளத்தின் அடிப்படைகளுக்கேற்ப மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் அளித்தோம். வாசகர் சஃபி அவர்களின் ஆலோசனைப்படி, அவ்விருவருக்கும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு சோதனை மடல்கள் அனுப்பப்பட்டு, அவ்விரு முகவரிகளும் போலியானவை என்று உறுதிப் படுத்தப்பட்டு விட்டது. ஆக்கத்தின் பேசுபொருளைத் திசைதிருப்பி, முஸ்லிம்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கும் இடையில் பிணக்கை உற்பத்தி செய்ய நினைத்தவர்களின் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியமார்க்கம்.காம், வாசகர்களுக்கு என்றென்றும் திறந்து வைத்திருக்கும் கருத்துச் சுதந்திரத்தைத் தவறான முறையில் கையாண்டு நிலா என்ற பெயரில் இடப்பட்ட பின்னூட்டங்களும் அதற்கு மற்ற வாசகர்களால் அளிக்கப்பட்ட பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. கண்ணியமான கலந்துரையாடல்களுக்கு நம் வாசல் என்றென்றும் திறந்திருக்கும்.வாசகர்களின் புரிதல்களுக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி! நிர்வாகி சத்தியமார்க்கம்.காம் 41
June 25, 2010 20:31
அய்யா செபாஸ்டியன்,
உங்கள் கேள்விக்குப் பதிலளித்தப் பின்னரும் என் கேள்விக்கு நீங்கள் இதுவரை பதிலளிக்கவில்லையே ஏன்? - பகுத்தறிவாளன் 42
June 26, 2010 19:28
Assalamu Alikkum...... மரியாதை மிகு கட்டுரை ஆசிரியர் அவர்களே !கஸ்ஸா மக்களின் நிலையை எண்ணும்போது உள்ளம் நைந்துருகுகிறது.கண்கள் நீரைச்சொரிகிறது.நீங்கள் உங்கள் எழுத்திலும் படத்திலும் உள்ளது உள்ளபடி புரியவைத்துள்ளீர்கள்.அநியாயக்காரர்களுக்கு நீண்ட வரலாறு கிடையாது.நிச்சயம் அநியாயக்கரர்களின் குரல் அல்லாஹ்வின் அர்ஷை நிச்சயம் அடையும்.மெக்சிகோ வளைகுடாவில் மீன்களையும் டால்பின்களையும் பற்றி கவலைப்படுபவர்கள், எண்ணற்ற மனித உயிர்கள் வன்முறையில் பந்தாடப்படுவதில் ஏனோ பாராமுகமாக உள்ளனர்.ஐ.நா சபை இருந்தென்ன,எண்ணற்ற மனித உரிமை அமைப்புகள் இருந்த என்ன! ஒருவேளை உலகம் முஸ்லிம்கள் எனும்போது அதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லையா
43
July 01, 2010 08:18
கருத்து எழுதுக :
|