சத்தியமார்க்கம்.காம்

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஷா ஃபைசல்! print Email
பொதுவானவை - பொதுவானவை
ஞாயிறு, 09 மே 2010 16:44

முன்மாதிரி கஷ்மீரி முஸ்லிம்கடந்த 2002ஆம் ஆண்டு காஷ்மீர் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் மகனும் காஷ்மீர் ஸ்ரீநகரைச் சேர்ந்த MBBS டாக்டரான இருபது வயதான ஷா ஃபைசல், சிவில் சர்வீஸ் UPSC-2010 தேர்வில் இந்தியாவிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

கடந்த வியாழன் (06-05-2010) அன்று இந்திய UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், Union Public Service Commission (UPSC) exam சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்று முதலிடம் பிடித்த முதல் காஷ்மீரி என்ற பெருமையையும் சுதந்திர இந்தியாவில் நான்காவதாக முதலிடத்தைப் பிடித்த முஸ்லிம் என்ற கூடுதல் பெருமையையும் இவர் தட்டிச் செல்கிறார். (இதுவரை முதலிடம் பெற்ற பலர் தமது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது)

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் "என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை!" என உற்சாகத்துடன் குதூகலிக்கிறார் ஃபைசல்.

"பெரிதாக எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற வெறி ஃபைசல் மனதில் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கும்!" என்கிறார் ஃபைசலின் தாய் முபீனா. இவர் காஷ்மீரில் ஒரு பள்ளி ஆசிரியை.

 

ஷா ஃபைசல் & UPSC-2010 -  ஒரு பார்வை!

இவர் Jhelum Valley மருத்துவக் கல்லூரியின் 2008 ஆம் வருடம் பட்டம் பெற்றவர்.

2009 க்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்காக விண்ணப்பித்த 409,110 மாணவர்களில் - 193,091 மட்டும் ஆயத்த நிலை தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து வெளியான முடிவுகள் மூலம் 12,026 மாணவர்கள் மட்டுமே பிரதானத் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

கடந்த மார்ச்-ஏப்ரல் 2010 இல் நடந்த சிறப்பியல்பு தேர்வு (பர்சனாலிட்டி டெஸ்ட்) க்காக 2,432 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 875 மாணவர்களில், 680 பேர் ஆண்கள் மற்றும் 195 பேர் பெண்கள்.

முதல் 100 இடங்களை வென்ற முஸ்லிம் மாணவர்களின் விபரங்கள் கீழே:

Rank

Roll No.

Name

1

025085

Shah Faesal

55

080934

Mohammed Y Safirulla K

74

271879

Mohd Shahid Alam

80

275973

Yunus

 

வெற்றி பெற்ற பிற முஸ்லிம்களின் விபரங்கள் மற்றும் முழுமையான பட்டியலை இங்கே காணலாம்:

http://www.civilservice.in/upsc/civil-service-exam-final-result-2009.aspx

(பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டிய சகோதரர் Rafique uthuman அவர்களுக்கு நன்றி - சத்தியமார்க்கம்.காம்)

"இச்செய்தி எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் சேர்த்துள்ளது" கண்களில் நீர் கசிவதைத் தடுக்க இயலாமல் நா தழுதழுக்கிறார். தன் மகன் ஃபைசல் ஓய்வு நேரங்களை சமூக நலப் பணிகளிலும் தினசரிப் பத்திரிகைகளில் எழுதவும் கூடியவர் என தெரித்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு போராளிகளால் கொல்லப்பட்ட தன் கணவர் குலாம் ரசூல் ஷாவை நினைவு கூர்கிறார்.

குடும்பத்தில் இவ்வாறு இழப்புகள் காஷ்மீரில் மிகவும் சகஜம். போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் நடந்த சண்டையின் இடையில் அகப்பட்டு,  முபீனாவின் சகோதரர் இர்ஷாத், ஓர் இராணுவ வீரரின் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.

"நான் வெற்றி பெற்றதாக அரசு அறிவித்துள்ள இந்நேரத்தில் என் தந்தையை மிகவும் எண்ணிப் பார்க்கிறேன்" என்கிறார் ஃபைசல்.

இந்திய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியடைந்து, காஷ்மீர மக்கள் நடத்தும் போராட்டங்கள் பற்றிய முழுமையாக அறிந்து வைத்துள்ள சமூக சேவகரான ஃபைசல், இந்திய அரசுக்கும் தமது காஷ்மீர மக்களுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு - இதுநாள்வரை விரிசல் விட்டுப் போயிருந்த பிணைப்பினை வலுப்படுத்துவேன் என்று கண்களில் நம்பிக்கை பளிச்சிடும் உறுதியான குரலில் பேசுகிறார்.

வெற்றி பெற்ற செய்தி வெளியாகத் துவங்கிய நிமிடத்திலிருந்து மீடியாக்களின் வளையத்தை விட்டு வெளிவருவதற்கு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ஃபைசல், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் சிறிய பகுதியை சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

மீடியா: இந்தச் சாதனையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

"என்னுடைய சமுதாயத்தின் மீது அழுத்தமாக சுமத்தப்பட்டுள்ள தவறான கருத்தாக்கத்தை என் சாதனை உடைத்தெறிய இந்த வெற்றி பெரும் உதவியாக இருக்கும்" என்கிறார் பைஸல். "காஷ்மீர் மக்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் வாழ்வு சிறந்த முன்னோடியாகத் திகழ்வேன். மேலும் என் மக்கள் அதிகமதிகம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் அவர்கள் வெற்றி பெறவும் கடுமையாக உழைப்பேன்"

"காஷ்மீரின் பிரச்னைகளை சரியாகப் புரிந்துள்ளவனும் நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளவன் என்ற நிலையில் என்னுடைய குறிக்கோளில் முதன்மையானதாக IAS இருக்கும் அடுத்ததாக IPS மற்றும் lFS என்கிறார்.
மீடியா: இந்த வெற்றிக்குக் காரணமாக யாரைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?

நான் எந்த ஒரு பிரத்யேக பயிற்சியையும் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை.

பயிற்சி நிலையங்களோ, கல்வி நிறுவன அமைப்புகளோ என்னுடைய புகைப்படத்தைக் காட்டி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள இயலாது. என்னுடைய மிகப் பெரிய ரோல் மாடலாகத் திகழ்ந்தவர் என்னுடைய தந்தை. எனவே என் தந்தையும் அவரைப் பறிகொடுத்து விட்ட அந்தச் சூழலிலும் எனக்கு உறுதுணையாக இருந்த தாயுமே இத்தனை வெற்றிக்கும் உரியவர்கள்.

மீடியா: அடிப்படையில் நீங்கள் ஒரு மருத்துவர். சிவில் சர்வீஸ் தேர்வுகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப முடிவு செய்தது எப்படி? எப்போது?

காஷ்மீரில் மருத்துவர்களுக்குத் தேவை அதிகமிருப்பதால் நான் மருத்துவப் படிப்பினைத் தேர்வு செய்திருந்தேன். Sher-I-Kashmir Institute of Medical Sciences இல் என்னுடைய பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். இருப்பினும் சவாலான துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. MBBS முடித்த கையோடு, டெல்லியில் இருந்தபடியே சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து விட்டேன்.

மீடியா: இந்த வெற்றியை எவ்வாறு கொண்டாடப் போகிறீர்கள்?

என்னுடைய இத்தனை வெற்றிகளுக்கும் காரணமான என்னுடைய தாயைக் கட்டித் தழுவி என் நன்றியை முதலில் தெரிவிப்பேன் என்கிறார் ஃபைசல்.

Trackback(0)
கருத்துக்கள் (21)add comment
0
M.Muhammad:
Double Salams 2 U
Alhamdulillaah
CONGRATS SHAH FAISAL, WELL DONE.
YOU HAVE MADE ALL MUSLIMS PROUD BY YOUR INSPIRING ACHIEVEMENT.
MAY ALLAH BLESS YOU WITH MORE INSPIRING ACHIEVEMENTS FOR MUSLIMS AND WHOLE HUMANITY.
1

May 09, 2010 19:40
0
Muhammad Ashik:
அல்ஹம்துலில்லாஹ்...
டாக்டர் ஷா ஃபைசல் அவர்களின் சாதனை புகழ வார்த்தைகள் இல்லை...
அதேநேரம், 875 மாணவர்களில் 4 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது நமது இஸ்லாமிய சமுதாயத்துக்கு பெருத்த பின்னடைவு. இந்நிலை மாற நாம் நிறைய உழைக்க வேண்டியுள்ளது. இதனடிப்படையில் டாக்டரின் பெற்றோர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். டாக்டருடன் அவர்களும் சேர்ந்துதான் நமக்கு இவ்விஷயத்தில் ரோல் மாடல்கள். நம்மையும் நம் பிள்ளைகளையும் இதுபோல இன்ஷாஅல்லாஹ் உருவாக்குவது என்று உறுதி எடுப்போம்.
2

May 10, 2010 00:22
0
bahurudeen:
அல்ஹம்துலில்லாஹ்.
3

May 10, 2010 07:17
0
Rafique uthuman:
21 muslims in 857 people not only4. 4 is in the first 100.
4

May 10, 2010 13:21
0
அபு நிஹான்:
சகோதரர் ஃபைசல் அவர்களுக்கு அல்லாஹ் இன்னும் பல சாதனைகள் புரிய கிருபை செய்வானாக.

சகோதரர் ஆஷிக் அவர்களே,

மொத்தம் 875 மாணவர்களில் 21 முஸ்லீம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். 4 மாணவர்கள் மட்டுமே முதல் 100 இடத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தலும், 875 மாணவர்களில் 21 முஸ்லீம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது வருத்திற்குரிய விஷயமே.

2.4 சதவிகிதம் முஸ்லீம் சமுதாயம் அகில இந்திய அளவில் நடந்த UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நாம் நிம்மதி அடைந்துவிட முடியாது. இன்னும் அதிக மாணவர்கள் UPSC தேர்வு எழுதவும், அரசாங்க வேலைகளில்அவர்கள் ஆர்வம் காட்டவும், பெட்டி தூக்கியே பழகி போன நம் சமுதாயம் இந்தியாவில் வேலைவாய்ப்பில் தலைதூக்கிடவும் முயற்சி செய்வோம், அதற்காக ஒவ்வொரு ஊரிலும் பயிற்சி நிலையங்கள் அமையவும் முயற்சி எடுத்து, இந்த வெளிநாடு வாழ்க்கையை நம் த்லைமுறையோடு முடிவுக்கு கொண்டு வருவோம்.

முயற்சி செய்வோம், இறைவனிடம் இறைஞ்சுவோம், வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
அபு நிஹான்

5

May 10, 2010 14:45
0
seasonsnidur:
நன்றியுடன் மீள் பதிவு செய்துள்ளோம்.

http://seasonsnidur.blogspot.com/2010/05/blog-post_1614.html
6

May 10, 2010 18:53
0
சாகுல் ஹமீது:
ஆக்கப்பூர்வமான கட்டுரைக்கு மிக்க நன்றி

ஆனால் “ 2002ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் மகனும் காஷ்மீர் ஸ்ரீநகரைச் சேர்ந்த MBBS டாக்டரான இருபது வயதான ஷா ஃபைசல்” என்று எழுதியுள்ளீர்கள். நான் படித்த எந்த பத்திரிக்கை செய்தியிலும் இவரது தந்தை இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக தெரியவில்லை. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்காததினால், தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டதாகத்தான் எழுதியிருக்கிறது. தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த செய்தியை பெற்றீர்கள் என்று தெளிவுபடுத்த இயலுமா.

மிக்க நன்றி
7

May 11, 2010 01:53
0
அப்துல் பாஸித்:
சுப்ஹானல்லாஹ்..
ஷா ஃபைசல் அவர்களுக்கு அல்லாஹ் மேலும் பல வெற்றிகளை தந்தருள்வானாக!
முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக!
8

May 11, 2010 18:38
0
அபு ஆஷிக்:
அல்ஹம்துலில்லாஹ்.
ஷா பைசல் அவர்களுக்கு மேலும் பல வெற்றிகளை அல்லாஹ் உரித்தாக்குவானாக!

சாகுல் ஹமீது இந்த கட்டுரை தவறு என்று சொல்லவில்லை. இந்த செய்திக்கான மூலத்தை பகிர்ந்துகொள்ளமுடியுமா என்றுதான் கேட்டார்.

//காஷ்மீர் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் //
//கடந்த 2002ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தன் கணவர் குலாம் ரசூல் ஷாவை நினைவு கூர்கிறார்.//

முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே.. தாங்கள் இதற்கான மூல செய்தியை பகிர்ந்துகொண்டால் நலமாக இருக்கும்.

9

May 13, 2010 04:31
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் ஷாகுல் ஹமீது & அபூ ஆஷிக்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. ஷாகுல் ஹமீது சுட்டிக் காட்டிய பிழை உடனேயே திருத்தப் பட்டது. நமது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை நம் வாசகர்கள் ஆழ்ந்து படிப்பதை அறியும்போது உள்ளம் மகிழ்கிறது!

சகோ. அபூ ஆஷிக்,
இக்கட்டுரையின் பெரும்பாலானவை http://www.ndtv.com/news/india...-23771.php எனும் இணைய தளத்திலிருந்து எடுத்து, தமிழ்ப் படுத்தியவை.

தமிழாக்கத்துக்கு எங்கள் குழுவில் அதிகம் பேர் இல்லையாதலால், ஆங்கிலச் செய்திகளைத் தமிழாக்கித் தருவதற்குத் தன்னார்வச் சகோதரர்கள் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாஹு கைரா!
10

May 13, 2010 10:44
0
அபு ஆஷிக்:
அஸ்ஸலாமு அலைக்கும்

தள நிர்வாகிகளுக்கு நன்றி

நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்கத்தில் எந்த இடத்திலும் Indian army என்ற வார்த்தையோ அல்லது ராணுவத்தினர் என்று பொருள்படக்கூடிய வார்த்தையோ இல்லை. இருக்கும் இடங்களில் தீவிரவாதிகளே கொன்றார்கள் என்று இருக்கிறது. இருப்பினும் இந்த கட்டுரையில் இரண்டு மூன்று இடங்களில் ஃபைசலது உறவினர்களை தந்தையை கொன்றது இந்திய ராணுவமே என்று இருக்கிறது.

இப்படி மொழிபெயர்ப்பது மொழிபெயர்ப்பு தவறினால் விளையக்கூடியதல்ல.

சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கம் என்ன என்பது கேள்வியாக இருக்கிறது.

11

May 13, 2010 21:13
0
எம்.எஸ்.கே:
சகோதரர் அபூ ஆஷிக் அவர்களே

// Nine years ago, his father, a school teacher, was killed by militants in the border district of Kupwara //

ஆங்கிலத்தில் militants என்ற வார்த்தையுள்ளது இது போராளிகள் போர் வீரர்கள் போன்ற பொருளை தரும், மேலும் இராணுவத்தை Military என்று குறிப்பிடப் படுவதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அதே போல் தீவிரவாதிகளை குறிப்பிட Terrorist என்று அல்லது muslim terrorists என்று மீடியாவில் பொதுவாக குறிப்பிடப் படும் வழக்கம் உள்ளது. ஆகையால் Militant என்பது கவனக் குறைவால் இராணுவம் என்றும் காஷ்மீர் எனும் போது இந்திய இராணுவம் என்ற மொழிபெயெர்ப்பு தவறுதலாக ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க இயலாது.

சுட்டிக் காட்ட பட்ட உடன் திருத்தம் வெளியிட்ட தளத்தினர் நோக்கத்தை பற்றி கேள்வி எழுப்புவது முறையாகாது என்பது என் கருத்து.
12

May 14, 2010 19:01
0
அபு ஷாஹித்:
வ அலைக்குமுஸ் ஸலாம்

அபு ஆஷிக் குறிப்பிட்டுள்ள படி சுட்டியில் எங்கும் indian army என்ற வாசகமில்லை அதே போல் அவர் குறிப்பிட்ட படி தீவிரவாதிகள் Terrorist கொன்றார்கள் என்றும் நேரடி வாசகம் இல்லை.

Militant என்பதை மொழிபெயர்த்ததில் தவறு ஏற்பட்டதாகவே கருத முடிகிறது.

மொழிபெயர்ப்பில் தவறினால் இது விளையக்கூடியது இல்லை என்று உள் நோக்கம் கற்பிக்க்கும் கேள்வி எழுப்புவது எனில். அபூ ஆஷிக்??? எனும் பெயரும் இப்படி நோக்கம் கற்பிக்கும் பின்ன்ணியில் கேள்வியாக்கப்படலாமே?

இது போன்ற போக்கு வேண்டாம் சகோதரரே...
13

May 14, 2010 20:14
0
அபு ஆஷிக்:
சகோதரர் எம்.எஸ்.கெ அவர்களுக்கும், அபு ஷாஹித் அவர்களுக்கும் நன்றி,

Militant என்பதற்கும் military என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல்தான் இங்கே சத்தியமார்க்கத்தில் மொழிபெயர்த்து வருகிறார்களா? அப்படியானால் இதுவரை மொழிபெயர்த்து வந்திருக்கும் எல்லா கட்டுரைகளையும் திருப்பி பார்க்கவேண்டும்.

//போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் நடந்த சண்டையின் இடையில் அகப்பட்டு, முபீனாவின் சகோதரர் இர்ஷாத், ஓர் இராணுவ வீரரின் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானார்.
//
நான் படித்த எந்த செய்தியிலும் முபீனாவின் சகோதரர் crossfireஇல் இறந்தார் என்றுதான் இருக்கிறதே தவிர, ராணுவவீரரின் துப்பாக்கி குண்டிற்கு இரையானார் என்று இல்லை.

crossfireஇல் இறந்தார் என்பதன் பொருளே யாருடைய குண்டினால் இறந்தார் என்று அறியமுடியாது என்பதால்தான். ஆனால், மொழிபெயர்த்தவரோ பக்கதில் இருந்து குண்டை எடுத்து பரிசோதித்தது போல, “ராணுவ வீரரின் துப்பாக்கி குண்டிற்கு” பலியானதாக எழுதுகிறார்.

சத்தியமார்க்கம் மொழிபெயர்ப்பாளர் எதற்காக இப்படி வலிந்து திணித்து எழுதுகிறார் என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை.
14

May 15, 2010 02:33
0
எம். எஸ். கே:
சகோதரர் (அபூ ஆஷிக் அவர்)களே

குறைகள் காண்பது எளிது, குறைகள் அறவே இல்லாமல் ஒன்றை காண்பது அரிது. ஆகையால குறைகள் கண்டால் அதை திருத்தும் நல்ல நோக்கத்துடன் சுட்டிக் காட்டிடும் பண்பே சிறந்த பண்பாகும்.

மொழியாக்கம் செய்யப்பட்ட ஆக்கத்தின் சுட்டி தரப்பட்டு http://www.ndtv.com/news/india...-23771.php அதில் உள்ள் militant எனும் வார்த்தை தவறுதலாக மொழியாகியது என்றும், சுட்டிக் காட்டப் பட்டவுடன் தளத்தினர் திருத்தி விளக்கம் அளித்துள்ளனர். அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் பக்கத்தில் இருநது உள்ளத்தை பிளநந்து பார்த்த்தைப் போல் மீண்டும் மீண்டும் உள் நோக்கம் கற்பித்துது வருகிறார் அபூ ஆஷிக்???

மேலும் மொழியாக்கப்பட்ட மூல ஆக்கம் வேறு, அதிலலிருந்த வாசகம் வேறு, ஆனால் நான் படித்த செய்தியில் cross fire என்று இருந்தது இந்திய இராணுவத்தினர் குண்டுக்கு இரையானார் என்று இல்லை என்று அபூ ஆஷிக் ??? எதற்காக இப்படி வலிந்து திணித்து எழுதுகிறார் என்பது எனக்கும் சுத்தமாக புரியவில்லை.
15

May 15, 2010 23:22
0
md jalaloudine:
alhamdu lillah
16

May 16, 2010 00:58
0
Abu Shaima:
சகோ அபூ ஆஷிக்,

//crossfireஇல் இறந்தார் என்பதன் பொருளே யாருடைய குண்டினால் இறந்தார் என்று அறியமுடியாது என்பதால்தான். ஆனால், மொழிபெயர்த்தவரோ பக்கதில் இருந்து குண்டை எடுத்து பரிசோதித்தது போல, “ராணுவ வீரரின் துப்பாக்கி குண்டிற்கு” பலியானதாக எழுதுகிறார். //

சத்தியமார்க்கம்.காம் மொழிபெயர்ப்பாளர் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்து எழுதவில்லை என்பதால் தான் தவறைச் சுட்டியவுடன் இத்தளத்தினர் திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவு.

அதேவேளை நீங்கள் கிராஸ்பயரின் போது பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது போல் எழுதியுள்ளீர்களே!
17

May 16, 2010 08:40
0
S.S.K:
ASSALAAMU ALAIKUM

"ALHAMDULILLAAH" AMAZING & INSPIRING EFFORT INDEED.

THIS WILL REALLY BOOST THE MORALE OF MUSLIM STUDENTS AND THIER FAMILY,TO UPBRING THEIR CHILDREN WITH BETTER EDUCATION IN THIS COMPETITIVE WORLD.

"WHERE THERE IS A WILL ...THERE IS A WAY"
"STRONG DETERMINATION PAVES WAY TO SUCCESS"

MY BEST WISHES AND PRAYERS FOR YOU FOR ALL YOUR NOBLE ENDEAVORS.

JAZAKALLAHU KHAIRAN



18

May 16, 2010 09:40
0
அஹ்மத் கான்:
மனதிற்கு நிறைவைத் தந்தது இந்த ஆக்கம்.

மிகவும் பாராட்டத்தக்க முன்மாதிரியான ஃபைஸல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

ஆங்கிலத்தில் இச்செய்தியை அறிய நேர்ந்திருந்தாலும் இணையத்தில் தமிழில் முதன் முதலில் வாசிக்க ஏதுவாக மொழியாக்கம் செய்திருக்கும் இத்தளத்தினருக்கு நன்றிகள்.

நல்லவைகளை கணக்கிலேயே கொள்ளாமல் பிறர் குறைகளை தேடித் திரியும் சகோதரர்கள் தம்மைத் திருந்திக் கொள்ள வேண்டுகோள்.

அல்லாஹ் நல்லதை நாடட்டும்.
19

May 17, 2010 11:29
0
ஷேக்:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இங்கே விவாதிக்கப்பட்ட வாதங்களை விடுத்துவிட்டு சாதனைப்படைத்த அந்த முஸ்லிம் சகோதரரை பாராட்டுவோம்.பொதுவாகவே மீடியாக்கள் கஷ்மீர் பற்றிய செய்திகளை மூடி மறைப்பதிலேயே குறியாக உள்ளன.உண்மையான போராளிகள் நிச்சயமாக ஷா ஃபைஸலின் தந்தையை சுட்டுக்கொன்றிருக்கமாட்டார்கள்.இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளின் வேலைதான் இது.ஆகவே இந்திய மீடியாக்கள் கஷ்மீர் குறித்து கூறும் செய்திகளை நம்பாதீர்கள்.

அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
20

May 21, 2010 18:54
0
M. J. SYED ABDULRAHMAN:
AL-HAMDULILAH ELLAPUHALUM ALLAH JALLAJALAH

21

May 23, 2010 16:44

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:82 எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள். அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஷா ஃபைசல்!
Twitter
RSS
YouTube
English