சத்தியமார்க்கம்.காம்

கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
புதன், 19 மே 2010 15:05

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல்!

காது கேளாதோர் பள்ளியில் முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவி!

பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மாணவி காது கேளாதோர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்றார்.
சென்னை திருவல்லிக்கேனியைச் சேர்ந்த கார் டிரைவரான பி.எம். முகம்மது அப்துல்லாஹ்-எம்.எஸ். நாகூர் மீரா தம்பதிகளின் மகள் ஃபாத்திமா பானு. பிறந்த சில மாதங்களிலே ஃபாத்திமா பானுக்குப் பேச்சுத்திறன், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரின் பெற்றோர் மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள்.


மகளின் எதிர்காலம் அவர்களின் கண்முன் வந்து நின்றது. முகம்மது அப்துல்லாஹ் தன்னுடைய குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டு, மகளின் குறைபாடு தெரியாமல் அவரைப் படிக்க முடிவு செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள 'லிட்டில் பிளவர் கான்வென்ட்' மேநிலைப்பள்ளியில் அவரைச் சேர்ந்தார்.


வாய் பேச முடியாவிட்டாலும், காது கேட்கும் திறனை இழந்து விட்டாலும் மாணவி ஃபாத்திமா பானு தனக்கு எதிரே பேசுகிறவர்களின் உதடு அசைவுகளை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்று இருக்கிறார். இந்த ஆற்றலே அவர் பிளஸ்-2வில் அதிக மார்க் எடுப்பதற்குத் துணை புரிந்தது.


பிளஸ்-2வில் பிசினஸ் மேக்ஸ் பாடப் பிரிவை தேர்வு செய்து தேர்வு எழுதிய அவர், கடந்த 14.05.2010 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1000-க்கு 953 மார்க் பெற்று பள்ளியிலே முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தமிழில் 177 மார்க்கும், பொருளாதாரத்தில் 196, வணிகவியலில் 198, கணக்குபதிவியலில் 189, பிசினஸ் மேக்ஸில் 193 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறார். இந்த வெற்றி அவரையும் அவரின் பெற்றோர்களையும் மன மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. பிளஸ்-2க்கு பிறகு பி.காம் படித்து, சி.ஏ.(ஆடிட்டர்) ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருக்கிறது.

முதலிடம் பெற்ற மாணவியைப் பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, கட்டிப் பிடித்து "உன் விடாமுயற்சிக்கு பாராட்டுகள்" என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார். பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி ஃபாத்திமா பானு இன்னும் ஓராண்டு ஆங்கிலக் கல்வியை அதே பள்ளியில் கற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு (2011) அவர் கல்லூரிக்குச் சென்று தன்னுடைய லட்சியப் பயணத்தைத் தொடருவார்.


இது குறித்து பானுவின் தந்தை முகம்மது அப்துல்லாஹ் கூறியதாவது:-

"ஃபாத்திமா எனக்கு மூத்த மகள். பிறந்த சில மாதங்களிலே அவளால் பேசவும் கேட்கவும் முடியாது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இது எங்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மனதில் தோன்றிய காயங்களைத் தாங்கிக்கொண்டு, என் மகளின் எதிர்காலத்திற்காகப் பாடுபட்டு வருகிறோம். ஆண்டவனின் கருணையால் பிளஸ்-2 தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறாள். ஆடிட்டராக வர வேண்டும் என்பது அவளின் விருப்பம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்"

நன்றி : தினத்தந்தி

1079 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கும் கண்பார்வையற்ற மாணவி வ. நர்கிஸ் பேகம்  ....

Trackback(0)
கருத்துக்கள் (21)add comment
0
Arab Mohammed:
All praise belongs to the Allah!! Who gave this talent to that girl!!
Its an achievement to score first mark!!! I wish to keep proceeding to achieve more!!!!! InshaAllah
1

May 20, 2010 05:48
0
bahurudeen:
இஸ்லாமிய போதனையின் வெளிப்பாடு இது, மிக்க நன்றி!
2

May 20, 2010 08:35
0
தாஜூதீன்:
சகோதரி ஃபாத்திமா பானுவின் திறமை நம்மை பிரமிக்க வைக்கிறது.

இன்ஸாஅல்லாஹ் இச்சகோதரி அசைப்படும் சாட்டட் அகவுண்டண்டாக வேண்டும் நிச்சயம் நிறைவேறும். என்னுடை துஆக்கள் நிச்சயம் உண்டு.
3

May 20, 2010 23:21
0
shafy:
masha Allah this one reason enough our community will get wakeup!
4

May 21, 2010 11:37
0
M. J. SYED ABDULRAHMAN:
INSA ALLAH - KABBALALAH
5

May 23, 2010 16:52
0
ஷாகுல் ஹமீது:
சகோதரி ஃபாத்திமா பானு பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் அவர் மெம்மேலும் வெற்றிகளை ஈட்ட அல்லாஹ் அருள் புரிவானாக.

ஆனால், சகோதரி ஃபாத்திமா பானுவின் முகத்தை வெளிப்படித்தி புகைப்படம் போட்டிருப்பதை கவனிக்க வேண்டும். காபிர்கள் போல இப்படி முகத்தை வெளிப்படுத்தி போடவேண்டுமா? முழுவதுமாக முகத்தை மறைத்து போட்டால் நன்றாக இருக்கும்.

ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உண்மையான இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக போராடும் போராளிகள் அங்குள்ள பெண்கள் பள்ளிக்கூடனக்களை அழித்து வருகின்றனர்.

அப்படியிருக்கும்போது பெண்கள் படிக்கலாம் என்பதுபோல நீங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறீர்களே. இது பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.

6

May 29, 2010 01:28
0
சஃபி:
சகோதரர் ஷாஹுல் ஹமீது,

பெண்கள் கட்டாயமாக முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இஸ்லாத்தில் இல்லை. இருந்தால் தெரியப் படுத்துங்கள்.
7

May 29, 2010 07:51
0
அபூ ஹஸன்:
//ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உண்மையான இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக போராடும் போராளிகள் அங்குள்ள பெண்கள் பள்ளிக்கூடனக்களை அழித்து வருகின்றனர். // - shahul Hameed

ஷாகுல் ஹமீது... வேசத்திற்கு ஒரு நல்ல பெயராவது தேர்ந்தெடுத்திருக்கலாமே அய்யா ;-)

இருக்கட்டும். யாராக இருந்தால் என்ன? கருத்துக்களை மட்டும் எதிர்கொள்வோம்.

நீங்கள் கூறும் "உண்மையான" இஸ்லாம் ஆப்கனிலும், பாகிஸ்தானிலும் தான் நிலை நிறுத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள். தொடர்ந்து பேசுவோம்.

அப்புறம், ஆப்-கானோ, பாக்-தானோ நீர் கூறும் பள்ளிக்கூடங்களை உடைக்கும் செயலை எவர் செய்தாலும் இஸ்லாத்திற்கு அது எதிரானதே! ஏனெனில் "ஆண்/பெண் பாகுபாடற்று கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவது இஸ்லாம்" என்பது பச்சைக் குழந்தைக்குக் கூட தெரிந்த விஷயம்.

மாணவி ஃபாத்திமா விற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!
8

May 29, 2010 13:36
0
ரபிக்:
சகோதரர் ஷாகுல் ஹமீது சரியாகத்தான் கேட்டிருக்கிறார்

http://www.turntoislam.com/forum/showthread.php?t=29405

Question:
We know that the most correct opinion among the scholars is that women should cover their faces, but there are many situations where women cannot cover their faces. Could you shed more light on this topic?

Answer:

Praise be to Allaah.

The most correct opinion, which is supported by evidence, is that it is obligatory to cover the face, therefore young women are forbidden to uncover their faces in front of non-mahram men in order to avoid any mischief, and they should certainly do so when there is fear of fitnah (temptation).


சகோதரி பாத்திமாவின் முகத்தை காட்டிய போட்டோவை போட்டது தவறு.

பெண்கள் பள்ளிக்கூடம் சென்று படிக்கலாம் என்று இருக்கும் ஹதீஸை ஆதாரமாக காட்டுங்களேன்.

பெண்கள் பள்ளிவாசலுக்கே வரக்கூடாது என்று ஹதீஸ் கூறும்போது பள்ளிக்கூடங்களுக்கு போவதை ஆதரிக்கிறீர்களே.

9

May 29, 2010 17:10
0
Basheer:
அல்லாஹ்வின் திருப்பெயரால், அஸ்ஸலாமு அலைக்கும்..

-> ஷாகுல் ஹமீது
"முழுவதுமாக முகத்தை மறைத்து போட்டால் நன்றாக இருக்கும்."
அதற்கு போடாமலேயே இருந்து விடலாம்(புகைப்படம் தான்).

"ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உண்மையான இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக போராடும் போராளிகள் அங்குள்ள பெண்கள் பள்ளிக்கூடனக்களை அழித்து வருகின்றனர்".
-உண்மையான இறைவிசுவாசிகள் தான் இதை செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் தாரவும்.

கல்வி கற்பது பெண்களுக்கும் கடமை. அதை பெண்கள் கல்வியகத்தில் நிரைவேற்ற வேண்டும் என்பது தான் கருத்தே தவிர, கல்வியே கூடாது என்பது அறிவின்மை.

@இது, பத்திரிக்கையாளர்கள் வேறு பிழைப்பில்லாத நேரத்தில், மார்க்க அறிஞர்கள் சிலர் கொடுத்த (சில சமயங்களில் பழைய) fஅத்வாக்கள் பற்றி கற்பனை கதை எழுதி இஸ்லாத்தை இழிவுபடுத்துவதை ஒத்து இருக்கிறது.@

ALLAH knows the best..
10

May 30, 2010 09:53
0
அபூ ஹஸன்:
ரபிக் அவர்களே,

நீங்கள் இஸ்லாமிய அடிப்படைகளற்ற இணைய தள ஃபத்வாக்களை ஆதாரமாக காட்டுவதை விடுத்து குர் ஆன் மற்றும் ஹதீஸில் இதற்கான தீர்வு உள்ளதா என்று தேடிப்பாருங்கள். Islam is The Modern Religion என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

//பெண்கள் பள்ளிவாசலுக்கே வரக்கூடாது என்று ஹதீஸ் கூறும்போது பள்ளிக்கூடங்களுக்கு போவதை ஆதரிக்கிறீர்களே. //

No Comments ;-) என்று சொல்ல நினைத்தேன். இஸ்லாமிய அடிப்படைகளை நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சந்தேகங்களை முன்வையுங்கள். என்னைப் போன்றே இங்கே கருத்திடும் பிற வாசகர்களும் உங்களுக்கு உதவி செய்யக்கூடும். தொடர்ந்து கலந்துரையாடுங்கள். நன்றி!
11

May 30, 2010 11:13
0
ரபிக்:
//நீங்கள் இஸ்லாமிய அடிப்படைகளற்ற இணைய தள ஃபத்வாக்களை ஆதாரமாக காட்டுவதை விடுத்து//

ம்.. எது இஸ்லாமிய அடிப்படையுள்ள இணையதளம் என்று காட்டுங்களேன். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கலாம்.

//இஸ்லாமிய அடிப்படைகளை நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. //

அறிவுரைக்கு ரொம்ப நன்றி.

//ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் உண்மையான இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக போராடும் போராளிகள் அங்குள்ள பெண்கள் பள்ளிக்கூடனக்களை அழித்து வருகின்றனர்".
-உண்மையான இறைவிசுவாசிகள் தான் இதை செய்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் தாரவும். //

இஸ்லாமிய போராளிகள் உண்மையான இறைவிசுவாசிகள் இல்லை என்பதற்கான ஆதாரம் தரவும்.

சத்யமார்க்கம் எந்த மத்ஹபை பின்பற்றுகிறது என்று அறியத்தாருங்கள். ஏனெனில் இங்கே பல விதண்டாவாதமான கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
12

May 31, 2010 21:01
0
Basheer:
சகோதரர் ரபீக் அவர்களே,
இஸ்லாமிய போராளிகள் உண்மையான இறைவிசுவாசிகள் இல்லை என்று நான் கூறவேயில்லை.
நான் கேட்பதெல்லாம், "அவர்கள் தான் (உண்மையான இறைவிசுவாசிகள்/இஸ்லாமிய போராளிகள்) பள்ளிக்கூடங்களை அழித்து வருகின்றனர்" என்பதற்கான ஆதாரம் தான்.
13

June 01, 2010 11:41
0
அபூ ஹஸன்:
ரபிக் அவர்களே!

மீண்டும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இஸ்லாமிய அடிப்படைகளற்ற (இணைய தள) ஃபத்வாக்களை ஆதாரமாக காட்டுவதை விடுத்து குர் ஆன், ஹதீஸில் ஆதாரங்களை தேடி முன் வையுங்கள் என்று தான் கூறினேன்.

ஆதாரங்கள் கையில் இல்லாத பட்சத்தில் இது போன்ற இடங்களில் சகோதரர்களிடம் கேட்டால், உதவிக்கு வருவார்களே! என்ற நல்லெண்ணமே காரணம். தவிர, நானும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே?

//சத்யமார்க்கம் எந்த மத்ஹபை பின்பற்றுகிறது என்று அறியத்தாருங்கள்.//

நீங்களாச்சு.. இந்த தளத்தினர் ஆச்சு... ;-)
14

June 01, 2010 12:00
0
சஃபி:
ஐயா ரபிக்,

http://tamilmuslimtube.magnify.net/video/QA-by-Dr-K-V-S-Habib-Mohamed-2 இதைப் பார்த்துவிட்டு,

http://www.yaaseen.net/kalvi/Kalvi_02.html இதைப் படித்துவிட்டு வாருங்கள்.

பொறுமையாக حدثنا ‏ ‏هشام بن عمار ‏ ‏حدثنا ‏ ‏حفص بن سليمان ‏ ‏حدثنا ‏ ‏كثير بن شنظير ‏ ‏عن ‏ ‏محمد بن سيرين ‏ ‏عن ‏ ‏أنس بن مالك ‏ ‏قال ‏
‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏طلب العلم فريضة على كل مسلم وواضع العلم عند غير أهله كمقلد الخنازير ‏ ‏الجوهر واللؤلؤ والذهب ‏ இந்த ஹதீஸைப் பற்றி விவாதிக்கலாம்.

இஸ்லாமியப் போராளிகள் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு பள்ளிக்கூடங்களை குண்டு வைத்துத் தகர்ப்பவர்களிடம் இருக்கும் மொத்த ஆயுதங்களும் மேட் இன் யூ எஸ் ஏ எனும் செய்திகூட உங்களுக்குத் தெரியவில்லை என்றால் ... கொஞ்சம் கஷ்டந்தான்.
15

June 01, 2010 13:24
0
ஹாஜியார்:
ஷாகுல் ஹமீதைக் காணலியே?

ரஃபீக்,

முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்குக் கல்வி கற்க செல்லக்கூடாது என்று நீங்கள் கூறுகிறீர்களா?

நீங்கள் எந்த மத்ஹப்?

- ஹாஜியார்
16

June 02, 2010 00:15
0
ரபிக்:
அய்யா சஃபி,

என்னை படிக்க சொன்ன இந்த இணைப்பில் எங்காவது பெண்கள் படிக்க பள்ளிக்கு செல்லலாம் என்று குரான் வசனம் இருக்கிறதா?
http://www.yaaseen.net/kalvi/Kalvi_02.html
எழுத்தாளர் தானாக அதையெல்லாம் இட்டுக்கட்டி எழுதுகிறாரே தவிர ஆதாரத்துக்கு ஒரு குரான் வசனம் கூடவா கிடைக்கவில்லை. ஜஹிலியா காலத்திலேயே பெண்கள் படித்து கல்வியறிவு மிக்கவர்களாகத்தான் இருந்தார்கள் என்றுதான் அந்த கட்டுரை சொல்கிறது. எதற்காக அதனை படிக்க சொன்னீர்கள்? வெளியே கல்வி என்ற பெயரில் அலைந்து கொண்டிருந்த பெண்களை வீட்டிலேயே படிக்க அறிவுறுத்தியதுதான் இஸ்லாமிய மார்க்கம்.

ஹதீஸை காட்டியுள்ளீர்களே, அதிலும் எந்த இடத்திலாவது கல்வி கற்கவேண்டும் என்று இருக்கிறதே தவிர பள்ளிக்கூடத்துக்கு சென்றுதான் படிக்கவேண்டும் என்று இருக்கிறதா?

பெண்கள் வீட்டில்தான் கல்வி கற்றுக்கொள்ளவேண்டும். வெளியே செல்லக்கூடாது என்று இருக்கிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து கல்வி கற்றுகொண்ட ஆண் மாணவர்களை பார்த்து அவர் சொன்னார். நீங்கள் வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு சொல்லித்தாருங்கள் என்று சொன்னார். அதிலிருந்தே அவர்கள் கல்வி கற்பது வீடுகளில்தான் என்று விளங்குகிறதல்லவா? (ஹதீஸ் எண் ஞாபகம் இல்லை. தேடித்தருகிறேன்)
17

June 02, 2010 02:40
0
ஸாஜித்:
//வெளியே கல்வி என்ற பெயரில் அலைந்து கொண்டிருந்த பெண்களை வீட்டிலேயே படிக்க அறிவுறுத்தியதுதான் இஸ்லாமிய மார்க்கம்//

இதற்கு இஸ்லாமிய மார்க்க ஆதாரம் இருந்தா காட்டுங்க.

//நீங்கள் வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு சொல்லித்தாருங்கள் என்று சொன்னார். அதிலிருந்தே அவர்கள் கல்வி கற்பது வீடுகளில்தான் என்று விளங்குகிறதல்லவா? (ஹதீஸ் எண் ஞாபகம் இல்லை. தேடித்தருகிறேன்)//

பொறுமையா எடுத்திட்டு வாங்க, ஒன்னும் அவசரமில்லே.
18

June 02, 2010 15:47
0
சஃபி:
ஐயா ரபிக்,

இங்கு நான் எடுத்தெழுதிய ஹதீஸில் உள்ள
‏طلب العلم فريضة على كل مسلم
என்பதற்கு, "கல்வி கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமை" என்று பொருளல்ல.

"அறிவைத் தேடி அடைந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமை" என்று பொருளாகும்.

"தேடி அடைவது" என்றால் எங்குக் கிடைக்கிறதோ அங்குச் சென்று தேடிக் கொள்ள வேண்டும் என்பது பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும் என்றே நம்புகிறேன்.

அப்புறம் ... அறிவிருந்தும் அதைப் பயன்படுத்தாதவரை, அல்லது இருக்கும் அறிவைத் தவறாகப் பயன் படுத்துபவரைப் பற்றியும் ஓர் உவமை அந்த ஹதீஸின் இறுதிப் பகுதியில் சொல்லப் படுகிறது:
واضع العلم عند غير أهله كمقلد الخنازير ‏ ‏الجوهر واللؤلؤ والذهب
என்பதற்கு, "(செயல்)தகுதி அற்றவரிடம் உள்ள அறிவென்பது பன்றியின் கழுத்தை அலங்கரிக்கும் முத்து, மணிரத்தினங்கள் பதியப்பெற்ற தங்கமாலைக்கு ஒப்பாகும்" என்பது பொருளாகும்.

//பெண்கள் வீட்டில்தான் கல்வி கற்றுக்கொள்ளவேண்டும். வெளியே செல்லக்கூடாது என்று இருக்கிறது// என்று
நீங்கள் எந்த ஹதீஸைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
19

June 03, 2010 14:39
0
ரபிக்:
6008. அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்
(பனூ லைஸ் தூதுக் குழுவில்) சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் (ஊரில்) நாங்கள்விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம்.
நபி(ஸல்) அவர்கள் நல்ல தோழராகவும் இரக்க குணமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள். அவர்களை (கடமையானவற்றைச் செய்யுமாறு) பணியுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு (தொழுகை அறிவிப்புச்) சொல்லட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்' என்றார்கள்.32

Volume:6 Book:7

அடுத்து

“பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் (3494)
20

July 03, 2010 02:04
0
j.aneess fathema:
அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும்.. /பெண்கள் வீட்டில்தான் கல்வி கற்றுக்கொள்ளவேண்டும். வெளியே செல்லக்கூடாது என்று இருக்கிறது// என்று
நீங்கள் எந்த ஹதீஸைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
21

July 13, 2010 13:57

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் கண்களால் செவியுறுவேன்; கல்வியில் சாதிப்பேன்!
Twitter
RSS
YouTube
English