சத்தியமார்க்கம்.காம்

பொரி பிரியாணி print Email
அறுசுவை - அறுசுவை
சனி, 28 நவம்பர் 2009 00:00

பொரி பிரியாணி

நீங்களே சொல்லாதவரை, இந்த பிரியாணியின் மூலம் (Source) என்னவென்று யாருக்கும் தெரியாத பொரி பிரியாணி.

தேவையானவை:

அரிசிப் பொரி

: 1/2 கிலோ

பெரிய வெங்காயம்

: 3

தக்காளி

: 3

பச்சை மிளகாய்

: 4

பட்டை

: 2 துண்டு

கிராம்பு (இலங்கம்)

: 3

ஏலம்

: 2

இன்சி-பூண்டு பேஸ்ட்

: 1 மேஜைக் கரண்டி

பொட்டுக் கடலை

: 25 கிராம்

நெய்

: 4 மேஜைக் கரண்டி

கொத்தமல்லித் தழை

: 4 கீற்று

புதினாத் தழை

: 3 கீற்று

முன்னேற்பாடுகள்

பொரியை நீரில் போட்டு ஒரு புரட்டு புரட்டி, தாமதிக்காமல் வடிதட்டைப் பயன்படுத்தி அள்ளி விடவும். கல் இருந்தால் கீழே தங்கிவிடும். ஊற விட்டிடக் கூடாது.

வெங்காயத்தையும் தக்காளியையும் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை நறுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் இட்டு, மாவாகாமல் மெல்லிய குருணையாகப் பொடிக்கவும். கொத்தமல்லி-புதினாத் தழைகளைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

செய்முறை

கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு (இலவங்கம்), ஏலக்காய் போட்டு, பச்சை மிளாகாய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் போடவும். வெங்காயம் சிவந்ததும் தக்காளி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தேவையான உப்புச் சேர்த்து நன்றாக வதங்கியதும் வடிய விட்டுள்ள அரிசிப் பொரியைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும். எல்லாம் நன்றாகக் கலந்து வந்ததும் பொடித்த பொட்டுக்கடலையைச் சேர்க்கவும். கொத்தமல்லி-புதினாத் தழைகளைத் தூவி இறக்கவும். கமகம பொரிபிரியானி ரெடி.

மயங்கும் மாலைநேர டிபனுக்கு ஏற்றது. சுடச்சுடப் பறிமாறிச் சுவைக்கவும். நொடியில் தயாரித்து விடலாம்.

குறிப்பு

டெகெரேஷனுக்காக சிறுசிறு தேங்காய்த் துண்டுகளையும் வறுத்த முந்திரியையும் படத்தில் உள்ளதுபோல் மேலே தூவலாம். நீங்களே சொல்லாதவரை இந்த பிரியாணி பொரியில் செய்தது என யாருக்கும் தெரியாது.

- ஆக்கம் : ஆர். நூர்ஜஹான் ரஹீம்

Trackback(0)
கருத்துக்கள் (6)add comment
0
deennisha:
masala enna podavendum
1

June 01, 2010 22:28
0
shafiq:
thanks sister
2

August 25, 2010 15:56
0
test cook:
manjal thool podaamal ungal biryaani eppadinga manjal colourla vanduchi, aduthu thanneer ootri dhammil vida vendaama?
3

October 20, 2010 12:11
0
noorjahanrahim:
அஸ்ஸலாமு ஆலைக்கும், என்னுடைய அறுசுவை பகுதியைப்படித்து விளக்கம் கேட்டு எழுதியதற்கும், உங்களின் ஆர்வத்திற்கும் என் நன்றி.பொரி வெகு விரைவில் வெந்துவிடும். எனவே மசாலா தேவையில்லை.கொடுக்கப்பட்டு இருப்பதே போதுமானது. தக்காளி, கரம் மசாலா, பொட்டுக்கடலை போடுவதால் நிறம் கிடைக்கும். தேவைக்கு மஞ்சத்தூள் சேர்க்கலாம். அவரவர் விருப்பம்..தண்ணீர் ஊற்றி தம் வைத்தால் பேஸ்ட் பிரியாணிதான் கிடைக்கும். (தவறாக எண்ண வேண்டாம். ) நூர்ஜஹான் ரஹிம்.
4

October 22, 2010 22:44
0
parameswaran.c:
அன்பு நண்பரே,வணக்கம். தங்களது பதிவுகள் எல்லாமே மிக நன்றாக உள்ளது.மற்றும் எளிய தமிழில் சமூக நன்மைக்கான பதிவுகளாகவே உள்ளன. மிக்க நன்றி!
paramesdriver.blogspot.com
5

April 26, 2011 16:58
0
anandhi:
piriyani yellam nalla than iruku but arisi poriku enga porathu na kiramathula thana iruken storela keta kidaikuma antha oru doubt mattum than enaku matrapadi piriyani super padikum pothe seyya asai varuthu
6

June 22, 2011 14:25

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:117 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான். அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்" - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

புதிய கருத்துகள்

M.S.K : SISTER KHATIJA PLS SEE THE LINK BELOW AS REQUIRED http://www.satyamargam.com/1324


Peer Mohamed : Alaikkum wassalam, Jazakhallah Khair. InshaAllah each article posted will have a reference its so...


martin : சரியான் ஆட்டுக்கூட்டம்!


imran kareem : அல்லாஹ்வின் திருபெயரால்,, இக்கட்டுரை...


akbar : '' வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாத...


Kathija : இதனுடைய அடுத்த பகுதி இன்னும் வரவில்லையா? வந்திருந்தால் அதற்கான லிங்க் கொடுக்கவும்


abdul : good to all


mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.



You are here  : முகப்பு தொகுப்பு அறுசுவை அறுசுவை(All) பொரி பிரியாணி
Twitter
RSS
YouTube
English