| இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி! |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் | ||||
| வியாழன், 29 அக்டோபர் 2009 23:46 | ||||
|
அப்போது, "வட்டியில்லா இஸ்லாமிய வங்கித்திட்டம் இந்தியாவில் துவங்கிடத் தேவையான சாத்தியக் கூறுகளைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்க்கியின் கவர்னருடன் வெகு விரைவில் விரிவாக விவாதிப்பேன்" என்று தூதுக் குழுவினரிடம் அமைச்சர் வாக்குறுதியளித்தார். நிதியமைச்சரைச் சந்தித்த பின்னர் தூதுக்குழுவின் பிரதிநிதி அப்துர் ரகீப், "நிதியமைச்சர் அவர்களிடம் நாங்கள் சமர்ப்பித்த மூன்று பக்க அறிக்கையை அவர் மிகவும் ஆர்வத்துடன் பொறுமையாகப் படித்துப் பார்த்தார். குறிப்பாக, 'வட்டியில்லாப் பொருளாதாரத்தைப் பரவலாக்கிடப் பெருமளவில் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை' என்றும் இது, 'நடைமுறையில் உள்ள வங்கிமுறைகளோடு ஒத்திசைவாக அமைய வேண்டும்' என்றும் குறிப்பிடப் பட்டிருக்கும் ரகுராம் ராஜன் அவர்களின் நிதித்துறை சீரமைப்புக் குழு(Committee on Financial Sector Reforms - CFSR)வின் வட்டியில்லா வங்கித் திட்டத்தின் பரிந்துரைப் பகுதிகளைக் கவனமாகவும் பொறுமையாகவும் நிதியமைச்சர் வாசித்தார்" என்று கூறினார்.
மேலும், "CFSRஇன் பரிந்துரை, 'புதுமையான வழிமுறைகளின் சேர்க்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி' எனும் குறிக்கோளுக்கு ஒத்துள்ளது. மேலும் முறையான ஆய்வுகள் செய்து அதன் பின்னர் திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தப்படும் செயல் திட்டங்களின் மூலம் எவ்விதப் பக்க விளைவுகளோ அபாயமோ இல்லாததும் எளிதில் சாத்தியமாகக் கூடியதுமே வட்டியில்லா வங்கித் திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அப்துர் ரகீப் தெரிவித்தார்.
கேரள அரசின் (Rs.1000 crore) ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் துவக்கப்பட்ட இதே அடிப்படையிலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனம் பற்றியும், அதைப் பொருளியல் ஆய்வாளர்களான Ernst & Young நிறுவனத்தினரின் ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளுக்குப் பின்னர் உலகளாவிய இஸ்லாமிய வங்கியாக மாற்றும் திட்டமும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் திருத்திய பின்னர் நிறைவேற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு தேர்ந்து கொள்வதற்காக நிதியமைச்சரிடம் அளிக்கப் பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள ஐந்து அம்சத் தீர்மானங்களுள் : * நிர்வாக வழிகாட்டல்கள் * நிதி ஒதுக்கீடு * நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றல் ஆகிய பகுதிகள் நிதியமைச்சரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன. ரிசர்வ் வங்கியின் கவர்னரை அடுத்த வாரம் சந்தித்து இது விஷயமாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நிதியமைச்சர் கூறினார். மேலும் அவர் விரைவில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அங்கிருந்து நவம்பர் இரண்டாவது வாரம் திரும்பிய பின்னர் இது விஷயமாக ICIF பிரதிநிதிகளும் நிதியமைச்சகச் செயலாளர்கள், மற்றும் வங்கித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்று நிதியமைச்சர் கூறியதாகவும் அப்துர் ரகீப் கூறினார். நன்றி : www.twocircles.net தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
இஸ்லாமிய வங்கி என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் ஏனோ, இஸ்லாமிய வங்கி தொடர்பான கல்வி விஷயத்திலும் முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர். இஸ்லாமிய வங்கிகள் தற்போது நடைமுறையில் இருக்கும் நாடுகளில், அதனை நிர்வகிக்கும் தலைமை நிர்வாகிகளாக, முஸ்லிம் அல்லாதோர் தான் இருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த கல்வியிலாவது நாம் முன்னேற்றம் காண வேண்டாமா? இஸ்லாத்தின் ஒவ்வொரு செயலும் இறையச்சம் சம்பந்தப்பட்டது. அவ்வாறே வட்டியில்லா பொருளாதாரம் என்பது இறைவனின் அருட்கொடை, இதில் இறையச்சத்தோடு ஈடுபட்டால் தான் இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்கும். இறைவனின் ஆசி, முஸ்லிம்களுக்குதான் கிடைக்கும். ஆனால் முஸ்லிம்கள் வழக்கம்போல் கல்வியில்............?
1
November 01, 2009 18:20
மாஷால்லா, எல்லபுகலும் இரைவனுக்கே.இன்த திட்டதால் இந்திய முச்லிம் மட்ரும் அனைவரும் பயன் அடைவொம் இன்ஷால்ல
2
November 02, 2009 10:37
அஸ்ஸலாமு அலைக்கும்
வட்டி யெனும் கொடுமையில் ஈடுபடுவது நிரந்தர நரகம் என்றும் குர் ஆனில் 2 :275, 276,277,278 போன்ற வசனங்களில் அல்லாஹ்வினால் எச்சரிக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரும் பாவத்திலிருந்து உடன் விலகிட முன்னுரிமையளித்து முஸ்லிம் சமுதாயம் முறையாக இவ்வழியில் முயல வேண்டும். அதற்குரிய இம்முயற்சிகள் பரவலாகி வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிய வேண்டும். ஆமீன். 3
November 05, 2009 09:05
கருத்து எழுதுக :
|