சத்தியமார்க்கம்.காம்

ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா? print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
திங்கள், 12 ஏப்ரல் 2010 15:11

ஒபாமாவின் அழைப்பு"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட களங்கத்தை, "மாற்றம்" என்ற ஒற்றை முழக்கத்தோடு பதவிக்கு வந்திருக்கும் அதிபர் பராக ஒபாமா துடைக்க முயலுவதாகத் தெரிகிறது.

'அமெரிக்காவின் பாதுகாப்புத் தொலைநோக்கு' எனும் திட்ட வரைவுகளிலிருந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" எனும் சொல்லை நீக்குவதற்கு அண்மையில் ஒபாமா ஆணை பிறப்பித்திருக்கிறார்.

"அமெரிக்கா போரிடப் போவது பயங்கரவாதிகளுடனே அன்றி, இஸ்லாத்துடனோ முஸ்லிம்களுடனோ அல்ல. ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் எனும் கண்ணோட்டத்தோடு அமெரிக்கா பார்க்காது" என்று அதிபர் பதவி ஏற்றவுடன் ஒபாமா செய்த அறிவிப்பு, இப்போது அரசு ரீதியான செயல்பாட்டுக்கு வரத் தொடங்கி இருக்கிறது என எதிர்பார்கலாம்.

மேற்காணும் ஆணை செயலுக்கு வந்தால், அரசின் உயர்மட்ட அளவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'யூத லாபி'யிலும் பெருத்த 'மாற்றம்' ஏற்படுத்தும் என நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

முந்தைய புஷ் நிர்வாகம், தனது பாதுகாப்புக் கொள்கையில், "21ஆம் நூற்றாண்டின் மாபெரும் போராட்டமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனான கொள்கைப்போரையே அமெரிக்கா கருதுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது. முஸ்லிம் நாடுகளைக் குறித்து ஒருமுறை "ரவுடி நாடுகள் (Rogue States)" என்றும் "சாத்தானின் அச்சு (Axis of Evil)" என்றும் வர்ணித்த புஷ், இஸ்லாத்தை, "கொடூரமான தீய மதம் (Evil and Wicked Religion)" என்றும் குறிப்பிட்டவராவார்.

"இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய ஜிஹாத், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற, தீவிரவாதத்துடன் மதத்தை இணைக்கும் சொல்லாட்சிகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு முந்தைய அரசுக்கு நான் பலமுறை பரிந்துரைத்தேன்; ஆனால் பயனில்லாமல் போனது. ஏனெனில், மேற்காணும் சொற்களைச் செவியுறும் ஒரு முஸ்லிம், தம் மதத்தின் மீதான தாக்குதலாகவே அவற்றைக் கருதுவார். அப்படிக் கருத வேண்டும் என்றுதான் உஸாமா பின் லேடன் விரும்புவார்" என்று கூறுகிறார் காரன் ஹ்யூகஸ். இவர் முன்னாள் அதிபர் புஷ்ஷின் அரசில் முஸ்லிம் உலகினரோடு உறவு கொண்டாடுவதற்கான மேல்மட்ட அதிகாரியாக இருமுறை பதவி வகித்தவராவார்.

அணுஆயுதக் குறைப்பு, குவாண்டனாமோ சிறை மூடுவிழா போன்ற புஷ் நிர்வாகத்துக்கு எதிரான தனது கொள்கையைப் படிப்படியாகச் செயலுக்கு கொண்டு வரும் ஒபாமாவின் திட்டங்களில், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடைவிதித்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

புதிய தொடக்கத்துக்கு அழைக்கும் ஒபாமா!

Dim lights Embed Embed this video on your site

உலகளாவிய முஸ்லிம்களுடனான நேசக்கரம் நீட்டலின் ஒரு பகுதியாகவே அமெரிக்க அதிபரின் ஆணை பார்க்கப் படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "அமெரிக்கா முஸ்லிம்களின் எதிரி இல்லை என்றும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மட்டுமே அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றும் ஒபாமா வலியுறுத்தி வருவதன் ஓர் அங்கமே இது என்றும் கூறுகிறார்கள்.

கடந்த ஜூன் 4, 2009இல் கெய்ரோவில் உரையாற்றிய ஒபாமா, "புதிய தொடக்கம்" எனும் தலைப்பில் இதே கருத்தை வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

"உலகின் இரண்டாவது பெரும்பான்மையினர் பின்பற்றும் இஸ்லாத்தைப் பழித்துக் கொண்டு முஸ்லிம்களுடன் நேசக்கரம் நீட்டுவதாகக் கூறுவது ஒன்றுக்கும் உதவாது" என்று ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதீப் ராமமூர்த்தி உருப்படியாக ஆலோசனையைக் கூறியிருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.

அமெரிக்க யூத லாபியை மீறி, 'மாற்றம்' மாறாமல் செயலுக்கு வந்தால், அமெரிக்காவைப் பற்றிய உலக முஸ்லிம்களின் மனதில் உள்ள வெறுப்பு, படிப்படியாக நீங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை வழங்குவதில் ஒபாமா உறுதியுடன் இருப்பாரா?

எதிர்காலம் பதில் சொல்லும்!

Trackback(0)
கருத்துக்கள் (6)add comment
0
mohamad.nasar:
asalamu.alikum.print.adukum.vasate.innum.sariyakavellai
1

April 13, 2010 21:04
0
பிறைநதிபுரத்தான்:
ஐக்கிய நாட்டு சபையின் தொடர் வேண்டுகோளை புறக்கணித்து, பாலஸ்தீனத்தின் அல்‍குத்ஸ் ‍‍_ கிழக்கு பகுதியில், யூதர்களை குடியேற்றுவதற்காக ‍ இஸ்ரேல் தொடர்ந்து குடியிருப்புக்களை கட்டி வருகிறது.

தனது ஆட்சிக்காலத்துக்குள் இஸ்ரேல்‍‍‍‍‍‍‍‍‍ _ பாலஸ்தீன பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்போவதாக கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமா, பாலஸ்தீனப்பகுதிகளில் யூதர்களை குடியமர்த்தி வரும் இஸ்ரேலை இதுவரை கண்டிக்கவோ ‍எச்சரிக்கவோ இல்லை. இஸ்ரேலின் குடியிருப்பு கட்டும் திட்டம் பேச்சுவார்த்தையை சீர்குலைக்காமல் நடத்தப்படவேண்டும் என்று இஸ்ரேல் அதிபருக்கு “வேண்டுகோள்” மட்டும்தான் விடுத்தார்.

இஸ்ரேலை நிர்ப்பந்தம் செய்து ‍, பாலஸ்தீன பிரச்சினைக்கு முடிவு காணும் வரை, இஸ்லாத்தை பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவதாக ‍ இஸ்லாமியர்களுக்கு ‍ நேசக்கரம் நீட்டுவதாக ஒபாமா கூறும் அனைத்தும் நாடகமாகவே கருதப்படும்.

ஒபாமா சொல்லை ‍ _ செயலாக்கி காட்டவேண்டிய தருணம் இது..


2

April 14, 2010 17:55
0
சஃபி:
பிறைநதி புரத்தானின் கருத்துகள் சரியானவையே என்று எண்ணத் தோன்றுகிறது
3

April 14, 2010 20:39
0
சத்தியமார்க்கம்:
அன்புச் சகோதரர் முஹம்மது நாஸர்,

எல்லாப் பக்கங்களையும் முழுமையாக அச்சிடும்படியே வடிவமைத்திருக்கிறோம்.

உங்களுடைய பிரிண்டர் செட் அப்பில் ஏ4 பேப்பர் ஸைஸ் தேர்ந்தெடுத்து அச்சிடுவீர்களாயின் முழுமையாக அச்சாகும்.

முயன்று பார்த்து எழுதுங்கள்.
4

April 14, 2010 20:43
0
Oppressed Muslims:
யார் அமெரிக்காவின் அதிபராக வருகிறாரோ, முஸ்லிம்களை பழிதீர்ப்பவர்களாக
அவர்கள் நாளடைவில் மாறிவிடுகிறார்கள்.
நமது பாதணியில் படும் தூசுக்களைக்கூட நம்பலாம்.
இவர்களை ஒருபோதும் நம்பவே கூடாது.
5

April 17, 2010 13:12
0
Rafi:
Asslamu Alikum,

Dear brother as a Muslim we should think and be inteligent. Allah says in quran you are the best nation for the human. America is benefit oriented whoever is come to American prsident their motive is enjoy the muslim ummah wealth. If a Muslim come to that post he also do the same because he can't make decision this is already decide to make Muslim as fool. Brother pls open your eyes and try to understand what happend in the world Allah says in quran kuffar only happy when they pull out us from Islam. so think brother.
Think!Think!Think! only Islam can solve ummah problem not America. Pls don't trust false statment. Bush! Barrak Hussain obama all are same no change.
JKH
6

June 17, 2010 19:59

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» Noam Chomsky: My Reaction to Osama bin Laden’s Death

We might ask ourselves how we would be reacting if Iraqi commandos landed at George W. Bush’s compound, assassinated him, and dumped his body in the Atlantic. By Noam Chomsky

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:21 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சம். தூய்மையும்) உடையோராகலாம்.

English News

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தலையங்கம் ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?
Twitter
RSS
YouTube
English