சத்தியமார்க்கம்.காம்

புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
திங்கள், 07 டிசம்பர் 2009 20:39

றைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை உரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆவணமாக பெரும் பொருட்செலவில் புதியதோர் ஆங்கிலத் திரைப்படம் உருவாகிறது.

"இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன்பு துவங்கி, நபியவர்களின் மரணம் வரையிலான முழுமையான தொகுப்பான இத்திரைப்படம், நபியவர்கள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வரும் அனைத்து அவதூறுகளையும் களையும்!" என்கிறார் அஹ்மது அப்துல்லாஹ் அல் முஸ்தஃபா. இவர் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் அல் நூர் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவராவார்.

வளைகுடா நாட்டின் முக்கிய நாடுகளில் ஒன்றான கத்தரிலுள்ள முன்னணி ஊடக நிறுவனமான அல்நூர் ஹோல்டிங் இந்தத் திரைப்படத்தினைத் தயாரிக்கிறது. சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு துவங்கவிருக்கும் இத்திரைப்படம், 25 முதல் 30 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" - அப்துல்லாஹ்.

திரைப்படத் தயாரிப்புக் குழுவிற்கான தேவைக்காக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ள திறமையான படத் தயாரிப்புக் நிறுவனங்களைத் தேர்வு செய்து கொண்டு வருகிறது அல் நூர் ஹோல்டிங் நிறுவனம். இப்படத்தைத் தயாரிக்க அமெரிக்கத் தயாரிப்பாளரான பேர்ரி எம். ஆஸ்போர்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உலகமெங்கும் சிறார்கள் மனதையும் பல ஆஸ்கர் பரிசுகளையும் அள்ளிச் சென்ற “The Lord of the Rings: The Return of the King”படத் தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்திற்காக இவருக்கு Academy Award for Best Picture விருது கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் புகழ் பெற்ற The Matrix படத்தினைத் தயாரித்தவரும் இவரே.

"ஆங்கிலம் பேசும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்படும். இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது பிற மதத்தவர் மட்டுமின்றி இஸ்லாத்தின் அடிப்படையைச் சரியாக விளங்காத முஸ்லிம்களும் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான எண்ணங்களைக் களையும் முகமாக விளங்கும்!" என்கிறார் அப்துல்லாஹ்.

இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.

இத்திரைப்படத்தின் உரைகள் (ஸ்க்ரிப்ட்), படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் மேற்பார்வையாளராக டாக்டர் யூஸுப் அல் கர்ளாவியும், அவர் தலைமையில் ஒரு இஸ்லாமியக் குழுவும் அமைக்கப் படவுள்ளது என்கிறார் அப்துல்லாஹ்

இத்திரைப்படம், உலகெங்கும் தவறான புரிதல்களுக்குப் பதிலடியாக பெரும் தாக்கத்தையும் கூடவே மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார் சர்வதேச முஸ்லிம் அறிஞர்களுக்கான ஒன்றியத்திற்குத் தலைவரான டாக்டர். யூஸுப் கர்ளாவி

கடந்த 2005 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஜில்லண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை 12 கார்ட்டூன்களை தனது தினசரியில் வெளியிட்டிருந்தது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் அங்கீகாரத்திற்கும் சற்றும் தொடர்பில்லாத அவதூறுகளைச் சுமத்தி இழிவு படுத்தும் எண்ணத்துடன் அப் பத்திரிகை கார்ட்டூன்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து உலகமெங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்தனர்.

பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சர்வதேச மீடியா சாதனங்கள் மூலம் முஸ்லிம்களின் கண்டனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப் பட்டன. அது நாள் வரை இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் இருந்து நடந்து வந்த சூழ்ச்சிகளும், உலகெங்கும் இஸ்லாம் மீது வலிந்து பரப்பப் பட்டு வந்த இஸ்லாமோஃபோபியாவின் ஒட்டுமொத்த உருவமும் வெளியானது. அத்துடன் இஸ்லாத்தின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, இஸ்லாம் பற்றிய அறிவை முழு அளவில் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்கள் மீது சாட்டப் பட்டிருப்பதை உணர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்த உலகமெங்கும் "இறைத்தூதரை அறிந்து கொள்" எனும் வகையிலான இஸ்லாமிய பிரச்சாரங்கள் பெருமளவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது. இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டென்மார்க்கிலேயே 27 பெரும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி European Committee for Honoring the Prophet என்ற பெயரில் வலுவான ஒன்றியத்தை அமைத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மீதும் இறைத்தூதர் மீதும் உலகமெங்கும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் தவறான எண்ணங்களுக்கான ஒரு சரியான மறுமொழியாக இத்திரைப்படம் அமையும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.

- அபூ ஸாலிஹா

கருத்துக்கள் (26)add comment

எழுதியவர்: Rafiqul islam , December 08, 2009 19:13

வரவேற்கப்பட வேண்டிய நல்ல செய்தி.

நபியவர்கள் வாழ்க்கை வரலாறு பற்றி முன்பு வெளியான த மெசேஜ் என்ற திரைப்படம் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.




எழுதியவர்: nasar , December 09, 2009 11:49

இது வரவேற்கக் கூடியதுதான். இருந்தாலும் நடிப்பு என்பது இஸ்லாமியப் பார்வையில் ஏற்றுக் கொள்ள முடியுமா? வாழ்வு வரலாறு உண்மை. ஆனாலும் அந்த வரலாற்றை யாராவது நடிக்கத் தானே வேண்டும். இது பற்றிய சரியான அறிவு எனக்கு இல்லை. இருந்தாலும் எனது மனதில் உள்ள எண்ணமே இந்தக் கருத்து.

__________
சகோதரர் நாசர்,

கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தமிழில் எழுதுங்கள். நன்றி!

http://www.satyamargam.com/TamilTyping




எழுதியவர்: h_jafarullah , December 10, 2009 08:58

செய்தியை படித்தேன். நன்றி.

சகோதரர் நாசர் அவர்களே, தலைமுடி துவங்கி கால் பாதம் வரை ஒட்டுப் போட்டு நிறத்தையும் அழகையும் கூட இரவலுக்குக் கடன் வாங்கி பர்சனாலிட்டி பில்டப் செய்து, ஒரு ஆளை நேரில் எதிர் கொள்ள இயலாதவர் ஒன்பது பேரை விளாசும் உண்மையான ஹீரோவென நம்பவைத்து பாமர ஜனங்களை ஏமாற்றும் சினிமா நடிப்பு தான் நீங்கள் சொல்வது.

நபியவர்கள் காலத்தில் ஒரு சக்கரம் உருண்டது என்பதைச் சொல்ல, உருளும் சக்கரத்தைக் காண்பித்தால் தானே புரியும்.

நபியவர்களின் உருவம் காண்பிப்பது போன்று இஸ்லாம் தடைசெய்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டு சிறப்பாக எடுக்கப் பட்ட படம் தான் "மெசேஜ்". அவசியம் பாருங்கள்.

இண்டர்நெட் ஹராம் என்றிருந்த இழிநிலை மாறி, இஸ்லாமிய அழைப்புப் பணி சிறப்பாக நடைபெறுவது போன்று, சினிமா எனும் சக்தி மிக்க ஊடகத்தினையும் முஸ்லிம்கள் கையாளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.




எழுதியவர்: haneef , December 10, 2009 10:40

எவ்வலவு நபர் படம் எடுத்தாலும் முகம்மத் நபி சமுகம் போல் ஈடு வராது. அவர்கலின் தியாகம் நடிப்பால் எவராலும் காட்ட முடியாது. நம்முடிய துதரை போல் வேருஒருவன் நடித்து காட்டுவது கர்பனை பன்ன முடியாத விசயம்.அடுத்த காரனம் உருவம் கொடுதால் நம் மனதில் நின்ருவிடும் .
சினிமா பார்ப்பது போல் ஆகிவிடும் அவர்கலின் தியாகம் மரந்து விடும்

by hanaeefa




எழுதியவர்: முஹம்மத் ஆஷிக் , December 12, 2009 21:14

///நபியவர்களின் உருவம் காண்பிப்பது போன்று இஸ்லாம் தடைசெய்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டு சிறப்பாக எடுக்கப் பட்ட படம் தான் "மெசேஜ்". அவசியம் பாருங்கள். ////

---- h_jafarullah அவர்களே.
நானும் அந்த படம் பார்த்துள்ளேன். பார்த்து தொலைத்துவிட்டேன். அதற்காக இன்றும் வருந்துகிறேன். அதில் ஹம்சா(ரலி) அவர்கள் தான் ஹீரோ. எனக்கு பிலால்(ரலி) என்றதும் ஹம்சா(ரலி) என்றதும் மற்றும் பல சஹாபிகளின் பெயர்களையும் கேட்டதும் அந்த வெள்ளைக்கார நடிகர்கள் ஏனோ என் நியாபகத்தில் வந்து தொலைக்கிறார்கள். நாளை நான் மறுமையில் அவர்களை பார்க்கும்கால் எனக்கு குழப்பம் வராதா? பல விஷயங்கள் அப்படத்தில் ஹதீஸ்களுக்கு முரணாக இருந்தது.

நமது நாயகம் முஹம்மது நபி(ஸல்)அவர்களை, ஒரு நடிகரை நடிக்கவைத்து காண்பிக்காமல் விட்டது இஸ்லாத்துக்கு எந்த அளவுக்கு கண்ணியம் சேர்த்ததோ அதேபோல, ஒரு போரிலும் கலந்து கொள்ளாமல் போர்க்களத்துக்கு பின்னால் மூடிய கூடாரத்துக்கு உள்ளேயே உக்கார்ந்து கொண்டு இருப்பது போல நபியவர்களை உண்மைக்கு மாறாய் சுயநலமிக்க கோழை போல படம் எடுத்தது, அவர்களை கேவலப்படுத்திவிட்டது. வசனம் பேசினால், குரலுக்கு இணை கற்பித்ததுபோலாகும்(?) என்பதால், படம் பார்ப்பவருக்கு நபியவர்களை ஒரு ஊமை போலவும், நபி கூறும் கட்டளை வசனங்கள்(ஹதீஸ்களில்) எல்லாம் யாரோ மற்றவர்கள் கூறுவதால், நபியவர்களை ஒரு டம்மியாகவும் சித்தரித்து தெரிந்தோ தெரியாமலோ ரசூலுல்லாவை அந்த படம் கேவலப்படுத்திவிட்டது.

எனவே, நபியவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியினை எவரும் பாத்திரத்தை காட்டி எடுத்தாலும் அல்லது காட்டாமல் எடுத்தாலும் தவறாகத்தான் போய் முடியும். அதனால், நபியவர்களை திரைப்படம் எடுக்காமல் இருப்பதே இஸ்லாத்துக்கு சிறப்பு சேர்க்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றவுடன், அவர் நினைவுக்கு வருவாரா? சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவாரா? அல்லது கட்டபொம்மனை காட்டாமல் எடுத்தால் அது கட்டபொம்மன் படமாகுமா?




எழுதியவர்: அபூ பௌஸீமா , December 14, 2009 15:33

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் முஹம்மத் ஆஷிக் சொல்லும் கருத்து உண்மையில் ஏற்புடையதுதான். நானும் Message படத்தைப் பார்த்தேன். இப்போதும் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு பற்றிய செய்திகளைப் படிக்கும் போது, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பம்பற்றி பேசும்போது அந்த நடிகன் Anthony Quinn ன் முகமும் உடலமைப்பும்தான் ஞாபகத்தில் வருகிறது.

அதே நேரத்தில் இன்று அதிகமாகவும் வெகு சீக்கிரமாகவும் சிரமமின்றியும் மக்களுக்குச் சென்றடையும் ஊடகம்தான் சினிமா.... அதற்கடுத்து சின்னத்திரை... அப்புறம்.... இணையதளம்.......

இனி, இவ்வாறான ஊடகங்களைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமே!!! எவ்வாறு ??? பெரிய கேள்விக்குறிதான் நம் முன்னே இருக்கிறது....

..............????




எழுதியவர்: ibnu shah , December 15, 2009 19:48

சகோதரர் ஆஷிக் அவர்களின் கருத்தை மறுக்க முடியாது.நூற்றுக்கு நூறு உண்மை.அதே நேரத்தில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நல்ல கூர்ந்து கவனித்தால்"மெஸ்ஸேஞ்சர்"திரைப்படத்தில் இழிவு படுத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்ற மாதிரி இன்ஷாஅல்லாஹ் இதில் இடம்பெற வாய்ப்பில்லை.ஏனென்றால் இதற்கு பிண்ணனியில் ஓர் உயர்ந்த நோக்கம் இருக்கிறது.நிச்சயமாக அதற்கு பங்கம் வராத படிதான் இத்திரைப்பட குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பலாம்.ஏனென்றால் இது காலத்தின் கட்டாயம்.இதைத்தவிர வேறு வழியில்லை.அல்லாஹ் இம்முயற்சிக்கு வெற்றியை தர எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும்.



எழுதியவர்: மஸ்தூக்கா , December 16, 2009 00:18

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய திரைப்படம் என்றதுமே உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இத்திரைப்படத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கதாபாத்திரத்தில் ஒருவர் நடிக்கப் போகிறார் என்பதை முஸ்லிம்களாகிய நாம் எப்படி அங்கீரிக்க முடியும்?

//இத்திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள டாக்டர். யூஸுப் அல் கர்ளாவி, "இத்திரைப்படம் ஒரு இஸ்லாமிய தஃவா (அழைப்பு) ஆகும்" என்று தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத் தயாரிப்பின் டெக்னிக்கல் கன்ஸல்டண்ட் மற்றும் முழு மேற்பார்வையையும் இவரே கவனிக்கிறார்.//

என்னும் தகவல் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் டாக்டர் யூசூப் கர்ளாவி அவர்களின் சில கொள்கைகளில் நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும் நமது சமகாலத்திய ஒரு மார்க்க அறிஞர் என்பதை மறுக்க முடியாது (அதற்காக அவரது கருத்தக்களை நாம் அப்படியே ஆமோதிக்க வேண்டும் என்று பொருளல்ல)

இது ஒருபுறமிருக்க மார்க்க வழிகாட்டுதலில் நடுநிலை பேணும் சத்தியமார்க்கம் இணைய தளம் இத்தகவலுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டிருப்பதாலும், கட்டுரையாளர் அபூஸாலிஹா அவர்களாக இருப்பதாலும் இத்திரைப்படத் தயாரிப்பு சரியானது தானோ என்று நமது சத்தியமார்க்க இணைய தள வாசகர்கள் முடிவுக்கு வருவார்களே
எனவே இது பற்றி “சத்தியமார்க்கம்” தெளிவாக தமது நிலைபாட்டை தெரிவிக்கலாமே.




எழுதியவர்: மு முஹம்மத் , December 16, 2009 09:10

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

இஸ்லாமிய வரம்புகள் அனைத்தும் குர் ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பேணப்பட்டு ஒரு திரைப்படம் எடுக்க இயலுமா? இயலும் எனில் அது பேசு பொருளில் உள்ள முஹம்மது நபி (ஸல்) மற்றும் நபித்தோழர்கள் வரலாற்றை சித்தரிக்கும் வகையில் எவ்வாரு இருக்க வேண்டும் என்று ஆக்கபூர்வமான கருத்துக்கள் நாம் பரிமாறலாம்.

இன்ஷா அல்லாஹ் ஒரு முடிவு கிடைக்கும்.

அதே நேரத்தில் தஃவத் செய்ய இந்த துறையை பயன் படுத்திக் கொள்ள வேண்டி இஸ்லாத்தை சமரசம் ஆக்கி வரம்புகளை உதாசீனப் படுத்தி அந்த துறைக்கு ஏற்ற போக்கும் இருக்கக் கூடாது என்பது நமக்கு மிகவும் அவசியம், ஏனெனில் இதைப் போல் நபிஸல் அவர்கள் முந்தய நபிமார்கள் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எதேனும் சமுதாயத்தைப் பற்றியோ நடித்து போதித்ததாக ஆதாரம் ஏதும் காணக் கிடைக்கவில்லை.

அதே போல் இன்று உள்ள மார்க்க பிரச்சாரகர்கள், இஸ்லாமிய பல மொழி சேனல்கல் மூலம் செய்யும் சொற்பொழிவுகள், கேள்வி பதில்கள், பிரச்சாரங்கள், மற்றும் நபி (ஸல்) வாழ்க்கை குறிப்புகள் பற்றிய கருத்துக்கள் இதை பார்க்கும் அனைவர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது அது போன்ற நிகழ்ச்சிகளை திரைப்படமாக ஆக்கிடலாமே.

இவை யாவும் கொள்கை பிடிப்புள்ள தாயிகளினால் இஸ்லாத்திற்காக எவ்வித வெகுமதியும் இன்றியோ அல்லது மிகவும் குறைந்த ஊதியத்தில் இஸ்லாம் ஓங்க இஸ்லாத்தை அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கில் மட்டும் செயல் படுபவர்களைக் கொண்டு செய்யப் படப் போவதும் இல்லை யெனில்.....

"இதை ஏன் செய்யவில்லை" என்று அல்லாஹ் கேட்டு தண்டிப்பதை விட "இதை ஏன் செய்தாய்" என்று கேட்டு தண்டிக்கக் கூடிய சாத்தியக் கூறே இதில் அதிகமாக உள்ளதாக எனக்கு படுகிறது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.




எழுதியவர்: ashfaaq , December 17, 2009 10:59

நான் அறின்தவரையில் இஸ்லாத்தில் உருவம் அமைத்தல் கூடாது. அப்படி இருக்கும் பொழுது எவ்வாரு படம் எடுப்பது?



எழுதியவர்: ashfaaq , December 17, 2009 12:01

உருவம் வரைதல் கூடாது என்பதற்கு கீழ் கானும் முகவரிக்கு செல்லவும்

http://onlinemuslims.blogspot.com/2009/05/blog-post_13.html




எழுதியவர்: Ansar Mahir , December 17, 2009 22:59

இது ஓர் அற்புதமான இக்காலத்திற்குத் தேவையான முயற்சி. திரைப்படத்துறை சர்வேதச அரங்கில் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படம் விரும்பியவாறு தாக்கத்தை ஏற்படுத்தி, மனோபாவத்தையும் மாற்றக்கூடியது ஆதலால் இஸ்லாத்தைப் பற்றியும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியுமான உண்மைச் செய்திகளை இந்த ஊடகம் மூலம் அறிவிப்பது தவிர்க்க இயலாதது.

இந்த உயரிய நோக்கத்திற்கு உழைக்கும் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. அதேநேரம் இந்தத் திரைப்படம் இஸ்லாமிய எல்லைக் கோட்டை மீறக் கூடாது. இத்திட்டம் கைகூட அல்லாஹ் உதவுவானாக.

_________________________

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!
கீழ்க்கண்ட சுட்டியைப் பயன் படுத்தி தாங்கள் தமிழில் எழுதலாம்.
http://www.satyamargam.com/TamilTyping




எழுதியவர்: ziath rahiman , December 18, 2009 17:07

சலாம்.திரைப்படம் எடுப்பது தவறல்ல.அனால் அது இஸ்லமிய அடிப்படைக்குள் இருப்பது நல்லது.இசை போன்ற சமாச்சாரங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.ஆனால் முக்கியமான விஷயம் என்ன என்றால் நபி(ஸல்) அவர்களின் முகமோ குரலோ தெரியாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.சகாபாக்கள் விஷயத்தில் கூட என்ன ஒரு உறுத்தல் என்றால் யாரோ ஒருவரின் முகத்தையும்,குரலையும் சகாபாக்கள் முகமாகவும்,குரலாகவும் பாவிப்பது இப்படித்தான் அவர்கள் இருப்பார்களோ என்ற நினைப்பை உருவாக்கிவிடும்.எடுத்துகாட்டாக ஈசா நபியின் உருவத்தை கிறிஸ்த்தவர்கள் கற்பனையாக வரைந்து வைத்ததால் நமக்கு அந்த உருவம் மனதில் படிந்து விட்டது.எனவே இந்த நிலையை தவிர்ப்பதற்கு வாய் வழியாக இஸ்லாத்தை எடுத்து வைப்பதே போதுமானது என்று கருதுகிறேன்.



எழுதியவர்: MAK , December 24, 2009 11:41

எனது வலைப்பூவில் நன்றியுடன் பதித்துள்ளேன்.

http://makice.blogspot.com/2009/12/blog-post_24.html




எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , December 24, 2009 11:59

அன்புச் சகோதரர் MAK,

மிக்க நன்றி!




எழுதியவர்: புதுமடம் , January 04, 2010 10:52

சிறப்பான தகவல்.
மீள்பதிவு செய்யப் பட்டுள்ளது.

http://www.pudumadamnews.com/2009/12/blog-post_20.html





எழுதியவர்: முத்துப்பேட்டை , January 04, 2010 10:55

நாங்களும் முத்துப்பேட்டை தளத்தில் இந்த தகவலை மறுபதிப்பு செய்வதில் மகிழ்கிறோம்.

http://muthupet.org/?p=1163

தொடர்ந்து இதுபோன்ற நல்ல செய்திகளைத் தாருங்கள்.




எழுதியவர்: jeevanandam , January 07, 2010 21:44

தகவலை மறுபதிப்பு செய்வதில் மகிழ்கிறோம்.
jeevanandam, Govt HSSchool 1982-84




எழுதியவர்: Aseena , January 17, 2010 11:45

அஸ்ஸலாமு அலைகும்,
நான் எனது சித்தி மகன்னய் திருமணம் செய்து கொள்ல விரும்புகிரென் , ஆனால் அவன் என்ன்ய் விட இரண்டு வருடம் சிரியவன் ?




எழுதியவர்: mohamed mustafa , January 17, 2010 13:31

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைச் சொல்லி இவ்வாறு படம் எடுப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சினிமா எடுப்பதே ஹராம் அதிலும் பெயரைச் சொல்லி புதிதாக ஆரம்பம் செய்கிறார்கள். இவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்து இதை செய்வதை விட பல முஸ்லிம் பெண்கள் வசதிகள் இல்லாமல் நிக்காஹ் நடக்காமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவலாம். பலர் வீடில்லாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கு உதவலாம். என்னைப் பொறுத்தவரை இதை வழி கெடுக்கும் முயற்சியாகிவிடும் போல் உள்ளது. இதைத் தடுப்பதே மேல், இன்ஷாஅல்லாஹ்.

__________

சகோதரர் முஸ்தபா,
கீழ்க்காணும் சுட்டியைப் பயன் படுத்தித் தாங்கள் தமிழிலிலேயே எழுதலாம். நன்றி!
http://www.satyamargam.com/TamilTyping




எழுதியவர்: கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம் , January 19, 2010 18:58

சகோதரர் முஹம்மத் முஸ்தபா அவர்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மயான உணர்ச்சியும் சமுதாய அக்கறையும் உள்ளவையாகவே வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களின் ஆதங்கம் போல்தான் எனக்கும் நம் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பது மட்டுமே ஒவ்வொரு மூச்சிலும் ஒடுகின்றது.அதனை அப்படியே வெளிப்படுத்திய அவர்கட்காக நான் து ஆ செய்கின்றேன்.


-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்




எழுதியவர்: அஹ்மத் , January 21, 2010 11:58

//சினிமா எடுப்பதே ஹராம் // - சகோதரர் முஸ்தஃபா

இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்துள்ள சகோதரர்கள் இல்லையா?




எழுதியவர்: muslimeen , January 21, 2010 18:05

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஒரு காலக்கட்டத்தில் புகைப்படம் என்பதே ஹராம் என்ற நிலையிருந்தது.ஆனால் இன்று புகைப்படம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவாகிறது.பாஸ்போர்ட், பத்திரிகைகள், அடையாள அட்டைகள் என அதன் பயன் நீண்டுக்கொண்டே செல்கிறது.எந்த நவீன கண்டுபிடிப்புகளையும் எடுத்த உடனேயே ஹராம் என்று சொல்லும் போக்கு நம்மிடையே காணப்படுகிறது.இதற்கு சரியான இஜ்திஹாத் என்ற ஆய்வுக்கண்ணோட்டம் தேவை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.எந்த ஒரு பொருளிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.நாம் நல்லவற்றை எடுத்துக்கொள்ளலாமே!எடுத்துக்காட்டாக புகைப்படத்தை ஆபாசமாக எடுப்பது ஹராம்.ஆனால் அதனை நமக்கு பயன் தரத்தக்க வகையில் உபயோகிக்கிறோமா இல்லையா? அதைப்போல் சினிமா என்ற ஊடகத்தையும் பயன்படுத்தினால் என்ன?. சினிமாவைப்பொறுத்தவரை நாம் அதனை புறக்கணித்ததனால் ஏற்பட்ட விளைவு மிகவும் மோசமானது.இஸ்லாத்தின் எதிரிகள் சினிமா என்ற ஊடகத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்.ஹாலிவுட்டிலிருந்து நம்ம ஊர் கோலிவுட் வரை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான சிந்தனை அதிகரித்து வருகிறது.நடுநிலையாக வேடம்போட்ட கமல்ஹாசன் வரை இதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவரது உன்னைப்போல் ஒருவன் திரைப்படமும் சமீபத்திய பேட்டி ஒன்றும் தெளிவுப்படுத்துகிறது.ஆகவே சினிமா என்ற ஊடகத்தை நாம் மிகச்சரியாக இஸ்லாத்திற்காகவும், முஸ்லிம் சமூகத்திற்காகவும் பயன்படுத்திட முன்வரவேண்டும்.எதனையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஃபத்வா கொடுத்துவிடாதீர்கள்.





எழுதியவர்: அஹ்மத் , January 25, 2010 17:29

கருத்திட்டமைக்கு நன்றி முஸ்லிமீன் அவர்களே,

சினிமா என்ற வார்த்தைக்கு, நம்மூரில் வெளியிடப்படும் கீழ்த்தர ரக திரைப்படங்களை Substitute செய்து கொள்கிறோம். இதனாலேயே "சினிமா என்றால் ஹராம்" என்ற கண்ணோட்டத்தில் பார்க்க நேரிடுகிறது. இது நாம் வளர்ந்த அல்லது நாம் வாழும் சூழலில் அடிப்படையில் வரும் எண்ணம். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் குறுகிய வட்டத்தில் இருந்து சிந்திப்பதால் வரும் எண்ணம்.

வட்டத்தை சற்று விரிவாக்கிப் பார்த்தோமென்றால், சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் பன்மொழி திரைப்படங்கள் இவற்றிற்கு விடையளிக்கும். குறிப்பாக ஈரானிய திரைப்படங்களை பார்த்தோம் என்றால் நமது முந்தைய சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டிவரும். ஹராமான விஷயங்கள் எதுவும் இல்லாமலேயே சர்வதேச திரை அரங்குகளில் ஈரானிய திரைப்படங்கள் வெற்றி பெறுவதும், உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஏன் என்று சிந்திக்க வேண்டும்.

நல்ல விஷயங்களை எப்போதும் முன்னிலையில் நிற்கும் சத்தியமார்க்கம்.காம் இத்தகைய திரைப்படங்களை இத்தளத்தில் வெளியிட்டு, தவறான சிந்தனையில் இருக்கும் முஸ்லிம் சகோதரர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

"சினிமா என்றால் ஹராம்" என்ற தவறான சிந்தனையினாலேயே சக்தி வாய்ந்த ஒரு ஊடகத்தின் பயனை "வேண்டாம்" என்று ஒதுக்கித் தள்ளுகிறோம். சில தலைமுறைகள் சென்றபின்னர் விழிப்புணர்வு ஏற்படும் போது நம்மை முந்திக்கொண்டு பல சமுதாயங்கள் இத்துறையில் சாதித்திருக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பிரார்த்தனைகள்.

தொடர்ந்து பேசுவோம்.





எழுதியவர்: syed masooo , February 08, 2010 22:33

இதை ஏற்றுக்கொள்ள தக்க அல்ல‌



எழுதியவர்: Ahamed Mansoor , February 16, 2010 20:48

இது வரவேரற்கத்தக்க விசயம்தான். ஆனால் இதை செயல்படுத்தும்போது இஸ்லாத்தின் கொள்கைக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

2: 107 நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் புதிதாக உருவாகிறது - நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்!