சத்தியமார்க்கம்.காம்

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன print Email
பொதுவானவை - பொதுவானவை
புதன், 03 பிப்ரவரி 2010 14:45

வெடிகுண்டு"ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

தெஹல்கா அவரைப் பேட்டிக்கண்டபோது, "குண்டுவெடிப்புகள் நடந்துள்ள நேரங்களை அவதானித்து, அதனை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார். தெஹல்காவினுடனான அவரது பேட்டி சத்தியமார்க்கம் வாசகர்களுக்காக இங்குத் தமிழில் தரப்படுகிறது:

தெஹல்கா:

பாஜக பிரச்சனைகளைச் சந்தித்த போதெல்லாம் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்களே?

தி.வி.சிங்:

நான் என்ன கூறினேன் என்றால், "குண்டுவெடிப்புகள் நடைபெறும் நேரம் முற்றாகக் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை. எப்போதும் பாஜக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளைகளில் மட்டும் மிகச் சரியாக நாட்டில் குண்டுவெடிப்புகள் நடைபெறுவது ஏன்? அவ்வழியில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்பதுவே என் கோரிக்கை. அல்லாமல் நான் யாரையும் குற்றப் படுத்தவில்லை.

தெஹல்கா:

"பாஜகவுக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போது" என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?

தி.வி.சிங்:

பாஜகவுக்கு எதிரான தெஹல்காவின் வெளிப்படுத்தல்களைக் குறித்து மக்களவையில் சர்ச்சை செய்யப்பட்டபோது, மூன்று நாட்களுக்கு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் மக்களவையில் அது குறித்துச் சர்ச்சை செய்யப்பட்ட வேளையில் மக்களவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியும் முதலமைச்சரான மோடி வெறும் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேளையில்தான் கோத்ரா சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்திய கர்நாடகா தேர்தலில், ஓட்டளிப்புக்கு முதல் நாளில் ஹூப்ளியில் குண்டுவெடித்தது. அதேபோன்று இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ஜெய்ப்பூரில் குண்டு வெடித்தது. நிச்சயமாக இது விசாரணை நடத்தப்பட வேண்டியதாகும்.

தெஹல்கா:

உங்களின் இந்தப் பதில், காங்கிரஸின் மீது சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியதற்கான எதிர்வினையா?

தி.வி.சிங்:

இல்லை. அதைக் குறித்த கேள்வியே தேவையில்லை. பாஜகவின் பிரச்சனைகளின்போது குண்டுவெடிப்புகள் நடந்து வருவதை நான் நீண்டகாலமாக கவனித்து வருகிறேன்.

தெஹல்கா:

ஆனால், சுஷ்மா சுவராஜ் காங்கிரஸின் மீது குற்றம் சுமத்தியது....

தி.வி.சிங்:

குண்டுவெடிப்புகளில் காங்கிரஸுக்கு நேரடியான பங்குண்டு என்றே சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். நான் அவ்வாறு கூறவில்லை. மேலும், அவரின் அந்தப் பேச்சில் ஏதாவது உண்மையுள்ளதா?

ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் குண்டுகள் தயாரிக்கின்றன என்பது உண்மை.

தெஹல்கா:

வெடிகுண்டுகள் தயாரிப்பில் பாஜக, வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றனவா?

தி.வி.சிங்:

ஆம். உண்மையில், 1992ஆம் ஆண்டு மத்தியபிரதேசத்திலுள்ள வி.ஹெச்.பி அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதில் ஒரு வி.ஹெச்.பி தொண்டர் பலியானார், இருவர் காயமடைந்தனர். இவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்தது. அதன் பின் 2002 ல், அதே மத்தியபிரதேசம் இந்தோர் மாவட்டத்திலுள்ள மோவில் கோவில் ஒன்றில் குண்டு வெடித்தது. தொடர் விசாரணையில் காவல்துறை விஹெச்பி தொண்டர்களைக் கைது செய்தது. அவர்கள், "வெடிகுண்டுகள் உருவாக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராமல் குண்டு வெடித்ததாக" குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களின் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோ கேசட் ஆதாரம் என்னிடம் உள்ளது. மீண்டும் 2006 ல், நாண்டடிலுள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் வீட்டில் குண்டு ஒன்று வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். அதன் பின் 2008 மார்ச்சில், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. தொடர் விசாரணையில் இரு வி.ஹெச்.பி தொண்டர்களைத் தமிழக காவல்துறை கைது செய்தது. அவர்கள் தான் அக்குண்டுகளை வைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சூரத்தில் திடீரென மரங்களில் வைக்கப்பட்டிருந்ததாக 18 வெடிகுண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டறிந்ததே, அது எப்படி?

தெஹல்கா:

எனவே, சமீபத்திய தொடர்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் பாஜக உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்களா?

தி.வி.சிங்:

இல்லை, அவ்வாறு எதுவும் நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம், குண்டுவெடிப்புகள் நடைபெறும் வேளைகளில் நடந்துள்ள முக்கிய சம்பவங்கள் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை. ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்பி தொண்டர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் அலுவலகங்களிலிருந்து குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன; தெளிவான மூன்று-நான்கு வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவருமே இவற்றைக் கவனிப்பதில்லையே ஏன்?

தெஹல்கா:

தீவிரவாதத்திற்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணை வேண்டுமா?

தி.வி.சிங்:

நிச்சயமாக, ஆனால் முஸ்லிம்கள் மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் எனில், அது சரியல்ல.

தெஹல்கா:

பின்னர் ஏன், இந்தப் பழிசுமத்தும் விளையாட்டுத் தொடர்கிறது?

தி.வி.சிங்:

தேசியவாத சிந்தனை கொண்டோர் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. பாஜக பிரிவினை அரசியலை நம்புகிறது. முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்காமல் அவர்களால் பிழைப்பு நடத்த முடியாது. ஏதாவது நடைபெறும் ஒவ்வொருமுறையும் அவர்கள் தங்களின் ஹிந்துத்துவ கனவுக்குள் திரும்பிச் செல்கின்றனர்.

தெஹல்கா Vol 5, Issue 33இலிருந்து

தமிழாக்கம் அல்-அமீன்

கருத்துக்கள் (3)add comment
0
Thaz:
அல்லாஹு அக்பர்.
சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசலில் மினாரா கட்டுவதற்கு தடை ஏற்படுத்திடக் காரணமாயிருந்த சுவிஸ் நாட்டு அரசியல்வாதி இஸ்லாத்தை ஏற்றார்.

English:
http://www.tikkun.org/tikkundaily/2009/12/04/member-of-the-swiss-political-party-that-pushed-for-minaret-ban-converts-to-islam/

Sweedish:
http://www.20min.ch/news/dossier/minarett/story/27286120

அன்பு சத்தியமார்க்கம் டீம்.
நான் இத்தகவலை மின்னஞ்சலில் பெற்றேன். இதைப் பற்றிய கட்டுரை ஒன்றை தமிழில் பதிப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடாத்துவானாக.
ஜஸாக்கல்லாஹ்

__________

பின்னூட்டத்திற்கு நன்றி. கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள்.
நன்றி!

http://www.satyamargam.com/TamilTyping
1

February 05, 2010 19:34
0
U F O:
படுபாவிகள்..! ஆதாரமே இல்லாமல் முஸ்லிம்களை தடா/பொடா என கைது செய்வார்கள். பல்லாண்டுகள் விசாரணைக்கைதியாகவே வைத்திருப்பார்கள். சிமி போன்ற முஸ்லிம் இயக்கங்கள் மீதான தடையை எந்த ஆதாரமும் இன்றி நீட்டிக்கொண்டே இருப்பார்கள். எண்ணற்ற ஆதாரங்கள் சாட்சிகள் இருந்தும் எந்த ஹிந்துத்வா அமைப்புகளையும் தடை செய்யலாமா என யோசிக்கக்கூட மாடார்கள். பல குண்டுவெடிப்புகள், கொத்துக்கொத்தாய் கொலைகள், தீவைத்து அழித்தல், கொள்ளை, கற்பழிப்பு, மசூதி இடிப்பு என வண்டி வண்டியாக ஆதாரமிருந்தும் சாட்சிகள் இருந்தும் ஹிந்துத்வா பயங்கரவாதிகள் மீது தங்கள் சந்தேக பார்வையைக்கூட திருப்பாமல் அமைதியாக இருப்பார்கள். பல்லாண்டுகள் கழித்தேனும் வேருவழியின்றி முஸ்லிம்களுக்கு ஆதரவாய் முடிக்கப்பட்ட அனைத்து விசாரணைக்கமிஷன்களும் கோமாவில் கிடத்தப்படும். உயர்/உச்ச நீதிபதிகளே காக்கி அரை டவுசர்கள் போட்டுக்கொண்டு தீர்ப்பளிப்பார்கள். அப்படியே அத்திப்பூத்தாற்போல் நெஞ்சுரத்துடனும் நேர்மையுடனும் ஹேமந்த்கார்க்கரெ பொன்றவர்கள் உண்மையை ஊருக்கும் உலகுக்கும் ஆதாரத்துடன் சொன்னாலும் அவர்களும் அழித்தொழிக்கப்படுவார்கள். அதை கேள்வி கேட்டால், அவர் மத்திய மந்திரியாக (அந்துலெ) இருந்தாலும் பிற்காலத்தில் காணாமல் போய் விடுவார். மொத்தத்தில் எதிர்காலத்தில் இந்தியா அமைதியான நாடாக இருக்க அரசுக்கும், மீடியாக்கும் நடுநிலையான யாருக்கும் கொஞ்சமும் அக்கரை இல்லை என்பது நன்றாக விள‌ங்குகிற்து. எங்கே செல்லும் இந்த பாதை? இங்கு இன்னொரு இஸ்ரேல்/ஃபாலஸ்தீன்?
2

February 10, 2010 22:26
0
ibnu shah:
உண்மையில் பாமர மக்களுக்கிடையில் மத வேறுபாடுகளோ பிரச்சனைகளோ வெறுப்புகளோ இல்லை.மதத்தை அரசியல் கருத்தாக முன் வைக்கும் மதவாத அமைப்புகளினால்தான் பிரச்சனையே.
இந்து தீவிரவாதம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.அந்தக்கோணத்தில் விசாரிக்கப்படுவதும் இல்லை.ஒரு ஜனநாயக தளமும் அற்ற நிலையே இந்திய அரசியல் போக்காக உள்ளதற்கு மேற்சொல்லப்பட்ட செய்திகள் ஒரு சாட்சி.

கேலிக்கூத்தான இந்த நாடகத்திற்கு எப்பொழுது முடிவு வருகிறது என்று பார்ப்போம்.
3

February 11, 2010 06:44

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» Sangh Pariwar worried about ‘Hindu' link to terrorism

NEW DELHI: Ever since a ‘Hindu' link to terrorism surfaced in the form of , many in the Rashtriya Swayamsevak Sangh have been spending sleepless nights, wondering where police investigations will lead once the agencies are able to connect all the dots that have emerged over the past two years.

» மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!?

மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை  நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்து ஜாக்ரன் மன்ச் தான் என்பது இந்த வழக்கை விசாரித்து...
You are here  : முகப்பு