சத்தியமார்க்கம்.காம்

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
சனி, 09 ஜனவரி 2010 00:00

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் பொருளாதாரம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின் வளர்ச்சி, நேர்மையான-நியாயமான வழிமுறைகளின் அடிப்படையில் இல்லாத போது, அதுவே எதிர்மறை விளைவுகளையும் தோற்றுவித்து விடுகிறது.



இன்று உலகப் பொருளாதாரம் முழுமையும் நேர்மை-நியாயமற்ற "வட்டி"யின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. இதனால் எழுந்த எதிர்மறை விளைவு, செல்வம் படைத்தவர்களை மேலும் செல்வந்தர்களாகவும் ஏழைகளைப் பஞ்சப் பரதேசிகளாகவும் ஆக்கி விட்டது. ஏழை மக்கள் பாதிக்கப்படுவதால் என்றுமே அதிகார, துஷ்பிரயோக அரசுகள் அசைந்து கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், இந்தக் கொடும் வட்டி, சமீப காலத்தில் அதிகார, பணபல வர்க்கத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

அதன் பின்னரே, வட்டியினால் விளையும் தீமையினைக் குறித்தும் வட்டியில்லாத ஒரு மாற்று
பொருளாதார கட்டமைப்பினைக் குறித்தும் அதிகார, பணபல வர்க்கங்கள் சிறிதாக சிந்திக்கத் துவங்கியுள்ளன.

உலக மக்களின் சுபிட்சமான வாழ்வுக்குரிய வழிமுறைகளை வாழ்வியல் நெறியாக கொண்ட சத்தியமார்க்கமாம் இஸ்லாம், உலகின் அமைதி வாழ்வுக்கு நேர்மை-நியாயமற்ற கொடும் வட்டியைப் புறக்கணித்து
வட்டியற்ற கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட கட்டளையிடுகிறது.

இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாட்டைக் கடைபிடித்து, வட்டியற்ற முறையிலான பொருளாதாரத்தைக் கட்டமைத்திருந்த ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகள், சமீபத்திய கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்காமல் தலைநிமிர்ந்து நின்றதை உலகம் கண்டு கொண்டது.


இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசே வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய கூட்டு வங்கி" ஒன்றை உருவாக்கியிருப்பினும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்பால் சுப்பிரமணிய சுவாமி அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கி முடக்கினார்.

"நல்லவைகளை நல்லவர்களே வரவேற்பர்!". அத்தகைய நல்லோர் பலருக்கு இன்னமும் வட்டியில்லா பொருளாதாரம் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதனுடைய அவசியம் குறித்தும் விரிவாக விளக்கப்படவில்லை. அவர்கள் அதன் நன்மைகளை அறிந்து கொண்டால், "இஸ்லாமிய வங்கிகள்" மூலம் இந்த உலகமே ஒரு பொருளாதார புரட்சியைச் சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே, வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய பொருளாதார திட்டங்கள்" குறித்து வெளிப்படையான கலந்தாய்வுகள், விளக்கங்கள், பிரச்சாரங்கள் மிக ஆழ்ந்த திட்ட வரைவுகளோடு முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதனைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு, இறை மார்க்கத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்களுக்கு உண்டு.

அவ்வரிசையில், வட்டியின் தீமைகளையும், வட்டியில்லா முறையிலான இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளையும் விளக்கும் விதமாக, "உயிர்க்கொல்லி" என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சகோதரர் ரஃபீக் ரோமன் மற்றும் ஆர். நைனார் முஹம்மது ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இக்குறும்படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா வருகிற 11.01.2009 திங்கள் மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான கம்பர் பி. செல்வந்திரன் குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டு தலைமையுரையாற்றுகின்றார். தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி கவிஞர் சல்மா முதல் குறுந்தகடை பெற்று சிறப்புரையாற்றுகின்றார்.

வட்டி அடிப்படையிலான பொருளாதார கட்டமைப்பினால் விளையும் தீமைகளைப் பாமரர்கள் முதல் அரசுகள் வரை இன்று கண்முன்னால் கண்டுக் கையைச் சுட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், உலகின் சுபிட்ச வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கும் வட்டியில்லா முறையான இஸ்லாமிய வங்கியியல் குறித்து விளக்கங்கள் கொடுக்க எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவைகளாகும்.

மேலும் இது போன்ற முயற்சிகளை மிக ஆழமான ஆய்வுத் திட்டங்களுடன் முன்னெடுப்போம்; இவ்வுலகை வட்டி என்ற கோர அரக்கனின் பிடியிலிருந்து காப்போம்!


"உயிர்க்கொல்லி" குறுந்தகடு வெளியீட்டு விழா அழைப்பிதழ்:

Trackback(0)
கருத்துக்கள் (8)add comment
0
mohamed sadiq ali:
சலாம்
ணான் சிககொவில் பனி புரிகிரென்.
ஏனக்கு உயிர்க்கொல்லி படம் பட்ட்ரியும் அதன் இயக்குனரின் கனினி முகவரியும் கிடைக்குமா?

ஸாதிக்
1

January 11, 2010 04:35
0
ibnu shah:
இஸ்லாமிய வங்கியியல் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருக்கிறது.1975ல் தான் வட்டியில்லா வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன.வெறும் 35ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் உலகின் பல பாகங்களிலும் பரவி விட்டன.வட்டியில்லா வங்கி முறையைப்பற்றி இன்று பலரும் அறிய ஆர்வமாக இருக்கிறார்கள்.அதைப்பற்றிய ஆய்வுப்பணிகளிலும் பலர் ஈடுபட்டு இருக்கிறார்கள்.பொது மக்களிடமும் வட்டிக்கு எதிராக ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது.ஆனாலும் இது போதாது இன்னும் பரவலாக்கப்படவேண்டும்
2

January 11, 2010 13:24
0
Prabhu Rajadurai:
இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்!

http://marchoflaw.blogspot.com/2006/12/6.html
3

January 16, 2010 13:12
0
அபூ ஸாலிஹா:
சகோதரர் முஹம்மத் சாதிக்,

வட்டியில்லா இஸ்லாமிய வங்கி தொடர்பான இக் குறும்படம் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Universal Syndicates
280/11, Quaidh-e-Millath Road,
Triplicane
Chennai-600 005

Telephone: 91-44-6455-4994

அல்லது எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் '> எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சலுக்கு எழுதுங்கள்.

நன்றி!
4

January 16, 2010 13:25
0
முஹம்மத் :
அஸ்ஸலாமு அலைக்கும்.
///இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாட்டைக் கடைபிடித்து, வட்டியற்ற முறையிலான பொருளாதாரத்தைக் கட்டமைத்திருந்த ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகள், சமீபத்திய கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்காமல் தலைநிமிர்ந்து நின்றதை உலகம் கண்டு கொண்டது.///-->நம்மூரில் வாடிக்கையாளருக்கு கிடைத்தாலும் வங்கிக்கு போய் சேர்ந்தாலும் அதற்கு பெயர் 'வட்டி' தான். இஸ்லாமிக் பேங்க் என்று சவுதியில் சொல்லிக்கொள்ளுகிறார்கள். அங்கே, 'interest' என்று ஆங்கிலத்தில் சொன்னாலோ அதோகதி. அதற்கு அழகான பெயர் வைத்துள்ளார்கள், இஸ்லாமிக் வங்கிகளில். ஃபாய்தா (faaidha) என்று. உங்களுக்கு கிடைத்தால் அப்படித்தான் சொல்ல வேண்டுமாம். அதுவே வங்கிக்கு கிடைத்தால் அதற்குப்பெயர் கமிஷன். அப்புறம் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிக் வங்கிகளில் interest என்றால் ஷட் அப். அதற்கு வேறு ஒரு அழகிய பெயர் உள்ளது. profitloss. உங்களுக்கு என்றால் profit . வங்கிக்கு என்றால் loss. மற்றபடி சிஸ்டம் ஒன்றுதான்.
5

January 16, 2010 22:30
0
சஃபி:
ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.

இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.

இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதை முழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.

மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்.

-அபூஸாலிஹ்
Last Updated ( Friday, 26 February 2010 20:18 )
http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=380&Itemid=197
6

March 09, 2010 14:41
0
a.mohamed nizar:
ennaku islamic banking sammanthamana tamil book allathu web side address theriya paduthayum
8

October 26, 2010 22:28

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» தோழர்கள் - 35 - அம்ரிப்னுல் ஜமூஹ் - عمرو بن الجموح

அம்ரிப்னுல் ஜமூஹ்عمرو بن الجموح தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...

» தோழர்கள் - 31 - ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ - حنظلة بن أبي عامر الأوسي

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீحنظلة بن أبي عامر الأوسي அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு,...

» India may get its 1st foreign Islamic Bank in Bank Asya

NEW DELHI: India may soon get its first foreign Islamic bank with the Reserve Bank of India (RBI) seeking government approval to allow Turkey's Bank Asya to offer Shariah-compliant lending in the country. Shariah, or the Islamic law, bans interest on financing. Bank Asya is keen to start its Indian operations through a representative office in Mumbai. "So far the bank has only sought permission to open a representative office," a finance ministry official said. "We are considering their...

» இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்

மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது...

» இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

இந்தியாவில் த் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப் பொருளாதார இந்திய மைய ICIF ( Indian Centre for...
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English