| நிரந்தர நன்மைக்குப் போட்டியிடுவீர்! |
|
|
| உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| புதன், 02 டிசம்பர் 2009 20:49 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அன்புடையீர், தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து 20-30 ஆண்டுகளுக்குமுன் இசுலாத்தை ஏற்ற மக்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்தால்தான் உணவுக்கு உத்திரவாதம் என்ற நிலையில் வாழும் மக்களில், ஆணும் பெண்ணும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்து முஸ்லிம்களின் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இடையில் படிப்பை விடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகம். மதிய நேர சத்துணவுக்காகவே பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் அவல நிலையும் தொடர்கிறது. மெட்ரிகுலேசன் படிப்பு என்பது அவர்களுக்குத் தூரத்துக் கனவு. இந்நிலையில் இம்மக்களின் வறுமை மற்றும் கல்வி ஆசையை சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள சில கிருஸ்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் சமீப காலமாக முயன்று வருகின்றன. நான் இங்கு சிபாரிசு செய்துள்ள T. மீனாட்சிபுரம் கிராமத்துப் பிள்ளைகளை அருகில் தேவாரம் என்கிற ஊரில் அமைந்துள்ள குட்செப்பர்டு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், இலவசக்கல்வி, சீருடை என ஆசைக்காட்டி 2007-2008 கல்வியாண்டில் அழைக்க, இம்மக்களும் மெட்ரிக் படிப்பு கனவில் பிள்ளைகளைச் சேர்க்க, அப்பிள்ளைகளைப் பைபிள் வகுப்புகளுக்கும் சர்ச்களுக்கும் ஜெபக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த ஆபத்து நமது கவனத்திற்கு வந்தவுடன் அக்கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் மேலும் ஒரு கிராமமான திம்மிநாயக்கன் பட்டி கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் அப்பள்ளியிலிருந்து இடமாற்றம் பெற்று, உத்தமபாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளோம். அப்பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளனர். சீருடை மற்றும் புத்தகங்களுக்கான செலவைப் பெற்றோர் ஏற்க வேண்டும் என்றும் மீதமுள்ள போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்களைத் தங்களைப் போன்ற சமூகம் நலன் நாடும் அமைப்புகள் மூலம் பெற்றுத் தருவது என்றும் முயன்று, இறையருளால் ஓராண்டு (2008-2009) சமாளித்து விட்டோம். 2009-2010 கல்வி ஆண்டில் மேலும் அதிகப் பிள்ளைகள் சேர்ந்துள்ளனர். T. மீனாட்சிபுரம் பிள்ளைகள் 18 பேரின் கல்விக் கட்டணம் விவரங்களைத் தங்கள் உதவி வேண்டி இத்துடன் இணைத்துள்ளேன். திம்மிநாயக்கன் பட்டி கிராமத்தைச் சார்ந்த 12 பிள்ளைகளுக்கான செலவினை வேறு அமைப்பினர் - சமுதாய ஆர்வலரிடம் பெற வேண்டிய தேவையும் உள்ளது. அதற்கும் நீங்களே வழிகாட்டினால் பேருதவியாக அமையும். இசுலாத்தைப் புதிதாக ஏற்ற இந்த மக்களின் எதிர்கால வாழ்விற்கு தங்கள் மூலம் வழிகாட்ட வல்ல இறையை வேண்டி வேண்டுகோள் விடுக்கிறேன். தங்கள் பேருதவியைப் பள்ளி முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வுதவி ஆண்டுதோறும் தொடரும் அளவிற்கு வல்ல இறைவன் தாங்கள் அனைவரது வளனும் சிறக்க அருள் புரிவானாக! நிறைய அன்புடன்,
பேரா. மு. அப்துல் சமது தமிழ்த்துறை விரிவுரையாளர் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம் - 625 533 போன் : 04554 - 265225 தேதி : 17/08/2009 T. மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் வேண்டுகோள் மடல் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) எங்கள் கிராமத்து முஸ்லிம்களின் நிலையையும் இவ்வுதவி வேண்டுவதன் காரணத்தையும் பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் விரிவாக எழுதியுள்ளதால், இங்கு அவற்றைக் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தைப் புதிதாக ஏற்ற எங்கள் மக்கள் தொடர்ந்து வல்ல இறைவனின் நேர்வழியாம் தீன் வழியில் நிற்பதற்குத் தங்களது பேருதவி துணை நிற்கும். உத்தம பாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் பயிலும் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்த 18 பிள்ளைகள்தாம் எங்கள் ஜமாஅத்தில் இருந்து மெட்ரிகுலேசன் கல்வி பெறும் முதல் தலைமுறை. அவர்களது கல்வி மேம்பாட்டிற்குத் தாங்கள் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இத்துடன் பள்ளிக் கட்டண விபரங்களை இணைத்துள்ளோம். தாங்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ எங்கள் ஜமாஅத்தினர் அனைவரும் துஆச் செய்கின்றனர். நன்றி. வஸ்ஸலாம். தலைவர்
மீனாட்சி புரம் முஸ்லிம் ஜமாஅத் T. மீனாட்சிபுரம் - 625 530 தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா தேனி மாவட்டம். ALHIKMAH MATRICULATION SCHOOL (Regd. By Government of Tamilnadu) P.T.R COLONY, UTHAMAPALAYAM THENI DT. - 625 533 Ph: 04554(268202) FEES PARTICULARS (2009-2010) FOR SPONSORS New Students of T. MEENAKSHIPURAM
Old Students of T. MEENAKSHIPURAM
மேற்காணும் 18 மாணவ-மாணவியருக்கான ஓராண்டுச் செலவு ரூ. 1,16,880 பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டு தள்ளுபடி செய்தது ரூ. 41,280 தேவைப்படும் ஓராண்டுக்கான உதவித் தொகை ரூ. 75,600.
Correspondent (Signed) Principal (Signed) AL HIKMAH MATRICULATION SCHOOL
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (12)
![]()
தானங்களில் தலையாயது அன்னதானம் என்பார்கள்.
உதவிகளில் தலையாயது கல்விக்கான உதவி எனலாம். ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே நிர்ணயிக்க உள்ள இவ்விஷயத்தில் சத்தியமார்க்கம்.காமின் அழைப்பை ஏற்று ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைக்கான ஒரு ஆண்டு கல்வி உதவியைச் செய்ய விரும்புகிறேன். நான் ஓராண்டுக்கு உதவி அளிக்க இருக்கும் இரு குழந்தைகள்: ஷேக் முஹம்மது II Std. நஜிமா Pre K G 1
December 04, 2009 01:03
அன்பான பெயர் உள்ளவன் அவர்களுக்கு,
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அவனது அருள் வளங்களை வாரி வழங்குவானாக! -சத்தியமார்க்கம்.காம் 2
December 04, 2009 12:04
இன்ஷாஅல்லாஹ் ஓர் ஆண், ஒரு பெண் மாணவ மாணவியருக்கு உதவ விரும்புகிறேன். நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். பணம் எங்கு, எப்படி அனுப்புவது?
3
December 05, 2009 01:42
இதுக்கு முந்தப்போவது யாரு?
http://peacetrain1.blogspot.com/2009/12/blog-post.html 4
December 06, 2009 09:09
நான் பணம் எப்படி அனுப்புவது?
____________________________ அன்புச் சகோதரர் சயீத், உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது. நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட: http://www.satyamargam.com/TamilTyping - சத்தியமார்க்கம்.காம் 5
December 06, 2009 13:21
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷாஅல்லாஹ், இது மிக நல்ல காரியம். இன்ஷாஅல்லாஹ் நாமெல்லாம் ஒரு உம்மாவாக ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இன்ஷாஅல்லாஹ் CareUmmah என்ற அமைப்பைச் சேர்ந்த எங்கள் அமைப்பின் சார்பாக சில மாணவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வோம். இது குறித்து பேராசியர் அப்துல் சமத் அவர்களைத் தொடர்பு கொள்வோம். ____________________________ அன்புச் சகோதரர் முஹம்மத் ஜாஃபர், உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது. நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட: http://www.satyamargam.com/TamilTyping - சத்தியமார்க்கம்.காம் 6
December 06, 2009 22:53
அன்புச் சகோதரர்கள் சய்யித், பெயர் உள்ளவன் & பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஆகியோருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். பள்ளியின் வங்கிக் கணக்கு விபரங்கள் இப்போது பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளன; குறித்துக் கொண்டு பணத்தை நேரடியாக அனுப்பி வைத்து விடுங்கள். அல்லாஹ் தங்கள் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு வளங்களைக் கூட்டுவானாக! 7
December 08, 2009 17:37
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆர். ஆஷ்ஃபாக் & குல்ரோஸ் யாஸ்மின் ஆகிய இருவருக்குமான ஓராண்டுக் கல்வித் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டேன். இன்ஷா அல்லாஹ் ட்ரஃப்ட் எடுத்து அனுப்புவேன். 8
December 16, 2009 07:46
சலாம்,என்னால் முடிந்ததை ஆன்லயினில் நெரடியாக அனுப்பி வைக்கிரேன்.மாசலாம்.
9
December 26, 2009 17:30
உதவி செய்ய முன் வந்த, பெயரை இங்கே வெளியிட விரும்பாத சகோதரிக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். பள்ளியின் வங்கிக் கணக்கு விபரங்கள் இப்போது பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளன; குறித்துக் கொண்டு பணத்தை நேரடியாக அனுப்பி வைத்து விடுங்கள். அல்லாஹ் தங்கள் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு வளங்களைக் கூட்டுவானாக! 10
December 27, 2009 00:59
அன்புள்ளம் கொண்ட சத்யமார்க்கம் .காம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் தாங்கள் அருமையான ஒரு பணியை செய்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் பர்கத் செய்தருள்வானாக ஆமீன். இன்ஷாஹ் அல்லாஹ் நாங்களும் இப்பணியை மேற்கொள்ள முயற்சி செய்கிறோம். அதற்காக வேண்டி சம்பத்தப்பட்ட நபர்களை தொடர்பு கொள்கிறோம்.
11
December 30, 2009 12:23
கருத்து எழுதுக :
|