சத்தியமார்க்கம்.காம்

கடவுளை நம்மால் பார்க்க இயலுமா? print Email
ஐயமும்-தெளிவும் - பிற மதத்தினருக்காக
திங்கள், 26 ஜூன் 2006 07:56

இயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில்.

கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர்.

அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏழு வானத்திற்கு அப்பால் அழைத்துச் சென்று திரைமறைவில் உரையாடி அவர்களை சிறப்பித்து அனுப்பியிருக்கிறான். அந்த ஏகனை இம்மையில் பார்க்கும் சக்தி எவருக்கும் இல்லை. ஆனால் மறுமையில் திரையின்றி நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தையும், நேருக்கு நேர் பேசும் பாக்கியத்தையும் சொர்க்கவாசிகளுக்கு அளிப்பேன் என்னும் வாக்குறுதியை அல்லாஹ் வழங்குகிறான். 

"அந்நாளில்(நியாய தீர்ப்பு நாளில்) சில முகங்கள் மகிழ்ச்சியுடனும் தமது இறைவனைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்." (அல்குர்ஆன் 75:22,23)

"நிச்சயமாக அவர்கள் (நிராகரிப்பவர்கள்) தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்." (அல்குர்ஆன் 83:15)

மனிதன் இவ்வுலகில் செய்த நல்ல தீய செயல்களை குறித்து விசாரித்து இறைவன் தீர்ப்பு வழங்கும் மறுமை நாளில், நற்செயல்களை செய்து இறைவனிடமிருந்து பெறுதற்கரிய சுவர்க்கத்தைப் பெற காத்திருக்கும் சுவர்க்கத்துக்குரியவர்கள் இறைவனை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்துகிறது.

மேலும் தீய செயலைச் செய்தவர்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள் என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவிக்கிறது.

(அல்லாஹ்) அவனுக்கும் (அடியார்களுக்குமிடையே) ஒளித் திரையாக உள்ளது. அந்த ஒளித்திரையை அவன் அகற்றினால் அவன் திருமுகத்தின் ஜோதி அவன் பார்வை படும் படைப்பினங்களை எல்லாம் எரித்து விடும் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று நாங்கள் கேட்டோம். மேகத்தால் மறைக்கப்படாத சூரியனை நடுப்பகலில் காண்பதற்கு உங்களுக்குச் சிரமம் எதுவும் இருக்குமா? என்று திருப்பிக் கேட்டார்கள். ‘இருக்காது’ என்று நாங்கள் கூறினோம். இவ்விரண்டையும் காண்பதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படாது என்பது போலவே உங்கள் இறைவனைக் காண்பதில் சிரமப்பட மாட்டீர்கள் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

உங்களில் எவருடனும் உங்கள் இறைவன் பேசாமலிருக்கமாட்டான். அவனுக்கும் அவனது இறைவனுக்குமிடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்கள் என்றும் நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும். நரகவாசிகள் நரகத்தில் நுழைந்தவுடன் :

‘சுவனவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதை உங்கள் இறைவன் நிறைவேற்ற விரும்புகின்றான் என்று அழைப்பாளர் ஒருவர் கூறுவார். அதற்கு அவர்கள் ‘அது என்ன வாக்குறுதி? எங்கள் நன்மையின் எடையை அவன் அதிகப்படுத்தவில்லையா? எங்கள் முகங்கள் வெண்மையாக்கிவிடவில்லையா? எங்களை சுவர்க்கத்தில் நுழைக்கவில்லையா? நரகிலிருந்து எங்களை அவன் விடுவிக்கவில்லையா? (இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்) என்பர். உடன் இறைவன் திரையை விலக்குகிறான். அவனை அவர்கள் காண்பர். அவனைக் காண்பதை விடவும் விருப்பமான மகிழ்ச்சியான வேறு ஒன்றையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதில்லை’ என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (அஹமது, திர்மதி, இப்னுமாஜா)

இதிலிருந்து இவ்வுலகில் நல்லறங்கள் செய்து நல்லவர்களாக வாழ்பவர்கள் நாளை மறுமையில் இறைவனை காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என்பதை அறியலாம்.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
kavianban KALAM, Adirampattinam:
எதனையும் பார்த்து விட்டுத் தான் நம்புவது என்றிருந்தால், நம்பிக்கையின்மை அல்லது ஐயப்பாடு என்பதன் அறிகுறி என்று விளங்கியுள்ள நாம், இவ்வுலகின் தன்மைக்கு தகுந்தவாறு படைக்கப்பட்ட கண்ணால், எல்லாம் வல்லவனின் ஒளியைக்கூடக் காண இயலாதச் சிற்றாற்றலைக் கொண்டு எப்படிக் காண இயலும்? நபி மோஸஸ் (அலை) இறைவனைக் காண நாடிய போழ்து, இறையொளியின் ஒரு சிறு கீற்றை காண இயலாமல் மயங்கி வீழ்ந்தார்கள் என்பது வேதம் கூறும் சான்று சகோதரரே.ஆனால், இறைவன் வாக்களித்துள்ளபடி மறுமை நாளில் வெற்றியாளர்கட்குக் காட்சித் தருவான்.அவ்வாறு காண்பதற்காக இவ்வுலகில் அவன் மீது விசுவாசம் கொண்டு நன்மைகள் புரிந்து வந்தால் அவனைக் காண்போம் மறுமையில்.
1

November 25, 2007 19:27
0
naseem:
அல்லாஹ் மிகப் பெரியவன்.
2

January 21, 2010 09:35

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் பிற-மதத்தினருக்காக கடவுளை நம்மால் பார்க்க இயலுமா?
Twitter
RSS
YouTube
English